Showing posts with label சித்த வைத்தியம். Show all posts
Showing posts with label சித்த வைத்தியம். Show all posts

Monday, March 26, 2018

மிளகுத்தக்காளி அல்லது மனத்தக்காளி

“மந்தாக்கின சோபை வாந்தி யழல் போக்கிடும் மிளகுத்தக்காளி அல்லது மனத்தக்காளி”
மனத்தக்காளிக் கீரையின் காய்கள் மிளகை ஒத்தவையாகக் கானப்படுவதால் அதனை மிளகுத்தக்காளி என்றும் அழைப்பர். இத்தக்காளிச் செடி மனமுள்தால் மனத்தக்காளி என்றும் திருமனத்துக்கு தக்க உடல்லை யாளியை யொத்ததாக்கும் தன்மை தரக்கூடிய வல்லமை யுள்ளதால் இக் கீரையை மனக்க தக்க யாளி மனத்தக்காளி யாக்கிவிட்டது.
இக்கீரையின் மருத்துவ பாகம் பற்றி தேரையர் பதாத்தகுண சிந்தாகணியில்

“மந்தாக்கின சோவை வாந்தி யாழல.; வாயு வெப்பம்
விந்து நோய் பாண்டொதிர் விக்கல் - முந்து
வளருமத்தோச நோய் மாறும் கைப்பான
மினகுத் தக்காளியிலை மெய்” என்று ஒருபாடலிலும் அடுத்து

காய்க்குக் கபம் தீரும் காரிகையே யவ் வினைக்கு
வாய்க்கிரந்தி வேக்காடு மாறும்காண் - தீக்குள்
உணக்கிடு வற்றலுறு பிணியாக்கு கூறும்
மனத்தக் காளிக்குள்ள வாறு”

வெப்பத்தினால் உண்டாகும் நோய்களுக்கு இது அருமந்தாகும் என்பதை தேரையர் எவ்வளவு அழகாக வெண்பாவில் குறிப்பிட்டுள்ளார்.
பொதுவாக வெப்பகாலத்திலே ஏற்படக்கூடிய வாய்ப்புண்ணுக்கு மனத்தக்காளி இலையை மென்று விழுங்கி விட்டால் குணமாகிவிடும்.
இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மூன்னர் வாழ்த சித்தர்கள் இன்றைய உலகுக்கு பொருத்தமானதை எப்படி உணர்ந்திருந்தனர் என்பதை அறிவியல் ஆராய்கின்றது என்னும் போது நமக்கெல்லாம் ஒருபுறம் பெருமையும் இன்னுமோர் புறம் வியர்ப்பாகவும் இருக்கின்றது. தமிழ் மருத்துவ உலகம்தில் சித்தர்கள்  விஞ்ஞானத்தின் மெய்ஞானியாக இருந்திருக்கின்றனர். என்பது இங்கு கண்கூடு.

1.இரண்டாயிரத்து ஆறாம் வருடம்( 2006இல்) மஸ்பரலஸ் என்ற ஆய்வியலாளர் மனதக்காளியின் இலைச்சாற்றை ஆய்வு செய்து குடல்புண்ணை ஆற்றும் ஆற்றல் உண்டு என்பதை வெள்ளை எலிகளுக்கு கொடுத்து அவைகளுக்கு ஏற்பட்டிருந்த குடல் புண் ஆறக்கண்டு ஆய்வுக் கட்டுரை வெளியிட்டுள்ளார். அத்துடன் வாயுடன் கூடிய அல்சறை குணமாக்கும் ஆற்றலும் மனதக்காளியின் இலைச்சாற்றுக்கு உண்டு என்று நிருபித்துள்ளார்.

2. யதீஸ் என்ற இன்னுமோர் ஆய்வாளர் இரண்டாயிரத்து பதினொன்றில் (2011 இல்)செய்த ஆய்விலும் மனதக்காளியின் இலைச்சாற்றுக்கு வயிற்றில் எற்படும் புண்களை முற்றாக மாற்றும் வல்லமை இருப்பதாக மீண்டும் உறுதி செய்துள்ளார்.

3. இரண்டாயிரத்து ஆறாம் வருடம்( 2006இல்) ராஐ; என்ற இன்னுமோர் ஆய்வாளர் மனதக்காளியின் இலைச்சாற்றில் உள்ள “கப்பட்டோ புரட்டக்டியுல்” என்ற வேதியல் மூலக்கூறு கல்லீரலைப் பாதுகாக்கின்றது. என்ற கருத்தை அவரின் ஆய்வின் மூலம் முன்வைத்து நீருப்பித்துள்ளார்.

4.இரண்டாயிரத்து பதினொன்றில் (2011 இல்) பகிஸ்தானைச் சேர்ந்த உஸ்மான்னலி அஸ்ரப் அலி என்னும் ஓர் ஆய்வாளர் மனதக்காளியின் இலைச்சாற்று மஞ்சல் காச்சலில் ஒருவகையான “கப்பட்டைடிஸ் -சீ” என்ற காச்சலை உருவாக்கும் வைரஸ்சை அழிக்கும் வல்லமை உள்ளதுடன் கல்லிரலின் பலவீனத்தால் உண்டாக்கும் நோய்களை குணப்படுத்த வல்லதுடன் கல்லீரலை பலப்படுத்தும் வல்லமையும் இருக்கின்றது என மீண்டும் அக் கருத்துக்கு வலுவுட்டியுள்ளார்;.

5.செல்வப்பா முத்து என்ற இன்னுமொரு ஆய்வாளர் இரண்டாயிரத்து பதினொன்றில் (2011 இல்) செய்த ஆய்வில் மனதக்காளிக் கீரை மிகவும் சக்தி வாய்தது என்றும் அது ஆண்களின் ஆண்மையை வீரியமாக்குவதுடன் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன் இதன் அளவையும் விந்து சுரப்பையும் அதிகரிக்கின்றது என்று தனது முடிவை வெளியிட்டுள்ளார். இதனை சித்தர் “விந்து நோய் பாண்டொதிர்”என முன்னரே அறிந்து அறிவியல் உலகுக்கு தெரிவித்துன்னர் என்பதை அறியும்போது தமிழ் மருத்துவத்தின் அறிவியல் தொன்மையை அறிய முடிகின்றது.
மனத்தக்காளி காயும் பழமும்

5. திருமதி. வடிவேல் அருள்மொழி என்ற ஆய்வாளர் இரண்டாயிரத்து பத்தில் (2010 இல்)தாம் செய்த ஆய்வில் மனத்தக்காளிக் சற்றுக்கு இரண்டு பண்புகள் உண்டு என்றும் இவை
1;.நோய் எதிப்பு சக்தி வீழ்சிக்கு காரணமாக இருக்கின்ற பொருட்கள் எல்லாவற்றையும் அழிக்கின்ற ஆற்றல் உண்டு என்றும். உடலை முதுமையிலிருந்து இளமையாக்கி காக்கின்ற ஆற்றல் உண்டு என்றும்.
2.உடலில் கொளுப்பு சத்து அதிகரித்து கொலஸ்றோல் அதிகர்த்து அதன் விளைவால் வரக்கூடிய சைக்கிளிசைட், லோடெண்சிட்டி கொலஸ்றோல், லிப்பீட் கொலஸ்றோல் போன்றவை உடலில் கூடுவதை தடுக்கும் ஆற்றல் மனத்தக்காளிக்குண்டு. என்று தனது ஆய்வில் வெளியிட்டுள்ளார்.

6. சீனதேசத்தைக் சேர்ந்த கெஸ்சி முவான் என்ற ஆய்வாளர் இரண்டாயிரத்து பத்தினென்றில்(2011) வெளியிட்ட கட்டுரையில் மனத்தக்காளிக் கீரைக்கு இன்னும் இரண்டு பண்புகள் இருப்பதாக குறிப்பிடுகின்றார்.
1.அட்டோ பசிஸ்
2.அப்போட்டசிஸ் என்ற வேதியல் மூலக்கூறுகள் இருப்பதாகவும் அது உடலில் அழிந்த கலங்களை மீண்டும் புதிப்பிக்கின்றதுடன் கலங்கள் தேவைக் கேற்ப உற்பத்தி செய்வதுடன் உற்பத்தியின் போது ஏற்படும் தவறான நகல்களை அழித்து சரியான நகல்களை நிலை நிறுத்தும் ஆற்றல் உள்ளது என்பதை நிருபித்துள்ளார். இதை சித்தர் பாடலில் “முந்து வளருமத்தோச நோய் மாறும் கைப்பான மினகுத் தக்காளியிலை மெய்” என அப்போதே அழகாகக் கூறியிக்கின்றார்.
7.லைவோசன் என்பவரும் ரீக் என்ற இருவரும் இரண்டாயிரத்து பத்தினென்றில்(2011) இல் ஆய்வு செய்து மனத்தக்காளிக் கீரைகயில் “கிக்கோரோட்டிக்” என்ற வேதியல் மூலக்கூறு இருக்கின்றது என்றும் இது புற்றுநோயை தடுக்க வல்லது என்று குறிப்பிட்டுள்ளனர். இதில் கிக்கோ என்பது மாச்சத்து புரோட்டீன் என்பது புரதம் இவை இரண்டும் சேர்ந்த ஓர் புரதப்பொருள் இது புற்றுநோயை தடுக்க வல்லது. இதன் முலம் மீண்டும் ஆதாரப்படுத்தியுள்ளது.
மனத்தக்காளி
சீன நாட்டில் இருதய நோய்க்கு பல முகிலிகைகளுடன் சேர்த்துப் மனத்தக்காளியைப் பயன்படுத்து கின்றனர்.அது போன்று கிரேக்க மருத்துவத்தில் வீக்கத்துக்கு பற்றுப்போட பயன்படுத்துகின்றனர். வீக்கம் வருவதையும் காச்சல் வருவதையும் இக்கீரை தர்க்கும் ஆற்றல் உண்டு. பேஸ்சிய நாட்டிலே நீக்கோவைக்கு அருமந்தாக பயன் படுத்து கின்றனர். நீக்கோவை என்பது கால், முகம், கண்ணீத்தாரைப்பை( கண்களின் கீழ்ப்பகுதி),வயிறு போன்ற இடங்களில் நீர் சுரந்திருத்தல் உடலில் தேவையற்ற வகையில் நீர் தோல்லின் அடிப்பகுதியில் நீர் தேங்கியிருத்தல்.
பெண்களின் கற்பப்பையில் ஏற்படும் புற்று நோக்கு அருமருந்தாக பல ஆய்வுகள் கூறுகின்றன.
இந்தக்கீரை உடலிலே நோய் எதிர்ப்புக் சக்தியை ஏற்படுத்தி புற்றுநோயை வராது தடுத்து புற்றுநோய் திசுக்களை அழித்து உடலைப் பாதுகாக்கின்றது. முத்தோச நோய் என்னும் புற்றுநோய் இது ஒன்றில் ஆரம்பித்து உடல் முழுவதும் பரவி உடலை அழித்து விடும் ஆனால் அஸ்துமா என்னும் சுவாசகாசம். இருதையநோய், நுரையிரல் நோய் போன்றவை அந்த உறுப்பை மட்டும் பாதிப்பாவை இதனாலே சித்தர்கள் இதனை முத்தோச நோய் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

“காய்க்குக் கபம் தீரும் காரிகையே யவ் வினைக்கு
வாய்க்கிரந்தி வேக்காடு மாறும்காண்” காய் குளிர்சியால் வரும் நோயை குணமாக்கும். உடலில் வெப்பத்தை ஏற்படுத்தி குணமாக்கும் காய்க்குக் கபம் தீரும் என்றும் கீரை வெப்பத்தினால் வரும் நோயை குணமாக்கும். உடலில் குளிர்சிசியை ஏற்படுத்தி குணமாக்கும் வினைக்கு வாய்க்கிரந்தி வேக்காடு மாறும்காண் என்று வெண்பாவில் கூறியுள்ளார். நோய்யுற்று உடல் தளர்தவர்களின் தளர்வு நீங்கி வலிமை பெற மனத்தக்காளி வற்றல் புளிக் குழம்பு சிறந்த பலனைத்தரும், “தீக்குள் உணக்கிடு வற்றலுறு பிணியாக்கு கூறும் மனத்தக் காளிக்குள்ள வாறு” என கூறிப்பிடுகின்றார். தளர்வு நீங்கி வலிமை பெறுகின்ற போது உடலில் பல்வேறு மாற்றங்கள் இடம் பெறும் அப்போது மீள்திறனை ஏற்படுத்தும் ஆற்றல்லுடன் நோய் எதிர்ப்புச்சக்தியை ஏற்படுத்தி உடலை வலுவுட்டும் சக்தி மனத்தக்காளிக் குண்டு.

பயன்படுத்தும் முறைகள்:

1;.மனத்தக்காளி சூப்

தயாரிக்கும் முறை: தக்காளி இலைகளை தெரிந் தெடுத்து நன்கு நாலு அல்லது ஐந்து முறை சுத்தமான நீரினால் திரும்ப திரும்ப கழுவிச் சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொண்டு சுத்தமான இரும்பு பாத்திரம் அல்லது மண்கட்டியில் தேங்காங்காய் எண்ணை அல்லது நெய்யை விட்டு அடுப்பிலேற்றி கடுகு போட்டு தாளித்து விட்டு அதனுடன் நறுக்கிய சின்னவெங்காயத்துடன் மிளகுத்தூள், சீரகத்தூள் போட்டு தாளித்துவிட்டு இதனுள் சுத்தம் செய்து வைத்திருக்கும் கீரையைப் போட்டு அதனுடன் சேர்த்து தக்காளிப் பழத்துண்டும் போட்டு தேவையான அளவு நீர்ரும் உப்பும் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து பின் இறக்கி சூப்பாக பருக முடியும். பருகினால் வாய்வேக்காடு வராது வாய்ப்புண் வராது. வந்தாலும் குணமாகி விடும்.

2.பச்சையாக மென்று சாப்பிடலாம்.

3. கீரையை பருப்பு போட்டு கடைந்து காப்பிடலாம். பாத்திரத்தில் கீரையைப் போட்டு சின்னவெங்காயத்தை நறுகிப்போட்டு அதனுடன் அரைத்பங்கு தக்களிப் பழத்தையும் நறுகிப் போட்டு சிறிதளவு மிளகு சீரகம் பச்சைமிளகாய் இவை போட்டு திடமாக தன்னீவிட்டு காச்ச வேண்டும். கீரையின் பசுமை நிறம் மாறாது இருக்க சக்கரையை சிறிதளவு தூவி விடவேண்டும் பசுமை நிறம் மாறாது இருக்கும் .இதை எடுத்து வைத்து விட்டு இன்னுமோர் பாத்திரத்தில் எண்ணை அல்லது நெய்யில்யை விட்டு அடுப்பிலேற்றி கடுகு போட்டு தாளித்து விட்டு அதனுடன் பருப்பு அல்லது துவரம் பருப்பு அவித்த நீரை விட்டு அதில் அவித்துவைத்த இலையை போட்டு அவித்து வதக்கி கடைந்து தேவையான உப்புச்சேர்த்து எடுத்து சாதத்துடன் உண்ணமுடியும். பொதுவாக கீரைகளுக்கு புளிசேர்ப்பதை தவிப்பதால் சத்தி இழப்பின்றி முழுமையான பலனைப் பொறமுடியும். நெய் சேர்ப்பது கீரைக்கறிக்கு நல்ல சுவையைத்தருவதுடன் ஊட்டமாகவும் இருக்கும்.

4. காயை அல்லது வற்றலை புளிக்குழம்பாக செய்து வெந்தையக் சேர்த்து தாயாரித்து உணவுடன் தேர்த்து உண்ண முடியும். கபம் உள்ளவர்கள் வெந்தயத்தை தவித்துக் கொள்ளலாம். வேந்தையம் குளிர்த் தன்மையானது.

அன்னத்தின் மருத்துவக் குணங்கள்.

அன்னத்தின் மருத்துவக் குணங்கள்.
அன்னம் என்பது கிழத்தேய மக்ககளின் பிரதான உணவாகும். இவை பலவகையா நெல்லினம் இருந்தாலும். பொதுவாக பச்சையரிசி புழுங்கலரிசி என இருவகையில் அவை தயார்செய்யப்படுகின்றன. நெல்லை பச்சையாக குற்றி எடுப்பது பச்சையரிசி என்றும் நேல்லை வேகவைத்து காயவைத்து குற்றி எடுப்பது புழுங்கல் அரிசி என்றும் வேறுபடுத்துகின்றனர். அவற்றை உண்பதற்கு பயன்டுத்தும் முறைகளில் உள்ள தன்மையின் பிரகாரம் அதன் மருத்துவத்தன்மை தொடர்பாக சித்தர்கள் குறியுள்ள விடையங்களை நோக்குகையில்.
அதிசுடுகை அன்னத்தின் குணம்
'அதிசுடுகை யன்னம் அரத்தபித்தம் தாகம்
பிதிரேறு சித்தப் பிரேமை – மதரோகம்
என்றுரைக்கு நோய்கட் கிடங்கொடுக்குந் தப்பாது
குன்றுரைக்கும் பூண்முலையே கூறு'   என்றனர் சித்தர்கள்.
பொழிப்பு:
1. அதிசுடுகை யன்னம் அரத்தபித்தம் தாகம்:  அதிசூடான அன்னத்தை புசிப்பதால் இரத்தபித்தம், தாகம்
2. பிதிரேறு சித்தப் பிரேமை – மதரோகம்: சித்தப்பிரேமை, மதரோகமும்
3. என்றுரைக்கு நோய்கட் கிடங்கொடுக்குந் தப்பாது: போன்ற நோய்ககளுக்கு இடங்கொடுப்பது தப்பாது
4. குன்றுரைக்கும் பூண்முலையே கூறு: பூண்போன்ற முலையை உடைய பென்னே மற்றவர்களுக்கு கூறு என்றனர் சித்தர்கள்.
அற்பச்சுடுகையன்னத்தின் குணம்
'அற்பச்சூட் டன்னம்வா தாதிகளாற் பீநசத்தால்
உற்பவித்த தோயை யொழித்துடற்கு – நற்பலத்தைச்
செய்யும் அருசிதனைத் தீக்குஞ்சர் வொத்தமமாம்
பெய்யும்வளைக் கைமாதே பேசு' என்றனர் சித்தர்கள்.
பொழிப்பு:
1. 'அற்பச்சூட் டன்னம்வா தாதிகளாற் பீநசத்தால்: அற்றமாக சுடும் அன்னத்தை புசிப்பதால் வாதாதிகளினாலும் பீநசத்தாலும்
2. உற்பவித்த தோயை யொழித்துடற்கு – நற்பலத்தைச்: உண்டான நோய்களை இல்லாதொழிக்கச் நற்பலனை
3. செய்யும் அருசிதனைத் தீக்குஞ்சர் வொத்தமமாம்: செய்யும் அத்துடன் அருசியும் போக்கி உடலுக்கு பலம் தரும்
4. பெய்யும்வளைக் கைமாதே பேசு':  பெய்யும் வளைந்த கையையுடைய மாதே இவற்றையெல்லாம் கூறு. என்னனர் சித்தர்கள்.
புழங்கலரிசியன்னத்தின் குணம்
'தென்புவியி னாளுஞ் செழித்துவள ருஞ்சாலி
வன்பு புழுங்கல் வடிசாதம் முன்புனவே

சண்பகப்பூ

சண்பகப்பூ என்றால் எல்வோருக்கும் ஞாபகத்தில் வருவது தோச நிவத்திக்கு பரிகாரமாக இம் மலரை இறைவனுக்கு அர்பணம் செய்வார்கள். ஆனால் அதில் உள்ள மருத்துக்குணம் பற்றி யாவருக்கும் தெரியாது சித்தர்கள் மகரிஷிகள் எப்போதும் வழிபாட்டுக்கு பயன்படுத்திய அனைத்துமே மனுக்குல மீட்சியை அடிப்படையாகக் கொண்டே என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். சண்பக மரங்கள் நீண்டு வளரக்கூடியவையே இவை பொதுவாக இமையமலைச் சாரலிலேயே அதிகளவில் காணப்படுகின்றது. பொதுவாக நவக்கிரகங்களில் வியாழ பகவானுக்கு அரிச்சினைக்குப் பயன் படுத்துகின்றனர். வியாழ பகவான் தேவகுரு அவரே சிவன் ஞானகாரகன். ஞானத்தை கல்லாலையின் கீழ் சனகர் சனாதனர் போன்ற மகஷிகளுக்கு வேதத்தை உபதேசித்தார். அவருக் சமர்பிக்கப்படும் மலர்களில் பிரதானமாது சண்பகமலர் இனி அதன் மருத்துவகுணங்களைப் பார்ப்போம்;. சம்பக மலரின் மருத்துவக்குணத்தை நோக்குகையில் சித்தர்கள்
'வாதபித்தம் அஸ்திசுரம் மாமேகஞ்
சுத்தசுரந் தாதுநஷ்டங் கண் அழற்சி தங்காவே – மாதேகேள்
திண்புறு மனக்களிப்பாந் திவ்யமணம் உட்டிணஞ்சேர்
சண்பகப் பூவதற்குத் தான்' என்றனர்.
பாடலின் பொழிப்பு:
1. 'வாதபித்தம் அஸ்திசுரம் மாமேகஞ் சுத்தசுரந்......': இம் மலர் வாதநோய் பித்தம் அத்திசுரம் என்னும் எழும்பு மச்சையின் பாதிப்பால் ஏற்படும் சுரம். மேகம் எனும் நிரிலிவு நோய் காச்சல் போன்ற நோய்களைப் போக்க வல்லது.
2. 'தாதுநஷ்டங் கண் அழற்சி தங்காவே – மாதேகேள.....': தாது என்னும் இந்திரிய குறைபாட்டை போக்குவதுடன் கண்ணில் ஏற்படும் அழற்சியையும் போக்க வல்லது பெண்ணே கேள் என்கின்றார் சித்தர்.
3.திண்புறு மனக்களிப்பாந் திவ்யமணம் உட்டிணஞ்சேர்.....': மனக்களிப்பை போக்குவதுடன் நல்ல மணத்தையும் தருவதுடன் உட்டிணமும் உண்டாகும். என்றார்கள் சித்தர்கள்.
அறிவைப் பெற மணச்சந்தோசம் தேவை அத்துடன் உடல் வலிமையும் நோயற்ற நிலையும் தேவை. அடுத்து சண்பகமரவேரின் மருத்துவ குணம் பற்றி குறிப்பிடுகையில்.
'தீராத வுட்டிணத்தைத் தீர்க்குஞ் சுரம்போக்கும்
நேரே பசியெழுப்பும் நிச்சயமெ – ஒருங்கால்
பண்புறுகண் தோஷத்தைப் பற்றறுக்கும்
வாசமுள்ள சண்பக மரத்தின்வேர் தான்' என்றனர் சித்தர்கள்.
பாடலின் பொழிப்பு:
1. 'தீராத வுட்டிணத்தைத் தீர்க்குஞ் சுரம்போக்கும்.....': தீராத உஸ்னத்தை போக்க வல்லதுடன் சுரத்தையும் போக்கும் சண்பக மரவேர்.
2. 'நேரே பசியெழுப்பும் நிச்சயமெ – ஒருங்கால் ......': உடலில் ஏற்படும் உஸ்ணத்தை குறைத்து பசியை உண்டாக்க வல்லது.

3. 'பண்புறுகண் தோஷத்தைப் பற்றறுக்கும் வாசமுள்ள......': கண்ணில் ஏற்படும் நோய்யினை போக்குவதுடன் இம்மலர் வாசமுள்ளது இதனால் மணம் அமைகொள்ள வைப்பது.
4. 'சண்பக மரத்தின்வேர் தான்': இவை அனைத்தையும் தரவல்லது சண்பகமர வேரை பயன்படுத்துவதனால் என சித்தர்கள் கூறி இருக்கின்றனர்.


பயன்படுத்தும் முறை: சண்பகமலரையும் வேரயும் நினலில் உவத்திவைத்துக் கொண்டு கசாயம் வைத்து காலை மாலை உணவருந்த முன் அரைமணித்தியாலத்துக்கு முன் அருந்திவர மேல்கண்ட நோகளுக்கு பரிகாரம் காணமுடியும். இரண்டையும் தனித்தனியே பயன் படுத்தவும்.

குங்குமப்பூவின் மருத்துவக்குணம்".

"குங்குமப்பூவின் மருத்துவக்குணம்".
பொதுவாக குங்குமப்பூ வென்றால் தாய்மை அடைய இருக்கும் அன்ணைக்கு குழந்தை சென்றிமுள்ள வெமையான குழந்தையாக பிறப்பதற்கே கருவுற்று இருக்கும் வேளையில் பாலில் இட்டு அல்லது தேனுடன் கொடுப்பார்கள். சிலர் வெற்றிலையுடன் சேர்த்தும் கொடுப்பார்கள். சிலர் குழந்தை பிறந்த பின் கிரந்தி ஏற்பட வாய்பு இருக்கும் அதை தடுப்பற்காக என்று கூறுவர். இதை விட வழிபாடுகளிலும் பயன் படுத்தப்படும் குங்குமத்துக்கு குங்குமப்பூ பயன்த்தப்படுகின்றது. இது தொடபாக காரணியாகமம் அம்மனுக்கு பொட்டு வைக்க குங்குமப்பூவை பச்சக்கற்பூரம் சேர்த்து பள்ளீரில் அரைத்து குழம்பாக்கி வைத்தல் வேண்டும். என்று குறிப்பிடுகின்றது. அத்துடன் அக்னி காரியத்தில் குங்குமப் பூ பயன் படுத்தப்படுகின்றது. இவ்வாறு சிறப்பு மிக்க குங்குமப் பூவின் மருத்துவக் குணம் பற்றி சித்தர்கள் கூறும் மருத்துவக் குணங்கனை நோக்கும் போது பதாத்த குணசிந்தாமணியில் சித்தர்கள்
'விந்துநஷ்டந் தாகம்அண்டம் மேகசஞ் சூலைகபம்
உந்திசுரம் பித்தம்கால் உச்சிவலி – முந்துகண்ணில்
குங்குமப்பூ வோடுறுநோய் சார்த்தியிவை நீங்கவென்றாற்
குங்குமப்பூ ஓர்இழைக் கொள்.'
 


ஏன்றனர். இப்பாடலின் பொருளை நோக்கும் போது.


1. 'விந்துநஷ்டந் தாகம்அண்டம் மேகசஞ் சூலைகபம்': விந்து நட்டம், தாகம், அண்டவாதம், மேகசலம், சூலை, கபம். என்னும் நோய்கள் தீரும்.


2. 'உந்திசுரம் பித்தம்கால் உச்சிவலி – முந்துகண்ணில்': சுரம், பித்தம், கால்வலி, உச்சிவலி, கண்ணில் உண்டாகும் பூ உடன் சேர்ந்த நோய், வாந்தி போன்றவற்றை போக்வல்லது குங்குமப்பூ.
அடுத்து இன்னுமோர் பாடலில்
'குங்குமப்பூ வைக்கண்டால் கூறுகொண்ட பீநசநோய்
துங்கு செவித்தோஷஞ் சலதோஷம் - பொங்கு
கதுரதோ ஷந்தொலையும் மாதர்கருப்ப
உதிரதோ ஷங்கள் அறும் ஓது' 

என்றனர். இப்பாடலின் பொருளை நோக்கும் போது
1. 'குங்குமப்பூ வைக்கண்டால் கூறுகொண்ட பீநசநோய்': பீநிச நோயைப் போக்க வல்லது. குங்குமப்பூ.
2. 'துங்கு செவித்தோஷஞ் சலதோஷம் - பொங்கு': காதுநோய், சலதோஷம், என்பவற்றைப் போக்க வல்லது குங்குமப்பூ
3. 'கதுரதோ ஷந்தொலையும் மாதர்கருப்ப உதிரதோ ஷங்கள் அறும் ஓது': மதுமேகம், மாதர் கரு உந்தி தோஷம் போக்க வல்லது குங்குமப்பூ.
சித்தர்கள் பாடலை நோக்கும் போது தாய்மை அடைந்த பெண்களுக்கு குங்குமப்பூ கரு உந்தி தோஷம் மட்டுமே போக்க வல்லது. அதைவிட அது பலநோய்களுக்கு அருமந்தாகும் என்பதை சித்தர்கள் எவ்வளவு அழகாகப்பாடியுள்ளனர். சித்தர்கள் மனினுக்குல நன்மையில் எவ்வளவு அக்கறையாக இருந்துள்ளது இதிலிருந்து புலனகின்றது.

Monday, February 26, 2018

பாண்டு பெரும்பாடு பகர் மூத்திரக்கிரீச்சரம் போக்கிடும் கற்கரக்கி என்னும் தேங்காய்ப்பூக்கீரை"

பாண்டு பெரும்பாடு பகர் மூத்திரக்கிரீச்சரம் போக்கிடும் கற்கரக்கி என்னும் தேங்காய்ப்பூக்கீரை

"பாண்டு பெரும்பாடு பகர் மூத்திரக்கிரீச்சரம் போக்கிடும் கற்கரக்கி என்னும் தேங்காய்ப்பூக்கீரை"
         கோடைகாலம் ஆரம்பித்தவுடன் உடலில் ஏற்படுவது நீர் இழப்பு இதற்கு காரணம் அதிக வெயிலால் தோல் எனது உடலின் வெப்பதற்பத்தை சீர் செய்யும் போது தோல் அதிக வியர்வை வெளியேற்றி சீர் செய்யும். இன் நிலையில் சிறுநீரகத்தில் நீர் விழுக்காடு ஏற்பட்டு இதனால் நீர்ச்செறிவு ஏற்பட்டு நீர் அடத்தி ஏற்படும் அதனால் சிறுநீரக்கற்கள் உண்டாவதுடன் சிறுநீரகம் கிருமித்தொத்துக்கு உண்டாகி பாதிக்கப்படலாம். அதை தடுக்க கோடைக்காலத்தில் அதிகளவு நீர் அருந்தும் தேவை உண்டு.
        சிறுநீரகக் கற்கள் பொதுவாக சிறுநீரகத்துக்குள்ளும் அல்லது சிறுநீரகத்தில்“வெல்விஸ்” பகுதியிலும், சிறுநீர் வருகின்றபாதையிலும், சிறுநீர்குழாயிலும், தங்கியும் தோன்றலாம்.
     சிறுநீரகக் கற்கள் பொதுவாக ஐந்து வகையாக வகைப்படுத்தியுள்ளனர்
1. “கல்சியம் ஒட்சியேற்” வகையான கற்கள். 
2. “கல்சியம் பஸ்ரேட்”  வகையான கற்கள்.
3. “சுவைட்” வகையான கற்கள். சிறுநீரக தொற்று கிருமிகளின் தாக்குதலால் ஏற்படுகின்ற “மெக்நீசியமும் அமோனியாவும்”; சேர்ந்து ஒருவகையான கற்களை உருவாக்குகின்றன இவ்வகையான கற்கள் “சுவைட்”வகையான கற்கள் ஆகும்.
4. “யூறிக் அமிலக் கற்கள்” இது மிகக் குறைவான அளவிலே வருகின்ற யூறிக்கமிலம் அடர்த்திகூடுவதனால் உருவாகும் கற்கள்.
5. “செங்டோன் கற்கள்” “சிஸ்டின் “என்ற அமிலோ அமிலத்தால் உண்டாகும் கற்கள்.
இவ்வாறு சிறுநீரகக் கற்கள் உருவாகுகின்றன. இக் கற்களை அகற்ற நவீன மருத்துவம் பலமுறைகளைக் கையாழுகின்றன. அவைகள்.
1. “லித்தோடிஸ்சி” என்ற ஒருமுறை கதிர்களைப் பயன்படுத்தி கற்களை உடைத்து சிதைத்து சிறுநீர்ப்பாதை வழியாக வெளியேற்றுதல். இது கிரேக்க நாட்டு முறை “லித்தே” என்பது கல். “திப்சி” என்பது உடைத்தல் எனப் பொருள்படும். 
2.  “டனல் சேசறீ” முதுகுப் பகுதியில் துளையிட்டு அதன் வழியாக கற்களை அகற்றுதல்.
3. “யூரட்டோ கொப்பி” சிறுநீரகச் சிறுநீர் வரும்பாதையின் வழியாக “பிரோவல்” என்ற குழாயைச் செலுத்தி அதன் மூலம் சிறுநீரகக் கற்களை அகற்றுதல். 
                  இவ்வாறான முறைகளை நவீன மருத்துவம் பயன்படுத்த தமிழ் மருத்துவம் கற்களை கரைத்து அது மீண்டும் உருவாகுவதைத் தடுப்பதுடன் கற்கள் உண்டாகாதவர்களுக்கு உண்டாகாமல் தடுக்கும் வல்லமை உள்ள மூலிகைகளை கண்டனர் சித்தர்கள். அம் மூலிகையை கற்பேதி அதாவது கல்லை கரைத்து அதை பேதியாக்கி விடும் சக்தி வாய்ந்தது அந்த மூலிகை அதற்கு சிறுகண்பேளை, சிறுபேளை, சின்னப்புளைச் செடி, தேங்காப்பூக் கீரை என்றெல்லாம் அழைப்பர். இக்கீரையை சிறுநீர்ப் பெருக்கியாகப் பயன்படுத்துகின்றனர்.
       தாவரவியல் பெயர் : “எர்வால் லெனட்டா”
 தேரையார் தனது பதார்த்த குண சிந்தாமணியில் 
        “ பாண்டு பெரும்பாடு பகர் மூத்திரக்கிரீச்சம்
         பூண்ட திரிதோடி மிவை போக்குல் காண் - தாண்டி
         புதிய வேலைத் துரத்தும் பார்ரவக் 
         சிறிய கிளைக்குச்ச கண்ணாய் சிதைந்து” என்று ஒரு பாடலிலும் இன்னுமோர் பாடலில்
       “ நீடடைப்புக் கல்லடைப்பு நீங்கா குடல் சூலை 
        பேதீ டறிர் ரத்த கணம் போக்கும் கான்- வாரிருக்கும்
        பூண்முலையாய் கேளாய் கிறு பினையாகிது
        கற்பேதி பென்றறி” என்றார்.
 இவ்வாறு இருபாடல்களில் “கற்பேதி” மூலிகையின் மருத்துவக் குணத்தை பாவில் இயம்பியுள்ளார். இங்கு முதல் பாடலில்
1. “ பாண்டு”:  பாண்டு என்பது உடலில்  நீர்க்கொர்த்திருக்கும் நோய் முழங்கால் கனுக்காலின் பின்புறம் வயிற்றின் கீழ்ப்புறம் போன்ற இடங்களில் நீர் கோருத்து வலுனில் நீரை விட்டால் இருப்பது போல தெரிவது. இன் நோயை போக்க வல்லது இந்த மூலிகை
2. “பெரும்பாடு”: பெண்களுக்கு  வருகின்ற மாதவிடாயி நீடித்து அதிநாட்கள் நீர் இறைப்புப் போல் உதிரம் போகின்ற நிலையாகும். மாதவிடாய் சாதாரணமாக மூன்று நாட்கள் நீடிக்கும் ஆனால் இந்த நிலையில் பத்து பதினைந்து நாட்கள் கூடநீடிக்கலாம். இன் நோயை போக்க வல்லது இந்த மூலிகை

3. “பகர் மூத்திரக்கிரீச்சம்” : சிறுநீர் கழிக்க சென்றால் கழிக்முடியாது சொட்டுச் சொட்டாக எரிச்சலுடன் வேதனையும் தரும். சிறுநீரகத்தில் கிருமி த்தாக்குதலால் ஏற்படுவது இதனை “யூறினல் இன்பஸ்கன்” என்பர். இன் நோயை போக்க வல்லது இந்த மூலிகை
4.  “பூண்ட திரிதோடி” : வாத பித்த கபத்தை உடலில் சீர் செய்து அதனால் ஏற்படக்கூடிய நோய்களைக் கடுப்படுத்தும் வல்லமை இம் மூலிகைக்கு உண்டு. எனக் கூறுகின்றார்.
என பாம்பைப் போல கூர்மையான கண்ணுடைய பெண்ணே எனக் கூறுகின்றார். அடுத்த பாடலிலே
 “ நீடடைப்புக் கல்லடைப்பு நீங்கா குடல் சூலை 
        பேதீ டறிர் ரத்த கணம் போக்கும் கான்- வாரிருக்கும்
        பூண்முலையாய் கேளாய் கிறு பினையாகிது
        கற்பேதி பென்றறி”
1. “ நீடடைப்புக்” :  என்பது முதல் பாடலில் செல்லப்பட்ட பாண்டு என்னும் நோய் ஆகும்.
2. “கல்லடைப்பு” : என்பது சிறுநீரகக்கற்கள் இக்கற்களை கரைத்து பேதியாகி சிறுநீருடன் அற்றும் ஆற்றல் மிக்கது இம் மூலிகை. 
3. “நீங்கா குடi; சூலை”: வேதனையுடன் கூடிய குடலில் ஏற்படும் வலி இது சூரத்தால் முத்துவது போல ஏற்படும் வலியை போக்க வல்லது இந்த மூலிகை.
4. “பேதீ டறிர் ரத்த கணம்” : பெரிய இடரைத்தரும் இரத்த கணம் என்பது இரத்தழுத்தத்தை இங்கு கருதுகின்றர். இதையே இரத்தபித்தம் என்றும் சித்தமருத்துவத்தில் பயன்படுத்துவர். அழுத்தத்ததை குறைத்து அதற்கா தடையை நீக்கி நரம்பை பலப்படுத்தி வலுவுட்டும் தன்மை இந்த மூலிகைக்குண்டு.
 பாவில் கூறப்பட்ட நோய்களுக்கெல்லாம் அருமருந்து தேங்காய்பூ கீரை என்று குறியுள்ளார். அதன் பூக்கள் தேங்காப்பூ போல இருப்பதால தேங்காப்பூக் கீரை என்றும் அழைக்கின்றனர். 
         சிறுநீரக கற்களையும் சிறுநீரகக் கிருமித்தாக்கத்தால் உண்டாகும் நோய்களுக்கும் அருமருந்தாக அமைவதுடன்“புரஸ்ரகோளம்” என்னும் ஆண்குறின் இயக்கத்துக்குரிய கிளான் ஒன்று உண்டு இது வீங்கும் போது சிறுநீர்கழிப்பது தடைப்படுவதுடன் வேதனையும் எரிச்சலும் ஏற்படும் அதை குணப்படுத்தி அக் கிளான்டை புதுப்பித்து இயக்க வல்ல மூலிகை ஒன்று உண்டு அதுதான் நெருஞ்சியின் வித்து. 
            நெருஞ்சில் அல்லது சிறுநீர் பெருக்கி என்பதின் மருத்துவ பாகம் பற்றி தேரையர் பதார்த்த குணசிந்தாமணியில் குறிப்பிடுகையில்
“ சொல்ல வொன்னா நீர்கட்டு துன்பமாமிசருக்கி 
கல்லடைப் பெனும் பிணிகள் கண்டக்கால்
கருஞ்சின கண்மாதே நல்ல
நெருஞ்சினறு கித்தே நினை” இங்கு மேல் சொன்ன கல்லடைப்பு, நீர்க்ட்டு; என்பனவற்றுடன் விசேடமாக “துன்பமாமிசருக்கி” இது “புரஸ்ரகோளம்” என்னும் கிளான் தனது நிலை மருவி வீங்கியிருக்கும் இதனால் சிறுநீர் களிப்பதும் கடினமாக இருப்பதுடன் சிறுநீர் வெளியேறும் குழாயை அழுத்தி சிறுநீர் கழிப்பதை  தடை செய்து வேதனைக்குள்ளாக்கும் இந்த நிலையிலிருந்து வீக்கத்தை வத்தவைத்து சீர்செய்து இயல்பான நிலைக்கு கொண்டு வந்து இயல்பு நிலைய தொடர்ந்து பாதுகாக்கும் வல்லமை நெருஞ்சியின் நன்கு விளைந்த நல்வித்துக்கு உண்டு.  

“சித்தன் சிந்தையில் உதித்தது 
    சித்த வைத்தியம்
மனுக் குலம் பெற்ற பெறு அது
    அவன் வாக்கு சிவ வாக்கு
சீவன் சிவன் என்று உணர்தால்
    அதுவே வாழ்கையின் தத்துவம்
தத்துவம் அறியார் முத் தீ அடையார்
 அடைய உடல் திரி தோச நிவர்தியினால்
 சம நிலை தேவை கற்பமாக
அதற்கே சித்த வைத்தியம் தந்தான் சித்தன்
சித்த வாழ் வியல் அறிந்து
 ஒழுகினால் வெற்றி நிச்சயம்” 
                 மட்டூர் புன்னையம்பதியான்  


வாதபித்த மையமோடி னை சிறு வருக்கும் மின்னும் செப்பி லறிவு தரும் அறுகம்புல்”

“வாதபித்த மையமோடி னை சிறு வருக்கும் மின்னும் செப்பி லறிவு தரும் அறுகம்புல்”

“வாதபித்த மையமோடி னை சிறு வருக்கும் மின்னும் செப்பி லறிவு தரும் அறுகம்புல்”
 தாவரவியல் பெயர்: Cynodon Dactylon   (syn. Panicum dactylon, Capriola dactylon)
 ஏனைய பெயர்கள்:  also known as dūrvā grass, Bermuda Grass, Dubo, Dog's Tooth Grass, Bahama Grass, Devil's Grass, Couch Grass, Indian Doab,Arugampul, Grama, and Scutch Grass,     


                அறுகம்புல் இறந்தாலும் உயித்தொழும் தன்மை உடையது. அது விநாயகனுக்கு அர்ப்பணிக்கும் பொருளாகும். விக்கினம் தீர்ப்பவன் விநாயகன் விக்கினம் ஏற்பட காரணம் ஸ்திமான மனம் இல்லாமை இதனால் ஆய்ந்து அலசி ஆராய்யும் திறனை இழந்து தவிக்கின்றான் மனிதன் இதற்கு அடிப்படையான காரணம் உடல் சமநிலை இன்மை உடல் முக்குணங்களால் வழிநடாத்தப்படுகின்றது. அவை வாத, பித்த, கபம் என்பன இவற்றின் சமநிலை மாறுமானால் மனமும்  சமநிலையை இழக்கின்றது இதனால் விக்கினம் ஏற்படும் இதை அறுகம் புல் அவற்றுக்கிடையிலான ஏற்ற இறக்கத்தை சீர்செய்து சமநிலைக்கு கொண்டு வரும் ஆற்றல் அறுகுக்கு உண்டு. சிவன் அகோரமானவர். அகோரக் காற்று வடிவானவர். பஞ்சபூதங்களில் கற்றுக் கூறு.  இது வாதத்தன்மையானது. புளிப்பு சுவையால் அதன் அதிகரிப்பால் ஏற்படக் கூடியது. இதை சரி செய்ய வில்வம் பயன் படுத்தப்படுகின்றது. பொதுவாக உஸ்ன நோய்களுக்கு அருமருந்து வில்வம். விஸ்ணு குளிர்ச்சியானவர் அவருக்கு துளசி குளிர்சியால் உண்டாகும் நோய் கபம் இ;தைப்போக்க துளசியே அருமருந்து. இது பஞ்சபூதங்களில் நீர் கூறு. இது இனிப்புச் சுவையானது. அதன் அதிகரிப்பால் ஏற்படக் கூடியது கபம்.  சக்தி நெருப்பு வடிவானவள். நெருப்பின் வெப்பத்தை குறைக்க வேம்பு. வெப்பத்தினால் பித்தம் உடலில் அதிகரிக்கும் பித்தத்துக்கு மருந்து வேம்பு. இது பஞ்சபூதங்களில் நெருப்புக் கூறு. அது கசப்புத் தன்மையானது. பஞ்சபூதங்களில் மனிதனின் உடலில் நோய் வரக் காரணமானதாக நீர்,நெருப்பு, காற்று என்னும் கூறுகள் ஆகும். இவற்றால் உடலில் ஏற்படுத்தப்பட்டவை வாதம், பித்தம், சிலேற்பனம் என்னும் கபம். இவை முறையே புளிப்பு, கசப்பு, இனிப்பு சுவைகளினால் ஏற்பட்டவை. இவைகள் அனைத்தும் சமமாக இருக்கின்ற போதே உடலில் நோய் இல்லாது  மனஅழுத்தமோ, படபடப்போ, தடுமாற்றமோ இன்றி உடல் சமநிலையில் இருக்கும். இதில் ஏற்றத்தாழ்வு இருக்குமானால் அங்குதான் நோய்க் குறிகள் ஆரம்பமாகின்றது.  இவர்கள் அனைவருக்கும் பொதுவானவர் விநாயகர் இவர் எல்லா இடத்திலும் இருப்பார் இவருக்கு அறுகு அது துவர்ப்பு சுவையானது. இது விநாயகரின் பிரதான அர்ச்சனைப் பொருள். இவர் எல்லா இடத்திலும் பொதுவாக இருப்பது போல் அறுகாகிய ஒற்றை மூகிலிகை வாத, பித்த, கபம் என்னும் மூன்றையும் சமநிலையில் பேணும் மூகிலியாக உள்ளது. “வாதபித்த மையமோடினை சிறு வருக்கும்” என தேரையர் முதல் வரியிலேயே எவ்வளவு அழகாகக் கூறிவிட்டார்.  
அறுகம்புல்

அறுகம்புல்
             இந்து மதம் எவ்வாறு வழிபாட்டையும் வைத்தியத்தையும் இணைத்துள்ளது. இதனாலேயே அதற்கு ஆயுர் வேதம் என பெயர் வழங்கலாயிற்று. சைவம் ,வைணவம், சாத்தம் மூன்றும் மூன்று துருவங்களாக இருந்த காலமொன்று இருந்தது அப்போது காணபத்தியக் கடவுலான விநாயகனை எல்லோரும் பொதுவாக ஏற்றதுண்டு எல்லா ஆலயங்களிலும் அவருக்கு ஒரு  தனிச்சன்னதி வைத்திருப்பர்.மதம் என்ற மத வெறியை ஏற்படுத்திய வாத பித்த கபக் கூறுகனை சமப்படுத்த பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட விநாயகர் அறுகு ஆகும். அறுசமயங்களை ஒன்றாக்கிய பெருமை ஆதி சங்கரக்கே அவரே சங்கரன்.
        தேரையர் தனது பதாத்தகுண சிந்தாமணியில் அறுகம்புல்லின் மருத்துவ பாகம் பற்றி குறிப்பிடுகையில் 
        “வாதபித்த மையமோடி ளை சிறுக வருக்கும்
             மின்னும் செப்பி லறிவு தரும் கண்நோய்
            யொடு தலை நோய் கண் புகையில் ரத்த பித்தம்
            முன்நோய் ஒழிக்கும் முறை” என்றார். இங்கு 
1. “செப்பில் லறிவு தரும்”: நினைவாற்றலை அதிகரித்து சிந்தனா சத்தியை கூட்டி அறிலைப் பெருக்குகின்ற ஆற்றல் மிக்கது அறுகம்புல். இதனாலேயே “அருணகிரி நாதர்” விநாயகர் திருப்புகழில் “முத்தமிழ் அடைவிணை முப்படுகிரிதனில் முப்பட எழுதிய முதல்வோனே”அவ்வளவு ஆற்றல் உள்ளது அறுகம்புல். “விநாயகப் பெருமான் புத்தியின் வடிவானவன் அவன் முத்திக்கு வழிகாட்டுபவன் சித்தியில் உறைபவன்” அதனாலேயே அவனுக்கு புத்தி சித்தி என்னும் இரு மனைவியர். சிந்திக்கும் ஆற்றலுக்கு அவசியமான சத்தியவை. புத்தி விளிப்படைந்து சித்தம் தெளிந்தால் அவன் செல்ல வேண்டிய பாதை தெளிவாகத் தெரியும் அதுவே அவனின் வெற்றிப்பாதை அங்கு தோல்விக்கு இடமில்லை அதுவே விக்கினம் தீர்க்கும் பணி. அப்படிப்பட்டது தன்மைகளை தரவல்லது அறுகம் புல்.
2. கண்நோய் யொடு தலை நோய் கண் புகையில்”: கண்பார்வை மங்கலாக இருத்தல் இன்நிலையில் கண்களில் புரை வளரத் தொடங்குவதை கட்டுகின்றது இதனால் கண்பார்வை மங்கலாகிக் குறைந்து வரும் இது இரத்தழுத்தத்தால் ஏற்படலாம். தலைவலியும் ஏற்படும் இதனைப் போக்குகின்ற திறன் அறுகம் புல் எண்ணைக்கு உண்டு. 
3. “ரத்தபித்தம்” : என்பது குருதியில் பித்தம் கூடுதல் அதாவது குருதியில் அனல் கூறாக இருக்கின்ற வெப்பக் கூறு கூடுகின்ற போது குருதியில் பித்தம் அதிகரித்து குருதியின் அழுத்தம் கூடும் இதை குருதி அளல் அல்லது குருதி அழுத்தம் என்பர். அதற்கு அடிப்படைக் காரணம் பரபரப்பு, மனஅமைதியின்மை, உடல் பருமன் அதிகரித்தல், கொழுப்புச் சத்து அதிகரித்து இரத்த குழாயிகளில் படிந்து இரத்தழுத்தம் ஏற்பட்டு  இருதயநோய் வருகின்ற வாய்ப்பு ஏற்படுகின்றது. இதனால் இரத்தக்குழாய்கள் தமது இயல்பான தன்மையை இழந்து விடும். இயல்பாகவே இரத்தக் குழாய்கள் சுருங்கி விரியும் தன்மையை உடையது. அறுகம்புல் இரத்தக்குழாயயை இளமையாக நிலைத்திருக்க வைத்திருப்பதுடன் சுருங்கி விரியும் தன்மையை இழக்காது பாதுகாக்கின்றது.
4. “முன்நோய் ஒழிக்கும் முறை”: நோய் வருவதற்கு முன்னர் நோயை வராது முன்னால் தடுக்கும் ஆற்றல் அறுகம் புல்லுக்குண்டு.
நவீன அறிவியல் கூறும் விந்தை: 
     இரண்டாயிரத்து ஏழில் (2007 இல்) சுந்தர்சிங் என்ற ஆய்வாளர் செய்த ஆய்வில் அறுகம்புல் தண்ணீர்ச் சாறு இரத்தத்தில் சக்கரையின் அளவையும் கொழுப்பின் அளவையும் குறைத்து. இரத்தத்தை சீர் செய்யும் சக்தியும் வல்லமையும் உள்ளது. என்றும் அது குறைக்கும் அளவையும் அளவிட்டுக் குறிப்பிட்டுள்ளார். கொழுப்புப் பரிசேதனையில் மொத்தக் கொழுப்பு, ஆபத்தான மிருகக் கொழுப்பு, டைற்கிளிகரைட் இது போன்றவை உண்டு. இதனை பரிசாதனை செய்யும் முறையை “லிப்பிட் புறபையில் பரிசோதனை” என்பர். அறுகம்புல் சாற்றை அருந்திய பின் பரிசோதனை செய்த போது. மொத்த கொளஸ்லோல்(TC)- 33 வீதத்தாலும்(33% ), ஆபத்தான மிருகக் கொழுப்பு (LDL) – 77 வீதத்தாலும்(77%), டைற்கிளிகரைட் -29 வீதத்தாலும்(29%) குறைவடைந்து காணப்பட்டது என்று ஆய்வின் முடிவை வெளியிட்டிருந்தார். சித்தரின் வெண்பா எவ்வளவு உறுதியாக ஆணையிட்டுள்ளது. “கண்ணோய் யொடு தலை நோய் கண் புகையில் இரத்த பித்தம்” போன்ற நோய்க்கு அடிப்படை இரத்தபித்தமெனும் இரத்தழுத்தம் இதை போக் வல்லது அறுகம்புல்.
பயன் படுத்தும் முறைகள் : 
1. அறுகம்புல் தைலம்: அறுகம்புல்லைத் தேர்தெடுக்கும் போது கவனிக்க வேண்டியது ஓர் முக்கிய விடையமாகும். சரியான புல்லைத் தேர்தெடுக்கும் போது: 
1.அறுகம்புல் பூக்கும் தன்மையுடையது. 
2.கணுக்கள் விட்டு படர்ந்து கணுக்களுக்கிடையல் கிளை விட்டு           
    வலைப் பின்னல் போல விரிந்து படரும் தன்மையுடையது. இவ்வாறு               
தெரிவு செய்து கொள்ளவேண்டும். அறுகு போன்று வித்யாசப்படுத்த முடியாத புல்வகையும் உண்டு. அது பூக்காத ஒஸ்ரேலியன் கிராஸ், கொறியன் கிராஸ் போன்ற பூங்காக்களில் அழகுபடுத்தும் ஒருவகைப்புல்கள் உண்டு அவை பார்வைக்கு ஒன்று போல இருந்தாலும் அதன் தன்மை வேறு அது அறுகாகாது. இவ்வாறு தேர்ந்தெடுத்த அறுகம் புல் ஒருபிடி எடுத்து அதை நன்றாக உரலில் இட்டு இடித்தெடுத்து வைத்துக் கொண்டு. ஒரு அகன்ற கரண்டியில் நல்லெண்ணை விட்டு நெருப்பில் பிடித்து காச்சி அதனுள் இடித்தெடுத்து வைத்த அறுகம்புல்லை இட்டவும். இட்டவுடன் அது எண்ணெயினுள் சென்று மீண்டும் மேல் வரும். (எண்ணையில் அறுகை இடும் போது அவதானத்துடன் இருக்க வேண்டும் எண்ணையில் பச்சை புல்லை போடும் போது பொங்கும்) வந்தவுடன் நெருப்பை நிறுத்தி விட்டு எண்ணையை எடுத்து ஆறவிட்டு பின் அந்த எண்ணையை தலை, முகம் போன்ற வற்றில் தேய்த்து சில மணிநேரம் ஊறவிட்டு வெண்நீரில் தோய வேண்டும். வென்நீர் என்னும் போது நன்றாக சூடாகிய நீரில் குளிந்த நீரை கலத்தலை தவித்து சூடாக்கும் போது குளிப்பதற்கு தக்கதாக சூடாக்கிக் கொள்ள வேண்டும். எண்ணையை உடலில்லிருந்து அகற்ற சவற்காரத்தைத் தவித்து சீயாக்காய்த்தூள், அரப்புத்து தூள், பாசிப்பயறுமா போன்றவற்றை பயன்படுத்தி எண்ணையை உடலில்லிருந்து அகற்ற வேண்டும். இவ்வெண்ணையைப் பயன்படுத்துவதினால் பினிசம், தலைவலி, மனவழுத்தம், பரபரப்பை ஏற்படுத்தும் தலைவலி என்பன குணமாகும்.
அறுகம்புல் பூ


2. அறுகம் புல்லை சாறாக்கி அருந்தலாம் இதனை அறுகம்புல் யூஸ் என்று அழைப்பர்.


3. அறுகம்புல்லுடன் (ஒருகைப்பிடி அளவு) இதனுடன் ஆறு மிளகும் நாலில்ஒரு பங்கு தேக்கரண்டி அளவு நற்சீரகம் அல்லது பெரும் சீரகம் இட்டு நன்றாக நீர் விட்டரைத்து காச்சி வடிகட்டி வெறுவயிற்றில் காலையில் ஒரு டம்பிளர் அருந்த வேண்டும். அருந்திய பின் இரண்டு மணித்தியாலங்களின் பின் மலக்கழிவு ஏற்படலாம் பயப்படத் தேவையில்லை.
4.நன்றாகச் சுத்தம் செய்யப்பட்ட அறுகம்புல்லை இனலில் உலர்த்தி பொடி செய்து வஸ்திரத்தில் சலித்து வஸ்திரகாயமாக வைத்துக் கொண்டு காலை மாலை ஒரு தேக்கரண்டி அளவு பாலில் இட்டு அல்லது தண்நீரில் போட்டு அல்லது தேன் கலந்து சாப்பிட்டுவர “வாதபித்தம் ஐயமோடு இழை சிறு அறுக்கும் ---
5.சரும வியாதிக்கு அறுகம்புல் நல்ல மருந்தாகும். அறுகம்புல்லும் மஞ்சலும் சேர்த்து விழுது போல அரைத் தெடுக்கவேண்டும். (ஒருபிடி அறுகம்புல்லுக்கு ஒரு தேக்கரண்டி மஞ்சல் வீதம்; சேர்த்தல் வேண்டும்.) அரைத்தெடுத்த அறுகம்புல் குழம்பை நெற்றி, கன்னம், சைனஸ் நீர் தேங்கக்கூடிய இடத்திலெல்லாம் பூசித் தேய்த்து சிறிது நேரம் ஊற விட்டு இருந்து தோய வேண்டும் (நீராடுதல் வேண்டும்) பின்னர் உடலில் நீர் இன்றி நன்றாக துடைத்துவிட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் சைனஸ்; வியாதியிலிருந்து விடுபடமுடியும். சரும வியாதியுள்ளவர்கள் வியாத்யுள்ள இடங்களில் இரவில் பூசி காலையில் நீராடமுடியும் சரும வியாதியிலிருந்து விடுபடமுடியும்.   
         ---  இன்னும் செப்பில் அறிவு தரும் கண்ணோய்
            யொடு தலை நோய் கண் புகையில் இரத்த பித்தம முன்நோய் யொழிக்கும் உரை” இங்கு சொல்லப்பட்ட தேரயர் வாக்கு பலிதமாகும்.


 

கிருமி குட்டம் மந்தம் கெடும் வேம்பு அல்லது நிம்பம்;”

கிருமி குட்டம் மந்தம் கெடும் வேம்பு அல்லது நிம்பம்;

“கிருமி குட்டம் மந்தம் கெடும் வேம்பு அல்லது நிம்பம்;” 
வேம்பின் மருத்துவக்குணம் பற்றி தேரையர் குறிப்பிடுகையில் 
“கிருமி குட்டம் மந்தம் கெடும்
விடம் சுரங்கள் பெருமிய வைசூபிகையின்
புண்கள் ஒருமிக்க நிம்பத்திலை
இருக்க நீடுலகில் நீற்காது இலை காய்” என்றும் இன்னுமோர் பாடலில்
“மந்தப் பொருமலுடன் மல்லாடும்
பேதி வகை வந்த கணுச்சூலை
வண்கிரந்தி தொந்த மெல்லாம்
கூப்பிக் கரம் கொண்டாடும் இத் தரையில்                                                                                                                                                                                                                                                                                                                                                                        
வேம்பின் நற்குணத்தை வீழ்” என இருபாடல்களில் தேலையர் வேம்பின் மருத்துவக் குணங்களைக் கூறியுளார். 
1. “கிருமி  குட்டம் மந்தம் கெடும்”:  “கிருமி” என்பது வைரஸ் என்பதை இங்கு பொருள் கொள்ள வேண்டும். பொதுவாக புழு என்பது எம்முடலில் காணப்படும் நடாப்புழு, உருளைப்புழு, கீரிப்புழு என்பவற்றைக் குறிப்பிடுகின்றோம். புச்சி என்பது சிறிய உயிரினங்களுக்கு பயன்படுத்தும் பெயராகும். ஆனால் இங்கு கிருமி என்று பயன்படுதியதிலிருந்து நுண் கிருமியான பற்றியாக்கள் பங்கஸ்சுக்கள்; வைரஸ்கள் என்பவற்றினால் நோய் பரப்பப்படுகின்றது என்பதை மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சித்தர்கள் அறிந்திருந்ததை அறியமுடிகின்றது. நுண்கிருகிகளால் பரப்பப்படும் நோய்களை தடுக்க நோய்க்கிருமிகளைத் தடுத்துக் கொல்லும் ஆற்றல் வேம்புக்கு உண்டு. அதனாலேயே அம்மை நோக்கு வேம்பு அருமருந்தாக கண்டு அம்மை நோய் கண்டவர்க்கு வேம்பின் இலையுடன் மஞ்சல் சேர்தரைத்து உடல் முழுவதும் பூசுவதுடன் மருந்தாக வேம்பில் அரும்பின துளிரை உட் கொடுப்பதுடன் படுக்கையில் வெள்ளை விரிப்பொன்றை விரித்து அதன் மேல் முற்றிய வேம்பின் இலைகளைப் பரப்பி நோய்யுற்றரை துயில வைப்பர். அம்மை நோக்குக் காரணம் வைரஸ் இதைதடுக்கும் ஆற்றல் வேம்புக்குண்டு என்பதை அன்று அறிந்திருந்தனர் சித்தர்கள். அறிவியல் இதை ஆராய விளைந்தது. ஆயிரத்து எண்ணுற்றி எழுபதில்களில் பிராஸ் தேசத்தைச் சேர்ந்த  டக்டர். லுயிபாஸ்டர் என்பவர் ஒரு உயிரியல் விஞ்ஞானி இவர் பிற்காலத்தில் நுண்ணுயிரியல் விஞ்ஞானியாகி நுண்கிருமிகள் மனித உடலில் நோய்களை உருவாக்கின்றது என்ற விடயத்தை நவீன மருத்துவ உலகுக்கு முதலில் அறிமுகம் செய்தார். இதை சித்தர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இதை அறிந்து அனுபவித்து மக்களுக்கு தெரித்வித்திருக்கின்றனர். என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. கண்ணுத்தெரியாத உயினங்கள் நோயை உருவாக்கு கின்றன என்பதை தமிழ் மருத்துவம் உணர்தே இங்கு “கிருமி” என்ற சொற்பதத்தை அன்று பயன்படுத்தி இதனை அளிக்கும் ஆற்றல் வேம்புக்கு உண்டு என்பதை அறிந்து ஆய்து அனுபவித்து தமிழ் மருத்துவத்துக்கு தந்தனர்.

2. “குட்டம்”: தொழுநோய்யாகிய விரல்கள் அழுகி விழுவதுடன் அங்கங்கள் சுருங்கி ஒலிந்து அபலட்சணத்தை உருவாக்கின்ற கிருமிகளை அகற்றி ஒழிக்கும் ஆற்றல் வேம்புக்குண்டு. 
3. “மந்தம் கெடும்”: ஐPரணக்குறைபாடு இயற்கையாக உணவு சொரிக்கும் ஆற்றலில் தாமதம் இதனால் அஐPரணம் ஏற்படுத்தி உடல் உபாதைக்கு உட்படுகின்ற நிலையை தடுக்கின்ற தன்மை வேம்புக்குண்டு. 
4. “விடம் சுரங்கள் பெருமிய வைசூபிகையின் புண்கள்” : நீங்காத காச்சல் வைசூரியினால் உண்டாகும் புண்கள் இவற்றைப் போக்கும் இயல்பு வேம்புக்குண்டு.
  அடுத்த பாடலிலே “மந்தப் பொருமலுடன் மல்லாடும்
5. பேதி வகை”:மாந்தத்தினால் வயிறு பொருமலடைந்து ஏற்படும் வயிற்றுப்போக்கை தடுக்கும் தன்மை வேம்புக்குண்டு.
6. “வந்த கணுச்சூலை”: கணுச்சுலை என்பது மூட்டுகளில் நாற்பது வயதின் பின்னர் ஏற்படும் வழுவின்மையினால் ஏலும்புகள் உரைவதால் ஏற்படும் நோவும் வலியும் போக்கும் தன்மை வேம்புக்குண்டு.
7. “வண்கிரந்தி தொந்த மெல்லாம்”;: வண்மையான கிரந்தி அதாவது ஒவ்வாமையினால்  தோலில் ஏற்படும் பருக்கள் அவைஎல்லாம் வேம்பைக் கண்டவுடன் கைகுப்பி எங்களை ஒன்றும் செய்ய வேண்டாம் விட்டுவிடுங்கள் பயந்து ஓடிவிடுமாம் என்று வேம்பின் வல்லமையை தேரயர் குறிப்பிடுகின்றார். 
பயன் படுத்தும் முறைகள்:
வேம்பின் துளிர்  1. வேம்பு கற்பம் இது வேம்பி தளிரை அதாவது துளிர் அரும்பை நாள் ஒன்றுக்கு ஒன்று இரண்டாக பத்தாவது நாளில் பத்து அரும்பாக தெடர்ந்து பத்துபத்தாக ஒரு மண்டலம்; (மண்தலம்) அதாவது நாற்பத்தெட்டு நாட்கள் உண்டுவர காயம் கற்பமாமும் என சித்தர்கள் இயம்பியிருக்கின்றனர். இதன் மூலம் உடலில் குடிகொன்டுள்ள கிருமிகள் ஒழிவதுடன் சருமத்தில் கொப்பளம் அரிப் என்பன நீங்கி விடும் அரவம் தீண்டினால் கூட உடலில் வி~ம் ஏறாது வி~த்துக்கு எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.
2. மயிர் கறுத்து இளமை பெற “அகன்னன் நுதனாய் ஓர் அதிசயம் கேளாய் களவு காயம் கலந்த இன் நீரில் மிளகும் நெல்லியும் மஞ்சலும் வேம்பிடில் இலகு மேனி இறுகும் காயமே” தும்பை போல இருந்த தலை முடி கறுப்பாக போவதுடன் உடல் இழமையும் மடையுமாம் வெண்மிளகு,நெல்லி வற்றல், கஸ்தூரி மஞ்கல், வெம்பின் விதை, அமியை இவை ஐந்தையும் அரைத்து நீரிலிட்டு தலை உடலெங்கும் பிரையோகித்தால் உடல் கட்டிளமை பெறுவதுடன் தலை முடியும் கறுப்பாகும்.
வேப்பம் வித்தும் 3. பஞ்சகற்பம் என்பது மிளகு, நெல்லி, மஞ்சல், வேம்பு, கடுக்காயத் தோல் என்பவற்றை சேர்த்து அரைத்து பீக்கம்தும்பினால்  தலை உடலெங்கும் தேய்த்து சிறிது நேரம் களித்து குளித்தால் கபம் நீங்கி உடல் இளமை பெறும். பொதுவாக கடுக்காய்த்தோல் ஒருபங்கு, வெண்மிளகு காற்பங்கு, நெல்லிக்காய் வற்றல் அரைப்பங்கு, கஸ்தூரி மஞ்சலும் வேப்பம் வித்தும்எட்டில் ஒரு பங்கு இவை அனைத்தும் உரியளவில் கலந்து அரைத்து எடுத்த விழுதை உடலில் தேய்த்து குளிக்கலாம்.
நடுத்தர வேம்பின் இலை 4. நடுத்தர வேம்பின் இலையை எடுத்து சமனிடை கருமிளகையும் சேர்த்து விளுதுபோல் அரைத்து அதை சுண்டங்காய் அளவும் பட்டானி அளவிலும் உருட்டி இனலில் காயவைத்துக் கொண்டால் வயிற்றில் புழுத் தொல்லை ஏற்படும் போது பெரியவர்களுக்கு மூன்று அல்லது நான்கு சுண்டங்காய் அளவுள்ள உருண்டையையும் சிறியவர்களுக்கு ஒன்று அல்லது இரண்டு பட்டானி அளவிலான உருண்டைகளை மூன்று வேளை பத்து நட்களுக்கு கொடுக்கவயிற்றிலுள்ள புழுக்கள் இல்லாமல் போகும்
நன்கு முற்றிய இலையில்  5. வேம்பின்நன்கு முற்றிய இலையில்ஒருகைப்பிடி எடுத்து இதனுடன் ஒருகைப்பிடி புழுங்கல் அரிசையும் சேர்த்து உரலில்லிட்டு இடித்து இரண்டும் இடிந்து வேப்பிலைக் சாறு குறுணலில் நன்றாகக் கலந்த பின் இடிந்த இலைகளை அகற்றி சாறுகலந்த குறுனல்லை ஒட்டியிட்டு(மண்சட்டியில்) கறுக வறுத்து நான்கு படி நீருற்றி ஒருபடியாய் வற்றக்காச்சி எடுத்து வயதுக்கும் உலல்வலிமைக்கும் ஏற்ப கொடுத்து வர பேதி கட்டுப்படும்.
6. வேம்பிலையின் நெட்டியில் உள்ள பச்சிலைப்பகுதியை நீக்கி ஈக்கை இடித்து நீர்விட்டு வறற்க்காச்சி அருந்த அதிசாரமெனும் வயிற்றுப் போக்கு நின்றுவிடும். இம் மருந்து அஐPரணக் கொளாற்றையும் நீக்க வல்லது.
7. வேம்பின் நடுத்தரமாக விளைந்திருக்கும் இலையை எடுத்து இதனுடன் இஞ்சி, மஞ்சல் இவை இரண்டும் சேர்த்து மூன்றையும் சமமிடையாக சேர்த்து விழுது போல் அரைத்து ஓட்டியிட்டு  சாதுவாக சூடாக்கி மூட்டி மூட்டுக்களில் பற்றுப்போட்டால் போல பூசி காயவிட்டு காலையில் கழுவிடலாம். பின் வீட்டில் இருப்பதானால் மீண்டும் காலையிலும் இடலாம் இதன் மூலம் மூட்டுவலி வீக்கம் என்பன சுகமாகி மூட்டுகளின் உராவை தடுக்க வழுவும் உண்டாகும்.



மந்தாக்கின சோபை வாந்தி யழல் போக்கிடும் மிளகுத்தக்காளி அல்லது மனத்தக்காளி”

“மந்தாக்கின சோபை வாந்தி யழல் போக்கிடும் மிளகுத்தக்காளி அல்லது மனத்தக்காளி”

“மந்தாக்கின சோபை வாந்தி யழல் போக்கிடும் மிளகுத்தக்காளி அல்லது மனத்தக்காளி”
          மனத்தக்காளிக் கீரையின் காய்கள் மிளகை ஒத்தவையாகக் கானப்படுவதால் அதனை மிளகுத்தக்காளி என்றும் அழைப்பர். இத்தக்காளிச் செடி மனமுள்தால் மனத்தக்காளி என்றும் திருமனத்துக்கு தக்க உடல்லை யாளியை யொத்ததாக்கும் தன்மை தரக்கூடிய வல்லமை யுள்ளதால் இக் கீரையை மனக்க தக்க யாளி மனத்தக்காளி யாக்கிவிட்டது.
          இக்கீரையின் மருத்துவ பாகம் பற்றி தேரையர் பதாத்தகுண சிந்தாகணியில் 
“மந்தாக்கின சோவை வாந்தி யாழல.; வாயு வெப்பம்
  விந்து நோய் பாண்டொதிர் விக்கல் - முந்து
  வளருமத்தோச நோய் மாறும் கைப்பான
   மினகுத் தக்காளியிலை மெய்” என்று ஒருபாடலிலும் அடுத்து
 காய்க்குக் கபம் தீரும் காரிகையே யவ் வினைக்கு
 வாய்க்கிரந்தி வேக்காடு மாறும்காண் - தீக்குள்
 உணக்கிடு வற்றலுறு பிணியாக்கு கூறும்
 மனத்தக் காளிக்குள்ள வாறு”   
 வெப்பத்தினால் உண்டாகும் நோய்களுக்கு இது அருமந்தாகும் என்பதை தேரையர் எவ்வளவு அழகாக வெண்பாவில் குறிப்பிட்டுள்ளார்.            
 பொதுவாக வெப்பகாலத்திலே ஏற்படக்கூடிய வாய்ப்புண்ணுக்கு மனத்தக்காளி இலையை மெண்று விழுங்கி விட்டால் குணமாகிவிடும். 
     இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மூன்னர் வாழ்த சித்தர்கள் இன்றைய உலகுக்கு பொருத்தமானதை எப்படி உணர்ந்திருந்தனர் என்பதை அறிவியல் ஆய்கின்றது என்னும் போது நமக்கெல்லாம் ஒருபுறம் பெருமையும் இன்னுமோர் புறம் வியர்ப்பாகவும் இருக்கின்றது. தமிழ் மருத்துவ உலகம்கில் சித்தர்கள் தொண்மையும் விஞ்ஞானத்தின் மெய்ஞானியாக இருந்திருக்கின்றனர். என்பது இங்கு கண்கூடு.
   1.இரண்டாயிரத்து ஆறாம் வருடம்( 2006இல்) மஸ்பரலஸ் என்ற ஆய்வியலாளர் மனதக்காளியின் இலைச்சாற்றை ஆய்வு செய்து குடல்புண்ணை ஆற்றும் ஆற்றல் உண்டு என்பதை வெள்ளை எலிகளுக்கு கொடுத்து அவைகளுக்கு ஏற்பட்டிருந்த குடல் புண் ஆறக்கண்டு ஆய்வுக் கட்டுரை வெளியிட்டுள்ளார். அத்துடன் வாயுடன் கூடிய அல்சறை குணமாக்கும் ஆற்றலும் மனதக்காளியின் இலைச்சாற்றுக்கு உண்டு என்று நிருபித்துள்ளார்.
  2. யதீஸ் என்ற இன்னுமோர் ஆய்வாளர் இரண்டாயிரத்து பதினொன்றில் (2011 இல்)செய்த ஆய்விலும் மனதக்காளியின் இலைச்சாற்றுக்கு வயிற்றில் எற்படும் புண்களை முற்றாக மாற்றும் வல்லமை இருப்பதாக மீண்டும் உறுதி செய்துள்ளார்.
   3. இரண்டாயிரத்து ஆறாம் வருடம்( 2006இல்) ராஐ; என்ற இன்னுமோர் ஆய்வாளர் மனதக்காளியின் இலைச்சாற்றில் உள்ள “கப்பட்டோ புரட்டக்டியுல்” என்ற வேதியல் மூலக்கூறு கல்லீரலைப் பாதுகாக்கின்றது. என்ற கருத்தை அவரின் ஆய்வின் மூலம் முன்வைத்து நீருப்பித்துள்ளார்.
   4.இரண்டாயிரத்து பதினொன்றில் (2011 இல்) பகிஸ்தானைச் சேர்ந்த உஸ்மான்னலி அஸ்ரப் அலி என்னும் ஓர் ஆய்வாளர் மனதக்காளியின் இலைச்சாற்று மஞ்சல் காச்சலில் ஒருவகையான “கப்பட்டைடிஸ் -சீ” என்ற காச்சலை உருவாக்கும் வைரஸ்சை அழிக்கும் வல்லமை உள்ளதுடன் கல்லிரலின் பலவீனத்தால் உண்டாக்கும் நோய்களை குணப்படுத்த வல்லதுடன் கல்லீரலை பலப்படுத்தும் வல்லமையும் இருக்கின்றது என மீண்டும் அக் கருத்துக்கு வலுவுட்டியுள்ளார்;.
   5.செல்வப்பா முத்து என்ற இன்னுமொரு ஆய்வாளர் இரண்டாயிரத்து பதினொன்றில் (2011 இல்) செய்த ஆய்வில் மனதக்காளிக் கீரை மிகவும் சக்தி வாய்தது என்றும் அது ஆண்களின் ஆண்மையை வீரியமாக்குவதுடன் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன் இதன் அளவையும் விந்து சுரப்பையும் அதிகரிக்கின்றது என்று தனது முடிவை வெளியிட்டுள்ளார். இதனை சித்தர்“விந்து நோய் பாண்டொதிர்”என முன்னரே அறிந்து அறிவியல் உலகுக்கு தெரிவித்துன்னர் என்பதை அறியும்போது தமிழ் மருத்துவத்தின் அறிவியல் தொன்மையை அறிய முடிகின்றது. 
மனத்தக்காளி காயும் பழமும்   5. திருமதி. வடிவேல் அருள்மொழி என்ற ஆய்வாளர் இரண்டாயிரத்து பத்தில் (2010 இல்)தாம் செய்த ஆய்வில் மனத்தக்காளிக் சற்றுக்கு இரண்டு பண்புகள் உண்டு என்றும் இவை
        1;.நோய் எதிப்பு சக்தி வீழ்சிக்கு காரணமாக இருக்கின்ற பொருட்கள்         எல்லாவற்றையும் அழிக்கின்ற ஆற்றல் உண்டு என்றும். உடலை முதுமையிலிருந்து இளமையாக்கி  காக்கின்ற ஆற்றல் உண்டு என்றும். 
       2.உடலில் கொளுப்பு சத்து அதிகரித்து கொலஸ்றோல் அதிகர்த்து அதன் விளைவால் வரக்கூடிய சைக்கிளிசைட், லோடெண்சிட்டி கொலஸ்றோல், லிப்பீட் கொலஸ்றோல்போன்றவை உடலில் கூடுவதை தடுக்கும் ஆற்றல் மனத்தக்காளிக்குண்டு. என்று தனது ஆய்வில் வெளியிட்டுள்ளார்.
6. சீனதேசத்தைக் சேர்ந்த கெஸ்சி முவான் என்ற ஆய்வாளர் இரண்டாயிரத்து பத்தினென்றில்(2011) வெளியிட்ட கட்டுரையில் மனத்தக்காளிக் கீரைக்கு இன்னும் இரண்டு பண்புகள் இருப்பதாக குறிப்பிடுகின்றார். 
            1.அட்டோ பசிஸ்
            2.அப்போட்டசிஸ் என்ற வேதியல் மூலக்கூறுகள் இருப்பதாகவும் அது உடலில் அழிந்த கலங்களை மீண்டும் புதிப்பிக்கின்றதுடன் கலங்கள் தேவைக் கேற்ப உற்பத்தி செய்வதுடன் உற்பத்தியின் போது ஏற்படும் தவறான நகல்களை அழித்து சரியான நகல்களை நிலை நிறுத்தும் ஆற்றல் உள்ளது என்பதை நிருபித்துள்ளார். இதை சித்தர் பாடலில் “முந்து வளருமத்தோச நோய் மாறும் கைப்பான  மினகுத் தக்காளியிலை மெய்” என அப்போதே அழகாகக் கூறியிக்கின்றார்.
7.லைவோசன் என்பவரும் ரீக் என்ற இருவரும் இரண்டாயிரத்து பத்தினென்றில்(2011) இல் ஆய்வு செய்து மனத்தக்காளிக் கீரைகயில் “கிக்கோரோட்டிக்” என்ற வேதியல் மூலக்கூறு இருக்கின்றது என்றும் இது புற்றுநோயை தடுக்க வல்லது என்று குறிப்பிட்டுள்ளனர். இதில் கிக்கோ என்பது மாச்சத்து புரோட்டீன் என்பது புரதம் இவை இரண்டும் சேர்ந்த ஓர் புரதப்பொருள் இது புற்றுநோயை தடுக்க வல்லது. இதன் முலம் மீண்டும் ஆதாரப்படுத்தியுள்ளது.
மனத்தக்காளி               சீன நாட்டில் இருதய நோய்க்கு பல முகிலிகைகளுடன் சேர்த்துப் மனத்தக்காளியைப் பயன்படுத்து கின்றனர்.அது போன்று கிரேக்க மருத்துவத்தில் வீக்கத்துக்கு பற்றுப்போட பயன்படுத்துகின்றனர். வீக்கம் வருவதையும் காச்சல் வருவதையும் இக்கீரை தர்க்கும் ஆற்றல் உண்டு. பேஸ்சிய நாட்டிலே நீக்கோவைக்கு அருமந்தாக பயன் படுத்து கின்றனர். நீக்கோவை என்பது கால், முகம், கண்ணீத்தாரைப்பை( கண்களின் கீழ்ப்பகுதி),வயிறு போன்ற இடங்களில் நீர் சுரந்திருத்தல் உடலில் தேவையற்ற வகையில் நீர் தோல்லின் அடிப்பகுதியில் நீhதேங்கியிருத்தல்.  
பெண்களின் கற்பப்பையில் ஏற்படும் புற்று நோக்கு அருமருந்தாக பல ஆய்வுகள் கூறுகின்றன.
  இந்தக்கீரை உடலிலே நோய் எதிர்ப்புக் சக்தியை ஏற்படுத்தி புற்றுநோயை வராது தடுத்து புற்றுநோய் திசுக்களை அழித்து உடலைப் பாதுகாக்கின்றது. முத்தோச நோய் என்னும் புற்றுநோய் இது ஒன்றில் ஆரம்பித்து உடல் முழுவதும் பரவி உடலை அழித்து விடும் ஆனால் அஸ்துமா என்னும் சுவாசகாசம். இருதையநோய், நுரையிரல் நோய் போன்றவை அந்த உறுப்பை மட்டும் பாதிப்பாவை இதனாலே சித்தர்கள் இதனை முத்தோச நோய் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
“காய்க்குக் கபம் தீரும் காரிகையே யவ் வினைக்கு
 வாய்க்கிரந்தி வேக்காடு மாறும்காண்” காய் குளிர்சியால் வரும் நோயை குணமாக்கும். உடலில் வெப்பத்தை ஏற்படுத்தி குணமாக்கும் காய்க்குக் கபம் தீரும் என்றும் கீரை வெப்பத்தினால் வரும் நோயை குணமாக்கும். உடலில் குளிர்சிசியை ஏற்படுத்தி குணமாக்கும் வினைக்கு வாய்க்கிரந்தி வேக்காடு மாறும்காண் என்று வெண்பாவில் கூறியுள்ளார். நோய்யுற்று உடல் தளர்தவர்களின் தளர்வு நீங்கி வலிமை பெற மனத்தக்காளி வற்றல் புளிக் குழம்பு சிறந்த பலனைத்தரும்,  “தீக்குள் உணக்கிடு வற்றலுறு பிணியாக்கு கூறும் மனத்தக் காளிக்குள்ள வாறு” என கூறிப்பிடுகின்றார். தளர்வு நீங்கி வலிமை பெறுகின்ற போது உடலில் பல்வேறு மாற்றங்கள் இடம் பெறும் அப்போது மீள்திறனை ஏற்படுத்தும் ஆற்றல்லுடன் நோய் எதிர்ப்புச்சக்தியை ஏற்படுத்தி உடலை வலுவுட்டும் சக்தி மனத்தக்காளிக் குண்டு. 
பயன்படுத்தும் முறைகள்:    
 1;.மனத்தக்காளி சூப்
தயாரிக்கும் முறை: தக்காளி இலைகளை தெரிந் தெடுத்து நன்கு நாலு அல்லது ஐந்து முறை சுத்தமான நீரினால் திரும்ப திரும்ப கழுவிச் சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொண்டு சுத்தமான இரும்பு பாத்திரம் அல்லது மண்கட்டியில் தேங்காங்காய் எண்ணை அல்லது நெய்யை விட்டு அடுப்பிலேற்றி கடுகு போட்டு தாளித்து விட்டு அதனுடன் நறுக்கிய சின்னவெங்காயத்துடன் மிளகுத்தூள், சீரகத்தூள் போட்டு தாளித்துவிட்டு இதனுள் சுத்தம் செய்து வைத்திருக்கும் கீரையைப் போட்டு அதனுடன் சேர்த்து தக்காளிப் பழத்துண்டும் போட்டு தேவையான அளவு நீர்ரும் உப்பும் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து  பின் இறக்கி சூப்பாக பருக முடியும். பருகினால் வாய்வேக்காடு வராது வாய்ப்புண் வராது. வந்தாலும் குணமாகி விடும். 
2.பச்சையாக மென்று சாப்பிடலாம்.
3. கீரையை பருப்பு போட்டு கடைந்து காப்பிடலாம். பாத்திரத்தில் கீரையைப் போட்டு சின்னவெங்காயத்தை நறுகிப்போட்டு அதனுடன் அரைத்பங்கு தக்களிப் பழத்தையும் நறுகிப் போட்டு சிறிதளவு மிளகு சீரகம் பச்சைமிளகாய் இவை போட்டு திடமாக தன்னீவிட்டு காச்ச வேண்டும். கீரையின் பசுமை நிறம் மாறாது இருக்க சக்கரையை சிறிதளவு தூவி விடவேண்டும் பசுமை நிறம் மாறாது இருக்கும் .இதை எடுத்து வைத்து விட்டு இன்னுமோர் பாத்திரத்தில் எண்ணை அல்லது நெய்யில்யை விட்டு அடுப்பிலேற்றி கடுகு போட்டு தாளித்து விட்டு அதனுடன் பருப்பு அல்லது துவரம் பருப்பு அவித்த நீரை விட்டு அதில் அவித்துவைத்த இலையை போட்டு அவித்து வதக்கி கடைந்து தேவையான உப்புச்சேர்த்து எடுத்து சாதத்துடன் உண்ணமுடியும்.  பொதுவாக கீரைகளுக்கு புளிசேர்ப்பதை தவிப்பதால் சத்தி இழப்பின்றி முழுமையான பலனைப் பொறமுடியும். நெய் சேர்ப்பது கீரைக்கறிக்கு நல்ல சுவையைத்தருவதுடன் ஊட்டமாகவும் இருக்கும்.    
4. காயை அல்லது வற்றலை புளிக்குழம்பாக செய்து வெந்தையக் சேர்த்து தாயாரித்து உணவுடன் தேர்த்து உண்ண முடியும். கபம் உள்ளவர்கள் வெந்தயத்தை தவித்துக் கொள்ளலாம். வேந்தையம் குளிர்த் தன்மையானது.






விளாம்பழம் எங்கும் கிடைக்கக் கூடியது. இது பஞ்சவில்வங்களில் ஒன்று சிவபெருமானுக்கு பஞ்சவில்வத்தினால் அர்ச்சிப்பது சிறப்பு.

விளாம்பழம் எங்கும் கிடைக்கக் கூடியது. இது பஞ்சவில்வங்களில் ஒன்று சிவபெருமானுக்கு பஞ்சவில்வத்தினால் அர்ச்சிப்பது சிறப்பு. இது பித்தத்தை போக்க வல்லது. பஞ்ச வில்வங்கள் வில்வதளம், விளாத்தி, கருநெச்சி, முட்கிளுவை, மாவிங்கு என்பன. இவை அனைத்துமே மருத்துதன்மை வாய்ந்தவை நேர்எண்ணங்களை ஏற்படுத்த வல்லவை. இந்தவகையில் விளாம்பழத்தின் மருத்துவ தன்மை தொடர்பாக பாதார்தகுண சிந்தாமணி குறிப்பிடுகையில்.
"எப்போதும் மெய்க்கிதமாம் ஈளையிரு மல்கபமும்
வெப்பாருந் தாகமும்போம் மெய்ப்பசியாம் - இப்புவியில்
என்றாகிலுங்கனிமேல் இச்சைவைத்துத்தின்னவெண்ணித்
தின்றால் விளாங்கனியைத் தின'; என்றனர் சித்தர்கள்
பொழிப்பு:
1. எப்போதும் மெய்க்கிதமாம் ஈளையிரு மல்கபமும்: ஈளை, இருமல், கபம் என்வற்றைப் போக்க வல்லது
2. வெப்பாருந் தாகமும்போம் மெய்ப்பசியாம் - இப்புவியில்: வெப்பு, தாகமும் போக்க வல்லது. என்பவற்றுடன் பசியும் உண்டாக்க வல்லது. இப்புவியில்
3. என்றாகிலுங்கனிமேல் இச்சைவைத்துத்தின்னவெண்ணித்: எப்போதும் அதில் இச்சைவைத்து உண்ணவேண்டும். என்று குறிப்பிடுகின்றனர். விளாம்கனியை
விளாம்பிசினின் மருத்துவகுணங்களை குறிப்பிடுகையில்
'நல்ல விளாம்பிசினை நற்பாகஞ் செய்தருந்தத்
தொல்லையதி சாரந் தொல்லைவதொன்றோ மெல்லியரால்
வந்தவெள்ளை தன்னுடனே மாதர் பெரும்பாடும்
உந்துநீர்ப் போக்கும்போய் உன்' என்றனர் சித்தர்கள்
பொழிப்பு:
download (5)1. நல்ல விளாம்பிசினை நற்பாகஞ் செய்தருந்தத்: நல்ல விளாம்பிசினை நல்ல பதமாக்கி
2. தொல்லையதி சாரந் தொல்லைவதொன்றோ மெல்லியரால்: அதிசாரம் போகும் மெல்லிய பெண்களுக்கு
3. வந்தவெள்ளை தன்னுடனே மாதர் பெரும்பாடும்: வெள்ளையொழுகல், மாதர்பெரும்பாடு என்பவைகளைப் போக்க வல்லது.
4. உந்துநீர்ப் போக்கும்போய் உன்: நீரிழிவும் என்னும் நோய்களையும் போக்க வல்லது.
விளாமரத்தின் மருத்துவ குணம்பற்றி குறிப்பிடுகையில்
'காச சுவாசங் கதித்த வருசிமுதற்
பேசரிய தாகமிவை பேருங்காண் - வீசு
தபித்தலைச்செய் பித்தந் தரிக்குமோ பூவிற்
கபித்த மரமிருக்குங் கால்' என்றனர் சித்தர்கள்.
பொழிப்பு:
1. காச சுவாசங் கதித்த வருசிமுதற்: காசசுவாசம் பொக்க வல்லது
2. பேசரிய தாகமிவை பேருங்காண் - வீசு: அருசி, தாகம் இவைகளைப் போக்க வல்லது.
3. தபித்தலைச்செய் பித்தந் தரிக்குமோ பூவிற்: பித்தத்தை போக்க வல்லது.
4. கபித்த மரமிருக்குங் கால: விளாமரத்தினால் என்றனர் சித்தர்கள்

முடக்கற்றான் என்பதை முடக்கறுத்தான் என்றும் சொல்வர்

முடக்கற்றான் என்பதை முடக்கறுத்தான் என்றும் சொல்வர். அப்படிப்பட்டது அந்த மூகிலி சித்தர்கள் பதாத்த குணசிந்தாமணியில் குறிப்பிடுகையில்
'சூலைப்பிப்பு சொறிசிரங்கு வன்கரப்பான்
காலைத் தொடுவாய்வுங் கன்மலகுஞ்- சாலக்
கடக்கத்தான் ஓடிவிடுங் காசினியை விட்டு
முடக்கற்றான் றன்னை மொழி''என்றனர் சித்தர்கள்
பொழிப்பு:
1. 'சூலைப்பிப்பு சொறிசிரங்கு வன்கரப்பான்: சூலைப்பிடிப்ப, சொறிசிரங்கு, கரப்பான் போன்ற நோகளைப் போக்க வல்லது
2. காலைத் தொடுவாய்வுங் கன்மலகுஞ்- சாலக்: குருக்கு வாய்வு, மலச்சிக்கலும் போகும்.download (3)
3. கடக்கத்தான் ஓடிவிடுங் காசினியை விட்டு: இன் நோய்களைப் போக்க வெல்லது.
4. முடக்கற்றான் றன்னை மொழி: முடக்கற்றான் என்று மொழிந்தார்.
வாதத்தை போக்க வல்லது அதாவது வாதத்தால் ஏற்பட்ட முடக்கை போக்க வல்லது அதனாலேயே முடக்கை அறுத்தான் என்று அதன் பெயரை அழைக்கின்றனர்.

வாத பித்த ஐயம் போக்கும் தேன்

"வாத பித்த ஐயம் போக்கும் தேன்"
தேன் பலவகையுண்டு அது போல் தேன் எடுக்கும் காலத்துக்கு ஏற்ப அதன் தன்மையும் மாற்ற மடையக் கூடியது. பொதுவாகக தேனீக்கள் தேன் எடுக்க மலர்களையே நாடுகின்றன. மலர்களில் தினமும் மலரும் மலர்களும் உண்டு. பருவகாலத்தில் ஒருமுறை அல்லது இருமறை மலரும் மலர்களும் உண்டு. பொதுவாக மல்லிகை, செம்பரத்தை, நித்தியகல்யானி, லிங்கப்பூ, ரொசா போன்றவை செடிகளின் மலர்கள் தினமும் மலருகின்றன். வேம்பு, நாவல், முருங்கை, பாலை, வீரை, மா, இலுப்பை போன்ற மரங்கள் காலத்துக்கு பல ஒருமுறை சில அதாவது மா இருமுறையும் மலர்கள் மலருகின்றன். இதற்கேற்ப வேம்பின் பூ மலரும் காலத்தில் அதை அன்மித்த இடத்தில் அதனை எடுக்கும் போது அது வேம்பின் மருத்துவக்குணம் நிறைந்ததாக அத்தேன் அமைந்திருக்கும். அதுபோல தற்போது வளப்புத் தேனும் உண்டு. அது போல தேன் எடுக்கப்படும் இடத்தைப் பொறுத்தும் தேனை சித்தர்கள் வகைப்படுத்து கின்றனர். அதாவது மலைத்தேன், கொம்புத்தேன், புற்றுத்தேன், மனைத்தேன் என வகைப்படுத்து கின்றனர். இனி,
தேனின் மருத்துவக் குணம் பற்றி சித்தர்கள் கூறும் கருத்களை பார்ப்போம்.
மலைத்தேனின் மருத்துவக்குணம் பற்றி பார்க்கும் போது
'ஐயிரும லீளைவிக்க லக்கிப்புண் வெப்புடல்நோய்
பைய வொழியும் பசியுமுறும் - வையகத்தில்
எண்ணுமிசை யாமருந்திற் கேற்ற வனுபானம்
நண்ணுமலைத் தேனொன்றி னால்' என்றனர் சித்தர்கள்.
1. 'ஐயிரும லீளைவிக்க லக்கிப்புண் வெப்புடல்நோய்' : ஐயம் என்னும் நோயும், இருமல், ஈளை என்னும் இலைப்பு நோய், விக்கல், அக்கினிப்புண் அதாவது தீயினால் ஏற்பட்ட காயம், வெப்பம், உடல் நோயையும் போக்க வல்லது.
2. 'பைய வொழியும் பசியுமுறும் - வையகத்தில்' : பசியைப் போக்க வல்லதுடன்
3. 'எண்ணுமிசை யாமருந்திற் கேற்ற வனுபானம்' : இசையாகிய சங்கீதம் பாடக்கூடிய சாரீரமும் உண்டாகும். அத்துடன் மருந்தனுபானத்திற்கும் அதாவது இருந்துண்ணும் போது தேனில் கலந்துண்ண உதவும். தூள்போன்ற மருந்தை உண்ண.
4. 'நண்ணுமலைத் தேனொன்றி னால்' : மேற் கூறிய அனைத்து தன்மையும் மலைத்தேனுக்கு உண்டு என்றார்கள். மலைகளில் மரங்களில் எடுக்கப்படும் தேனையே இங்கு குறிப்பிடுகின்றனர். தீக்காயம் ஏற்படும் போது அதில் தேனை பூசிவிடும் வழக்கம் இன்றும் கிராமப்புறங்களில் கானப்படுகின்றது. இசைக் கலைஞர்கள் காலையில் தேனை உண்டு சாரீரம் செய்வதை யாவரும் அறிவர்.
கோம்புத்தேனின் மருத்துவக் குணம் பற்றி சித்தர்கள் செப்பியதை பார்ப்போம்.
'வாதபித்த ஐயத்தை மாற்றமுள மாந்தைதனைக்
காதமென ஓட்க் கடியுங்காண் - பூதரமாம்
வம்புமுலைமாதே வருமருசி நீங்கிவிடுங்
கொம்புத்தே னன்றாகுங் கூறு' என்றனர் சித்தர்கள்.
1. 'வாதபித்த ஐயத்தை மாற்றமுள மாந்தைதனைக்' : வாதம், பித்தம், ஐயத்தை போக்குவதுடன் உளமாந்தையையும் போக்க வல்லது.
2. 'காதமென ஓட்க் கடியுங்காண் - பூதரமாம்' : இவை அனைத்தையும் பேகாக்க வல்லதுடன்
3. 'வம்புமுலைமாதே வருமருசி நீங்கிவிடுங்' : வம்பு முலையை உடைய மாதே அருசி என்னும் உருசி இன்மையை போக்க வல்லது என்று
4. 'கொம்புத்தே னன்றாகுங் கூறு' : கொப்புத் தேனை கூறு என்றார். கோப்புத் தேன் என்பது காடுகளில் கானப்படும் மரங்களின் கிளைகளில் கட்டியிருக்கும் தேன் கூட்டிலிருந்து பெறப்படும் தேனாகும்.
புற்றுத் தேனின் மருத்துவக் குணம் பற்றி குறிப்பிடுகையில்
'கொப்பணியு மாதே குவலயத்து ளெல்லார்க்கும்
ஓப்பநின்ற ஐய மொளிக்குங்காண் - பூதரமாம்
காசசுரவா சம்வாந்தி கண்ணிலெழு நோய்களறும்
வீசுபுற்றுத் தேனுக்கு மெய்' என்றனர் சித்தர்கள்
1. 'கொப்பணியு மாதே குவலயத்து ளெல்லார்க்கும்' : கொப்பணியும் மாதே குவலயம் எங்கும் என்று குறிப்பிடுகின்றார் சித்தர்கள்.
2. 'ஓப்பநின்ற ஐய மொளிக்குங்காண் - பூதரமாம்' : நிலவுகின்ற ஐயம் என்னும் நோயை குணப்படுத்தும்.
3. 'காசசுரவா சம்வாந்தி கண்ணிலெழு நோய்களறும:' : காசம், சுவாசம், வாந்தி, கண்களில் உண்டாகும் நோய்களை போக்க வல்லது.
4. 'வீசுபுற்றுத் தேனுக்கு மெய்' : வீசும் புற்று தேன் என்பது உண்மை என்கின்றனர் சித்தர்கள். புற்றுத் தேன் என்பது மண்புற்றுக்குள் இருப்பது. ஆனால் அவை மரங்களின் பொந்துகளிலும் இருக்கும். புத்தை வெட்டி எடுப்பது போல் மரப்பொந்தையும் வெட்டி எடுப்பர்.
மனைத் தேனின் மருத்துவக்குணம்
'புண்ணும் புரையும்போம் போகாக் கரப்பனறும்
ஏண்ணிரிய தீபனமா மேந்திழையே – கண்ணுகளிற்
பூச்சிபுழு வெட்டுகபம் பொல்லா விருமலறும்
பேச்சின்மனைத் தேனுக்குப் பேசு' என்றனர் சித்தாகள்'
1. 'புண்ணும் புரையும்போம் போகாக் கரப்பனறும்' : புண்புரையும் விட்டுப்போகா கரப்பானையும் போக்க வல்லது.
2. 'ஏண்ணிரிய தீபனமா மேந்திழையே – கண்ணுகளிற்' : பசி உண்டாகும் கண்களில் உள்டள பூச்சி இல்லாதெழியும்,
3. 'பூச்சிபுழு வெட்டுகபம் பொல்லா விருமலறும்' : புழு வெட்டு, கபம், தொடச்சியான இருமல் என்பன போகும்.
4. 'பேச்சின்மனைத் தேனுக்குப் பேசு' : இவை எல்லாம் மனைத்தேனுக்கு என்றார்கள் சித்தர்கள். மனைத்தேன் என்பது வீடுகளில் கட்டும் தேன் கூடுகளில் பெறப்பகடும் தேன்.
தேன் பொதுவாக வாத, பித்த, சிலேற்பணத்துக்கு சிறந்ததுடன் புண்புரைகளை மாற்ற வல்லது. அத்துடன் குரல் வளம் பெறவும் சிறந்தது. காசம் சுவாசம், கண்களில் உண்டாகும் நோய்களுக்கும் சிறந்ததாக அமைவதுடக் தூளான மூலிகை மருந்தை சேர்த்து அருந்த உதவுகின்றது.
இந்து மதத்தில் ஆலய வழிபாட்டில் நடைபெறும் கிரியை முறையில் அபிஷேகம் செய்யும் போது கல்வி வேண்டி தேன் அபிஷேகம் செய்கின்றனர். அத்துடன் சுவாமிக்கு தேன் நிவேதனம் செய்கின்றனர். தேன் எப்போதும் நாவில் வழியாக வரும் சத்தத்துக்கு காரணமான குரலை இனிமையாக்க மருந்தாக பயன் படுத்துவதுடன் நாமகளான சரஸ்வதி குடியிருப்பாக கருதும் இடம் நாவாகும். இதனால் கல்வியை வழங்க ஞாபக சக்தியும் கிரகிக்கும் ஆற்றலும் தரவல்லது தேன். இதனை சித்தர்கள் அறிந்திருதமையினால் வழிபாட்டிலும் மருத்துவத்திலும் பயன்படுத்தியுள்ளனர். மனம் அமைதியாக இருந்தால் தான் கல்வி மனதில் நிலை பெறும் அதற்கு தேன் வாத, பித்த, சிலேற்பணத்தை சமப்படுத்த வல்லது. சித்தர்கள் மருத்துவம் மகத்தானது. மனுக்குல விடுலைக்கு அருமருந்து.