Sunday, March 24, 2019

சாஸ்திரங்கள்
ஆன்மீயம் என்பது ஆன்மாவை நாடும் அகமுக வழிபாடாகும். புறவழிபாடான வழிபாடு ஒரு ஆரம்ப நிலையே பிறந்த குழந்தை நடை பழகும்போது வண்டிலை பிடித்து நடக்க பழகுவதை ஒத்தது சுயமாக நடக்க தெரிந்த ஒருவர் இன்னும் வண்டிலுடன் நடப்பதை ஒத்தது ஆலய வழிபாடு. சரியை,கிரியை, யோகம், ஞானம் என்னும் படிகளில் முதல் இரண்டும் ஆலய வழிபாடு ஆன்மா லயப்படும் இடமே ஆலயம். ஆனால் அது அங்கு நடை பெறுகின்றதா? ஆலயங்கள் பார்பானின் உழைப்புக்கான இடமே தவிர அது எங்கு ஆன்மீயம் இல்லை. அமைதியும் இல்லை. பிராமணர் இருபிறப்பாளர். எளிமையான வாழ்கை நடாத்துபவர். பிச்சை எடுத்து மற்றவர்களின் பாவங்களுக்கு தமது புண்ணியங்களை ஈபவர்கள். இன்று அப்படி இருக்கின்றார்களா? அவர்களிடம் பாவம் இருப்பதில்லை வீரபிரம்மம் தனது காலஞ்ஞானத்தில் கலி உச்சமடையும் போது பிராமணர் சூத்திரரக்கு அடிமையாகி சூத்திரர்கள் பிராமணர்களில் தொழிலை செய்வர் சாஸ்திரங்கள் பொக்கும். உண்மை அழிந்து பொய்யும் வஞ்சகமும் தலைவிரித்தாடும். உண்மையும் சத்தியமும் உள்ளவன் மக்களால் பலமற்று விமர்சிக்கப்பட்டு ஒதுக்கப்படுவான் என்று முன்நாறு வருடத்துக்கு முன் எட்டு சுவடிமூலம் எடுத்து இயம்பியுள்ளார். இதுவே இன்று பெரும்பாலான ஆலயங்களில் நடை பெறுகின்றது. .