Wednesday, March 1, 2017

பிரகாசத்தை ஏற்படுத்தும் பிரகாச காயத்திரி

'பிரகாசத்தை ஏற்படுத்தும் பிரகாச காயத்திரி'
             காயத்திரி என்பது காயமாகிய உடலை திரியாக்கி உலகுக்கு ஒளி கொடுத்து ஒளி வழியாக உடலை வழிப்படுத்தி ஆத்ம ஒளியில் உடல் பிரகாசித்து பரமாத்த ஒளியில் அக்கியப்படுவது என்பது பொருள். அக இருளை போக்குபவர் குரு இறைவன் குருவாக வந்தவர் குமரன் அவன் குரு பரனுக்கு அவனே குமரகுருபரன் என்கின்றார் திருமூலர் திருமந்திரத்தில் அகஇருள் உண்மையை மறைத்து பொய்யானதை உண்மையாக்கி உண்மையை மறைக்கும் சக்தி அது.

இதனை திருமூலர் திருமந்திரத்தில்
'
தேவனுஞ் சுத்த குருவும் உபாயத்துள்
யாவையும் மூன்றா யுனக்கண் டுரையாலே
மூவாப் பசுபாச மாற்றியே முத்திப்பால்
யாவையும் நல்குங் குருபரன் அன்புற்றே' என்றார்.
                   தேவனாகிய சிவனும் இயல்பாக பாசங்களில் இருந்து நீங்கிய ஆருயிரும் ஒருவரே அதை வெல்வதென்பது முயல்கொம்பை ஒத்தது. அதை வெல்ல குருவருள் தேவை. குருவை தேடுவது என்பதும். சரியான குரு கிடைப்பது என்பதும். விதிப்பனே. 'தாரமும் குருவும் தலை விதிப்படியே' என்பது முதுமொழி குருவருள் திருவருளே. திருவாகிய சிவன் தனது நெற்றிக்கண் ஆகிய ஆக்ஞா சக்கரத்திலிருந்து ஆறு தீப்பொறிகள் ஆக்கி சரவண பொய்கையாகிய ஆஞ்ஞான குழத்தில் மெய்ஞான பொறியாகிய தீப்பொறிகள் ஆறும் சேறாகிய மலத்தில் இருந்து நீக்கம் பெற்ற சேற்றின் மேல் உள்ள தாமரையின் பூவில் சூரியனைகிய பரம்பொருளை கண்டு மலரும் தாமரையன் மீது விழுந்து ஆறு குழந்தையாகி அக் குழந்தைளை காத்திகை பெண்களான ஆறு அறிவாகிய காத்திகை பெண்கள் வளர்த்து வந்தனர். அதை பிபஞ்ச சக்தி அதைக் கண்டு ஆனந்த மடைந்து சிவ சக்தியாக வந்து அதை எடுத்து ஒன்றாக்கி கந்தனேன பெயர் புனைந்து. குமரனானர். தந்தைக்கு உபதேசித்து குமரன் குரு பரனுக்காகி குமரகுருபரன் ஆனார். அவரே உலகுக்கு ஆன்ம ஈடேற்றத்துக்கு குருவானார்
2005 புரட்டாதி மாதம் 14ம் திகதி புதன் கிழமை அதிகாலை 5.30 மணியளவில் அழகி தேவதை பொன்று அம்பிகை தோன்றி எனது காதுக்கருகில் வந்து பிரகாச காயத்திரியை எனக்கு  உபதேசித்தாள். விளித்தெழுந்வுடன் இந்த அடியேன் கண்ட காட்சியை தெலைபேசி மூலம் இலங்கையில் நுவரெலியாவில் இருந்த காயத்திரி சித்தர் முருகேசு சுவாமிகளிடம் கூறினேன். அப்போது சுவாமி உதயமான காயத்திரியை கூறுமாறு கூறினார்.  அதைக் கூற அப்பா ஆதிசத்தியால் உபதேசிக்கப்பட்டுள்ளது. காலம் வரும் போது உன்னால் உபதேசிக்கப்படும் என்றார்.
அக் காயத்திரியை உபதேசிக்கும் காலம் இது போலத்தான் இருக்கும் போலும். தற்போது பிரபஞ்ச அழிவுக்கு காரணமான மனித மனம் அழிந்து கொண்டு இருப்பதை உணரக் கூடியதாக இருக்கின்றது. இந்த சமயத்தில் இம்மந்திரம் மனதை திடப்படுத்தி புத்தியை விளிப்படையச் செய்யும் என்பதை அடியேனின் உள்ளுணர்வு உணத்துகின்றது. இதனால் இம் மந்திரத்தை  உலக நன்மை கருதி. எனது குருநாதரின் வேண்டுதலுடன் உபதேசிக்கின்றேன்.
இது பழவினை அதை அவனே அறுக்க வேண்டும். அவன் அருள் பெற வழி ஒன்று உண்டு. அதை அடியேனை நாடியதால் அவன் அருனால் உபதேசிக்கின்றேன். அது பிரகாசகாயத்ரி மந்திரம். இது அடியேனுக்கு தென் இந்திய தலயாத்திரையின் பின்னர் ஆதிசக்தியால் உபதேசிக்கப்பட்டது. இம் மந்திரத்தை மனதாலே பாராயணம் செய்ய வேண்டும். இரகசியமானது. ஓரு பூரணையை அடிப்படையாகக் கொண்டு அதிகாலையில் பிரம்ம முகூர்த்ததில் ஆரம்பிக்க வேண்டும். தொடர்சியாக 48 நாட்கள் உச்சாடணம் செய்ய வேண்டும். உச்சாடணம் செய்யும் போது செம்பாலா செப்பில் நீரேடுத்து அதில் வில்லதளம் 9 இட்டு 108 முறை உச்சாடணம் செய்து பிற்பகல் மாலையில் அருந்தக் கொடு வர வியாதி குணமடையத் தொடங்கும். தற்போது பின் பற்றி வந்த சிகிச்கை அனைத்தும் தொடர வேண்டும்.

மூலமந்திரம்
ஓம் 
கைலாசவாசாய 
கங்காதாராய 
மகேஸ்வராய 
அம்பிகைநாதாய 
சர்வேஸ்வராய 
சர்வ லோக பிரகாசாய நம: சிவய

பிரகாச சக்தி காயத்திரி

'ஓம் சிவசக்திப்பிரகாசாய சுதாய வித்மஹே
ஷண்முக: பிரகாசாய தீமஹி
தந்நோ சர்வலோகப் பிரகாச ரட்சக ப்ரசோதயாத்'
பொருள்
பரப்பிம்மான சிவனும் பிரபஞ்ச சக்தியானஆதிசக்தியும் இணைந்து ஏற்படும் பிரகாசமான ஆறுமுகங்களில் ஏற்படும் பிரகாசத்தால் உலகத்தை ஆளும் சக்தி அச் சக்தி நம்முள் உள்ள ஆத்ம சக்தியை வெளிக் கொண்டுவந்து எம்மை வளிப்படுத்துவதாகட்டும். என்று பிராத்திக வேண்டும்.எம்முள் உள்ள சக்தி விளிப்படையும் இடங்கள் ஆறு அவை ஆறாதாரங்கள் அவை விளிப்படைந்து ஒளி பெற்று எம்மை வழிபடுத்தும் சக்தி வாய்ந்தது இம்மந்திரம்.
திருமூலர் திருமந்திரத்தில் சிவகுருவே குமரகுருபரன் என்றும் அவனே பரம்பொருள் என்றும் இதனை இயம்பியுள்ளர்.
'ஆறு முகத்தில் அதிபதி நானென்றுங்
கூறு சமயக் குருபரன் நானென்றுந்
தேறினர் தெற்குத் திருஅம்ப லத்துளே
வேறின்றி யண்ணல் விளங்கிநின் றானன்றே' என்றார்.
பிரகாச காயத்திரியும் அதனையே பிரதிபலிப்பதாக அமைகின்றது. மந்திரங்கள் இறைவனால் உருவாக்கப்பட்டவையே அவை என்றோ உருவானவை அவை பிரபஞ்கத்தில் கலந்துள்ளவை காலத்துக்கேற்ப நியமிக்கப்பட்டவர்களால் உலகுக்கு  அவர்அவா சக்திக்கேற்ப்ப பெற்றுக் கொடுக்கப்படுகின்றதே தவிர அவை மனிதரால் உருவாக்கப்பட்டவை அல்ல என்பதே உண்மை. இதற்கு கீதாசாரம் சான்று  'எதை நீ கொண்டு வந்தாய்? அதை இழப்பதற்கு  எதை எடுத்துக் கொண்டாயோ, அது இங்கிருந்து எடுக்ப்பட்டது. எதைக்கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது. என்பதே உண்மை
'சிவசக்திப்பிரகாசாய சுதாய வித்மஹே' இதனையே இந்த மந்திரம் குறிப்பிடுகின்றது. ஆறுமுகங்களாக அவன் அவதரித்தான். அவன் ஆறாதார ஒளியில் ஆன்மாவாக பிரகாசிக்கின்றான். அதனாலாலேயே 'ஷண்முக: பிரகாசாய தீமஹி'  என மந்திரம் இயம்புகின்றது.  இப்பிரகாசம் பிரபஞ்கத்தை பிகாசிக்கச் செய்து தீயதை எரித்து உலகுக்கு பிரகாசம் கொடுக்கும் சக்தியாக மாறி பிரபஞ்சத்தை காக்கின்றது. அப்படிப்பட்ட சக்தி எம்முள் உள்ளதை எடுத்து உள்ளதை உணத்தி பிரகாசித்து காக்கும் இதனையே 'தந்நோ சர்வலோகப் பிரகாச ரட்சக ப்ரசோதயாத்' நம்முள் உள்ளது 'நான்' என்பதை எடுத்தால் ஆத்மா தெரியும் அதற்கு ஆறாதாரம் ஒளி பெறவேண்டும்.
ஆறுமுகம் ஆனவன் முழுமுதலிவன் ஐந்து முகமான ஈசானம், தற்புருடம், அகோரம், வாமம், சத்தியோசாதம், என்பவற்றுடன் அதோமுகமான ஆறாவது முகத்துடன் ஆறுமுகானது. அதில்  சத்தியோசாதம் மேற்கு நோக்கிய முகம் இது படைத்தலையும் தற்புருடம் கிழக்கு நோக்கிய முகம் காத்தலையும்  அகோரம் தெற்கு நோக்கிய முகம் துடைத்தலையும் வாமம் வடக்கு நோக்கிய முகம் மறைத்தலையும் ஈசானம் மேல் நோக்கிய முகம் அருளலையும் கீழ் நோக்கிய முகமான அதேமுகம் சிவகுரு ஆறாவது முகமாக அமைந்தது. இதவை எம்முள் ஆறாதாரமாக அமையப்பெற்றவையே இவை இவ்வுருவை 'குமரகுருபரன்' என்று இருவகை வழக்கிலும் பெருக வழங்குவதனாலும் உணர்க. ஐந்து முகமாவன் சதாசிவன் எனவும் ஆறுமுகமானவன் குமரகுருபரன் எனவும் அழைக்கப்பட்டான். குமரன் குரு பரனுக்கு இதை உணர்தால் ஆறாதார மூத்தியான குமரனை ஆறாதாரம் ஒளிபெற தியானித்தால் இளமையாக குமரனாக பிறவாவரம் பெற்று இருக்கலாம் என்பதே உண்மை. இம் மந்திரமும் அதை தரவல்லது.
சிவபெருமானும் திருமுருகப்பெருமானும் பெயரில் வேறுபாடயினும் பொருளில் ஒன்று அதாவது ஆற்றுநீரும் குளத்துநீரும் போன்றது. இவை இரண்டும் வேறென்றாலும் இவை இரண்டும் நீர்தான். என்பதை உணர்க. சிவகுரு ஞாணத்தை தருபவன். முருகன் தெவயானையையும் குறவல்லியையும் மணந்தாக சரித்திரம். அதாவது அவர் தேவகளில் வளர்ந்தவாகளையும்  ஐம்புல வேடருள் வளந்தவரையும் ஆட்கொள்வதையே கருகின்றது. இதனை அப்பர் சுவாமிகள்
'முன்னை பார்மயில் ஊர்தி முருகவேள்
தன்னை யாரெனில் தானேர் தலைமகன்
என்னை யாளும் இறைவன் எம்பிரான்
பின்னை யாரவர் பேரெயி லாளரே' என்றார்.  திருமுருகனின் ஆற்றலை சிலர் இரண்டு அவை தொழிலாற்றல் விழைவாற்றல் என்பதில்லை. திருவருளாற்றலின் நிலை பலவாக அமைந்தாலும் பொருள் ஒன்றே சிவப்பரம்பொருளின் திருவருள் ஆற்றலே மனைவி மக்களாக உருவகப்படுத்தப்பட்டது. இங்கு 'செப்பும் சிவனார் திருவருளே மக்கள் மனை ஒப்பார்  அவர்க்கவையின் றோர்' என்பதன் மூலம் அறிக. திருமுருகனின் வேல் அறிவு ஆழமாகவும் அகலமாகவும் கூர்மையாகவும் இருக்கவேண்டும் என்பதையும். மாயையில் மயங்கி ஆணவத்தில் ஆடாதே அறிவு மயங்கி அறியாமையில் மூழ்காது அதை அடக்கி அதன்மேல் இருந்து ஞானமான சேவலின் உயர் குணமான அதிகாலையில் சூரிய உதயத்தின் முன் எழுந்து ஞான காரியத்தில் ஈடுபடு என்பதை செவல் கொடி காட்டி நிற்கின்றது. இறைவனின் ஞான வடிவே குமரகுருபரன். குமரனும் குருபரனும் ஒன்றே அன்றி வேறிலை என்பதே உண்மை.
இந்த மந்திரம் சக்தி வாய்ந்தது. வசதியானவர்கள் முடியுமானால் திருவற்றியூர் தியாகராஜ சன்நிதிக்குச் சென்று ஆதிபுரிஸ்வரர் அனுமதி பெற்று சுவாமி குமரகுருபரன் சமாதியில் சமர்பணம் செய்து ஆரம்பிக்கவும்.
'நம்பினால் கெடுவதில்லை நான்மறை தீர்ப்பு'
சர்வ மங்களங்களும் உண்டாகுவதாக.

No comments:

Post a Comment