Sunday, March 20, 2011

மனிதனின் செயற்பாடு மனம் வாக்கு காயங்களுக்கு கட்டுப்பட்டாலே தவிர விமோசனம் அடையமாட்டான். இயற்கையின் செயற்பாட்டுக்கு இடைஞ்சலாக இருப்பான்.














மனிதனின் செயற்பாடு மனம் வாக்கு காயங்களுக்கு கட்டுப்பட்டாலே தவிர விமோசனம் அடையமாட்டான்.  இயற்கையின் செயற்பாட்டுக்கு இடைஞ்சலாக இருப்பான்.
இராஜ்குமார் சுவாமியுடன் எனது குடும்பம் எனது வீட்டில்
மனிதனின் செயற்பாட்டுக்கு காரணம் பஞ்ச இந்திரியங்கள் அவை ஊறு  சுவை ஒளி நாற்றம் பரிசம்  அதைச் செயல்படுத்தும் கருவி பஞ்ச அவை கண், மூக்கு, செவி, வாய், தோல் இக் கருவிகள் மூலம் மனம் செயல்படுகின்றது. மனத்திலிருந்து எண்ணம் உதயமாகின்றது. எண்ணம் மனித செயற்பாட்டுக்கு காரணமாகின்றது. மனத்தின் செயற்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் “குரங்கின் கையில் பூமாலையைக் கொடுத்தால் போல” அமையும். அதை செயல் படுத்துவது அகங்காரம் இது ஆணவம். ஆணவத்தை செயற்ப்படுத்துவது கன்மம். கன்மம் பிராத்தம் ஆகாமியம் சஞ்சிதம் எனப்படும். அதற்கு உத்வேகம் கொடுப்பது மாயை இல்லாதொன்றை இருப்பதாக காட்டுவது. இவைகளின் செயற் பாடுகளுக்கு மனமே காரணமாகின்றது.  மனத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் போது புத்தி செயல்படாது. அகங்காரமே மேலோங்கியிருக்கும் இதற்கு கூறுவார்கள் “ஆத்திரக்காரனுக்கு புத்தி மத்திமம்” என்பார்கள் அது புத்தியின் செயல்பாட்டுக்கு எதிரி அதை வெல்ல வேன்டுமாயின் சிந்தித்து செயலாற்ற வேண்டும். சிந்திப்பதற்கு அவகாசம் தேவை ஆத்திரம் அவகாசம் கொடுக்காது. அவகாசம் கொடுத்தால் விதியின் செயல்பாட்டுக்கு என்ன கெதி? “விதியை மதியால் வெல்லலாம்” என்று கூறுவர். விதி என்பது நாம் செய்தவை. எமது ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் நேரானதும் எதிரானதுமான விழைவுகள் உண்டு. நேரான விளைவுகள் இயற்கையை ஒத்தவை எதிரான விளைவுகள் இயற்கையை சீர்குலைப்பவை. 
               மனம் உடல் நலத்தை அடிப்படையாகக் கொண்டது எப்போதும் உடல் சொகுசையே அடிப்படையாகக் கொண்டது. புத்தி உளநலனும் ஆத்மாவையும் அடிப்படையாகக் கொண்டது. புத்தி செயற்பட சித்தம் அவசியம்;. சித்தத் தெளிவு புத்தியின் விளிப்பு அதுவே விக்கிணம் தீர்ந்து வெற்றி பெற வழி. குளம் வற்றி சேறு நிறைந்து கலங்கி இருந்தால் உள்ளுள்ள பெருட்கள் கண்களுக்கு புலப்படாது. தெளிந்த நீரிலே அடியிலுள்ள எல்லாப் பொருட்களும் புலப்படும். அது போல விதியின் விளையாடவிருக்கும் விளையாட்டு புத்திக்கு தெட்டத்தெளிவாக தெரியும். அதனால் ஆத்திரம் அடங்கி புத்தி மேலோங்கும். “புத்தியின் விளிப்பே சித்தத் தெளிவு அதுவே ஆன்மாவின் ராகம்  கன்ம பிடியிலிருந்து தப்ப ஒரேவழி”  நாம் செய்த கன்மத்தின் செயலிருந்து தப்ப கன்மத்தை முன்னுனரும் சக்தியை பெற வேண்டும். அது தன்னை உணரந்;தவனாலே முடியும். தன்னை உணர்தல் என்பது இருட்டறையில் நுலைய ஒரு வெளிச்சம் தேவை அது போல் அஞ்ஞான இருளைப் போக்க மெய்ஞான ஒளி வேண்டும். மெய்ஞானம் குருவை அடைந்தாலே முடியும். “குருவருள் திருவருலே அதுவே அவன் அருள்”;.  “தாரமும் குருவும் தலைவிதிப்படியே” என்பர் சான்றோர். குறுடனுக்கு குறுடன் வளிகாட்ட முடியாது. அது தான் இப்போது நடைபெறுகின்றது.
                   நமது எண்ணங்கள் வலுபடையும் போது அது எம்மையறியாது  ஓரு சூட்சும வடிவம் பொறுகின்றது. அது செயற்படும் போது சித்தி கிடைக்கின்றது. அச் சித்திக்குக் காரணம் புத்தி விளிப்பின் சித்தத் தெளிவே. நமது எண்ணம் செயலுருப்பெற்று வெற்றி பெறுவது. சித்திக்கு காரணம் சக்தி. அச்சக்தியில் தேவசக்தியும் அசுரசக்தியும் உண்டு. இதில் தேவசக்தி பிரபஞ்சத்துக்குப் பாதிப்பில்லாத உண்மைக்கு சான்று பகிர்கின்ற நல்லெண்ணங்களுக்கே உதவி புரிந்து அதை செயலாக மாற்றி வெற்றி பெறச்செய்யும். இது அதேமாதிரி உண்மை நேர்மை சத்தியம் உடைய சாத்வீக குணத்தையுடையவருக்கே. இது தீய எண்ணங்களுக்கு உதவி செய்யாது. தீய எண்ணங்கனை வலுப்படுத்துவதும் செயல்படுத்துவதும் தீய சத்தியே இவை காமக்குரோத வஞ்சக எண்ணம் உள்ள தாமத குணத்தவர்களை வலுவாகப் பற்றுவது அதற்கு இலகு. 


                     இவ்விரு சத்திகளும் உருவாக்கியது நம்மிடம்மிருந்து வெளிப்பட்ட எண்ண்ங்களின் கூட்டுச்சேர்கையே. அவைகளுக்கும் வடிவம் கொடுத்ததும் நாம் தான் ஆரம்பத்தில் சித்தர்கள் உருவங்களை தத்துவரீதியில் உருவாக்கி அற்றுக்கு தான் பெற்ற பிரபஞ்ச சக்தியை பாச்சி உயிர் கொடுத்தார்கள் அதை மக்கள் எண்ணத்தில் வளர்த்தார்கள். அதை புரோகிதர்கள் சித்தர்கள் மகரி~pகளால் உபதேசிக்கப்பட்ட மறையின் அடிப்படையை குருவி உபதேசத்துடன் ஜந்திர விம்ப பிதிஸ்டை செய்து. மக்களால் எண்ணைக்காப்பு என்ற கிரியை மூலம்  இறை எண்ணத்தை விம்பத்தின் கீழ் உள்ள ஜந்திரத்தில் பதிப்பதன் மூலம் விம்பம் சத்தி பெறுகின்றது. அது மின்கலம் ஒன்று மின்pனேற்றப் படுவதை ஒத்தது.  கருங்கல் எள்ளெண்ணை  மனிதனின் மின்காந்த அலைகளினால் ஏற்படும் மனித காந்தத்தை ஈத்து விம்பத்தின் மூலம் ஜந்திரத்தில் பாச்சுகின்றது. அங்கு  இக்கிரிகையை மேற்கொள்ளும் அணைவரது சத்தியும் ஒன்று திரண்டு மகா சத்தியாக பருநாமிக்கின்றது. இன் நிகழ்வு சீவாத்துமாக்கள் புனிதமடைந்து பரமாத்மாவாகும் நிலையை ஒத்தது. இந்த சக்தி பன்னிரு வருடங்கள் இருக்கும். அதன் பின் சக்தி குறையத்துவங்கும் அதனால் மீண்டும் ஆலயங்களில் குடமுழுக்கு செய்ய வேண்டும். புரோகிதர்கள் அச் சக்திகளை குறைய விடாது அதைக்காப்பதே அவர்கள் கடமை.
                            இது போன்று அசுர சக்தியையும் உருவாக்கின்றனர். அவர்கள் தாமத குணத்தின் சக்தி இவை பொதுவாக மனிதர்களுக்கு தீங்கு செய்வதற்காக பில்லி சூனியம் செய்விணை முலம்   காமக் குரோத வஞ்சக பழிவாங்கல் செய்ய துனை போகின்ற சக்தி. அவை பொதுவாக அசுத்த இராச்ஜதம் தாமத குணங்களுள்ளவர்கள் மூலம் வெளி வரும் எண்ணங்களின் சேற்கையின் திரண்ட சக்தி. இது தான் அசுரசக்தியாகும். இச்சக்தி தாமதகுணத்தவர்களின் வெற்றிக்கு காரணமான சக்தி. ஆத்திரம் கொண்ட மனிதனை இது இலகுவாக உள்வாங்கி  ஆதிரத்துக்கு காரணமானவனை பழிவாங்கி வெற்றி பெறச் செய்து தன்வசமாக்கும் சக்தி கொண்டது. கேட்ட சக்தியை வசமாக்கும் தாந்திரியசக்தி படைத்த பிமராட்சகர் சீடர்கள் இருக்கின்றனர். இவர்கள் தேவருக்கு எதிரானவர்கள்.புராண இதிகாச கதைகளில் ஒரு தெவருக்கு எதிராக ஒன்றோ அல்லது பல அசுரர்கள் போரிடுவர். உதாரணமாக கந்தப்புராணத்தில் முருகனுக்கு எதிர் சூரபன்மன்.  இராமயனத்தில் இராமனுக்கு எதிர் இராவணன். மகாபரத்தில் அர்சுணன் எதிர் கர்ணண்(கூனியின் சூழ்ச்சி). வினாயகர் புராணத்தில் வினாயகர் எதிர் கஜமுகாசுரன். தேவிமான்மீயத்தில் ஆதிசக்தி எதிர் மகிசாசூரன். இன்னும் பூராணம் தான் படிக்கின்றோம். ஆனால் மக்கள் மத்தியில் அவற்றை உணர்ந்து தமது செயற் பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா? ஏன்றால் அது இல்லை. அந்த அசுர சக்திகளின் செயல்பாட்டின் உச்சக்கட்டத்துக்கு சென்றதை இயற்கை எமக்கு உணர்த்தி நிற்கின்றது. உலக அழிவு என்பது மனித மனவழிவே. புராண இதிகாசங்களின்; நடை பெறும்; யுத்தம் எமக்குள் நாமே நடார்த்தும் யுத்தமாக எப்போது மாறுகின்றதோ அப்போது தான் அக உலகமான மனம் அழிவதைத் தடுத்து புற உலகான பிரபஞ்வத்தை காக்கமுடியும். எமக்குள் யுத்தமென்பது நம்முள் ஏற்படும் நேர் எதிர் எண்ணங்களுக்கு போர் நடார்த்தி நேர் எண்ணத்தின் பலத்தை அதிகரித்து எதிர் எண்ணத்தின் செயற்பாட்டை கட்டுப்படுத்தவேண்டும். எண்ணங்கள் தோன்ற காரணங்கள் பல எமக்கு வெளியிலிருந்தும் வரும் அதுவும் எம்மைத் தாக்கும் எம்மை காக்க எம்மைச் சுற்றியுள்ள மின்காந்த அலையான மனித காந்தத்தை வலுப்படுத்தி அதன் சக்தியை அதிகரித்தால் எம்மைத்தாக்க வரும் அலைகளை தடுத்து அது எமக்குள் வந்து செயல்படுவதின் மூலம் ஏற்படப் போகும் விழைவைத் தடுக்க முடியும். “விதியை மதியால் வெல்ல முடியும்” அதுவும் விதிதான். “தவமும் தவமுடையாருக்கே ” என்பார்கள். ஒருவர் ஆத்திரத்தில்
 கொலை செய்ய எத்தனிக்கும் போது கொலையின் பின் தனக்கு ஏற்படும் விழைவை எண்ணினானால் கொலை வெறி நீங்கிவிடும். இச்சந்தர்ப்பம் தான் விதியை மதியால் வெல்லுதலுக்கான விதி. எந்த ஒருவொரு நிகழ்வுக்கும் பின்னனியில் ஒவ்வொரு காரணம் இருக்கும்.  அது போல ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு தாக்கம் உண்டு. அவை நேர் எதிர் விளைவுகள் உண்டாக்கும். இவற்றை நல் விணைப்பயன் தீ விணைப்பயன் எனப்படும். இவையே நாம் செய்த வினை இதுவே பிறவிக்கு காரணமாகின்றது. பிறவித்துயரை களைய வேண்டுமாயின் அதை அனுபவிக்க வேண்டும். எனவே நமக்கு  ஒருவர் வினை செய்கின்றார் என்றால் அது பூர்வஜென்ம வினையின் பயனே அதை முடிக்க அவன் காரணமாக அமைந்தால் அவன் எதிரியல்ல நண்பன். எமக்கு வரும் துன்பங்கள் எல்லாம் பரலோக சுவர்க்க இன்பத்துக்காகவே அதை தாங்கி பூர்வஜென்ம வினையை முடிக்கக் கூடிய சத்தியும் வல்லமையும் பொறுமையும் இருக்குமானால் அது கூட பூர்வஜென்ம வினைதான். “தவமும் தவமுடையார்க்கே ” அது போன்றது தான். ஆனால் நடைமுறையில் எமக்கு தீங்கிளைத்தவனுக்கு நாம் துர்சக்திகளைக் கொண்டு மீண்டும் தீங்கிழைத்து மீண்டும் மீண்டும் பிறவித்தளையில் மூழ்கின்றோம். இதை ஆணவம் தலைமைதாங்கி நடார்த்துகின்றது. மாயை உண்மையை மறைக்கின்றது. கண்மம் செயல்படுகின்றது. இடையில் பிரவித்தளையிலிருந்து விடுதலை அடைய வேண்டிய ஆத்துமா விடுதலை இன்றி அவதியுறுகின்றது. இதையே பிரம்மகஸ்திதோசம். அதாவது பிரம்மனின் படைப்பின் நோக்கம் உணராமையே.
ஆத்துமா புனிதமானது.  இரத்தின கல்லின் மீது சணம் விழுந்தால். இரத்தினக்கல் தன் தன்மையை இழப்பதில்லை. ஆனால் அதன் வெளிச்த்தின் நன்மையை உலகம் அடையாதே தவிர கல் அதன தன்மையையும் ஒளியையும் இழக்கவில்லை. எப்போது சாணியின் உள் இரத்தினக்கல் உண்டு. என்பதை யார் அறிகின்றானோ. அவன் கல்லின் பெறுமதி அதன் தன்மை அறிந்தவன் தான் அதைத் தேடமுடியும்.  அகற்றும் வளியும் தெரியவேண்டும். அவனுக்குகே  கல் கிடைக்கும்.  அது போன்றதே இறவாமை. இறவாமையை எவனெருவன் உணரும் பட்தத்தில் செயலில்லிருந்து விடுதலையும் பிரபஞ்சதில் பரவியுள்ள விசத்தை கட்டுப்படுத்தி காற்பாற்றவும் முடியும்.



No comments:

Post a Comment