Saturday, October 29, 2011

“கிருமி குட்டம் மந்தம் கெடும் வேம்பு அல்லது நிம்பம்;”

“கிருமி குட்டம் மந்தம் கெடும் வேம்பு அல்லது நிம்பம்;” 
வேம்பின் மருத்துவக்குணம் பற்றி தேரையர் குறிப்பிடுகையில் 
“கிருமி குட்டம் மந்தம் கெடும்
விடம் சுரங்கள் பெருமிய வைசூபிகையின்
புண்கள் ஒருமிக்க நிம்பத்திலை
இருக்க நீடுலகில் நீற்காது இலை காய்” என்றும் இன்னுமோர் பாடலில்
“மந்தப் பொருமலுடன் மல்லாடும்
பேதி வகை வந்த கணுச்சூலை
வண்கிரந்தி தொந்த மெல்லாம்
கூப்பிக் கரம் கொண்டாடும் இத் தரையில்                                                                                                                                                                                                                                                                                                                                                                        
வேம்பின் நற்குணத்தை வீழ்” என இருபாடல்களில் தேலையர் வேம்பின் மருத்துவக் குணங்களைக் கூறியுளார். 
1. “கிருமி  குட்டம் மந்தம் கெடும்”:  “கிருமி” என்பது வைரஸ் என்பதை இங்கு பொருள் கொள்ள வேண்டும். பொதுவாக புழு என்பது எம்முடலில் காணப்படும் நடாப்புழு, உருளைப்புழு, கீரிப்புழு என்பவற்றைக் குறிப்பிடுகின்றோம். புச்சி என்பது சிறிய உயிரினங்களுக்கு பயன்படுத்தும் பெயராகும். ஆனால் இங்கு கிருமி என்று பயன்படுதியதிலிருந்து நுண் கிருமியான பற்றியாக்கள் பங்கஸ்சுக்கள்; வைரஸ்கள் என்பவற்றினால் நோய் பரப்பப்படுகின்றது என்பதை மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சித்தர்கள் அறிந்திருந்ததை அறியமுடிகின்றது. நுண்கிருகிகளால் பரப்பப்படும் நோய்களை தடுக்க நோய்க்கிருமிகளைத் தடுத்துக் கொல்லும் ஆற்றல் வேம்புக்கு உண்டு. அதனாலேயே அம்மை நோக்கு வேம்பு அருமருந்தாக கண்டு அம்மை நோய் கண்டவர்க்கு வேம்பின் இலையுடன் மஞ்சல் சேர்தரைத்து உடல் முழுவதும் பூசுவதுடன் மருந்தாக வேம்பில் அரும்பின துளிரை உட் கொடுப்பதுடன் படுக்கையில் வெள்ளை விரிப்பொன்றை விரித்து அதன் மேல் முற்றிய வேம்பின் இலைகளைப் பரப்பி நோய்யுற்றரை துயில வைப்பர். அம்மை நோக்குக் காரணம் வைரஸ் இதைதடுக்கும் ஆற்றல் வேம்புக்குண்டு என்பதை அன்று அறிந்திருந்தனர் சித்தர்கள். அறிவியல் இதை ஆராய விளைந்தது. ஆயிரத்து எண்ணுற்றி எழுபதில்களில் பிராஸ் தேசத்தைச் சேர்ந்த  டக்டர். லுயிபாஸ்டர் என்பவர் ஒரு உயிரியல் விஞ்ஞானி இவர் பிற்காலத்தில் நுண்ணுயிரியல் விஞ்ஞானியாகி நுண்கிருமிகள் மனித உடலில் நோய்களை உருவாக்கின்றது என்ற விடயத்தை நவீன மருத்துவ உலகுக்கு முதலில் அறிமுகம் செய்தார். இதை சித்தர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இதை அறிந்து அனுபவித்து மக்களுக்கு தெரித்வித்திருக்கின்றனர். என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. கண்ணுத்தெரியாத உயினங்கள் நோயை உருவாக்கு கின்றன என்பதை தமிழ் மருத்துவம் உணர்தே இங்கு “கிருமி” என்ற சொற்பதத்தை அன்று பயன்படுத்தி இதனை அளிக்கும் ஆற்றல் வேம்புக்கு உண்டு என்பதை அறிந்து ஆய்து அனுபவித்து தமிழ் மருத்துவத்துக்கு தந்தனர்.
2. “குட்டம்”: தொழுநோய்யாகிய விரல்கள் அழுகி விழுவதுடன் அங்கங்கள் சுருங்கி ஒலிந்து அபலட்சணத்தை உருவாக்கின்ற கிருமிகளை அகற்றி ஒழிக்கும் ஆற்றல் வேம்புக்குண்டு. 
3. “மந்தம் கெடும்”: ஐPரணக்குறைபாடு இயற்கையாக உணவு சொரிக்கும் ஆற்றலில் தாமதம் இதனால் அஐPரணம் ஏற்படுத்தி உடல் உபாதைக்கு உட்படுகின்ற நிலையை தடுக்கின்ற தன்மை வேம்புக்குண்டு. 
4. “விடம் சுரங்கள் பெருமிய வைசூபிகையின் புண்கள்” : நீங்காத காச்சல் வைசூரியினால் உண்டாகும் புண்கள் இவற்றைப் போக்கும் இயல்பு வேம்புக்குண்டு.
  அடுத்த பாடலிலே “மந்தப் பொருமலுடன் மல்லாடும்
5. பேதி வகை”:மாந்தத்தினால் வயிறு பொருமலடைந்து ஏற்படும் வயிற்றுப்போக்கை தடுக்கும் தன்மை வேம்புக்குண்டு.
6. “வந்த கணுச்சூலை”: கணுச்சுலை என்பது மூட்டுகளில் நாற்பது வயதின் பின்னர் ஏற்படும் வழுவின்மையினால் ஏலும்புகள் உரைவதால் ஏற்படும் நோவும் வலியும் போக்கும் தன்மை வேம்புக்குண்டு.
7. “வண்கிரந்தி தொந்த மெல்லாம்”;: வண்மையான கிரந்தி அதாவது ஒவ்வாமையினால்  தோலில் ஏற்படும் பருக்கள் அவைஎல்லாம் வேம்பைக் கண்டவுடன் கைகுப்பி எங்களை ஒன்றும் செய்ய வேண்டாம் விட்டுவிடுங்கள் பயந்து ஓடிவிடுமாம் என்று வேம்பின் வல்லமையை தேரயர் குறிப்பிடுகின்றார். 
பயன் படுத்தும் முறைகள்:
வேம்பின் துளிர் 
1. வேம்பு கற்பம் இது வேம்பி தளிரை அதாவது துளிர் அரும்பை நாள் ஒன்றுக்கு ஒன்று இரண்டாக பத்தாவது நாளில் பத்து அரும்பாக தெடர்ந்து பத்துபத்தாக ஒரு மண்டலம்; (மண்தலம்) அதாவது நாற்பத்தெட்டு நாட்கள் உண்டுவர காயம் கற்பமாமும் என சித்தர்கள் இயம்பியிருக்கின்றனர். இதன் மூலம் உடலில் குடிகொன்டுள்ள கிருமிகள் ஒழிவதுடன் சருமத்தில் கொப்பளம் அரிப் என்பன நீங்கி விடும் அரவம் தீண்டினால் கூட உடலில் வி~ம் ஏறாது வி~த்துக்கு எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.
2. மயிர் கறுத்து இளமை பெற “அகன்னன் நுதனாய் ஓர் அதிசயம் கேளாய் களவு காயம் கலந்த இன் நீரில் மிளகும் நெல்லியும் மஞ்சலும் வேம்பிடில் இலகு மேனி இறுகும் காயமே” தும்பை போல இருந்த தலை முடி கறுப்பாக போவதுடன் உடல் இழமையும் மடையுமாம் வெண்மிளகு,நெல்லி வற்றல், கஸ்தூரி மஞ்கல், வெம்பின் விதை, அமியை இவை ஐந்தையும் அரைத்து நீரிலிட்டு தலை உடலெங்கும் பிரையோகித்தால் உடல் கட்டிளமை பெறுவதுடன் தலை முடியும் கறுப்பாகும்.
வேப்பம் வித்தும்
3. பஞ்சகற்பம் என்பது மிளகு, நெல்லி, மஞ்சல், வேம்பு, கடுக்காயத் தோல் என்பவற்றை சேர்த்து அரைத்து பீக்கம்தும்பினால்  தலை உடலெங்கும் தேய்த்து சிறிது நேரம் களித்து குளித்தால் கபம் நீங்கி உடல் இளமை பெறும். பொதுவாக கடுக்காய்த்தோல் ஒருபங்கு, வெண்மிளகு காற்பங்கு, நெல்லிக்காய் வற்றல் அரைப்பங்கு, கஸ்தூரி மஞ்சலும் வேப்பம் வித்தும் எட்டில் ஒரு பங்கு இவை அனைத்தும் உரியளவில் கலந்து அரைத்து எடுத்த விழுதை உடலில் தேய்த்து குளிக்கலாம்.
நடுத்தர வேம்பின் இலை
4. நடுத்தர வேம்பின் இலையை எடுத்து சமனிடை கருமிளகையும் சேர்த்து விளுதுபோல் அரைத்து அதை சுண்டங்காய் அளவும் பட்டானி அளவிலும் உருட்டி இனலில் காயவைத்துக் கொண்டால் வயிற்றில் புழுத் தொல்லை ஏற்படும் போது பெரியவர்களுக்கு மூன்று அல்லது நான்கு சுண்டங்காய் அளவுள்ள உருண்டையையும் சிறியவர்களுக்கு ஒன்று அல்லது இரண்டு பட்டானி அளவிலான உருண்டைகளை மூன்று வேளை பத்து நட்களுக்கு கொடுக்கவயிற்றிலுள்ள புழுக்கள் இல்லாமல் போகும்
நன்கு முற்றிய இலையில் 
5. வேம்பின் நன்கு முற்றிய இலையில் ஒருகைப்பிடி எடுத்து இதனுடன் ஒருகைப்பிடி புழுங்கல் அரிசையும் சேர்த்து உரலில்லிட்டு இடித்து இரண்டும் இடிந்து வேப்பிலைக் சாறு குறுணலில் நன்றாகக் கலந்த பின் இடிந்த இலைகளை அகற்றி சாறுகலந்த குறுனல்லை ஒட்டியிட்டு(மண்சட்டியில்) கறுக வறுத்து நான்கு படி நீருற்றி ஒருபடியாய் வற்றக்காச்சி எடுத்து வயதுக்கும் உலல்வலிமைக்கும் ஏற்ப கொடுத்து வர பேதி கட்டுப்படும்.
6. வேம்பிலையின் நெட்டியில் உள்ள பச்சிலைப்பகுதியை நீக்கி ஈக்கை இடித்து நீர்விட்டு வறற்க்காச்சி அருந்த அதிசாரமெனும் வயிற்றுப் போக்கு நின்றுவிடும். இம் மருந்து அஐPரணக் கொளாற்றையும் நீக்க வல்லது.
7. வேம்பின் நடுத்தரமாக விளைந்திருக்கும் இலையை எடுத்து இதனுடன் இஞ்சி, மஞ்சல் இவை இரண்டும் சேர்த்து மூன்றையும் சமமிடையாக சேர்த்து விழுது போல் அரைத்து ஓட்டியிட்டு  சாதுவாக சூடாக்கி மூட்டி மூட்டுக்களில் பற்றுப்போட்டால் போல பூசி காயவிட்டு காலையில் கழுவிடலாம். பின் வீட்டில் இருப்பதானால் மீண்டும் காலையிலும் இடலாம் இதன் மூலம் மூட்டுவலி வீக்கம் என்பன சுகமாகி மூட்டுகளின் உராவை தடுக்க வழுவும் உண்டாகும்.


















































"விந்து நட்டம் நூறும் அறுக்கும் வில்வம்"

"விந்து நட்டம் நூறும் அறுக்கும்  வில்வம்"
தாவரவியல் பெயர்:“Aegle marmelos Correa” 
குடும்பப் பெயர்:“Rutaceae” 

ஆஙிகிலப் பெயர்கள் : Bengal quince, golden apple, stone apple
தேரையர் பாதார்த்த குணசிந்தாமனியில் மருத்துவ பண்பை
“பல்லம் பூ பிஞ்சு பழம் இலை யாவும் முறையே
வல்வன் மேகம் மந்தமாம் குன்மம்
சொல்லுகின்ற நோக்கம் அருள்
விந்து நட்டம் நூறும் அறும்
அடுத்தவர்க்கு ஆக்கம் அருள்
வில்பத்திலாம” எனப் பாடியுள்ளார். இங்கு
1.“பல்லம் பூ பிஞ்சு பழம் இலை யாவும்”:  இங்கு பல்வம் பூ பிஞசு பழம் என்பன வில்வமரத்தின் பல்வேறு பாகங்களைக் குறிப்பிடுகின்றார் பல்வம் என்பது இளம்தளிரைக் குறிப்பிடுகின்றார். 
2.“வல்வன் மேகம் மந்தமாம் குன்மம்”: இங்கு “மேகம்” என்னும் போது மதுமேகமான நீரழிவு நோயையே கருதுகின்றார். “மந்தமாம் குன்மம்” என்னும் போது வயிறிறில் வலி ,அஐPரணம் அல்லது ஐPரணக் கோளாறுகளைக் குறிக்கும். 
3.“சொல்லுகின்ற நோக்கம் அருள்”: என்ன என்ன வெல்லாம் நீங்கவேண்டும் எனநினைக்கின்றோமோ அதை எல்லாம் நீக்கி அல்லது என்ன என்ன வெல்லாம் வேண்டுமென்று அதை எல்லாம்  வழங்கும் வல்லமை வில்வத்துக்குண்டு. எனக்குறிப்பிடுகின்றார்.
4. “விந்து நட்டம் நூறும் அறும்”: விந்துலான இந்திரியத்தில் எற்படக் கூடிய குறைபாடுகள் ஆண்மைக்குறைபாடுகள் உட்பட நூறு வகையுண்டு அவை அனைத்தையும் தீக்கவல்லது வில்வம். எனக்குறிப்பிடுகின்றார்.
5.“அடுத்தவர்க்கு ஆக்கம் அருள் வில்பத்திலாம்”: ஊக்கம் என்பது முயர்ச்சி  ஆக்கம் என்பது செய்திறன் உடல் ஆரோக்கியமாக இருக்க ஊட்டமும் செயல்திறனும் அவசியம் இதனை வில்லம் தரும் என்று குறிப்பிடுகின்றார்.
              வில்வத்தை நவீன அறிவியல் ஆராய்ந்து அதன் தன்மையை வெளியீடு செய்துள்ளது. வினோதினி, நாராயணண் என்னும் இரு ஆய்வாளர்கள் வில்வத்தை ஆராய்ந்து அது உடலில் உள்ள சக்கரை சத்தையும் கொளுப்புச் சத்தையும் தேவையான அளவுக்கு சீர் செய்து பராமரிக்கும் ஆற்றல் உடையது எனவும் வயிற்றில் உண்டாகும் புண்களை ஆற்றும் ஆற்றல் உண்டு என்றும் ஆய்வு செய்து வெளியீடு செய்துள்ளனர். வயிற்றினுள் அமிலத் தன்மையால் குடலில் ஏற்படும்; புண்களை ஆற்றுகின்ற ஆற்றல் வில்பத்தின் தளிர்களுக்கு உள்ளது.




    வில்வ தளங்கள் சிவதலங்களில் அதிகளவில் பயன்படுத்துவதுண்டு. சிவன் பஞ்ச பூதங்களில் வாயுவுக்கு அதிபதி அது உஸ்ணத்துக்கு காரணமானது உஸ்னத்தை சீர் செய்து சமநிலையைப்பேன வில்வ தளம் பிரதானமானது. வில்வம் குளிர்மையானது. ஆத்துமா சூடான தன்மையுள்ளது. அதனாலேயே வில்வம் சிவபெருமானுக்கானது சிவாலயங்களிலே தீர்தமாக வில்வஇலை தீர்த்தம் கொடுக்ப்படுகின்றது. 
  பயன் படுத்தும் முறைகள்:
1. வில்வதளத்தினை நன்றாக சுத்தம் செய்து அதை செப்பு உலோகத்தால் செய்யப்பட்ட பாத்திரத்தில் நீர் எடுத்து அதில் ஒன்பது இலை வரையில் ஒருமணிநேரம் ஊறவிட்டு காலையில் வெறுவயிற்றில் இலைகளை சப்பி விழுங்கி விட்டு அந்த நீரை அருந்திவர வெப்பத்தினால் விளையும் மேல் செப்பிய நோய்கள் அறும். இரவில் போட்டு காலையிலும் அருந்தலாம்.     
2. வில்வதளங்களை  நன்றாக மூன்று அல்லது நான்கு முறை சுத்தமான நீரில் கழுவி சுத்தம் செய்து சூரிய ஒளி நேரடியாகப்படாது இனலில் உலத்தி  அரைத்து துணியில் கலித்து வஸ்திர காயமாகக் சூரணமாக்கி வெறு வயிற்றில் திருகடி பிரமாணமாக காலை மாலை பயன் படுத்தலாம்.
3.பூவை இனலில் உலர்த்தி உலர்ந்த பூவை நீர்விட்டுக காச்சி தேனீர்; அருந்துவதை ஒத்ததாக அருந்தலாம்.
4.வில்வம் பழத்தை தேன் விட்டு விழாம் பழத்தைப் போன்று உண்ணமுடியும் இதனால் உடல் குளிக்கியடையும். 
  

“பொல்லா மேகம் கபம் போக்கும் கற்றாழை”

“பொல்லா மேகம் கபம் போக்கும் கற்றாழை”
கற்றாழையின் தாவரவியல் பெயா: “ஆலோவேரா” (AloebarbadensisLinn,Liliaceae,Aloevera,Aloeferox,Aloeafricana,Aloe, spicata, Aloe perji.)
            கற்றாலை மருத்துவக்குணம் நிறைந்தது சித்தவைத்தியத்தில் இதனை “குமரி” என அழைக்கப்படுகின்றது. இம் முகிலி இருபக்பகமும் சாதுவான முள்போன்ற நீண்ட மேல் நோக்கிய தாள் போன்ற அமைப்பைக் கொண்ட இலைகளை உடையது. இதனை “சுகத்துக்குத் தாழை” என்று கூறுவர் இது  காலப் போக்கில் மருவடைந்து “சோற்றுக்கற்றாழை” ஆகிவிட்டது. 
          தாவரங்கள் பொதுவாக நிலத்திலிருந்து அகற்றியதும் வாடி வதங்கி காலதாமதமானால் இறந்து விடும் ஆனால் சோற்றுக்கற்றாழை நிலத்திலிருந்து அகற்றியதும் இறந்து விடாது வளியில் இருக்கும் ஈரப்பதத்தை ஈத்து வளர்வதுடன் உலர்ந்த தாளிகளின் நீரையும் ஈத்து வளரும் தன்மையுடையது. பொதுவாக கிராமபுறங்களில் வீட்டின் கூரையின் தாள்வாரத்தில் தாள் ஒன்றினை கட்டி விடுவர்கள் அத்தாழை மேல்நோக்கி திரும்பி புதிய குருத்துக்கள் உருவாகி வளர்வதை அவதானிக்கூடியதாகவிருக்கும். இத்தாவரம் ஒவ்வொரு வருடமும் பூக்கொத்தை உருவக்கும். இதன் காரணத்தினாலே இத்தாவரத்தை “வான்குமரி” என அழைப்பதும்முண்;டு.
       கற்றாழையின் தாவரவியல் பெயர் “ஆலோவேரா” அல்லது “ஆலோ” என்றும் குறிப்பிடுவர். இதில் இன்னுமேர் வகையும் உண்டு. அது “ஆலோவாவிடன்ஸ்” இவை இரண்டினதும் மருத்துவத் தன்மையும் ஒன்றுதான். இவ் முகிலிகையை நவீன அறிவியல் உலகம் காயகற்ப அதிசய முகிலிகையாக குறிப்பிடுகின்றனர். இதில் இருபதிற்கு மேற்பட்ட அமிலோஅமிலங்கள் உண்டென்று குறிப்பிடுகின்றனர். உடலின் கட்டுமாணப் பணிக்கான புரதச் சத்தின் அடிப்படை அலகுகளை அமிலோ அமிலங்கள் என்று அழைப்பர். இதில் மனித ஆரோக்கியத்துக்குத் தேவையான மிக முக்கிய எட்டு வகை அமிலோஅமிலம் இதில் உண்டு. இந்து இல்லாவிட்டால் உடல் ஆரோக்கியம் குன்றி விடும் எனக்குறிப்பிடுகின்றனர். இதனால் இத் தாவரத்தை முழு மருத்துவக்குணமுள்ள தாவரமாக கருதுகின்றனர். 
          கற்றாழை தொர்பாக பார்;க்கும் போது ஒன்று ஆரோக்கியத்துக்குத் தேலையான அமிலோஅமிலங்கள் இருக்கின்றன அடுத்து. அது இன்ரைய அறிவியல் இதனை அழகுசாதனப் பொருட்களுக்கு அடிப்பாடையான பொருளாகப் பயன்படுத்தப்படுகின்றது. இற்றைக்கு இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் ரசியநாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் செய்த ஆய்வில் முதுமை அடைந்து இறக்கும் தருவாயில் இருந்த  கற்றாலை உணவாக கொடுக்பப்பட்டு; வெள்ளை எலிகளுக்கு கொடுத்து ஆயூட் காலத்தை இருமடங்காக அதிகரித்ததை அவதானித்தாக கட்டுரை வெளியாகியிருந்தது. வெள்ளை எலிகளின் ஆயூட்காலம் முற்பது மாதங்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 
   இதற்கு தழிழ் மெய் உலகம் பல்ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே இதை உணர்து இத்தாவரத்துக்கு “குமரி” என பெயர் இயம்பி இழமையை நிலைத்து முதுமையை விரட்டிடும் அற்புதமுகிலிகையாக இயம்பியிருக்கின்றது. மானிடப் பிறவியின் அர்த்தம் புரிந்து மானிடர்க்காக வாழ்ந்த சித்தார்கள் இதை ப்புரிந் திருந்தனர். அனுபவ அறிவால் நுன்மதி நுளை புலத்தால் அவர்களின் தெய்வீக அற்றலால் வெளிப்படுத்தினர். 
     தேரையர் பாதார்த்த குணசிந்தாமனியில் குமரியின் மருத்துவ பண்பை “பொல்லா மேகம் கபம் புல் சூலை
குட்டம் ரசம் அல்லார் மந்தம்
 பகம் தரும் குன்மம் எல்லாம் விட்டு ஏகும்
 அரிக்கும் எரிச்சர் கிரிச்சரமும் மாறும்
 குமரிக்கு மருண்டு” 
 1.“பொல்லா மேகம்”: இது சக்கரை நோயைக் குறிக்கின்றது. இதனை மேகத்துக்கு ஒப்பிடுகின்றார். மேகமானது தோன்றி மறைவதுடன் திரும்பத் திரும்ப தோன்றுவதும் மேகங்கள் உயர்வதும் தாழ்வதும் அதன் இயக்கையான குணமாமும் இதையொத்த பண்புடையது சக்கரை நோயாகும். இன் நோயைப் போக்கும் தன்மை குமரிக்கு உண்டு.
 2.“கபம்”: கபம் என்பது நாசி, தொண்டை, நெஞ்சிப்பகுதியில் சளி கட்டி உடலை உபாதைக்குட்படுத்தும். இதனை கிராமப்புறங்களில் சளிபிடித்தால் சனிபிடித்தமாதிரி என்று இயம்புவதுண்டு அவ்வளவு அவத்தைப்பாடுத்தும். கண்டத்தில் கபம் கட்டி சுவாசத்தை தடை செய்து உடல் இயக்கத்தை நிறுத்தக்கூடிய தன்மையானது கபம். நெருப்பெரிய ஒட்சிசன் தேவை ஒட்சிசன் இல்லாவிட்டால் நெருப்பு அனைந்து விடும். இது போன்றே பிரபஞ்கம் இயங்க பிராணவாயு தேவை. அதுபோன்று உடல் இயங்க ஆத்துமா வாகிய அக்கினி பிரகாசிக்க வேண்டும். அதற்கு பிராணவாயு கண்டத்தின் வழியாக செல்ல வேண்டும். அதை கபம் தடைசெய்யும் இச் சந்தர்ப்பாத்தில் வாயால் சுவாசிக்க நேரும் இதனை “மோவாய் சுவாசம்” என்பர். இது போன்று ஒரு மனிதன் இறப்பதற்கு முன்னர் சுவாசம் நெஞ்கிப்பகுதிக்கு மேல் சுவாசம் இழுத்துக் கொண்டு இருக்கும் இதனை “சேப்பம் கட்டி இழுக்குது” என்பர். சேப்பம் என்பது கபம் இறுதியாக உடலிலிருந்து உயிரை பிரிக்க கபம் உதவுகின்றது. அப்படிபட்ட கபத்தை இல்லாமல் செய்யும் ஆற்றல் குமரிக்குண்டு. 
     குமரி குளிர்த்தன்மையானது. இது கபத்தை உருவாக்கக்கூடியது எனலாம். இதன் தன்மை கபத்தை இல்லாமல் செய்துவிடும் தன்மையுள்ளது. ஆரம்பத்தில் சளியை ஏற்படுத்தி பின்னர் தெடர்ந்து உண்டுவர நோய் எதிப்புச் சக்தியை உருவாக்கி கபத்தை அடியோடுடொலித்து விடும் சக்தி பெற்று விடும் குமரி.  குமரியைப் பயன்படுத்துவதில் கவனம் தேவை பொதுவாக கபத்தினால் உண்டாகும் அஸ்டுமா,கடுமையான ஜலதோம், சைனஸ் வருத்தங்கள் உள்ளவர் நிதானத்துடன் தவித்துக் கொள்வது நன்று. பொதுவாக குளிர்சியைத் தரும் தன்மை குமரிக்கு உண்டு. அதேவேளை சளியைத் தடுக்கும் வல்லமையும் குமரிக்கு உண்டு. சிறிது சிறிதாக நாளுக்கு நாள் உணவாக சேர்த்து வர காலப்போக்கில் நோய்எதிப்பு சத்தியைப் பொற்று விடும் உடல் அதன் பின்னர் கபம் தனது சக்தியை இழந்து விடும். வயதானவர்களுக்கு மார்புப் பகுதியில் கபம் கட்டுவது இயல்பு இதனால் உடல் நல்ல திடகாத்திரத்தை இழந்து விடும் அச்சந்தப்பத்தில் குமரியை உணவாக்கி  திடகாத்திரத்தைப் பெறமுடியும் எனவே குமரி ஓர் காயகற்ப முகிலிகையாகும.; 
3.“புல் சூலை”: உடலில் குடலில் புழுக்கள் ஒட்டுண்ணியாக இருப்பது உடலில் உள்ள சத்துப்பொருட்களை உறுஞ்சி குடித்து தேகாரோக்கியத்தை இழக்கச் செய்வது இயல்பு பல்வேறு நோய்களை ஏற்ப்படுத்தும். இப்படிப்பட்ட புழுக்களை அகற்றும் ஆற்றல் குமரிக்கு உண்டு. 
 4.“சூலை”: சூலை என்பது கணுக்களில், கபாலத்தில்,வயிற்றில், குடலில் வரும். கணுக்களில் வரும்போது கணுச்சூலை என்றும் கபாலத்தில் ஏற்படுகின்ற போது கபாலைச்சூலை அல்லது சிரசூலை என்றும் குடலில் வருகின்ற போது குடல்சூலை என்றும் இரைப்பையில் வருகின்ற போது சூலை நோய் என்றும் குறிப்பிடுகின்றனர். சூலையின் வேதனை சூலத்தால் குத்துவதை ஒத்தவலியை போன்றது. இது உஸ்னத்தால் உண்டாவது இதை தடுக்கும் ஆற்றல் குமரிக்கு உண்டு. சங்கால இலக்கியம் குமரியின் தன்மையை “குமரியின் சாற்றை உண்டு குடல் புண் ஆறக்கண்டேன்” என்று கூறுகின்றது. கருக்குடலில் இருக்கும் பினிகளுக் கெல்லாம் அருமருந்து குமரி  
5.“குட்டம்”: தொழுநோய்யாகிய விரல்கள் அழுகி விழுவதுடன் அங்கங்கள் சுருங்கி ஒலிந்து அபலட்சணத்தை உருவாக்கின்ற கிருமிகளை அகற்றி ஒழிக்கும் ஆற்றல் குமரிக்குண்டு.
6.“ரசம்”: எலும்பு மச்சையை ரசம் என்று அழைப்பதுண்டு எலும்பு மச்சையில் உள்ள சத்துக்கள் குன்றிப்போனால் சிவப்பணுக்களின் உற்பத்தி தடைப்படும் இதன் விளைவால் இரத்தத்தை நரம்பு வளியாக இலுத்துக் செல்லும் பிராணவாயுவின் அளவு குறைவடைந்து நாம் செயல்படும் செயலாற்றல் குறைவடையும் இதனால் இளமையில் முதுமையை எதிர் நோக்க விளையும் அத்துடன் வெளுப்பு நோய்க்கு ஆட்படுவோம். இன்நிலையிலிருந் எம்மை காக்க குமரி ஓர் அருமந்தாகும். இது சிவப்பணு உற்பத்தியை அதிகரித்து எம்மை பலமிக்தாக்கும் தன்மை குமரிக்கு உண்டு.
 7.“மந்தம்”: மந்தம் என்பது ஐPரணக்குறைபாடு இயல்பான வேகத்தில் குறைபாடு இதனால் ஏற்படும் அஐPரணம் வயிற்று பொருமலாக இருக்கும் இதன் மூலம் உடலில் அமிலம் சுரந்து அசாதாரன நிலையை ஏற்படுத்தும் இவ்வாறன நிலையிலிருந்து குமரி எம்மைப் பாதுகாக்கும்.
8. “பகம் தரும்”: பகர்தரும் என்பது ஆசன வாசலில் ஏற்படும் புண்ணும் சீளுமான நிலை இதை வயல் வெளியில் சேறும்சகதியுமாக இருக்கும் நிலைக்கு ஒப்பிடுவர். இது மூலநோயின் ஒருவகை இதனால் குத்துகின்றது போன்ற வலியும் எரிச்சலும் கடுப்புடண் கூடிய வலியும் ஆசனவாசலால் இரத்தக்கசிவுள்ள பல பண்புகளைக் கொண்ட மூலரோகம் உழையும் மூலரோகம் எனப்படும். மூலநோய் என்பது பலவகை உண்டு உள்மூலம், வெளிமூலம், உதிரமூலம், ஆசனவாய் வெடிப்பு, ஆசனவாயில் திறவு இன்னுமோர் மேலதிக பாதை போல் தோன்றும் இயல்பு இதை பவித்திரம் என்பார்கள்  இதனை போக்க வவ்லது குமரி. 
9.“குன்மம் எல்லாம் விட்டு ஏகும்”: அஐPரனத்தால் ஏற்படும் நோய் குன்மம் இப்படிப்hட்ட நோய்கள் எல்லாம் நம்மை விட்டு ஓடிடும் எனக்குறிப்பிர்வதுடன்.  
10. “அரிக்கும் எரிச்சர் கிரிச்சரமும் மாறும்”: கிரிச்சரம் என்பது  சிறுநீர்த்தாரையில் சிறுநீர் வரும் பாதையில் அரிப்பும் எரிச்சலும் இருந்து அளொகரியத்தை ஏற்படுத்துகின்ற நீர்த்தாரை நோய் இதற்கு குமரி அருமருந்து .       
பயன் படுத்தும் முறைகள்:
       சோற்றுக்கற்றாழை(குமரி)யின் தொலை நீக்கி சோற்றை எடுத்து அதை ஏழு முறை சுத்மான நீரில் திரும்பத்திரும் புதிய புதிய நீரினால் கழுவி சுத்தம் செய்து அதிலுள்ள அலோயின் என்ற சத்தை நீக்கிவிட வேண்டும். இது கொளுகொளுப்பாக இருக்கும் இதை நீக்கியபின் மருத்து உயயோகத்துக்கு உகந்தாக அமையும். தாழையின் மடலைத் தெரிவு செய்கையில் பின்வரும் விடையங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
1. கற்றாழை மரத்தின் முதிர்வு ஆகக்குறைந்தது ஒன்றரைவருடத்தை பூர்திசெய்திருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் முழுமையான மருத்துவ பண்புகள் நிறைந்தாக இருக்கும். வேதியல் மூலக்கூறுகளை முழுமையாக பெற்றிருக்கும்.
2. தாழை ஓலை மரத்திலிருந்து வெட்டி எடுத்து அரைமணித்தியாலத்;துக்கும் ஒரு மனித்தியாலத்துக்கும் இடையில்  தோலை நீக்கி சுத்தம் செய்தல் உத்தமம். ஆனாலும் நான்கு மணித்தியாலத்துக்கு மேல்படுதலாகாது.
3. சோற்றுப்பகுதியை துண்டுகளாக நறுகி எடுக்கவேண்டும். உண்ண ஆரம்பிக்கும் போது முதலில் அரைச் சதுரடிப் பிரமாணமாக ஒரு வாரமும் இரண்படாவது வாரத்தில் ஒரு சதுரடிப் பிரமாணமாகவும் அடுத்து ஒன்றரை சதுரடி பிரமாணமாகவும் நான்காவது வரத்தில் இரண்டு சதுரடிப் பிரமாணமாகவும்  காலையில்  வெறு வயிற்றில் உணவு உண்பற்கு அரைமண்த்தியாலயம் முன்தாக உட் கொள்ள வேண்டும். பொதுவாக இரண்டு சதுரடிப் பிரமாணம் கொண்ட ஒரு துண்டில் ஒரு நாளுக்குத் தேவையான சத்துப் பொருட்கள் அணைத்தும் அடங்கியுள்ளது. ஒரு நாளுக்குப் போதுமானதாகும். இத்துன்டுகளை சக்கரை, பணம்கற்கண்டு, கற்கண்டு போன்றவற்றில் போட்டு புறட்டியுட் சுவையுட்டியும் பயன் படுத்தலாம் அல்லது வெறுமனேயும் பயன் படுத்தலாம். குமரியின் பாதப்படுத்திய துண்டுகளை சீலையில் கட்டிதொங்விட்டு சிறுது நேரத்தின் பின் அதை புளிக்கொளம்பாகம் தயார் செய்து உணவாகவும் பயன் படுத்தலாம். அடுத்து இதை குமரியை சாறாக்கி தொடம்பழச்சாறும் சேர்த்து பழரசமாகவும் பயன் படுத்தலாம். லேக்யமாக்கியும் பயன்படுத்தலாம்.
4. இவ்வாறு எடுத்து கொள்வதன் நோக்கம் உடலில் சத்து பொருளைகளை படிப்படியாக சேர்த்துக் கொள்வதே இதன் நோக்கம் இப்படி முறையான செயல் பாட்டுக்கு காரணமாகும்.
5. ஏக்கனவே கபம் அதிமாகி இளை நோய்க்கு ஆளானவர்களும் பினிச நோக்கு ஆளானவர்களுடம் வைத்தியரின் ஆலோசணையுடன் குமரியை உகயோகிக்த் தொடங்குவது சிறந்தது. உகயோகிப்பதானால் தற்போது பயன்படுத்திக் கொண்டு இருக்கும் ஆலோபதி மருந்துடன் சேர்த்து பயன்படுத்தி காலப் போக்கில் ஆலோபதி மருந்துகளை நிறுத்திக் கொள்ள முடியும். பொதுவாக எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளல் நன்று.
6. முதுமையால் உண்டாகும் மூட்டுவலி முட்டிவலி மூட்டுக்களில் வழுவின்மை போன்ற நோய்களுக்கு குமரியை தோலுடன் இரண்டு சதுரடி அளவு எடுத்து அதனுடன் இஞ்சி, மஞ்சல் சமனிடை சேர்த்து விழுது போல் அரைத்து சாதுவாக சூடாக்கி மூட்டுகளில் பற்றுப்போல் நன்றாக பூசி காயவிட மூட்டுவலி, வீக்கம் என்பன நீங்கி சுகம் பெறலாம். இது போன்று காலை மாலை பற்றிடலாம்.  
      குமரி குளிர்மையானது  இதை பாவிக்க ஆரம்பிக்கும் போது இது முதலில் கபத்தை உருவாக்கி பின்னர் எதிப்புச் சத்தியை உடலில் ஏற்படுத்தி உடலை கபத்திலிருந்து காத்து ஸ்திரப்படுத்தும். ஆத்துடன் மகரி~p தேரையரின் பாடலில் செப்பிய 
“பொல்லா மேகம் கபம் புல்  சூலை
குட்டம்  ரசம் அல்லார் மந்தம்
 பகம் தரும் குன்மம் எல்லாம் விட்டு ஏகும்
 அரிக்கும் எரிச்சர் கிரிச்சரமும் மாறும் இவை
குமரிக்கு மருண்டு” 
                அனைத்து பெற்று வழமாய் இளைமையாய் இறை இன்பம் பெற உறுதியா உடல் பொற்று இரண்றற்று ஒன்றாய் அவனுள் அவனாய் உய்வோம். “நோயற்ற வாழ்வு குறையற்ற செல்வம்” சித்தர்கள் வாழ்வியலை சிரமேற்று அவர்கள் அடியை பின்பற்றி காயத்தை கற்பமாக்கி வாழ்வாங்கு வாழ்வோம். 

"வாத பித்த சேர்மான மேகம் போக்கும்செருப்படை"

 "வாத பித்த சேர்மான மேகம் போக்கும்செருப்படை" பாத மென குறிப்பிட்டிருந்த செருப்படையின் மருத்துவக்குணம் 
தாவரவியல் பொயர் : “கிலேஸ்லோலாடஸ்”
    இம் முகிலிகை பொதுவாக வயல் புறங்களில் அறுவடையின் பின் வயல் வரவைகளில் அடர்தியாகப் படர்ந்து காணப்படும். இம் முகிலி செருப்புப் போல மெதுவாகப் காணப்படுவதனால் செருப்படை என அழைக்கப்படுகின்றது. கிராமப்புறங்களில் ஒர் பழமொழி கூறுவார்கள் “நாய் கடிச்சா செருப்பால் அடிச்சாப் போச்சி” என்பார்கள். இதன் மூலம் நாய்க் கடிக்கு செருப்படை ஒரு முக்கிய முகிலிகை என்பது தெரிகின்றது. இம் முகிலிகை அரைத்து நாய்கடித்து பற்கள் பட்ட இடத்தில் வைத்து கட்டிவிட்டு அதன் சாற்றை மூன்று நாட்களுக்கு முறை உட் கொடுப்பதன் மூலம் வி~த்தைக் கட்டுப்படுத் முடியும். மருந்து உட் கொள்ளும் போது உப்பில்லாப் பத்தியம் மேற் கொள்ள வேண்டும். இங்கு செருப்பால் அடித்தல் என்பது செருப்படையைக் கொடுத்தல் எனப் பொருன்படும்.
தேரையர் 
    இது பால் வினை நோக்கு அரும் பொரும் மருந்தாக தமில் மருத்துவம் கண்டுள்ளது. தேரையர் பாதார்த்த குணசிந்தாமனியில் செருப்படையின்; மருத்துவ பண்பை 
“செருப்டைக்கு வாதபித்தம் சேர்மான மேகம்
இருப்படி கொள் பொல்லா இசிவு விருப்படிக்கும்
சூலை ஒடு வாத குண்மம் தோன்றாது 
ஒருகாலும் வேலை யொற்ற கண்ணாய் விளம்பு” எனக் குறிப்பிடுகின்றார்.
இங்கு 1.“செருப்டைக்கு வாதபித்தம் சேர்மான மேகம்”: என்பது பால் உறவினால் ஏற்படுகின்ற மேகம் இதனை போக்க வல்லது செருப்படை எனவே இந்த முகிலிகை பால்வினை நோய்களுக்கு நல்ல மருந்தாக அமைகின்றது.
 2.“இருப்படி கொள் பொல்லா இசிவு”: இங்கு இசிவு என்பது இழைப்பு நோய், இரைப்பு நோய் அல்லது சுவாசகாசம் இது நுரையீரல் தமது பலத்தை இழப்பதனால் உண்டாகும் நோய் இந்த முகிலிகை நுரையீரலை பலப்படுத்தும் தன்மையுடையது. இதனால் நோய் தோன்றாது வராது. நோய் வரமுன் காப்பது வந்த பின் குணப்படுத்துவதை விட முக்கியமானது. இது தமிழ் வைத்தியத்தின் சிறப்பாகும். 
   3.“சூலை ஒடு வாத குண்மம் தோன்றாது" : இங்கு “சூலை” என்பது வயிற்றில் ஏற்படும் புண். உணவு சொரித்தலின் குறைபாட்டால் ஏற்படும் அஐPரணம். வாத குன்மம் என்பது வாவுடன் கூடிய அஐPரணத் தன்மையால் வயிற்றில் அதிக அமிலம் சுரப்பதால் வாதபித்தம் சேர்மான மேகம் என்னும் பால்வினை நோய்களுக்கு இம் முகிலிகை அருமருந்தாக அமையும். இம் முகிலிகையை ஒற்றை முகிலிகையாக அல்சர் நோய் உள்ளவர்களும் கரும நோய் உள்ளவர் களும் பயன்படுத்தலாம்.
பயன் படுத்தும் முறைகள்:
   இந்த முகிலிகை நீர்பகுதிகளில் காணப்படுவதால் மூன்று அல்லது நான்கு முறை சுத்தமான நீரில் கழுவி சுத்தம் செய்து சூரிய ஒளி நேரடியாகப்படாது இனலில் உலத்தி  அரைத்து துணியில் கலித்து வஸ்திர காயமாகக் சூரணமாக்கி வெறு வயிற்றில் திருகடி பிரமாணமாக காலை மாலை பயன் படுத்தலாம். இது உடலில் நோய் எதிர்பு சக்தியை உடலில் வாதபித்தம், வாதகுண்மம், சூழை நோய் இவைகள் வராது தடுக்கும் ஆற்றல் செருப்படைக்கு உண்டு.

Friday, October 28, 2011

"குரல் கம்மல் காமாலை போக்கும்கரிசலை "

"குரல் கம்மல் காமாலை போக்கும்கரிசலை கை என ஒளவை குறிப்பிட்ட கையான் அல்லது கரிசலை மருத்துவக்குணம் கை என ஒளவை குறிப்பிட்ட கையான் அல்லது கரிசலை 
தாவரவியல் பொயர் : “இக்கிலிட்டாஆல்வா”  (ECLIPTA PROSTRATA ROXB.)
குடும்பப் பெயர்:;;  ASTERACEAE.  
இத் தாவரம் பற்றி தேரையர் தனது பதாத்தகுண சிந்தாமணியில்
        “குரல் கம்மல் காமாளை குட்டமுடன்
            சோவை உரல் பாண்டு பன்நோய் யொழியும் 
            நிரச் சொன்னர் மெய்யாம் தகரையை ஒத்த
            ஆழி அன்னர் புலத்து கையான் தகரை
             ஒத்துக்கால்” என்று குறிப்பிடுகின்றார்.
1.“குரல் கம்மல்”என்னது தொண்டைக்கட்டு அதிநேரம் உரத்த குரலில் உரையாடுபவர்களுக்கு இவ்வாற நோய் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம் இதனால் குரல் நானில் முடிக்குகள் ஏற்பட்டு குரல்கம்மல் ஏற்படும்.
2.“காமாளை” எனக்குறிப்பிட்டது ஈரலி ஏற்படும் கல்லு,வீக்கம் போன்றவற்றால் உண்டாகும் மஞ்சல்காமாலை நோயைக்குறிக்கும். பொதுவாக ஈரலை பற்றிய எல்லா நோய்களையும் காமாலை இங்குகுறிப்பிட்டுள்ளார்.
3.“குட்டமுடன்சோபை” இது இரத்தக்குறைவால் அல்லது இரும்புக் சத்துக் குறைவால்  ஏற்படும்  வெளுப்பு நோய் அல்லது இரத்தச் சோகை நோயைக் குறிக்கும்.
4.“உரல் பாண்டு” என்பது நீர்சுரப்பு நோய்யைக்குறிக்கும்.
5.“மெய்யாம்” என்பது உண்மையைக்குறிக்கும் அதேசமயம் உடலையும் குறிக்கும் இங்கு அது உடலையே குறிக்கின்றது.
6.“தகரையை யெத்த யானியன்ன நற்பலத்து கையான் தகரை யொத்hதக் கால்” உடம்பானது தகரையை ஒத்தததாக வரும் என்று கூறுகின்றார். இங்கு தகரை என்பது தகரை என்னும் தாதவரம் ஒன்று உண்டு அதையல்ல செம்மறியாட்டுக்கும் இப்பெயர் உண்டு. இவை யெல்லாம் விடுத்து ஆனியானையை ஒத்த பலம் கிடைக்கும் என்றும் குற்ப்பிடுகின்றார். யாளி என்ற விலங்கு  அன்னம் என்ற பறவையும் முற்காலத்தில் வாழ்தது .இவ்விலங்கு தற்போது இல்லை. யாளி என்ற விலங்கு சிங்கமும் யானையும் சேர்ந்த உருவம் கொண்டதான விலங்காகக் காணப்படும். இது தற்போது ஆலயங்களில் தூண்களில் சுதை சிற்பங்களாகவும் தேர்கால்களில் செதுக்கப்பட்டும். இருக்கக்கானலாம். அன்னப்பறவை பாலையும் தன்னீரையும் கொடுத்தால் பாலை மத்திரம் அருந்தும் தன்மையுடையதாகவும் நீண்ட ஆயூள் கொண்டதான பறவையாகும். இதை யொத்த பலத்தைத்  கையான்தகரை தரும் எனக் கூறுகின்றார்.
   இது இரும்புச் சத்து நிறைந்தது  எமது உடலில் ஐந்து தொடக்கம் ஐந்தரை லீற்றர்  இரத்தம் இருக்க வேண்டும். அதில் இரும்புச் சத்து உண்டு. இதற்கு “கிமோக்குளோபீன்” என்று பெயர். இதில் “கீம்” என்பது புறத்தட்டிக் பாகத்துடன் “குளோபீன்” என்பது புரதம்.  இவை இரண்டும் சேர்ந்தே கிமோக்குளோபின் நிறமி இரத்தத்தில் இருக்கின்றது. நல்ல இடத்தில் விளைந்த கரிசலாங்கன்னியில் இயற்கை இரும்புச்சத்து அதிகம் உண்டு. நிறமிகள் நாம் உயிர் வாழ்வதற்கு அவசியமானதாகும். இரும்புச்சத்து இல்லாவிட்டால் இரத்தச்சோகை நோய் வந்துவிடும். உடலுக்குத் தேவையான பிராணவாய்வை பெற்று திசுக்களுக்கு அனுப்பும் ஆற்றல் கிமோக்குளோபீன்னுக்கு உண்டு. இதை உருவாக்கும் சக்தி இரும்புச்சத்துக்குண்டு. 
        இரத்தத்தை உற்பத்தி செய்வது எழும்பு மச்சைகளே. இரத்தத்தில் மூன்று பொருட்கள் உண்டு. அவையாவன வெண்குழியம் (வெண்குருதிச் சிறுதுணிக்கைகள்) இது ஒரு கனமில்லி மீற்றர் குருதியில்;(1mm3) 4000-11000  வரையில் இருக்க வேண்டும்.  குருதிச் சிறுதட்டு ஒரு கனமில்லி மீற்றர் குருதியில்;(1mm3) 250,000, செங்குழியம்(செங்ருதிச் சிறுதுணிக்கைகள்) ஒரு கனமில்லி மீற்றர் குருதியில்(1mm3

 5மில்லியன்; இருக்க வேண்டும். இம் மூன்றும் குறித்தளவில் இருந்தால் நோய்கள் அற்று சுகதேகியாக வாழ முடியும் இதை இயற்கையாக பெறுவதே சிறந்தது இதற்கு கருசலை மிகவும் சிறந்தது. 
      சித்தர்கள் கருத்து “இருப்பவன் இரும்பைத்தின்னு போறவன் பொன்னைத்தின்னு” என்றனர். பொன்னை ஆபரணமாக கண்டனர் மாந்தர்கள் மருந்தாகக் கண்டனர் சித்தர்கள். தங்கத்தை பென்;னை பற்கமாக்கி மருந்தாகக் கொடுத்து நீடித்த பிணிகளையை தீத்தாக சித்தவைத்திய ஏடுகள் ஆதாரம் காட்டு கின்றன. இன்றும் நீடித்த பிணிகளைத்தீர்க்க பயன்படுத்துகின்றனர்.இதற்கு பக்க விளைவு இல்லை. தங்கத்தை ஒப்பிலாம் குடி என்னும் முகிலின் சாற்றில் அரைத்து உப்பாக மாற்றி பயன்படுத்துவர்.  தனக்கு ஒப்பில்லாது இல்லை என்பதே இதன் பொருள். இப் பற்பம் உடனடியான ஓர் பூரிப்பைத் ஏற்படுத்தி வேகத்தையும் உட்ச்சாகத்தையும்  ஊட்டுகின்றதே தவிர நீண்டகாலத்துக்கு பயன் தரு மருந்தாக இதை சித்தர்கள் கருத வில்லை. இரும்பைத்தான் கருதினர். அதற்கு அயச்சத்து என்று சித்தர்கள் குறிப்பிட்டனர். 
பயன் படுத்தும் முறைகள்:
        இரும்பை உப்பாக மாற்றி அயச்செந்தூரம், அயக்காந்தசெந்தூரம், அன்னபேதிச்செந்தூரம், வெடி அன்னபேதிச்செந்தூரம், போன்றன சித்தர்களாள் கூறப்பட்ட முறைப்படி தயாரிக்க வேண்டும். இவற்றில் உள்ள சக்தியே கரிசலாங்கன்னியிலும் உண்டு. இதை அன்றாடம் உணவாகவும், லேகியமாகவும், சூரணமாகவும் சல்லடையில் சலித்து பாவிக்கலாம். அல்லது துணியில் சலித்து வஸ்திரகாயமாகவும் காலை மாலை ஆகிய இரு வேளை வெறுவயிற்றில் தேனுடன் திரிகடிப் பிரமாணமாக பயன்படுத்தலாம். கரிசலை நீர்பகுதிகளில் காணப்படுவதால் மூன்று அல்லது நான்கு முறை சுத்தமான நீரில் கழுவி சுத்தம் செய்து சூரிய ஒளி நேரடியாகப்படாது இனலில் உலத்தி  அரைத்து துனியில் கலித்து வஸ்திர காயமாகப் பயன் படுத்தலாம்.
 உடல் வலிமை தரும் கரிசலை தைலம்
  தைலம் தயாரிக்க தேவையான பொருட்கள்.
1.ஒரு கிலோ நிறையுள்ள பசுமையான கரிசலை இலை மூலம் பெற்ற ஒரு லிட்டர்(1.ட) கரிசலை சாறு
2. ஒருலிட்டர் சுத்தமான எள்ளெண்ணை (நல்லெண்ணை) ஒரு லிற்றர்(1.ட)
3;.தோல் நீக்கப்பட்ட ஏழுமுறை சுத்தநீரினால் திரும்ப திரும்ப நன்றாக சுத்தம்      செய்தெடுத்த குமரியின் சோறு (சோற்றுக் கற்றாலை சோறு) இருநூற்றி ஐம்பது கிராம் (250 ப)
4.பச்சை நெல்லிக்காய்ச் சதை இருநூற்றி ஐம்பது கிராம் (250 ப)



"தந்த மூலப்பினி தீத்திடும் குப்பைமேனி"



"தந்த மூலப்பினி தீத்திடும் குப்பைமேனி"  மேனி எனக்குறிப்பிட்ட குப்பைமேனியின் மருத்துவப் பண்புகள்  
    மேனி என்னும் குப்பைமேனி இத் தாவரம் பற்றி தேரையர் தனது பதாத்தகுண சிந்தாமணியில்
“தந்த மூலப்பிணி தீ தந்திடுமபுண் சர்வவி~
முந்து குன்மம் வாத முதிர மூலந்தினவு
சூலம் சுவாசம் தொடர் பிளிசங் கபம் போம்
ஞாலஸ் கொள் மேனி யதனால்” என்றார்.
 தாவரவியல் பெயர்: “அக்காலிகாஇன்டிகா” (ACALYPHA INDICA.)

குடும்பப் பெயர்:  (EUPHORBIACEAE.)
இச்செடியில் உள்ளசிறப்பு என்வென்றால் சூரிய வெளிச்சம் எல்லா இலைகளிலும் படும் அமைப்புக் கொண்டது அச் செடி இலைகளின் அமைப்பு கோபுரம் போலும் கிழ்; இலைகள் இரண்;டுக் கிடையில் மேல் இலை அமையும். அத்துடன் மரம் வளச்சியடையும் போது கீழ் இலைகள் நீண்டு கொள்ளும் தன்மையுடையது. ஒரு இலையின் நிழல் மற்ற இலையில் படாது. இதனால் சூரிய சக்தியை எல்லா இலைகளும் பெறுகின்றன. உடலின் பிரதான மூன்று மண்டலங்களுக்கு சிறந்த நிவாரணியாக அமைகின்றது. அவையாவன  சுவாச மண்டலம், சர்ம மண்டலம், ஐPரண மண்டலம் என்பனவாகும். உடல் குப்பையாகப் போனால் அதை சரி செய்து மேனியாக்கும் தன்மை இந்த மூகிலிகைக்கு உண்டு. இம் முகிலி உலகம் மெல்லாம் பலவிக் கிடக்கிறது.
         
 குணமாகும் நோயிகள்:  
 1“தந்த மூலப்பிணி;”: தந்த வேரில் ஏற்படும் நோய்கள் அதாவது தந்த வேர் பலவீணமாவதால் பற்கள் பலவீனமடைகின்றது எனவே பல்லின் வேரைப்பற்றி வருகின்ற நோய்களைக் குணமாகும்;,
 2.“தீ தந்திடும்புண்”  கொதித்த நீர் உடலில தவறுதலாக் கொட்டுவானால் ஏற்படும் புண், நெருப்பினால் உடலில் உண்டான வெந்த புண் கொப்பளம் அதனால் ஏற்படும் எரிவு இதனால் ஏற்பட்ட புண் ஆறிய பின் புதிய தோலில் வெண்தழும்பு ஏற்படும்  இது நிறமிகள் பாதிகப்படுவதால் உண்டாகும். இப்பாதிப்பை போக்க புதிய நிறமிகளை உருவாக வேண்டும். இதை உருவாக்கும் ஆற்றல் குப்பைமேனிக்கு உண்டு. 
3.“சர்வவி~” :  சர்வ வி~ம் என்பது நஞ்சு  ஒவ்வாமையினால் ஏற்படும் நஞசுத்தன்மை இதை டொஸ்சின் அல்லது அலஐPக் என்பர். உடல் ஏற்றுக் கொள்ளாத  பொருட்களினால் ஏற்படும் பிணிகளை போக்குகின்ற தன்மை இம் முகிலிக்கு உண்டு. 
4.“முந்து குன்மம்”:  உணவு சமிபாடு செய்யும் முறையில் உண்டான உந்து குன்மம் இரைப்பையில் உணவை சொரிபாகமாக்கின்ற சக்தியில் உண்டான குறைபாடு  அதாவது ஐpரணமாக்குகின்ற தன்மையை இழந்து அஐpரணமாகும் தன்மை இம் முகிலிகை குணமாகும். 
5.“வாத முதிர மூலந்தினவு”:   நரம்பு தளர்வினால் உண்டான வாதம், மலத்துடன் இரத்தம் போதம் அல்லது ஆசன வாயில் ஏற்படும் உதிர மூலம். மலம் கழிக்கின்ற போது மலத்தின் மேல் உதிரம் பூசப்பட்டால் போல தோன்றுதல், மலம் கழிக்க முன் உதிரம் வரல், அல்லது கழித்த பின் செட்டுச் செட்டாக உதிரம் விழுதல், இவற்றுடன் வலி எரிச்சலுடன் மலங்களிப்பது போன்ற இரத்த மூலம் குணமாகும். 
6.“தினவு”:  உடல் முழுவதும் ஏற்படும் அரிப்பு அல்லது ஒவ்வாமை என்னும் தினவு ஒவ்வாமையை ஏற்படுத்திய பொருளை உடலிலிருந்து அகற்றும் சக்தி இம் முகிலிகைக்கு உண்டு.   
7.“சூலம சுவாசம் தொடர் பிளிசங”:   வயிற்றில் புண் ஏற்பட்டு சூலத்தால் குத்துவது போன்ற வலி ஏற்படும் நோய் குணமாகும். ஆஸ்துமா என்னும் இரைப்பு நோய் அல்லது மூச்சு வாங்குதல் மூச்சு விடுவதற்கு சிரமமாக இருத்தல் போன்ற சுவாசநோய்  குணமாகும்.  பீனிசம் கபத்தில் நீர்க் கொருத்துக் கொண்;டு தும்மல் தலைவலி தலைபரம் போல் தோன்றும் தலிவலியால் ஏற்படும் பினிசம் எனப்படும்  இன் நோயியும் குணமாகும். 
8.“கபம் போம்”:  தொன்டையில் நீண்ட நாட்கள் சளிகட்டியிருப்பதனபல் நுரையிரலில் உண்டாகும்  கபம் என்னும் நோய்யும் குணமாகும். இந்த ஒரு முகிலிகையால் பதினொரு வகையான நோய்கள் குணமாகும் என தேரயர் குறிப்பிடுகின்றார். இதை அறிவியலும் பல ஆய்வுகளைச் செய்து ஒப்பு கொண்டுள்ளது. 

பயன் படுத்தும் முறைகள்:
 குப்பைமேனியை சுத்தமான இடத்தில் பெற்று மூன்று முறை சுத்தமான நீரில் மீண்டும் மீண்டும் கழுவி சுத்தம் செய்து இனலில் உலர்த்தி உலத்திய சமூலத்தை திரித்து  அதை சல்லடையிலோ அல்லது வஸ்திரத்தில் சலித்து வஸ்திரகாயமாக வைத்து காலை மாலை திருகடிப் பிரமாணமாக தேனில் குலைத்து அருந்தி வரலாம். உணவாகவும் பயன்படுத்தலாம். 

"ஈரலை பற்றிய நோய்" போக்கும் பூவெனக் குறிப்பிட்ட வெண்தாமரையின் மருத்துவப் பண்புகள்.

"ஈரலை பற்றிய நோய்" போக்கும்  பூவெனக் குறிப்பிட்ட வெண்தாமரையின் மருத்துவப் பண்புகள்.
வெண்தாமரையின் மருத்துவக் குணப்பற்றி தேரையர் பதாத்த குண சிந்தாமணியில் குறிப்பிடுகையில்
“ஈரலைப் பற்றிமிக வேறுகின்ற வெப்பம்போம்             
 கோரர் மருத்தின்  கொடுமையறும் பாருவதியில் 
  தண்டாமரையை யொத்த தாழ்குளலே காந்தர்                                                               விடும்   வெண்டாமரைப் பூவால் விள்” என்றார் தேரையர். இதன் தாவரவியல் பெயா: “நின்பெயல்;லோட்டஸ்”
வெண்பாவின் பொழிப்பு  
தேரையர்
    “ஈரலைப் பற்றிமிக வேறுகின்ற வெப்பம் போம்”: ஈரலைப் பற்றி வெப்பம் வெண்டாமரையால் போகும். ஈரலில் இரண்டு உண்டு. ஒன்று மண்ஈரல் அடுத்தது கல்ஈரல் இவை இரண்டும் நுன்னுதிகளை உற்பத்தி செய்யும் ஆற்றல் உடையது. உடலின் இருதயம்,சிறுநீரகம் போன்று இதுவும் முக்கியமானது. வெப்பத்தினால் கல்ஈரல் வீக்கம், மண்ணீரல் வீக்கம், ஈரலில் கொழுப்பு படிதல், ஈரலில் கல் விளைதல் போன்றன  ஏற்படமுடியும். இதனால் மஞ்சல்;காச்சல், ஈரல் வீக்கம், கல் என்பன தோண்றக் கூடும். இதனால் மஞ்சல்காமாலை நோய் ஏற்படுகின்றது இதை தடுக்க வெண்தாமரை பூ உதவுகின்றது அத்துடன் ஈரல் நுன்னுதிகளை உற்பத்தி செய்து உடலில் ஆரோக்கியத்துக்கு உதவும் முக்கிய உறுப்பு. ஆத்துடன் மண்ஈரல் முதிர்ந்த சிவப்பனுக்களை அகற்றும் முக்கிய செயல் பாட்டை இழக்கும்.




        “கோரர் மருத்தின்  கொடுமையறும்”:  அத்துடன் கோர மருந்துகளின் தாக்கத்தால் உண்டாகும் தாக்கத்தால் ஏற்படும் ஒவ்வாமையை சரி செய்யும் பணியும் ஈரலுடையது தான்.(மருந்துகளை எடுத்துக் கொள்வதால் உண்டாகும் பக்கவிளைவான நச்சுத்தன்மையால் ஏற்படும் விளைவுகளை அகற்றும் பணி ஈரலுக்குண்டு அதனால் விளையும் தாக்கத்தரல் ஈரல் பாதிக்கப்படுவதை வெண்தாமரை தடுக்கும்) இவை அனைத்தையும் சரி செய்து திடப்படுத்தும் தன்மை வெண்தாமரைக்கு உண்டு. 
முகிலிகையை பயன்படுத்தும் முறைகள்:
      இதனை பயன்படுத்தும் முறையை நோக்குவோமால் தாமரை இதழ்களை அல்லி தவித்து. பல முறை சுத்தமான நீரில் அலம்பி இணலில் உலர்த்தி (அதாவது நெரடி சூரிய வெயிலில் உலத்தாது) அவ்விதழ்களை சூரணம் செய்து பருத்தி துணியால் சலித்து காலை மாலை வெறுவயிற்றில் தேனுடன் கலந்து திருகடி பிரமாணத்தில் அருந்தலாம். அல்லது ஒரு கி;லோ இதழ்கனை உலத்தினால் நூறு கிராம் உலத்திய பூ இதழ் கிடைக்கும் இதனை மூன்று லிற்றர் நீர்விட்டு சுண்டக்காச்சி அரைலிற்றர்ராக்கி இதை அரைத்து வடிகட்டி பணம்கற்கண்டுடன் சேர்த்து காச்சி சர்பத்பதமாக பதப்படுத்திவைத்துக் கொண்டு காலை, மாலை வெறும் வயிற்றில் அருந்திவர ஈரல் பலமடைந்து உலலை காயகற்பமாக்கும்.
“மலர்கள் தத்திரங்களின் தன்மைகள்”: 
            பூக்கள் காலையில் மலர்வதும் மாலையில் உதிர்வதும் இயற்கை. இதுபோன்று இரவில் மலரும் பூக்களும் உண்டு. பெரும்பாலும் காலையில் மலர்வது சூரியனின் கவர்சியில் கவருவன இவைகளை சூரியகாந்தப்பூக்கள் என்பர் இவைகள் சிவ பூஜை பயன்படுத்துபவை இவை பொதுவாக வெப்பநோய்களுக்கு பொருந்தும் இவை பொன்று பத்திரங்களும் உண்டு இவை சூரியன் மறையும் போது தன்னை சுருக்கிக் கொள்ளும் உதிக்கும் போது விரித்துக் கொள்ளும் அவை நெல்லி, வன்னி, ஆத்தி, அத்தி, திருவாத்தி போன்றவை அவையும் மருத்துவக்குணம் நிறைந்தவை. இவை போன்று சூரியன் மறைந்து சந்திரன் வருகின்ற போது சந்திரனின்கதிர் கவர்சியினால் மலரும் பூக்களும் உண்டு அவை  மனமுள்ள பூக்கள் மல்லிகைஈ செம்பகம்,சம்பந்தி, மனோரஞ்சிதம் போன்றவை இவை பொதுவாக அம்பிகைக்கு சமர்ப்பிப்பதாக இருக்கின்றது. சூhயனால் கவரப்படுவதை சூரிகாந்தப்பூகள் என்றும் சந்திரனால் கவரப்பட்டவை சந்திரகாந்தப்பூகள் என்றும் கூறுகின்றனர். முற்காலத்தில் பூக்கள் மலர்நுது வரும்  வாசனையைக் கொண்டு நேரங்களைக்  நேரத்தை  கணிக்கப்பீடு செய்ததாகக் கூறப்படுகின்றது. நேரத்தைப் பொறுத்து அதன் மருத்துவகுணங்களும் மாறுகின்றதாக கூறுகின்றனர். பூகள் விரியும் சத்தம் காதுகளின் கேட்கும் அளவை விட அதிகமாம். என்றும் கூறுகின்றனர். மனத்தை ஈத்திழுத்தெடுக்கும் பன்பு மலர்களின் இயல்பான தன்மையாகும்.
    கீதையில் கிரு~;ண பரமாத்மா பூகளில் நான் தாமரை என்றும் சுவாமி விபுலானந்தர் உள்ளத்தை தாமரைக்கு ஒப்பிட்டு “உள்ளக்கமலமடி உத்தமனார் வேண்டுவது” என்றும். “பூவிணுக்கருங்கலம் பொங்குதாரை” என்றும் சுவாமி குமரகுருபரர் சகலகலாவல்லி மாலையில் “வெண்தாமரைக்கன்றி நின்பதம் தாங்க என் வெள்ளை உள்ள தாடாமரைக்கு” என்றும் உள்ளத்துக் கொப்பாக குறிப்பிட்டதன் பயன் நல்ல உள்ளத்தை அது கொடுக்கும் என்பதால் தான். வெள்ளை உள்ளம் இருந்தாலே போதும் ஆன்மாவை உணர. “மனமது செம்மையானால் மந்திரம் தேவை இல்லை” மனத்தை ஸ்திரப்படுத்தவே மந்திரம். எனவே வெண்தாமரையின் சிறப்பை இதன் மூலம் உணரமுடியும்.