Thursday, March 2, 2017

சைவசித்தாந்தம் கூறும் நாற்பாதங்கள்


சைவசித்தாந்தம் கூறும் நாற்பாதங்கள்

சைவசித்தாந்தாந்தம் மனிதனின் வாழ்வியலை கருத்தில் கொண்டே லவ்வீக வாழ்க்கைக்கு ஏற்றதான வகையில் இறையியலான துறவை எடுத்து இயம்புகின்றது. வாழ்கையை நான்கு படி முறையாக்கி அதில் கடமைகளை ஏற்படுத்தி அதனுடாக இறைவனை அடைய வழி செய்துள்ளது. அதாவது வாழ்கை படியாக பிரமமச்சாரியம், கிரகஸ்தம், வானப்பிரசித்தம், சன்னியாசம் என நான்காக்கி அதில் பிரமமச்;சாரியத்தில் குருவை அண்டி ஆச்சிரமவாசம் செய்து பிரமமச்;சாரியம் கடைப்பிடித்து வேதங்களையும் வாழ்க்கைக்கு தேவையான அறவியலையும் நாட்டை ஆழ்வதற்கான  நீதியான ஆட்சி  முறையினையும். நாட்டைக்காக்க நீதியான போர் முறைகளையும் யுத்த தருமத்தையும் கற்றுக்கொண்டு. குருவின் ஆசியுடன் பிரம்மச்சாரிய நிலையை முழுமையாக அடைந்து கிரகஸ்த ஆச்சிரமத்தை நாடுகின்றான். அதில் பெற்ரோரின் விருப்பத்திற்கேற்ப விகாகம் செய்து. கற்றுக்கொண்ட இல்லற தர்மம் காத்து பஞ்சஜங்ஞம் செய்து குழந்தைப் பேறு பெற்று உலகுக்கு உத்தமரை வழங்கி வானப்பிரதஸ்த நிலை அடைந்து. அதில் கனவனும் மனைவியுமாக துறவிகளுக்கு பணி செய்து சன்னியாசம் பெற்று சன்னியாச தர்மம் காத்து பிறவாமையை அடைய வழி காட்டியுள்ளது. பஞ்சஜஞ்ஞம் என்பது ஐந்து ஜஞ்ஞம் ஆகும். அவை பிதிர் ஜஞ்ஞம் இது பிதிர்களான எம்மை விட்டுப்பிரிந்த முதாதையருக்கு செய்ய வேண்டிய பிதிர் கடமைகளை தவறாது மாளைய காலத்தில் செய்ய வேண்டும். இதை செய்யாதுவிட்டால் காரியத்தடை ஏற்படும.; அடுத்து தேவ ஜஞ்ஞம் இது வேதங்களை கற்றுணர்தல். அதாவது பிறவி எடுத்ததின் நோக்கத்தை அடைய பற்றற்று செயலில் ஈடுபடல். அடுத்து மானிட ஜஞ்ஞம் இது மானிடருக்கு செய்ய வேண்டியவற்றை செய்வதாகும்.
அடுத்து வழிபாட்டு முறைகளான சரியை, கிரியை, யோகம், ஞானம் என நான்கு உண்டு. அவற்றிலும் சரியையில் சரியை, சரியையில் கிரியை, சரியையில் யோகம், சரியையில் ஞானம், என்று ஒவ்வொன்றிலும் நான்காக பதினாறு படிமுறைகள் உண்டு. சரியை என்பது இறைவனை தொண்டு செய்வதன் மூலம் வழிபடுதலாகும். ஆலயத்தை கட்டுதல் கட்டு;வித்தல் புணருத்தாரனம் செய்தல் ஆலயத்தை கழுவிச் சுத்தம் செய்தல் பூமாலை கட்டுதல் போன்ற பணிகளைச் செய்தல். அதாவது உடலால் பணிசெய்து கிடத்தல் அப்பர் உளவாரத் திருப்பணி செய்து முத்தியடைந்தார். சரியை வழிபாட்டை திருமூலர் திருமந்திரத்தில்
'உயிர்க்குயி ராய்நிற்றல் ஒண்ஞான பூசை
உயிர்க் கொளி நோக்கல் மகாயோக பூசை
உயிர்ப்பெறு மாவா கனம்புறப் பூசை
செயிற்கடை நேசஞ் சிவபூசை யாமே' என்றார். எல்லா உயிர்களிடத்தும் இறைவன் உள்ளிருந்து உணாத்;துவதை அவன் அருளால் அறிதல். அறிவு வழிபாடாகும். இதனை மணிக்கவாசகர் திருவாசகத்தில் சிவபுராணத்தில் 'அவன்; அருளால் அவன் தாள் வணங்கி .............' என இயம்பியுள்ளார். 'அவனை அறியும் அறிவு அவனாய் எமக்களித்த அரிய தவப்பயனே'. அவன் உள்ளோளி பெருக்கும் அறிவு பெற்றால் அது செறிவு வழிபாடாகும். உள்நின்று உணர்த்தியதை விம்பத்தில் ஆவாகணம் செய்து தாபனம், சந்நிதானம், அவகுண்டல முதலிய தொண்டினை திருமுறை வழியாகச் செய்யின் அது நோம்பு வழிபாடான புறப்பூஜை ஆகும். பூஜை முடிவில் அவரை மீண்டும் அகத்தே செலுத்துதல் நுழைத்தலாகும். எனவே வழிபாடு அறிவுவழிபாடு, செறிவு வழிபாடு, நோன்பு வழிபாடாக மூன்று வகைப்படுகின்றது. இதனை முறையே ஞான பூஜை, யோக பூஜை, கிரியா பூஜை என்றும் அழைப்பர். அகவழிபாடு தன்னுள்ளே நோக்குதல் பூஜையின் ஆரம்பத்தில் விக்கின விநாயகருக்கு பூஜை நடை பெறுகின்றது. அதில் புத்தியை விளிப்படையச் செய்து  காரியம் தடையின்றி நடை பெற புத்தி  மனத்தை அலையாது ஒருநிலையில் இருக்க வேண்டுகின்றோம். இதுவே விநாயகர் பூஜை அதில் ஆசமனம், ப்ராணாயாம, ஸங்கல்ப:, ஆஸன பூஜா, கண்டா பூஜா, விக்னேச்வர பூஜா, ஸங்கல்ப:, கலச பூஜா, சயங்க பூஜா, ஆத்ம பூஜா, பீட பூஜா, குருத்யானம், ப்ராணப்ரதிஷ்டா,
சீலநெறி நிற்போர் திருத்தொண்டு செய்து உய்ய இறைவன் வெளிப்பட்டருளிய திருநாடு, திருநகரம், திருக்கோயில் என்பவற்றை நாடி ஆலயமும் தானும் ஒன்றென  தலைவன்பால் நாடி அலைந்து அகப்புறமாக வழிபடுவர். அங்கு பாடுதலும் பணிதலுமாக வழிபடுவர். அங்கனம் செய்வோர் உள்ளத்தில் இறைவன் குடியிருப்பான். இதனை திருமந்திரம்
'நாடும் நகரமும் நற்றிருக் கோயிலுந்
தேடித் திரிந்து சிவபொரு மான்என்று
பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின்
கூடிய நெஞ்சத்துக் கோயிலாக் கொள்வானே' என்றார். இறைவன் எழுந்தருளி இருக்கும் கோயில்களில் திருத்தொண்டு செய்து அல்லும் பகலும் பணி செய்து கிடைப்பதே தன் பணி என்று கிடப்போரின் அகத்தில் இறைவன் நிரந்தரமாக குடிகொள்வான். சரியை வழிபாடாகக் கொள்ளப்படுகின்றது.
சீலநெறி நின்று பத்தனாகி நோன்பு நெறி சென்றோர் தொண்டனாகி நியமாதி எண்ணுறுப்பும் கைக் கொண்டோர் சிவயோக முற்று சிவயோகியாகி சித்தனானார். இம் முடிவே சைவசித்தாந்த அத்தன் முடிவாகும். இவர்கள் திருநீறு அணிந்த சிவமணி தரித்த திருவைந்தெழுத்துக் கணித்த திருக்கோலமுற்றோராவர். எண்வகை உறுப்புக்களானவை அடக்கம், நடத்தை, இருக்கை, வளிநிலை, தொகைநிலை, பொறைநிலை, நினைவு, சமாதி இதனை இயமம், நியமம், ஆதனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, சமாதி என்பர் இதில் சமாதி என்பது சிவநிறைவு எனப்படும். சரியை வழிபாட்டில் இப்படிமுறை அவசியமாகும். இதனை திருமந்திரம்
'பத்தர் சரிதை படுவோர் கிரியையோர்
அத்hகு தொண்டர் அருள்வேடத் தாகுவோர்
சுத்த வியமாதி சாதகர் தூயோகர்
சித்தர் சிவஞானஞ் சென்றெய்து வோர்களே' என்றார். பத்தனாக இருப்போர் சரியை தொண்டினைக் கைக்கொண்டவர்கள் என்றும் பாடும் பணியே பணியாய்க் கொண்டவர்கள் கிரியை வழியில் நிற்போர். இதில் வேதமோதுபவர்களும் அடங்குவர் நால்வேதம்மும் பாடலாக் தான் இருக்கின்றது. அவை இருக்கு, யசூர், சாம, அதர்வண வேதங்களாகும் அதில் சாம வேதம் இசையால் இறைவனை ஆராதனை செய்வதாக அமைந்துள்ளது. வேதம் ஓதுவோரை தொண்டர்கள் என அழைக்கின்றார். சித்தர்கள் தூயோர் எனப்படுவர். அவர்கள் தன்னுள்லே கடவுளை கண்டு கடவுளானவர்கள். திருவடியுணர்வு பெற்றோர் சிவஞானியாகி சிவனிறைவில் கலந்து சிவனாய் இருப்பர். எட்டு வகையான தவத்தினை மேற்கொண்டோர் சிவனுருப் பெற்று திகழ்வர். நோம்பினரான கிரியையாளர் சிவன் அணுக்கிரகத்தைப் பெறுவர். சீலரான சரிகையாளர் சிவ உலகில் இருப்பர். இதனை திருமந்திரம்
'சார்ந்தமெயஞ் ஞானத்தோர் தானவ னாயினோர்
சேர்ந்தவெண் யோகத்தார் சித்தர் சமாதியோர்
ஆய்ந்த கிரியையோர் அருச்சனை தப்பாதோர்
நேர்ந்த சரியையோர் நீள்நிலத் தோரே' என்றார். தானவராவோர் சிவனாய் இருப்போர். சாயுச்சிய முத்தியையும் இரண்டறக்கலத்தல் நெருப்பில் சூடு போல, கணியில் சுவை போல கலந்திருப்பர் இரண்டையும் பிரிக்க முடியாது இவர்கள் ஞானநிலையில் இருப்போர். பிரித்தும் பலன் இல்லை. போகத்தை மேற்கொண்டு சித்தர் சமாதியுற்றோர் சாரூபமுத்தி பெற்றோர். இவர்கள் சிவன் ரூபத்தை பெற்றவராவர். இவர்கள் யோகநிலையை அடைந்தவர்கள். அருச்சனை தப்பாதோர் கிரிiயாளர் இவர்கள் சாமீப முத்தியை பெறுவர். கிரியை வழியில் நிற்பேர். அவர்கள் இறைவனுக்கு அருகாமையில் இருக்கும் நிலையை அடைவர். சரியை வழிபாட்டில் ஈடுபடுவோர் சாலோக முத்தியைப் பெறுவேர். அவர்கள் இறைவனுடைய உலகில் வாழ்வர். இவர்களே நீள்நிலத்தோராவர். சாயுச்சியம் என்பது இறைவனாக இருத்தல் சாரூபம் என்பது இறைவனது ரூபத்தை பெறுதல். சாமீபம் என்பது இறைவனுக்கு சமீபத்தில் இருத்தல். சாலோகம் என்பது இறைவனது லோகத்தில் இருத்தல்.
சரியை வழிபாடான ஆலயத்தை தூமைப்படுத்துதல், பூமாலை கட்டுதல், அருச்சினைக்கு தேவையான மலர்கள் பத்திரங்களைப்பறித்து கொடுத்தல், ஆலயத்தில் பூசைக்கான பாத்திரங்ககள் சோடசார பொருட்களையும் சுத்தம் செய்து கொடுத்தல். பூசையின் போது உதவுதல் போன்றவையாகும். இச் சேவைகளை செய்யும் போது அவை எல்லாம் இறைவனை நோக்கிய எண்ணத்தில் நிகழ்வதனால் அதிலும் சரியையில் சரியை, சரியையில் கிரியை, சரியையில் யோகம், சரியையில் ஞானம் என்று அவர் அவர் கறுமவினை பயனின் அடிபடையில் பலன்களைப் பெறுவர். இது போன்று கிரியை வழிபாட்டை நோக்கும் போது அவை ஆலயங்களில் நடை பெறும் நித்திய நைமத்திய பூஜைகளை குறிக்கும். அதாவது எம்முள் மானசீகமாக செய்ய வேண்டிய வழிபாட்டை செய்கை மூலம் மக்களுக்கு உணர்த்துவதற்காகவே இக் கைங்கரியம் ஆலயங்களில் பிராமணர்களால் மேற் கொள்ளப்படுகின்றது. பிராமணியம் என்பது ஓதல் ஓதுவித்தல், ஈதல் ஈவித்தல், வேட்டல் வேட்டுவித்தல் ஆகிய கடமையை நெறிதவறாது செய்பவர். பிராமணியம் பின்பற்றாவிட்டால் பிராமண வம்சத்தில் பிறந்திருந்தாலும் பிராமணரல்லர் என வேதம் இயம்புகின்றது.
வேதத்தில் பிம்மத்தின் முகத்திலிருந்து தோன்றியவர் பிராமணர் என்றும் புயங்களிலிருந்து தோன்றியவர் சத்திரியர் என்றும் தொடையில் இருந்து தோன்றியவர் வைசியர் என்றும். பாதங்களிலிருந்து தோன்றியவர் சூத்திரர் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனாலும் அவர் அவர்களுக்கென விதிக்கப்பட்ட கடமைகளை செய்யாது பிறப்பால் தமது கோத்திரத்தை உரிமை கோரமுடியாது. பிராமணர் சூத்திரராகலாம் சூத்திரன் பிராமணராகலாம். பிரம்மத்தை எவர் ஒருவர் நாடுகின்றாரோ அவரே பிராமணர்.  ஸ்ரீ வீரபிரமேந்திரர் தனது காலஞானத்தில் பிராமணர்கள் சூத்தரருக்கு பணி செய்துகிடப்பர் என்றும் பணத்துக்காக வேதமந்திரங்களை பிரயோகித்து விற்பர் என்றும் கூறியுள்ளார். அத்துடன் கலப்பு விவாகங்கள் செய்து தமது குலபெருமையை இழிவு படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார். காலஞானம் தொடர்பாக எழுத்பட்ட கட்டுரையில் விரிவாக எழுத்யுள்ளேன். பிரமம் என்பது பரிபூரணமானது. அதிலிருந்து அதில் எதுவாக இருந்தாலும் பரிபூரணமே வேதத்தை ஓதி சமூகத்தை ஒழுக்க நெறியில் வழிப்படுத்த அறிவும் ஞானமும் பெற்றவர்கள் தருமத்தை உபதேசிப்பவர்கள். பிரம்மத்தை நடியவர் அவர் தலையில் இருந்து தோன்றியவர்கள். நாட்டைக்காக்க பலம் வேண்டும் அவர்கள் சத்திரியர் அவர்கள் சத்திரிய தருமம் காப்பவர்கள். வாழ்க்கைக்கு தேவையான பொருளாதாரத்தை ஏற்படுத்திக் கொடுப்பவர்கள் வைசீகர் அவர்கள் வைசீக தருமம் காப்பவர்கள் இவர்கள் தொடையிலிருந்து தோன்றியவர்கள். ஏனைய எல்லா சேவைளையும் செய்வதற்காக சூத்திரர்கள். இவர்கள் காலில் இருந்து தோன்றியவர். கால் இல்லாது நடக்க முடியாது. தலை, புயங்கள், தொடைகள் இல்லாது உடல் இயங்கமுடியாது. எல்லாமே அவசியமானது. ஒருவரில் ஒருவர் குறைந்தவர் இல்லை எல்லோரும் ஒருவர் ஒருவர் துணையானவர்களே தனித்து இயங்குவது சாத்தியமற்றது.
பூஜை முறைகளைப் பொறுத்தவரை கிரியை யோக நெறியை பின்பற்று வோர் உருவபூஜையான புறபூசை செய்வோர். ஞான நெறியைப் பின்பற்றுவோர் அருவபூஜையான அகபூசை செய்வோர். இதனை திருமந்திரம்
'கிரியை யோகங்கள் கிளர்ஞான பூசை
அரிய சிவனுரு அமரும் அரூபந்
தெரியும் பருவத்துத் தேர்ந்திடும் பூசை
உரியன நேயத் துயர்பூசை யாமே' என்றார். நோம்பு, அறிவு, செறிவு என தோந்;தெடுத்து செய்யும் பூசை சிவபூசை ஆகும். இது  சிவன் பால் உயர்வுற உயந்த பூசை ஆகும். அதில் நேம்பினரான கிரியையாளரும் அறிவுடைய ஞானவழி நிற்போரும். செய்யும் பூசை திருவுரு பற்றுக்கோட்டுடன் செய்யும் விக்கிரக ஆராதனை ஆகும். இது சாதாரம் எனப்படும். செறிவினர் பற்றுக்கோடின்றி அகவழிபாடாகிய அறிவுருவில் வழிபடுவர். இதனை நிராதாரம் என்பர். இறைவனை வெளியில் தேடி அலைவதை விடுத்து தன்னுள் தேடுவர். அதாவது சரியை வழி நிற்போர் இறைவனை தன்னலமற்ற தொண்டில் அறிவர். கிரியை வழி நிற்போர் உருவ வழிபாடு செய்வர். யோக நெறி நிப்போர் அருவுருவ வழிபாடு செய்வர். அதாவது இலிங்க வழிபாடான சதாசிவ வழிபாடு செய்வர். ஞான வழி நிற்போர் அருவ வழிபாடு செய்வோர். கிரியை, யோக நெறிநிற்போர் உருவவழிபாடு செய்வோர். ஞானநெறி நிற்போர் அருவவழிபாடு செய்வோர்.
சீலம், நோம்பு, செறிவு, அறிவு ஆகியவற்றின் தனித்தனி முடிவாக் கொள்ளப்படும் ஞானம் நான்கும் வேதநெறி ஆறும் அகபுறச்சமயங்களாகும். சிவ உலகில் நந்தி எம்பெருமான் சிவகுருவாய் தோன்றி அறியாமையால் உளலும் மாந்தரை மெய்யுணர்வு பெறச்செய்து முழு முதல்வனை வணங்கச் செய்வார்.  இதனை திருமந்திரம்
'சரியாதி நான்குந் தருஞான நான்கும்
விரிவான வேதாந்த சித்தாந்த மாறும்
பொருளா னதுநந்தி பென்னகர் போந்து
மருளாகு மாந்தர் வணங்கவைத் தானே' என்றார் திருமூலர். சரியாதி நான்கும் சீலம், நோம்பு, செறிவு, அறிவு. தருஞானம் நான்கும் சரியையில் ஞானம், கிரியையில் ஞானம், யோகத்தில் ஞானம், ஞானத்தில் ஞானம் வேதாந்தம் ஆறும் காபிலம், காணாதம், பாதாஞ்சலம், அட்சபாதம், வியாசம், ஜைமீனியம் என்பனவாகும். சித்தாந்தம் ஆறும் பைரவம், வாமனம், காளாமுகம், மாவிரதம், பாசுபதம், சைவம் என்பனவாகும். சரியை வழி நிற்போர் சிவசிந்தை உற்று நன்நெறி நிற்போர்
சென்நெறி நிற்போர் சிவதீக்கை பெற வேண்டும். அவை மூன்று வகையாகும். சமயதீக்கை, விசேடதீக்கை, நிருவாண தீக்மையாகும். தீக்கை என்பது தூய்மைப்படுதலாகும். சிவபரம் பொருளின் அக்கியத்தை தூய்மைவழியாகப் பெறுதலாகும். விசேடதீக்கை என்பது திருவைந்தெழுத்தை இடையறாது கணித்து அகபுற தூய்மையை அடைதலாகும். நிர்வாண தீக்கை என்பது ஆறு வழியாகிய மந்திரம், பதம், வன்னம், தத்துவம், புவனம், கலை என்பனவற்றை தூய்மைப்படுத்துதல். திருமந்திரம் இது பற்றிக் குறிப்பிடுகையில்
'சமையம் மலசுத்தித் தன்செயல் அகற்றிடும்
அமையும் விசேடமும் அரன்மந் திரசுத்தி
சமைய நிருவாணங் கலாசுத்தி யாகும்
அமைமன்னு ஞானமார்க் கம்அபி டேகமே' என்றார் திருமூலர். நிருவாணதீட்சையின் போது மந்திரம், பதம், வன்னம், தத்துவம், புவனம், கலை என்பவற்றை பயன்கருதி செய்யாது சிவனடிமை கருதி செய்தலே சிறந்தது. அது தொண்டு. பயன் கருதிச் செய்தால் அது தொழில்.
கிரியை வழிபாடாகிய திருக்கோயிலில் இறைவனை ஆவாகணம், தாபணம் செய்து வழிபடுதலாகும். இறைவன் பத்து திசைகளிலும் உள்ளான் இறைவன் அவன் இல்லாத திசைகள் இல்லை. இறைவனை கான அகத்தே கொல்லாமை, ஐந்தடக்கல், கொள்பெறுமையோடிரக்கம், நல்லறிவு, மெய்தவம், அன்பு ஆகிய அகத்துவத்தையும் புறத்துவமான நறுமலர் கொண்டு திருமுறை ஓதி அச்சித்து வழிபாடு செய்தல் வேண்டும். அகத்துவமும் புறத்துவமும் செய்து சதா அவன் நினைவறாது இருத்தல் வேண்டும். இதனை திருமந்திரம்
'பத்துத் திசையும் பரமொரு தெய்வமுண்
டெத்திக் கிவரில்லை என்பத்தின் அமலர்க்கு
ஒத்துத் திருவடி நிழல் சரணெனத்
தத்தும் வினைக்கடல் காராது கொணுமே' என்றார் திருமூலர். அருச்சிப்பாக்கு ஏறுவினையாகிய ஆகாமியம் சேராது. பூசையின் போது இறை நாமங்கள் அர்சனையாகச் செய்யப்படும் இவர்களுக்கு வினைகளில் ஆகாமியம் சேராது வினை பிராத்தம், சஞ்சிதம், ஆகாமியம் என மூன்று வகைப்படும்.
 மண்ணும் விண்ணும் பரந்து மணம் கமழும் சந்தனமும், நறுமலர் பூவும் இவை இரண்டும் கையில் கொண்டும் கொல்லாமலும் கொன்றதை தின்னாமலும் நாளும் தம்மை அடிமையாக்கி செந்நெறி பாதை செல்வோர்க்கே சத்திநி பாதம் கிட்டும். இங்கு கொல்லாமை வலியுறுத்தப்படுகின்றது. கொல்லாமை உயிகள் மீது அன்பு செய்தல் அதற்கு ஆதாரமாக நாம் இருத்தல்; அதனை பாதுகார்த்தல் போன்ற உயிர்களில் அன்புடமையை வலியுறுத்தல் அது கிரியை வழிபாடாக அமையும். உணவுக்காக மிருகங்களை கொல்லும் போது அந்த மிருகம் தன்னை காப்பாற்ற முயலும் போது அதற்கான சக்தியை வெளிப்படுத்துவதுடன் கொல்லுபவர் மீது வெறுப்பான என்னத்தை வெளிப்படுத்துவதுடன் கோரம் கொள்ளுகின்றது. இந்த உணர்வு அதன் தசைகளில் பதிகின்றது. அத்துடன் அதற்கான சுரப்பும் இறைச்சியில் கலக்கின்றது. இதனால் அதை உண்ணும் மனிதனின் உணர்வில் கலக்கின்றது. இது உலகத்தை அழிக்க ஏதுவான காரணங்களில் ஒன்றாகின்றது. இதனை உளவியல் மருத்துவ விஞ்ஞானம் இன்று கூறுகின்றது. இதனை மூவாயிரம் வருடங்களுக்கு முன்னரே திருமூலர் அருளிவிட்டார். இதனாலேயே கொல்லாமை புலால் உண்ணாமை பற்றி திருமூலர் திருமந்திரத்தில் அன்றே அருளிவிட்டார். உளவியல் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றிவிட்டது. சித்தர்கள் சிந்தனை எப்படிபட்டது. என்பதை மனுக்குலம் அறிந்திருக்க வேண்டியது அவசியமானதும் அவசரமானதுமாகும். இதனை திருமந்திரம்
'கானுமறு கோடி கடிகழ் சந்தனம்
வானுறு மாமல ரிட்டு வணங்கினும்
ஊனினை நீக்கி உண்பவர்க் கல்லது
தேனமர் பூங்கழல் சேரவொண் ணாதே' என்றார் திருமூலர். சரீர அபிமானத்தை விட்டொழிக்க வேண்டும். என்பதை வலியுறுத்துகின்றார். முழு முதல்வன் வேண்டுவோருக்கு வேண்டிய உருவில் காட்சி கொடுக்கும் அருள் வள்ளல் அவன். அவன் தந்தையாகவும் தாயாகவும் இருப்பவன். படைப்பின் போது சக்தியாகி படைப்பை மேற்கொள்ளுகின்றார். சக்தி அதன் தேவைக்கேற்ப பல்வேறு வடிவங்களைப் பெறுகின்றது. பரப்பிம்மம் படைப்பின் நோக்கம் கொண்டு பராப்பரை ஆகி ஆதிசக்தி ஆகின்றது. அதன் பின் இச்சாசக்தி கிரியாசக்தி ஞானசக்தியாகின்றது. இதனை விஞ்ஞானம் அணுக்களினுள் உள்ளது புரோத்திரன் நியுத்திரன் என்றும் அணுக்கருக்கள் மோதும் போது உண்டாகுவது இலத்திரன் என்றும் கருதுகின்றது. இதனை சிவன் சக்தியாக கருகின்றது. இந்துமதம் அவை இரண்டும் சேந்து உருவாக்கியதே கந்தன் சிவனும் சக்தியும் இருக்க நடுவில் கந்தன் இருக்கும் சோமாஸ்கந்த முகுர்த்தமாகும். அதில் சிவசக்தியை நியுத்திரன் புரோத்திரன் ஆகும். இதனை எப்படிப்பிரித்தாலும் இரண்டும் இருக்கும். இதைப்போலவே சிவசக்தியைப் பிரிக்க முடியாது. அதை உணர்துவதே அத்தனாதீஸ்வரர் வடிவம். அதில் சிவன் பாதி சக்தி பாதி இது பிரிக்க முடியாதது என்பதையே உணர்துகின்றது. கிரியை வழிபாட்டில் வழிபடப்படும் உருவங்களாகும். இதனை திருமந்திரம்
'கோனக்கன் றாயே குறைகழல் ஏத்துமின்
ஞானக்கன் றாகிய நடுவே யுழிதரும்
வானக்கன் றாகிய வானவர் கைதொழும்
மானக்கன் றீசன் அருள்ள மாமே' என்றருளினார் திருமூலர். எங்கும் பரந்து கலந்த இறைவன் வேண்டுவோர்க்கு வேண்டிய உருவில் காட்சி தருவார். திருவருள் அம்மையினை போற்றுவோர்க்கு மெய்யுணர்வு நல்குவாள் இதனால் பேரின்பப் பெருவாழ்வு நல்குவாள். இவ்வாறு பணிசெய்வது சிவப்பணியாகும். பரந்த இறைவனை போற்றி பணிசெய்வது. எட்டுத்திசையால் சூழப்படும் உலகு, உடல், பொருள் நிறைந்த மண்டலங்களை ஐந்தொழில் செய்து. அதாவது படைத்தல், காத்தல், அழித்தல். மறைத்தல், அருளல் என்பவற்றை செய்யும் இறைவனை வழிபடுதல் செய்பவர் கிரியையாளர்கள். இது சிவபத்தி திருப்பணியாகும். இதனை திருமந்திரம்
'இதுபணிந் தெண்டிசை மண்டலம் எல்லாம்
அதுபணி செய்கின் றவளொரு கூறன்
இதுபணி மானுடர் செய்பணி யீசன்
பதிபணி செய்வது பத்திமை கணே' என்று அருளினார் திருமூ இதனை திருமந்திரம்
'இதுபணிந் தெண்டிசை மண்டலம் எல்லாம்
அதுபணி செய்கின் றவளொரு கூறன்
இதுபணி மானுடர் செய்பணி யீசன்
பதிபணி செய்வது பத்திமை கணே' என்று அருளினார் திருமூலர். சீலம், நோம்பு இரண்டையும் கடைப்பிடித்தவர்க்கு இயற்கைத் திருவருள் துனை செய்து குற்றம் நீங்கி யோகத்தில் செல்லும். செறிவால் அறிவு பெற்று குருவருளால் சிவமாய் திகழ்வர். இதனை திருமந்திரம்
'பத்தன் கிரியை  சரியை பயில்வுற்றுச்
சுத்த அருளால் துரிசற்ற யோகத்தில்
உய்த்த நெறியுற் றுணர்கின்ற ஞானத்தாற்
சித்தங் குருவரு ளாற்சிவ மாகுமே' என்று அருளினார் திருமூலர். சீலம் நோம்பை கடைப்பிடிக்க குற்றம் அறுந்து செறிவால் அறிவு பெறும். இது புத்தக அறிவல்ல ஞாமாகிய விடுதலை ஆகும். எதிலிருந்து, பிறப்புக்கு காரணமான அவித்தையில் இருந்து. செயலில் இருந்து விடுதலை. அதற்கு ஞானம் அவசியம். ஞானத்துக்கு அடையாளம் வாள். அது அஞ்ஞானத்தை அறுப்பது. சக்தியின் கைகளில் வலது கையில் இருக்கும். காளி, மாரியின், துர்க்கையின் கைகளில் கானலாம். அவள் அஞ்ஞானத்தை அகற்றி மெய்ஞானத்தை வழங்குபவள். அம்பிகைக்கு நடைபெறும் விழாக்களில் பிரதானமானது நவராத்திரி அது ஞானத்தின் பெருவிழா. ஆதிசக்தி மூன்று வடிவம் பெற்று. அஞ்ஞானத்துக்கு காரணமான ஏழு அசுரர்களை வதம் செய்கின்றாள். முதலில் மகாகாளியாக மூன்று நாட்களும் மகாலட்சுமியாக அடுத்த மூன்று நாட்களும் மகாசரஸ்வதியாக மற்றைய மூன்று நாட்களும் போர் செய்து இறுதியான பத்தாவது நாளில் மூவரும் ஒன்றாகி சாமுண்டாவாகி வதம் செய்கின்றாள். இயற்கைத்திருவருள் துணையால் குற்றம் நீங்கி யோகத்தில் செல்லும் இது குருவருளால் சிவமாய் திகழும். சித்தம் சிவமாய் தலைவன் பால் உருகும். 'சித்தம் சிவமாய் திகழும் அத்தன் பால் அத்தனையும் அவன் அருளால்' இதனை திருமந்திரம்
'அன்பின் உருகுவ னாளும் பணிசெய்வன்
செம்பொன்செய் மேனி கமலத் திருவடி
முன்புநின் றாங்கே மொழிவ தெனக்கருள்
என்பினுட் சோதி இலங்ககுகின் றானே' என்றார் திருமூலர்.  சிவன் பால் அன்பு கெண்டு நித்தமும் பணி செய்து கிடப்பான். சிவன் பொன் நிறத் திருமேனியும் செந்தாமரை திருவடியும் கொண்;டவன் அருமறை அருள் உணர்வு பெற்ற அடியார் உணர்வில் உணர்வாய் கலந்து இருப்பான் இறைவன். அவனை பிரிக்க முடியாது.
யோகம் நெறியை பார்க்கும் போது மனதை நிறுத்தி ஒருநிலைப்படுத்தி அவனை அன்றி எவரையும் நாடாது அசையாமல் இருத்தல் யோகமாகும். அதாவது வெளி நாட்டமின்றி அகத்துவம் நோக்கி இருத்தல். இதனை திருமந்திரம்
'நெறிவழி யேசென்று நேர்மையுள் ஒன்றித்
தறியிருந் தாற்போல் தம்மை யிருத்திச்
கொறியினுந் தாக்கினுந் துண்ணென் றுணதாக்
குறியறி வார்க்குக் கூடலு மாமே' என்றார் திருமூலர். குருவருளிய அருமறை வழி ஓழுகி அகத்துவ மாகிய யோகத்தில் பொருந்தி நினைவிழந்து பொருந்தி இருத்தலாகும். புறநிகழ்வுகள் ஏற்பட்டாலும் அது தன்னை அறியாவன்னம் இருத்தல். அதாவது புறநிகழ்வான மழை, காற்று, மின்னல், இடி போன் இயற்கை நிகழ்வுகள் உடலை பாதித்தாலும் அதை அறியா நிலை இருத்தல் வேண்டும். இறைவனை அறிவால் அறிய முடியாது. அவனை  உள்ளுனர்வால் உணரமுடியும். மாலும் அயனும் கானாத அரியன் அவன். அடிமுடி தேடியகதையில் பிரம்மாவும் விஸ்ணுவும் கண்டார்களா இறைவனை இல்லை அறிவு அகந்தையை ஏற்படுத்தி உள்ளுணர்வை மறைத்தது. விளைவு தோல்வியே. இதைத்தான் அறிவால் அகந்தை அழ்த்துவிடும் உள்ளுணர்வை. என்பதை உணர்தல் வேண்டும். இதனை திருமந்திரம்
'ஊழிதோ றூழி உணர்ந்தவர்க் கல்லால்
ஊழிதோ றூழி யுணராவுந் தானொட்டார்
ஆழி அமலம் அரியயன் என்றுளார்
ஊழி முயன்றும் ஒருச்சியு ளானே' என்றார் திருமூவர். அவனை அறிய அவன் அருள் தேவை. அவன் அருட்கண்ணால் உணர்தாலன்றி அறிய முடியாது. அதுவே யோகம். 'அவனடஅருளாலே அவன் தாள் வணங்கி' என்றார் மணிக்கவாசர். பூல் மனம் போல அடியாரி உள்ளத்தில் கலந்துள்ளவன் இறைவன் அவனை வேறாகப் பிரிக்க முடியாது. அவனை அறிய அசையாது அருத்தல் வேண்டும் நட்ட தடி பொன்று. புணுகுப் புனை இமையமலையில் அசையாது இருப்பது போல. இதனை திருமந்திரம்
'பூவனிற் கந்தம் பொருந்தியவாறுபோற்
சீவனுக் கள்ளே சிவமணம் பூத்தது
ஓவியன் போல உணந்தறி வாளர்க்கு
நாவி யணைந்த நடுதறி யாமே'  என்றார் திருமூலர். யோகத்தில் ஆழ்வதனால் மனமொத்து அசையதிருக்கையில் அவன் உணர்வை உணரும். அவன் பூவில் மணம் போல் உணர்வில் கலந்தவன். உயிருக்குயிராய் உள்நின்று உணத்துவர் சிவபெருமான். பிறவிக்கடலில் வீளாது காத்திடுவார். உள்ளம் கவர்ந்தால் இருள் அகன்று நுண்ணுடல் கருவுறாது. இதனை திருமந்திரம்
'உய்தனம் என்பீர் உறுபொருள் காண்கிலீர்
கந்த மலரிற் கலக்கின்ற நந்தியைச்
சிந்தை யுறுவே தெளிந்திருள் நீங்கினால்
முந்தைப் பிறவிக்கு மூலவித் தாமே' என்றார். இவ்வாறு பிறவாமையை கூறுகின்றார். இலக்கண இலக்கியகளின் விhவான அறுபத்திநான்கு கலைகளும் பழித்தற்கிடமான சுட்டுணர்வை தருபவை. செந்நெறி செல்லும் மேன்மையை தருபவை பிராணாயாமம். அதாவது இடப்பால் நாடியாகிய திங்களும் வலப்பால் நாடியாகிய ஞாயிறும் நடு நாடியாகிய சுழுனாவாகிய தீயும் அருளால் அமையும் நிலைகள உணர்வாம். இதனை திருமந்திரம்
'எழுத்தோடு பாடலும் எண்ணெண் கலையும்
பழித்தலைச் பாசப் பிறவியும் நீங்கா
வழித்தலைச் சோமனோ டங்கி யருக்கன்
பழித்தலைச் செய்யும் வகையுணர்ந் தானே' என்றார். குண்டலினி கீழ் காண மேல் காண்பதையே இங்கு வலியுறுத்துகின்றார். இதனாலேயே பிவியறுக்க முடியும். குண்டலினியின் நிலைக்களம் அக்னி மண்டலம் அங்கு இடகலை பின்கலைக்கு நடுவே உள்ள சுழுமுனை ஊடாக ஆக்னா சக்கரத்தில் அதாவது இரு கண்களின் நடு அது முக்கோண வடிவான பகுதி இடக்கண் சந்திரன் வலக்கண் சூரியன் ஆக்னா தீ  அத்தீயில் பிறப்புக்கு காரணமான எண்ணங்களை எரிப்பதன் மூலம் பிறவாமையை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு இருப்போக்கே குருவருள் கைகூடும். அதனையே முத்தி என்று கூறுப்படுகின்றது. முத்தி என்பது மூன்று தீ அதாவது சூரியன், சந்திரன், அக்னி இவை மூன்றின் நடுப்பகுதியே ஆக்னா சக்கரம். அடுக்புக்கும் மூன்று கற்கள் பயன் படுத்துவதன் அர்த்தமும் அது தான். பானையில் சமைக்க மூன்று கற்களைப் பயன்படுத்தி விறகினை இட்டு தீமூட்டி பொருட்களை உண்பதற்கு தயார்படுத்துவது போல, உடலை மீண்டும பிறப்பறுக்க தயார் செய்யதை கருதியே அக்கினியில் பிறப்புக்கு காரணமான செயல்களை அக்னி குண்டத்தில் இட்டு அதில் இருந்து மனசால் நீங்கவேண்டும்.  அக்னி குண்டங்கள் தேவதைகளுக்கேற்ப வேறுபடும். பிள்ளையாருக்கு வட்டம், சிவனுக்கு சதுரம், முருகனுக்கு அறுகோணம், சக்திக்கு யோனி இவ்வாறு அமையப் பெற்றும். சத்தி ஆக்கத்துக்கு காரணம். அது பிரபஞ்சத்தின் ஆகாசன சக்தி அதாலே பிரபஞ்சம் இயங்குகின்றது. ஒவ்வொரு செயலுக்கும் பிரதி விளைவு உண்டு. அவை நல்லதாகவோ தீயதாகவோ அமையலாம். அவை எதுவானாலும் பிறப்புக்கு காரணமாகும். இதனால் செயலை இல்லாதொழிக்க யோனி குண்டத்தில் அக்னி காரியம் செய்யப்படுகின்றது. யோனி மூலமே பிறப்பும் நடைபெறுகின்றது. இதனை திருமந்திரம்
'விரும்பிநின் றேசெய்யில் மெய்த்தவ ராகும்
விரும்பிநின் றேசெய்யின் மெய்யுரை யாகும்
விரும்பிநின் றேசெய்யின் மெய்த்தவ மாகும்
விரும்பிநின் றேசெய்யில் விண்ணவ னாகுமே' என்றார். யோக மார்க்கம் கைக் கொண்டவர். பிறவா உலகான சிவ உலகை அடைவர். இம்மார்க்கத்தை விட்டு விட்டால் அவன் நரகத்தையே அடைவான். அது பாவ மார்க்கமாகும்.அது ஊனிற் சுடும் சரீர துன்பத்தைக் கொடுக்கும். இறைவன் தீ வடிவினன். தீயோக்கு தீயாகவும் தன்னை அடைந்தோற்கு  இதமான சந்திர வெளிச்சமாகவும் இருப்பவன் அவன். அதனாலேயே பாலசந்திரன், சந்திரசேகரன், சசிசேகரன் ஆனதுடன். தேவியின் முடியிலும் பிறை வடிவினனானான். யாகாக்னி ஆகிய சிவாக்னியில் முக்கோண வடிவில் சமித்தை வைத்து தீபாக்னியில் இருந்து தீயை இடுவர். இதில் பாலிலிருந்து தைராக்கி அதை கடைந்து எடுத்த நெய்யாகிய ஞானத்தை கொண்டு அதில் இட்டு உலகப் பொருட்களான இயற்கை பழங்களையும் உருவாக்கிய பச்சணங்களையும் இட்டு எரிப்பர். இதன் மூலம் இயற்கைப் பொருட்களும் அதைக் கொண்டு மனிதனால் ஆக்கப்பட்ட பொருட்களும் அழிந்து அதன் ஆவி பிரபஞ்கத்தில் கலப்பது போல ஆத்மா பரம்பொருளுடன் கலக்க வேண்டும் என்பதை உணர்துவதுடன் உலகிலிருந்து விடுதலை பெறவேண்டும் என்பதையும் உணர்த்துகின்றது. அத்துடன் அக்னியில் இட்ட பொருட்கள் வேகும் போது அது படும்பாடு போல உலகபொருட்களில் ஆசை கொண்டால் ஏற்படும் விளைவுகளையும் அங்கு உணர்த்தப்படுகின்றது. இறுதியில் பொரியுடன் புஸ்பம் சேர்த்து புஸ்பாஞ்சலி செய்யப்படுகின்றது. இதன் மூலம் பொரி மீண்டும் முளைக்காதது அதனுடன் பூப்போன்ற உள்ளத்தை இறைவனுக்கு சமர்பிக்க வேண்டும். என்பதை கிரியை மூலம் காட்டி ஞானத்துக்கு இட்டுச் செல்கின்றது. அhதாவது உலகப் பற்றை வெறுத்து இறை பற்றை ஏற்படுத்த வேண்டும் என்பதை காட்டுவதே இதன் நோக்கம்.  இதனை திருமந்திரம்
'பேணிற் பிறவா உலகருள் செய்திடுங்
காணில் தனது கலவியு ளேநிற்கும்
நாணில் நரக நெறிக்கே வழிசெய்யும்
ஊனில் சுடுமங்கி யுத்தமன் றானே' என்றார். அவன் அவன் வழிச் சென்று ஆட் கொள்வதே அவர் வழி. பொருள் ஆசையுள்ளோக்கு அதுவே அவனுக்கு காலன். அதுபோல பெண் ஆசையுள்ளேனுக்கு பெண்ணே காலன். அது போல மண்னாசை உள்ளோனுக்கு அதுவே காலன். என்ன என்ன ஆசை இருக்கின்றதோ அதுவே அவனுக்கு விரோதியாகி தன்னை வெறுக்கவைத்து தன்வசமாக்குவான் இறைவன். அது அவர்அவர் விணைபயனைப் பொறுத்தது. அதனையே 'விட்டகுறை தொட்டகுறை' என்பர். விணை செய்யும் போது அதன் விளைவை முன்னரே அறியவைப்பதே ஞானம். அதன் மூலம் ஆத்மா கருவுறுவதை தடுத்து திருவுறவைக்கும். இதை அறிய யோகம் கைகூட வேண்டும். ஞானமாக்கத்தார் சிவனையே வழிபடவேண்டும். அப்படி வழிபட்டவர்கள் சித்தர்களும் மகரிஷிகளும் தவர்யோகிகளுமே இவர்கள் சிவப்பேறு பெற்றவர்கள். இதனை திருமந்திரம்
'ஒத்தசெங் கோலார் உலப்பிலி மாந்தர்
எத்தனை யாயிரம் வீழ்ந்தனர் எண்ணிலி
சித்தர்கள் தேவர்கள் மூவர் பெருமையாய்
அத்த னிவனென்றே அன்புறு வார்களே' என்றார் திருமூலர். 'செங்கோல் நழுவா வேந்தர் தன் பணி பணிந்து நழுவா போற்றிடும் சிவனை' என்று போறிப் பணிந்தனர். சித்தரும் தேவரும் மூவரும் வழுவா சிவநெறி கொண்டனர். அவர்கே சிவன் அருள் உண்டு. அவனை அறியார் இழிநாகர் அடைவர் பழநகர் அடையார்.
யோகியர் நெறியில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறை தொடர்பக குறிப்பிடுகையில் அவர்கள் செறிவு நெறியினை பின்பற்றுபவர்கள் இவர்கள் சீலம், நோம்பு என்பவற்றைக் கடந்தவர்கள். சீலத்தை கடைப்பிடிப்பவர்கள் சரியையாளர். நோர்ம்பினை கடைப்பிடிப்பவர்கள் கிரியையாளர்கள். இதனை திருமந்திரரம்
'யோகிக்கு யோகாதி முன்றுள கொண்டுற்றோர்
ஆகத் தகுகிரி யாதி சாயையாந்
தாகத்தை விட்ட சரியையொன் றாம்ஒன்றுள்
ஆதித்தன் பத்தியுள் அன்புவைத் தானே' என்றார். ஆதித்தனாகிய சிவசூரியனிடத்து அன்பு கொண்டாக்கே உய்வு உண்டு. செறிநிலையான யோகியருக்கு சமயம், விசேடம், நிருவாணம், அபிடேகம் என்னும் நான்கு நிலை உண்டு. அவை முறையே சிவநுழைவு, சிவநோன்மை, சிவநுண்மை, சிவநுகர்மை என அழைக்கப்படும்.  இதனை திருமந்திரம்
'யோகச் சமயமே யோகம் பலவுன்னல்
யோக விசேடமே அட்டாங்க யோகமாம்
யோகநிர் வாணமே யுற்ற பரோதயம்
யோக அபிடேக ஒண்சித்தி யுற்றவே' என்றார் திருமூலர். யோகத்தில் விசேடம் அட்டயோகமாகும். அவை சிவநுழைவு, சிவநோன்மை, சிவநுண்மை, சிவநுகர்மை ஆகும். யோகத்தில் நிவாரணம் முழுமுதல் தோன்றுதல். யோகத்தில் அபிடேகம் சித்தி பெறல் என்பதாகும்
யோகத்தைக் கடந்து ஞானத்துக்கு செல்லுதலே இறுதியாகும். அது திருவடி உணர்வாகும். ஞானத்துக்கு பிறப்புறுப்பு அறநெறி இன்நெறி எங்கும் இல்லை. ஞானத்தை வழங்காத சமயமும் இன்மை, உன்மை, அம்மை இவை எதுவும் தருவதில்லை இவை ஞானத்துக்கு புறம்பானவை இவை விடு பெற்றை தரவல்லவை அல்ல ஞானத்தை பெற்ற மெய்யடினார் சிறந்தோர். இதனை திருமந்திரம்
'ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டில்லை
ஞானத்தின் மிக்க சமயமும் நன்றன்று
ஞானத்தில் மிக்கவை நன்முத்தி நல்காவாம்
ஞானத்தின் மிக்கார் நாரின்மிக் காரே' என்றார் திருமூலர் அறநெறி உள்ள நாட்டில் 'மாதம் மும்மாரி பொழியும்' அதனால் அன் நாட்டில் உணவு பஞ்சம் இன்றி, நோய் நோடி அற்று சுகமாய் மக்கள் வாழ்வர். 'தருமம் தலை காக்கும்'; என்போர் சான்றோர். கலியுகத்தில் தருமர் தம் காலை பூமியில் வைக்க இடம் இல்லாது அந்தரத்தில் நிற்கும் போது. எப்படி தலை காப்பது? தனக்காக வாழும் இந்த உலகில் பிறநலம் எப்படி பார்ப்பது. தந்தையை கொன்று ஆட்சியை கைப்பற்றும் கால மிது.
ஞானியானவர் அந்தக்கரணச் செய்கைகளும் நாதக்கலையும் கடந்தவர்.  மிகவும் வேகமானது ஒலி நாதம் அதுபோல பரந்த தன்மையுள்ளது மனம். மனதை பற்றி சந்தேகபடும் பொருட்களை இறுப்பு என்னும் புத்தியும் அதனை தூண்டுவதான அகங்காரமும் அதனை தூக்கி எண்ணுவதான சித்தமும் ஆகிய ஐந்துனுள் சித்தம் மனத்தின் கண் அடங்குதாலும் நதம் இவற்றை செல்படுத்துவதாலும் ஏனையவற்றை விட சிறந்தது. இவற்றை கடந்தவனே ஞானி இதுவே மெய் நெறி இதனை திருமந்திரம்
'சத்தமுஞ் சத்த மனனுந் தருமனம்
உய்த்த வுணர்வு முணர்த்தும் அகந்தையுஞ்
சித்தமென் றிம்மூன்றுஞ் சிந்திக்குஞ் செய்கையுஞ்
சந்தங் கடந்வர் பெற்றசன் மர்க்கமே' என்றார் திருமூலர். மனத்தை கடக்க வேண்டும் புத்தியில்  சித்தம் உறைகின்றது. இவை அனைத்தையும் கடந்தவன் சித்தன் அவன் சித்தி பெற்றவன் பிறப்பில் அவை அத்தனையும் பெற்றது அத்தனிடம். அத்தனையும் மறைந்தது மனத்தினுள். நாம் வாழும் உலகமும் உலதத்தை அனுபவிக்க கிடைத்த உடலும் இறைவனால் கிடைத்தவையே ஏனெனில் வினைபயனை அனுபவித்து விடுபட. அத்தனைக்கும் காரணமானவனை காதல் கொண்டால் அவன் சிவத்தினுள் அடங்கி சிவனாய் திகழ்வான் அதுவே சிவலோகம். 'தானாய் தனியாய் தரணியில் உணாய் உருகாய் உணர் வினதாய் காதலுற்றார் சிவனாய் திகழ்வதே உண்மை' இதனை தனக்குள் தானே அடங்குதல் தன்னுள் உள்ளதுள் தானும் அடங்குதல் அத்வைதம் நான் என்பது அடங்குதல். இங்கு இரண்டு அல்ல ஒன்று. சீவன் சிவத்தினுள் அடங்குதல். இதனை திருமந்திரம்
'தன்பால் உலகும் தனக்கரு காவதும்
அன்பா லெனக்கரு ளாவது மாவன
என்பார்கள ஞானமும் எய்துஞ் சிவோகமும்
பின்பலின் நேயமும் பெற்றிடுந் தானே' என்றார் திருமூலர். சிவபெருமான்னை தேடி அலைந்தால் அவ் உள்ள உள்ளதை உணத்தி அது அதில் அடங்கும். 'பாம்பின் கால் பாம்பறியும்' என்போர் சான்றோர். அவனை அவன் அருளால் அறிய முடியும். இதனை மாணிக்க வாசகப் பெருமான் 'அவன் அருளால் அவன் தாள் வணங்கி' என திருவாசகத்தில் இயம்பியுள்ளார். மாறுபாடில்லாத சிவஞானத்தை திருவருளால் தெளிந்தவர் சிவஞானியர். அவர்களிடத்தில்; நிட்டை இருக்கு நிட்டை கூடிய இடத்தில் சிவபரம் பொருளை கைகூடும். அவர்களின் உறவு இயங்குதிணை நிலைத்திணை ஆகும். இதனை திருமந்திரம்.
'இயங்குஞ் செருமி இடமபிரம மாகும்
வருக்கஞ் சராசர மாகும் உலகந்
தருக்கின ஆசார மெல்லாந் தருமே
திருந்திலா ஞானத்தைத் தேர்ந்துணர்ந் தோர்க்கே' என்றார் திருமூலர் அப்படியானவர்களுக்கு மேன்மையான ஒழுக்கம் அனைத்தும் கைகூடும். சிவத்தை அறியும் அறிவும் சிவத்தில் அடங்கும் அடக்கமும் சிவத்தைப பற்றும் அன்புள்ளவர்கள் சிவலோகத்தில் வாழ்வர். அவர்கள் சிவ அடையாளமான சிவக்கோலத்தையும் அக அடையாளமான சிவப்பண்பும் உடையவராக காணப்படுவர். இதனை திருமந்திரம்
'அறிவும் அடக்கமும் அன்பும் உடனே
பிறியா நகர்மன்னும் பேரருளாளன்
குறியுங் குணமுங் குறைகழல் நீங்கா
நெறியறி வார்க்கிது நீர்;த்தொனி யாமே' என்றார் திருமூலர். சிவபெருமான் திருவடியை நீங்காத பெரின்பம் பெற்று பெருவாழ்வு வாழ்வோர் ஞானத்தைப்பெற்ற தவஞானியர். நீரில் ஒலி உண்டு. அதை வெளிப்படுத்த காற்றின் துணை தேவை அதுபோல ஆம்மாவில் உள்ள ஞானம் அறிவால் வெளிப்படும். அவ்வாறு வெளிப்பட்டவர்களே ஞானிகள். அவர்களிடத்தில் காணப்படும் அகத்துவபயிற்சியின் மூலம் மூலாதாரத்திலிருந்து உயிர்ப்பு ஆறாதாரத்தை கடந்து புரவ நடுவில் திங்கள் மண்டிலத்தில் தோன்றும் புத்தமிதம் காண்டு மயாகன்ம தளைகயை அறுத்து நிலைநிற்பர். யோகத்தை அடைய அகத்துவப் பயிற்சி அவசியம். பிரமசாரியம் கடைப்பிடிக்க வேண்டும். இதனை திருமந்திரம்
'ஞானம் விளைந்தெழு கின்றதோர் சிந்தையுள்
ஏனம் விளைந்தெதி ரேகாண் வழிதொறுங்
கூனல் மதிமண் டலத்திர் நீர்கண்டு
ஊன மறுத்துநின் றொண்சுட ராகுமே' என்றார் திருமூலர். இறைவனை வெளில் தேடி பயன் என்ன? நம்முள் தேடியே அறிய முடியும். நான் அறுந்து தன்னுள்தானே அடங்குவதே ஞானம். சிவஞானியின் பண்புகள் நான்கு அவை அறிவில் சீலம், அறிவில் நோம்பு, அறிவிற்செறிவு, அறிவில் அறிவு. இவை ஞானத்தில் மேல்நிலை அடைந்தவனுக்கு பொருந்தா. சிவசத்தியில் தன்னை மறந்த சிவயோகிக்கு குண்டலினிசத்தியின் வலிகொண்டிற்று யோகபலனை விளைவித்திடும் இவையே பற்றுக்கொட்டோடும் செய்யும் யோகிக்கு நிகளும் இவை ஞானத்திற்சரியை ஞானத்திற்கிரியை எனப்படும். இதனை திருமந்திரம்
'ஞானிக் குடன்குண ஞானத்தில் நான்குமா
மோனிக் கிவையொன்றுங் கூடாமுன் மோகித்து
மேனிற்ற வாஞ்சக்தி வித்தை விளைத்திடுந்
தானிக் குலத்தோர் சரியை கிரியையே' என்றார் திருமூலர். இவர்கள் ஆதார யோகியர் அவர்கள் சக்திவித்தையாகிய குண்டலி யோகமுடையோர். சிவஞானி அறிவில் அறிவாகிய ஞானத்தின் ஞானமே. நான் எனது என்னும் ஆணவ செருக்கு அறலே ஞானத்தில் யோகம். முப்பத்தாறுமெய்;யும் கடந்த அருள் வெளியில் காணும் சிவ ஒளியே ஞானத்தில் கிரியை. மெய் திருவடியினை நாடுதல் ஞானத்தில் சரியை. இதனை திருமந்திரம்.
'ஞானத்தின் ஞானாதி நான்குமா ஞானிக்கு
ஞானத்தின் ஞானமே நானென தென்னாமல்
ஞானத்தில் யோகமே நாதாந்த நல்லொளி
ஞானக் கிரியையே நன்முத்தி நாடலே' என்றார் திருமூலர். இறைவனைகான ஞானம் தேவை ஞானமில்லா அறிவு 'ஏட்டுச்சுரக்கா கறிக்கு உதவாதது' என்னும் சான்றோர் முதுமொழிக்கு ஒப்பானது.  அரனை அறியா அறிவு மேல் கூறப்பட்டதற்கு ஒப்பானது. ஞானம் பகலில் பார்வை எப்படிப்பட்டதோ அதற்கு ஒப்பானது. அறிவு இரவில் பார்க்க வெளிச்சத்தின் உதவி தேவைப்படுவதற்கு ஒப்பானது.  சிவஞானத்தின் நாற்பாதங்களையும் கடைப்பிடித்தால் பிறப்புக்கு வித்தான இருள் சேர்; இருவனையும் கடந்தவனாவான். இருவினை என்பது நான் என்பதால் செய்யப்பட்ட நல்வினை தீவினை ஆகும். இவை புண்ணியம் பாவமாகும். நான் அழிந்து தன்னுள்ளே தன்னை காணுதல். கடவுள் என்பதை கட 10 உள் என்று பிரிக்கலாம். கட என்பது கடந்தவன். உள் என்பது உள்ளுள்வன். வினையால் பிடிக்கப்பட்டவனுக்கு கடந்தவன் அவனை தேடி உலகில் அலைகின்ற மனிதர். அவர்கள் எங்கு அலைந்து காணமுடியாதனை வினை அலையவைக்கின்றது. தன்னுள் அவனைகான இருவினையும் உதவது. இருவினையும் அறும்போதே அவன் அருள் கிட்டும்;. நன்மையை பலன் கருதாது தாரைவார்க்க வேண்டும். இதனையே மாம்பழக் கதை எடுத்துக் காட்டுகின்றது. மாம்பழம் அம்மை அப்பனை வலம் வந்த வருக்கே சொந்தமானது. உலகில் தேடி அலைந்தவக்கு நிலத்தின் உச்சமான மலையே இருப்பிடமானது. உடலில் அவ்விருப்பிடம் இமைகளின் மையமான ஆக்ஞா சக்கரம். அதன் அர்த்தம் ஆக்ஞா சக்கரத்தில் நிலைகொண்டு ஆடாத அசையாத மலை போல இரு என்பது தான். அதனாலேயே குன்றிருக்கும் இடம் எல்லாம்; குமரன் இருக்கும் வீடு. உயிர்ப்பாகிய இந்திரியத்தை கட்டுப்படுத்தி புருவ மதியான ஆக்ஞா யில் அமிதமாக்கி  சகஸ்ராதாரத்தில் சொரிந்தால் இளமை என்றும் மாறாது. இதை கந்தன் குமரன் அவன் அழகன். அது போல நாமும் அடையலாம். என்பதையே சூசகமாக அக்கதை கூறுகின்றது. இது போன்று மார்க்கண்டேயர் கதையும்  அதாவது இறைவனை அடைந்து குடலினி சக்தி விளிப்படைந்தால் அவன் பிறப்பிறப்புக்காரணமான செயலில் இருந்து நீங்கி விடுவான். இவனிடம் காலனுக்கு என்ன வேலை? அவன் சதா அவன் சிநிதனை மட்டுமே உள்ளவன். இதனை திருமந்திரம்.
'தண்ணிய ஞானத்தின் ஞானாதி நண்ணுவோன்
புண்ணிய பாவங் கடந்த பிணக்கற்றோன்
கண்ணிய நேயங் கரைஞானங் கண்டுளோன்
திண்ணிய சுத்தன் சிவமுத்தன் சித்தனே' எனறார் திருமூலர். சிவஞானத்தில் நிகழும் தீக்கை நான்கு வகைப்படும். அவை சிவநுழைவு, சிவநோன்மை, சிவநுன்மை சிவநுகர்மை ஆகும். தன்னை சிவனாகக் கான்பது சிவநுழைவு. மேலாம் சிவதோற்றத்தைக் கான்பது சிவநோன்மை. வாலறிவினனாகிய சிவபெருமானின் திருவருள் வீழ்ச்சி சிவநுன்மை. திருவருள் தந்த அவனை மறவாமை சிவநுகர்மை ஆகும். இதனை திருமந்திரம்
'ஞானச் சமயமே நாடுந் தன்னைக்காண்டன்
ஞான விசேடமே நாடு பரோதயம்
ஞானநிர் வாணமே நன்றறி வானருள்
ஞானாபி டேகமே நற்குரு பாதமே' என்றார் திருமூவர். நுழைவு முதல் நுகர்மை வரை உள்வற்றை சமயம்,விசேடம், நிருவாணம், அபிடேகம் என்றும் அழைப்பர்.
  சைவசித்தாந்தம் கூறும் நாற்பாதங்கள் மூலம் இறைவனை அடைமுடியும் என்பதை திருமூலர் சிறப்பாக பாடி அருளியுள்ளார். தாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் என்பது சித்தக்கள் கருத்து. அவர்கள் அனுபவித்ததை மந்தர்கள் அனுபவித்து அவர்கள் அடைந்ததை அடையவைப்பதே அவர்களின் நோக்கம். பிறப்பின் நோக்கமும் அதுதான் அதை அறிய மாயை விடுவதில்லை. அதுவும் கறுமாவின் விளையாட்டுத்தான். அதை அறிய அவன் அருள்வேண்டும்.




   
















 

No comments:

Post a Comment