Monday, April 5, 2021

பாத்திரம்

 பாத்திரம் என்பது பவித்திரம் என்பதும் ஒன்று அதாவது தாம் நேர்மையும் சத்தியமும் சுயமுயற்சியும் கொன்டு சேர்த்த சொத்தை தமது நியாயமான தேவைக்கு  மேலதிகமாகனதை தானம் செய்யும் போது அது தர்ம வழியில் செலவு செய்ய உண்மையான சிவனடியருக்கே கொடுப்பது பலமுத்தியும் சித்தி பரபோகமும் கிடைக்கும். அப்படி இல்லாமல் முப்பொருள் உண்மை அறியா மூடருக்கு வழங்கின் பயன் இழந்து திருவடி இன்பமும் கிடையாது. 

நிலமத் தனையே சிவஞானிக் கீந்தால்

பலமுத்தி சித்தி பரபோக முந்தரும்

நிலமந் தனைபென்னை நின்மூடர்க் கீந்தால்

பலமுமற் றேபர போகமுங் குன்றுமே என்றோதினார் திருமூலர். 

சொத்தை மனம் மகிழ் உள்ளம் பூரித்து சிரம் தாழ்த்தி அவன் சொத்தையே அவன் அருளால் பெற்று அவன் பணிக்கே கொடுப்பாதாக இருக்க வேண்டும். அங்கு நான் தான் உழைததேன் என்ற இறுமாப்பு எள்ளளவிலும் இரு;தலாகா. 'யாருடைய சொத்தை யார் கொடுப்பது எல்லாம் அவனுடையது' எதனையும் நாம் கொன்டு செல்ல முடியாது. நாம் சேர்த்த தர்மம் அதர்மம் சூக்குமாக ஆத்மாவில் பதிந்து செல்லும். அதுவே சுவர்கம் நரகம் என்பதை தீமானிக்கும். ஆசை பிறப்புக்கு வழி சமைக்கும். ஆசை பேராசையாகி பெரும் தரித்திரமக மாறும். ஆசையே எல்லவற்றுக்கும் காரணம்.

நாளும் ஒரு திருமந்திரம் என்னும் தொடரில்


கண்டிருந் தாருயிர் உண்டிடங் காலனைக்

கொண்டிருந் தாருயிர் கொள்ளுங் குணத்தனை

நன் றுணர்ந் தார்க்கருள் செய்திடு நாதனைச்

சென் றுணர்ந் தார்சிலர் தேவரு மாமே

உயிரைத துன்புறுத்திக் கொன்டு செல்லும் கூற்றவன் செயலை நன்குணர்தவர்கள் உலகத்தோர் அக் கூற்றவனை மாற்றும் ஆற்றல் எண்குணக் கடவுளான சிவபெருமனுக்கே உண்டு. அதை அறிந்தவர் ஒரு சிலரே அவர்களுள் தேவரும் மாவர். அவர்கள் நன்நெறியின் நன்மையின் உணர்தவர்களே. ஏமனை வெல்ல வழி நன்நெறி உணர்ந்து சிவனை சரணடைதலே பற்றற்று உலக விபகாரங்களில் இருந்து விடுபட்டு தன்னை மறந்து தன் செயலை மறந்து தன்னுள் தேடி தன்னுள் உள்ள குப்பைகளை அகற்றி அகத்துய்மை பெற்று அவனே கெதிஎன இருந்தால் அவன் திருவடி பேறு கிடைப்பது உறுதி.