Wednesday, November 23, 2011

“நோயற்று வாழ்வது குறைவற்ற செல்வம்

    “நோய்யற்று வாழ்வது குறைவற்ற செல்வம் 
              வாழ்கையின் பயனை அனுபவிக்கத் திட்டம் 
     வகுத்தனர் சித்தர்கள் தந்தனர் வாழ்வியல்
            பற்றியே வாழ்ந் திட அற்றிடும் நோய்கள்  உற்றது வீடு.
     கூட்டினில் உள்ள குருவியை விட்ட பின்
       பட்ட கவலையின் பயன் என்னவோ !
    கூட்டி னில் இருக்கையில் பெறு பெற்றவன்
       பாக்கி சாலிகள் அல்லவோ!
    காலையும் மாலையும் வருவது இயற்கை
      இன்பமும் துன்பமும் வருவதும் இயற்கை
    துன்பத்தில் கவலை இன்பத்தில் மகிழ்ச்சி
        இரண்டும் நிலைத் திருப்ப துன்டோ !
   அவர் அவர் செய்யும் வினையின் பயனென 
      அறியாமல் இருக்க மாயையின் சதியது  
   பிரபஞ்ச படைப்பின் தத்துவம் அதுவல்லவோ!
      இவையெல்லாம் மாயையின் விளைவென
  ஏன அறிந்தால் விடுபட வழி தேடிட விளைய
     குருவருள் கிட்டிட திருவருள்  கிடைத்திடும்
  அதுவும் அவன் தலை விதி அல்லவோ!” 
      "தாரமும் குருவும் தலைவிதி என விதித்திட்டனர் முன்னோர்".
                                         மட்டூர் புன்னையம்பதியான்.

No comments:

Post a Comment