ஓம் சற்குரு ஸ்ரீ அகத்தீசாய நம:
தியானத்தில் கடைப்பிடிக்க வேண்டிய விடையங்கள் தொடரில்.......
முத்தி என்பது என்ன என்ற கேள்வி உண்டு அதாவது மூன்று தீ எது என்பதை முதலில் அறிய வேண்டும். அவை சூரியன் சந்திரன் அக்னி இவை முக்கோண வடிவில் நம்மிடம் இருக்கின்றது. எங்கே என்பது தான் கேள்வி சூரியன் வலக்கண் சந்திரன் இடக்கண் அக்கினி புரவ மத்தி இவை மூன்றையும் இணைக்கும் முக்கோணப் பகுதியான இமைகளின் மையமே முத்திக்கு வழியான இடம் அங்கு ஆண்மா லயமடைந்து இருக்கும் இடம். இது பிண்டத்தில் அண்டத்தில் கைலாய மலையான இமையம். அங்கு எம்பெருமான் உமா தேவியாருடன் சூட்சும வடிவில் அமந்து முத்தி அளிக்கின்றார். சிவ பிரணவம் ஓம் சிவாயநம சக்தி பிரணவம் ஓம் உமா ஆகவே உமா மகேசுவரனாக இருந்து முத்தி கொடுக்கின்றார். அண்டத்தில் பரப்பிரம்மம் பரமாத்மாவாகி பிண்டத்தில் சீவாத்மாவாகி கர்ம விணைகளை அனுபவித்து பற்றறுத்து முத்தி என்னும் திரவுகோலால் துறந்து முத்தியடைய வேண்டும்.
No comments:
Post a Comment