Thursday, September 22, 2011

சித்தன் வைத்தியம்

சித்தன் வைத்தியம் அறிமுகம்
       நான் ஒரு சித்தவைதியர் அல்ல ஆனால் சித்தர்களில் நம்பிக்கையுற்று அவர்களின் வழியை பின்பற்றி ஆத்மாக்கு உடல் உபாதையிலிருந்து விடை கொடுக்க முயலுவதுடன் “நாம் பெற்ற இன்பம் பெறுக அவ்வையகம்” என்று மற்றவர்களும் பின்பற்ற என்னல் முடிந்ததை செய்ய வேண்டும் என்ற நோக்கில் இந்த கைங்கரியத்தை செய்ய முயலுகின்றேன். சித்தர் என்றால் உலகை அனுபவிக்கத் தெரியாத பைத்திகாரர்கள் என்பது தான் பெரும்பாலன இளைஞர்களின் கருத்து. ஆனால் அது வல்ல உண்மை அவர்களை அறிய அடைய பிராரத்துவம் தேவை. “அவன் அருளால் அவன் தாள் வணங்கி” என்று திருவாசகத்தில் மாணிக்கவாசகரும் “தவமுடையாக்கே தவம்” என கூறி இருப்தால் எல்லோருக்கும் இது கிடைக்காது. விவேகானந்தர் உலகத்தை திருத்துவது என்பது “நாய் வாலை நிமித்துவது போலானது” என்று குறிப்பிடுகின்றார். 
          உலக இயக்கத்துக்கு ஆவரண, விசே~ப சக்திகளுடனான கூடிய அஞ்ஞானத்தை உபாதியாகக் கொண்ட சைதன்னிய சக்தி தேவை.  ஆதனால் தான் உலகத்தைப் படைக்க முடியும். மனதில் மறைந்துள்ள புதியைச்  விளிக்ச் செய்து தெளிந்துள் சித்தத்தை அறிவதன் மூலமே உண்மையை உணர்து மனத்தைதிரப்படுத்தி (மந்திரம் என்பது மனத்திரப்படுத்துவது என்பது பொருள்)வைராக்கியத்தின் மூலம் ஆத்மாவின் இயல்பான ஒளியை அனுபவித்து (ஆத்மா இயல்பாகவே ஒளியுள்ளது)அதன் வழி நின்றவர்கனே சித்தர்கள்.      சித்தர்களின் ஞனத்தினால் உண்டான வைத்தியம் விஞ்ஞானிகளின் ஆய்வுக்குட்பட்டு நிருபனமாகியுள்ள வைத்திய முறைகளாகும். பக்கவிளைவற்ற காயத்தை கற்பமாக்கும் சக்தி வாய்ந்த முகிலிகள் இயற்கையில் பணச்செலவின்றி இயற்கையின் கொடையாக தேடுவார் அற்று வீதியோரங்களிலும் ,ஓடைகளிலும் ,காடுகளிலும் கிடக்கின்றன. சேற்கையின் கோரம் இன்று இயற்கையை அழிவுறச் செய்ததுடன் ஆயூளையும் குறைத்து நடைபிணமாக தான் யார் என்று தெரியாது நடமாடிக் கொண்டு இருக்கும் “கண்டதே காட்சி கொண்டதே கோல மென” மேல்நாட்டு மோகத்தில் அலையும் காலமிது.  மேல் நாட்டவன் தன் நிலை மறந்து சித்தர்கனை தேடி கீழ் நாட்டை நோக்கி படை எடுக்கும் காலமிது.  உலகை காப்போம் இயற்கையை நேசிப்போம் என்று கூறிக் கொண்டு இன்றும் அணுவலைகள் உருவக்கிக் கொண்டிருக்கும் காலமிது. நான் என்ற அகந்தையில் அழிந்தொழியும் நாடுகள் ஒரு புறம். இது ஒருபுறமிருக்க சித்தனின் அற்புத ஞானத்தி உத்தவை பல ஞானம், வாணசாஸ்த்திரம், ஒழுக்கமான வாழ்கை முறை, வைத்தியம், தத்துவம் இது போன்ற பல இவற்றை உலகற்யச் செய்வதே இதன் நோக்கம்;. இந்த வகையில் இக்கட்டுரையில்  சித்த வைத்தியத்தை அறிமுகப் படுத்துகின்றேன். 




 தேரையர்




சித்தம் தெளிந்தவன் சித்தன்
 அவன் போக்கு சிவன்போக்கு 
 அவனே சிவ சித்தன். 
அவன் சிந்தையில் உதித்தது சித்தவைத்தியம் 
இதுவே எமது உடலுக்கு ஆதார  மூலம்.
மனி;தனைப் படைத்த இறைவன்
 அவன் உடலினின் விளையும் ஊறினை அறிந்து
 அதை தடுக்கும் முகிலியும் படைத்தான். 
படைத்தவன் படைப்பின் தத்துவம் அறிய
 சித்தம் தெளிய வைத்தான். 
அவனே அவனை அறியவைக்கும்
 பரமஇரகசியம் இதுவென அறிந்தால்
 அவனே இறைவன்.
ஓளவை தந்த காயகற்ப முகிலிகள் ஐந்தாம் விக்கினம் தீக்கு விநாயகர் துதி;தனில்
“வாக்குண்டான்  நல்ல மனமுண்டான்
 மாமலரான் நோக்குண்டான் மேனி நுடங்காது 
பூக்கொண்டு துப்பார் தும்பிக்கையான்
 பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு”
         ஒளவையார் தனது விநாயகர் துதியில் வாக்குண்டான் என்று கூறும் போது ஒரு மனிதனுக்கு வாக்கு என்பது சுத்தமாக இருக்க வேண்டும் திரிகரண சுத்தி உள்ளதாக இருக்வேண்டும். அதாவது மனம், வாக்கு, காயம் இம் மூன்றும் ஒன்றாக செயல்பட வேண்டும். இங்கு வாக்கு என்னும் போது செல்வாக்கு, சொல்வாக்கு, திருவாக்கு இவை மூன்றும் அமைய பெற்றும் நல்ல மனம் ஏற்படும். மற்றவர்களுடைய வளர்ச்சியை கண்டு மகிழும் மனம். கொண்ட  உடலை இறைவனுக்காக அர்பணித்து பூக்கொண்டு விநாயகரின் பாதத்தில் வைத்து வழிபட்டால் விநாயகர் அருள் எப்போதும் இருக்கும். என்பது பொருள்.

       இதை வைத்திய நோக்கில் ஆராய்தால் காயகற்பமே அடங்கியுள்ளது. நல்ல வாக்கும், நல்ல மனமும் இருந்தாலே அரோக்கியமான உடல் கிடைத்து விடும். நோய் இருக்காது. “நோய்யற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” இதுவே ஒரு மனிதனுக்கு போதுமானது. நீண்ட ஆயூள் கிடைத்து விடும். இப்பாடலில் பூ என்பது வெண்தாமரைப்பூ இது ஈரலில் ஏற்படும் வியாதிகளைக் குணப்படுத்தும் தன்மை உடையது. அடுத்து மேனி இது கும்பமுனியால் அறிமுகப்படுத்ப்பட்ட குப்பைமேனி சூட்டால் எற்படும் நோய்களுக்கு நிவாரணி. அடுத்து தும்பி என்பது முடிதுப்பை இதுவும் உஸ்ண நோய்களுக்கு உகந்தது. அடுத்தது கை என்பது கையான்தகரை, கரிசலை அல்லது கரிசலாங்கன்னி என்னும் முகிலி இதுவும் காமலை போன்ற நோய்களுக்கு உகந்தது.  அடுத்து பாதம் என்பது செப்படை என்னும் பூண்டு இது பால்விணை நோய்களுக்குச் சிறந்தது. இவ்வாறு விநாயகர் துதி மூலம் கயகற்ப முகிலிகள் ஐந்தான வெண்தாமரைப்பூ, குப்பைமேனி, முடிதும்பை, கரிசலாங்கன்னி, செப்படை என்பற்றைக் குறிப்பிட்டுள்ளார்.
      ஓளவையர் சித்தம் தெளிந்த சித்தன். அவர் இயற்றிய “விநாயகா அகவலில்” எம்முள் கடையும் பால்கடல்; கடைவான குண்டலினி விளிப்பும்  சகஸ்திராகாரத்தில் அமுதசொரிவு பற்றியும் அதை மேற்கொள்ளும் முறையும் அடையும் இன்பத்தையும் தெளிவுபடுத்தியுள்ளார். இவ்வாறு ஒளவையார் என்றால் முதலில் வருபவர் விநாயகப் பெருமான் தான். “புத்தியை வழிபட்பட்டு புத்தியில் உறைந்தவள் ஒளவை” அவ் ஒளவைக்கு  வெள்ளை யானையில் கைலாய தரிசனம் கொடுத்தவன் புத்தி.  
 “ மனத்துள் மறைந்தது புத்தி
 ஆதற்கு காரணம் அஞ்ஞானம்
ஞானத்தை மறைத்தது நாம் செய்த வினை
வினையின் பயனே நல்லது தீயது
புத்தி விளிப்பே  சித்தத் தெளிவு
    சித்தத் தெளிவே  ஆத்மாவின் விளிப்பு
ஆத்மாவின் ஒளி யில் ஒளிதல்
அதுவே பிறப்பின் அர்த்தம்
   இத்தனைக்கும் காரணம் அறியாமையின்  சதி
அத்தனையும் நாம் செய்த கறுமாவின் விளைவு
   அதற்கு காரணம்  மனத்திரம்மில்லாமை
மனத்திரமடைய வைராக்கியம் தேவை                                  
  வைராக்கியமடைய குருவருள் தேவை                                         
குருவருளே  திருவருன்  அதுவே அவன் அருள்”


                                                                                           


1. பூவெனக் குறிப்பிட்ட வெண்தாமரையின் மருத்துவப் பண்புகள்.
வெண்தாமரையின் மருத்துவக் குணப்பற்றி தேரையர் பதாத்த குண சிந்தாமணியில் குறிப்பிடுகையில்
                   “ஈரலைப் பற்றிமிக வேறுகின்ற வெப்பம் போம்
                    கோரர் மருத்தின்  கொடுமையறும் பாருவதியில் 
                     தண்டாமரையை யொத்த தாழ்குளலே காந்தர் விடும்
                     வெண்டாமரைப் பூவால் விள்” என்றார் தேரையர். இதன் தாவரவியல் பெயா:; “நின்பெயல்;லோட்டஸ்”
வெண்பாவின் பொழிப்பு  
    “ஈரலைப் பற்றிமிக வேறுகின்ற வெப்பம் போம்”: ஈரலைப் பற்றி வெப்பம் வெண்டாமரையால் போகும். ஈரலில் இரண்டு உண்டு. ஒன்று மண்ஈரல் அடுத்தது கல்ஈரல் இவை இரண்டும் நுன்னுதிகளை உற்பத்தி செய்யும் ஆற்றல் உடையது. உடலின் இருதயம்,சிறுநீரகம் போன்று இதுவும் முக்கியமானது. வெப்பத்தினால் கல்ஈரல் வீக்கம், மண்ணீரல் வீக்கம், ஈரலில் கொழுப்பு படிதல், ஈரலில் கல் விளைதல் போன்றன  ஏற்படமுடியும். இதனால் மஞ்சல்;காச்சல், ஈரல் வீக்கம், கல் என்பன தோண்றக் கூடும். இதனால் மஞ்சல்காமாலை நோய் ஏற்படுகின்றது இதை தடுக்க வெண்தாமரை பூ உதவுகின்றது அத்துடன் ஈரல் நுன்னுதிகளை உற்பத்தி செய்து உடலில் ஆரோக்கியத்துக்கு உதவும் முக்கிய உறுப்பு. ஆத்துடன் மண்ஈரல் முதிர்ந்த சிவப்பனுக்களை அகற்றும் முக்கிய செயல் பாட்டை இழக்கும். “கோரர் மருத்தின்  கொடுமையறும்”:  அத்துடன் கோர மருந்துகளின் தாக்கத்தால் உண்டாகும் தாக்கத்தால் ஏற்படும் ஒவ்வாமையை சரி செய்யும் பணியும் ஈரலுடையது தான்.(மருந்துகளை எடுத்துக் கொள்வதால் உண்டாகும் பக்கவிளைவான நச்சுத்தன்மையால் ஏற்படும் விளைவுகளை அகற்றும் பணி ஈரலுக்குண்டு அதனால் விளையும் தாக்கத்தரல் ஈரல் பாதிக்கப்படுவதை வெண்தாமரை தடுக்கும்) இவை அனைத்தையும் சரி செய்து திடப்படுத்தும் தன்மை வெண்தாமரைக்கு உண்டு. 
முவிகையை பயன்படுத்தும் முறைகள்:
      இதனை பயன்படுத்தும் முறையை நோக்குவோமால் தாமரை இதழ்களை அல்லி தவித்து. பல முறை சுத்தமான நீரில் அலம்பி இணலில் உலர்த்தி (அதாவது நெரடி சூரிய வெயிலில் உலத்தாது) அவ்விதழ்களை சூரணம் செய்து பருத்தி துணியால் சலித்து காலை மாலை வெறுவயிற்றில் தேனுடன் கலந்து திருகடி பிரமாணத்தில் அருந்தலாம். அல்லது ஒரு கி;லோ இதழ்கனை உலத்தினால் நூறு கிராம் உலத்திய பூ இதழ் கிடைக்கும் இதனை மூன்று லிற்றர் நீர்விட்டு சுண்டக்காச்சி அரைலிற்றர்ராக்கி இதை அரைத்து வடிகட்டி பணம்கற்கண்டுடன் சேர்த்து காச்சி சர்பத்பதமாக பதப்படுத்திவைத்துக் கொண்டு காலை, மாலை வெறும் வயிற்றில் அருந்திவர ஈரல் பலமடைந்து உலலை காயகற்பமாக்கும்.
“மலர்கள் தத்திரங்களின் தன்மைகள்”: 
            பூக்கள் காலையில் மலர்வதும் மாலையில் உதிர்வதும் இயற்கை. இதுபோன்று இரவில் மலரும் பூக்களும் உண்டு. பெரும்பாலும் காலையில் மலர்வது சூரியனின் கவர்சியில் கவருவன இவைகளை சூரியகாந்தப்பூக்கள் என்பர் இவைகள் சிவ பூஜை பயன்படுத்துபவை இவை பொதுவாக வெப்பநோய்களுக்கு பொருந்தும் இவை பொன்று பத்திரங்களும் உண்டு இவை சூரியன் மறையும் போது தன்னை சுருக்கிக் கொள்ளும் உதிக்கும் போது விரித்துக் கொள்ளும் அவை நெல்லி, வன்னி, ஆத்தி, அத்தி, திருவாத்தி போன்றவை அவையும் மருத்துவக்குணம் நிறைந்தவை. இவை போன்று சூரியன் மறைந்து சந்திரன் வருகின்ற போது
சந்திரனின்கதிர் கவர்சியினால் மலரும் பூக்களும் உண்டு அவை  மனமுள்ள பூக்கள் மல்லிகைஈ செம்பகம்,சம்பந்தி, மனோரஞ்சிதம் போன்றவை இவை பொதுவாக அம்பிகைக்கு சமர்ப்பிப்பதாக இருக்கின்றது. சூhயனால் கவரப்படுவதை சூரிகாந்தப்பூகள் என்றும் சந்திரனால் கவரப்பட்டவை சந்திரகாந்தப்பூகள் என்றும் கூறுகின்றனர். முற்காலத்தில் பூக்கள் மலர்நுது வரும்  வாசனையைக் கொண்டு நேரங்களைக்  நேரத்தை  கணிக்கப்பீடு செய்ததாகக் கூறப்படுகின்றது. நேரத்தைப் பொறுத்து அதன் மருத்துவகுணங்களும் மாறுகின்றதாக கூறுகின்றனர். பூகள் விரியும் சத்தம் காதுகளின் கேட்கும் அளவை விட அதிகமாம். என்றும் கூறுகின்றனர். மனத்தை ஈத்திழுத்தெடுக்கும் பன்பு மலர்களின் இயல்பான தன்மையாகும்.
    கீதையில் கிரு~;ண பரமாத்மா பூகளில் நான் தாமரை என்றும் சுவாமி விபுலானந்தர் உள்ளத்தை தாமரைக்கு ஒப்பிட்டு “உள்ளக்கமலமடி உத்தமனார் வேண்டுவது” என்றும். “பூவிணுக்கருங்கலம் பொங்குதாரைஎன்றும் சுவாமி குமரகுருபரர் சகலகலாவல்லி மாலையில் “வெண்தாமரைக்கன்றி நின்பதம் தாங்க என் வெள்ளை உள்ள தாடாமரைக்கு” என்றும் உள்ளத்துக் கொப்பாக குறிப்பிட்டதன் பயன் நல்ல உள்ளத்தை அது கொடுக்கும் என்பதால் தான். வெள்ளை உள்ளம் இருந்தாலே போதும் ஆன்மாவை உணர. “மனமது செம்மையானால் மந்திரம் தேவை இல்லை” மனத்தை ஸ்திரப்படுத்தவே மந்திரம். எனவே வெண்தாமரையின் சிறப்பை இதன் மூலம் உணரமுடியும்.
குப்பைமேனி


\
2. மேனி எனக்குறிப்பிட்ட குப்பைமேனியின் மருத்துவப் பண்புகள்  
    மேனி என்னும் குப்பைமேனி இத் தாவரம் பற்றி தேரையர் தனது பதாத்தகுண சிந்தாமணியில்
“தந்த மூலப்பிணி தீ தந்திடுமபுண் சர்வவி~
முந்து குன்மம் வாத முதிர மூலந்தினவு
சூலம் சுவாசம் தொடர் பிளிசங் கபம் போம்
ஞாலஸ் கொள் மேனி யதனால்” என்றார்.
 தாவரவியல் பெயர்: “அக்காலிகாஇன்டிகா”
இச்செடியில் உள்ளசிறப்பு என்வென்றால் சூரிய வெளிச்சம் எல்லா இலைகளிலும் படும் அமைப்புக் கொண்டது அச் செடி இலைகளின் அமைப்பு கோபுரம் போலும் கிழ்; இலைகள் இரண்;டுக் கிடையில் மேல் இலை அமையும். அத்துடன் மரம் வளச்சியடையும் போது கீழ் இலைகள் நீண்டு கொள்ளும் தன்மையுடையது. ஒரு இலையின் நிழல் மற்ற இலையில் படாது. இதனால் சூரிய சக்தியை எல்லா இலைகளும் பெறுகின்றன. உடலின் பிரதான மூன்று மண்டலங்களுக்கு சிறந்த நிவாரணியாக அமைகின்றது. அவையாவன  சுவாச மண்டலம், சர்ம மண்டலம், ஐPரண மண்டலம் என்பனவாகும். உடல் குப்பையாகப் போனால் அதை சரி செய்து மேனியாக்கும் தன்மை இந்த மூகிலிகைக்கு உண்டு. இம் முகிலி உலகம் மெல்லாம் பலவிக் கிடக்கிறது.
         
 குணமாகும் நோயிகள்: 
 “தந்த மூலப்பிணி தீ தந்திடுமபுண”: தந்த வேரில் ஏற்படும் நோய்கள் குணமாகும்;, தீக்கொப்பளம், நிறமிகளை உருவாக்குகின்ற ஆற்றல் குப்பைமேனிக்கு உண்டு. 
“சர்வவி~” :  சர்வ வி~;மும் ஒவ்வாமையினால் ஏற்படும் வி~;ம்  போக்குகின்ற தன்மை இம் முகிலிக்கு உண்டு. 
“முந்து குன்மம்”:  உணவு சமிபாடு செய்யும் முறையில் உண்டான உந்து குன்மம் குணமாகும். 
“வாத முதிர மூலந்தினவு”:  மலத்துடன் இரத்தம் போதம் அல்லது ஆசன வாயில் ஏற்படும் உதிர மூலம்  என்னும் இரத்த மூலம் குணமாகும். உடல் முழுவதும் ஏற்படும் அரிப்பு அல்லது ஒவ்வாமை என்னும் தினவு நோய் குணமாகும். 
“சூலம சுவாசம் தொடர் பிளிசங”:  நோய் குணமாகும். ஆஸ்துமா என்னும் சுவாசநோய்  குணமாகும். தலைபரம் போல் தோன்றும் தலிவலியால் ஏற்படும் பினிசம் எனப்படும்  இன் நோயியும் குணமாகும். 
“கபம் போம்”:  தொன்டையில் நீண்ட நாட்கள் சளிகட்டியிருப்பதனபல் உண்டாகும்  கபம் என்னும் நோய்யும் குணமாகும். இந்த ஒரு முகிலிகையால் பதினொரு வகையான நோய்கள் குணமாகும் என தேரயர் குறிப்பிடுகின்றார். இதை அறிவியலும் பல ஆய்வுகளைச் செய்து ஒப்பு கொண்டுள்ளது. 
இக் கட்டுரையின் தொடர் பகுதி இரண்டில் வெளியீடு செய்யப்படும்

Tuesday, September 13, 2011

சிவபூமி இலங்காபுரியில் கிழக்குமாகாணத்தில் காரைதீவில் சமாதியடைந்து வைரவிழாக்கானும் சித்தானைக்குட்டி

சிவபூமி இலங்காபுரியில் கிழக்குமாகாணத்தில் காரைதீவில் சமாதியடைந்து வைரவிழாக்கானும் சித்தானைக்குட்டி
     பாதக்கண்டத்தின் தென் பகுதியைச் சேர்ந்த இராமேஸ்வரத்தை அண்டிய இராமநாதபுரத்தின் “பெருநாளி” என்னும் இராசதானியின் சிற்றரசரின் மகன் தான்  சித்தானைக்குட்டி சுவாமி தந்தையின் ஆட்சிக்காலத்தில் அவ்வூரில் ஏற்பட்ட கொள்ளை நோயினால் பாதிப்பிட்டு வீட்டுக்கு வீடு மறனஓலம் கேட்டுக் கொண்டுடிருந்த வேளை இரு மகான்கள்  வந்து உணவு கேட்டுண்ட வீடுகளில் கௌ;ளை நோயி ஏற்படாததை அறிந்து அவரிடம் கவரப்பட்டு சென்றவரே சித்தானைக்குட்டி சாமியார். அந்த மகானே பிற்காலத்தில் பெரியானைக் குட்டிச் சாமியரும் நவநாத சித்தரும் அவர். இராமநாதபுரம் பலசிறப்புக்கள் கொண்ட பிரதேசம் மாணிக்கவாசகர் இறை அனுபூதி பெற்ற திருப்பெருந்துறை அமைந்துள்ளதுடன் சங்கப்புலவர்களான நல்லந்தையார், நன்முல்லையார், ஒக்கூர்மாசாத்தியார் பொன்றோர் அவதரித்ததுடன் தாயுமானவர் சமாதியடைந்த முகவை என்னுமிடமும் மணவாள மாமுனிவர் வளர்ந்த சிற்கற்கடாரமும் இராமநாதபுரத்தில்  உள்ளது. அங்கு கோவிந்சாமியாகப் பிறந்து பூவாச்சிரமத்தை பூர்த்தி செய்துள்ளார்;.
        சித்தானைக் குட்டியான சுவாமிகளும் அரச இராஜபோக வழ்க்கையைத் திறந்து இருவருடன் தானுமொருவராக மூவரும் இணைந்தனர். மூவரு இலங்காபுரியை அடைய எண்ணி செட்டியார் ஒருவரிடம் கப்பலுக்கு பயண அனுமதிச் சீட்டுக்கள் வாங்கி வரச் சொல்ல இரண்டு  பயண அனுமதிச் சீட்டுக்கள் தான் கிடைத்தது. அதில் முத்தவர்களான பெரியானைக்குட்டியும், நவநாதசித்தரும் ஆகிய இருவரும் பயணம் செய்து வர அவர்களை வரவேற்க அதிமானவர்கள் நின்றனர். அவர்களில் ஒருவராக சித்தானைக்குட்டியும் நிற்கக்கண்டு மூவரும் மீண்;டும் இணைந்து கொண்டனர்.
  பெரியானைக்குட்டி சுவாமியும், சித்தானைக்குட்டி சுவாமியும் விட்டு நவநாதசித்தர் புறப்பட்டு விட்டார். குருவும் சீடருமாக பெரியானைக்குட்டியும், சித்தானைக்குட்டியும் கெழும்பில் இருந்தனர். அவர்களின் வாழ்க்கை திருவோட்டுடன் களிந்து கொண்டு இருக்கையில் நாதரின் கட்டளை வந்தது பேராதனைக்கு வருமாறு இருவரும் புகையிரத மூலம் பேராதனையை அடைந்ததும் அங்கு காத்து நின்றார். நவநாதசித்தர். இருவரையும் கண்டதுடன் தன் கைத்தடியால் முதலில் தன்தலையிலும் பின் பெரியானைக்குட்டி சுவாமியின் தலையிலும் அதன் பின் சித்தானைக்குட்டி சுவாமியின் தலையிலும் தட்டி சமாதி அடையும் முறையை கூறி அவர் நாவலப்பிட்டிக்கு செல்ல. மீண்டும் இருவரும் கொழுப்பை அடைந்தனர். அதன் பின் கொழும்பில் முகத்துவார பிள்ளையார் கோயிலை அடைந்து சாதனை செய்யும் போது சித்தானைக்குட்டி சுவாமியை பெரியானைக்குட்டி சுவாமி சிலாபத்திலுள்ள முன்னேஸ்வரம் சென்று சாதனை செய்யப்பணிக்க குருவின் பணிப்பினை சிரம்மேல் ஏற்று அங்கு சென்று சாதனை செய்கையில் குருவின் சமாதி கைகூட N;ஜாதிபிழம்பாய் கண்டு மீண்டும் கொழும்பில் முகத்துவாரம் அடைந்து சமாதிக் கோயிலில் தன் கடமைகள் செய்து இருக்கையில் குருவின் கட்டளை கனவில் வந்தது நவநாதர் சமாதியை அடைந்து சாதனை செய்யுமாறு. குருவின் பணிப்பினை சிரம்மேல் ஏற்று குயீன்ஸ்பரி சென்று போது சுவாமியின் வருகைக்காக காத்து நின்றாள் கங்காணி அம்மா கண்டதும் ஆனந்ந கண்ணீர் சொரிந்து சமாதியின் பொறுப்பை ஒப்படைத்தாள். பின்னர் அங்கிருந்து சாதனை செய்யும் போது அது முருகன் கோயிலாக இருந்ததால் அங்கிருந்து கதிர்காம யாத்திரை செல்வதில் சுவாமிகள் ஆர்வமாக இருந்தார். திருவிழா ஆரம்பமானதும் யாத்திரை செல்வது வழக்கம். 
   சுவாமி கதிர்காம யாத்திரையின் போது திசமகரகம வழியாகச் செல்வது வழக்கம் அங்கு முத்துக்கந்தையா என்பவர் பொது வேலை அபிவிருத்தி திணைக்களத்தில் முகாந்தரராக வேலை செய்தவர். அவருடைய மனையாள் கற்பு நிறைந்த இறையடியாள் சேதம்மாள். சிவனடியாரைக் கண்டால் கால் அலம்பி விருந்தோம்பும் பண்புடையவள். கணவனுக்கு பிடிக்காது இவர் தினமும் மதுமாமிசம் புசிப்பவர்.  சிவனடியாரைக் கண்டால் முற்றத்திலேயே வைத்து  ஏதாவது கொடுத்து அனுப்பிவிடுவார். முத்துக்கந்தையர்  வீட்டில் இல்லாத போது  இறையடியார்கனைக் கண்டால் உபசரித்தே அனுப்புவாள். ஒரு சமயம் யாத்திரை செய்து வந்த சுவாமிகளை கண்ட சேதம்மாள் அவரின் மீது ஆன்மீகத்தாகம் எடுத்து அவரையும் உபசரிக்கலானால் அதை அறிந்த முத்துக்கந்தையா அவர்கள் ஒரு நாள் சேதம்மாள்ளை தாக்கி சித்திரவதை செய்தார். அடுத்த நாள் காலையில் சுவாமி வர வீட்டு வேலைக்காரன் ஓடி வந்து நடந்ததை கூற சுவாமி  இரவு முழுவதும் எனது உடம் பெல்லாம் வலி மிளகும் வேர்க்கொம்பும்  தா நான் போய்விடுகின்றேன். என்று கூறி விட்டு. கதிர்காமம் சென்று பின் அம்பாந்தோட்டையை அடைந்து கப்பலில் ஏறி மட்டக்களப்பையடைந்து கார்த்திகேசு அத்தியட்சகர் வீட்டில் தங்கினார்.
      அடுத்து முத்துக்கந்தையா வேலைக்குச் சென்ற போது அவரது எந்திரி காரணமில்லாமல்  கோபப்பட்டு வார்த்தையால் தாக்கப்பட்டு  வேலையை இழந்து பல்வேறு கஸ்டங்களை அனுபவித்து பின்னர் தான் உணர்ந்தார் சுவாமியின் அருமையை மனையாளை அழைத்து விடையம் விளம்பி சுவாமியை அழைத்து வர கட்டளை இட்டார். எப்போது சுவாமியை காண்போம் என இருந்த உள்ளம் அழைத்து வர கப்பலில் ஏறி மட்டில்லா மட்டக்களப்பை அடைந்து  சுவாமியை தரிசித்து அவரிடம் வேண்ட சுவாமி தான் ஒன்றும் செய்ய வில்லை. கதிர்காமம் சென்று கந்தனை வேண்டுமாறு கூறி கப்பல் ஏற்றி அனுப்பிவிட்டார். வீட்டுக்கு வந்த சேதம்மா நடந்தவற்றை கனவனுடன் பகிந்து கொண்டாள். அதன் பின் கஸ்டங்கள் மேலும் அதிகரிக்க தாங்கமுடியாத சேதம்மா தன் கனவரை விட்டு பிரிந்து சுவாமியே தஞ்ச மென சரண்புகுந்தாள். அதன் பின் காரைதீவில் உள்ள தனது காணியை சுவாமியின் பேரில் எழுதி வைத்தாள். அக்காணிக்குள் ஒரு சிறிய வீடும் புளிய மரமொன்றும் இருந்தது. அதில் சுவாமியை வசிக்க விட்டு சுவாமிக்கு தானிருந்து தொண்டு செய்தாள். இதை ஊர்ராரும் தன் கனவரும்  பலவாறு கூறினாலும் “பணிசெய்து கிடப்பதே தன் பணி” என்ற அடிப்படையில் கற்புநிறைந்தவளாக கருமமே கண்ணாக இருதாள். சுவாமிக்கு தனது குருவான பெரியானைகுட்டி சுவாமியின் குருவாக்கு 

  “புளிய மரத்து வீட்டுக்காரி ,கள்ளன் பெண்பிள்ளையை எடுப்பாய்,
   வம்பு வரும், வழக்குவரும், கெட்டுகீரை விற்று, பறங்கித்துரை    கோணாமலை,
   “எ” னாவைப் பார்க்கிடலும் “பெ” னாவாய் இருப்பாய்” என்றருளினார். “எ” என்னைப்பாக்கிலும் “பெ” பெரியாளாய் இருப்பாய் என்பதாகும். சுவாமியின் வாழ்கையில் குருவின் வாக்கு தீர்க்க தரிசனமாக அமைந்தது என்பது. அவரது வாழ்க்கை வரலாற்றை ஆராயும் போது தின்ணமாகின்றது. 
   சுவாமியின் சில உபதேசங்கள்: 
“உன்னிடத்திலுள்ளதை இலையென்னாமல் மற்றவர்களுக்குக் கொடு”
“எங்கும் அலையாதே இருந்தபடி இரு”
“கோபத்தை விடு முருகன் அருள் தானே வரும்”
“அதிகாலை நித்திரை விட்டெழு
எப்போதும் ஆண்டவனை நினை
காலை மாலைக் கடன்களைக் குறைவாகச்செய்
தேனீர் காப்பியைத் தூரத்தள்ளு,
மரக்கறி உணவு மனதிற்கு மகிழ்ச்சி,
பசி வந்தோர் முகம் பார்,
உண்ணு முன்பு ஒருகணம் இறைவனை நினை, 
கடமையில் தவறினால் கடவுளைக் கானமாட்டாய்
“நெற்றிக் கழகு விபூதி  தரித்தல்”
“உறங்க முன் இறைவனை நினை”
“நக்கிக் கண்ட நாயும் கொத்திக் கொண்ட கோழியும் விட்டு நீங்கா”
“உன்னையும் அறியாய் என்னையும் நம்பாய்”
“தூஷீத்தவன் துன்பத்தைக் கொண்டு போவான் பூசித்தவன் புண்ணியத்தை கொண்டு போவான்”
சித்தானைக்குட்டி சுவாமியின் சமாதி
      சுவாமிகள் வந்தடைந்த பூமி முத்தழிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர், சுவாமி நடராஜானந்தா ஆகியோரை ஈன்ரெடுத்து இவ் உலக்கு தந்த ஊர். அங்கு சுவாமி ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பத்தொராம் ஆண்டு, ஆவணி மாதம், பத்தாம் திகதி, வெள்ளிக் கிழகை மகா சமாதியானார். இதனை ஆண்டு தோறும் ஆடி மாத சுவாதி நட்சத்திர திதியில் குரு பூஜை செய்கின்றனர்.
சுவாமியின் சித்து விழையாட்டுக்கள்:
தாம்பர விக்கிரகம் பிரதிட்டை செய்தல்
 சுவாமிக்கு சித்தானக்குட்டி எனப் பெயர் வந்தது அவர் செய்த சித்துக்களாலும் அவரின் தோற்றம் கட்டையான சதைப்பிடிப்பான உருன்டை உருவமாக சிறிய யானையை ஒத்தாக இருந்தமையினால் தான் மக்களால் அன்பாக சித்தானைக் குட்டி என அழைக்கபட்டார். சுவாமியின் சித்து விளையாட்டுகள் எண்ணிலடங்காதவை சொல்லியும் விளங்காதவை. அவரையும் விளங்கியவர்கள் ஒரு சிலரே. செத்தவள் மீண்டாள், அசைவம் உணவு சைவமாகியது, மதிமயங்கும் மது சர்பத்தாகியது. காறீய துப்பல் கண்ணுக்கு மருந்தானது, மலம் சந்தனமானது, கதிர்காமத்திரை தீப்பற்றியதை கல்முனையில் அனைக்க கதிர்காமத்திலும் அனைக்கும் காட்சி இது போன்று பல சித்துக்கள் செய்தவர் சுவாமி. அவர் சமாதியடைந்த போது அதிசயம். தன் சமாதி பெற்றக் குறிபிட்ட போது தனது வயிற்றிலிருந்து உதிரம் வெளி வரும் போது தான் சமாதி கைகூடும் மென்று குறிப்பிட்டிருந்தார். சுவாமி பத்மாசனத்தில் அமந்து மூன்று நாட்கள் சென்று விட்டது இருந்தும் அங்க அசைவின்றி மூச்சிப்பேச்சி இன்றி இருக்க வைத்தியர்கள் பரிசோதித்து உயிரற்ற உடல் என்று தீமானித்தும். உடலில் எவ்வித மாற்றமும் இன்றி இருந்தது உடல். மூன்றாம் நாள் உந்தியில் உதிரம் பெருகியது. வைத்தியமே திகைத்தது. இப்படியானவர் சுவாமி. இந்த நிகழ்வை எனது தந்தையின் தந்தை அமரர். நொ.க.ஏரம்பமூர்த்தி அவர்கள் தானும் அன்றை தினம் அங்கு நின்ற போது நிகழ்ததாக கூற கேள்விப்பட்டுள்ளேன்.











 இராஜ்குமார்சுவாமியுடன் அடியேன்



யாகத்தில் அடியேன்
     சுவாமியின் அறுபதாவது ஆண்டு குரு பூஜையில் அவருக்கு தாம்பரவிக்கிரக பிரதிட்டையும் மகாசித்தர்களின் யாகமும் நடைபெற்றது. இதற்கு பரததேச தமிழ் நாடு பிரம்ம ரிஷி மலை தவத்திரு அன்னச்சித்தர் இராஜ்குமார் குருஐp அவர்கள் வந்திருந்தார்;. அவர்களுடன் நானும் சென்று அக்கைங்கரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு கிடைத்தது. ஒன்று குருஐpக்கும் எனக்கும் இருக்கும் ஆத்மீகக் தொடர்பு. அடுத்தது நான் சித்தர்களின் வழியை பின்பற்றி வாழ்க்கைப் பயணத்தை தெடங்கியுள்ளவன். இத்தனைக்கும் மேல் எனது மூதாதையருக்கும் சுவாமிக்கும் இருந்த பரம்பரைக் கடத்தல். மட்டக்களப்பிலே சுவாமி நடமாடும் பகுதிகளில் ஒன்று கோட்டை முனைப் பகுதி . அங்கு தவத்திரு. பாலானந்த சுவாமி, விநாயகமூர்த்தி சுவாமி போன் றோர் வாழ்தனர். அவர்களில் தவத்திரு. பாலானந்த சுவாமியும் (எனது அம்மாவின் அம்மாவிற்க்கு தாய் மாமன்.) மைத்துனர் அமரர் .ஏரம்பர். கனகசபை அவர்களும் சேர்ந்து தமது தாயதி வளவில் வருடாவருடம்  வேள்வி செய்வது வழக்கம். இதில் தவத்திரு. பாலானந்த சுவாமி, தவத்திரு. ஆனைக்குட்டிக் சுவாமி,  பெருமதிப்புக்குரிய விநாயகமூர்த்தி சுவாமி, யாழ்பாணத்திலிருந்து தவத்திரு.  அருளம்பலச் சுவாமி, தவத்திரு. குழந்தைவேல் சுவாமி, போன்றோர் அக்; கையிங்கரியத்தில் ஈடுபட்தாக எனது மூதாதையர் கூறியதை நான் கேள்வி ப்பட்டுள்ளேன். அந்த வளவில் தற்போது புதிய பயனியர் தனியார் மருத்துவ மனை அமைந்துள்ளது. அம்மனை  அமரர் வேதாரணியம் அவர்களின் மருமகன் திரு டாக்டர். அமரசிங்கத்துக்கு சொந்தமானது. அதில் திரு. கனகசபை என்பவர் எனது தந்தையின் தந்தையின் தந்தையாவார். இவருக்கு பாலானந்த சுவாமி; மைத்துனர் ஆவார்.
 இராஜ்குமார்சுவாமியுடன் அடியேன்
     தவத்திரு. பாலானந்த சுவாமி தனது வாழ்க்கையை இறை பணிக்கே அர்ப்பணித்து பிம்மச்சாரியத்தைக் கடைப்பிடித்த சுவாமி. அவர் மந்திர தந்திரங்களில் கைதேர்ந்தவர். எப்போது கையில் வெள்னைப் பிரம்புடன் தான் இருப்பவர். அப் பிரம்பால் தட்டினால் போதும் விபரீதம் வந்து விடும் அப்படி சக்தி வாய்ந்தது அப்பிரம்பு தந்திரீய வழிபாட்டில் தலை சிறந்தவர். மாரியம்மான் தான் அவரின் வாலை மட்டக்களப்பு கோட்டைமுனை புன்னையம்பதி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் மணியகாராக இருந்தவர். அவர் பிம்மச்சாரியாகவிருந்து சன்னியாசம் பூண்டவர். சித்த வைத்தியத்திலும் சிறந்தவர். ஏந்த நேரமும் இறை சிந்தனையும் இறைபணியும் தான் அவர் சிந்தை. ஒருமுறை அவரை வாதுக்கு இழுத்தனர் சிலராம் அப்போது  மாரியம்மன் கோயிலில் இருந்த வேம்பு மரத்தை நிலத்தில் தலை குனிந்து நிமிர வைத்துச் சாதனை படைக்க வந்தவர்கள் அவர் திறமையை வியர்ந்து மன்னிப்பு கோரி வணங்கிச் சென்றதாக எனது தாயார் சொல்லக் கேள்விப் பட்டிருக்கினறேன். இம்மரம் இப்போதும் இருக்கின்றது. அவர் வீட்டில் வைத்து வழிபட்ட வைரவர் எனது தாயதிவளவில் இப்போதும் இருக்கின்றது. அவர் வைத்து வழிபட்ட வாள் என்னிடம் தான் இருந்தது காலத்தின் விளைவால் தவறிவிட்டது. வாள் ஞானத்தின் அடையாளம். அதில் ஒரு துளியாகிலும் கிடைத்ததால் தானோ அது தவறியது என்று என்னி திருப்தி அடைகின்றேன். எல்லாம் அவன் செயல். அவரின் சமாதி ஸ்ரீ மாமங்கப் பிள்ளையார் ஆலயத்துக்கு பக்கத்தில் வைத்ததாக எனது மூதாதையார் கூறக் கேள்விப்பட்டிருக் கின்றேன். தற்போது அதற்கான தடையங்கள் எதுவும் தென்பட வில்லை. 
            ஆனைக்குட்டிக் சுவாமியார் மட்டக்களப்பு கேட்டைமுனைப் பகுதியில் நடமாடும் போது பல சித்துகள் செய்ததாக எனது மூதாதையினர் சொல்லக். கேள்விப்பட்டிருக்கிறேன். வேதாரணியம் ஆச்சாரியார் இடம் சென்று அடிக்கடி தங்கத்தை அள்ளி எடுத்துக் கொண்டு செல்வாரம். அப்போதெல்லாம் ஆச்சாரியார் எதுவும் பேசமாடாட்டாரம் சிறிது நேரத்தின் பின் “உன்னுடைய தங்கம் எனக்கெதற்கு” என்று கூறி மீண்டும் எறிந்து விட்டுக் செல்வாரம் பின்னர் செல்வம் கொழிக்குமாம். பிற்காலத்தில் மட்டக்களப்பில் பிரபல தனவானாக வாழ்ந்தவர் அவர். அவர் எனது தந்தையின் மாமா. இது போன்று சராயக்கடைக் சென்று சாராயம் கேட்பாரம் கொடுக்காவிட்டால் சாராயம் பீப்பாவில் ஒன்றும் இருக்காதாம். பின்னர் சுவாமியை தேடிப் போய் மன்னிப்பு கேட்டால் வந்து பீப்பாவில் ஏறி இருந்து விட்டுச் சென்றதும் பீப்பா நிறைந்து இருக்குமாம். பெண்களை கண்டால்  தனது உடையை கழற்றி வைத்து விட்டு துரத்திக் செல்லாராம். பின்னர் சிரித்து பைத்தியம் போல் இருப்பாராம். பெண்கள் இவரைக் கண்டால் ஓடி மறைந்து விடுவார்களாம். அடியேன் அறிய பொன்னம்பலம் என்னும் ஒருவர் நடக்க முடியாது நிலத்தில் அரைத்து சென்ற ஒருவரைக் கண்டுள்ளேன்.; அவர் தங்கத்தை எடுக்க சுவாமிக்கு காலால் அடித்தவராம் அதற்கு சுவாமி “உனக்கு நீலக்குண்டு போட்டிருக்கின்றேன்” என்று கூறிச் சென்றதன் பின் நிகழ்ந்ததாக கேள்வி ப்பாட்டுள்ளேன். எனது வீட்டில் அன்னமலையைச் சேர்ந்த தெய்வநாயகம் என்றோருவர் இருந்தார் அவருப் முகத்தில் நிறைய வடுக்கள் இருந்தது இதை இல்லாமல் செய்ய பலமுறை அலைந்து அவர்பின்னாலேயே திரிவது வழக்கம் ஒருநாள் அவரது சிறுநீரை கழித்து கையில் கொடுத்து முகத்தில் பூசச்சொன்னாராம். அவர் அருவருப்பு பாராது முகத்தில் பூச சந்தனமணத்துடன் கூடிய நறுமணமாக இருந்ததுடன் முதத்தில் இருந்த வடு மாறியதாக அடியேன் சிறுவயதாக இருந்த போது அவர் கூறக் கேள்விப் பட்டுள்ளேன்.  எனது தந்தையின் பெரியப்பா அமரர் நொ. க. இரத்தினசபாபதி அவர்களுக்கு குழந்தை நீண்டகாலம் இல்லாமல் இருக்க உனக்கு ஒன்று என கைசைகை மூலம் காட்டினாராம் அதன் பின் அவருக்கு ஆண் குழந்தையாக சித்தப்பா கிடைத்ததராம். இவ்வாறு சுவாமிக்கும் எனது மூதாதையருக்கும் இடையில்  ஆன்மீகத் தொடர்பு இருந்திருக்கின்றது.  
     அருளம்பலச் சுவாமி பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் மட்டக்களப்பில் கவனரின் செயளாலராக கடமையாற்றி காலத்தில் நொத்தாரிசியராக இருந்த கனகசபை உடன் நெருங்கிய நண்பராக இருந்திருக்கின்றார். பின்னர் “பாரததேசத்தில் நீதிபதியாக கடமையாற்றி சித்தம் தெளிந்து பற்றறுத்து ஈழம் அடைந்து வடக்கில் கடைத்தெருவில் சுவாமியான கடையில் சுவாமியின் சீடராக சித்தம் தெளிந்து பற்றறுத்து சுவாமியானவர்” இவருக்கும்  அமரர்.  ஏரம்பர். கனகசபைக்கும் தொடர்ந்து ஆன்மீகத் தொடர்பு இருந்திருக்கின்றது. அடியேன் அறிய எனது தந்தையின் தந்தை அமரர். நொ.கனகசபை ஏரம்பமூhத்;தி  ஒய்வு பெற்ற அதிபர் அவர்கள் காலம் வரை யாழ்பாண துறவிகளின் தொடர்புகள் இருந்ததை நான் அறிவேன். அவர்கள் மூலம் வீட்டில் அவர் கொண்டு வரும் இலிங்கத்துக்கு அபிசே~க பூஜை செய்ததை அறிவேன். நல்லையா நெத்தாசியார் இவர் ஒரு ஆன்மீகக் கவிஞர் இவர் நொ.க. ஏரம்பமூர்தியின் தமக்கையின் கனவன் இவர் அருளம்பலசுவாமிகள் பாமாலை, ஏர்ரூர் வடபத்திரகாளி பாமாலை போன்று பல பாடியுள்ளார். 
         இவருக்கு தீராத வீயாதி ஒன்று ஏற்பட வடபத்திரகாளி பாமாலையை இயற்றிப் பாடிய போது அங்கு அசரீதி கேட்டது “இரவு பன்னிரண்டு மணிக்கு பாடுமாறு” பாடிய போது ஆலயக்கதவுகள் திறந்து அம்பிகை ஆடியதாகக் கூறக் கேள்விப்பட்டுள்ளேன். இன்னு மோர் முறை நோப்பு சோறு கட்டி அம்பிகையின் பரிபலங்களுக்கு வருடாந்த உற்ச்வத்தின் இறுதியில் அதை எறிந்து திருக்கதவு மூடுவது வழக்கமாகும். மூடினால் அங்கு யாரும செல்வது வழக்கமில்லை. . ஒரு முறை பத்மாவதி என்னும் எனது உறவினப் பெண் சிறு பிள்ளையாக இருந்த போது திருக்கதவு மூடிய பின் அங்கு சென்றதாகவும் அத்தருனம் தூர்தேவதைகள் அவளை அழைத்செல்கையில் கதறி அழுகையில் அம்பிபை தோன்றி பூவரசுமரத்தடிகை கையில் கொடுத்து கத்ததாக கொள்விப்பட்டிருக்கின்றேன். இத்தடி மருந்தாக உபையோக்க்கப்பட்டதை அடியேனும் அறிவேண். ஏரூர் கண்மணி தாசன் என்று அழைக்கப்படும் வி~;வப்பிரம்ம ஸ்ரீ சீ.வை. காந்தன் குருக்களுக்கு  நாவிலே திரிசூலத்தால் காளிகாம்பிகை கீறியதால் தான் அன்று சாஸ்திரஞானம் அவருக்கு உதித்ததாக அடியேனும் அறிவேண். இன்றும் இவ்வாலயம் பிரதித்தி பொற்ற விளங்குகின்றது . தாந்திரீக முறையைப் பின்பற்றி பட்டறையில் அடையல் வைத்தே அம்பிகைக்கு வருடம் ஒருமுறை சடங்கு நடை பெறுகின்றது. வேள்ளிக் கிழமைகளில் மட்டும் பூஜை நடை பெறுகின்றது. சித்தானக் குட்டி சுவாமியும் காளிகாம்பாவை உபாசித்தாக அற்கின்றோம். சித்தார்களின் வாழிபாடுகளில் ஆதிசத்தி வழிபாடு மிகமுக்கியமானது. ஆட்டமாசித்தை பெற்று உலகையாள மாமேரு ஸ்ரீயந்திர வழிபாடு செய்கின்றனர். சத்தி வழிபாட்டின் மூலம் மும்மலக் கட்டை அறுத்து மனத்தை வென்று புத்தி விழித்து சித்தம் தெளிவித்து சிவனை கான முடியும்.
      நானும் அறிவு தெரிந்த வயதிலிருந்து வீதி ஓரங்களில் கிடக்கும் கல்லை கடவுளாக வழிபட ஆரம்பித்தவன். இன்று கல்லை வடிமாக்கி வழிபட்டு எம்மைக் கடந்தும் எம்முள்ளுறைந் திருக்கும் கடவுளை காண விளைகின்றேன். இதனால் தானோ எனக்கும் மகா சித்தர்கள் யாகத்தில் தமிழ் நாடு பிரம்ம ரிஷி மலை தவத்திரு அன்னச்சித்தர் இராஜ்குமார் குருஜீ   அவர்களுடன் இருந்து யாகம் செய்யும் வாய்ப்பு கிடைத்ததோ என எண்ணத் தோன்று கின்றது. 
“அவன் அருளாலே அவன் தாழ் வணங்கி” “தவமுடையாக்கே தவம்”