Showing posts with label தத்துவம். Show all posts
Showing posts with label தத்துவம். Show all posts

Thursday, May 19, 2011

25.விக்கினம் தீர்க்கும் விநாயகர்

25.விக்கினம் தீர்க்கும் விநாயகர் 
“முத்திக்கு வித்தகன்
     புத்தியில்  உறைபவன்.
 சித்தியில் விளைந்து 
    முத்திக்கு வழிகாட்டுபவர்.
முத்திக்கு  தடையான  
    வினை அறுப்பவர்” 
                      விக்கினம் என்பது தடைகளும் பின்னடைவும் என்பது பொருள். இறைவன் எத்தடைகளை தீர்ப்பவன் என்று பொதுவாக கேட்டால் நாம் சொல்வதெல்லாம் எமது முன்னேற்றப் பாதையில் ஏற்படும் தடைகளைப் போக்குபவன் என்று கூறுகின்றோம். நம் க~;டங்களுக்கு காரணம் என்ன என்று கேட்கும் போது அதற்கு கர்மா என்கின்றோம். அல்லது  நாம் செய்தவினை என்று கூறுகின்றோம். பிறப்புக்கு காரணம் வினை என்று கூறுகின்றோம். பிறப்பெடுத்ததின் நோக்கம் பிறவாமையை அடைய என்பதும் தெரியும். இப்படி இருக்க விக்கினம் என்பது எது என்று பார்க்கும் போது இறவாமையை அடைய தடையாக அமையும் தடைகளை தகத்தெறியவே என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மனிதனின் வாழ்கை அமைவது அவர் அவர் செய்த வினையே தவிர இறைவன் காரணமல்ல. நாம் செல்வச் செழிப்புடனும் அல்லது வறுமையில் வாழக்காரணம் நாம் தான். அவை முன்வினைப் பயன் செல்வந்தனானால் அச் செல்வம் எமக்குரியதல்ல அவை கொடைக்கு வழங்கப்பட்டதே தவிர குடும்பத்துக்கு மட்டும் உரியதல்ல. அப்படி அமையுமானால் அது கர்மச் சொத்து அதனால் சந்ததி அழிந்து போகும். அதை கொடையாக கொடுத்து இகபர வாழ்கையில் சந்தோசத்தை இழந்து நரகத்தை அடையும் நிலையிலிருந்து தப்பிக் கொள்ள வேண்டும்.  விக்கினத்தை தீப்பது என்பது வினை அறுக்க ஏற்படும் தடையை நீக்கி அதை அனுபவித்து பிறவாமையை அடையவே என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 

அதாவது அதை அடைய தடையாக அமைவது மூவினையான ஆணவம், கன்மம், மாயை என்பனவாகும். இவற்றுக்கு காரணம் பாசம் அதை அறுக்க வேண்டும். இதனை மதம் என்றும் கூறுவர். மதம் கொண்டயானையை அடக்க அங்குசத்தை பயன்படுத்தி யாயைப்பாகன் அடக்குகின்றான்.  இதனையே விநாயகர் ஒருகையில்  அறுந்த பாசக்கையிறும் மறுகையகையில் அங்குசமும் இருப்பதை காண்கின்றோம்.  பாசத்தை அறுத்து அங்குசத்தால் வழிப்படுத்துகின்றார் விநாயகப் பெருமான்;. என்பதை இது அர்த்தப்படுத்துகின்றது. அதை அறிய ஞானம் வேண்டும். அதற்காக எழுத்தாணி ஒரு கையில் வைத்திருக்கின்றார். உலகமான உருசியான மோதகம் இன்னுமோர் கையில்  வைத்திருக்கின்றார். இதன் மூலம் உலகியலில் மூழ்கினால் இறையியல் இல்லை என்பதை உணர்த்துகின்றது. உலகியலில் விடுதலை பெற ஞானத்தைக் கைக்கொண்டு  அங்குசத்தால் வழிப்படுத்தி பாசத்தை அறுத்து அதைத் துறந்து அறம் காத்தால் தான் பிறந்த நோக்கத்தை அடையமுடியும் என்பதை இது உணர்த்துகின்றது. அதாவது “உறவில் துறவு” இதற்கு தடையாக அமைவதனைத்தையும் நீக்குபவன் விநாயகராவார். இதற்கு புத்தி விளிப்படைய வேண்டும்.  இதற்கு சித்தம் தெளிய வேண்டும். புத்தி சிற்றின்பம்  சித்தம் பேரின்பம் ஆகும்.  புத்தி விளிப்படையும் போது சித்தம் தெளியும் சித்தத் தெளிவுறும் போது பிறப்பின் நோக்கத்தை உணர்த்தும். அதனால் சிற்றன்பம் ஏற்படுத்தும் தடை நீங்கி பேரின்பத்தை அடையவைப்பவரே விநாயகன்.




                  உதாரணமாக நாம் பாதையில் பயனிக்கையில் அவதானத்துடன் பயனிக்க வேண்டும். அதாவது  செப்பனிடப்பட்ட பாதையில் பயனிக்கும் போது பாதையில் இருக்கும் தடை எமக்கு தெரியும். கரடு முறடுடான கல் முள் உள்ள பாதையில் பயனிக்கும் போது அவதானமிருந்தால் தான் கயப்படாமல் செல்ல முடியும். காயப்படும் போது வேதனை அடைவது இயல்பு  இதற்கு காரணம் என்ன? தமது கவலையினமே தவிர வேறோன்றும் இல்லை. இதற்கு கடவுளை நோக முடியுமா? நம் வாழ்க்கை என்பது கரடு முறடான கல் முள் உள்ள பாதை இதற்கு காரணம் முன்வினைப்பயன் அனுபவித்தே அதை அழிக்க வேண்டும். நாம் செய்ததை இன்நோருவர் அனுபவிக்க அனுமதியில்லை. அனுபவித்து விடுதலைக்கு வழிவகுப்பவரே விநாயகர். இருந்தும்  குரு தேவர் இராமகிரு~;ணர், அருனை முனி ரமன மகரி~p, யேசுநாதர், போன்றோர் மற்றவர்களின் பாவங்களை தம் பெற்று அனுபவித்து இறை நிலை அடைந்தனர். 
                  சுயநலன் கருதாது பொது நலன் கருதி மற்றவருக்காக வாழ்வது அதாவது பயன்கருதாது செல் செய்து பயன் அனைத்தையும் இறைவனுக்கு அர்ப்பணித்தல் இறைநிலைக்கு இட்டுச் செல்லும் அன்நிலையை அடையச் செய்வதே விநாயகரை வழிபடுவதன் நோக்கமாகும்.

Sunday, May 15, 2011

வில்வத்தின் மகிமை

22.வில்வத்தின் மகிமை




          சிவமுர்தியின் இச்சா ஞான கிரியா சத்திகளாக பூமியில் ஆன்மாக்களின் பாவங்களை போக்க அவர் அருளால் கோமேயத்தில் உற்பத்தியானது. இதனை பூசிப்போர் இம் மர முலத்தை அடைந்து(விரதசீலராய்) சங்கல்பம் செய்து எட்டு திக்குகளிலும் பசு நெய்  விளக்கிட்டு அபிடேகம் முறைப்படி செய்து வஸ்திரம் தரித்து மலரிட்டு துபம்காட்டி 


பின்வரும் நாமங்களைக் கொண்டு அர்ச்சனை  செய்து பூசிக்கச் சகல சித்தியும் பெறுவதுடன் சகல பாவங்களும் போகும்.    
  
1. ஒம் வில்வ விருஷெச  நம:       
2. ஒம் நிர்பீஜ               நம:
3. ஒம் கோமயோற்பவா  நம: 
4. ஒம் சங்சராநந்த         நம: 
5. ஒம் சுத்தபதுமப்பிரிய     நம: 
6. ஒம் வியாத               நம:
7. ஒம் புட்பாதிக             நம:



8. ஒம் ஷெத்திரஞ்ஞ       நம:
9. ஒம் வரதா பீஷ்ட         நம:
10. ஒம் புருஷோர்;த்த சித்திதர நம:
11. ஓம் சிவப்பிரிய            நம:

வில்வம் மும்மத்தை போக்கவல்லது. இதன் இலைகளை பறிக்கும் போது பழுதற்றதாக இருப்பதுடன் சிவசிந்தையுடன் மூவிதழ்கள் பிரியாத வகையில் பறித்தல் வேன்டும். மாலையில் தளம் பறித்தல் உத்தமம்மல்ல.


வில்வாஸ்டகத்தில் ஒர்வில்வம் சிவாற்பனம் செய்வதனல் உண்டானபலனகள்  பற்றி சங்கரர் மிக தெளிவாக பாடியுள்ளார். ஒர் வில்வதளத்தை சிவாற்பணம் செய்தால் பின்வரும் பலன்கனை பெறலாம்.




1.  மூன்று ஜன்மங்களில் செய்தபாவங்களும் அறும்
2.   கொடி பெண்களுக்கு திருமணம் செய்த பலன் உண்டு.
3.  ஸாளக்ராமதை வழிபட்ட பலன் பொறலாம்
4.   அச்வமேத யாகம் செய்த பலன் பெறலாம்.
5.   கோடியக்ஞ்ஞங்கள் செய்த பலன் பெறலாம்.
6.   காசிN~த்திரத்தில் காலபைரவரை வணங்கிய பலனை பெறலாம்.
 உமாமகேஸ்வரருடன் சகல தேவர்களையும் வழிபட்டு சகல பாபங்களையும்        போக்கிய பலன்களையும் பெறலாம்.
    வில்வ தளம் சிவசொருபம் அதன் முட்கள் சத்திசோருபம் அதன் கிளை வேத இரகசியம் அதன் வேர்கள் பதிருனெருகோடி ருத்திரர்கள். ஐந்து வில்வ தளங்களை எடுத்து நடுவில் ஒருதளமும் மேற்கில் ஒருதளமும் வடக்கில் ஒருதளமும் தெற்கில் ஓருதளமும் கிழக்கில் ஓரு தளமும் வைத்து  முதலில் நடுவிலுள்ள வில்வதளத்துக்கு பானிமந்திரமும் மேற்கிலிருந்து சத்யோஜதமந்திரமும் வடக்குக்கு வாமதேவமந்திரமும் தெற்குக்கு அகோரமந்திரமும் கிழக்கு தற்புருசமந்திரமும் பின்னர் நடுவுக்குமேலே ஈசானமந்திரத்தையும் செல்லி பக்கத்தில் துளசி தளமொன்றையும் வைத்து வழிபடுவதால் சிவசத்தியை வழிபட்ட பலன் கிடைக்கும். அப்படியான சத்தி பெற்றது வில்வ தளம்.
ஒரு அரசன்  வில்வருசத்தை நிழற் பொருட்டு அவ்வில்வத்தின் கீழ் நின்று வேட்டையடிய சிரமபரிகாரத்தின் பொருட்டு கொடுங்கோலான அரசன் வருகையில் அந்த வில்வ விரு~த்துக்கருகில் ஒரு முனிவர் அணிந்திருந்த விபூதி அவன் மீது பட்டதனால் ஞானமடைய அரசன்     முனிவரிடம் வேண்டினான். அப்போது முனிவர் அரசனிடம் நீ வில்வ விருச~ மொன்றை பிரதி~;டை அதன் நிழலில் வசித்து உன்பாவங்களை நீக்கி புனிதனாவாயென அவனுக்குச் சிவஞான மநுக்கிக்க அவன் மீளாக்கதி பெற்றான். இவ்வாறே மார்க்கண்ட முனிவர் உபதேசித்தால் பாவியாகிய வேதியன் வில்வவிருச~த்தடியில் சிவாரதனை செய்து பாபநீக்கம் பெற்றான்.         
வில்வம் பஞ்சவபில்வங்களில் ஒன்றகக்ருதப்பாடுகின்றது. பஞ்ச வில்வங்களானவை வில்வம், விளா, நொச்சி, முட்கிளுவை, மாவிலங்காகும். இவ்பில்வங்களால் சிவபெருமானுக்கு அர்ச்சித்தல் ஜம்புலன்களால் உண்டானபாவங்களை நீக்கி ஜம்புலக்கட்டறும். அத்துடன் மும்முர்த்திகளை வழிபட்ட பலனையும் பெறுவர். ஆணவம் கன்மம் மாயை என்னும் மும்மலங்களை நீக்கி  ஆன்மவிடுதலையான பிறப்பின்மைக்கு வழிவகும்.


வில்வம் மருத்துவகுணம் உடையது. வெப்பத்தினால் உண்டாகும்  நோய்களுக்கு அருமருந்து. தளமத்தினை நிரில்லிட்டு உறவைத்து அருந்தினால் உடல் உஸ்னம் குறையும். புழத்தை தேன் சேர்த்து உண்;டால் வய்ற்றில்யுள்ள குடல்புண் குணமடையும். இது போன்று வேர் பட்டை பொன்றவற்றுக்கும் மருத்துவகுணம் உண்டு.
           


திரு பாக்கியமூர்த்தி குமரகுருபரன் (புன்னையம் பதியான்)