Monday, April 2, 2018

ஆலயங்களில் பயன் படுத்தப்படும் அதிகமான பொருட்கள் உலோகத்திலானவையாக இருப்பதன் காரணம் வெங்கலம், செப்பு, தங்கம், வெள்ளி, பித்தலை போன்ற உலோகங்கள் மந்திர உச்சாடனத்தில் இருந்து வரும் ஒலி அலைகளை பெற்று மீண்டும் பிரதிபலிக்க வல்லவை. மந்திர ஒலிகள் பிரபஞ்சத்தில் தாக்கத்தை ஏற்படுத்த வல்லவை அதனால் ஒலிகளை வெளியிடும் போது ஆராய்ந்து அது நோராண எண்ண அலைகளை எற்படுத்தக்கூடியவற்றையே வெளியீடு செய்ய வேண்டும். எதிராண எண்ண செய்யாட்டையும் பிரபஞ்சத்தில் ஏற்படுத்தி விடும். அதனாலேயே ராகம் தாளம் என்பவை பதஞ்சல் மஹரிஷிகளினால் ஏற்படுத்தப்பட்டது. இறைவன் மந்திர, தந்திர, யந்திர வடிவினன். அதால் சேமித்து வைத்த சக்தியை பெற ஆண்கள் மேலங்கி இன்றி ஆலயத்தினுள் செல்ல வேண்டும். எப்போதும் வீடுகளிலோ ஆலயங்களிலோ எவர்சிலிவர் என்று சொல்லப்படும் கலப்பு உலோகத்தை பயன்படுத்து வதினால் எதிராண விளைவுகளை சப்பாதிக்க முடிவதுடன் 'ஒயில்' என்னும் தாவர எண்ணையையும் பயன்படுத்துவதை தவிப்பது உத்தமம்.
ஓம் ஸ்ரீ சற்குரு அகத்தீசாய நம:
ஆலயங்களுக்கு தோய்த்து உலர்ந்த வேட்டி உடுத்து சென்று ஆலய பிராகாரத்தின் உள் மேலாடை களைந்து ஆண்கள் செல்வதின் காரணம் ஆலய பிராகாரத்தில் செய்யப்படுகின்ற மந்திர 
உச்சாடனம் அக்னி காரியங்களில் இருந்து வரும் மந்திர மந்திர ஓலிகளின் அலைகள் மனித மின்காந்த அலைகளில் கலப்பதுடன் கோம புகை உடலின் தோல்மூலம் உடலில் கலந்து ஆரோக்கியம் பெறுவதுடன் நேரான எண்ணங்களை உருவாக்கும்வல்லமையும் அதற்கு உள்ளதால் தோய்த்து உலந்த கலாசார உடைகளை அணிந்து செல்வதே உத்தமம். சர்வதேச தினம் அனுடிப்பது பெருமை அல்ல அது எமது கலாசார வறுமையின் துலங்கலே 'கந்தையானாலும் கசக்கிக் கட்டு' என்பதே எமது பண்பாட்டு விழுமியம்