Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Monday, February 26, 2018

திருவண்ணாமலையில் எனது அனுபவம்"

திருவண்ணாமலையில் எனது அனுபவம்"
                 'அண்ணாமலை தொழுவார் விணை வழுவா வண்ணம் அறுமே' அண்ணாமலையை நினைத்தாலே முத்தி. காசியில் இறந்தால் முத்தி என்போன் சான்றோர் அப்படிப்பட்டது திருவண்ணாமலை பஞ்சபூத கோயில்களில் அக்னி உரியது. இறைவன் அருவமாக இருந்து அருஉருவாகி தொன்றி அடியாக்கு அருள் புரிந்த இடம் அண்ணாமலை. அணவத்தை அடக்கி இறைவனை அறியும் அறிவு தந்த இடம். அது மட்டு மல்ல அருணகிரியை எமக்கு தந்த இடம் அண்ணாமலை. அருணாசலம் என்ற பேரை கேட்ட உடனேயே ஞான தாகத்தை ஸ்ரீ ரமணமகரிஷிக்கு ஏற்படுத்திய மலை அது அப்படிப்பட்ட மலையின் குறிப்பிடகக்கவர் ஸ்ரீ ரமணமகரிஷி அவர்கள்
                             ரமணமகரிஷி மிருகங்களிம் அன்பு செலுத்துவதுடன் அன்னியொன்யமாக பழகி அவற்றின் தேவைகளை அறிந்து செயல்படுவதுண்டு ஒருமுறை அவரிடம் ஒருவரால் மிகவும் பாதிப்புக்குள்ளான குரங்கை அவர்களின் இனத்தவர்கள் மகரிஷியிடம் அழைத்து வந்து விவாரணம் கேட்ட போது. முயற்சிகள் செய்தும் முயற்சிகள் வெற்றி அடையவில்லை. இதனால் இந்த குரங்கு இறக்க நேந்தது. அதன் பின் இந்த காரணகாரியத்துக்கு காரணமானவர் இந்த குரங்கின் நிலையே எய்திய போது. அவர்களும் மகரிஷியையே நாடினர் அவருக்கும் குரங்கின் நிரலையே ஏற்பட்டது. முற்பகல் செய்யின் பிற்பகல் பிழையும் என்பதை இச்சம்பவம் நினைவு கூறுவதுடன் தான் செய்ததை தானே அனுபவித்தால் தான் விடுலை என்பதையும் மகரிஷி புரியாமல் புரியவைத்தார். மகரிஷி பார்வையால் ஞானத்தை கொடுத்தவர். அவரின் செயல்பாடுகள் வேத உபநிடதங்களாக இருந்தது. வாயால் பேசாது அகக்கண்னை திறந்தவர் அவர்.
                          எனது சொந்த அனுபவத்தை இங்கு பகிர்வது பொருத்தமாக இருக்கும் 2002 ஆண்டு எனது தென் இந்திய தலயாத்திரையின் போது அண்ணாமலை தரிசனம் பிரதானமாக இருந்தது அப்போது அடியேன் மகரிஷியின் சமாதியை தரிசிக்க ஆவல் கொண்டு அங்கு சென்றேன். எங்கும் கானாத அமைதி குண்சி போட்டாலும் சத்தம் கேட்கும் அளவு. என்னை மறந்தேன் ஆத்மா பேசுகின்றது. இந்த உணர்வு வெறு எங்கும் காணவிலை. மதியம் 12 மணிக்கு மணி அடித்தது பறவைகள் விலங்குகள் உணவுக்காக அங்குவருகின்றது. அவைகளும் உணவுக்கா அமைதியாக இருப்பதை பார்த்தேன். அப்போது எனது மகள் குரங்கு ஒன்றுக்கு விஸ்கிட் பக்கேற் ஒன்றைக் கொடுத்தபோது அதை பெற்றுக்கொள்ளாது பொறுமையாக இருக்கின்றது.பக்கேற்றை உடைத்து ஒவொன்றாக கொடுத்த போது இதை பெற்று உண்டதை நாம் பார்த்தோம். பழனியில் குரங்கு பித்தலாட்ட ஆடியது எங்களை அதுமட்டு அல்ல சென்ற எல்லா இடங்களிலும். ஆனால் இங்கு எப்படி அமைதி அங்கு இருக்கும் தெய்வீக அலைதான். மிருகங்களே அப்படி என்றால் மனிதன் எப்படி மாறுவான்? அப்படி மகிமையுள்ள இடம்தான் ரமணாச்சிரமம். அங்கு சிவன் நடனமாடும் பூமி அது திருமூலர் சிவனுக்கு இரண்டு தினங்கள் முக்கியமானது. ஒன்று செம்மீன் அடுத்தது நுண்மீன் என்று அதில் செம்மீன் என்பது திருக்காத்திகை தினத்தில் அருஉருவத்திருமேனியான ஒளிபிழம்பாக தோன்றி படைத்லுக்கும் காத்தலுக்கும் அகம்காரத்தை ஏற்படுத்தி அடக்கிய நாள். அப்பிழம்பே திருஅண்ணாமலை அடுத்தது திருவாதிரை நாள் அன்று உருவத்திருமேனி எடுத்த திருநாள். மார்கழிதிருநாள் அது மார்+ கழி= மார்கழி என்பது இருள் கழி என்பது கழிந்த அல்லது அகன்ற நாள். ஆணவம் அடங்கி ஆண்டவனை அறிந்த நாள். இது சிதம்பரம் இறைவன் உருவத்திருமேனி கொண்ட நாள்.
                                        2009 ஆண்டில் தலயாத்திரை சென்றபோதுஇராமேஸ்வரத்திலிருந்து திருவெண்ணாமலைக்கு வந்த போது அதிகாலை 3.30 மணி இருக்கும் நாங்கள் பாதையில் வந்து கொண்டு இருக்கின்றோம். எங்களுடன் வந்த அனைவரும் துயின் கொண்டு விட்டனர் அப்போது வாகன ஓட்டிக்கு துணையாக நான் மட்டும் நித்திரை செய்யவில்லை. கிரிவல பாதையை அடைந்தபோது. காவிவஸ்திரம் தரித்த ஒருகையில் கமண்டலமும் மறுகையில் நீண்ட தடியுடன் ஆதிசங்கரரின் தோற்றத்தில் ஒருவரை கண்டேன் எனக்கு திடீரென அதிச்சியாக இருந்தது.அந்த நேரத்தில் சிவன் நடமாடுவதாக மகரிஷி கூறிஇருந்தாதக கேள்விப்பட்டுள்ளேன். ஓட்டி இடம் கேட்டேன் முன் செல்பவரை தெரிகின்றதா என .அவர் எனக்கு ஒன்றும் தெரியவில்லை என்றார். ஆனால் எனக்கு அவரின் காட்சி தெரிகின்றது. நிறுத்து வண்டியை என்றவுடன் வண்டியை நிறுத்த மறைந்துவிட்டார். அப்போது எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அப்டிப்பட்ட இடம் தான் திருவெண்ணாமலை
                           ஸ்ரீ ரமணமகரிஷி வேதத்தின் வடிவம் வேதசாரம் சாட்சாத் தச்சணமூத்தியே கல்ஆலமத்தின் கீழ் சின்முத்திரை மூலம் நால்வேதங்களும் எவ்வாறு உருவாகியதோ அதைபோல நயண பார்வையே அவரை அணுகியவருக்கு வேதத்தை உணத்தியது. விருபாட்ச குகையில் இருந்தபோது மகா ஆலஇலையை கண்டு பின் தொடர்ந்தபோது குழவித்தாக்குதலுக்கு உள்ளாகி தொடமுடியாது போன போது அருணை மலையே தட்சணமூத்தியாக கண்டவர் மகரிஷி. ஜோதியாய் ஜோதியின் உள் உள்ள சுடரை ஞாணமாய் கண்டவர் மகரிஷி பத்தனின் வேண்டுகோளை ஏற்று அண்ணாமலையில் இருக்கையில் திருவெற்றியூரில் காட்சி கொடுத்தவர் மகரிஷி அவருடைய சமாதியை இருமுறை தரிசிக்க கிடைத்தது அடியேன் செய்த தவப்பலனே அது 'விட்டகுறை தெட்டகுறையே' ஆண்மீகத்தாகம் கொண்டு அலைவர்களுக்கு அரணாய் இருந்து பார்வையில் உள்ளத்தில் அருவியாகி பிரவாகம் எதுத்து தணித்க வைத்தவர் மகரிஷி. 'நான் யார்? என்பதன் மூலம் ஆன்மாவே உன் குரு என்பதை உலகுக்கு எடுத்துக்கூறிவர் மகரிஷி. பரமஹம்சர் என்பதற்கு இலக்கணமாக அமைந்தவர் மகரிஷி

Saturday, January 6, 2018

ஆலயங்களில் பயன் படுத்தப்படும் அதிகமான பொருட்கள் உலோகத்திலானவை

ஆலயங்களில் பயன் படுத்தப்படும் அதிகமான பொருட்கள் உலோகத்திலானவையாக இருப்பதன் காரணம் வெங்கலம், செப்பு, தங்கம், வெள்ளி, பித்தலை போன்ற உலோகங்கள் மந்திர உச்சாடனத்தில் இருந்து வரும் ஒலி அலைகளை பெற்று மீண்டும் பிரதிபலிக்க வல்லவை. மந்திர ஒலிகள் பிரபஞ்சத்தில் தாக்கத்தை ஏற்படுத்த வல்லவை அதனால் ஒலிகளை வெளியிடும் போது ஆராய்ந்து அது நோராண எண்ண அலைகளை எற்படுத்தக்கூடியவற்றையே வெளியீடு செய்ய வேண்டும். எதிராண எண்ண செய்யாட்டையும் பிரபஞ்சத்தில் ஏற்படுத்தி விடும். அதனாலேயே ராகம் தாளம் என்பவை பதஞ்சல் மஹரிஷிகளினால் ஏற்படுத்தப்பட்டது. இறைவன் மந்திர, தந்திர, யந்திர வடிவினன். அதால் சேமித்து வைத்த சக்தியை பெற ஆண்கள் மேலங்கி இன்றி ஆலயத்தினுள் செல்ல வேண்டும். எப்போதும் வீடுகளிலோ ஆலயங்களிலோ எவர்சிலிவர் என்று சொல்லப்படும் கலப்பு உலோகத்தை பயன்படுத்து வதினால் எதிராண விளைவுகளை சப்பாதிக்க முடிவதுடன் 'ஒயில்' என்னும் தாவர எண்ணையையும் பயன்படுத்துவதை தவிப்பது உத்தமம்.
ஓம் ஸ்ரீ சற்குரு அகத்தீசாய நம:

ஆலயங்களுக்கு தோய்த்து உலர்ந்த வேட்டி உடுத்து சென்று ஆலய பிராகாரத்தின் உள் மேலாடை களைந்து ஆண்கள் செல்வதின் காரணம்

ஆலயங்களுக்கு தோய்த்து உலர்ந்த வேட்டி உடுத்து சென்று ஆலய பிராகாரத்தின் உள் மேலாடை களைந்து ஆண்கள் செல்வதின் காரணம் ஆலய பிராகாரத்தில் செய்யப்படுகின்ற மந்திர உச்சாடனம் அக்னி காரியங்களில் இருந்து வரும் மந்திர மந்திர ஓலிகளின் அலைகள் மனித மின்காந்த அலைகளில் கலப்பதுடன் கோம புகை உடலின் தோல்மூலம் உடலில் கலந்து ஆரோக்கியம் பெறுவதுடன் நேரான எண்ணங்களை உருவாக்கும்வல்லமையும் அதற்கு உள்ளதால் தோய்த்து உலந்த கலாசார உடைகளை அணிந்து செல்வதே உத்தமம். சர்வதேச தினம் அனுடிப்பது பெருமை அல்ல அது எமது கலாசார வறுமையின் துலங்கலே 'கந்தையானாலும் கசக்கிக் கட்டு' என்பதே எமது பண்பாட்டு விழுமியம்

Thursday, December 28, 2017

ஆன்மீக சாதனை புரிய ஆரம்பிக்கும் போது சாதகன் சாஸ்த்திர சம்பிரதாயங்களை கடைப்பிடிக்க வேண்டியது கட்டாயமாகும்

ஆன்மீக சாதனை புரிய ஆரம்பிக்கும் போது சாதகன் சாஸ்த்திர சம்பிரதாயங்களை கடைப்பிடிக்க வேண்டியது கட்டாயமாகும். ஆன்மா விளிப்படைந்து விட்டால் அவை அவசியமாதக அமையாது. ஏன்னெனில் அது பரமாத்மாவின் வடிவம். உதாரணமாக வயல் செய்கையில் ஈடுபடும்போது வயலினை மேற்பார்வை செய்ய வரம்பின் வழியே செல்ல வேண்டும் வயல் விளைந்த பின் வயலுக்குள்ளே பயனம் செய்வதுடன் விரைவாக கடக்கவும் முடியும். ஆனால் வேளான்மையின் அடிக்கட்டைகள் தால்களை தாக்க முடியும் அதனால் பாதணி அவசியமாகும். குருவின் துணை அவசியமாகும். சாதனை புரிவதற்கு குருவருள் தேவை குருவருளே திருவருள். ஏப்போதும் சாஸ்த்திர சம்பிரதாயங்கள் ஆற்றைக்கடக்க படகுபோலவே தேவைப்படும். அவை ஆணவத்தையும் செருக்கையும் ஏற்படுத்துமே தவிர இது உண்மையான ஞானத்தை கொடுக்காது. ஆசாரம் அவசியமானாலும் ஓரு எல்லை வரையே அது தேவை. குருதேவர் அவர்களின் சீடர் ஓருவர் பிராமண பித்தனாக இருந்த போது அவரிடம் மீன் அறுத்த கத்தியை களுவி தன்னீரை குடித்து வருமாறு கட்டளை இட்டார்.

Friday, June 9, 2017

ஓம் சற்குரு ஸ்ரீ அகத்தீசாய நம: தியானத்தில் கடைப்பிடிக்க வேண்டிய விடையங்கள் தொடரில்.......

ஓம் சற்குரு ஸ்ரீ அகத்தீசாய நம:
தியானத்தில் கடைப்பிடிக்க வேண்டிய விடையங்கள் தொடரில்.......
முத்தி என்பது என்ன என்ற கேள்வி உண்டு அதாவது மூன்று தீ எது என்பதை முதலில் அறிய வேண்டும். அவை சூரியன் சந்திரன் அக்னி இவை முக்கோண வடிவில் நம்மிடம் இருக்கின்றது. எங்கே என்பது தான் கேள்வி சூரியன் வலக்கண் சந்திரன் இடக்கண் அக்கினி புரவ மத்தி இவை மூன்றையும் இணைக்கும் முக்கோணப் பகுதியான இமைகளின் மையமே முத்திக்கு வழியான இடம் அங்கு ஆண்மா லயமடைந்து இருக்கும் இடம். இது பிண்டத்தில் அண்டத்தில் கைலாய மலையான இமையம். அங்கு எம்பெருமான் உமா தேவியாருடன் சூட்சும வடிவில் அமந்து முத்தி அளிக்கின்றார். சிவ பிரணவம் ஓம் சிவாயநம சக்தி பிரணவம் ஓம் உமா ஆகவே உமா மகேசுவரனாக இருந்து முத்தி கொடுக்கின்றார். அண்டத்தில் பரப்பிரம்மம் பரமாத்மாவாகி பிண்டத்தில் சீவாத்மாவாகி கர்ம விணைகளை அனுபவித்து பற்றறுத்து முத்தி என்னும் திரவுகோலால் துறந்து முத்தியடைய வேண்டும்.

Saturday, May 27, 2017

தியானத்தின் போது கடைப்பிடிக்க வேண்டிய விடையங்களின் தொடர்ச்சி

தியானத்தின் போது கடைப்பிடிக்க வேண்டிய விடையங்களின் தொடர்ச்சி...................

ஒம் சற்குரு ஸ்ரீ அகத்தீசாய நம:

ஜெபத்தின் போது கணிக்கும் மிடத்து மேல் நோக்கி கணித்தால் மேட்சத்தை நோக்கியதாகவும் கீழ்நோக்கி கணித்தால் உலக வாழ்கையை மையமாதாகவும் கொள்ளப்படும். ஜெபமும் தியானமும் ஒன்றல்ல தியானத்தின் அடிப்படையே அன்றி தியானம் அல்ல மந்திர ஜெபம்கள் மனதை திடப்படுத்தவே மந்திரம் என்பது ம என்பது மனம் ஸ்திரம் என்பதே பொருள். தியானத்துக்கு மனதை ஸ்திரப்பதுத்துவது அவசியம். மனம் அலையாயும் தன்மை உடையது. அதனாலேயே மனதை குரங்குக்கு ஒப்பாக 'மனம் ஒரு குரங்கு ' என்று கூறுகின்றனர். தியானம் என்பது ஆத்மாவுடன் தொடர்வு கொள்வது. சித்தம் தெளித்தால் சிவலிங்ககமான ஆத்மா தெரியும். அதற்கு மனத்துள் மறைந்துள்ள புத்தி வெளிப்பட வேண்டும். 'மரத்துள் மறைந்தது மாமதயாளை' கல்லினுள் மறைந்தள்ளது உருவம் சிப்பி தேவை அற்றதை நீக்கினால் உருவம் வெளிப்படுவது போன்று ஆத்மா வெளிப்படும்.
எது தேவையானது எது தேவை அற்றது என்பதுஅவர் அவர் கர்மா. பிள்ளையார் பிடிக்க குரங்கான கதையை ஓத்தது  இரத்தின கல்லின் மேல் சாணம் விழுந்தால் ஒளி மங்கி கல் வெளிப்படாது. அவற்றைப்போக்கவே ஜெபம். ஆத்மாவைக்காண தியானம்

தொடரும்......

Wednesday, May 24, 2017

தியானத்தின் போது கடைப்பிடிக்கவேண்டியவை தொடர்

தியானத்தின் போது கடைப்பிடிக்கவேண்டியவை  தொடர்............

ஓம் சற்குருவே துணை
ஓம் சற்குரு ஸ்ரீ அகத்தீசாய நம:

தியானத்துக்கு பயன்படுத்தும் ஜெபமாலை உருத்திராட்சமணி, தாமரைமணி, வெண் சென் சந்தண கட்டைகளினாலான மணிகள், படிக மணி, துளசி கட்டை மணி, போன்றவற்றால் அமையலாம். அதன் எண்ணிக்கை ஐம்பத்திநாலு மணி அல்லது நூற்றி எட்டு, ஆக இருக்கன்பவற்றுக்குலாம். அதில் மேலதிகமாக தாய் காய் ஓன்றுடன் அமைதல் வேண்டும். ஜெபம் செயும்போது கணிப்பில் தாய் கட்டைடையை மேவக் கூடாது.  இதைவிட்டு கணிப்பீடு செய்த சிசையிலேயே மீண்டும் கணிப்பீடு செய்ய வேண்டும். இடது கையால் மாலையை தொடக் கூடாது. வலது கைவிரல்களால் ஆட்காட்டி விரலை விலக்கி சின்னவிரல் மேதிரவிரல் நடுவிரல் நடுவிரல்லுகு மேல் ஜெபமாலையை வைத்து பெருவிரலால் கணிக்க வேண்டும். அதாவது ஆணவம், கன்மம், மயை ஆகிய மூன்று விரல்களின் மேல்வைத்து நான் என்னும் ஆட்காட்டி விரலை நீக்கி இறைவனான வெருவிரலால் கணித்தல் வேண்டும். ஜெபமாலை கழுத்தில் அணியக்கூடாது. கணிக்கும் போது மற்றவர்கள் பார்க்கக்கூடாது. மலையை மறத்து வைத்தல் வேண்டும். விரல்களின் இறைகளில் கணிக்கும் முறையும் உண்டு. வலது கையில் மோதிர விரலின் நடு இறையில் ஆரம்பித்து அடுத்த கீழ் இறை அடுத்து சின்ன விரலின் கீழ் இருந்து மேல் நோக்கி சென்று மேல் இறைகளின் மூலம்ஆட்காட்டி விரலுக்குச் சென்று ஒவ்வொன்றாக கீழ் இறங்கி சென்ற வழியால் மேல் நோக்கி வந்தால் ஒருதவை இருபது முறை கணிக்கப் பெறும். இப்படி ஜந்து முறை கணித்து பின்னர் மீண்டும்ஆட்காட்டி விரலின் முதல் இறையுடன் நின்றால் நூற்றி எட்டுமுறை அமையும்.  இக்கணிப்பின் போதும் மறைத்தே செய்தல் வேண்டும்.  இதனை சிறந்த முறை என குறிப்பிடுகின்றனர்.

தொடரும்

Sunday, May 14, 2017

தியாணத்தின் போது கடைப்பிடிக்க வேண்டிய விடையங்கள்

தியாணத்தின் போது கடைப்பிடிக்க வேண்டிய விடையங்கள்  தொடரில்

ஓம் சற்குருவே துணை

ஓம் சற்குரு ஸ்ரீ அகத்தீசாய நம:

ஓம் சிவசிவ சம்போ ஹரஹர சம்போ சம்போ மஹாதேவ

இருக்கையில் இருக்கும் போது பத்மானசத்தில் அல்லது சுகாசனத்தில் ஆடாமல் அசையாமல் இருந்து ஜெபத்தில் ஆரம்பித்து தியானத்துக்கு செல்ல வேண்டும். ஏனெனில் ஆறாதரத்தினுடாக மூன்று மண்டலமான கிரந்த முடிசுக்களை தாண்டி சகஸ்ராதாரத்தில் விரியும் குண்டலினி ஆட்டம் அசைவின்றி இருந்தால் தான் அது உச்சநிலையை அடையும் அதே வேளை நம்மை சுற்றி இருக்கும் மனித காந்த (ஓராவும்); விரிவடையும் அதானல் கற்றாடிகளை தவித்துக் கொள்ள வேண்டும். இவை தியானத்துக்கு தடையாய் அமைந்து விடும். தியானத்தின் மூலம் நேர் எண்ண அலைகள் விரிவடைவதனால் நம்மை வந்து தாக்கும் எதிர் எண்ணங்கள் பலமடங்கு விரிந்து எங்கிருந்து அனுப்பட்டதோ அங்கு சென்று தாக்கும். நாம் பலமற்ற நேர் அலைகளை கொண்டிருந்தால் அது எம்மை தாக்கும். அதற்கு காரணம் எம்மிடம் இருக்கும் எதிர் எண்ணங்களே 'நான்'; என்பதே அதனாலேயே. 'வினை விதைத்தவன் வினை அறுப்பான் தினை விதைத்தவன் தினை அறுப்பான்' என்னும் முது மொழியும் ' அரசன் ஆண்டறுப்பான் தெய்வம் நின்றறுக்கும்' என்பதும் அதுதான். 'தன் வினை தன்னைச்சுடும் வீடப்பம் வீட்டை சுடும்' என பட்டணத்தார் தமக்கை தனக்கு அப்பத்தில் போட்ட நஞ்சை அவர் வீட்டில் எறிய வீடு பற்றி சம்பலானது. எனவே நேர் எண்ணம் கொண்ட ஞானியர் விடயத்தில் கவணமாக இருக்க வேண்டும். ஆனால் குண்டலினி மேலோங்கி ஆனந்த நிலையை அடையும் போது தன்னை மறந்து ஆனந்த கூத்தாடும் நிலை ஏற்படும்.  பேரானந்தநிலை குருவேவர் ஸ்ரீ இராமகிஸ்ணருக்கு அடிக்கடி ஏற்படுவதுண்டு. தை மாதம் 'கற்பகதரு' கொண்டாடுவது அதற்காகவேதான் உலகில் உள்ள இராமகிருஷணமிசன் கிளைகள் எல்லாம் கொண்டாடுகின்றது.

Monday, May 1, 2017

தியாணத்தின் போது கடைப்பிடிக்க வேண்டிய விடையங்கள் இடத்தேர்வு

தியாணத்தின் போது கடைப்பிடிக்க வேண்டிய விடையங்கள்
இடத்தேர்வு
முதலில் ஓரே இடத்தில் தியாணத்தை மேற்கொள்ள வேண்டும் அது துமையான அறையாகவும் அல்லது நேர் எண்ணங்களை உருவாக்க கூடிய மரத்தின் கீழ் நறுமணங்கள் கமழும் மரங்கள் நிறைந்த இடமாக அல்லது அழகான நதிக்கரையாக அமையலாம். அல்லது தியானத்தின் போது எண்ணத்தின் மூலம் அப்படியான சூழலை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ஏண்ணத்தின் மூலம் சூழலை உருவாக்கும் போது நிலத்தில் ஓர் குழி வெட்டி அதனுள் படிகள் வெட்டி படிகளினால் மனத்தில் எண்ணத்தால் இறங்கி அங்கு நதிக்கரையில்  பெரிய ஆலமரத்தின் கீள் இருப்பதாக கற்கனை செய்து மணமுள்ள மலர்கள் மலர்ந்து நறுமணம் வீசுவதாக அந்த மணத்தை நுகர்வதாகவும்  சூரியனை கண்டு தாமரைமல்வதாகவும் கற்பதை செய்து இருப்பிடத்தில் அமருவதாக கற்பனை செய்து கொண்டு தியாணத்தை ஆரம்பிக்க வேண்டும்.
தொடரும்

ஓம் சற்குரு ஸ்ரீ அகத்தீசாய நம:
ஓம் சிவசிவ சம்போ ஹரஹர சம்போ சம்போ மஹாதேவ

Sunday, April 30, 2017

சிவ பிரணவம் ஓம் சக்தி பிரணவம் உமா

சிவ பிரணவம் ஓம் சக்தி பிரணவம் உமா
தியானம் செய்யும் முறைகளில் ஓம்காரதியானம்
அட்டதிக்கு பாலகா்களை நிறுத்தி ஈசானத்தில் இருந்து சகஸ்ராகார சக்ரத்தின் மூலம் பஞ்சப்பிரம்மந்திரங்கனை ஆறாதாரச்சக்கரங்களுக்கு இறக்கி மீண்டும் மூலாதரத்தில்லிருந்து ஒவ்வோரு சக்கரமாகச்சென்று ஆக்ஞாசக்கரத்தில் நிறுத்தி குருமுலம் பொற்ற மந்திரத்தை ஜபம் செய்ய வேண்டும்.
ஆலமரம் வோில் நீா் பெற்று மீண்டும் விழுதுகளின் மூலம் மேல்இருந்து நீரை பூமிக்கு கொடுத்து பிரபஞ்ச சக்தியை பெற்றுக்கொள்வதை ஒத்தது அதனால்தான் கல்லாலின் கீழ் தச்சணாமூா்த்தி இருப்பது
பஞ்சப்பிரம்மம் என்பது ஈசானம் தொடங்கி சத்தியோஜதம் வரையிலான மந்திரங்கள் ஆக்ஞா சக்கரத்தில் நிறுத்தும் போது பானிமந்திரம் பிரயோகிக்க வேண்டும். இவை அனைத்தும் குரு உபதேசம் பெற்றே மேற்கொள்ள வேண்டும்.
ஓம் சற்குரு ஸ்ரீ அகத்தீசாய நம:
ஒம் சிவசிவ ஹரஹர சம்போ சம்போ மஹாதேவ.


Wednesday, March 1, 2017

பிரகாசத்தை ஏற்படுத்தும் பிரகாச காயத்திரி

'பிரகாசத்தை ஏற்படுத்தும் பிரகாச காயத்திரி'
             காயத்திரி என்பது காயமாகிய உடலை திரியாக்கி உலகுக்கு ஒளி கொடுத்து ஒளி வழியாக உடலை வழிப்படுத்தி ஆத்ம ஒளியில் உடல் பிரகாசித்து பரமாத்த ஒளியில் அக்கியப்படுவது என்பது பொருள். அக இருளை போக்குபவர் குரு இறைவன் குருவாக வந்தவர் குமரன் அவன் குரு பரனுக்கு அவனே குமரகுருபரன் என்கின்றார் திருமூலர் திருமந்திரத்தில் அகஇருள் உண்மையை மறைத்து பொய்யானதை உண்மையாக்கி உண்மையை மறைக்கும் சக்தி அது.

இதனை திருமூலர் திருமந்திரத்தில்
'
தேவனுஞ் சுத்த குருவும் உபாயத்துள்
யாவையும் மூன்றா யுனக்கண் டுரையாலே
மூவாப் பசுபாச மாற்றியே முத்திப்பால்
யாவையும் நல்குங் குருபரன் அன்புற்றே' என்றார்.
                   தேவனாகிய சிவனும் இயல்பாக பாசங்களில் இருந்து நீங்கிய ஆருயிரும் ஒருவரே அதை வெல்வதென்பது முயல்கொம்பை ஒத்தது. அதை வெல்ல குருவருள் தேவை. குருவை தேடுவது என்பதும். சரியான குரு கிடைப்பது என்பதும். விதிப்பனே. 'தாரமும் குருவும் தலை விதிப்படியே' என்பது முதுமொழி குருவருள் திருவருளே. திருவாகிய சிவன் தனது நெற்றிக்கண் ஆகிய ஆக்ஞா சக்கரத்திலிருந்து ஆறு தீப்பொறிகள் ஆக்கி சரவண பொய்கையாகிய ஆஞ்ஞான குழத்தில் மெய்ஞான பொறியாகிய தீப்பொறிகள் ஆறும் சேறாகிய மலத்தில் இருந்து நீக்கம் பெற்ற சேற்றின் மேல் உள்ள தாமரையின் பூவில் சூரியனைகிய பரம்பொருளை கண்டு மலரும் தாமரையன் மீது விழுந்து ஆறு குழந்தையாகி அக் குழந்தைளை காத்திகை பெண்களான ஆறு அறிவாகிய காத்திகை பெண்கள் வளர்த்து வந்தனர். அதை பிபஞ்ச சக்தி அதைக் கண்டு ஆனந்த மடைந்து சிவ சக்தியாக வந்து அதை எடுத்து ஒன்றாக்கி கந்தனேன பெயர் புனைந்து. குமரனானர். தந்தைக்கு உபதேசித்து குமரன் குரு பரனுக்காகி குமரகுருபரன் ஆனார். அவரே உலகுக்கு ஆன்ம ஈடேற்றத்துக்கு குருவானார்
2005 புரட்டாதி மாதம் 14ம் திகதி புதன் கிழமை அதிகாலை 5.30 மணியளவில் அழகி தேவதை பொன்று அம்பிகை தோன்றி எனது காதுக்கருகில் வந்து பிரகாச காயத்திரியை எனக்கு  உபதேசித்தாள். விளித்தெழுந்வுடன் இந்த அடியேன் கண்ட காட்சியை தெலைபேசி மூலம் இலங்கையில் நுவரெலியாவில் இருந்த காயத்திரி சித்தர் முருகேசு சுவாமிகளிடம் கூறினேன். அப்போது சுவாமி உதயமான காயத்திரியை கூறுமாறு கூறினார்.  அதைக் கூற அப்பா ஆதிசத்தியால் உபதேசிக்கப்பட்டுள்ளது. காலம் வரும் போது உன்னால் உபதேசிக்கப்படும் என்றார்.
அக் காயத்திரியை உபதேசிக்கும் காலம் இது போலத்தான் இருக்கும் போலும். தற்போது பிரபஞ்ச அழிவுக்கு காரணமான மனித மனம் அழிந்து கொண்டு இருப்பதை உணரக் கூடியதாக இருக்கின்றது. இந்த சமயத்தில் இம்மந்திரம் மனதை திடப்படுத்தி புத்தியை விளிப்படையச் செய்யும் என்பதை அடியேனின் உள்ளுணர்வு உணத்துகின்றது. இதனால் இம் மந்திரத்தை  உலக நன்மை கருதி. எனது குருநாதரின் வேண்டுதலுடன் உபதேசிக்கின்றேன்.
இது பழவினை அதை அவனே அறுக்க வேண்டும். அவன் அருள் பெற வழி ஒன்று உண்டு. அதை அடியேனை நாடியதால் அவன் அருனால் உபதேசிக்கின்றேன். அது பிரகாசகாயத்ரி மந்திரம். இது அடியேனுக்கு தென் இந்திய தலயாத்திரையின் பின்னர் ஆதிசக்தியால் உபதேசிக்கப்பட்டது. இம் மந்திரத்தை மனதாலே பாராயணம் செய்ய வேண்டும். இரகசியமானது. ஓரு பூரணையை அடிப்படையாகக் கொண்டு அதிகாலையில் பிரம்ம முகூர்த்ததில் ஆரம்பிக்க வேண்டும். தொடர்சியாக 48 நாட்கள் உச்சாடணம் செய்ய வேண்டும். உச்சாடணம் செய்யும் போது செம்பாலா செப்பில் நீரேடுத்து அதில் வில்லதளம் 9 இட்டு 108 முறை உச்சாடணம் செய்து பிற்பகல் மாலையில் அருந்தக் கொடு வர வியாதி குணமடையத் தொடங்கும். தற்போது பின் பற்றி வந்த சிகிச்கை அனைத்தும் தொடர வேண்டும்.

மூலமந்திரம்
ஓம் 
கைலாசவாசாய 
கங்காதாராய 
மகேஸ்வராய 
அம்பிகைநாதாய 
சர்வேஸ்வராய 
சர்வ லோக பிரகாசாய நம: சிவய

பிரகாச சக்தி காயத்திரி

'ஓம் சிவசக்திப்பிரகாசாய சுதாய வித்மஹே
ஷண்முக: பிரகாசாய தீமஹி
தந்நோ சர்வலோகப் பிரகாச ரட்சக ப்ரசோதயாத்'
பொருள்
பரப்பிம்மான சிவனும் பிரபஞ்ச சக்தியானஆதிசக்தியும் இணைந்து ஏற்படும் பிரகாசமான ஆறுமுகங்களில் ஏற்படும் பிரகாசத்தால் உலகத்தை ஆளும் சக்தி அச் சக்தி நம்முள் உள்ள ஆத்ம சக்தியை வெளிக் கொண்டுவந்து எம்மை வளிப்படுத்துவதாகட்டும். என்று பிராத்திக வேண்டும்.எம்முள் உள்ள சக்தி விளிப்படையும் இடங்கள் ஆறு அவை ஆறாதாரங்கள் அவை விளிப்படைந்து ஒளி பெற்று எம்மை வழிபடுத்தும் சக்தி வாய்ந்தது இம்மந்திரம்.
திருமூலர் திருமந்திரத்தில் சிவகுருவே குமரகுருபரன் என்றும் அவனே பரம்பொருள் என்றும் இதனை இயம்பியுள்ளர்.
'ஆறு முகத்தில் அதிபதி நானென்றுங்
கூறு சமயக் குருபரன் நானென்றுந்
தேறினர் தெற்குத் திருஅம்ப லத்துளே
வேறின்றி யண்ணல் விளங்கிநின் றானன்றே' என்றார்.
பிரகாச காயத்திரியும் அதனையே பிரதிபலிப்பதாக அமைகின்றது. மந்திரங்கள் இறைவனால் உருவாக்கப்பட்டவையே அவை என்றோ உருவானவை அவை பிரபஞ்கத்தில் கலந்துள்ளவை காலத்துக்கேற்ப நியமிக்கப்பட்டவர்களால் உலகுக்கு  அவர்அவா சக்திக்கேற்ப்ப பெற்றுக் கொடுக்கப்படுகின்றதே தவிர அவை மனிதரால் உருவாக்கப்பட்டவை அல்ல என்பதே உண்மை. இதற்கு கீதாசாரம் சான்று  'எதை நீ கொண்டு வந்தாய்? அதை இழப்பதற்கு  எதை எடுத்துக் கொண்டாயோ, அது இங்கிருந்து எடுக்ப்பட்டது. எதைக்கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது. என்பதே உண்மை
'சிவசக்திப்பிரகாசாய சுதாய வித்மஹே' இதனையே இந்த மந்திரம் குறிப்பிடுகின்றது. ஆறுமுகங்களாக அவன் அவதரித்தான். அவன் ஆறாதார ஒளியில் ஆன்மாவாக பிரகாசிக்கின்றான். அதனாலாலேயே 'ஷண்முக: பிரகாசாய தீமஹி'  என மந்திரம் இயம்புகின்றது.  இப்பிரகாசம் பிரபஞ்கத்தை பிகாசிக்கச் செய்து தீயதை எரித்து உலகுக்கு பிரகாசம் கொடுக்கும் சக்தியாக மாறி பிரபஞ்சத்தை காக்கின்றது. அப்படிப்பட்ட சக்தி எம்முள் உள்ளதை எடுத்து உள்ளதை உணத்தி பிரகாசித்து காக்கும் இதனையே 'தந்நோ சர்வலோகப் பிரகாச ரட்சக ப்ரசோதயாத்' நம்முள் உள்ளது 'நான்' என்பதை எடுத்தால் ஆத்மா தெரியும் அதற்கு ஆறாதாரம் ஒளி பெறவேண்டும்.
ஆறுமுகம் ஆனவன் முழுமுதலிவன் ஐந்து முகமான ஈசானம், தற்புருடம், அகோரம், வாமம், சத்தியோசாதம், என்பவற்றுடன் அதோமுகமான ஆறாவது முகத்துடன் ஆறுமுகானது. அதில்  சத்தியோசாதம் மேற்கு நோக்கிய முகம் இது படைத்தலையும் தற்புருடம் கிழக்கு நோக்கிய முகம் காத்தலையும்  அகோரம் தெற்கு நோக்கிய முகம் துடைத்தலையும் வாமம் வடக்கு நோக்கிய முகம் மறைத்தலையும் ஈசானம் மேல் நோக்கிய முகம் அருளலையும் கீழ் நோக்கிய முகமான அதேமுகம் சிவகுரு ஆறாவது முகமாக அமைந்தது. இதவை எம்முள் ஆறாதாரமாக அமையப்பெற்றவையே இவை இவ்வுருவை 'குமரகுருபரன்' என்று இருவகை வழக்கிலும் பெருக வழங்குவதனாலும் உணர்க. ஐந்து முகமாவன் சதாசிவன் எனவும் ஆறுமுகமானவன் குமரகுருபரன் எனவும் அழைக்கப்பட்டான். குமரன் குரு பரனுக்கு இதை உணர்தால் ஆறாதார மூத்தியான குமரனை ஆறாதாரம் ஒளிபெற தியானித்தால் இளமையாக குமரனாக பிறவாவரம் பெற்று இருக்கலாம் என்பதே உண்மை. இம் மந்திரமும் அதை தரவல்லது.
சிவபெருமானும் திருமுருகப்பெருமானும் பெயரில் வேறுபாடயினும் பொருளில் ஒன்று அதாவது ஆற்றுநீரும் குளத்துநீரும் போன்றது. இவை இரண்டும் வேறென்றாலும் இவை இரண்டும் நீர்தான். என்பதை உணர்க. சிவகுரு ஞாணத்தை தருபவன். முருகன் தெவயானையையும் குறவல்லியையும் மணந்தாக சரித்திரம். அதாவது அவர் தேவகளில் வளர்ந்தவாகளையும்  ஐம்புல வேடருள் வளந்தவரையும் ஆட்கொள்வதையே கருகின்றது. இதனை அப்பர் சுவாமிகள்
'முன்னை பார்மயில் ஊர்தி முருகவேள்
தன்னை யாரெனில் தானேர் தலைமகன்
என்னை யாளும் இறைவன் எம்பிரான்
பின்னை யாரவர் பேரெயி லாளரே' என்றார்.  திருமுருகனின் ஆற்றலை சிலர் இரண்டு அவை தொழிலாற்றல் விழைவாற்றல் என்பதில்லை. திருவருளாற்றலின் நிலை பலவாக அமைந்தாலும் பொருள் ஒன்றே சிவப்பரம்பொருளின் திருவருள் ஆற்றலே மனைவி மக்களாக உருவகப்படுத்தப்பட்டது. இங்கு 'செப்பும் சிவனார் திருவருளே மக்கள் மனை ஒப்பார்  அவர்க்கவையின் றோர்' என்பதன் மூலம் அறிக. திருமுருகனின் வேல் அறிவு ஆழமாகவும் அகலமாகவும் கூர்மையாகவும் இருக்கவேண்டும் என்பதையும். மாயையில் மயங்கி ஆணவத்தில் ஆடாதே அறிவு மயங்கி அறியாமையில் மூழ்காது அதை அடக்கி அதன்மேல் இருந்து ஞானமான சேவலின் உயர் குணமான அதிகாலையில் சூரிய உதயத்தின் முன் எழுந்து ஞான காரியத்தில் ஈடுபடு என்பதை செவல் கொடி காட்டி நிற்கின்றது. இறைவனின் ஞான வடிவே குமரகுருபரன். குமரனும் குருபரனும் ஒன்றே அன்றி வேறிலை என்பதே உண்மை.
இந்த மந்திரம் சக்தி வாய்ந்தது. வசதியானவர்கள் முடியுமானால் திருவற்றியூர் தியாகராஜ சன்நிதிக்குச் சென்று ஆதிபுரிஸ்வரர் அனுமதி பெற்று சுவாமி குமரகுருபரன் சமாதியில் சமர்பணம் செய்து ஆரம்பிக்கவும்.
'நம்பினால் கெடுவதில்லை நான்மறை தீர்ப்பு'
சர்வ மங்களங்களும் உண்டாகுவதாக.

Sunday, February 26, 2017

ஆன்மீக வாழ்கை

ஆன்மீக வாழ்கை

ஓருமனிதனுடைய வாழ்கை இருவகையில் அமைகின்றது. அவை ஓன்று ஆன்மீகம் அடுத்தது லௌவீகம் இதில் ஆன்மீகத்தை துறவு,துறைவி யோகி என பலபேரால் அழைக்கப் படுகின்றது. அடுத்த வகையை இல்லறம், போகி என்று எல்லாம் அழைக்கப்படுகின்றனர். இதில் இல்லறத்தில் நல் அறம் காத்து உறவில் துறவு வாழ்கை வாழ்தவர்கள் தான். ஸ்ரீ இராமகிருஸ்ணர், ஸ்ரீ ராகவேந்திரர், புத்தபகவான் போன்றோர். இவர்கள். சாதித்து வாழ்க்கை வென்றவர்கள். ஆன்மீகம் என்பது உறவில் துறவுகாண்பதே. இது எப்படி முடியும் என்பது தான் இங்குள்ள பிரச்சனை. ஊடலுக்கும் உயிலுக்கும் உள்ள உறவு தான் அது. பட்டம் விட்டு விளையாடும் பழக்கம் எல்லோருக்கும் தெரியும். ஆதில் பட்டத்திக்கும் விடுபவானுக்கும் உள்ள தொடர்பு நூல் பட்டத்தில் கட்டியிருக்கும் வரையில் தான். நூல் அறுந்தால் பட்டம் விட்டவனை தேடாது. அது போன்று தான் ஆத்மாவின் நிலை. ஆனால் அன்நிலை உறவில் துறவு கொன்டவர்களுக்கு மட்டுமே. ஏன் என்றால் அவர்கள் விட்டபட்டம் எi;லை கடந்த இறைவனிடத்து அன்று. பக்கத்தல் இருந்த பொருட்களில் இல்லை. நமக்கு பக்கத்தில் அதாவது ஒரு எல்லைக்குள் விட்டு விளையாடினால் அது மீண்டும் எம்மிடம் கிடைத்து விடும். இதனாலேயே இறந்த ஆத்மா மீண்டும் உடல் எடுத்து எடுத்து அழுந்துகின்றது. இந்துக்களில் வாழ்க்கைத் தத்துவம் இறவாமை என்னும் பெறும் பேறு அடைவதே. இதனாலேயே ' முத்தி நெறி அறியாத முக்கரொடு முயவேனே பத்தி நெறி அறிவித்து பழவினைகள்  பாவான்ழும் வன்னம் சித்த மனம் அறிவித்து சிவமாக்கி எனையான்ட.........' என் படியுள்ளார் இறைவன் மேல். எல்லை கடந்து ஆனால் எல்லைக்கு உட்பட்டவர். கட10 உள் ஸ்ரீ கடவுள் என்ற பெயர் பெற்றவர் இறைவன். யாருக்கு கடந்தவர் யாகுக்கு உள் உள்ளவர் என்றால்? எல்லை அற்ற கடவுளை தேடிய ஆன்மீகவாதிக்கு கடவுள் உள்ளும். ஏல்லை படுத்தி கடவுளைத் தேடிய போகிக்கு வெளியிலும் கடவுள் இருக்கின்றார். ஏல்லை படுத்தியன் உடல் புதைக்கப்படுத்ப்பட்ட இடத்தல் ஆத்மா தங்கும். பிறபெடுக்கும் வரை ஏன் என்றால் இதற்கு செல்ல இடம் இல்லை. இதனாலேயே இந்துக்கள் இறந்த வரை சுடுகாட்டில் எரித்தல் வேண்டும். புதைக்தால் மீண்டும் உடல் எடுக்கத்தான் வேண்டும். இதனையே வீடுபெறு, முத்தி நிலை,  என்று கூறுகின்றனர்.
உறவில் துறவு என்பது பற்றறற்று செயலில் ஈடுபடுத்தல். ஓட்டாமல் ஒட்டி தாமரையிலையில் தண்ணீர் போல. இல்லறத்தில் நல்றறம் காத்தல். அறவளியில் பொருள் சேர்த்து பெற்ற இன்பத்தை. தனக்கென வாழாது. பொது நல வாழ்கை வாழ்வது. இதனல் தான் அருளும் பொருளும் இனையா இரு போடுகள். உடல் முத்தியை அடைய செய்த முன்வினை பயனை அனுபவித்து விடுதைபெ தேவையான நீதி தவறான  அறவளி சொத்தை பெறவே இங்கு பெருள் என்ற செல்லுக்கு அர்த்தம். ஆறம், பொருள், இன்பம், வீடு. என்பது அறத்தால் பொருள் தேடி இன்பமான துன்பமில்லா பெருவாழ்வு வாழ்ந்து வீடு பெறு றெறுவதே முத்தி. முத்தி என்பது சூரியன், சந்திரன் தீ இவை மூன்றுமே தீ. இவை மூன்றும் உடலில் இருக்கும் இடம் புரவ மத்தி. வலது கண் சூரியன் இடது கண் சந்திரன் அதன் மேல் மத்தி அக்னி மூன்றுக்கும் நடுப்பகுதி புரவ மத்தி அதுவே உடலில் தந்தையிடம் இருந்து தாயின் முட்டையின் துளையிட்டு வந்த விந்துவான உயர் இருக்கும் இடம். அந்த இடம் உஸ்ணமானது. ஆதனால் நெற்றியில் சாணத்தால் ஆன குளிமையான திருநீறு, சந்தனம், குங்குமம் போன்றவை தரிக்கப்படுவடும். திருமணமாகாத கண்ணியர் சவ்வாரியில் தயரான கறுத்தப்பொட்டு வைப்பதும். இந்துக்களின் கலாசாரமாகும். முடிவுகள் எடுக்கும் போது புருவமத்தியை சுட்சுமமாக எண்ணி எடுக்கும் போது சரியான நிதானமான முடிவுகளை எடுக்க முடியும். அங்கு தான் ஆத்மா இருக்கின்றது. பயணம் எங்கிருந்து ஆரம்பித்ததோ அங்கு சென்றடைந்தால் தான் பயணம் முடிவடையும். ஆகவே உயிர் எங்கு உடல் பெற்றதோ அந்த இடத்திலேயே உடல் இருக்கின்ற வரையில் இருந்து விடுகின்றது. ஆனால் மனமோ அலைந்து திரிகின்றது. அதுவே உடலை உலகெல்லாம் கொண்டு திரிகின்றது. அப்போது புத்தி சித்தத்தில் உறைகின்றது. பிரச்சனைகள் வருகின்ற போது புத்தியை மட்டும் மையமாகக் கொண்டு முடிவெடுத்தால் தோல்வியை ஏற்படுத்துகின்றது. அதற்கு காரணம் அகங்காரமான ஆணவம் அதற்கு காரணம் மாயை அதற்கு காரணம் கன்மம். ஆனால் புத்தியை நாடியிருந்ததல் சித்தம் தெளிந்து பிரச்சினைக்கு தீவுகாணப்பட்டிருக்கும். ஏன்ன செய்வது 'ஆத்திரக்காரயுக்கு புத்தி மத்திமம் தானே' அதற்கும் பாக்கியம் வேண்டுமே. 'அவன் அருளால் அவன் தாள் வணங்கி' என்று மணிவாசக்பெருமான் அருளிவிட்டார் அல்லவா? புருவமத்தியை ஏண்ணத்தை குவித்து தியானத்தில் ஈடுபடுவதாலேயே உடலில் மனித காந்த சத்தியை பெருக்கி நேர் எண்ண அலைகளை பெருக்கி வஞ்சகம், சூது, பொறாமையலால் எம்மிடம் இருந்த சத்தியை அழித் எதிர் எண்ணங்களை அழித்து நேர் எண்ணங்களை பெருக்கி புத்தியில் உறைந்து சித்தம் தெளிந்து முத்திக்கு வித்திடுவோம்.
'மட்டூர் புன்னையம்பதியான்'

Saturday, February 25, 2017

பாடல்:1 நாத விந்து ஆதி

பாடல்:1                    
            நாத விந்து ஆதி

நாத விந்து ஆதி
நாத விந்து ஆதி நாத விந்து ஆதி        
   சம மெனில் அண்டத்தின் வித்து
   விந்தினில் நாதம் உயந்திடில் மந்திர வித்து
நாத விந்து ஆதி நாத விந்து ஆதி      
   ஆறாதாரத்தில் உதிர்த்திடும் சக்கர மந்திர வித்து
   மூலாதாரதில் விதைத்திட
      சுவாதிஸ்தானதில் விளைந்த மந்திர வித்து
நாத விந்து ஆதி நாத விந்து ஆதி      
   மணிப்பூரகத்தில் வளந்து அனாகதத்தில் பரிசுத்தமாகி
   விசுத்தியில் எழுந்து ஆக்ஞாயில் ஒளிந்து சகஸ்ராதாரத்தில் கலந்த மந்திர வித்து
 நாத விந்து ஆதி நாத விந்து ஆதி      
    அது அண்டத்திலுள்ள அண்டத்து வித்து.
    உலக இயக்கமே உன்னுள்ளே இருந்து
   அதை அறியாமல் அலைந்து மாழுகின்றான்     மானிட ஜென்மம்
நாத விந்து ஆதி நாத விந்து ஆதி
   மானிட ஜென்மம் எடுத்ததின் நோக்கம் புரியாத மாந்தர்
   அறிந்தவன் உலகத்தை ஆளுகின்றான்
   ஓங்கார ஒலியினிலே உலக இயக்கம்
நாத விந்து ஆதி நாத விந்து ஆதி      
   ஆங்காரம் வந்திட்டால் அழித்திடும் உலகத்தையே
   மாயையில் பட்டால் மயமாய் மறையும் உண்ணுள்ளே சக்தி
  அதை உணர்ந்திட்டால் பெற்றிடுவாய் சித்தி
நாத விந்து ஆதி நாத விந்து ஆதி
         கன்மத்தை அனுபவித்திட்டால்
         முத்தியின் திரவுகோல் உன்கையில்
         முத்தி பெற்றால் வாழ்கையில் சித்தி
நாத விந்து ஆதி நாத விந்து ஆதி      
         சுவர்கமும் நரகமும் பிறவிப்பிணி   அத்தனையும் முத்தியின் விரோதி
         செயலில் பற்றின்மை அத்தனைக்கும் மருந்து உறவினில் துறவு விடுதலைக்கு திறவுகோல்.


பாடல்: 2
இல்லறம் ஏற்று நல்லறம் காத்து
  இல்லறம் ஏற்று நல்லறம் காத்து
  உறவில் துறவை கொண்டனர் சித்தர்கள் ஐஐ
      இல்லரவியலே அவர்கள் தத்துவ இயல்
      உடலை காயமாக்கி நோய்யற்ற
      வாழ்வை மனுக்குலத்துக்கு தந்தவர்கள் சித்தர்கள்

இல்லறம் ஏற்று நல்லறம் காத்து
உறவில் துறவை கொண்டனர் சித்தர்கள் ஐஐ
             சித்தர்கள் வாழ்வியல் விஞ்ஞான ஆய்வில்
             ஆக்கி வைத்தவர்கள் சித்தர்கள்
             வானியல் நீரியல் மண்ணியல் விண்யியல் கட்டவர் சித்தர்கள்.

இல்லறம் ஏற்று நல்லறம் காத்து
உறவில் துறவை கொண்டனர் சித்தர்கள் ஐஐ
              அத்தனையும் விஞ்ஞானமாக்கி மெய்ஞானம கண்டவர்கள் சித்தர்கள்
              சித்தர்கள் அறிவியல் படைத்தவன்
              படைப்பின் தத்துவ இயல்.
              இருந்த இடத்தில் உலக இயக்கம்
              கண்டவர் சித்தர்கள்

இல்லறம் ஏற்று நல்லறம் காத்து
உறவில் துறவை கொண்டனர் சித்தர்கள் ஐஐ
    வருவதை அறிந்து வரு முன் காப்பவர் சித்தர்கள்
    சித்தர்கள் சிந்தையில் உதித்ததை
    அத்தனின் வார்தையாய் கண்டவர்
    சித்தமரபினர் உண்மையை இயம்பி
    உண்மைக்காய் வாழ்ந்து உண்மையை
    அடைந்தவர் சித்தர்கள்
 
இல்லறம் ஏற்று நல்லறம் காத்து
 உறவில் துறவை கொண்டனர் சித்தர்கள் ஐஐ
    சித்தர்கள் வாழ்வியல் உண்மை
    அறிவியல் மனுக்குலம் உய்ய
    இறைவன் தந்த தத்துவ இயல்
    எழிமையில் இனிமையாய் வாழ்வியல்
    கண்டு வாழ்தவர் சித்தர்கள்

இல்லறம் ஏற்று நல்லறம் காத்து
 உறவில் துறவை கொண்டனர் சித்தர்கள் ஐஐ
      ஆடம்பரங்கள் அலங்காரங்கள் வெறுத்து
      கோமளம் கட்டி ஆண்டியாய்
      பிச்சை எடுத்து பரதேசியாய் வாழ்தவர் சித்தர்கள்
      மரங்களின் நினலில் மலைகளின்
      குகைகளில் போதனை செய்தவர் சித்தர்கள்
      நாடியவனை சித்தம் தெளியவைத்து
      ஞானம் அடையவைத்தவர்கள் சித்தர்கள்.

இல்லறம் ஏற்று நல்லறம் காத்து
 உறவில் துறவை கொண்டனர் சித்தர்கள் ஐஐ
     சித்தர்கள் பதினென்மர் அவர்களே
     காலமறிந்து காலத்துக்கு காலம்
     நாமம் மாறி புத்துயிர் பெற்று
     மனுக்குல  மீட்சிக்காய் அவதாரம் எடுத்தவர் சித்தர்கள்

இல்லறம் ஏற்று நல்லறம் காத்து
உறவில் துறவை கொண்டனர் சித்தர்கள் ஐஐ
    சித்தனை அறிய சித்தத்தெளிவே அவசியம்
    அவன் அருள் இருந்தால் குருவே தன்னை
    உணர்த்தி ஆட்கொள்வான்.
    ஊனுடலில் உள்ளொளி பெருக்க
    மூலதாரத்தில் அக்கினி மூண்டு
    ஆறாததரத்தில் தான் ஒளி பெருக்கி
    மும் மண்டலம் கடந்து
    முறையாய் உயந்து ஆக்ஞயில்
    முத்தீயாய் ஒளிந்து தன் ஒளிகாட்டும்
    இலக்கணம் தந்தவர் சித்தர்கள்

இல்லறம் ஏற்று நல்லறம் காத்து
உறவில் துறவை கொண்டனர் சித்தர்கள் ஐஐ
       ஆன்ம சித்தி பெற
       வழி செய்தவர்கள் சித்தர்கள்

இல்லறம் ஏற்று நல்லறம் காத்து
உறவில் துறவை கொண்டனர் சித்தர்கள் ஐஐ
     தன் காயத்தை திரியாக்கி
     காயத்திரி தந்தவர்கள் சித்தர்கள்

இல்லறம் ஏற்று நல்லறம் காத்து
உறவில் துறவை கொண்டனர் சித்தர்கள் ஐஐ
     தன் நலம் கருதா ஆத்ம நலம் கருதி
    வழி காட்டியவர்கள் சித்தர்கள்

இல்லறம் ஏற்று நல்லறம் காத்து
உறவில் துறவை கொண்டனர் சித்தர்கள் ஐஐ
    தாம் அடைந்ததை மற்றவர்களுக்கு
    காட்டி அருளியவர்கள் சித்தர்கள்
 
இல்லறம் ஏற்று நல்லறம் காத்து
உறவில் துறவை கொண்டனர் சித்தர்கள் ஐஐ
  அகத்தியன் தன் சக்தியால் படைத்தார் புத்தியை
  போகன் தன் சத்தியால் படைத்தார் சிவஞானத்தை
  கோலமாமஹரி தன் சக்தியால் படைத்தார் சக்தியை
  வால்மீகி தன் சக்தியால் படைத்தார் இராமனை
  வியாசர் தன் சத்தியால் படைத்தார் கிருஸ்ணரை
  வேதமே அதனுள் அடக்கிட்டார் வியாசர்
  இத்தனையும் சித்தர்கள் படைப்பு

இல்லறம் ஏற்று நல்லறம் காத்து
 உறவில் துறவை கொண்டனர் சித்தர்கள் ஐஐ
     அத்தனையும் நமக்குள் இருக்கு
     இராமரும் நானே இராவணனும் நானே
     பாண்டவரும் நானே கௌரவரும் நானே

இல்லறம் ஏற்று நல்லறம் காத்து
 உறவில் துறவை கொண்டனர் சித்தர்கள் ஐஐ
       நமக்குள் நடக்குதடா இராமாயண யுத்தமும் பாரதப் போரும்
       அறியமால் திரிகின்றோம் மாயையின் பிடியில்
       நடப்பதும் நம்முள்ளே நடத்துபவனும் நம்முள்ளே
       அறியாமல் அலைந்து திரிகின்றோம் நாங்கள்
       இத்தனையும் சித்தர்கள் படைப்பு

இல்லறம் ஏற்று நல்லறம் காத்து
உறவில் துறவை கொண்டனர் சித்தர்கள் ஐஐ
        படைத்தவனை விட்டு   படைக்கப்பட்டதை நாடி பெற்றது என்ன?
        கண்ணீரும் கம்பலையும் கிடைத்தா சித்தி ?
        நம்முள் உள்ள புத்தி
        அதை அடைந்திட்டால் சித்தி

இல்லறம் ஏற்று நல்லறம் காத்து
உறவில் துறவை கொண்டனர் சித்தர்கள் ஐஐ

பாடல்:3
                                           நிலைகெட்ட மாந்தரே கொஞ்சம் சிந்தி
'நிலைகெட்ட மாந்தரே கொஞ்சம் சிந்தி
சிந்தித்தால் உலகமே சிந்திக்கும்'
     'தேனாக நீ இருந்தால் நாடிடும் தேனீக்கள்
      தேனீயாக நீ இருந்தால் தேடி அலைதிடனும் தேனுக்கு
      தேனீயா? தேன் என்பது அவர் அவர் விதிப்பயன் தானே
      யாரை விட்டதடா விதி'

'நிலைகெட்ட மாந்தரே கொஞ்சம் சிந்தி
சிந்தித்தால் உலமே சிந்திக்கும்
         'உன்னுள்ளே ஊறி பெருக்கெடுத்து ஓடுதடா தேதாறு
     அதை நீ அருந்திட்டால் பெற்றதடா பெறு
     அதை வேறொருவர் அருந்திட்டால் இழந்திட்டாய் பெற்ற பேற்றை
     அத்தனையும் அவர்அவர் விதிப்பயன் தானே
     யாரை விட்டதடா விதி'

'நிலைகெட்ட மாந்தரே கொஞ்சம் சிந்தி
சிந்தித்தால் உலகமே சிந்திக்கும்'
   'உத்தமனை உருவாக்க இறைவன் தந்த வரத்தை
   காமத்தின் விழைவால் நிலைகெட்ட மனிததை உருவாக்கி
   அழியுதடா உலகம் அதற்காரணம் நாமென அறிந்து
   பிராயசித்தம் தேடடா இவ் உலகினிலே அத்தனையும் விதி
   யாரை விட்டதடா விதி'

'நிலைகெட்ட மாந்தரே கொஞ்சம் சிந்தி
சிந்தித்தால் உலகமே சிந்திக்கும்'
   'உன்னுள்ளே இருக்குதடா எல்லாம்
    அதை அறிந்தவன் வாழ்கையில் உலகமே அடிமை
    ஐந்து உன்கையில் அடங்கிட
    ஏழையும் யாண்டு மூன்றினில் உயர்ந்து
    ஆறாறும் அடங்கிடும் உன் உயிரினில்
    பெற்றிடுவாய் திருவடிப்பேறு'

'நிலைகெட்ட மாந்தரே கொஞ்சம் சிந்தி
சிந்தித்தால் உலகமே சிந்திக்கும்'

 பாடல்:04
       உலகத்தை ஆளும் ஆத்மசக்தி

 உலகத்தை ஆளும் ஆத்மசக்தி
 எம்முள் உறங்கிக்கிடக்கும் குண்டலினி சத்தி.
            புத்தி விளிப்பே சித்தத் தெளிவு
            மனஒருமைப்பாட்டின் விளிப்பே தியானத்தின் அடிப்படை.
உலகத்தை ஆளும் ஆத்மசக்தி
எம்முள் உறங்கிக்கிடக்கும் குண்டலினி சத்தி.
            தியானமே அதன் விளிப்பு.
            அதுவே ஆறாதாரத்தின் உச்ச நிலை.
உலகத்தை ஆளும் ஆத்மசக்தி
எம்முள் உறங்கிக்கிடக்கும் குண்டலினி சத்தி.
            மூலாதாமே அதன் முளை சகஸ்ரதாரமே அதன் விருட்ச்சம்
            சுழு முனையே அதன் வளி ஆறாதாரம் அதன் சத்தி விளிப்பிடம்.
 உலகத்தை ஆளும் ஆத்மசக்தி
 எம்முள் உறங்கிக்கிடக்கும் குண்டலினி சத்தி.
             சகஸ்ரதாரமே அமுதசுரபி.
             அதுவே நாம்மருந்தும் பிறவாமையின்அரு மருந்து.
             அதை அறியார் படைப்பின் தத்துவம் உனரார்.
உலகத்தை ஆளும் ஆத்மசக்தி
எம்முள் உறங்கிக்கிடக்கும் குண்டலினி சத்தி.
             அதை அறிய குருவருள் தேவை.
             குருவருள் திருவருள் -அதுவே அவனருள்
உலகத்தை ஆளும் ஆத்மசக்தி
எம்முள் உறங்கிக்கிடக்கும் குண்டலினி சத்தி

பாடல்: 5
  பங்குனி உத்தரம் மங்ரைக்கையருக்கு...........  

 'பங்குனி உத்தரம் மங்ரைக்கையருக்கு
                மங்களம் கொடுக்கும் நன்னாள்
மதுரையில் சொக்கநாதர் மீனாட்சிக்கு
              மாங்கலியதாரணம் செய்த பொன்னாள்
காஞ்சி மாவடியில் நிஸ்டையில் ஆழ்ந்த பார் வதிக்கு
              இழந்த பழமையை மீழப்பெற்றுத் தந்த நன்னாள்
ஈசனின் ஆக்ஞ்யில் எரிந்த மன்மதனை இரதிக்கு
              காட்டியருளிச் செய்த பொன்னாள்
கிருதயுகத்தில் கோன் இரகுவால் மனுக்குல் உய்வதற்கு
              அரக்கரனை அழித்த நன்னாள்.
நார் அயன் உள்ளம்  திருமகளுக்கு
               உருத்தான பொன்னாள்
படைபதிபதி நா வாக்தேவிக்கு
              உருத்தான நன்னாள்
இந்திராணி இந்திரதிபதிக்கு
             கிடைத்த பொன்னாள்
மயிலையில் ஞான சம்பந்தன் பூம்பாவைக்கு
            உயிர் கொடுத்த நன்னாள்.
அன்னாள் எனக்கு பொன்னாள்
           என் அம்பிகை புன்னையம் பதி மாரிக்கு தீர்த்த திருநாள்
அன்னாள் என் மகாயாக தீட்ரசைப் திருப்பெருநாள்.
            அன்னாள் மங்கையருக் மாங்கல்லிய விதமேற்கும் பொன்னாள்'

                                                                    'மட்டூர் புன்னையம்பதியான்'
பாடல்: 06
நத்தார் திருநாள் மக்களின் பெருநாள்..............................!

'நத்தார் திருநாள் மக்களின் பெருநாள்
அன்நாள் ஜேசு பிறந்த பொன்நாள்
மனுக்குலம் மீட்சிபெற வித்திட்டதிரு நாள்
அன்நாள் உலகுக்கு ஒளி பிறந்த பொன்நாள்.
ஆஜாரகத்துக்கு அச்சுறுத வித்திட்ட திரு நாள்
மாதாவின் விசுவாசத்தின் சாட்சிய திருநாள்
சூசையப்பரின் மாட்சிமை  திருநாள்
கடவுனின் மாட்சிமை நிலை நிறுத்திய திருநாள்
அதர்மம் ஓங்கும் போது தர்மத்தை காக்க
அவதாரம் எடுப்பேன் என்ன கீதையில் கண்ணனின்வார்த்தை பலித்த நன்நாள் அன்நாள் எல்வோருக்கும் பெரும் திருநாள்'.

'வார்தை மாமிசமாகி உன்னுடனே வாசமாக இருந்தார் இறைவன்.
         அன்பின் சொருவம் அவர்
ஆடுகளை மேய்ற்கும் ஆயனவர்
         உண்மையின் இலக்கணம் அவர்
 சித்தர் குழாமில் ஒருவர் அவர்
         அவர் பாதை விடுதலை அளிக்கும்' .
'ஏழ்மையில் பிறந்து எழிமையில் வாழ்து
தனக்கென வாழாது உலக்கு வாழ்ந்த
மனித உருவில் பிறந்த இறைவன்
அவன் வாழ்ந்த வாழ்கையும்
அவன் போதித்த போததையும்
மனுக்குல விடுதலை
அதை அறிந்து உணர்ந்தால்
அதுவே அவனுக்கு செய்யும் காணிக்கை'

பாடல்: 7
நோய்யற்று வாழ்வது குறைவற்ற செல்வம்....................

'நோய்யற்று வாழ்வது குறைவற்ற செல்வம்
வாழ்கையின் பயனை அனுபவிக்கத் திட்டம்
வகுத்தனர் சித்தர்கள் தந்தனர் வாழ்வியல்
பற்றியே வாழ்ந் திட அற்றிடும் நோய்கள்  உற்றது வீடு.
கூட்டினில் உள்ள குருவியை விட்ட பின்
பட்ட கவலையின் பயன் என்னவோ !
கூட்டி னில் இருக்கையில் பெறு பெற்றவன்
பாக்கி சாலிகள் அல்லவோ!
    காலையும் மாலையும் வருவது இயற்கை
இன்பமும் துன்பமும் வருவதும் இயற்கை
துன்பத்தில் கவலை இன்பத்தில் மகிழ்ச்சி
இரண்டும் நிலைத் திருப்ப துன்டோ !
அவர் அவர் செய்யும் வினையின் பயனென
அறியாமல் இருக்க மாயையின் சதி அது வல்லவோ
பிரபஞ்ச படைப்பின் தத்துவம் அதுவல்லவோ!
இவையெல்லாம் மாயையின் விளைவென
  அறிந்தால் விடுபட வழி தேடிட விளைய
குருவருள் கிட்டிட திருவருள்  கிடைத்திடும்
அதுவும் அவன் தலை விதி அல்லவோ!'
'தாரமும் குருவும் தலைவிதி என விதித்திட்டனர் முன்னோர்'.

'மட்டூர் புன்னையம்பதியான்'
பாடல்:8
     மனத்திதுள் மறைந்தது புத்தி.............

' மனத்திதுள் மறைந்தது புத்தி
 ஆதற்கு காரணம் அஞ்ஞானம்
ஞானத்தை மறைத்தது நாம் செய்த வினை
வினையின் பயனே நல்லது தீயது
புத்தி விளிப்பே சித்தத் தெளிவு
    சித்தத் தெளிவே ஆத்மாவின் விளிப்பு
ஆத்மாவின் ஒளி யில் ஒளிதல்
அதுவே பிறப்பின் அர்த்தம்
   இத்தனைக்கும் காரணம் அறியாமையின் சதி
அத்தனையும் நாம் செய்த கறுமாவின் விளைவு
   அதற்கு காரணம் மனத்திரம்மில்லாமை
மனத்திரமடைய வைராக்கியம் தேவை
  வைராக்கியமடைய குருவருள் தேவை
குருவருளே திருவருன் அதுவே அவன் அருள்'

'புன்னையம் பதியான்'
பாடல்: 9  
சித்தம் தெளிந்தவன் சித்தன்

சித்தம் தெளிந்தவன் சித்தன்
அவன் போக்கு சிவன் போக்கு
 அவனே சிவசித்தன்.
 அவன் சிந்தையில் உதித்தது சித்தவைத்தியம்
 இதுவே எமது உடலுக்குஆதார மூலம்.
 மனிதனைப்படைத்த இறைவன்
  அவன் உடலினின் விளையும் ஊறினை அறிந்து
  அதை தடுக்கும் மூலிகை படைத்தான்.
 படைத்தவன் படைப்பின் தத்துவம் அறிய
  சித்தம் தெளிய வைத்தான்.
 அவனே அவனை அறியவைக்கும்
  பரம இரகசியம் இதுவென அறிந்தால்
  அவனே இறைவன்'
                                               'மட்டூர் புன்னையம் பதியான்'

Wednesday, November 23, 2011

“நோயற்று வாழ்வது குறைவற்ற செல்வம்

    “நோய்யற்று வாழ்வது குறைவற்ற செல்வம் 
              வாழ்கையின் பயனை அனுபவிக்கத் திட்டம் 
     வகுத்தனர் சித்தர்கள் தந்தனர் வாழ்வியல்
            பற்றியே வாழ்ந் திட அற்றிடும் நோய்கள்  உற்றது வீடு.
     கூட்டினில் உள்ள குருவியை விட்ட பின்
       பட்ட கவலையின் பயன் என்னவோ !
    கூட்டி னில் இருக்கையில் பெறு பெற்றவன்
       பாக்கி சாலிகள் அல்லவோ!
    காலையும் மாலையும் வருவது இயற்கை
      இன்பமும் துன்பமும் வருவதும் இயற்கை
    துன்பத்தில் கவலை இன்பத்தில் மகிழ்ச்சி
        இரண்டும் நிலைத் திருப்ப துன்டோ !
   அவர் அவர் செய்யும் வினையின் பயனென 
      அறியாமல் இருக்க மாயையின் சதியது  
   பிரபஞ்ச படைப்பின் தத்துவம் அதுவல்லவோ!
      இவையெல்லாம் மாயையின் விளைவென
  ஏன அறிந்தால் விடுபட வழி தேடிட விளைய
     குருவருள் கிட்டிட திருவருள்  கிடைத்திடும்
  அதுவும் அவன் தலை விதி அல்லவோ!” 
      "தாரமும் குருவும் தலைவிதி என விதித்திட்டனர் முன்னோர்".
                                         மட்டூர் புன்னையம்பதியான்.

Sunday, March 20, 2011

மனிதனின் செயற்பாடு மனம் வாக்கு காயங்களுக்கு கட்டுப்பட்டாலே தவிர விமோசனம் அடையமாட்டான். இயற்கையின் செயற்பாட்டுக்கு இடைஞ்சலாக இருப்பான்.














மனிதனின் செயற்பாடு மனம் வாக்கு காயங்களுக்கு கட்டுப்பட்டாலே தவிர விமோசனம் அடையமாட்டான்.  இயற்கையின் செயற்பாட்டுக்கு இடைஞ்சலாக இருப்பான்.
இராஜ்குமார் சுவாமியுடன் எனது குடும்பம் எனது வீட்டில்
மனிதனின் செயற்பாட்டுக்கு காரணம் பஞ்ச இந்திரியங்கள் அவை ஊறு  சுவை ஒளி நாற்றம் பரிசம்  அதைச் செயல்படுத்தும் கருவி பஞ்ச அவை கண், மூக்கு, செவி, வாய், தோல் இக் கருவிகள் மூலம் மனம் செயல்படுகின்றது. மனத்திலிருந்து எண்ணம் உதயமாகின்றது. எண்ணம் மனித செயற்பாட்டுக்கு காரணமாகின்றது. மனத்தின் செயற்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் “குரங்கின் கையில் பூமாலையைக் கொடுத்தால் போல” அமையும். அதை செயல் படுத்துவது அகங்காரம் இது ஆணவம். ஆணவத்தை செயற்ப்படுத்துவது கன்மம். கன்மம் பிராத்தம் ஆகாமியம் சஞ்சிதம் எனப்படும். அதற்கு உத்வேகம் கொடுப்பது மாயை இல்லாதொன்றை இருப்பதாக காட்டுவது. இவைகளின் செயற் பாடுகளுக்கு மனமே காரணமாகின்றது.  மனத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் போது புத்தி செயல்படாது. அகங்காரமே மேலோங்கியிருக்கும் இதற்கு கூறுவார்கள் “ஆத்திரக்காரனுக்கு புத்தி மத்திமம்” என்பார்கள் அது புத்தியின் செயல்பாட்டுக்கு எதிரி அதை வெல்ல வேன்டுமாயின் சிந்தித்து செயலாற்ற வேண்டும். சிந்திப்பதற்கு அவகாசம் தேவை ஆத்திரம் அவகாசம் கொடுக்காது. அவகாசம் கொடுத்தால் விதியின் செயல்பாட்டுக்கு என்ன கெதி? “விதியை மதியால் வெல்லலாம்” என்று கூறுவர். விதி என்பது நாம் செய்தவை. எமது ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் நேரானதும் எதிரானதுமான விழைவுகள் உண்டு. நேரான விளைவுகள் இயற்கையை ஒத்தவை எதிரான விளைவுகள் இயற்கையை சீர்குலைப்பவை. 
               மனம் உடல் நலத்தை அடிப்படையாகக் கொண்டது எப்போதும் உடல் சொகுசையே அடிப்படையாகக் கொண்டது. புத்தி உளநலனும் ஆத்மாவையும் அடிப்படையாகக் கொண்டது. புத்தி செயற்பட சித்தம் அவசியம்;. சித்தத் தெளிவு புத்தியின் விளிப்பு அதுவே விக்கிணம் தீர்ந்து வெற்றி பெற வழி. குளம் வற்றி சேறு நிறைந்து கலங்கி இருந்தால் உள்ளுள்ள பெருட்கள் கண்களுக்கு புலப்படாது. தெளிந்த நீரிலே அடியிலுள்ள எல்லாப் பொருட்களும் புலப்படும். அது போல விதியின் விளையாடவிருக்கும் விளையாட்டு புத்திக்கு தெட்டத்தெளிவாக தெரியும். அதனால் ஆத்திரம் அடங்கி புத்தி மேலோங்கும். “புத்தியின் விளிப்பே சித்தத் தெளிவு அதுவே ஆன்மாவின் ராகம்  கன்ம பிடியிலிருந்து தப்ப ஒரேவழி”  நாம் செய்த கன்மத்தின் செயலிருந்து தப்ப கன்மத்தை முன்னுனரும் சக்தியை பெற வேண்டும். அது தன்னை உணரந்;தவனாலே முடியும். தன்னை உணர்தல் என்பது இருட்டறையில் நுலைய ஒரு வெளிச்சம் தேவை அது போல் அஞ்ஞான இருளைப் போக்க மெய்ஞான ஒளி வேண்டும். மெய்ஞானம் குருவை அடைந்தாலே முடியும். “குருவருள் திருவருலே அதுவே அவன் அருள்”;.  “தாரமும் குருவும் தலைவிதிப்படியே” என்பர் சான்றோர். குறுடனுக்கு குறுடன் வளிகாட்ட முடியாது. அது தான் இப்போது நடைபெறுகின்றது.
                   நமது எண்ணங்கள் வலுபடையும் போது அது எம்மையறியாது  ஓரு சூட்சும வடிவம் பொறுகின்றது. அது செயற்படும் போது சித்தி கிடைக்கின்றது. அச் சித்திக்குக் காரணம் புத்தி விளிப்பின் சித்தத் தெளிவே. நமது எண்ணம் செயலுருப்பெற்று வெற்றி பெறுவது. சித்திக்கு காரணம் சக்தி. அச்சக்தியில் தேவசக்தியும் அசுரசக்தியும் உண்டு. இதில் தேவசக்தி பிரபஞ்சத்துக்குப் பாதிப்பில்லாத உண்மைக்கு சான்று பகிர்கின்ற நல்லெண்ணங்களுக்கே உதவி புரிந்து அதை செயலாக மாற்றி வெற்றி பெறச்செய்யும். இது அதேமாதிரி உண்மை நேர்மை சத்தியம் உடைய சாத்வீக குணத்தையுடையவருக்கே. இது தீய எண்ணங்களுக்கு உதவி செய்யாது. தீய எண்ணங்கனை வலுப்படுத்துவதும் செயல்படுத்துவதும் தீய சத்தியே இவை காமக்குரோத வஞ்சக எண்ணம் உள்ள தாமத குணத்தவர்களை வலுவாகப் பற்றுவது அதற்கு இலகு. 


                     இவ்விரு சத்திகளும் உருவாக்கியது நம்மிடம்மிருந்து வெளிப்பட்ட எண்ண்ங்களின் கூட்டுச்சேர்கையே. அவைகளுக்கும் வடிவம் கொடுத்ததும் நாம் தான் ஆரம்பத்தில் சித்தர்கள் உருவங்களை தத்துவரீதியில் உருவாக்கி அற்றுக்கு தான் பெற்ற பிரபஞ்ச சக்தியை பாச்சி உயிர் கொடுத்தார்கள் அதை மக்கள் எண்ணத்தில் வளர்த்தார்கள். அதை புரோகிதர்கள் சித்தர்கள் மகரி~pகளால் உபதேசிக்கப்பட்ட மறையின் அடிப்படையை குருவி உபதேசத்துடன் ஜந்திர விம்ப பிதிஸ்டை செய்து. மக்களால் எண்ணைக்காப்பு என்ற கிரியை மூலம்  இறை எண்ணத்தை விம்பத்தின் கீழ் உள்ள ஜந்திரத்தில் பதிப்பதன் மூலம் விம்பம் சத்தி பெறுகின்றது. அது மின்கலம் ஒன்று மின்pனேற்றப் படுவதை ஒத்தது.  கருங்கல் எள்ளெண்ணை  மனிதனின் மின்காந்த அலைகளினால் ஏற்படும் மனித காந்தத்தை ஈத்து விம்பத்தின் மூலம் ஜந்திரத்தில் பாச்சுகின்றது. அங்கு  இக்கிரிகையை மேற்கொள்ளும் அணைவரது சத்தியும் ஒன்று திரண்டு மகா சத்தியாக பருநாமிக்கின்றது. இன் நிகழ்வு சீவாத்துமாக்கள் புனிதமடைந்து பரமாத்மாவாகும் நிலையை ஒத்தது. இந்த சக்தி பன்னிரு வருடங்கள் இருக்கும். அதன் பின் சக்தி குறையத்துவங்கும் அதனால் மீண்டும் ஆலயங்களில் குடமுழுக்கு செய்ய வேண்டும். புரோகிதர்கள் அச் சக்திகளை குறைய விடாது அதைக்காப்பதே அவர்கள் கடமை.
                            இது போன்று அசுர சக்தியையும் உருவாக்கின்றனர். அவர்கள் தாமத குணத்தின் சக்தி இவை பொதுவாக மனிதர்களுக்கு தீங்கு செய்வதற்காக பில்லி சூனியம் செய்விணை முலம்   காமக் குரோத வஞ்சக பழிவாங்கல் செய்ய துனை போகின்ற சக்தி. அவை பொதுவாக அசுத்த இராச்ஜதம் தாமத குணங்களுள்ளவர்கள் மூலம் வெளி வரும் எண்ணங்களின் சேற்கையின் திரண்ட சக்தி. இது தான் அசுரசக்தியாகும். இச்சக்தி தாமதகுணத்தவர்களின் வெற்றிக்கு காரணமான சக்தி. ஆத்திரம் கொண்ட மனிதனை இது இலகுவாக உள்வாங்கி  ஆதிரத்துக்கு காரணமானவனை பழிவாங்கி வெற்றி பெறச் செய்து தன்வசமாக்கும் சக்தி கொண்டது. கேட்ட சக்தியை வசமாக்கும் தாந்திரியசக்தி படைத்த பிமராட்சகர் சீடர்கள் இருக்கின்றனர். இவர்கள் தேவருக்கு எதிரானவர்கள்.புராண இதிகாச கதைகளில் ஒரு தெவருக்கு எதிராக ஒன்றோ அல்லது பல அசுரர்கள் போரிடுவர். உதாரணமாக கந்தப்புராணத்தில் முருகனுக்கு எதிர் சூரபன்மன்.  இராமயனத்தில் இராமனுக்கு எதிர் இராவணன். மகாபரத்தில் அர்சுணன் எதிர் கர்ணண்(கூனியின் சூழ்ச்சி). வினாயகர் புராணத்தில் வினாயகர் எதிர் கஜமுகாசுரன். தேவிமான்மீயத்தில் ஆதிசக்தி எதிர் மகிசாசூரன். இன்னும் பூராணம் தான் படிக்கின்றோம். ஆனால் மக்கள் மத்தியில் அவற்றை உணர்ந்து தமது செயற் பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா? ஏன்றால் அது இல்லை. அந்த அசுர சக்திகளின் செயல்பாட்டின் உச்சக்கட்டத்துக்கு சென்றதை இயற்கை எமக்கு உணர்த்தி நிற்கின்றது. உலக அழிவு என்பது மனித மனவழிவே. புராண இதிகாசங்களின்; நடை பெறும்; யுத்தம் எமக்குள் நாமே நடார்த்தும் யுத்தமாக எப்போது மாறுகின்றதோ அப்போது தான் அக உலகமான மனம் அழிவதைத் தடுத்து புற உலகான பிரபஞ்வத்தை காக்கமுடியும். எமக்குள் யுத்தமென்பது நம்முள் ஏற்படும் நேர் எதிர் எண்ணங்களுக்கு போர் நடார்த்தி நேர் எண்ணத்தின் பலத்தை அதிகரித்து எதிர் எண்ணத்தின் செயற்பாட்டை கட்டுப்படுத்தவேண்டும். எண்ணங்கள் தோன்ற காரணங்கள் பல எமக்கு வெளியிலிருந்தும் வரும் அதுவும் எம்மைத் தாக்கும் எம்மை காக்க எம்மைச் சுற்றியுள்ள மின்காந்த அலையான மனித காந்தத்தை வலுப்படுத்தி அதன் சக்தியை அதிகரித்தால் எம்மைத்தாக்க வரும் அலைகளை தடுத்து அது எமக்குள் வந்து செயல்படுவதின் மூலம் ஏற்படப் போகும் விழைவைத் தடுக்க முடியும். “விதியை மதியால் வெல்ல முடியும்” அதுவும் விதிதான். “தவமும் தவமுடையாருக்கே ” என்பார்கள். ஒருவர் ஆத்திரத்தில்
 கொலை செய்ய எத்தனிக்கும் போது கொலையின் பின் தனக்கு ஏற்படும் விழைவை எண்ணினானால் கொலை வெறி நீங்கிவிடும். இச்சந்தர்ப்பம் தான் விதியை மதியால் வெல்லுதலுக்கான விதி. எந்த ஒருவொரு நிகழ்வுக்கும் பின்னனியில் ஒவ்வொரு காரணம் இருக்கும்.  அது போல ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு தாக்கம் உண்டு. அவை நேர் எதிர் விளைவுகள் உண்டாக்கும். இவற்றை நல் விணைப்பயன் தீ விணைப்பயன் எனப்படும். இவையே நாம் செய்த வினை இதுவே பிறவிக்கு காரணமாகின்றது. பிறவித்துயரை களைய வேண்டுமாயின் அதை அனுபவிக்க வேண்டும். எனவே நமக்கு  ஒருவர் வினை செய்கின்றார் என்றால் அது பூர்வஜென்ம வினையின் பயனே அதை முடிக்க அவன் காரணமாக அமைந்தால் அவன் எதிரியல்ல நண்பன். எமக்கு வரும் துன்பங்கள் எல்லாம் பரலோக சுவர்க்க இன்பத்துக்காகவே அதை தாங்கி பூர்வஜென்ம வினையை முடிக்கக் கூடிய சத்தியும் வல்லமையும் பொறுமையும் இருக்குமானால் அது கூட பூர்வஜென்ம வினைதான். “தவமும் தவமுடையார்க்கே ” அது போன்றது தான். ஆனால் நடைமுறையில் எமக்கு தீங்கிளைத்தவனுக்கு நாம் துர்சக்திகளைக் கொண்டு மீண்டும் தீங்கிழைத்து மீண்டும் மீண்டும் பிறவித்தளையில் மூழ்கின்றோம். இதை ஆணவம் தலைமைதாங்கி நடார்த்துகின்றது. மாயை உண்மையை மறைக்கின்றது. கண்மம் செயல்படுகின்றது. இடையில் பிரவித்தளையிலிருந்து விடுதலை அடைய வேண்டிய ஆத்துமா விடுதலை இன்றி அவதியுறுகின்றது. இதையே பிரம்மகஸ்திதோசம். அதாவது பிரம்மனின் படைப்பின் நோக்கம் உணராமையே.
ஆத்துமா புனிதமானது.  இரத்தின கல்லின் மீது சணம் விழுந்தால். இரத்தினக்கல் தன் தன்மையை இழப்பதில்லை. ஆனால் அதன் வெளிச்த்தின் நன்மையை உலகம் அடையாதே தவிர கல் அதன தன்மையையும் ஒளியையும் இழக்கவில்லை. எப்போது சாணியின் உள் இரத்தினக்கல் உண்டு. என்பதை யார் அறிகின்றானோ. அவன் கல்லின் பெறுமதி அதன் தன்மை அறிந்தவன் தான் அதைத் தேடமுடியும்.  அகற்றும் வளியும் தெரியவேண்டும். அவனுக்குகே  கல் கிடைக்கும்.  அது போன்றதே இறவாமை. இறவாமையை எவனெருவன் உணரும் பட்தத்தில் செயலில்லிருந்து விடுதலையும் பிரபஞ்சதில் பரவியுள்ள விசத்தை கட்டுப்படுத்தி காற்பாற்றவும் முடியும்.



Wednesday, December 29, 2010

7.முற்பகல் செயில் பிற்பகல் விளையும்

7.முற்பகல் செயில் பிற்பகல் விளையும்


  
                      எமக்கு ஏற்படும் கஷ்டங்களுக்கெல்லாம் கடவுளை நோகுவது வழமை நான் கடவுளை நம்பி நாள்தவறாது ஆலயத்துக் செல்லுகின்றேன் க      ஷ்ஸ்டம் நீங்கிவாறில்லை நம்பிக்கை இழப்பண்டு. அதே வேளை ஒரு காரியம் நிகள காரணம் ஒறுண்டு என்பர்.ஒரு சிலர். ஒரு தாக்கத்துக்கு இன்னுமோர் தாக்கம் உண்டு என்பர் இன்னும் சிலர். எமக்குள் நாமே சில கேள்விகளை கேட்க்கும் போது தான் அது தெளிவாகும் .முதலில் நான் யார்? எங்கிருந்து வந்தேன்? எதற்காக வந்தேன்? தற்போது என்ன செய்கின்றேன்? வந்தன் நோக்கம் நிறைவேறுகின்றதா? இதை எப்போதாவது நாம் நினைத்துண்;டா? நினைத்தும் ;இல்லை நினைக்கவும் முடியாது. உலகமாயை எல்லாவற்றையும் மறைத்து விட்டது. குழந்தையாக பிறக்கும் போது பயந்து முதலில் அழுகின்றது. பின்னர் சிரிக்கின்றது. இறைவனை நெருங்க நெருங்க கஷ்டங்களும் அதிகரிக்கும். இதற்கு நல்ல உதாரணங்கள் நாயன் மார் வாழ்கை சரித்திரங்கள் அவை தரித்திரங்களாக இருந்ததை நாம் அறிவோம். அவர்களின் வைராக்கியம் அவர்களை இறவாம்மையும் அவர்கள் புகழ் அளியாமையையும் கான்கின்றோம் அதுவும் “அவன்அருளாலே அவன்தாள்” வணங்கியென மணிவாசகப்பெருமான் திருவாசகத்தில் அருளியுள்ளார்.எனவே பிறவித்தளையில்லிருந்து நீங்க மலபரிபாகம் தேவை அவை ஆணவம் ,கன்மம், மாயை அவற்றை நீக்க வைராக்கியம் தேவை.
                              ஆணவத்தை அழிக்கமுடியாது அதை அடக்கத்தான் முடியும். அது செம்பில் களிம்பு போல இருப்பது அதனை எப்போதும் பூசி சுத்தமாக வைத்திருந்தால்தான் களிம்பேற்படாது பாதுகாக்கமுடியும். எப்போதும் செம்பில் களிம்பு உண்டு. இதற்கு இருள் மலம் என்பதும் உண்டு. ஒருமனிதனின் வாழ்க்கையில் இதைப்போல கொடியது எதுவும்மில்லை ஏனெனில் இருளினுள் இருக்கும் ஆபத்தை அறிய முடியாது அது ஆழமான அற்றின் மேல் சல்பீனியா என்னும் தாவரம் படர்ந்து மூடியிருப்பது போல அது ஓர் ஆழகிய விளையாட்டுத்திடல் போலக்காட்சியளிக்கும்  அதன் பின்னால் உள்ள ஆபத்தை மதி மயக்கி மறைத்து விடும் எனவே நாம் எப்போதும் எம்மை தூய்மைபடுத்திக்கொண்டிருத்தல் வேண்டும். அதற்கு அவசிமானது ஜெபம் தியானம் மாகும்.
ஆறுமுகன்
                    இதன் விழைவு கந்தப்புராணத்தில் விரிவாக விளக்கப்பட்டுள்ளதுடன் முருகனின் உருவமும் விளக்குகின்றது. மனிதனிடம் இரு அம்சங்கள் உண்டு. ஒன்று தேவகுணம் அடுத்தது அசுரகுணம் அதாவது வெளிச்சமான பகுதி அடுத்தது இருளானபகுதி இங்கு வெளிச்சமான பகுதி சாத்வீக குணத்தையும் இருளானபகுதி தாமதகுணத்தையும் குறிக்கும் ராயோ குணம் என்றொன்று உண்டு. அது இலட்சியத்தை அடிப்படையாகக் கொண்டது. அதன் பலன் எடுக்கின்ற இலட்சியத்தின் தன்மையைப் பொறுத்தது. சாத்வீகம் உண்மை, நேர்மை, சத்தியம் ஜிவகாரூனியம் போன்ற குணங்கள். தாமதகுணம் என்கின்ற போது அவை வஞ்சகம், சூது, பெறாமை போன்றவை எனவே முருகனின் திருவுருவத்தில் ஆறுமுகம் இது ஆறறிவின் அடையாளம். அடுத்து பன்னிருகை இது பன்னிருமாதம் என்பதையும் இரத்தத்தின் குழு பன்னிரன்டையும் குறிக்கின்றது. கையில் உள்ள வேல் அறிவு ஆழமானதாகவும் அகலமானதாகவும் கூர்மையானதாகவும் இருக்கவேண்டும் என்பதை குறிக்கின்றது. நல்ல குணமான சாத்வீகத்தை சேவல் கொடியாக மேல்லெழுந்து பறக்க விட்டும். சேவலின் குணம் அதிகாலையில் சூரியன் உதிப்பதையும் பிரம்மமுகுத்தத்தையும் மானிடருக்கு தெரிவிக்கின்றது;. மயில் மழை முகிலான இருலை ரசித்து ஆடுவது. இது ஆணவம்.இதை அடக்கி தனக்கு கீழ்வைத்துள்ளார்.ஒரு மனிதனை இயக்குவது இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தி. இச்சை என்பது ஆசை. கிரிகை என்பது கடமை. ஆசையையும் கடமையையும் ஞானம் இருந்தால் தான் வந்த நோக்கத்தை அடையக்கூடிய வகையில் பயன்படுத்தமுடியும்.  ஞானம் என்பது தன்னை அறிவது. அறிவு என்பது உலகை அறிவது.தன்னை அறிந்தால் தான். பிறப்பறுக்க முடியும். கோபத்தால் மன அமைதியின்மை தோன்றும். இதன் விழைவு இரத்தழுத்தம் இதுவே எல்லா நோய்க்கும் காரணம். இரத்தசம்பந்தமான விடயங்களுக்கு பொறுப்பான கிரகம் செவ்வாய் அதன் நிறம் சிவப்பு அதன் அதிதேவதை முருகப்பெருமான். அவனை வழிபடுவதன் மூலம் ஞானம் பெறுவதுடன் உடலும் உள்ளமும் சமநிலை அடைந்து நேய்யற்ற வாழ்வே நாம் பெற்ற செல்வம் என வாழமுடியும். முருகனின் வடிவத்தை எமக்கு தந்தவர் போகமாமகரிசி அவர் பிரபஞ்ச சக்தியை ஈத்து சக்தி கொடுத்து அற்புதமான வடிவத்தை உலகுக்கு கொடுத்த மகரிசி ஆவார் அவரை வழிபட்டு சக்தி பெறுவோம்.
போகமகாரிசி
                        அடுத்து கன்மம் இது நாம் செய்தவினை இதுவே பிறவிக்கு காரணம். அது மட்டும் மல்ல தற்போதுள்ள வாழ்விற்கும் நிகழ்வுக்கும் காரணம் விணையின் பயனே விணைகள் மூன்று வகைப்படும். அவை சஞ்சிதம் ஆகாமியம் பிராத்தம் எனப்படும்.நாம் எப்போதும் நமக்கு ஏற்படும் கஸ்டங்களுக்கெல்லாம் இறைவனை கதரணம் கூறுவது வழமை அது  வல்ல  உண்மை நமக்கு நாம் தான் கரணம். நாம் எண்ணம் ஒவ்வென்றும் சக்தி வாய்ந்தது எண்ணுகின்ற போது அவை வெளிவந்துவிடும். அவற்றை மீளவும் பெற முடியாது. இதனால் தான் கொடுத் வரத்தை மீளவு பொறமுடியாது. வாய்மை எனக்குறிப்பிகின்றனர். எனவே எம்மால் விடப்பட்ட எண்ணம் உண்மையில்லாவிட்டால் அந்த  எண்ணம் எம்மை தாக்கும்.
“தினை விதைத்தவன் தினை அறுப்பான. வினை விதைத்தவன் வுpனை அறுப்பான்”. அதுமட்டுமல்ல முப்பிறவியில் நாம் செய்த செயல் இப் பிறவியில் அனுபவிக்வேண்டும்.  “முற்பகல் செயில் பிற்பகல் விளையும்” என்னும் முதுரைகள் எமக்கு உனர்த்துக்ன்றன.கன்மத்தை நாம் அனுபவிக்காமல்விட்டால் பிறவிப்பினி நீங்காது அது இப்பிறவில் செய்யும் பாவத்துடன்சேர்ந்து பல பிறவிக்கு வளிவகுக்கும். புpறவி என்பதே துன்பம் ஆனால் பிறவித்தளையை நீக்க மனிட பிறவியைத்தவிர வேறுவழி இல்லை.  “அரிது அரிது மானிடராய்ப்பிறத்தல்”  எனவே தேவர்களாக இருந்தாலும் பிறவிப்பினி நீங்க மானிடப்பிறவி எடுத்தே ஆகவேன்டும். இதனை நாம் புராணங்களில் கானமுடியும்.
              இதற்கு சிறந்த உதாரனம் சீதையின்கதை இவள் சநக மகாராஜவின் மகள் இவள் பூர்வஜன்மத்தில் வேதமோதிக்கொன்டுடிருந்த குசத்துவாசர் வாயில் தோன்றிய வேதவதி. தம்பன் என்னும் அரக்கன் இவளை மனைவியாக்க என்னி தாயான இருடியைக்கேட்க இருடி இவள் விஷ்ணு மூர்த்தியின் மனைவி என்று கூறினாள் இதைக்கேட்ட தம்பன் கோபம் கொண்டுஇருடியைக் கொன்றான். இதனால் தனித்திருந்த வேதவதி விஷ்ணு மூர்த்தியை என்னி தவமிருந்தபோது திக்குவிசயம் மேற்கொன்டு வந்த இராவணன் இவளில் காமவயப்பட்டு அவளைப்பிடிக்க வேதவதி கோபம்கொன்டு நீ தீண்டிய உடலை நான் வைத்திருப்பதில்லை என்றும் நானே உன்னை அழிப்பேன் என்று சபதம் எடுத்து எடலை தீமூட்டி எரித்து இறந்தாள். பின்னர் இலங்காபுரியில் ஒரு தாமரைப் பொய்கையில் தாமரை மலரில் அவதரித்தாள்.  சிவபூசைக்கு பூ பறிக்கச் சென்ற இலங்புரி வேந்தன் இராவணன் குழந்தையைக்கண்டதும் அதை எடுத்து வருகையில் அதைக்கண்ட நிமித்திகர் முனிவர் இக் குழந்தையினால் எதிர்காலத்தல் அழிவுஎற்படும் என்று கூறினார் இதைக்கேட்ட மன்னர் அஞ்சி பெட்டியிலிட்டு கங்கையில்லிட்டான். பேட்டி வெள்ளத்தின் காரனமாக மிதிலையில் ஆற்றுப்படுக்கையில் புதைந்தது. மிதுலைமன்னன் சநகன் யாகம் செய்வதற்காக ஆற்றுப்படுக்கையை உழுதபோது கலப்பையில் பெட்டியொன்று பட கன்ட சனகர் பெட்டியை திறந்து பார்த்த போது ஓர் குழந்தை இருக்கக்கண்டார் . அக் குழந்தையை எடுத்து வளர்த்து வந்தார். அக்குழந்தை வளர்து பருவமடைந்ததும் வில்லை  வளைத்த இராமனை மனந்தாள். நுகரில் இருந்து ஆரணியம் நீங்கிய இராமமூர்த்தியுடன்  பின்தொடர்கையில் தித்திரகூடம் கடக்கையில்  அத்திரிமகரிசியின் ஆச்சிரமத்தில் அனுசூயை யால் உபசரிக்கப்படுகையில் தண்டகாரணியத் வந்த மாரீச்சனைகிய மாயமானைக்கண்டு ஆசைவயப்பட்டு கனவனை பிடித்துத்தரச்சொல்ல கனவன்பிடிக்கச்செல்ல அவள்கூவியகுரல் கேட்க லக்குமணன் சீத்தா எனும் ஓசையால் மைத்துனரைப் போகக்செய்து தருனம்பாத்திருந்த இராவனன் சன்னீயாசி வேடம் கொன்டு சீதையை பிடித்து இலங்கரபுரியில் சிறை வைத்தான்;. இதன் விளைவை  இராமாயணம் முலம் அறிகின்றோம்.
                   முன்விணைபயன் இங்கு தெளிவு படுகின்றது. இது போன்று புராணக்கதைகள் பல உண்டு. இன்னும் கதைகளைத்தான் படித்துக்கொன்டு இருக்கின்றோமே தவிர அதன் உட்கருத்தை விளங்கிக்கொள்ளவும் இல்லை. விளங்கியதை மற்றவர்களுக்கு விளக்கவும் இல்லை. பாமரமக்களுக்கு சிறிய உண்மையை விளக்க அக்காலத்தில் புராணங்கள் பயன்பட்டன.
                      இன்றைய நவீன காலத்தில் மானிட சமூகம் தீராத ஆசைகளை வளர்த்துக்கொண்டு அவ்வாசைகளை தேவைகளாக்கிக்கொன்டு தேவைகளை அதிகரித்துக்கொண்டு அதை நிரைவு செய்ய பொருளாதாரத்தை தேடி அலைகின்ற காலத்தில் புராணம் கேட்க அல்லது அதை நாடகங்களாக பார்க்க நேரம் எங்கே? கந்தப்புராணத்தில் சூரன் என்றபாத்திரம் நம்முள் அடங்கிக்கிடக்கும் ஆணவத்தின் தன்மையும் அது எப்படி எல்லாம் சந்தப்பத்துக்கு ஏற்ப எடுக்கும் உருவங்கள் அது படுத்தும்பாடு அதன் விளைவு எல்லாவற்றையும் அழகாக கட்டியுள்ளது.
                           மகன் தாய்யிடம் கேட்டான் அம்மா இறைவன் அன்பானவன் உயிர்களிடத்து அன்புள்ளவன் எல்லாவற்றையும் படைத்தவன். உயிர்களிடத்து வேற்றுமையற்றவன். இப்படி இருக்க சூரன்போரில் முருகன் சூரனை கொல்கின்றார். அவர் தானே சூரனையும் படைத்தவர். கொல்கின்ற கடவுளை நாம் வழிபடக்கூடாதல்லவா?  அப்போது தாய் பதில் கூறமுடியாது திகைத்து நின்றாளாம். ஏனெனில் தாய்க்கும் கதையின் உட்பொருள் தெரியாமையே இதற்கு காரணம். இது ஓர் உண்மைச் சம்பவம் இவ்வாறான கதைகள் மூலமே மதம் மாற்றுபவர் தங்களுக்கு சதகமாக்கிக் கொள்ளுகின்றனர். எனவே கதைகளை கூறுவதோடு அதன் உட்கருத்தையும் விளக்குவதே சிறந்தது
.
              மாயை இல்லாததை இருப்பதாக காட்டும். இது காணல் நீரைப் போன்றது. அம்பிகையை மகாமயை என்று அழைக்கின்றனர். ஆவளை சரண்புகுந்தால் மாயையைக்கெண்;டு மயையைஅழித்து மலபரிபாகம் செய்து அத்ம விடுதலை கொடுப்பாள். “வாள் எடுத்தவன் வாளால் அழிவான்” என்பது முதுமொழி. மாயை என்பது இல்லாததை இருப்தாக காட்டுவது. அனுபவிக்க அனுபவிக்க மீண்டும் மீண்டும் ஏற்படும் அதற்கு முடிவில்லை. ஆனால் அதுவே அதை அளித்துக் கொள்ளும். பொண்னாசை, பெண்ணாசை, மண்ணாசை இவ்வாசைகள் பேராசைகளாகினால் அழிவுதான். நியாயமானவையானால் அதனால் நன்மை கிடைக்கும். ஆனால் சுத்தமாயை உண்டு அது இறைவனை அடைய வழி செய்யும். அடைய முடியாத ஆசையை அடைய முயலும் போது பொறாமை ஏற்படுகின்றது. போறாமை வஞ்சகமாக மாறுகின்றது. வஞ்சகம் சூதாகமறுகின்றது. சூது செயல்படுகின்ற போது விணையாகின்றது. விணையானது நல்விணை தீவினணயாகின்றது. இவை பின்னர் கன்மாகமாறி பிறப்புக்கு வழிவகுக்கின்றது.

எனவே ஆணவம் கன்மம் மாயை எனும் மும்மலங்களை ஞானத்தின் தீயில் எரித்து சாம்பல்க்குவதன் மூலம் பிறவாமையை அடைய முடியும். இதனையே தீட்சை பெற்றவர்கள் நெற்றியில் அணியும் விபூதியான திரிபுண்டரம் குறிக்கின்றது.

Sunday, December 5, 2010

உலகத்தை ஆளும் ஆத்மசக்தி

                                           உலகத்தை ஆளும் ஆத்மசக்தி-எம்முள் உறங்கிக்கிடக்கும்                      குண்டலினி சத்தி.
                                          புத்தி விளிப்பே சித்தத் தெளிவே 
மனஒருமைப்பாட்டின் விளிப்பே தியானத்தின் அடிப்படை.
                                         தியானமே அதன் விளிப்பு.
 அதுவே ஆறாதாரத்தின் உச்ச நிலை.   மூலாதாமே. அதன் முளை               சகஸ்ரதாரமே. அதன் விருட்ச்சம். சுளு முனையே அதன் வளி.ஆறாதாரம் அதன்
 சத்தி விளிப்பிடம். 
                                         சகஸ்ரதாரமே அமுரசுரபி. 
       அதுவே நாம்மருந்தும் பிறவாமையின்அரு மருந்து.
                 அதை அறியார் படைப்பின் தத்துவம் உணரார்.-அதை அறிய குருவருள்     தேவை. குருவருள் திருவருள் -அதுவே அவனருள்.