Thursday, May 19, 2011

25.விக்கினம் தீர்க்கும் விநாயகர்

25.விக்கினம் தீர்க்கும் விநாயகர் 
“முத்திக்கு வித்தகன்
     புத்தியில்  உறைபவன்.
 சித்தியில் விளைந்து 
    முத்திக்கு வழிகாட்டுபவர்.
முத்திக்கு  தடையான  
    வினை அறுப்பவர்” 
                      விக்கினம் என்பது தடைகளும் பின்னடைவும் என்பது பொருள். இறைவன் எத்தடைகளை தீர்ப்பவன் என்று பொதுவாக கேட்டால் நாம் சொல்வதெல்லாம் எமது முன்னேற்றப் பாதையில் ஏற்படும் தடைகளைப் போக்குபவன் என்று கூறுகின்றோம். நம் க~;டங்களுக்கு காரணம் என்ன என்று கேட்கும் போது அதற்கு கர்மா என்கின்றோம். அல்லது  நாம் செய்தவினை என்று கூறுகின்றோம். பிறப்புக்கு காரணம் வினை என்று கூறுகின்றோம். பிறப்பெடுத்ததின் நோக்கம் பிறவாமையை அடைய என்பதும் தெரியும். இப்படி இருக்க விக்கினம் என்பது எது என்று பார்க்கும் போது இறவாமையை அடைய தடையாக அமையும் தடைகளை தகத்தெறியவே என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மனிதனின் வாழ்கை அமைவது அவர் அவர் செய்த வினையே தவிர இறைவன் காரணமல்ல. நாம் செல்வச் செழிப்புடனும் அல்லது வறுமையில் வாழக்காரணம் நாம் தான். அவை முன்வினைப் பயன் செல்வந்தனானால் அச் செல்வம் எமக்குரியதல்ல அவை கொடைக்கு வழங்கப்பட்டதே தவிர குடும்பத்துக்கு மட்டும் உரியதல்ல. அப்படி அமையுமானால் அது கர்மச் சொத்து அதனால் சந்ததி அழிந்து போகும். அதை கொடையாக கொடுத்து இகபர வாழ்கையில் சந்தோசத்தை இழந்து நரகத்தை அடையும் நிலையிலிருந்து தப்பிக் கொள்ள வேண்டும்.  விக்கினத்தை தீப்பது என்பது வினை அறுக்க ஏற்படும் தடையை நீக்கி அதை அனுபவித்து பிறவாமையை அடையவே என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 

அதாவது அதை அடைய தடையாக அமைவது மூவினையான ஆணவம், கன்மம், மாயை என்பனவாகும். இவற்றுக்கு காரணம் பாசம் அதை அறுக்க வேண்டும். இதனை மதம் என்றும் கூறுவர். மதம் கொண்டயானையை அடக்க அங்குசத்தை பயன்படுத்தி யாயைப்பாகன் அடக்குகின்றான்.  இதனையே விநாயகர் ஒருகையில்  அறுந்த பாசக்கையிறும் மறுகையகையில் அங்குசமும் இருப்பதை காண்கின்றோம்.  பாசத்தை அறுத்து அங்குசத்தால் வழிப்படுத்துகின்றார் விநாயகப் பெருமான்;. என்பதை இது அர்த்தப்படுத்துகின்றது. அதை அறிய ஞானம் வேண்டும். அதற்காக எழுத்தாணி ஒரு கையில் வைத்திருக்கின்றார். உலகமான உருசியான மோதகம் இன்னுமோர் கையில்  வைத்திருக்கின்றார். இதன் மூலம் உலகியலில் மூழ்கினால் இறையியல் இல்லை என்பதை உணர்த்துகின்றது. உலகியலில் விடுதலை பெற ஞானத்தைக் கைக்கொண்டு  அங்குசத்தால் வழிப்படுத்தி பாசத்தை அறுத்து அதைத் துறந்து அறம் காத்தால் தான் பிறந்த நோக்கத்தை அடையமுடியும் என்பதை இது உணர்த்துகின்றது. அதாவது “உறவில் துறவு” இதற்கு தடையாக அமைவதனைத்தையும் நீக்குபவன் விநாயகராவார். இதற்கு புத்தி விளிப்படைய வேண்டும்.  இதற்கு சித்தம் தெளிய வேண்டும். புத்தி சிற்றின்பம்  சித்தம் பேரின்பம் ஆகும்.  புத்தி விளிப்படையும் போது சித்தம் தெளியும் சித்தத் தெளிவுறும் போது பிறப்பின் நோக்கத்தை உணர்த்தும். அதனால் சிற்றன்பம் ஏற்படுத்தும் தடை நீங்கி பேரின்பத்தை அடையவைப்பவரே விநாயகன்.




                  உதாரணமாக நாம் பாதையில் பயனிக்கையில் அவதானத்துடன் பயனிக்க வேண்டும். அதாவது  செப்பனிடப்பட்ட பாதையில் பயனிக்கும் போது பாதையில் இருக்கும் தடை எமக்கு தெரியும். கரடு முறடுடான கல் முள் உள்ள பாதையில் பயனிக்கும் போது அவதானமிருந்தால் தான் கயப்படாமல் செல்ல முடியும். காயப்படும் போது வேதனை அடைவது இயல்பு  இதற்கு காரணம் என்ன? தமது கவலையினமே தவிர வேறோன்றும் இல்லை. இதற்கு கடவுளை நோக முடியுமா? நம் வாழ்க்கை என்பது கரடு முறடான கல் முள் உள்ள பாதை இதற்கு காரணம் முன்வினைப்பயன் அனுபவித்தே அதை அழிக்க வேண்டும். நாம் செய்ததை இன்நோருவர் அனுபவிக்க அனுமதியில்லை. அனுபவித்து விடுதலைக்கு வழிவகுப்பவரே விநாயகர். இருந்தும்  குரு தேவர் இராமகிரு~;ணர், அருனை முனி ரமன மகரி~p, யேசுநாதர், போன்றோர் மற்றவர்களின் பாவங்களை தம் பெற்று அனுபவித்து இறை நிலை அடைந்தனர். 
                  சுயநலன் கருதாது பொது நலன் கருதி மற்றவருக்காக வாழ்வது அதாவது பயன்கருதாது செல் செய்து பயன் அனைத்தையும் இறைவனுக்கு அர்ப்பணித்தல் இறைநிலைக்கு இட்டுச் செல்லும் அன்நிலையை அடையச் செய்வதே விநாயகரை வழிபடுவதன் நோக்கமாகும்.

Monday, May 16, 2011

சித்தர்களின் வாழ்க்கை வரவாறு போகமா மகரிஷி

“சித்தன் போக்கு சிவன் போக்கு  சித்தம் தெளிந்தால் அவன் போக்கு சிவன் போக்கு . அவனே சிவசித்தன்”.
 இந்த வகையில் சித்தர்களின் வாழ்க்கை வரவாறு அறிமுகம்
2.போகமா மகரிஷி
                   இரண்யவர்மன்  அரசாட்சியைத்  துறந்தான்.  துறவறம் பூண்டு யாத்திரை போனன். தில்லையின்  சிவகங்கையின் அருமை அறிந்தவன் வர்மன். மூழ்கையில் பிரணவ ஒலியது காதினுள் ஏறுகையில் ஒலித்திசை நோக்கி மேல் வந்து  பார்க்கையில் ஒலித்தது மறைந்தது.   முழ்கவே மீண்டும் ஒலித்தது நாதம். காரணமறிய நீரினுள் விளித்தான் வர்மன் . கண்டதே காட்சி  அத்தனின் அம்பல நடனம்.  உற்றது காமம்.  மீழாமையில் திளைத்தான். மனமதில் பதித்து ஓவியமாக்கினான். வரைகையில் ஏற்படும் பிழைகளை திருத்துகையில் முழ்கியே தீர்த்தான் . ஆலயம் அமைத்து  அம்பல நடனம் காட்டவே விரும்பினான். மாந்தர்கள் பார்க்க சொக்கத் தங்கத்திலாக்க முயன்றவன் வர்மன். மீண்டும் அரசினை பொற்று ஆலயம் அமைக்கும் பணியில் இறங்கினான். நுட்பத்தில் தேர்ந்த ஆச்சாரிகள் வரவழைத்து அழைத்து மண்டலம் குறித்து புண்ணிய காலத்தில் சிற்பம் வடிக்கும் பணி ஆரம்பமானது. காலம் நெருங்கவே காரியம் முடியாமையினால்  வருந்தினர் ஆச்சாரிகள். அரசனின் கட்டளை மீறினால் விழைவுகள் அறிதவர்கள் ஆசாரிகள். விரைந்தனர். கலாக்கினி நாதனின் மாணவன் போகரை. ஆச்சாரிகளின் அத்திரம் பூரிதவர் போகர். தன்மாணாக்கன் கருவூரனை அழைத்து யோசனை சொல்லி தில்லைக்கு அனுப்ப. கருவுருவறை அடைந்து தாளிட்டு ஒன்றரை நாளிகை எடுத்து  திரு அம்பல நடனம்  செப்புற அமைத்தான். ஆச்சாரிகளுக்கு சிற்ப மந்திர உபதேசமும் செய்தான். காலையில் மன்னன் படை சூழ வருகையில் சிற்பத்தைக்கண்டு பரவசம்மடைந்தான். சன்;மானம் கொடுக்க பொற் பரிசேதனை செய்தான். கண்டான் செப்புக் கலந்ததை. கொண்டன் சினம். அழைத்தான் கருவூரானை சிறையிலிட்டான். இட்டதையறிந்த போகர் சீடர்கள்; ஐவரும் மூடையுடன் பின் தொடர அரசன் முன் வந்தார். துலாவரமிட்டு ஓருபுறம் சொர்க்கத்தங்க மூடை மறுபுறம் பொற்சிலை வைத்தார். பொற்சிலை உயர சொக்கம் தாழ பொற் சிலை பற்றி கோமகன் விரும்பிய  சொக்கம் வழங்கி  சொக்கத்தங்கம் கண்பார்வை பறிக்கும் காரணம் விளம்பி  கருவூரனை வேண்டினார். அரசனோ காவலரை அழைத்து வர சொல்ல கருவூரன்  மாயமாய் மறைந்தான் அதிர்ந்தனர் அரனும் காவளாளிகளும்; அறிந்தவர் அழைக்கையில் குரலது  கேட்டது.  மறைந்ததன் காரணமறிய அரசனோ அதிர்ந்தான். ஜோதி விருட்ச்ச மையின் சிறப்பு தெரிந்தவன் நெற்றியில்  வைக்கவே மறைந்தான். அழிக்கவே தெரிந்தான். சித்தன் அருள் தெரியா கோமகன் அறிந்து  பணிய  சொக்கனைக் கொடுத்து ஆலய அமைப்பும் வழிபாட்டு முறைகளையும் இயம்பி இருவரும் மறைந்தனர்
“போகார் கண்ட புனித மூத்தியே! கருவூரார் கைவண்ணப் பொன்னுருவே” என்றியம்பி துதி செய்தனர் மக்களும் வேந்தனும் அப்பனின் திருவிளையாடல் இதுவெண்று அறிந்தீரோ'
மக்களின் நலமதில்ஆசையுற்று  சுற்றியே வந்தார்;  உள்ளம் சிதைந்து குப்பைககள் சேக்கும் மாந்தரைக் கண்டார் மக்களின் மனம் அழிந்ததை உணர்தார். ஆத்தும சக்தி அழிந்ததை உணர்து வருந்தியே நின்றார். மாந்தரின் அறிவாற்றல் இழப்பும் உடல் வலிமையின்மையும் உணர்வின் இருளையும் உணர்தார். மாற்று வழிகாண முயன்றார். நோய் உற்றவருக்கு மருந்தும் யோகசாதனை செய்வோன் வாய்யுறைக்கு இரவாதம் இயம்பியும் காய தத்துவமும் நோயற்ற வாழ்வுக்கு யோகாசனம் உபதேசம் செய்திட்டான்.  அறியாதவை அறிய ஆகாயப் பயணம் புறப்பட்டான். சித்த புரு~ர்கள் தென்படவே அவ்விடமிறங்கி முறைப்படி பணிந்து கயகற்பம் கற்று மானிடநேயம் நோக்கி மீண்டும் திரும்பினான். உயர் ஞானம் பெற்று மேன்மை பெற அழைத்தான் மானிடரோ அதை ஏற்கவில்லை. மாய யாலமும் வசிகமும் அஞ்சன இரகசியம் மலைக்குதி வித்தை செய்து  பாமரமக்கள் வசமானான். ஆவிகளை அழைத்து அரிய பல செய்திகள் கூறவே உயிரினம் வாங்கினான். ஆகாயத்தில் பறக்கவும் அதி தொலை செய்தி அறிமுறை புகட்டியும் எளிமுறை நடை புரியும் கருவி நூலது எழுதினான். உடல் கூறு பற்றி அறியும் உணவருந்தல் முறையையும் பலன் பெறு வழிபாட்டு முறைகளையும் எழுத்துரு வாக்கினான். மானனிடர் கஸ்டம்; ஒரளவு நீங்கி என மனவமைதி பெறவே


காலனின் காரியம் அறிந்திட வேதனை உற்றவன் போகன் வழிபெற்றிட விரைந்தான் மீண்டும் மேருவிடம் புகுகையில் சித்ததரிசம் கிடைக்கையில் வந்தவிடையம் விளம்பவவே  ஆத்திரம் கொண்டு சித்திகள் அறசாபமே இட்டனர். நெஞ்சுருகி வினையவே மனுக்குல நன்மையில்  சாபம் அறுந்தது. இறந்தவர் பிழைப்பது அவன் அருள் முத்திரையில் பண்புடையார்க்கே அது உரிமமாகும். என்று அறியாத காயகற்பமுறைகள்யியம்பி மறைந்தனர் சித்தர்கள். மலைதனில் நோக்;க தாதுக்கள் கண்டார். பாதரசத்தை கட்டி மணி செய்யும் வழிமுறை கண்டார். மனுக்குல நலமது நோக்கி பார்தனில் வந்தார் பார்தனில் சுற்றிவருகையில் சீனதேசம் சென்று மருத்துவம்மியம்பினான்.
மீண்டும் குருஞாபகம் வரவே கிளம்பினான் மேருவுக்கு சமாதிதனை அடைகையில் தான்மட்டும்தான் சீடன்னென கருவமது உற்றான். பிறப்பு ரகசியம் எல்லோருமறிய வழி செய் உனது புகழ் உலகறியச் செய்வேன் என்றார். சிரிப் பொலிகேட்கவே  திகைபுடன் பார்த்தார். உருவமது பெறவே  இருப்பவர் அறிந்தார் கறுவமது அடங்கி சிவன்னவன் சித்தன் அருவுருக்கொண்டதன் இரகசியம் வினாவவே புனித சமாதியை விட்டகல முடியாமல் வளரும் தவத்துக்கு சமாதியே தஞ்சமென இருந்தை அறிந்தான். இவ் விடத்தில் குருவித்தை கற்றவன் வித்தையை பரிட்சிக்க இங்தான் வந்தனர். இராமர், இராவனர், அரிச்சந்திரன், பாண்டவர்களும், பாஞ்சாலன், விராடன், திருதராட்டியன், புரூரவனும் இங்கு  வருகையில் நாம்  இருக்கின்றோம். ஏன்பதை அறிகையில் வியப்புற்றான் சித்தன். வித்தையின் விளைவிணை சுட்டியே காட்டினர் .தங்கம், இரத்தினம், பஸ்பங்கள், செந்தூரம், குவியலர்ய் கிடந்ததை கண்டதும் மனுக்குலசிந்தனை வந்தது. வந்ததும் மனக்குரங்கின் வேகமறியாது பார்வை மறைந்து வளிமாறிய பசியற்றவனுக்கு  இப்பொருள் தானாகவே செல்லுமா? ஏனக்கூறி காட்டி சித்தர்களும் குவியலும் மாயமாய் மறைந்தன. வருந்தியவனாய் வளிதடுமாறி வருகையில் எதிரில் புத்தொன்றில் ஒளியது தென்படவே புற்றினை வல்வந்து நி~;டையில் ஆழ்தான். சித்தனே இருப்பதையறிந்தான். புத்தினை அழிக்கையில் பிரகாசத்துடன் வெளி வந்தவரை கால்தனில் பணிகையில் காலாங்கி சீடனே தவமது கலைந்தது தவறுறில்லை  காரணம் வினாவுகையில் தாவமுறு காலம் வினாவவே ஒரு சில தினங்கள் என துவங்கையில் கலியுகமேன போகர் கூற பிறந்தது கலியுகமா? துவாபர ஆரம்பத்தில் தவமது தொடங்கினேன் என்றார்; காலமது வேகமாம் மறைந்ததை அறியேன். நாலாப்புறமும் அதிசய்த்து பார்கையில் கண்ணில் பட்டதொர் மரம் அது கணியொன்று உண்ணில் மறைந்திடும் நரை. திரை, மூப்பு, தவமது செய்வோருக்கு உகந்தது  என உரைக்கையில் கணியது வீழ்தது.  கட்டளை பிறக்கவே பொகரதை உண்டார். சுவையது நிறைந்தது சுவைத்துண்ண நீட்டினார் .புலியது தோலை பற்றுக என்று காரணம் கூறுகையில் “மானது தோலில் அமந்திட அடங்கிடும் மனமாம் தொடர்கையில் அலைந்திடும் மாமாம்  அடங்கிடும்மனதினை திடம்பட வைத்திட  புலியினது தோல் அவசியமாகும் . புலியது தோலி தொடங்கிடில் யோகம் சித்தசுவாதினம் உற்றிடுமாம்” பதுமை குதித்திட மேல்வான தேவையை பதுமை இடம் பெற்றிடு என உரைத்து நிஸ்டையில் ஆழாந்தார். கருவி இரகசியம், மாயையின் விளைவு,  முத்தி நெறி புகட்டி மறைந்தன பதுமைகள். மேருவில் வட திசை நோக்க நில் என்றழைத்தது பதுமை  அவுருக் கொண்டு நிஷ்டையில் அனேகர் பர்சங்கள் பட்டு கலைந்திடும் நி~;டை விளைவுகள் அதிகம் என்றுனத்திடவே பேசும் பதுமை கண்டதும் ஆச்சரியம் அடைதார் போகர். இறந்தவன் மீழும் முகிலிகை கேட்க மறுதிட்ட பதுமை பற்பல முகிலிகை இரகசியம் கூறி செல்லாமல் மறைய வருத்தம் கொண்டு வருகையில் சதுர்யுக சித்தர்கள் தரிசனம் ஓர் இடத்தில் கிடைக்கவே  போகரின் உள்ளம் அறிந்தவர்கள் அவர்கள். பலவித்தைகள் கற்றுக் கொடுத்து  உயிப்பு முலிகை காட்டியும் கொடுத்தனர். சந்தோச மிகுதியில் மதியிழந்து ஆரவாரத்தில் வருகையில்; குகைசித்தர்கள் நி~;டைதனை கலைக்கையில் ஆத்திமுற்றவர்  உயிப்பு முகுலிகையின் சக்தியை பறிக்கையில்; . வருத்தம்  கொண்டு  அலைகையில்  திருமுலர் பாட்டன்  சமாதிகண்டு கடும் தவம் புரிகையில் அலைகள் மோதி திறந்தது சமாதி “மிருகக்குணம் கொண்ட அஞ்ஞானி பலகோடி  கருணை உள்ளம் கொண்டவன் நீயப்பா அவனிடம் என்னை காட்டிக் கொடுக்காதே நீயும் அவனிடமிருந்து ஓதிங்கிவிடு” என்றுரைத்து  தானாகவே மூடிட்டிது சமாதி  சிந்தனை குழம்பவே அவ்விடம் நீங்கி வருகையில் அடுத்தொரு சமாதி அதிலிருந்து வெளிபட்டான் அரிச்சந்திரன் பட்ட துயம் தனை கூறி  “இருட்டது மனமது மனிதரிடத்து. அவர் அவர்  வினைப்பயன் அவர்களது வாழ்கை.  அவகளிடம் விலகி சிவத்தில் நிலை கொள் பாழான மனிதருக்கு இறவாமை நாடி பலனெதுவும் இன்றி மாய்வதை தவித்து விலகியிரு” என்று கூறி  மறுபடி சமாதியானார். 
போகமாமகரிஷி
போகமாமகரிஷி சமாதிக் கோயில்
தென்திசை நோக்கி பல சாதனை படைத்து ஆண் பெண் அபூர்வ சக்தி அறிந்து பெண்மென்மை, வசிகரம், இனிய குரல், மேன்மை ஆணின் உடலில் தெய்வீகமாக பாய்கையின் ஆயுள் அதிகர்ப்பு பல வகை காயசித்தியில் இதுவும் ஒன்றாம் ஒருவர் பல பெண் புனர்கையில் ஆணின் சக்தி அதிகரித்தல் “பர்யங்கி யோகமாம்” போகர் முறையாம் இதையறிந்த போகரின் உபாசனா தேவி புவனேஸ்வரி அம்பிகை தடுத்து உன்னை பின்பற்றிடும் உலகம் அருமை தெரியாது விபரீதமாகிடும் நிறுத்திவிடு உன்னெண்ணம் நிறைவேற சென்றிடு பழனி நிஸ்டையில் ஆழ்திடு முருகனை நோக்கி  அவன் வாழும் முறைதனை வகுத்திடுவான். என்றுயிம்பி மறைந்தாள்.
போகமாமகரிஷி வழிபட்ட மரகத இலிங்கம்
போகரோ விரைந்தார் பழனி மலைதனில் ஆழ்தார் நிஷ்டையில் முருகனை நோக்கி ஜோதியாய் தொன்றிய பழனி ஆண்டி “உருவது கண்டாய் மனுக்குலம் தரிசம் காண வளிசமைப்பாயாக தாயாரிப்பும், பிரதிடையும், வழிபாட்டு முறையையும் இயம்பி காயசித்தியும் கூறி மறைந்தார்” நவபாஷ்ண கற்களை உருக்கி தண்டாயுதபாணி உருவது சமைத்து கர்ப்பக்கிரகம் அமைத்து ஆகம முறைப்படி பிரதிஷ்டை செய்து விபூதி அஷேபிகம் செய்து உடல்தனில் பூசி பஞ்சாமிர்தம் அபிஷ்கம் செய்து உணகவாக்கிக் கொண்டார். போகரின் உள்ளொளி பெருகி கயகற்ப உண்மையை உணர்தார். சாதனை புரிய அவ்விடம் தனியிடம் கொண்டார். சந்தேகம் தீர்க்க குகை வளி அமைத்தார். சாதனை அனுபவம் உபதேசம் செய்தார். சீடனாய் வந்தார் புலிப்பாணி தன்பணி தொடர  தான் பெற்ற சாதனை  உபதேசம் செய்தார். யோகத்தில் திளைத்தார்.




புலிப்பாணி காலையில் எழுவார் நித்திய கர்ம அனுஷ்டானம் முடித்து தூயவனாய் சண்முக நதிதனை அடைந்து நீடாடி பழனி ஆண்டவன் அபிஷேக நீர்தனை எடுக்கையில் புலியது வந்து எதிரினில் நிற்கையில் அதுதனில் ஏறி சந்நிதி அடைகையில் இறங்கிவிட புலி ஓடிடும். அது புலிப்பாணியின் யோகத்தின் விளைவது. 
போகர், புலிப்பாணி காட்டிட்ட வழியை பின்பற்றி பயன் பெறுவதுடன் காயகற்பமான அபிஷ்கம் செய்த விபூதியும் பஞ்சாமிருதம் பெற்றுப் பயன் பெறுவோம். 
'மட்டூர் புன்னையம்பதியான்'

Sunday, May 15, 2011

22.வில்வத்தின் மகிமை




          சிவமுர்தியின் இச்சா ஞான கிரியா சத்திகளாக பூமியில் ஆன்மாக்களின் பாவங்களை போக்க அவர் அருளால் கோமேயத்தில் உற்பத்தியானது. இதனை பூசிப்போர் இம் மர முலத்தை அடைந்து(விரதசீலராய்) சங்கல்பம் செய்து எட்டு திக்குகளிலும் பசு நெய்  விளக்கிட்டு அபிடேகம் முறைப்படி செய்து வஸ்திரம் தரித்து மலரிட்டு துபம்காட்டி 


பின்வரும் நாமங்களைக் கொண்டு அர்ச்சனை  செய்து பூசிக்கச் சகல சித்தியும் பெறுவதுடன் சகல பாவங்களும் போகும்.    
  
1. ஒம் வில்வ விருஷெச  நம:       
2. ஒம் நிர்பீஜ               நம:
3. ஒம் கோமயோற்பவா  நம: 
4. ஒம் சங்சராநந்த         நம: 
5. ஒம் சுத்தபதுமப்பிரிய     நம: 
6. ஒம் வியாத               நம:
7. ஒம் புட்பாதிக             நம:



8. ஒம் ஷெத்திரஞ்ஞ       நம:
9. ஒம் வரதா பீஷ்ட         நம:
10. ஒம் புருஷோர்;த்த சித்திதர நம:
11. ஓம் சிவப்பிரிய            நம:

வில்வம் மும்மத்தை போக்கவல்லது. இதன் இலைகளை பறிக்கும் போது பழுதற்றதாக இருப்பதுடன் சிவசிந்தையுடன் மூவிதழ்கள் பிரியாத வகையில் பறித்தல் வேன்டும். மாலையில் தளம் பறித்தல் உத்தமம்மல்ல.


வில்வாஸ்டகத்தில் ஒர்வில்வம் சிவாற்பனம் செய்வதனல் உண்டானபலனகள்  பற்றி சங்கரர் மிக தெளிவாக பாடியுள்ளார். ஒர் வில்வதளத்தை சிவாற்பணம் செய்தால் பின்வரும் பலன்கனை பெறலாம்.




1.  மூன்று ஜன்மங்களில் செய்தபாவங்களும் அறும்
2.   கொடி பெண்களுக்கு திருமணம் செய்த பலன் உண்டு.
3.  ஸாளக்ராமதை வழிபட்ட பலன் பொறலாம்
4.   அச்வமேத யாகம் செய்த பலன் பெறலாம்.
5.   கோடியக்ஞ்ஞங்கள் செய்த பலன் பெறலாம்.
6.   காசிN~த்திரத்தில் காலபைரவரை வணங்கிய பலனை பெறலாம்.
 உமாமகேஸ்வரருடன் சகல தேவர்களையும் வழிபட்டு சகல பாபங்களையும்        போக்கிய பலன்களையும் பெறலாம்.
    வில்வ தளம் சிவசொருபம் அதன் முட்கள் சத்திசோருபம் அதன் கிளை வேத இரகசியம் அதன் வேர்கள் பதிருனெருகோடி ருத்திரர்கள். ஐந்து வில்வ தளங்களை எடுத்து நடுவில் ஒருதளமும் மேற்கில் ஒருதளமும் வடக்கில் ஒருதளமும் தெற்கில் ஓருதளமும் கிழக்கில் ஓரு தளமும் வைத்து  முதலில் நடுவிலுள்ள வில்வதளத்துக்கு பானிமந்திரமும் மேற்கிலிருந்து சத்யோஜதமந்திரமும் வடக்குக்கு வாமதேவமந்திரமும் தெற்குக்கு அகோரமந்திரமும் கிழக்கு தற்புருசமந்திரமும் பின்னர் நடுவுக்குமேலே ஈசானமந்திரத்தையும் செல்லி பக்கத்தில் துளசி தளமொன்றையும் வைத்து வழிபடுவதால் சிவசத்தியை வழிபட்ட பலன் கிடைக்கும். அப்படியான சத்தி பெற்றது வில்வ தளம்.
ஒரு அரசன்  வில்வருசத்தை நிழற் பொருட்டு அவ்வில்வத்தின் கீழ் நின்று வேட்டையடிய சிரமபரிகாரத்தின் பொருட்டு கொடுங்கோலான அரசன் வருகையில் அந்த வில்வ விரு~த்துக்கருகில் ஒரு முனிவர் அணிந்திருந்த விபூதி அவன் மீது பட்டதனால் ஞானமடைய அரசன்     முனிவரிடம் வேண்டினான். அப்போது முனிவர் அரசனிடம் நீ வில்வ விருச~ மொன்றை பிரதி~;டை அதன் நிழலில் வசித்து உன்பாவங்களை நீக்கி புனிதனாவாயென அவனுக்குச் சிவஞான மநுக்கிக்க அவன் மீளாக்கதி பெற்றான். இவ்வாறே மார்க்கண்ட முனிவர் உபதேசித்தால் பாவியாகிய வேதியன் வில்வவிருச~த்தடியில் சிவாரதனை செய்து பாபநீக்கம் பெற்றான்.         
வில்வம் பஞ்சவபில்வங்களில் ஒன்றகக்ருதப்பாடுகின்றது. பஞ்ச வில்வங்களானவை வில்வம், விளா, நொச்சி, முட்கிளுவை, மாவிலங்காகும். இவ்பில்வங்களால் சிவபெருமானுக்கு அர்ச்சித்தல் ஜம்புலன்களால் உண்டானபாவங்களை நீக்கி ஜம்புலக்கட்டறும். அத்துடன் மும்முர்த்திகளை வழிபட்ட பலனையும் பெறுவர். ஆணவம் கன்மம் மாயை என்னும் மும்மலங்களை நீக்கி  ஆன்மவிடுதலையான பிறப்பின்மைக்கு வழிவகும்.


வில்வம் மருத்துவகுணம் உடையது. வெப்பத்தினால் உண்டாகும்  நோய்களுக்கு அருமருந்து. தளமத்தினை நிரில்லிட்டு உறவைத்து அருந்தினால் உடல் உஸ்னம் குறையும். புழத்தை தேன் சேர்த்து உண்;டால் வய்ற்றில்யுள்ள குடல்புண் குணமடையும். இது போன்று வேர் பட்டை பொன்றவற்றுக்கும் மருத்துவகுணம் உண்டு.
           


திரு பாக்கியமூர்த்தி குமரகுருபரன் (புன்னையம் பதியான்)

Tuesday, May 10, 2011

மட்டக்களப்பில் உள்ள திமிலதீவிலுள்ள மகாவிஸ்ணு கோயில் அது சித்தர் கோயில்

மட்டக்களப்பில் உள்ள திமிலதீவிலுள்ள மகாவிஸ்ணு கோயில் அது சித்தர் கோயில்

உள்ளடக்கம்


1. ஆலய வரலாறு
2. அடியேன் நாடியதும் அனுபவமும்
3. கண்ணனின் திருவிளையாடல்கள்
4.இவ்வாலய பூசை முறைகளும் திருநவிழாவும்
              


திரு. பாக்கியமூர்த்தி குமரகுருபரன்


1.ஆலய வரலாறு:
       
         திமிலதீவு ஸ்ரீமகாவிஸ்ணு கோயில் இலங்காபுரியின் கிழக்கு        மாகாணத்தில்,மட்டக்களப்பு மாவட்டத்தில், மண்முனை  வடக்கு  
பிரதேச செயலாளர் பிரிவில், திமிலதீவு கிராம சேவையாளர் பிரிவில், அமைந்துள்ளது. அது சித்தர் கோயில். இவ்வாலயம்  முந்நூறு வருடங்கள் பழைமை வாய்ந்தது. இவ்விடத்தில் பழைமையான சிவன் கோயில் இருந்ததாகவும் அழிந்து நிலத்தினுள் இருப்பதாகவும் கூறப்படுகின்றது. அதன் பின்னர் ஆயகுலத்தினர் வாழ்ந்ததாகவும் அம் மக்கள் ஆயகுல கடவுளான கிருஸ்ணருக்கு கோயில் அமைத்து வழிபட்டதாகவும். அங்கு வாழ்ந்த திமிலர்களுக்கும் முக்குகர்களுக்கும் அடிக்கடி போர் நிகழ்ந்ததாகவும் போரினால் அவ்ஊர் அழிந்ததாகவும் கூறப்படுகின்றது. அத்தடன் இவ்வாலயம் போர்த்துக்கேயர் காலத்தில் அழிக்கப்பட்டு கட்டுமானப் பொருட்களை கொண்டு வீச்சுக்கல்முனை என்னும் அயல் கிராமத்தில் “அன்னம்மாள் தேவாலயம்” அமைக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. இவ்வாலயம் ராஜகோபுரமும் சுற்றுமதிலுடன் கூடிய பெரும் ஆலயமாக இருந்திருக்கின்றது. இதன் பின்னர் ஒல்லாந்தராலும் இவ்வாலயம் இடித்தொழிக்கப்பட்டுள்ளது. 
அங்கு ஒர் பழமையான அரசமரம் இருந்தாகவும்.  அம் மரத்தின் கீழ்;  தவயோகி ஒருவர் விநாயகர் ஆலயம் அமைத்து வழிபாடு செய்து வந்தார் என்றும்;. அவருக்கு உதவியாக அந்த கிராமத்தைச் சேர்ந்த மூத்ததம்பி என்பவர் இருந்தார் என்றும்.  அவர் ஒரு நாள் திடீரென   இறந்து போனாரம்;.   அவர் இறந்த செய்தியை சொல்ல அரசமரத்தை அடைந்த போது  மரத்தின்கீழ்; பூஜை செய்து வந்த தவயோகியைக் காணவில்லையாம். தேடிய போதும் அவர் கிடைக்க வில்லை என்கிறார்கள் இறந்தவரை அடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்த வேளையில் இறந்தவரின் கால் பெருவிரல் துடித்து  உயிர்த்தெழுந்து விட்டாராம். எழுந்தவர்  உடனடியாக  அரசமரத்தின் கீழ்  மகாவிஸ்ணுவுக்கு  ஆலயம் அமைக்க பணிக்கப்பட்டுள்ளதாகவும் பூசை முறைகளை தவயோகி கூறியிருப்பதாகவும் கூறியதுடன்  உடனடியாக இப் பணியினை நிறைவேற்ற வேண்டும் எனவும் கூறினாராம் அவர் ஆலயடிச்சோலையில் பெருமரங்களில் கம்பு தடிகள் வெட்டி வரும்படி கூறினாராம். அவ்வேளை அவரது தாயார் (உயிர்த்தவருக்கு) உணவு அருந்த பால்,பழம் கொண்டு வந்த போது ஆலயத்ததை அமைத்த பின்னரே நீர் அருந்துவேன் எனக் கூறினாராம். அப்போது கம்பு தடிகளைக் கொண்டு ஆலயத்தை அமைத்தனராம். அதன் பின் அவ்வாலயத்தில் மகாவிஸ்ஷ்ணுவுக்கு வழிபாடு நடை பெற்றதாகக் கூறப்படுகின்றது. அந்த ஆலயமே இன்றுள்ள திமிலதீவு மகாவிஸ்னு ஆலயமாகும். அப்போது அவர் மணியும்இ கலசமுமஇ; தீபமும் பெற்று வந்ததாக கூறுகின்றனர். அது தற்போது ஆலயத்தில் இல்லை. அப்பரம்பரையில் இருப்பவர்களிடம் இருக்கலாம். கீதையில் கண்ணன் தான் “மாதங்களில் மார்கழி மலர்களில் தாமரை மரங்களில் அரசு காற்றில் தென்றல்” எனக்குறிப்பிடுகின்றார்.
அதன்படி அங்கு அரசமரம் தலவிருட்ஷமாக உள்ளது திருமூலர் கூடுவிட்டு கூடு பாய் வது அவருக்கு ஓர் விளையாட்டு ஒரு முறை வானளாவி வருகையில் வீரசேனன் மன்னன் இறந்தால் மக்கள் பட்ட துயரை அறிந்த மூலர்  அவர்களுக்கு உதவ எண்ணி அவரில் உடலில் கூடுபாந்து. வீரசேனின் உடலில் இருந்த போது அரச வாழ்கை சலிக்கையில்  ஜம்புகேஸ்வர் உடலில் செல்ல வீரசேனனின் உடலை மரப் பொத்தில் வைத்து மந்திர சக்தியைக் கொண்டு மூடினார் அம் மரமே அரசன் உடல் உள்ளிருந்ததால் அரசனின் இறப்பு தவிக்கப்பட்டு அரச மரமானான் இது  திருமூலர் குணவதிக்கு கொடுத் வாக்கு காப்பாற்றப்பட்டது என்றும் ஒரு கதை இருக்கின்றது. 
ஆலயத்தில் அன்று காணப்பட்ட மரமே இன்றும் உள்ளது. அதுவும் இவ்வாலயத்தில் காணப்படும் சிறப்புக்களில் ஒன்றாகும். அத்துடன் அங்கு விஷ்ணு சாளக்கிராமம் இருந்ததாகவும் அதை பூஜையின் பின் கிண்ணத்தில் வைத்து துளசிப்பத்திரம் வைப்பதென்றும் அது இரவில் ஒலி எழுப்புவதாகவும் பின்னர் ஆலயத்தை திறக்கும் போது உணப்பட்ட நிலையில்  சாளக்கிராமம் உயிருடன் இருந்தாக ஐயா என்னிடம் கூறியுள்ளார். சாளக்கிராமங்கள் பொதுவாக வட இந்தியாவின் “முத்திநாத்” அல்லது “சாளக்கிராமம்”  என்னும் சேத்திரதிலுள்ள கண்டகி நதியில் பெறப்படுகின்றது. ஒரு முறை கண்டகி நதியில் துளசியின் சாபத்தால் மலையுருக் கொண்ட விஷ்ணுவாகிய கற்களைக் கொரப்பற்களுள்ள கீடங்கள் தொளைப்பதனால் உண்டாகும் விஷ்ணுவின் உருவங்கள் சாளக்கிராமங்களாகும்.  இவை குக்குண்டரம் போல் அமைந்திருக்கும். இதன் அமைப்பைப் பொறுத்து லக்ஷ்மி நாராயணமஇ; ரகுநாதம், ஸ்ரீதரம், தாமோதரம், ராஜராஜேஸ்வரம், ரணராகம், ஆதிசேஷன், ரகுநாதன், ததிவாமனம், அனந்தம், மதுசூதன், சுதர்சனம், கதாதரம், ஹயக்ரீவம், நரஸிம்மம், லக்ஷ்மிநரஸிம்மம்,  வாசுதேவம், பிரத்யும்நம், சங்கர்ஷணம், அநிருத்தம், என பல வகையுண்டு.  எவ்விடத்தில் சாளக்கிராம் சிலையிருக்குமோ அங்கு ஹரிசாநிந்த்யமாய் வசிப்பார். அவ்விடத்தில் சகல தேவதைகளும் வசிப்பர் எல்லாச் சம்பத்துக்களும் உண்டாகும். இவைகளில் குற்றங்கள்ளுள்வற்றை நீக்கி குணமுள்ளவற்றை வழிபடுதல் வேண்டும். குற்றமுள்ளவை தீமைய பலன்களையே ஏற்படுத்தும்.   இது போன்று சிவலிங்க வடிவங்களும் அங்கு கிடைக்கின்றது. சாளக்கிராம வழிபாடு விஷ்ணு வழிபாட்டில் உன்னதமானது. அதிலும் கல்லினுள் வண்டு உயிருடன் இருந்தது (கீடங்கள்)  என்பது சாத்தியமற்றது. இருந்தும் அவ்வாறான சாளக்கிராமம் இங்கு இருந்திருக்கிறது என்பது விஷ்ணுவின் திருவிளையாடலே அடியேன்னால் அவனருளால்  தற்போது  சாளக்கிராமமும், வலம்புரிசங்கும், திருமுடியும், அங்குள்ளது.      பிற்காலத்தில் அவருடைய பரம்பரையைச் சேர்ந்த அமரர்  வேலாப்போடி சின்னையா விதானையார் குடும்பத்தைச் சேர்ந்த அமரர் சின்னையா வடிவேல் ஐயா அவர்களின் மகன் திரு. வடிவேல் மகேந்திரன் தற்போது பூசகராகவுள்ளார். மறைந்தவர்  தவயோகி சுவாமி சங்குபாலயோகீஸ்வரர் என அறியக்கிடக்கின்றது. 
திமிலதீவுக்கு ஒரு வரலாறு உண்டு. இப் பகுதியில் துமிலர் என்னும் ஓர் இனத்தவர்கள் இங்கு வாழ்ந்;து வந்தனர். இவர்கள் உடல் பலம் மிக்கவர்கள். இவர்களின்  தொழில் வீடுகளில் கண்ணம் வைத்தல். இதற்கு சாதகமாக அமைந்தது தீவு. இவர்கள் கண்ணம் வைக்க பயன்படுத்தியது புளியந்தீவுப் பகுதியாகும். இதனால் வேதனையில் ஆழ்ந்தவர்கள் புளியந்தீவில் வாழ்து வந்த முற்குக மக்கள். புளியந்தீவுப் பகுதியில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் பட்டானிகள் எனப்படும் அபியர்கள். ஒரு முறை துமிலர்கள் தமது விளையாட்டை பட்டானிகளிடம் காட்ட அவர்களும் பலமிக்கவர்கள் என்பதால் இவர்களை துரத்திச் சென்று தோற்கடித்து  கொன்றனர். சத்துருவைக் கொன்றதால் அவ்விடம்  சத்துருக் கொண்டான் எனப்பட்டது. அவர்கள் துரத்திக்கொண்டு ஏறிய ஊர் ஏறாவூர். அவர்கள் பின்  வந்து இளைப்பாறிய மூலை  வந்தாறுமுலை எனப்பட்டது. பின்னர் பட்டானிகளின் பாதுகாப்பு தொடர்ந்து தேவைப்பட்தனால் புளியந்தீவு மக்களால் அவர்களுக்கு பெண்களும் நிலமும் கொடுத்தனர். தம்மை காத்த குடியினர் எனவும் அழைக்கப்பட்டனர். இவர்கள் தான் காத்தான்குடியில் வாழும் சகோதரமக்களான இஸ்லாத்தை பின்பற்றிய தமிழர்கள். என வரலாறு ஒன்று கூறுகின்றது. இவர்களில் இன்னோர் பகுதியினர்   ஏறாவூரிலும் வசிக்கின்றனர். இவர்களிடம் தழிழர்களுக்கிடையில் இருக்கும் குடிவழமை இன்றும் இருக்கின்றது. அத்துடன் அயல்கிராமங்கள் தமிழகள் வாழும் கிராமங்களாக கானப்படுகின்றது. இதன் பின் திமிலதீவு முற்குகர் கையில் வந்தது. அப்போது கண்டிய மன்னன் அட்சியில் நிலமை என்னும் பதவி பொற்றிருந்தவர் வேலாப்போடி இவர் முற்குகரின் தலைவராக இருந்திருக்கின்றார். இவர் சித்தவைத்தியத்திலும் மந்திரதந்திரத்திலும்  சிறந்தவராக இருந்திருக்கின்றார். இவருடைய மகன்; தான் வேலாப்போடி மூத்ததம்பி இவர் தான் இறந்து உயிர் பெற்றுத் திரும்பியவர் எனக்கூறுகின்றனர்.  
2.அடியேன் நாடியதும் அனுபவமும்:
         அத் திமிலதீவு ஸ்ரீ மகாவிஷ்ணு என்னையும் அழைத்தார். நான் 2002ம் ஆண்டு இந்திய தலயாத்திரை மேற்கொண்ட போது. ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீரங்கநாதரை தரிசனம் செய்ய சென்ற போது தரிசனத்தில் பூரணத்துவத்துக்கு அங்குள்ள ஐயங்காரர்கள் தடையாக அமையவே மனம் வருந்தியவனாக வேண்டுதல் செய்துவிட்டு வந்தேன். தலயத்திரையை முடித்து விட்டு 2002இல் இலங்கை திரும்பியதும். ஒரு நாள் அதிகாலையில்  கனவில் தோன்றிய மாயன் ஆலயம் ஒன்றினைக்காட்டி அங்கு வருமாறு அழைப்பு விட்டார். விளித்தெழுந்ததும் யோசித்துப்பார்த்தேன். எனக்கு அவ்விடம் புரியாத புதிராக இருந்தது பின்னர் காட்டப்பட்ட அடையாளங்களை அடிப்படையாகக் கொண்டு இடத்தை அறிந்து அங்கு சென்றேன். அங்கு பூசகரை கண்டு கதைத்து விட்டு பூசையில் கலந்து கொண்டேன். அப்போது அங்கு இருந்தவர் திரு. சின்னையா வடிவேல் ஐயா அவர்கள். அவர் எனக்கு எப்போதும் உறுதுணையாக இருந்தார். நான் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் சென்று தியானத்தில் இருப்பது வழமை. பூஜை முடிந்து சில நிமிட நேரத்தின் பின் தான்  தியானத்தை விட்டு எழுவேன்;. அது வரை ஐயா காத்திருப்பார். பின்னர் ஞான அனுபவங்களை பகிர்வது வழiயாகிற்று ஒரு நாள் தியானத்தை விட்டு எழுந்த போது ஐயா கேட்டார் இவ்வாலயத்தில் நான் இருக்கும் போது மூன்று விடயங்கள் நிறைவேறவேண்டும். அப்போது நான் திகைத்துப் போனேன். ஐயா நீங்கள் கண்ணனுடன் உரையாடுபவராச்சே என்றேன். அதற்கு அவர் ஒன்றும் பேசாது மீண்டும் என்னிடம் அதே கேள்வியை கேட்டார். அப்போது நான் என்ன வென்று கேட்ட போது என்னுடைய காலத்தில் முதலில் இவ் ஆலயத்தில் பழமையாக இருக்கின்ற கருடமண்;டபம் புதுப் பொலிவு பெறுமா? அடுத்து முன்னூறு வருடங்களாக எனது மூதாதையர் தேடியும் கண்டுபிடிக்கப்படாத அபிஷேகத்துக்கு தேவையான சுத்த நீர்க்கிணறு கண்டுபிடிக்கப்படுமா? அடுத்தது புனருத்தாரன மகா கும்பாவிஷேகம் ஒன்று நடைபெறுமா? என்று கேட்டார். அதற்கு என்னுள்ளிருந்து உள்ளுணர்வு உணர்தியது அது நடக்குமென கூறினேன். ஐயா சந்தோசமடைந்தார்.
ஆலயத்தின் தோற்றம்
    2002 இல் இந்திய தலயாத்தரையின் பின் முதலில் சுத்தமான நீர் கிடைத்தது. இதற்கொரு காரணமாயி ருக்கின்றது.  எனது மனையாளுக்கு தீராதவியாதி ஒன்று எற்பட்டு இருந்தது. இவ்வியாதியை போக்க வைத்திய நிபுணர்களின் உதவியை நாட பயனளிக்கவில்லை. முதலில் மகாவிஸ்ணுவை நாடி திமிலதீவை அடைந்து அங்கு வழிபட்ட பின்  என் குலதெய்வம் மகமாரியை வேண்டி நான் வழிபடும் மதுரைமீனாட்சியை வேண்டினேன். அப்போது அம்பிகை எமது சகோதர இனத்தைச் சேர்ந்த மதுரவீரன் வாலாயமுள்ள கேகாலை என்னுமிடத்தைச் சேர்ந்த திரு.மு.வு. சேலிவரத்தின என்பவரை அனுப்பி வைத்திருந்தாள். அப்போது அவருடைய சக்தியை பயன்படுத்தி நோய் சுகப்படுத்தப்பட்டது.   இது முற்பிறப்பு விணை  இப்பிறப்பு நன்மையே மகாவிஸ்னுவும் அம்பிகையும் நோயிலிருந்துகாத்தனர். திரு.மு.வு. சேலிவரத்தின என்பவரை எனக்கு தெரியாது. அம்பிகையை சரணடைந்தால் எமக்கேன் கவலை. அதன் பின் அவர் உங்களின் பணிகனை நிறைவேற்ற எனக்கு பணிக்கப்பட்டுள்ளது. வேறு என்ன செய்யவேண்டும் என்றார். பின் மகாவிஸ்ணு ஆலயததுக்கு அழைத்துச் சென்றேன். அங்கு என்னை ஆலயத்தை சுற்றிவருமாறு கண்ணண் சொல்கின்றார் என்றார். அப்போது அடியேன் சுற்றி வருகையில் ஓர் இடத்தில் நின்றேன். அங்கு கிடங்கலுமாறு கூறினார்.  பின்னர் நிலத்தை நீர் பெற அகன்ற  போது நீரைக்காணவில்லை அப்போது ஐயா என்னிடம் கேட்டார் ஒன்றையும் காணவில்லை என்று அப்போது என் உள்ளுணர்வு சென்னது சென்னதை செய். இதையே ஐயாவிடம் கூறினேன். அதன் பின் நீர்கசிவு ஏற்பட்டது. அதை உடன் அபிஷேகம் செய்யுமாறு கூறினேன். அதன் பின் நீர் வந்துவிட்டது. ஐயா என்னிடம் கூறினார் ஆலய சரித்திரத்தில் நீயும் ஒருவனானாய் என்றார். அதுவல்ல உண்மை அது பிராத்தம் என்பதே உண்மை. வந்தவர் அவரின் சக்தி பயன்படுத்தி ஆலயவரலாற்றை கூறியதுடன் இவ்வாலயத்துக்கும் எனக்கும் உள்ள தொடர்யையையும் கூறினார். ஐயா அதிசயித்தார். அடுத்து கருடமண்டபம் திரு. கணேசானந்தம் குடும்பத்தினரால் நிறைவேறியது. அடுத்து மகாவிஸ்ணு அடியார்களால் குடமுழுக்கு நிறைவேறியது. 
அமரர் சி.வடிவேல் ஐயா அவர்கள்
தீர்தக் கிணறு
 அவை அனைத்தும் ஐயாவின் காலத்தில் ஐயனை கருவியாகப் பயன்படுத்தி நிறைவேறியது. அது அவனின் திருவிளையாடல். 
அவ் ஆலயத்துக்கு செல்லத் தொடங்கிய பின் மூன்று வாரத்தின் பின் சுவாமி ஸ்ரீ சத்திய சாய் பாபா வின் அபூர்வமான காட்சி கிடைத்தது. அதன் பின்னர் பின் மூன்று வாரத்தின் பின் குருதேவர்  ஸ்ரீஇராமகிஷ்ணரின் அபூர்வமான காட்சி கிடைத்தது. இது போன்று பல சித்தர்களின் காட்சிகள் கிடைத்தது. இக் காட்சிக்கும் எனக்கும் என்ன தொடர்பு என்று சிந்தித்தேன். அப்போது தான் எனக்குப் புரிந்தது இருவரும் மகா விஷ்ணுவின் அவதாரம் என்பது. என்னை ஆன்மீக நாட்டத்தில் ஈடுபடகாரணமாக அமைந்தது குருதேவர் ஸ்ரீ இராமகிஷ்ணரின் வாழ்கை வரலாறு அடங்கிய அமுதமொழி இது அண்ணாவால் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. எனக்கொரு காலத்தில் மனக்குழப்பமும் அமைதியின்மையும் காணப்பட்டது. (1990இல்) இதை உணர்ந்த எனது தந்தை அமைதிக்கு ஒரே வழி குருதேவரின் அமுதமொழி தான் என்று என்னிடம் கையளித்தார். எனது தந்தை குருதேவரின் வழி நிற்பவர். உண்மையில் அது தான் மன அமைதியையும் உண்மையான ஆன்மீகப்பாதைக்கு அடிகோலியது எனலாம். அதனால் தானோ குருதேவரின் திவ்யதரிசனம் கிட்டியதோ என்று எண்ணினேன். இது போன்று பல சித்தர்கள் மகரிஷிகள் தரிசனங்கள் கிடைத்தது.  இது சித்தர் கோயில் அல்லவா?
3.கண்ணனின் திருவிளையாடல்கள்:
இவ்வாலயத்தின் நடைபெற்ற அதிசயங்களை ஐயா என்னுடன் பகிர்ந்து கொள்வார். அவற்றில் சிலவற்றைக் குறிப்பிடலாம் என நினைக்கின்றேன்;;.  கொக்கட்டிச்சோலை தான்தோன்றிஸ்வரர் ஆலயத்துக்கு பூசைக்காக திமிலதீவிலிருந்து தனது மூதாதையினர் முதலையை மந்திரசக்தியை கொண்டு அழைத்து அதில் ஏறி சென்று திரும்பி விடுவதாக கூறினார். அதிலிருந்து தெரிகின்றது கண்ணனுக்கு பூசை செய்த பரம்பரையினர் மந்திரசத்தி உள்ளவர்களாக இருந்திருக்கின்றனர். இவ்வாலயம் அக்காலத்திலிருந்து அரவம் தீண்டியவர்களை காப்பதிலும், சித்தசுவாதீனமுற்றோரை சுயநிலைக்கு கொண்டு வருவதற்கும், பில்லிசூன்யத்தினால் ஏற்படும் தீயவிளைவுகளிலிருந்து காப்பது போன்ற விடயங்களுக்கு இவ்வாலயம் தனிச்சிறப்பு வாய்ந்ததாக காணப்பட்டது. 


             1978இல் இலங்கையின் கிழக்குப்பகுதி சூறாவளியினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதில் திமிலதீவும் ஒன்று. அப்போது  சூறாவளி வீசி சிறிய இடைவெளியின் பின் மறுமுறை வீசியது இரண்டம் முறை வீசிய போது ஐயா வீட்டில் இருக்க முடியாமையினால் கோயிலின் உட்செல்ல விளைந்த போது அவரால் முடியாமல் தவித்த போது ஒருவர் வந்து புயலால் சரிந்து கிடந்த அரசமரக் கிளையை ஒருகையால் தூக்கிவிட்டு ஐயாவை உட்புகுமாறு பணிக்க ஐயா உட்புகுந்தபின் திரும்பிப்பார்த்த போது அவரைக் காணவில்லை. வெளியில்  பார்த்த போதும் அரசமரத்தில் உச்சிப்பகுதியில் ஓர் பிரகாசமிருப்பதை அவதானித்தனர். அப்பிரகாசம் அதிகாலை வரை நீடித்தது காலையில் மறைந்து விட்டதாக கூறினார். இன்றும் அவ்வொளி இருந்த பகுதி அரசு பங்குனி மாதத்தில் புதிய தளிர் வருகின்ற போது அவதானிக்க முடியும். ஒளி இருந்த உச்சிப்பகுதி வெண்ணிறமான தளிரும் ஏனைய பகுதியில் சென்நிற தளிரும் காணப்படும். அது தொப்ப ஒன்று போட்டால் போல காணப்படும். நான் அவ் ஆலயத்துக்கு  சென்ற ஆரம்பத்தில் அவதானித்து கேட்ட போது ஐயா இந்த விடையத்தை எனக்கு கூறினார்.
இது மட்டும் அல்ல இவ் ஆலயத்துக்குள் அதிகாலையிலும் விசேடகாலங்களிலும் பிரபஞ்சத்தின் ஒளி வந்து இறங்குவது வழமை இதை பலரும் அவதானித்துள்ளனர்.
 எமது பகுதியில் போர்சூழல் காணப்பட்ட காலத்தில் இவ் ஆலயம் பாதுபாப்பு படை வசம் இருந்தது. அக் காலத்தில் பூசைக்காக ஐயா மட்டும் அனுமதிக்கப்படுவாராம். ஒரு நாள் மட்டக்களப்பிலுள் டச்சுக் கோட்டையில் அதி காலையில் பாதுகாப்பில் ஈடுபட்ட படையினர் திமிலதீவில் ஒளிப்பொருள் ஒன்று உட்புகுவதை   அவதானித்தனர். அப்போது அவர்கள் படைமுகாம் தாக்கப்படுவதாக எண்ணி அபாய ஒலி விளிப்பூட்டி தொடர்பு கொண்ட போது எதுவும் நடைபெறவில்லை பின்னர் உண்மையை அறிந்து ஆலயப்பகுதியை வழிபாட்டுக்கு அனுமதித்து படையினர் ஒதுங்கிக்கொண்டனராம். இவ்வாறான நிகழ்வுகள் இப்போதும் நிகளுகின்றது. 2006 ஆம் ஆண்டு திரு.கணேசாநந்தத்தின் திருவிழாவின் போது இரவு பதினொரு மணியிருக்கும் போது பச்சை நிற ஒளியாக கருடபகவானில் மகாவிஸ்ணு வந்து ஆலய மூலத்தூபிளுள் சென்றதை எல்லோரும் கண்டு “நமோ நாரயண” என்று பரவசமடைந்ததை நானும் கண்டேன். அச்சமயம் நான் ஆலயத்துள் தியானத்தில் ஆழ்திருந்தேன். 
திமிலதீவு மகாவிஸ்னு கோவிலின் குருக்கள் பெருமதிப்புக்குரி;ய திரு.சின்னையா வடிவேல் ஜயா என்னிடம் கதிர்காமக்கந்தனின் திருவிளையாடலை எனக்கு கூறியிருந்தார். அவர் கதிர்காமகந்தனிடம் பேரன்பு கொன்டவர். அவர் தனக்கு நேர்ந்த வாழ்க்கைக் கஷ்டங்களை போக்க கந்தனிடம் வேண்டி  கதிர்காமம் சென்ற போது மாணிக்க கங்கைக் கரையில் இரவு வேளையில் இருந்போது கங்கைக்குள் ஒளிமிக்ககல் ஒன்றைக்கண்டார். அக்கல்லை எடுத்து தனது மடிக்குள் ஒழித்துவைக்கையில் அதன் பிரகாசத்தை மறைக்முடியவில்லை. இது இப்படி இருக்க மழையும் வந்துவிட்டது. மழைக்கு ஒதுங்கும் போது வயதான சன்னியாசியும் பக்கத்தில் ஒதுங்க இவருக்கு பயம்பிடித்து விட்டது. கல்லை பறிக்க தான் இவர் வந்துள்ளார். என அவருடன் வாதிட சண்டை உரக்க சிறிதுநேரத்தில் கல்லையும் கணவில்லை சண்டையிட்டவரையும் காணவில்லை. என்று கூறி மாயையில் மயங்கி மாயனை இழந்தேன் என்றார். பின்னர் கவலையடைந்த நிலையில் (திமிலதீவுக்கு) வீடு திரும்பினார்.   வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது மயில் ஒன்று வந்து தனது வேட்டியை இழுத்து எழுப்ப  அங்கு சந்தைப்படுத்தல் திணைக்களத்தின் காரியாலய உதவியாளர் நிற்பதைக்கண்டார். அவர் தன்னை உடனடியாக திணைக்களத்தலைவர் வரும்படி கூறினாராம். அங்கு சென்ற போது வேலையை பொறுப்பேற்க்கும்படி கேட்டாராம். இதன்மூலம் கிடைத்த வேலையால் தான் தற்போது ஓய்வூதியம் பெறுகின்றேன் என்றார். எனவே கதிர்காமம் முருகனாக சித்தர்கள் நடமாடும்பூமி. எனவே திமிலதீவு மகாவிஸ்னு ஆலயமும் சித்தர்கோயில் தான் இதனால் தான் ஐயாவுக்கும் இவ்வாறான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
ஆலயமும் அரசமரமும்
ஐயாவின் தந்தையான சின்னையா விதானியார் முருகனின் தீவிரமான பக்தன் அவர்காலத்தில் மகாவிஸ்ணு ஆலயத்துக்கு அருகில் ஒரு பெரிய முருகன் ஆலயம் அமைக்க எண்ணி அடித்தளமிடப்பட்தாம் அதன்பின் அவ்வாலயம் கட்டப்படவும் இல்லை அதன் பின்        திரு. சின்னையா விதானியாரும் சுகவீனமுற்றுப் போனதாகவும் அங்கு மகாவிஸ்ணு ஆலயத்தை தவிர வேறு ஆலயம் அமைக்க கண்ணன் விரும்பவில்லை போலும். அங்கு இப்போது பரிபாலன மூத்தியாக முருகபெருமானுக்கு ஓர் ஆலயம் உண்டு.  ஐயா ஓரு முறை சத்தி உபாசனை செய்ப புறப்பட்டு ஆலயத்தின் பின் ஓர் இடத்தில்  ஓலையால் குடில் அமைத்து நாற்பத்தெட்டுநாள் உபாசனையில் இறங்கிய போது யாக குண்டம் அமைப்பதில் ஏற்பட்டசந்தேகத்தை தீர்க்க சக்தி அங்கு வந்து சந்தேகத்தை தீர்த்ததாகவும் ஐயா என்னிடம் கூறினார். அங்கு ஆலயத்தின் பின் பகுதியில் காளிகோயில் ஒன்று உண்டு. அதற்கான தற்போதுள்ள விக்கிரகம் ஆலயப் பணத்தில் ஐயாவின் வேண்டு கோளின்படி நானும் எனது நண்பர் திரு.தம்பிராஜ ஈஸ்வரராஜாவும் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட விக்கிரகம் எடுத்துக் கொடுத்தோம். அதில் என்ன அதிசயம் என்றால் அம்பாளின் வடிவம் முற்புறமும் பிற்புறமும் உண்டு. இருபுறமும் வழிபடத்தக்கது என்பது சிறப்பு. 

ஐயாவின் இறுதிக்காலத்தில் ஓரு நாள் வழமை போன்று தியானத்தில்லிருந்து எழும்போது கேட்டார் எனது காலத்தின் பின் என்ன நிங்களும் என்று கேட்டார் அதந்கு என் உள்ளுணர்வு கூறியது ஐயாவின் மகன் திரு.வடிவேல் மகேந்திரன் சக்தி பெறும் வரையில் கண்ணன் அடியவர்களின் வேண்டு தல்களை அவரே நிறைவேற்றுவார் தொடர்பாளர் தேவையில்லை இதுதான் நடக்கும் மென்றேன் அதற்கு அவர் அதுதான் நடக்கப் போகின்றது என்றார். ஐயா அதைக் குறிப்பிட்டு ஒரு சில வாரங்களின் பின் சிவபதமடைந்தார்.




4.இவ்வாலய  பூஜை  முறைகளும்            திருவிழாவும்: 


இவ்வாலயத்தில்  தினப்பூசை மூன்று காலங்களிலும் பூசைநடை பெறுவதில்லை வாரத்தில் வெள்ளி சனி ஆகிய தினங்களில் உச்சிகால வேளைப்பூசையே நடைபெறுகின்றது. அதுவும் வெள்ளிக்கிழமையில் பூசை அரம்பிக்க பிற்பகல் மூன்றுமணிக்கு மேலாகின்றது. எப்படி ஆயத்தம் செய்தாலும் அந்தநேரமே நடை பெறுகின்றது இதுவும் வேறு ஆலயங்களில் இல்லாத சிறப்பு.  அதில் வெள்ளிக்கிழமை மகாவிஷ்ணுவுக்கு விசேட பூசை நடைபெறுகின்றது. அன்று மட்டும் தான் பக்தர்களின் வேண்டு கோள்களை பூசகர் கேட்டு அதற்கு கண்ணனிடம் பதில் கேட்டு சொல்வது வழமை அதன் படி அடியார்கள் செயல்பட்டால் தமது வேண்டுதல்; நிறைவேறுவதாக நம்புகின்றனர். அதன்படி நிறைவேறுவது வழக்கமாகும். பின் நூல்கட்டுதல், திருநீறுபோடுதல், கூடுபோடுதல், போன்றன இடம் பெறுகின்றது. பூசையின் பின் முன் உள்ள ஆற்றங்கரைப்பகுதியில் பில்லி, சூனியம், கெடுதிகளின் களிப்பு இடம் பெறுகின்றது. இதன் மூலம் பயனடைந்தவர்கள் ஏராளம்.  சனிக் கிழமை சனிஸ்வரருக்கு விN~ட பூசை நடைபெறுகின்றது. அன்று கண்ணனுக்கு பூசை செய்து விட்டு. சனிஸ்வரனுக்கு பூசைநடைபெறும். அன்று சனீஸ்வரனது வேண்டுதல்கள் இராகுகேது தோசம் போன்றவற்றுக்கான பரிகாரங்கள் இங்கு இடம் பெறுகின்றது. இங்கு சனிஸ்வரருக்கு தனியான சன்நிதியுள்ளது. மட்டக்களப்பில் இங்கு மட்டும் தான் தனியான சன்நிதியுள்ளது. இது தனிச்சிறப்பாகும். 
இவ்வாலயத்தில் கருவறையில்  ஸ்ரீ மகா விஷ்ணு வின் விக்கிரகம்  மட்டும் தான் இருக்கின்றது. அதைக் கேட்ட போது வருடாந்த உற்சவத்தின் போது இறுதி நாள்  வைகாசி அமரபக்க இருத்தையில் திருக்கல்யாணம் நிகள்வுகள்; ஆரம்பித்து அதிகாலையில்  அமாவாசைதிதியில் திருக்கல்யணம் நிகளுகின்றது.  இதற்காக கல்யாணக் கால் வெட்டும் நிகழ்வுவென்று  உண்டு. அன்று ஊர் மக்களில் பெண்கள் அனைவரும் கற்பூரச் சட்டி எடுப்பதும். ஆண்கள் காவடி எடுப்பதும் சிறப்பம்சமாகும். கலியாணக் கால் வெட்டச் செல்லும்  போது நிலபாவாடை விரித்து இருபுறமும் கற்பூரச்சட்டி ஏந்தியும் செல்வார்கள். வரும் போதும் அவ்வாறே அமையும். கலியாணக்காலுக்கான வேப்பை மரம் வெட்டுவதற்கு சில தினங்களுக்கு முன்னதாக கண்ணன்  கலியாண காலுக்கான மரம் இருக்கும் இடத்தை கூறுவதாக கூறுகின்றனர். அந்த மரத்துக்கு அன்றையத்தினம் அபிஷேகம் செய்து மடைவைத்து  பூசகரால் உருவேறிய பின் வெட்டுகின்றார். இங்கு மந்திரம் ஏதுவும் சொல்வதில்லை  தானாகவே நடக்கின்றது. இதுவும் அங்குள்ள சிறப்பாகும். கல்யாணக்கால் வெட்டி வந்து ஆலயத்தை அடைந்ததும் அடியார்கள் இடை இடையே வளி மறித்து வேண்டுதல் செய்கின்றனர். இவ்வேண்டுதல்கள் நிறைவேறியவர்கள் அடுத்து வரும் வருட திருவிழாவி ல் நெர்த்திக்கடனை நிறைவு செய்கின்றனர்.  வெட்டப்பட்ட கல்யாணக் காலை இராதையாக உருவகிக்கபட்டு பூசகர் கண்ணனனாக பாவனை செயப்பட்டு இத் திருகல்யாணம் அதிகாலையில் நடை பெறுகின்றது. திருமணம் நிறைவு பெற்றதும் அடியார்கள் வேண்டுதல் செய்து பூசகருடன் கலி யாணக்காலை வளைக்கின்றனர். அப்போது கலியாணக்காலில் பணம் செலுத்துகின்ற வழமையும் இங்கு இருக்கின்றது. கலி யாணக்காலுக்கான பந்தல் அமைத்தல் ஆற்றுகப்பாலுள்ள கன்னங்குடாமக்களின் உபயமாக இருக்கின்றது. இதனால் அவர்கள் அங்கு வந்து அழகுறபந்தல் அமைக்கின்றனர். பந்தலில் பலவகையான பழங்கள் தொங்கவிடுகின்றதுடன் மாவிலை தென்னங்குருத்து மண்டு ஓலை என்பவற்றால் அழகுற அலங்கரிக்கின்றனர்.  திருமணகூறதாலிப் பெட்டி அமரர் சின்னையா வடிவேல் ஐயாவின் சகோதரியான திரு.திருமதி. கனகநாயகம் பாக்கியலட்சுமி குடும்பத்தினரே கொண்டு வருகின்றனர். அவர்களே பொண் வீட்டார். அன்று வினாயகர் பனையும் எழுந்தருளச்செய்கின்றனர். அன்று உச்சிக்காலை பூசையின் பின் திருமணச்சாப்பாடு கொடுக்கப்படுகின்றது.  இதனால் தான் லட்சுமி சதேராக ஸ்ரீ மகா வி~;ணு இங்கு இல்லை.      அந்நிகழ்வு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். முன்னர் உள்ள ஒன்பது நாட்களும் கண்ணபிரானின் லிலைகள் திருவிழாவில் சுவாமி வலம் வருகின்ற போது நடித்துக்காட்டப்படும்.    திருவிழாவில் இரண்டு சுவாமிகள் வலம் வருகின்றது. அதில் ஒன்று ராதை யதோசை சமேத கண்ணன் மற்றையது நாற்புறமும் மறைக்கப்பாட்ட தேர். ஸ்ரீ மகா வி~;ணு இருக்க திருவிழாவின் நிகழ்வுகள் அனைத்தும் கண்ணபிரானுக்கே நிகழ்வது இங்குள்ள சிறப்பம்சமாகும். அத்துடன் கண்ணன் கோவில் என்று தான் பத்தர்களும் அழைக்கின்றனர். அடுத்து வரும் வெள்ளிக்கிழமை சனிஸ்வரர் அமுது கொடுக்கப்படுகின்றது. அவ் அமுதில் முருங்கை இலைச்சுண்டல் விசேசமாக அமைகின்றது 
      எனவே இவ் வகை சிறப்பு மிக்க ஸ்ரீ மகா வி~;ணு என்னையும் ஆட்கொண்டார்.  அது முன்வினைப் பயனே என்றால் அது மிகையாகாது. அவன் வழி நின்று பயன் பெறுவோம். 


வாழ்கைப் பயணம் என்பது கரடுமுறடான கல்முள் உள்ள செப்பனிடாத பாதையே அதற்கு காரணம் நாம் செய்த வினைப் பயனே அப் பாதை சிலருக்கு ஓர் அளவு செப்பனிடப்பட்டதாகவும் அமைகின்றது. அதுவும் செய்த வினைப் பயனே ஆனால் கண்ணனின் பாதையில் வெற்றி கொள்வது “முயல் கொம்பை” ஒத்தது. எனது அனுபவம் மட்டுமல்ல அங்கு வரும் பலரின் அனுபவம். சோதனை என்று ஒன்று இருந்தால் வெற்றியும் தோல்வியும் உண்டு. பெரும்பாலும் அலுத்து போபவர்கள் தான் அதிகம். அதில் வெற்றி பெற்றவர்கள் விடாப்பிடியும் வைராக்கியம் உடைய ஒரு சிலர் தான். கண்ணன் மாயன். மாயையில் மூழ்க செய்து மறைந்து விடுவான். அதனால் வந்த வினையின் விளைவால் வருந்தி அழைக்க காட்சி கொடுத்து விடுவிப்பான். இதுவே அவன் திருவிளையாடல். 
  இங்கு குறிப்பிட்டவை அனைத்தும் நேர்காணலும் அடியேனின் அனுபவமும் தான். ஆலயத்துக்கு செல்லும் போதெல்லாம் ஐயா என்னுடன் அனுபவபகிர்பு செய்வது தான் வழக்க மாகிவிட்டது. இது தான் இக்கட்டுரைக்கு அடிப்படையாக அமைந்தது என்பதில் ஐயமில்லை. 






Monday, May 9, 2011

சாளக்கிராமங்கள் விஸ்ணு சுயம்பு வடிவங்களே இதை வழிபட்டால் சகல தேவதைகளையும் வழிபட்டபலன் உண்டாகும்.

சாளக்கிராமங்கள் விஸ்ணு சுயம்பு வடிவங்களே இதை வழிபட்டால் சகல தேவதைகளையும் வழிபட்டபலன் உண்டாகும்.



சாளக்கிராம வரவாறு: 
              சாளக்கிராமங்கள் பொதுவாக வட இந்தியாவின் “முத்திநாத்” அல்லது “சாளகிராமம்”;  என்னும் சேஷ்த்திரதிலுள்ள “கண்டகி” நதியில் பெறப்படுகின்றது. ஒரு முறை கண்டகி நதியில் துளசியின் சாபத்தால் மலையுருக் கொண்ட விஷ்ணுவாகிய கற்களைக் கொரப்பற்களுள்ள கீடங்கள் தொளைப்பதாலுண்டாம் விஷ்ணுவின் உருவங்கள் இவை குக்குண்டரம் போல் அமைந்திருக்கும்.
            சாளக்கிரமம் சம்பந்தமாக பல்வேறு கதைகள் உண்டு. கந்தப்புராணத்தில் பால்கடலை கடைய தேவர்களும் அசுரர்களும் மந்தாரமலையை மத்ததாகவும் வாசுகிப் பாம்பை நாணாகவும் கொண்டு அமுதம் கடைகையில் அமுதம் அசுரர்களை அடைந்தால் உலகம் அழிந்து விடும் என எண்ணி விஷ்ணுவை வேண்ட விஷ்ணு மோகினி வடிவங்கொள்ள அசுரர்கள் மயங்க இதைக்கான ஆசை உற்று சிவபெருமான் அங்கு சென்ற போது   மோகினியை கண்டு மயங்கிய சிவபெருமானின்;  கை மோகினி மீதுபட நாணமுற்ற மோகினி கண்டகி நதியாக மாறியது. அன் நதியில் வஐ;ரதந்தம் என்னும் புழு உண்டானது. இப் புழுக்கள் களிமண்ணினால் கூடுகட்டி கூட்டிளுள் வாழ்கின்றன. இக் கூடுகள் கண்டகி நதியில் கலக்கும் போது புழுக்கள் இறந்து போகின்றன. அவற்றின் கூடுகளே  சாரக்கிராமங்கள் ஆகின்றன. என்றும், சாளக்கிராமம் என்பது சாளரம் என்னும் ஒரு வகை மரங்கள் நிறைந்த கிராமம்   காலப்போக்கில் சளாக்கிராமமாயிற்று என்றும். இன்னுமோர் கதையில்  சாளக்கிராமத்தில்  வேசி ஒருத்தி வசித்து வந்தாள் அவள் தம்மை நாடி வரும் ஆண்களை தமது உண்மை கணவனை திருத்திப்படுத்துவது போல் மனமுவந்து உபசரித்தும் வந்தாள். ஒரு நாள் ஒருவர் வந்து முத்தும் மணிகளும் வழங்கி சுகம் அனுபவிக்காது சென்ற போது மனம் வருந்தினாள்.  அன்று அதிகாலை மீண்டும் அவன் வந்த போது அவன் களைப்படைந்து இருந்ததை அவதானித்த அவள் உடலை சுத்தம் செய்த போது உடலில் கு~;ரரோகம் இருந்ததை அவதானித்தும் அவனுடன் மனங்கோனாது அனுபவிக்க அவன் அன்று காலையில் இறந்து போனான். இறந்தவனை தன்கணவனாக ஏற்று இறுதிக்கிரிகை செய்து உடன் கட்டை ஏறும் போது வி~;ணு காட்சி கொடுத்து.    (பதிவிரதையாக இருந்த) அவளிடம் வி~;ணு மூன்று வரம் கேட்குமாறு கூற அவள் நாராயனனுடன் இருக்வேண்ட  அப்படியே ஆகட்டும்மென்றார். அதன்படி கண்டகி நதியானாள் என்றும் பல கதைகள்  கூறுகின்றனர்.
சாளக்கிராமத்தின் அமைவிடம்:
கண்டகாவதி என்ற “கண்டக்” என்ற நேர்பாள செல்லிலிருந்து வந்தது. “ஹரண்;ணியவதி” என்னுமொரு பெயரும் உண்டு. இதனை “ஸ்வர்ணமயம்” என்பர். கண்டாக் நதியில் ஸ்வர்ண ரேகைகள் உள்ள சாளக்கிராமம் கிடைக்கின்றன இது விஷெசமானது.  நேர்பாளத்தில் “மாஸ்டாங்” என்னும் மாவட்டத்தில் ஐயாயிரம் (5000 அடி) அடி உயரத்துக்கு மேல் உள்ளது “தாமோதர பீடம்” இவை தாட்சாயினியின் கன்னத்துண்;டுகளி லிருந்து இது தோன்றிய பள்ளங்களால் உண்டான சிகரங்களாகும். இவ்வகையான பனிச்சிகரங்கள் புவியில் அறுபதுக்கு (60) மேற்பட்டவை உண்டு. சிகரத்திலுள்ள பனி உருகி ஏரியாகமாறி புவியையடைகின்றன. இதில் ஒன்று “தாமேதர குண்டம்” இது  திபேத்தின் எல்வையில் இருக்கின்றது. இக் குண்டத்திலிருந்து வரும் நதியே “கண்டகி நதி” ஆகும். நேர்பாளத்திலிருந்து கட்மாண்டு என்ற நகரத்துக்கு வடமேற்குத்திசையில் இருநூற்ஐம்பது கிலோமீற்றர் (250); தொலைவில் உள்ளது கண்டகிநதி.  அன்நதியின் கரையில் அமைந்துள்ளது சாளக்கிராமம்; என்னும் இடம். இங்குதான் சாளக்கிராமங்கள் பெறப்படுகின்றது.
சாளக்கிராமத்தின் வகைகள்:
            இதன் அமைப்பைப் பொறுத்து  லஷ்மி நாராயணம், ரகுநாதம், ஸ்ரீதரம், தாமோதரம், ராஜராஜேஸ்வரம், ரணராகம், ஆதிசேஷ்ன்;, ரகுநாதன், ததிவாமனம், அனந்தம், மதுசூதன், சுதர்சனம், கதாதரம், ஹயக்ரீவம், நரஸிம்மம், இலசஷ்மிநரஸிம்மம்,வாசுதேவம், பிரத்யும்நம், சங்கர்ஷணம், அநிருத்தம், என பல வகையுண்டு. ஒரு துவாரத்தில் நான்கு சக்கரமும் வனமாலையும் ரதாகரமும் நீர் கொண்ட மேகநிறமாக உள்ளது லஷ்மி நாராயணம், வனமாலை இன்றி மற்றவற்றைப் பெற்றது லஷ்மிஜநார்தனம் இரண்டு துவாரங்களுள் நான்கு சக்கரங்களும் ராதாகiமாகவும் உள்ளது ரகுநாதம் இரண்டு சக்கரமுள்ளது வாமனம் வநமாலையுடன் இரண்டு சக்கரமுள்ளது ஸ்ரீதரம் விருத்தாகாரமாகவும் இரண்டு சக்கரமுள்ளது தாமேதரம் மிகப்பெரியதும் மிகச்சிறியதுமாகாமல் ஏழுசக்கரமும் சரத்பூசணத்துடன் கூடியது ராஜராஜேஸ்வரம்; விருத்தாகாரமாய் இரண்டு சக்கரத்தோடும் அம்பறாத்தூணியும் பாணஅடியுமுள்ளது ரணராகம் பதின்நான்கு சக்கரங்களுடன் கூடியது ஆதிசேஷ்ன் சக்ராகாரமாய் இரண்டு சக்கரங்களுடன் கூடியது மதுசூதனம் ஒருசக்கரமுள்ளது சுதர்சனம் மறைக்கப்பட்ட சக்கரமாய்த் தோன்றுவது கதாதரம் இரண்டு சக்கரத்துடன் ஹயக்ரீவவுருவாயக் காணப்படுவது ஹயக்ரீவம் இரண்டு சக்கரத்துடன் திறந்தவாயும் பயங்கரவுருவும் கொண்டது நரசிங்கம் இரண்டு சக்கரத்துடன் பெரியவாயும் வனமாலையுமுள்ளது லசஷ்ம் நரசிங்கம் இரண்டு சக்கரமும் சமாகாரமாயுள்ளது வாசுதேவம் சூசஷ்மமான சக்கரமும் ஒரு ரந்திரத்துள் பல ரந்திரங்களுள்ளது பிரத்யும்னம் துவாரமத்தியில் இரண்டு சக்கரங்களும் புருஷடபாகம் பருத்துமுள்ளது சங்கர்ஷணம் விருத்தாகரமாயும் செம்பட்டு நிறமுள்ளது அநிருத்தம் என்பனவாகும்.
எவ்விடத்தில் சாளக்கிராம் சிலையிருக்குமோ அங்கு ஹரிசாநிந்த்யமாய் வசிப்பார். அவ்விடத்தில் சகல தேவதைகளும் வசிப்பர்;. எல்லாச் சம்பத்துக்களும் உண்டாகும். இவைகளில் குற்றங்கள்ளுள்வற்றை நீக்கி குணமுள்ளவற்றை வழிபடுதல் வேண்டும். குற்றமுள்ளவை தீமையை ஏற்படுத்தும்.   இது போன்று சிவலிங்க வடிவங்களும் அங்கு கிடைக்கின்றது. சாளக்கிராம வழிபாடு விஸ்ணு வழிபாட்டில் உண்ணதமானது. சாளக்கிராமங்கள் விஸ்ணுவின் சுயம்பு இலிங்கங்களாகும். இவை ஒருகாலத்தில் மன்னர்களிடமே பெறக்கூடியதாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இவை இப்போதும் பக்குவம் உள்ளவர்களுக்கே கிடைக்கின்றது.

20 .“சித்தன் போக்கு சிவன் போக்கு  சித்தம் தெளிந்தால் அவன் போக்கு சிவன் போக்கு . அவனே சிவசித்தன்” இந்த வகையில் சித்தர்களின் வாழ்க்கை வரவாறு அறிமுகம்

1கருவூரார் : 
போகமாமகரிஷி
                                  கருவூரார் இவர் போகமாமகரிஷியின் சீடர்களில் ஒருவர். இவர் பத்தாம் நூற்றண்டைச் சேர்ந்தவர் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவர் கருவூரைச் சேர்ந்த பிராமண வம்சத்தை சேர்தவர் என வரலாறு பகருகின்றது. இவருடைய பூஜை முறைகளை பிராமணர்கள் ஏற்காமல் அவரை ஏளனம் செய்தோரே அதிகம். இறைவன் பால் அவர் கொண்ட அன்பை உலகறிய திருவுளம் கொண்டான் இறைவன்;.  தஞ்சை பெரும் கோயிலை இராஜராஜசோளன் கட்டிவித்து குடமுழுக்குக்கு ஆயத்தமானது  அப்போது மகா இலிங்கம் பிரதிட்டை செய்யும் போது ஆவுடையாரில் இலிங்கத்தை பிரதிட்டை செய்யமுனைந்த போது  பலமுறை முயன்றும்  பிரதிட்டை செய்ய முடியவில்லை. அப்போது அரசன் போகமாமகரிஷியை நாடிட அவர் அவருடைய சீடர்களில் ஒருவரான கருவூராருக்கு தகவல் அனுப்பி அங்கு செல்லுமாறு பணித்தர். குருவின் கட்டளையை சிரம்மேல் ஏற்று தஞ்சை நகர் விரைந்தார் கருவூரர். அங்கு சென்று பார்த்தபோது ஆவுடையாரினுள் பூதம் ஒன்று இருந்து  பிரதிட்டையை தடைசெய்வதை உணர்தார். அதைஅகற்ற தாம்பூலம் தரித்து அதை ஆவுடையாரினுள் உமிழ்தார். அதன் பின் இலிங்கம் பிரதிட்டை செய்யப்பட்டடு திருமுழுக்கு நடை பெற்றது. அங்கு எல்லோரும் வியப்படைந்தனர்.
             “தஞ்சையில் பொரும்கோயில் கட்டினான்; இராஜராஜ சோளன். குடமுழுக்கு செய்திடவே இலிங்க பிதிட்டை. ஆவுடையார் எற்கவில்லை.  காரணமறிய முடியாமல் திகைத்தனர் ஆச்சாரி மார்கள.;  புரியாத புதிரது  இராஜராஜ சோளனுக்கு. விரைந்தனர் போகமாசி~pயிடம். தகவல் அனுப்பிட்டார் கருவுரானுக்கு. தகவல் அறிந்து புறப்பட்டான் தஞ்சைக்கு குருசேவைக்கு. ஞானமயமாய் அறிந்தான் ஆவூடையில் பிசாசியின் அட்டகாசம். அடக்கவே தாம்பூலம் தரித்து ஆவுடைகுழியில் உமிழ்தான் சித்தன.; பறந்தது பிசாசு தாபி;த்தான் இலிங்கம.; அடைந்தனர் சந்தோசம.; பரவியது அவன்புகள். அப்பனின் திருவிளையாடல் இதுவெண்று அறிந்தீரோ”
கருவூரில் கருவூரரை அவர் இனத்தவர்கள் மதிக்காமல் எளனம் செய்ய ஏனைய இடங்களில் அவரின்புகழ் பெருக  தமது ஊரில் அவமானப்படுத்துகின்றனர். அப்பன் திருவிளையாடல் செய்ய எண்ணினன் 
            “மேகம் கறுத்து முகில் கூடி மோதி மின்னலுல்மின்னி இடியும் இடித்து. கார்முகில் குளிர்ந்து மழையும் பொழிந்தது. ஆற்றில் வெள்ளம் பெருகி ஓடிட ஆலயக்கதவுகள் தானாகத் திறந்தன. அப்போதும் ஊரார் சித்தனின் சித்தென்றனர் அப்பவும் ஊரார் அப்பனை உணரார். அப்பனின் திருவிளையாடல் இதுவெண்று அறிந்தீரோ”
          “கருவூரான் திருக்குருகூர் செல்கைவதை பாகவதர் சொற்பனத்தில் நார் அயன் கூறிட பகவதர் திரண்டுபணிந்தனர் அவரை. நார் அயன் கட்சி கிடைத்திட நீவீர் காரணமல்லவோ என்றனர் பகவதர். அப்பனின் திருவிளையாடல் இதுவெண்று அறிந்தீரோ” 
இன்னுமோர் முறை திருக்குருகூர் சென்றபோது அங்கு வாழும் பகவதர்கள் அனைவரும் அவரைக்கண்டு வணங்கினர் . அப்போது அவர்கள் ஸ்ரீமன்நாராயணன் சொற்பணத்தில் தோன்றி உங்களுக்கு மரியாதை செய்யுமாறு கூறியதாக விளம்பினர். அதனால் ஸ்ரீமன்நாராயணனனை காணும் பாக்கியம் பெற்றோம் என்றனர். 
அதன் பின் திருநெல்வேலியை அடைந்து திருக்கோயிலினுன் புகுந்து நெல்லையப்பா என அழைக்க அப்பன் குரல் கொடுக்காமையினால் வருந்தி “தெய்வமில்லாத இடம் எருக்கு காடகட்டும்” என சபித்து அவ்விடம் நீங்கி மானூரை அடைய  சித்தன் வாக்கு பலித்து எருக்கு காடனது நெல்லையப்பன் ஆலயம். மானூரில் அப்பன் “உணவருந்தும் வேளையறியாமல் விளம்பிநீரே கருவூரா மீண்டும் வாறிரே” என்றார். அப்பனின் வாக்கை மறுக்காத கருவூரர் மீண்டும் செல்லுகையில்
           “ திரு நெல்வேலியில் அடிவைத்த கருவூரன் அப்பனை அழைக்கையில் விடை அற்ற நிலையில் சபித்தான் காடுற. அப்பன் வாயுறை நேரமதுயறியான் சித்தன்வன். உணவருந்தும் வேளையறியாமல் விளம்பிநீரே கருவூரா மீண்டும் வாறிரே என அழைத்தான் அப்பனவன். அடிவைத்த இடமெல்லாம் பொன்னடித் தடம் பதித்து மாயமய் மறைந்தது காடுற்ற எருக்கு உவகையில் மூழ்கினான் சித்தனாம்  கருவூரன் இது அவன் திருவிளையாடல் அறியாத மாந்தருக்கு அறிவுட்டு செயல் அல்லவோ இது. அப்பனின் திருவிளையாடல் இதுவெண்று அறிந்தீரோ”
 இவ்வாறு ஆத்தனின் திருவிளையாடல் கருவூரரியில் நிகழ்த்திக்காட்டினான்.
ஊரிலிருந்து புறப்பட்ட கருவூரார் கங்கை கொண்ட சோளபுரம் எனும் திருத்தலமடைந்தார். அங்கு
           “சிவன் கரம்பட்டு தீட்சையும் பெற்றார். பெற்ற பின் காகம் குருவின் கட்டளையுடன காலினில் கட்டுடன் நின்றது;. கட்டது அகற்றி கட்டளை பார்தான். “கருவூரரே உடனே வாரீர்” உடன் விரைந்தான் குருவிடம். சீடனின் மனநிலை புரிந்தவர் குரு அவர். பூவுடலுடன் புகழ் அது கடினம். வாய்த்ததை நழுவவிடாதே ஆத்திரம் அடக்கு கிளம்பிடு யாத்தரை. அப்பனின் திருவிளையாடல் இதுவெண்று அறிந்தீரோ”
 என உவதேசம் கூற கிளம்பிளம்பினார் யாத்திரை. 
வரும் போது 
       “ஸ்ரீரங்கம் அடைந்து  பள்ளி கொண்ட ரங்கநாதரை வணங்கி வெளியேற. தாசியவள் அபரஞ்சி சாதனை புரிய அற்புதச்சித்தன் காலது தழுவி மனையது வேண்டினாள். சித்தனோ தாசி என விட்டகலவில்லை நோக்மது தெரிந்திட்டவன் அத்தனவன் அல்லவோ. சிவயோக சாதனை செய்யுமவள்ளல்வோ அதை அறிந்தவன் அவனல்லவோ. இருநாள் தரிக்க வைத்து பூசனை செய்து யோகசாதனை கற்றுறவளை. சித்தனிடம் அவள் சாதனை மெச்சி ரங்கநாதன் கொடுத்த நவமணிமாலை தனை கொடுத்து விடைபெறுகையில் நினைக்கையில் வருவேன் என விடை கொடுத்தான் கருவூரன். மறுநாள் காலை விரைந்தவள் நன்றி கூற நாதன் சன்னிதி. நிறைந்தது கூட்டம் காரணம் அறிய விளையவே நவமணிமாலை கண்ணம் வைத்ததை அறிந்தாள். தன் களுத்தில் இருப்பதை கண்டனர் கூட்டம். அதை கவர வருகையில் தயக்கமின்றி நாதன் தந்ததை விளம்பினாள். ஏற்காத கூட்டம் வசையது கூற. இன்றிரவு நிரூபனமாகு மென்றாள். அன்றிரவு சித்தனை நினைக்க தரிசனமானார். தரிசனமாக விரைந்தனர் காவலர். நடந்ததை விளம்பி அழைத்தனர் அறங்காவலரிpடம். தயக்கமின்றி சென்றனர் இருவரும்  அங்கே. தர்க்கித்து அவமானபடுத்தனர் கூட்டம். தயங்காமல்  இருவரும் வேண்டுதல் செய்ய ரங்கனின் கட்டளை பிறந்தது அங்கே. “அரங்கனுக்கலங்காரம் பக்தர்கள் செய்ய பக்தனுக்கலங்காரம் நான் செய்து பார்தேன். நானே கருவூரனிடம் கொடுத்தனுப்பினேன்” என்றது அசரீதி.   அஞ்சிநடுங்கி வணங்கினர் அறங்காவலர்களும் மக்களும்  கருவூரனையும் அபரஞ்சியியையும். நவமணிமாலையை கொடுக்கவே அதை அளித்தாள் அரங்கனுக்கே இதை கண்ணுற்றவே வியந்தனர் மக்களும் அறங்காவலர்களும.; அப்பனின் திருவிளையாடல் இதுவெண்று அறிந்தீரோ


          “பின்னர் கருவூர் அடைந்தான் சித்தன். பளிகூற காதிதிருத சிலர் கோனிடம் அனாச்சாரமுடைமையை முறையிட கோமகனும் உள்ளது அறியாது நாடினான் ஆச்சிரமம். ஆச்சாரமுள்ளதை அறியவே அவ்விடமிருந்து நீங்கவே. பழிதிர்க்க ஒருசிலர் மாய்க்வே என்னினர். காலங்கணிய காத்திருக்கவே. அமராவதிதனில் நீடாட செல்கையில் சன்டாளர்கள் சங்கறுக்க முனைகையில் பயந்தவன் போலோடி சராணகதியானன் கரூரில் ஆனிலை அப்பனில் சென்றவன் மறைந்தான் அப்பனின் கலந்தான். சென்வர் திகைத்தனர் கருவூரரின் சக்தியில். பிராயசித்தமாய் அமைத்தனர் கருவூரனுக்குகோர் சந்நிதி. நித்தியமாய் பத்தியாய் பூசனை செய்தனர். அப்பனின் திருவிளையாடல் இதுவெண்று அறிந்தீரோ”
கருவூரரின் வாழ்கையில் இறைவன் திருவிளையாடல் அதிகமாக நடை பெற்றுள்ளது. அத்துடன் அவர் ஞானநூல்களை நன்கு ஆராய்தறிந்தவர். யோக சித்தியும் பெற்றவர். பொதிகைமலைப்  பகுதியியுள்ள குற்றாளத்தில்  பல காலம் தங்கினார். அங்கு திருவிசைப்பாபாடி கருவூர்தேவரானார். இவர் தஞ்சை, கருவூர் ,சதுரகிரி, போன்ற இடங்களில் வாழ்திருக்கின்றார். இவர் ஓர் பிரம்மஞானியாவார். இவர் எழுதிய நூல்கள் வாத காவியம், வைத்தியம், யோகஞானம், பல திரட்டு வைத்தியம், குருநூல்சூத்திரம், பூரணஞானம் என்பவை குறிப்பிடத்தக்கவை.