Thursday, December 28, 2017

ஆன்மீக சாதனை புரிய ஆரம்பிக்கும் போது சாதகன் சாஸ்த்திர சம்பிரதாயங்களை கடைப்பிடிக்க வேண்டியது கட்டாயமாகும்

ஆன்மீக சாதனை புரிய ஆரம்பிக்கும் போது சாதகன் சாஸ்த்திர சம்பிரதாயங்களை கடைப்பிடிக்க வேண்டியது கட்டாயமாகும். ஆன்மா விளிப்படைந்து விட்டால் அவை அவசியமாதக அமையாது. ஏன்னெனில் அது பரமாத்மாவின் வடிவம். உதாரணமாக வயல் செய்கையில் ஈடுபடும்போது வயலினை மேற்பார்வை செய்ய வரம்பின் வழியே செல்ல வேண்டும் வயல் விளைந்த பின் வயலுக்குள்ளே பயனம் செய்வதுடன் விரைவாக கடக்கவும் முடியும். ஆனால் வேளான்மையின் அடிக்கட்டைகள் தால்களை தாக்க முடியும் அதனால் பாதணி அவசியமாகும். குருவின் துணை அவசியமாகும். சாதனை புரிவதற்கு குருவருள் தேவை குருவருளே திருவருள். ஏப்போதும் சாஸ்த்திர சம்பிரதாயங்கள் ஆற்றைக்கடக்க படகுபோலவே தேவைப்படும். அவை ஆணவத்தையும் செருக்கையும் ஏற்படுத்துமே தவிர இது உண்மையான ஞானத்தை கொடுக்காது. ஆசாரம் அவசியமானாலும் ஓரு எல்லை வரையே அது தேவை. குருதேவர் அவர்களின் சீடர் ஓருவர் பிராமண பித்தனாக இருந்த போது அவரிடம் மீன் அறுத்த கத்தியை களுவி தன்னீரை குடித்து வருமாறு கட்டளை இட்டார்.

No comments:

Post a Comment