Friday, October 20, 2017

மார்கழி என்றாலே நினைவில் வருவது திருவாதரையின் திருவெண்பாவும் ஆண்டளின் திருப்பாவையும். தேவர்களுக்கு ஒருவருடம் ஒருநாள் அதில் மார்கழி அவர்களின் பிரமமுகுத்தம். அது அதிகாலை தியானத்துக்கு விசேடகாலம். பூமியை அண்டி வியாழன் வருகின்ற காலமது. உயிர் வியாழனில் இருந்து வந்தமையினால் வியாழனை உயிர்க்கிரகமாக சாஸ்திரங்கள் கணிக்கின்றன. வியாழன் மாறும் போது உடல் ஆபத்துக்கள் அதிகம். வியாழகிரகத்தின் கிரகத்தின் கதிர்வீச்சு பூமிக்கு அதிகம் இருக்கும். இக்காலத்தில் பிற்பகல் வெயிலில் வெளியான கதிர்வீச்சுக்கள் நீர்நிலைகளில் தங்கி அடுத்தநாள் வெயிலில் ஆவியாகி மழையாகி பூமியில் மழைமூலம் பெற்று வோர்மூலம் மரங்களுக்கு செல்லும் காலமது. இதை வெயில் வருமுன் அதிகாலையில் தலைக்கு நீர் வார்ப்பதன் மூலம் உடலுக்குள் செலுத்த முடியும். இனை நமது சித்தர் சமராஜ்யம் எப்படி உணர்த்தி உள்ளது கண்டீர்களா.
மார்கழி மாதம் என்பது இறைவழிபாட்டுக்காக ஒதுக்கப்பட்ட மாதம். கீதையில் கண்ணன் மாதங்களில் நான் மார்கழி என்று கூறுகின்றார். இங்கு அதிகாலையே முக்கியமானது. பொதுவாக சூரியனின் கதிர் வீச்சு காலையில் நல்லதல்ல நல்லதல்ல. இதனை சித்தர்கள் காலை வெயில் காலன் என்றும் மாலை வெயில் தோழன் என்றும் கூறுகின்றனர். மாலையில் சூரியனின கதிர் வீச்சில் மனிதனுக்கு உதவும் சத்துப்பொட்கள் வெளிவருகின்றன அவை நீரில் நிலை கொள்ளுகின்றன. அடுத்த நாள் சூரிய வெப்பத்தில் ஆவியாகி மேகத்தில் கலந்து மழையாக பூமியில் ஊறி வேர்கள் மூலம் மரங்கள் உறிஞ்சி இலை குலையாகளாகவும் காய் கனிகளாகவும் மனித தேவைக்கு வழங்குகின்றது. அது தன்னலமற்ற சேவையை செய்கின்றது. அதனால் மரங்கள் தெய்வமாக வழிபடப்படுகின்றது. அது மனிதனிடம் இருந்து வெளியாவது விசமான காபனீர் ஒட்சைட் அது மனிதனுக்கு மட்டுமல்ல உலகத்தையே அழிக்க வல்லது. அப்படிப்பட்டதை மரங்கள் உறிஞ்சி மனிதன் உயிர்வாழ்வதற்கு அவசியமமான உயிர்பு வாய்வு ஒட்சிகனை வெளியிட்டு மனிதனையும் உலகத்தையும் காக்கின்றது. மனிதனே விசமானவன். அவனிடம் இருந்து வெளியாவதொல்லாம் பயன்பாடற்றது. எண்ணஅலைகள் கூட எதிரான அலைகளே அதிகம். நான் என்பதுதான் தடையானது. நேர் எண்ணம் உள்ளவர்களே உலகத்தை காக்கின்றனர். அவர்கள் சனத்தொகையில் குறிப்பிடத்தக்க வீகிதத்தினரே. அதனாலேயே இயற்கையை மனிதன் வணங்கினர். மார்கழியில் சூரினயின் நல்ல கதிர்வீச்சு அதிகம். அதனால் அதிகாலையில் சூரிய உதயத்தின் முன் முழுகுதல் மூலம் தோலின் மூலம் சத்துக்கள் நேரடியாக உடலுக்குச் சேரும். ஏனை காலங்களில் இருந்தாழும் இக்கால் பொருத்தமாக அமையும். மனிதன் ஒவ்வொரு நாளும் செய்ய முடியாவிட்டாலும் வழிபாட்டின் பேரில் திருவாதரையை மையமகக் கொண்ட பத்து நாட்களுக்காவது செய்ய சித்தர்கள் வழிவகுத்தனர்.
ஷஷ்டி யில் இருந்தால் அகப்பையில் வரும்

                                        தாய் கௌரியின் கேதாரகௌரி விரதம் முடிவுற்று அறிவின் சிகரமாம் சிங்கார வேலன் கந்தசஸ்டி விரதம் ஆரம்பமாகியுள்ளது.ஷஷ்டி யில் இருந்தால் அகப்பையில் வரும் என்பர் சான்றோர் . அதை கருப்பையாக கருதுவர் சிலர். முருகன் அவன் அழகன் குமரன் குரு பரனுக்கு. சிவபெருமானாகிய பரம்பொருளின் ஐந்து முகம் சதாசிவன் அதாவது. சத்தியோஜாதம், வாமதேவம், அகோரம், தற்புருடம், ஈசானம், இவையே ஐந்து முகங்களும். ஆனால் சிவபெருமானுக்கு ஆறாவது முகம் ஒன்றும் உண்டு. அதுவே அதோமுகம். அதாவது. மேற்கு முகம் சத்தியோஜாதம் வடக்கு முகம் வாமதேவம். தெற்கு முகம் அகோரம். கிழக்கு முகம் தற்புருடம் மேல் முகம் ஈசானம். அதுபோல் கீழ்முகம் அதோமுகம். அதுவே சிவகுரு. ஆகவே ஆறுமுகமான சிவனே குருபரன் அவனே குமரகுருபரன். சிவனின் ஞானகுருவடிவம் ஆறுமுகம். அப்படி இருக்கு அகப்பை என்பது எது ஆன்மா இருக்கும் இடம். ஆன்மாக்கு எது தேவை. அது ஞானமே அன்றி வேறு ஒன்றும் இல்லை. எனவே ஷஷ்டியில் இருக்க அகப்பை வருவது ஞானம். கந்தன் கலியுக வரதன். கலியுகத்தை வெல்ல அஞ்ஞான இருள் அகல வேண்டும். அதனாலேயே அவன் அஞ்ஞான இருளை விரும்பும் மயில் குணமான ஆணவத்தை அடக்கி தனது வாகணமாக்கினார். அதை உணரவைத்த ஞானமான வேலை கையில் ஏந்தினார் வேல் ஆழமானதும் அகலமானதும் கூர்மையானதுமானது வேல் அதுவே அறிவின் அடையாளம் ஒவ்வொரு மனிதனிடம் சாத்வீகம், இராஜதம், தாமதம் ஆகிய மூன்று குணங்களும் இருக்கும். அவை எமக்கு இருக்கின்ற அளவின விகிதாசாரத்திலேயே அவர் அவர் நடத்தைகளும் எண்ணங்களும் இருக்கும் சாத்வீகமே நேரான எண்ணத்துக்கும் தாமதகுணமே எதிரான எண்ணங்களுக்கும் காரணமாகும் மனிதனின் வலபக்க செய்பாடுகள் மூளையின் இடப்பக்க செலப்பாட்டுக்கும் இடபக்க செல்பாடுகள் மூளையின் வலப்பக்க செயல்பாட்டுக்கும் வழிவகுக்கும். அதாவது பொதுவாக வலக்கையையே எல்லா செய்பாட்டுக்கும் முதலில் பயன்படுத்திகின்றோம் உலகம் வலம் இடமாகவே சுற்றுகின்றது. இது நேர் எண்ணங்களை உருவாக்க வல்லது. இதனால் சாதவீக குணங்கள் அதிகரித்து ஆன்மீய நாட்டம் அதிகரிக்கும். ராஜதம் இரண்டு வகையில் அமையும் வெற்றியை நேர்மையான முறையில் எதிர் கொள்ளல். அது ஒருவகை மற்றறைன்து ஆணவத்தால் ஆசைகொண்டு எதிர்த்து வஞ்சகம் சூது பொறாமையால் வெற்றி பெறல். இது தாமதகுணத்தின் விழைவே. முருகன் ஞானமான வேலைக் கொன்டு மாயையின் சிக்கி ஆணவம் கொண்ட சூரனை சம்ஹரம் செய்கின்றார். அடுத்து இச்சையையும் கிரியையையும் ஞானத்தால் சமப்படுத்துகின்றார். பூலோக குறவள்ளி தேவலோக தேய்வயானை இருவரையும் திருமணம் செய்தார் .வள்ளி பூலோக நாயகி தெய்வயானை தேவலோக நாயகி இக இன்பத்தையும் பரஇன்பத்தையும் வேல் என்னும் ஞானம் சமன் செய்து அறியாமையை போக்கி ஞானத்தை கொடுக்கின்றது ஒரு பெண்ணையே சமாளிக்கமுடியாமல் இருக்கின்ற போது. இருமனைவியர் ஒருத்தி பூலோக ஆசைநிறைந்தவள் இச்சாசக்தி மற்றவள் தேவலோக கிரியையான கடமையில் சிறந்தவள் அவளே கிரியாசக்தி இரண்டும் இரு துருவம் இவற்றை ஞானம் பழமான முருகன் சீர்செய்கின்றான். ஞானத்தால் எல்லாவற்றையும் சீர்செய்யும் ஞாகாரகன் அவன் அவனே சிவகுரு. அருநகிரிநாதருக்கு, அருள்ஜோதி வல்லலார், ஸ்ரீ குமரகுருபரர், ஸ்ரீ குமரகுரு தாசசுவாமிகள் ஸ்ரீ யோகர் சுவாமி, ஸ்ரீ செல்லப்பா சுவாமி, ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமி போன்றோருக்கு குருவாய் வந்தவன் குகன் தான். அதனால் தவசீலர் அருணகிரிநாதர் .
'உருவாய் யருவாய் யுளதாய் யிலதாய்
மருவாய் மலராய் மணியா யொளியாய்க்
கருவா யுயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!'என்றார். அவனே குரு அவனே சிவகுரு.

கந்தர் அனுபூதி

'முருகன் குமரன் குகனென்று மொழிந்
துருகுஞ் செயல்தந் துணர்வென் றருள்வாய்
பொருபுங் கவரும் புவியும் பரவுங்
குருபுங்கவ எண்குண பஞ் சரனே'

'சாகா தெனையே சரணங் களிலே
காகா நமனார் கலகஞ் செயுநாள்
வாகா முருகா மயில்வா கனனே
யோகா சிவஞா னொபதே சிகனே'.

'கரவா கியகல்வி யுளார் கடைசென்
றிரவா வகைமெய்ப் பொருளீ குவையோ
குரவா குமரா குலிசா யுதகுஞ்
சரவா சிவயோக தயா பரனே'

கந்தர் அலங்காரத்திரல்...................

நீலச் சிகண்டியி லேறும் பிரானெந்த நேரத்திலுங்
கோலக் குறத்தி யுடன்வரு வான் குருநாதன் சொன்ன
சீலத்தை மௌகளத் தௌந்தறி வார் சிவயோகிகளே
காலத்தை வென்றிருப்பார் மரிப் பார்வெறுங்களே.

திருமந்திரத்தில் திருமூலர்................

'ஆறு முகத்தில் அதிபதி நானென்றுங்
கூறு சமயக் குருபரன் நானென்றுந்
தேறினர் தெற்குத் திருஅம்ப லத்துளே
வேறின்றி யண்ணல் விளங்கிநின் றானன்றே'

'தேவனுஞ் சுத்த குருவும் உபாயத்துள்
யாவையும் மூன்றா யுனக்கண் டுரையாலே
மூவாப் பசுபாச மாற்றியே முத்திப்பால்
யாவையும் நல்குங் குருபரன் அன்புற்றே' என்றார்
.
பொதுவாக நோக்கும் போது முருகன் பரம்பொருளின் சிவகுரு. அவன் கந்த ஷஷ்டியில் இருக்க அகப்பையில் வரும் என்பது ஞானம்.