Tuesday, November 29, 2011

சிந்தித்தால் சிரிப்பு வரும் சிந்தனையில் விளிப்பிந்தால் - அத்தனையும் வந்து விடும்.

சிந்தித்தால் சிரிப்பு வரும் 
சிந்தனையில் விளிப்பிந்தால் -
அத்தனையும் வந்து விடும்.
மனத்தில் மறைந்தது புத்தி
புத்தியில் உறைந்தது சித்தி
சிந்தித்தால் புத்தி உறங்காது
ஏன்? என்றால் - படைப்பின் இரகசியமது 
 அஞ்ஞானம் உலகைப்படைக்கும்
மெய்ஞானம் படைப்பை வெறுக்கும் - அது
விடுதலைக்குத் தடை
ஏன் இந்த விடுதலை?  அது - பிறப்பில் இருந்து விடுதலை
படைபின் இரகசியம் தெரிந்தவர் விடுதலை இலகு
தெரியாதார் - மாயையின் பிடியில் பட்டு 
நான் எனும் அகந்தையில் வளர்ந்து கன்மத்தில் வீழ்ந்து
உண்மையை அறிந்தால் பிறப்பின் இரகசியம் புரியும்
வாழ்க்கையில் இடர் - உற்ற நன்பன் 
மகிழ்ச்சி ஆரவாரம் எமக்கு எதிரி அது – 
உண்மையை உணர்த்தாத சல்பீனீயாக் குழம்
ஆழம் அறியவிடா சதிக் கும்பல்; 
புரிந்ததா வாழ்கையின் இரகசியம் -
சிந்தித்தால் சிரிப்பு வரும் 
உண்ணுள்ளே இருக்கு தடா எல்லாம்
அண்டத்தில் உள்ளது பிண்டத்தினுள்
வானமும் நீயே பூமியும் நீயே
உன்னுள் உள்ளது பூதங்கள் ஐந்தும் -
மண்டலங்கள் மூன்றும் உலகங்கள் ஏழும்
உன்னுள்னே இமையமும் வாரநாசியும்
கங்கையும் ஜமுனையும் சரஸ்வதியும் - 
பாய்தோடுது உன்னுள்ளே
எதற்காக சிந்தித்துப் பார்த்தாயா ? 
அத்தனையும் விடுதலை
தேவரும் அசுரரும் உன்னுள்ளே
போர்க்களம் அமைத்துள்ளதை
உணந்தாயா? விளைவுகள் அறிய தடுத்தது மாயை
கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டியர்
நீ யார் என்பதில் எல்லாம் விளித்திடும்
நம்முள்ளே தேடினால் கிடைப்பது 'தேமாங்கனி'
எம்முள்ளே மூலாதாரத்தில் உற்றெடுத்து – 
சகஸ்ராதரத்தில் பாயும் கங்காநதி அது - 
நித்திய இன்பத்தில் விளைந்த –
பிறவித்துயர் அழித்திடும் அரு மருந்து
உலகதில் தேடிட்டால் கிடைத்திடும் மாங்கனி 
உன்னுள்ளே தேடிட்டால் கிடைத்திடும் தேமாங்கனி
அத்தனையும் அவன் அவன் கன்மத்தின் விளைவு
சிந்தித்தால் சிரிப்பு வரும் 
சிந்தனையில் விளிப்பிருந்தால் -
அத்தனையும் வந்து விடும்



மட்டூர் புன்னையம்பதியான் 
























Friday, November 25, 2011

“சித்தர்கள் தந்த வாழ்வில் முறை நோய் இல்லா அறிவியல் முறை-1”


“சித்தர்கள் தந்த வாழ்வில் முறை நோய் இல்லா அறிவியல் முறை-1” 
சித்தர்கள் வாழ்வியல் பற்றிச் சொல்கையில்
“உண்பதிரு பொழுது ஒழிய மூன்று பொழுதுண்ணோம்
உறங்குவது ராயொழிய பகலுறக்கம் செய்யோம்
மண்பரவு கிழங்குகளில் கருணையன்றி புசியோம்
வாழையிளம் பிஞ்சொழியக் கனியிருந்த மாட்டோம்
பெண் கடமை திங்களுக் கோர் காலன்றி மறுவோம்
பெருந்தாகம் எடுத்திடினும் பெயர்த்து நீர் அருந்தோம்
நன்பெற உண்ட பின் குறுநடையும் கொள்வோம்” இப்பாடலில்
முதல் வரியில் உணவு உண்பது தொடர்பாக குறிப்பிட்டுள்ளார். 
தேரையார்
1.“உண்பதிரு பொழுது ஒழிய மூன்று பொழுதுண்ணோம்” :இது தொடர்பாக இன்னுமேர் பாடலில் “ரோகிக்கு மூன்று வேளை போகிக்கு இரண்டு வேளை யோகிக்கு ஒரு வேனை” என்று கூறப்பட்டுள்ளது இவை இரண்டு பாடல்களும் பொருந்தும். மூன்று வேளை உணவு உட்கொள்வதால் உடலின் சமிபாட்டுத் தொகுதிக்கு தொடச்சியான வேலை நாம் எப்போதும் நாவின் ருசியை அடிப்படையாகக் கொண்டு உணவினைத் தெரிவு செய்கின்றோம். அவை அதிக கொழுப்புச் சத்து நிறைந்தவையாக இருக்கும் அவை சமிபாடடைய அதிக நேரம் எடுப்பதுடன் அதிகநேரம் வயிற்றில் இருப்பதால் அதிக அமிலச் சுரப்பு ஏற்பட்டு அவை வாயுவாக மாறி உடலில் உபாதையைத் தருவதுடன் மேலதிக அமிலங்கள் இரத்தத்தில் கலக்கக்கூடிய சூழ்நிலை எற்படும் அதாவது உடல் உள்ளுறுப்புக்கள் தனது வேலைப்பழுவினால் செயல் இழக்கும் தன்மை ஏற்படடுகின்றது. உணவு அருந்தும் போது அரைப்பங்கு உணவும் கால்பங்கு நீரும் கால்பங்கு வெறுமையாகவும் இருக்கவேண்டும். அத்துடன்  உணவைத் தெரிவு செய்யும் போது வயிற்றை கருத்தில் கொண்டு இலகுவில் சமிபாடடையக்கூடிய உணவைத் தெரிவு செய்வதுடன் உணவை வாயில் இட்டு நன்றாக அரைத்து நன்றாக உமில்நீர் கலந்து கரைந்து நீர்போல் உணவை அருந்துவதனால் உணவிலுள்ள கொழுப்புச்சத்து சக்கரைக்சத்து என்பன நன்றாக செரிமாணம் அடையும் இத்துடன் உணவு அருந்திய பின் தான் நீர் அருந்த வேண்டும். உணவு அருந்தும் போது இடை இடையே நீர் அருந்துவதை தவித்துக் கொள்ள வேண்டும். ஒரு வேளை அதிமாகவும் ஏனைய இருவேளையும் மிதமான குறைந்தளவான உணவை உட்கொள்வது உத்தமம் இருவேளை அதிகமான உணவை எடுத்து ஒருவேளை மிதமாக எடுத்தல் மத்திமம் மூன்று வேளையும் அதிக உணவை எடுப்பது அதர்மம் என்பதே சித்தர்கள் கருத்து. பொதுவாக காலை மாலை இருவேளையும் மிதமான குறைந்தளவான உணவையும் மதியம் நிறைவான உணவை எடுத்தல் சிறந்தது. 


2.“உறங்குவது ராயொழிய பகலுறக்கம் செய்யோம்”: பகலில் உறங்குங்குவதானால் உண்ட உணவு செர்மாணமானமடையும் சக்தியை உடல் இழந்து அவை உடலில் கொழுப்புத் சத்தும் சக்கரைத் கத்தும் அதிகரிக்கக்கூடிய வாய்ப்பு அதிகமாக உள்ளதுடன் இதை இன்றை நவீன மருத்துவமும் ஏற்றுக் கொள்கின்றது. ஆனாலும் தவத்திரு இராமலிங்க அடிகளார் உண்டபின் சிறுநித்திரை அதாவது பத்து நிமிடத்துக்கு அதிகரிக்காத சிறு தூக்கத்தை குறிப்பிடுகின்றார். அச்சிறு தூக்கத்தின் முலம் சமிபாட்டுக்கு அது துனை செய்யும் என்று கருகின்றார். குருதேவர் ஸ்ரீ இராமகிரு~;னர் தமது பிரமச்சாரி சீடர்களுக்கு உபதேசம் செய்யும் போது பகலில் நித்திரை செய் இரவு முழுவதும் விளித்திருந்து தியானத்தில் மூழ்குமாறு கூறியிருந்தார். இரவு என்பது இருள்சூழ்ந்த மனத்திடத்தை இழக்கச்செய்யும் இராத்திரி தேவியின் மாயாவிளையாட்டுக்கு பொருத்தமான காலமது அத்தருனம் அதில் விளித்திருந்தால் அவசியமாகும் அதனால் தான் குருதேவர் அவ்வாறு உபதேசம் செய்திருப்பார் எனத்தோன்றுகின்றது. 
   
3. “மண்பரவு கிழங்குகளில் கருணையன்றி புசியோம்”: மன்னுக்குள் விளை யும் கிழங்குகளில் கருனை என்று சித்தர்களால் வழங்கப்பட்ட எல்லோருக்கும் கருனையாக தன்மைகளை உடலுக்கு வழங்கக்கூடிய கிழங்கு இது மட்டும் தான் எனவும் இக் கிழங்கு மட்டும் தான் நிலத்தினுள் விளையும் கிழங்குகளின் உண்ணச் சிறந்த கிழங்கென கருதுகின்றனர். பொதுவாக கிழங்கு வகைகள் காபோகைதரேட்டும் இலிப்பீட்டும் உண்;டு. இது சக்கரைத்சத்து நிறைந்தது இதனால் சக்கரை நோய்யாளர்களுக்கு சிறந்ததல்ல,
4.“வாழையிளம் பிஞ்சொழியக் கனியிருந்த மாட்டோம்”: வாழை மரத்தில் வாழைக்காயின் பிஞ்சே சிறந்தது அது ஊட்டச்சத்து விறைந்தது பொதுவாக பிஞ்சை குழந்தை யீன்ற தாய்க்கு மிளகுதன்னி தயாரித்துக் கொடுப்பது வழக்கம் பொது வாக மருத்துவக்குணம் நிறைந்த பாகம் பிஞ்சி தான்.
5 “பெண் கடமை திங்களுக் கோர் காலன்றி மறுவோம்”: பெண்களுடன் கலவியல் ஈடுகடுவது மாதம் ஒருமுறை ஆகும். இங்கு திங்கள் என்று குறிப்பிடுவது மாதத்தை ஆகும். இங்கு இன்னுமோர் சித்தர் பாடலையும் பார்ப்பது சிறந்தது. “நாள் இரண்டு வாரம் இரண்டு மாதம் இரண்டு வருடம் இரண்டு” என கூறி இருக்கின்றனர். இதன் பொருள் நாள் இரண்டு என்பது ஒரு நாலைக்கு இருமுறை மலம் கழிக்க வேண்டும். அதாவது காலை மாலை என்பது பொருள். வாரம் இரண்டு; என்பது வாரம் இருமுறை தலைக்கு நல்லெண்ணை தேய்த்து குளிப்பது. இது ஆண்களுக்கு புதன் சனிக் கிழகைகளில் பெண்களுக்கு திங்களும் வெள்ளியும் பொருத்தமானதாகும். “சனிநீராடேல்”; என்பது சனீஸ்சரனுக்கு தானியம் எள்ளு அதன் எண்ணையை வைத்து குளிதல் உடலுக்கு நல்லது என்பதையே குறிக்கின்றது. மாதம் இருமுறை என்பது மனையாளுடக் கலவியில் ஈடு படுதலைக் குறிக்கின்றது. பாலியல் நுகர்ச்சி என்பது ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இன்பமாக இருந்தாலும் அது உடலுக்கு உயிர்ப்பு என திருமூலர் குறிப்பிட்டுள்ளார் இதை விளக்கமாக “திருமூலர் காட்டிய வாழ்க்கை நெறி” என்னும் கட்டுரையின் தொடரில்  விரிவாக விளக்கவுள்ளேன். அதை அதிக அளவில் தேவையில்லாது இழத்தல் சக்தியை இழப்பதற்கு சமம். 
          “விந்து விட்டான் நொந்து கெட்டான்” என்ற முதுமொழிக்கமையவும் “அளவுக்கு மிஞ்சினால் அமுதெனினும் நஞ்சி” என்பதற்கு அமையவும் அதை பிஜாவிருத்திக்கு மட்டும் பயன்படுத்த் நரைதிரை அற்று நீண்டநாட்கள் சீவிக்க வசதியாக அமையும் என்பதில் ஐயம்மில்லை. அடுத்து வருடம் இரு முறை என்பது வயிற்றை சுத்தம் செய்வதை கருகின்றார் வயிற்றில் உணவு சொரிமானச் செயல்பாட்டால் சிலவேளைகளில் அழுக்குகள் தங்கி ஐPரணமண்டலத்தில் பிரச்சனைகள் வருவது இயல்பு அதைச் சீர் செய்ய வருடத்தில் இருமுறை பேதியாக போதி மருந்து எடுப்பது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது.


5.“பெருந்தாகம் எடுத்திடினும் பேயர்த்து நீர் அருந்தோம்”:  அதிக தாகம் எடுத்தாலும் தன்னீரை ஒரு முறையில் விரைவாக அருந்தக்கூடாது. சிறிது சிறிதாக கொஞ்சம் கொஞ்சமாக நேரமெடுத்து அருந்த வேண்டும். தன்னீரை அண்ணாந்து அருந்தக்கூடாது. அருந்தும்பாத்திரத்தை உதட்டில் கௌவி அருந்த வேண்டும். உண்ணும் போது நல்வர உண்ணவேண்டும் அதாவது நன்றாக மென்று உமிழ்நீர் கலந்து நீர் போலாக்கி உறிஞ்சிக் குடிக்க வேண்டும். உண்ணும் போது வாயில் இட்டதை நன்கு மென்று உண்டபின் அடுத்த வாய் உணவை எடுக்க வேண்டும். உண்ணும் போது நீர் அருந்தக்கூடாது. உணவருந்திய பின்னர் தாகமடக்க நீர் அருந்த வேண்டும். 
          நீர் பற்றிக் குறிப்பிடுகையில் “நீர் சுருக்கி மோர் பெருக்கி நெய் உருக்கி” எனக் குறிப்பிடுகின்றனர். நீர் சுருக்கி; என்பது நீரை நன்றாக கொதிக்க வைத்து அதாவது நீரை நாலில் மூன்று பங்காக கொதிக்க வைத்தலை கருதும். அப்போது நீரின் அளவு குறைந்திருக்கும இதனால் கனியுப்புக்கள் நன்றாகக் கரைந்து நீருடன் கலந்து இருப்பதுடன் கிருமிகளும் அழிந்து நீர் உணவாக மாறும் இதனையே நீர் சுருக்கி எனக்கருதுகின்றனர். மோர் பெருக்கி என்னும் போது நீரை அதிக அளவில் சேர்க்கும் போது அதில் உள்ள வெண்ணை அதிகளவில் பிரித்தெடுக்கப்பட்டு நீர்மோரகும் அதனால் சமிபாட்டுக்கு இலகுவாக இருப்பதுடன் கொழுப்புச் சத்தும் குறைவாக இருக்கும் இது உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும். அடுத்து நெய் உருக்கி என்பது நெய்யில் கொழுப்புச்சத்து அதிகம் உருக்குவதன் மூலம் அதன் செறிவைக் குறைத்து உண்பதனால் உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும். 
6.“நன்பெற உண்ட பின் குறுநடையும் கொள்வோம்”:  உண்ட பின் சிறு நடை கொள்வது உணவு செரிமானத்துக்கும் ஐPரண மண்டலத்துக்கும் நல்லது “உண்ட பின் நூரடி உலாவு” என்பது முது மொழி இதுவும் பொருந்தும்.
  மேல் பாடலில் சொன்ன முறைப்படி வாழ்க்கையில் கடைப்பிடித்தால் நோயற்ற நலமுடனும் வளமுடனும் வாழ முடியும் என்பதில் ஐயம் இல்லை. 
 “சித்தன் வாக்கு சிவன் வாக்கு 
     சீவன் சிவலிங்கம் 
      காயம் கோயில் 
  காயகற்பம் சித்தவைத்தியம்
  சித்த வாழ்வியல் அறவியல்
  மனித வாழ்வுக்கான அறிவியல் ”
               -மட்டூர் புன்னைம்பதியான்-

Wednesday, November 23, 2011

"பாண்டு பெரும்பாடு பகர் மூத்திரக்கிரீச்சரம் போக்கிடும் கற்கரக்கி என்னும் தேங்காய்ப்பூக்கீரை"

"பாண்டு பெரும்பாடு பகர் மூத்திரக்கிரீச்சரம் போக்கிடும் கற்கரக்கி என்னும் தேங்காய்ப்பூக்கீரை"
         கோடைகாலம் ஆரம்பித்தவுடன் உடலில் ஏற்படுவது நீர் இழப்பு இதற்கு காரணம் அதிக வெயிலால் தோல் எனது உடலின் வெப்பதற்பத்தை சீர் செய்யும் போது தோல் அதிக வியர்வை வெளியேற்றி சீர் செய்யும். இன் நிலையில் சிறுநீரகத்தில் நீர் விழுக்காடு ஏற்பட்டு இதனால் நீர்ச்செறிவு ஏற்பட்டு நீர் அடத்தி ஏற்படும் அதனால் சிறுநீரக்கற்கள் உண்டாவதுடன் சிறுநீரகம் கிருமித்தொத்துக்கு உண்டாகி பாதிக்கப்படலாம். அதை தடுக்க கோடைக்காலத்தில் அதிகளவு நீர் அருந்தும் தேவை உண்டு.
        சிறுநீரகக் கற்கள் பொதுவாக சிறுநீரகத்துக்குள்ளும் அல்லது சிறுநீரகத்தில் “வெல்விஸ்” பகுதியிலும், சிறுநீர் வருகின்றபாதையிலும், சிறுநீர்குழாயிலும், தங்கியும் தோன்றலாம்.
     சிறுநீரகக் கற்கள் பொதுவாக ஐந்து வகையாக வகைப்படுத்தியுள்ளனர்
1. “கல்சியம் ஒட்சியேற்” வகையான கற்கள். 
2. “கல்சியம் பஸ்ரேட்”  வகையான கற்கள்.
3. “சுவைட்” வகையான கற்கள். சிறுநீரக தொற்று கிருமிகளின் தாக்குதலால் ஏற்படுகின்ற “மெக்நீசியமும் அமோனியாவும்”; சேர்ந்து ஒருவகையான கற்களை உருவாக்குகின்றன இவ்வகையான கற்கள் “சுவைட்” வகையான கற்கள் ஆகும்.
4. “யூறிக் அமிலக் கற்கள்” இது மிகக் குறைவான அளவிலே வருகின்ற யூறிக்கமிலம் அடர்த்திகூடுவதனால் உருவாகும் கற்கள்.
5. “செங்டோன் கற்கள்” “சிஸ்டின் “என்ற அமிலோ அமிலத்தால் உண்டாகும் கற்கள்.
இவ்வாறு சிறுநீரகக் கற்கள் உருவாகுகின்றன. இக் கற்களை அகற்ற நவீன மருத்துவம் பலமுறைகளைக் கையாழுகின்றன. அவைகள்.
1. “லித்தோடிஸ்சி” என்ற ஒருமுறை கதிர்களைப் பயன்படுத்தி கற்களை உடைத்து சிதைத்து சிறுநீர்ப்பாதை வழியாக வெளியேற்றுதல். இது கிரேக்க நாட்டு முறை “லித்தே” என்பது கல். “திப்சி” என்பது உடைத்தல் எனப் பொருள்படும். 
2. “டனல் சேசறீ” முதுகுப் பகுதியில் துளையிட்டு அதன் வழியாக கற்களை அகற்றுதல்.
3. “யூரட்டோ கொப்பி” சிறுநீரகச் சிறுநீர் வரும்பாதையின் வழியாக “பிரோவல்” என்ற குழாயைச் செலுத்தி அதன் மூலம் சிறுநீரகக் கற்களை அகற்றுதல். 
                  இவ்வாறான முறைகளை நவீன மருத்துவம் பயன்படுத்த தமிழ் மருத்துவம் கற்களை கரைத்து அது மீண்டும் உருவாகுவதைத் தடுப்பதுடன் கற்கள் உண்டாகாதவர்களுக்கு உண்டாகாமல் தடுக்கும் வல்லமை உள்ள மூலிகைகளை கண்டனர் சித்தர்கள். அம் மூலிகையை கற்பேதி அதாவது கல்லை கரைத்து அதை பேதியாக்கி விடும் சக்தி வாய்ந்தது அந்த மூலிகை அதற்கு சிறுகண்பேளை, சிறுபேளை, சின்னப்புளைச் செடி, தேங்காப்பூக் கீரை என்றெல்லாம் அழைப்பர். இக்கீரையை சிறுநீர்ப் பெருக்கியாகப் பயன்படுத்துகின்றனர்.
       தாவரவியல் பெயர் : “எர்வால் லெனட்டா”
 தேரையார் தனது பதார்த்த குண சிந்தாமணியில் 
        “ பாண்டு பெரும்பாடு பகர் மூத்திரக்கிரீச்சம்
         பூண்ட திரிதோடி மிவை போக்குல் காண் - தாண்டி
         புதிய வேலைத் துரத்தும் பார்ரவக் 
         சிறிய கிளைக்குச்ச கண்ணாய் சிதைந்து” என்று ஒரு பாடலிலும் இன்னுமோர் பாடலில்
       “ நீடடைப்புக் கல்லடைப்பு நீங்கா குடல் சூலை 
        பேதீ டறிர் ரத்த கணம் போக்கும் கான்- வாரிருக்கும்
        பூண்முலையாய் கேளாய் கிறு பினையாகிது
        கற்பேதி பென்றறி” என்றார்.
 இவ்வாறு இருபாடல்களில் “கற்பேதி” மூலிகையின் மருத்துவக் குணத்தை பாவில் இயம்பியுள்ளார். இங்கு முதல் பாடலில்
1. “ பாண்டு”:  பாண்டு என்பது உடலில்  நீர்க்கொர்த்திருக்கும் நோய் முழங்கால் கனுக்காலின் பின்புறம் வயிற்றின் கீழ்ப்புறம் போன்ற இடங்களில் நீர் கோருத்து வலுனில் நீரை விட்டால் இருப்பது போல தெரிவது. இன் நோயை போக்க வல்லது இந்த மூலிகை
2. “பெரும்பாடு”: பெண்களுக்கு  வருகின்ற மாதவிடாயி நீடித்து அதிநாட்கள் நீர் இறைப்புப் போல் உதிரம் போகின்ற நிலையாகும். மாதவிடாய் சாதாரணமாக மூன்று நாட்கள் நீடிக்கும் ஆனால் இந்த நிலையில் பத்து பதினைந்து நாட்கள் கூடநீடிக்கலாம். இன் நோயை போக்க வல்லது இந்த மூலிகை


3. “பகர் மூத்திரக்கிரீச்சம்” : சிறுநீர் கழிக்க சென்றால் கழிக்முடியாது சொட்டுச் சொட்டாக எரிச்சலுடன் வேதனையும் தரும். சிறுநீரகத்தில் கிருமி த்தாக்குதலால் ஏற்படுவது இதனை “யூறினல் இன்பஸ்கன்” என்பர். இன் நோயை போக்க வல்லது இந்த மூலிகை
4. “பூண்ட திரிதோடி” : வாத பித்த கபத்தை உடலில் சீர் செய்து அதனால் ஏற்படக்கூடிய நோய்களைக் கடுப்படுத்தும் வல்லமை இம் மூலிகைக்கு உண்டு. எனக் கூறுகின்றார்.
என பாம்பைப் போல கூர்மையான கண்ணுடைய பெண்ணே எனக் கூறுகின்றார். அடுத்த பாடலிலே
 “ நீடடைப்புக் கல்லடைப்பு நீங்கா குடல் சூலை 
        பேதீ டறிர் ரத்த கணம் போக்கும் கான்- வாரிருக்கும்
        பூண்முலையாய் கேளாய் கிறு பினையாகிது
        கற்பேதி பென்றறி”
1. “ நீடடைப்புக்” :  என்பது முதல் பாடலில் செல்லப்பட்ட பாண்டு என்னும் நோய் ஆகும்.
2. “கல்லடைப்பு” : என்பது சிறுநீரகக்கற்கள் இக்கற்களை கரைத்து பேதியாகி சிறுநீருடன் அற்றும் ஆற்றல் மிக்கது இம் மூலிகை. 
3. “நீங்கா குடi; சூலை”: வேதனையுடன் கூடிய குடலில் ஏற்படும் வலி இது சூரத்தால் முத்துவது போல ஏற்படும் வலியை போக்க வல்லது இந்த மூலிகை.
4. “பேதீ டறிர் ரத்த கணம்” : பெரிய இடரைத்தரும் இரத்த கணம் என்பது இரத்தழுத்தத்தை இங்கு கருதுகின்றர். இதையே இரத்தபித்தம் என்றும் சித்தமருத்துவத்தில் பயன்படுத்துவர். அழுத்தத்ததை குறைத்து அதற்கா தடையை நீக்கி நரம்பை பலப்படுத்தி வலுவுட்டும் தன்மை இந்த மூலிகைக்குண்டு.
 பாவில் கூறப்பட்ட நோய்களுக்கெல்லாம் அருமருந்து தேங்காய்பூ கீரை என்று குறியுள்ளார். அதன் பூக்கள் தேங்காப்பூ போல இருப்பதால தேங்காப்பூக் கீரை என்றும் அழைக்கின்றனர். 
         சிறுநீரக கற்களையும் சிறுநீரகக் கிருமித்தாக்கத்தால் உண்டாகும் நோய்களுக்கும் அருமருந்தாக அமைவதுடன் “புரஸ்ரகோளம்” என்னும் ஆண்குறின் இயக்கத்துக்குரிய கிளான் ஒன்று உண்டு இது வீங்கும் போது சிறுநீர்கழிப்பது தடைப்படுவதுடன் வேதனையும் எரிச்சலும் ஏற்படும் அதை குணப்படுத்தி அக் கிளான்டை புதுப்பித்து இயக்க வல்ல மூலிகை ஒன்று உண்டு அதுதான் நெருஞ்சியின் வித்து. 
            நெருஞ்சில் அல்லது சிறுநீர் பெருக்கி என்பதின் மருத்துவ பாகம் பற்றி தேரையர் பதார்த்த குணசிந்தாமணியில் குறிப்பிடுகையில்
“ சொல்ல வொன்னா நீர்கட்டு துன்பமாமிசருக்கி 
கல்லடைப் பெனும் பிணிகள் கண்டக்கால்
கருஞ்சின கண்மாதே நல்ல
நெருஞ்சினறு கித்தே நினை” இங்கு மேல் சொன்ன கல்லடைப்பு, நீர்க்ட்டு; என்பனவற்றுடன் விசேடமாக “துன்பமாமிசருக்கி” இது “புரஸ்ரகோளம்” என்னும் கிளான் தனது நிலை மருவி வீங்கியிருக்கும் இதனால் சிறுநீர் களிப்பதும் கடினமாக இருப்பதுடன் சிறுநீர் வெளியேறும் குழாயை அழுத்தி சிறுநீர் கழிப்பதை  தடை செய்து வேதனைக்குள்ளாக்கும் இந்த நிலையிலிருந்து வீக்கத்தை வத்தவைத்து சீர்செய்து இயல்பான நிலைக்கு கொண்டு வந்து இயல்பு நிலைய தொடர்ந்து பாதுகாக்கும் வல்லமை நெருஞ்சியின் நன்கு விளைந்த நல்வித்துக்கு உண்டு.  


“சித்தன் சிந்தையில் உதித்தது 
    சித்த வைத்தியம்
மனுக் குலம் பெற்ற பெறு அது
    அவன் வாக்கு சிவ வாக்கு
சீவன் சிவன் என்று உணர்தால்
    அதுவே வாழ்கையின் தத்துவம்
தத்துவம் அறியார் முத் தீ அடையார்
 அடைய உடல் திரி தோச நிவர்தியினால்
 சம நிலை தேவை கற்பமாக
அதற்கே சித்த வைத்தியம் தந்தான் சித்தன்
சித்த வாழ் வியல் அறிந்து
 ஒழுகினால் வெற்றி நிச்சயம்” 
                 மட்டூர் புன்னையம்பதியான்  

“நோயற்று வாழ்வது குறைவற்ற செல்வம்

    “நோய்யற்று வாழ்வது குறைவற்ற செல்வம் 
              வாழ்கையின் பயனை அனுபவிக்கத் திட்டம் 
     வகுத்தனர் சித்தர்கள் தந்தனர் வாழ்வியல்
            பற்றியே வாழ்ந் திட அற்றிடும் நோய்கள்  உற்றது வீடு.
     கூட்டினில் உள்ள குருவியை விட்ட பின்
       பட்ட கவலையின் பயன் என்னவோ !
    கூட்டி னில் இருக்கையில் பெறு பெற்றவன்
       பாக்கி சாலிகள் அல்லவோ!
    காலையும் மாலையும் வருவது இயற்கை
      இன்பமும் துன்பமும் வருவதும் இயற்கை
    துன்பத்தில் கவலை இன்பத்தில் மகிழ்ச்சி
        இரண்டும் நிலைத் திருப்ப துன்டோ !
   அவர் அவர் செய்யும் வினையின் பயனென 
      அறியாமல் இருக்க மாயையின் சதியது  
   பிரபஞ்ச படைப்பின் தத்துவம் அதுவல்லவோ!
      இவையெல்லாம் மாயையின் விளைவென
  ஏன அறிந்தால் விடுபட வழி தேடிட விளைய
     குருவருள் கிட்டிட திருவருள்  கிடைத்திடும்
  அதுவும் அவன் தலை விதி அல்லவோ!” 
      "தாரமும் குருவும் தலைவிதி என விதித்திட்டனர் முன்னோர்".
                                         மட்டூர் புன்னையம்பதியான்.

Tuesday, November 22, 2011

"வாத சிலேற்பனம் பித்தம் போக்கிடும் வில்வம் துளசி வேம்பு"

"வாத சிலேற்பனம் பித்தம் போக்கிடும் வில்வம் துளசி வேம்பு"
     வாதம் வாயுவுடன் தொடர்பானது வாயு பஞ்சபூதங்களில் ஒன்று அது காற்றுக்கூறு. காற்றுக்கு பஞ்சப்பிரம்மம்களில் சிவபெருமான் அதிபதி. காற்றை கட்டுப்படுத்தி செயல்படுத்துபவர். அவருக்குரியது வில்வம். உடலில் காற்றுக்கூறினால்  ஏற்படும் வாயுவினால் உண்டான பிணிகளுக்கு வில்வம் அருமருந்து. வயிற்றில் அமிலச்சுரப்பு அதிகரித்து அதிலிருந்து வாயு உண்டாகி உடலுக்குத் தேவையான அளவைவிட அதிகரித்து உடல் சமநிலையை தளம்பவைத்து பல்வேறு உடலில் பல்வேறு ஊறுகளை ஏற்படுத்துகின்றது. பொதுவாக புளிப்பு சுவையானவை வாயுவை ஏற்படுத்த வல்லவை.
   சிலேற்பனம் அல்லது கபம் இது நீருடன் தொடர்பானவை நீர் பஞ்சபூதங்களில் ஒன்று அது நீக்கூறு. நீருக்கு அதிபதி விஸ்ணு அவரை நாராயணண் என்றும் அழைப்பர். நாராயணண் என்பதை நார் அயன் எனப் பிரித்தால் நார் என்பது நீர் அயன் என்பது சயணம் எனவே நாராயணண் என்பது நீரில்சயணம் செய்பவர் என்று பொருள் படும். இவருக்கு துளசி பத்திரம். துளசி நீரினால் ஏற்படும் சளிநோய்க்கு அதாவது கபநோய்ளுக்கு அருமருந்து.
பித்தம் உஸ்ணத்துடன் தொடர்பானது உஸ்தம் பஞ்சபூதங்களில் ஒன்று அது அக்கினி கூராகும். அக்கினிக்கு அதிபதி பராசக்தி. அக்கினியை கட்டுப்படுத்தி செயல்படுத்துபவள். அவளுக்குரியது வேம்பு.  உடலில் உஸ்ணம் அதிகரிப்பால் பித்தம் சுரந்து உடலுக்குத் தேவையான அளவைவிட அதிகரித்து உடல் சமநிலையை தளம்பவைத்து பல்வேறு உடலில் பல்வேறு ஊறுகளை ஏற்படுத்து கின்றது. கசப்புத் தன்மையானது. இங்கு மூலாதாரத்திற்கும் மணிப்பூரகத்துக்கும் இடையில் உள்ளது சுவதிட்டாணம் அதாவது மூலாதாரத்திற்கு இரண்டு விரல் கட மேலே இருப்பது. இதில் உள்ளது குண்டலினி சக்தி இச்சக்தி உடலில் உள்ள சக்தி இது மூலாதாரத்தில்லிருந்து மூன்டெலுகின்ற வெப்பம்;  வாயுவால் சுழுமுனையினுடாக ஆறுஆதாராத்தையும் கடந்து சகஸ்ரதாரத்தில் அமுதமாய்ச் சொரியும் இது பாம்பின் வடிவை ஒத்தது. அது மூன்று மண்டலங்களை  கடந்து செல்லுகின்றது அக்கினி மண்டலத்தில் உருவெடுத்து ஆதிதமண்டலத்தை உடுருவி சோம மண்டலத்தில் அமுதசோரூபீயாக அமுதம் சொரிகின்றாள்
      மூன்று மண்டலதிலும் ஏற்படும் நோய்களை இனம் கண்டு அவற்றுக்குரிய மூலிகை அறிந்து. அதை மானிடர்பயன்படுத்த வழிசமைத்து வழிப்படுத்தியவர்கள் சித்தர்கள். இறைவனும் சமர்ப்பிப்பதனுடாக மூலிகையின் மீதுள்ள பயம் போக்கி உடலியல் அறிந்து பாகம் பிரித்து பாகத்தின் தன்மையறிந்து அதாவது வாயுக்கூறாக்கி , சலக்கூறு,  தீக்கூறு, அவைகளை அவற்றுக்கு முறையே சிவன் , விஸ்ணு , சக்தி என்னும் தெய்வங்களை பொறுப்பாக்கி அவர்களுக்கு முறையே வில்வம் , துளசி , வேம்பு என்னும் மூலிகைகளை அர்ச்சனைப் பொருளாக்கி அவற்றை மருத்துவப் பொருளாகி மருத்துவம் கண்டவர்கள் சித்தர்கள்.
   உடலைப் பருவுடல், சுட்சும உடல் என்று கண்டவர்கள் சித்தர்கள். இது மட்மல்ல உடலை பஞ்சகோசங்களாக்கி அன்னமயகோசம், பிராணமயகோசம், மனமயகோசம் , விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம் எனக் கண்டு அவற்றின் செயல்பாடுகளை ஆராய்ந்து அதற்கேற்ற மருத்துவம் கண்டவர்கள் சித்தர்கள். நுண்ணறிவுள்ள நுட்பமாக வியக்கத்தக்க விடையங்களை வெளியிட்டு மனுக்குல விருத்திக்கு வித்திட்டவர்கள் சித்தர்கள்.
வர் காலத்தின் ஞானஅறிவியலை இன்னும் இவ்வுலக் அடையவில்லை. தன்நிறைவை விட்டு வல்லரசு என்னும் மற்றவரை அடக்கி அடிமைப்படுத்தி ஆட்டிப்படைப்பதையே நோக்காகக் கொண்டு ஆத்மீகம், பரோபகாரம் , சகோதரத்துவம் ,சமத்துவம், மனிதத்துவம், நீதி, நியாயம் உண்மை , ஜனநாயகம் அணைத்துமே அழித்து சித்தர்களின் சாபத்துக்குள்ளாகி இருக்கின்றது நாடுகள். சித்தர்கள் சூட்சும சபை ஒன்றுண்டு.  அவர்கள் சூட்சும உடலில் மனுகுலத்தின் நன்மை கருதி இன்றும் அன்றும் என்றும் நடமாடுபவர்கள் சித்தர்கள் வருடத்தில் ஒரு முறை வைகாசி விசாகத்தில் இமயமலையில் திபேத்துக்கு பக்கத்தில் உள்ள முக்கோணப்பகுதியில் மகாநாடு நடாத்தி ஒரு வருடத்துக்கான உலகச் சமநிலையை ஏற்படுதத் தீர்மானம் எடுப்பதாக ஐதீகம் இதனால் வைகாசி விசாகம் குருபூர்ணிமாவாக கொண்டாடப்படுகின்றது சிதர்களால் வழிப்படுத்தப்படுபவர்களால் அத் தினம் ஆழந்த நிஸ்டையில் இருந்து அவர்களை ஈர்த்து நடக்ப்போவதை அறிந்து உலகுக்கு உணர்துவர்.
    வில்வம் , துளசி, வேம்பு இவற்றை தனித்தனியே சுத்தம் செய்து இரண்டு மூன்று முறை சுத்தமான தண்ணீரில் திரும்ப திரும்ப புதிய நீரைப்பயன்படுத்தி கழுவி துணியால் துடைத்து இனலில் உலத்தி வைத்து தனித்தனியே பொடிசெய்து சல்லடையில் சலித்து பாதுகாத்து வைத்துக் கொண்டு. அவர்களின் தேகத்தின் தன்மைக்கு ஏற்ப வாத பித்த கபத் தன்மைக்கு ஏற்ப மூன்று மூகிலிகைகளையும் கலக்கும் விகிதத்தில் கலந்து பயன்படுத்துபதன் மூலம் பயனைப் பெறலாம்.  


           1.கபம் கூடியவர்களுக்கு: மூன்று மடங்கு துளசியும் இரண்டு மடங்கு வில்வமும் ஒரு மடங்கு வேம்பும் கலந்து காலை மாலை உணவருந்த அரைமணித்தியாலங்களுக்கு முன் ஒரு தேக்கரண்டி வீதம் உட் கொள்ள வேண்டும். (3:2:1 என்ற வீதத்தில் துளசி, வில்வம், வேம்பு, உம்)
           2.வாதம் கூடியவர்களக்கு: மூன்று மடங்கு வில்வமும் இரண்டு மடங்கு வேம்பும் ஒரு மடங்கு துளசியும் பயன் படுத்த வேண்டும்.( 3:2:1 என்ற வீதத்தில் வில்வம்,வேம்பு, துளசி உம்) 
           3.பித்தம் கூடியவர்களுக்கு: மூன்று மடங்கு வேம்பும் இரண்டு மடங்கு வில்வமும் ஒரு மடங்கு துளசியும் பயன் படுத்த வேண்டும். ;.( 3:2:1 என்ற வீதத்தில் வேம்பு, வில்வம், துளசி உம்)
          4. இவைகள் இன்றி பொதுவா அன்றாடம் பாவிப்பதற்கு: மூன்று மடங்கு வில்வமும் இரண்டு மடங்கு வேம்பும் ஒரு மடங்கு துளசியும் பயன் படுத்த வேண்டும்.( 3:2:1 என்ற வீதத்தில் வில்வம்,வேம்பு, துளசி உம்) இவ்வாறு பயன்படுத்துவதன் மூலம் வாத பித்த கபத்தை சீர் செய்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கிப் பாதுகாத்து நோய் இன்றி வாழமுடியும். “நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வம்” என்பது முதுமொழி செல்வங்களில்லெல்லாம் முதன்மைச் செல்வம் .





Sunday, November 20, 2011

“பங்குனி உத்தரம் மங்ரைக்கையருக்கு மங்களம் கொடுக்கும் நன்னாள்

“பங்குனி உத்தரம் மங்ரைக்கையருக்கு 
                மங்களம் கொடுக்கும் நன்னாள்
மதுரையில் சொக்கநாதர் மீனாட்சிக்கு
              மாங்கலியதாரணம் செய்த பொன்னாள்

காஞ்சி மாவடியில் நிஸ்டையில் ஆழ்ந்த பார் வதிக்கு
              இழந்த பழமையை மீழப்பெற்றுத் தந்த நன்னாள்
ஈசனின் ஆக்ஞ்யில் எரிந்த மன்மதனை இரதிக்கு
              காட்டியருளிச் செய்த பொன்னாள்
கிருதயுகத்தில் கோன் இரகுவால் மனுக்குல் உய்வதற்கு
              அரக்கரனை அழித்த நன்னாள்.
நார் அயன் உள்ளம்  திருமகளுக்கு
               உருத்தான பொன்னாள்
படைபதிபதி நா வாக்தேவிக்கு
              உருத்தான நன்னாள்
இந்திராணி இந்திரதிபதிக்கு
             கிடைத்த பொன்னாள்
மயிலையில் ஞான சம்பந்தன் பூம்பாவைக்கு
            உயிர் கொடுத்த நன்னாள்.
அன்னாள் எனக்கு பொன்னாள்
           என் அம்பிகை புன்னையம் பதி மாரிக்கு தீர்த்த திருநாள்
அன்னாள் என் மகாயாக தீட்ரசைப் திருப்பெருநாள்.
            அன்னாள் மங்கையருக் மாங்கலிலிய விதமேற்கும் பொன்னாள்"
மட்டூர் புன்னையம்பதியான

Tuesday, November 15, 2011

“வாத பித்தம் நீக்கி மனத்தெளிவு தரும் இழநீர் திருஷிடிக்கு அருமருந்தது

“வாத பித்தம் நீக்கி மனத்தெளிவு தரும் இழநீர்   திருஷிடிக்கு அருமருந்தது” 
       இளநீர் என்றவுடன் அது தாகம் தீக்கும் தாகசாந்தியே எம்நினைவில் வரும். இநீரின் குளிர்மையும் உள்ளத்தின் மகிழ்ச்சியும் ஞபகத்துக்கு வரும் அப்படிப்பட்ட இநீரின் மருத்துப் பாகம் பற்றி தேரையார் தமது பதார்த்த குணசிந்தாமணியில் பாடியுள்ள பாவில்
“இளநீரால் வாத பித்தம் ஏகும்
       மனது தெளிவாய் துலங்கும்
 இது திருஷிக்கு ஒளியும் குளிர்ச்சியும்
      உண்டாக்கும் கொடுமை அனல் நீங்கும்
                                              தளிதானம் நெய்தாகும் சாற்று


                        எனக் குறிப்பிடுகின்றார். இநீர் சகல சத்துக்களும் நிறைந்த அமுதசுரபி அது முழுமையான உணவு.
1.“இநீரால் வாத பித்தம் ஏகும் : வாதம் என்பது காற்றுடன் தொர்புடையது. பஞ்சபூதங்களில் காற்றுக்கூறு இது. இதன் சமநிலை இன்மையால் உண்டாகுவது வாதரோகங்கள்இதனைப் போக்க வல்லது இளநீர்.
    அது போன்று பித்தம் என்பது வெப்பத்தினால் உண்டாகுவதுஅது . பஞ்ச பூதங்களில் தீக் கூறு. இதன் சமநிலை இன்மையால் உண்டாவது பித்தரோகங்கள். இவை இரண்டையும் இல்லாதொழிக்கும் தன்மை அதாவது இரண்டையும் இல்லா தொழித்து சமநிலையில் பேணும் இயல்பு இளநீருக்கு உண்டு.
2. “மனது தெளிவாய் துலங்கும்” : மனத்தை நிதானப்படுத்தி கலக்கம் மின்றி தெளிவாக வைத்துக் கொள்ளும் தன்மை இநீருக்கு உண்டு. இது ஒரு மனிதனுக்கு அவசியமானதும் தேவையுமாகும். மனம் பதட்ட மடைந்தால் பல் வேறு பிரச்சனைக்கு முகம் கொடுத்து தன் உடலும் கெட்டு மனம் அழிந்து மனிதத்துவம் அழிந்து தானும் அழிகின்றான். பதட்டம் மன அழுத்தமாக மாறிஇறுதியில் இரத்தழுத்தமாகி தன்நிலை இழந்து நோயுற்றுத் துன்புறுவதை இநீர் தடுக்கின்றது.
3. “இது திருஷிடிக்கு ஒளியும் குளிர்ச்சியும் உண்டாக்கும்” : திருஸ்டி என்பது கண் பார்வையால் உண்டாவது . பார்வையில் ஒளி ண்டு அவ் ளி பார்வையின் தன்மையைப் பொறுத்து அதன் செயல்பாடு அமையும். ஊறு விளையும் பார்வை உடலில் தாக்கம் செலுத்தும். அதனை கண் திருஸ்டி என்பர் இதற்கு மருந்து இல்லை. ஆனால் இது உடலில் பெரும் துயர் தரும். பூசாரிமாரிடம் கேட்டால் அதற்கு இநீர் ஓத்திக் குடிக்க வேண்டும் என்பர். இதற்கு காரணமே அதன் தன்மை அப்படிப்பட்டது. இங்கு தான் சொல்வார்கள் “மந்திரம் கால் மதி முக்கால்” என்பர். அந்த ஒளினால் ஏற்பாட்ட வெப்பத்தால் மப்பும் மந்தாரம் ஏற்பட்டு உடல் சுறு சுறுப்பை இழந்து ஆரோக்கிய மற்ற நிலையை ஏற்படுத்தும். இன் நிலையைத் தவிக்க தலையில் இலிருந்து வெப்பத்தை தனித்து குளிச்சியை உண்டாக்கி உச்சாகப்படுத்து கின்றது. இது அனுபவரீதியில் உண்மை ஆகும். இத் தன்மை இளநீருக்கு உண்டு.
4.  “கொடுமை அனல் நீங்கும் தளிதானம் நெய்தாகும் சாற்று” :  உடலில் ஏற்படும் அனலான வெப்பத்தைப் போக்கி உடலை குளிச்சிப்படுத்தி சீர் தள தன்மையை ஏற்படுத்தும் தன்மையுடையது. இநீர்.
      மேலே கூறப்பட்ட தன்மைகளைக் கொடுக் வல்லது இநீர். 
 நீர்ப் பருவத்தை தேர்ந்தெடுக்கும் முறை :
          நீர் என்பது தேங்காயின் எல்லா நிலைகளிலும் உண்டு. இங்கு மருந்தாக அல்லது ஒரு நல்ல உணவாக பயன்படுத்தும் பருவம் ஒன்று உண்டு. இநீர் என்னும் போது அது இளம் நீர் குரும்பைப் பருவம் தாண்டி இநீர் வழுக்கையாக மாறும் பருவம் குரும்பையில் சிறட்டை முத்தாத இழமையான அதை சாபிட கூடிய பாதியும் வழுக்கை இளமையாக சாதுவாக பாதியில் பிடித்துக் கொண்டிருக்கும் பருவம் இதுவே இநீர்ப் பருவமாகும். 
   இளநீர் பலவகை உண்டு. பச்சை நிறத்தில் உள்ளது பச்சைக் கச்சி, செம்பாட்டு நிறம் டையது செவ்வல், மஞ்சல் நிறம் டையது சந்திர கௌவ்ளி , பச்சைநிற அல்லது பச்சை கலந்த செம்பாட்டு நிறம் டைய இளனியின் மேல்பகுதியை வெட்டியதும் குங்குமம் பூசியது போல சிவந்து  இருக்கும் சூரிய கௌவ்ளி , மருத்துவக்ச் செவ்வல், செவ் விநீர் என்று பல வகை உண்டு. இந்துக்களின் ஆலயங்களில் இறைவனின் உருவங்களுக்குஅபிஷேகம்  செய்வது வழமை. இதில் இநீர் அபிஷேகம் மிக முக்கியமானது. அங்கு ஆயிரம் பச்சைக் கச்சி இநீரால் அபிஷேகம் செய்த பலன் ஒரு செவ்வல் இநீரல் அபிஷேகம் செய்தால் கிடைக்கும் என்றும். ஆயிரம் செவ்வல் இளநீரல் அபிஷேகம் செய்த பலன் ஒரு சந்திர கௌவ்ளி இநீரல் அபிஷேகம் செய்தால் கிடைக்கும் என்றும். ஆயிரம் சந்திர கௌவ்ளி இநீரல் அபிஷேகம் செய்த பலன் ஒரு சூரிய கௌவ்ளிக்கும் உண்டு. என கூறப்படுகின்றது. இவ்வளவு பெருமையை இளநீருக்கு வழங்கியிருப்பது இதன் தன்மையை மக்கள் உணர்ந்து பயன்படுத்துவதற்கே. இநீரினால் அபிஷேகம் செய்தால் சௌகிய விருத்தி ஏற்படும் என்பது நம்பிக்கை இதை அருந்தினால் சௌபாக்கிம் உடலுக்கு ஏற்படும் என்பது சித்தர்கள் கருத்து. மக்களுக்கு உர்த இறை வழிபாட்டிண்ணுடாகவே விளைந்தனர் என்பது இங்கு புலனாகும். 
     இநீரில் பொட்டாசியசத்து அதிகம் உண்டு. நரம்பு மண்டலத்துக்கு சோடியமும் பொட்டாசியமும் அவசியம் நாம் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் கடலில் பெற்றுக் கொண்ட உப்பில் குலோரைட் இருக்கின்றது. பொட்டாசியம் குறைவு பொட்டாசியம் இநீரில் தேவையான அளவு இருக்கின்றது. இது இருதயச் செயல்பாட்டுக்கு அவசியமானது. இதன்மூலம் மனம் தெளிவாகும்.
      வேப்ப தற்பத்தை சீர் செய்யும் இயல்புடையது. சீதள உடம்பு உள்ளவர்கள் ஒரு டம்பிளரில் இநீரை எடுத்து இன்னு மோர் அகன்ற பாத்திரத்தில் நீர் எடுத்து அதைச் சூடாக்கி இறக்கி வைத்துக் கொண்டு அதனுள் இநீர் உள்ள டம்பிளரை வைத்து வெது வெதுப்பான சூட்டில் அருந்துவதனால் சீதள சேதம் வராது எம்மை காத்துக் கொள்ள முடியும். 

“ முக்கனியில் முதற்கனிக்கடுத்து நாடி மூன்றையும் நிலை தடுமற்றும் பலாக்கனி தித்க்கும் தேன் கனி ”

“  முக்கனியில் முதற்கனிக்கடுத்து நாடி மூன்றையும்  நிலை தடுமற்றும் பலாக்கனி


 தித்க்கும் தேன் கனி ” 
பலாக்கனி தன்னீரையும் மாச்சத்தும் நிறைந்த கனி இக் கனியைப் பற்றி தேரையார் தனது பதார்த்த குணசிந்தாமனியில் பாடிய பாவில்
“தித்திக்கும் வாத சிலேற்பன
 பித்தம் உண்டாக்கும் மெத்த
கரப்பான் விளைவிளைவிக்கும்
சத்தியமாய் சேராப்பினியை
எல்லாம் செர்ப்பிக்கும் ஒர் நொடியில்” என மிக அழகாக இயம்பியுள்ளார் சித்தர்.
1.“தித்திக்கும்”: இக்கனி சுவைமிக்கது. உண்ணும்போது ருசியாகவும் தெடர்ந் உண்ணும் போது திகைப்புத் தன்மையையும் தரும்.
2. “வாத சிலேற்பன பித்தம் உண்டாக்கும்” : இக் கனியை உண்ணும் போது உடலில் வாதம் , பித்தம் , சிலேற்பனம் என்னும் கபத்தையும் உருவாக்க வல்லது.
3. “மெத்த கரப்பான் விளைவிளைவிக்கும்” : மொத்தத்தில் தொண்டையில் ஏற்படும் அரிப்பு என்னும் தொண்டைக் கரப்பான் நோய்யை ஏற்படுத்தும்.
4. “சத்தியமாய் சேராப்பினியை எல்லாம் செர்ப்பிக்கும் ஒர் நொடியில்” : சத்தியம் செய்கின்றார். இதுவரையில் இல்லாத நோய்கள் எல்லாவற்றையும் வலிந்து இழுது வந்து ஒரு நொடியில் சேர்ப்பிக்கும் தன்மையுள்ளது. என பாவில் கூறுகின்றார். 
  மொத்தத்தில் பலாக்கனி ஒரு சிறந்த கனியாக சித்தலோகம் ஏற்கவில்லை. என்பது இதிலிருந்து தெரிகின்றது. ஆனால் இதில் சக்கரைச் சத்து இருப்பதால் பலாக்கனியை உண்ட உடன் வேலை செய்வதற்கான உத்வேகத்தை மட்டும் வழங்கக்கூடிய தன்னை உண்டு. இதில் மருத்துவப் பண்புகள் எதுவும் இல்லை என்றே கூறமுடியும்.



Monday, November 14, 2011

“பேசுமோ சீதப் பெருக்கும் மூலக்கடுப்பும் போக்கிடும் மாங்கனியின் வித்து”

“பேசுமோ சீதப் பெருக்கும் மூலக்கடுப்பும் போக்கிடும் மாங்கனியின் வித்து” 
            மாங்கனியின் வித்து மருத்துப் பண்புள்ளது அதன் மருத்துவப் பாவம் பற்றி தேரையார் பின்வருமாறு வெண்பா பாடியருளியுள்ளார்.
“பேசுமோ சீதப் பெருக்கும் மூலக்கடுப்பும்
கோரிக் கடுப்பும் வீசுமோ மூலமுறுவின்
சொதிப்பு மாசுவுடைய பூங் கொட்டையை
காணில்வாது” 
1. “பேசுமோ சீதப் பெருக்கும்” : இது பெண்களுக்கு ஏற்படும் மாதாந்த உதிரப் போக்கு அதிகரித்து அதிதரித்து வெளியேறு வதால் உடல் பலமினந்து போவதை தடுக்க வல்லது மாங் கொட்டை.
2. “மூலக்கடுப்பும் கோரிக் கடுப்பும் வீசுமோ மூலமுறுவின் சொதிப்பு” :  தற்காலத்தில் வேலைப் பழுக்களின் மத்தியில் தொடச்சியாக ஓர் இடத்தில் உட்காந்திருந்து வேலை செய்வதனால் மூலம் தொடர்சியான வெப்பமேற்றலுக்கு உட்பட்டு ஆசனவாயிலில் கொதிப்பும் வெப்பமும் கானப்படும். இதனால் இரத்தக்கசிவு எப்போதும் இருக்கும். இதனால் உண்டாகும் மூலக்கடுப்பு, சோரிக்கடுப்பு, மூலக்கொதிப்பு போன்ற மூலநோய்களுக்கு அருமருந்து மாங்கொட்டை. பொதுவாக தற்கால இருக்கைகள் எல்லாம் “ரெற்சின்” போடப்பட்ட கற்றிறேட்டம் இல்லாத இருக்கைகளே பயன்படுத்தப்படுகின்றது. அக்காலத்தில் பிரப்பம் பிரம்பால் பின்னப்பட்ட பின்னல் கதிரை இருக்கைகளே பயன்படுத்தப்பட்டது. இக்கதிரைகள் காற்றோட்டம் உள்ளதாக சுவாத்தியமான இருக்கைகளாக இருந்தது. தற்போது பின்னுவதற்கான பிரம்பு கூட “பிளாஸ்டிக்” பிரம்பாகி விட்டது. அதுவே இவை மூலநோய்க்கு காரணமாகி விட்டது. இன் நோய்க்கு அருமருந்து மாங்கொட்டை ஆகும்.
3. “மாசுவுடைய பூங் கொட்டையை காணில்வாது” : மா பூக்கின்ற போது அதன் தேனை அருந்த வரும் பூச்சிகள் பூவினுள் சில தங்கி விடும் இவை பின்னர் பெருத்து புழுவாக மாறி பூக்கொட்டையை அரிது வெளிவரும். அப்போது கொட்டை அரிக்கப்பட்டு பழுதடைந்து விடும். அவ் வகையான கொட்டைகளை நீக்கிப் பயன்படுத்து வேண்டும். எனக் குறிப்பிட்டுள்ளர் வெண்பாவில்


பயன்பாடுத்தும் முறைகள்:
1. புளிக் கொழம்பு : நன்றாக சுத்தம் செய்யப்பட்ட மாங்கொட்டையை பிளந்து கடினமான தோலை நீக்கி அதினுள் உள்ள பருப்பை எடுத்து சிறிது சிறிதாக நறுக்கி அதை புளிக் கொழப்பு செய்து சாப்பிடலாம்.
          இன்னுமோர் முறையில் அதனுடன் தோல் நீக்கி ஏழுமுறை நன்றாகச் சுத்தம் செய்த சோற்றுக் கற்றாலை என்னும் குமரியின் சோற்றையும் சிறிது சிறிதாக நறுக்கிய மாங் கொட்டை பருப்புடன் சேர்த்து புளிக் கொழம்பு செய்து சாப்பிடலாம்.
2. சூரணம் : மாங்கொட்டையை பிளந்தெடுத்த பருப்பை வெயிலில் உலர்த்தி பொடி செய்து அதை சூரணமாக வைத்துக் கொண்டு காலை மாலை உணவருந்த அரைமணித்தியாலத்துக்கு முன் அரைத்தேக்கரண்டி அளவு தேனில் குளைத்து அல்லது சூரணத்தை மட்டும் தன்னீரில் அருந்தலாம். இவ்வாறு உட்கொள்ள கற்பப்பைணில் உருவாகும் உத்ரப்போக்கான “மெனோஐPறியா” குணமாகும். அத்துடன் ஆசனவாயில் உதிரப்போக்கும் குணமாகும்.

“முக்கனிகளில் முதல்கனி கனிகளில் சக்கரவத்தி தேவிடாத தேன்கனி தேடி உண்ணும் மாங்கனி வி நாயகன் பெற்ற ஞானக் கனி அது சித்தர்கள் கூறும் மங்காப்பாலது ”

“முக்கனிகளில் முதல்கனி 
             கனிகளில் சக்கரவத்தி 
தேவிடாத தேன்கனி தேடி உண்ணும் 
            மாங்கனி வி நாயகன் பெற்ற ஞானக் கனி அது
சித்தர்கள் கூறும் மங்காப்பாலது ” இவ்வாறு சிறப்பு மிக்கது மாங்கனி இக் கனியின் மருத்துவப்பாகம் தெடர்பாக தேரையார் தமது பதார்த்த குணசிந்தாமணியில் 
   “தின்றால் தினவெடுக்கும் தீபனம் போம்
   நெஞ்சு எரிவாம் அன்றேல் வழித் தோடல்
   அகலும் காண் தூன்றி மிக வாதக்கரப்பானும்
   வண் கிரந்தியும் பெருகும் சுதக்கணியில் சுகம்” எனக் கூறுகின்றார். 


தாவரவியல் பெயர்:Magnaliopsida.
குடும்பப் பெயர்:  Anacardiaceae.
இனம் :   Mangifera
1. “தின்றால் தினவெடுக்கும்” மாங்கனியை அதிகளவில் அதிகளவில் உண்டால் தினவு உண்டாகும். தொலில் அரிப்பு உண்டாகும் .
2. “தீபனம் போம்” இங்கு தீபனம் என்பது பசி இருக்காது நன்றாகச் சாப்பிட்ட மாதிரி வயிறு நிறைந்திருக்கும்.
3. “வழித் தோடல் அகலும் காண்” இங்கு வழித் தோடல் என்பது விழித் தோடல் அதாவது கண்நோய் என்று பொருள்படும் மாங்கனியை உண்டவுடன் கண்நோய் மாறும் எனக் குறிப்பிடுகின்றார்.
4. “தூன்றி மிக வாதக்கரப்பானும் வண் கிரந்தியும் பெருகும்”  உடலில் ஏற்hடுகின்ற அரிப்பு கிரந்தி எனப்படும். தொண்டையில் ஏற்படும் அரிப்பு கரப்பான் எனப்படும். இவை ஏற்படும்.
5.“சுதக்கணியில் சுகம்” சுதக்கனி என்பது மாங்கனி . இக்கனி அநேகமான சத்துப் பொருள் உள்ள அற்புதக் கனி இது உடலுக்குச் சுகத்தைத் தரும் என்று குறிப்பிடு கின்றார்.
நவீன அறிவியல் கூறும் கருத்து:


 “வழித் தோடல் அகலும் காண்” இக்கருத்தை ஆமோதித்து மாங்கனியில் “வீக்கா கரோட்டென்” ( B- Carotene)என்ற ஓர் சத்துப் பொருள் ஆறாயிரத்து நாநூற்று இருபத்தைந்து ( 6425IU ) இருக்கின்றது.  இந்த சத்துப் பொருள் கரட் எனும் உணவுப் பொருளில் இருபத்தையாயிரம் (25000 IU) இருக்கின்றது. இது கண்பார்வைக்கு தேவையான மிக முக்கியமான வைற்றமீன் “A” யை உற்பத்தி செய்ய பயன்படும் சத்துப்பொருள்ளாகும். வைற்றமீன் “A”  எந்தத்தாவரத்திலும் இருந்து பெறப்படுவதில்லை. அதை உற்பத்தி செய்யும் மூலப் பொருள் “வீக்கா கரோட்டென்” ( B- Carotene)  என்பதாகும். இம் மூலப்பொருள் வைற்றமீன் “A”  யை உடலின் உதவியுடன் ஒரு“வீக்கா கரோட்டென்”  னைக் கொண்டு இரண்டு வைற்றமீன் “A”  யை உற்பத்தி செய்கின்றது. நூறு கிராம் மாங்கணியின் சதைப்பற்றில் தன்னீர் -81மூமும் காபோகைதரேட்டு -27% மும்  புரதம் கொழுப்புச் சத்து என்பன மிகவும் குறைவு அது இல்லை என்கின்ற அளவுக்கு அர்பமானது. அதிகளவில் “குழுக்கோஸ் , பிரட்டோஸ்”  இருக்கின்றது. நார்சத்து -3% இருப்பதனால் மலச்சிக்கலை அகற்றி ஆரோக்கியத்தைத் தரவல்லது. கல்லீரலை பாதுகாப்பதுடன் குடலின் மலப்பாதையில் எழிதில் மலங்களிகச் செய்யும் ஆற்றலுடன் கண்பார்வையை மேன்படுத்தும் வல்லமையும் மாங்கனிக்கு உண்டு.
  மாங்கனியில் அனேகமான வைற்றமீன்கள்A,B,C,D)தாது உப்புக்கள் (மெகனிசியம், பொட்டாசியம், சிங். அயன், கல்சியம்) போன்றன உண்டு.