Sunday, August 14, 2011

சைவசித்தாந்தம் கூறும் பதி,பசு,பாசம்

 இந்து மதத்தில் பலகொள்கைகள் இருந்தாலும் பொதுவாக பெரும்பாலோரால் ஏற்றுக்கொள்ளப்படுவது சைவசித்தாந்தமும் வேதாந்தமுமே இதில் பெரும் பாலோனோர் சைவசித்தாந்தத்தையே ஏற்றுக்கொண்டுள்ளனர். அவர்களை சித்தாந்திகள் என அழைக்கப்படுகின்றனர். வேதாந்தத்தை பின்பற்றுபவர்கள் வேதாந்திககள் என அழைக்கப்படுகின்றனர். சைவசித்தாந்தத்தை நோக்கு வோமானால் அங்கு பதி,பசு,பாசம் எனும் முற்பொருள் உண்மையைப் பெற்றிக்கூறுகின்றது. மெய்ப் பொருளான பரம் பொருள் ,மனிதனனுக்கு அடிப்படையான ஆன்மா, மனிதன் வாழும் உலகம் . இதில்  பதி என்பது இறைவன். பசு என்பது ஆன்மா ஆன்மாவானது பாசத்தால் கட்டுண்டது. பாசமானது மாயை. அது இல்லாததை இருப்பதாகக் காட்டுவது அது கானல்நீருக்கு ஒப்பானது அதனை இயக்குவது ஆணவ மலம் இது செம்பில் களிம்பு போல ஆன்மாவில் பற்றி இருக்கும். இதனை இருள் மலம் என்பர். இதனை அழிக்க முடியாது அடக்க முடியும். இயக்கும் தன்மை கன்ம மலத்தின் தன்மையில் உள்ளது. கன்மம் பிராத்தம், ஆகாமியம், சஞ்சிதம் என மூன்று வகைப்படும். பிராத்தம் என்பது முன் செய்த வினை, ஆகாமியம் செய்து கொண்டு இருக்கும் வினை, சஞ்சிதம் செய்ய இருக்கும் வினை, இவைகளை அனுபவிக்க வைக்க ஒருவர் தேவை அது தானாக அனுபவிக்காது.
             பிரபஞ்சம் அறிவுடையதும் அறிவற்றதுமானது. உயிர் அறிவுள்ள சேதனப் பிரபஞ்சமாகும். பாசம் அறிவற்ற அசேதன பிரபஞ்சமாகும். பதி அறியாமையால் பற்றப்படாததும் பேரறிவுப் பொருள். பசு அறிவற்ற சடமும் அல்ல அறிவுடைய பொருளுமன்று எதைச்சாந்ததோ அதன் தன்மையைப் பெறும். பதி சத்துப் பொருள் பாசம் அசத்து பொருள். பசு எதைச்சாருகின்றதோ அதன் தன்மையைப் பெறுவதால் அது சதசத்து பொருளாகின்றது. பதியைச் சார்தால் சத்தெனவும் பாசத்தைத் சார்ச்தால் அசத்து எனவும் நிலை பெறுகின்றது. சடமாகிய பாசம் அறிவித்தாலும் அறியமாட்டா. பேரறிவான பதி பிறர் அறிவிக்கவேண்டாதது தானே அறியும் தன்மையானது. பசு சிற்றறிவாது சார்ததின் தன்மையை பெறுவது அழியாதது இதனால் பதி, பசு அனாதியான நித்தியப் பொருள். பசு சித்தும்மாகாமலும் அச்த்தாகாமலும் இரண்டுக்கிடையில் நிற்கும் நிலையும் உண்டு. பதி சுக்குமப் பொருள். பரந்தும்  துலப் பொருள் உள்ளடங்கியும்  (வியாபியாகவும் வியாபகமாகவும்) இருக்கும். பதியில் பசு தூலமாகவும் பாசத்தில் சுக்குமமாகவும், பசுவில் பாசம் உள்ளடங்கியதாக இருக்கும். கடல் போன்ற பதியில் கடல்நீர் போன்று பசுவும் நீரில் கலந்துள்ள உவர்ப்பு போன்று பாசமும் கலந்துள்ளது. 
            சதசித்தாகிய ஆன்மா துணையின்றி அறிவு பெறமாட்டா அறிவை ஆணவம் மறைத்து நிற்கும் மறைப்பகல தனு,கரண,புவன,போகம் என்பவற்றை கொண்டு பதி போக்கியருளுகின்றார். பசுவாகிய ஆன்மா மூன்று நிலையில்யுள்ளது. மும்மலங்களான ஆணவம், ,கன்மம் மாயை உள்ளவர்கள் சகலர் எனவும், மாயை நீங்கி ஆணவமும் கன்மமும்  உள்ளவர்கள் பிரளயாகலர் எனவும், மாiயும் கன்மமும் நீங்கி ஆணவம் மட்டுமுள்ளவர்கள் விஞ்ஞானகலர் என கூறுகின்றது. மலங்களில் சேர்க்கையால் ஆன்மா பெறும் அனுபவத்தை அவர்த்தைகளாக குறிப்பிடுகின்றனர். ஆன்மா அனாதியில் ஆணவமலத்துடன் கூடி அனுபவிக்கும் அனுபவம் கேவலாவத்தை எனவும், மும்மலங்களுடன் கூடி அனுபவிக்கும் அனுபவம் சகலாவத்தை எனவும், மும்மலங்களிலிருந்து நீங்கியநிலையில் சுத்தாவத்தை எனவும் கூறுகின்றது.
      சகல நிலையிலும் ஆன்மா ஜந்து அனுபவங்களை ஜந்து இடங்கனில் பொறுகின்றது. ஜந்து அனுபவங்களை முறையே சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீனம் எனவும். இடங்கள் முறையே புருவநடு (ஆக்ஞா), கழுத்து (விசுத்தி), இருதயம் (அனாகதம்), நாபி (மணிப்பூரகம்), மூலம் (மூலாதாரம்) கருவிகள் முறையே முப்பத்தைந்து (இதில் ஆத்மதத்துவம், வித்தியாதத்துவம், இருபத்தைந்து, மூன்று, இரண்டு, ஒன்று எனப்படும். பசு அறிவுடை பொருளாதலால் இச்சை செயல் உடையதாகும். இறைவனைப்போலவே பசுவாகிய ஆன்மா இச்சை, ஞானம், கிரியை என்பனவற்றைக் கொண்டது. ஆணவத்தால் பீடீக்கப்பட்டு கேவலத்தில் சிறிது தோண்றாது  இருள் நிலையிலும் சகலத்தில் சிறிது தோன்றி மருள்நிலையிலும் சுத்தத்தில் முற்றாகத்தோன்றி அருள்நிலை  நிற்கும். கேவலம் இருளாயும், சுத்தம் ஒளியாயும் விளங்கும். ஆன்மா கேவலத்தில்  இறைவனின் திரோதானசக்தியாற் சகலத்துக்கு வந்து பிறப்பிறப்பை அனுபவித்து இருவிணையொப்பு, மலபரிபாரம் வந்த பின் இறைவனது அருட்சக்கியால் ஞானம் பெற்று முத்தியடைவர்.
   திருமூலர் திருமந்திரத்தில் பதி,பசு,பாசம் பற்றி குறிப்பிடுகையில்
“விண்ணினைச் சென்று அணுள வியன் மேகங்கள்
கண்ணினைச் சென்று அணுகாப் பல காட்சிகள்
எண்ணினைச் சென்று அணுகாமல் எனப்படும்
அண்ணலைச் சென்று அணுகாப் பசுபாசமே” விண்ணில் மேசங்கள் பரந்திருந்தாலும் ஆகாயத்தோடு ஒட்டுவதில்லை. கண்கள் பல காட்சிகளைக் கண்டாலும் கண்ணில் அவை ஒட்டுவதில்லை. ஆனால் கண்கள் அதில் படிகின்றன. அதுபோல எண்ணம் நினைவுக்கு அப்பாலுள்ள இறைவன் அடையமாட்டாது. பசத்தால் பசுவாகிய ஆன்மா பசுவுள் பதி இருப்பதை அறியா. இதனால் ஆன்மா பதியை உணரா.
சிவமாகுதல் சித்தாந்தம்  “ஒன்றும் இரண்டும் இலதுமாய ஒள்றாக
                             நின்று சமய நிராகர நீங்கியே
                             நின்று பராபரை நேயத்தைப் பாதத்தால்
                                சென்று சிவமாதல் கித்தாந்த சித்தியே” ஒன்றாகவும் இரண்டாகவும், இரண்டல்லாத இரண்டும் ஒன்றாகவும் இருப்பதை உணந்து அதி உன்;னதத்தில் திளைத்து. சமய வேற்றுமைகளை மறந்து. பிறசமய பேதங்களை நீக்கி நிபந்தனைகளை விட்டொழித்து பராபரையை அருட்துணையால் அவள் திருவடியை அடைந்து சிவமாகுதல் சித்தாந்தம்.
சுத்த சைவம் சித்தாந்தம்  “வேடம் கடந்து விகிர்தம்தன் பால்மேவி
                                   ஆடம்பரம் இன்றி ஆபாசம் செற்றுப்
                                   பாடொன்று பாசம் பசுர்துவம் பாழ்படச்
                                            சாடும் சிவபோகர் சுத்தசைவரே” உடலில் அணிந்து கொள்ளும் சிவசின்னங்களாகிய புறவேடங்களை தவிர்த்து. அகவழிபாட்டில் ஈடுபட பகட்டான தோற்றம், நடை, உடை, பாவனை அணுக்கள்  பந்த பாசங்கள் விட்டகன்று துன்பப்பிறவிக்கு காரணமான அகபற்றுக்களான ஆன்மாக்கள் அழிவதைத் தடுத்து சிவத்தை சித்திக்கும் சுத்த சைவர். 
“உடலான ஐந்தையும் ஐராறும் ஐந்தும்
மடலான மாமாயை மாற்றுள்ள நீவப்
படலான கேவல பாசம் துடைத்துத்
திடமாய்த் தளை உறல் சித்தாந்த மார்க்கமே” ஐம்பூதங்களான உடம்பு ,காமம்,  வெகுளி, பொறாமை, பேராசை, ஆணவம், கர்வம் எனும் ஆறுகுற்றங்கள் மெய், வாய், கண், மூக்கு, செவி, ஐம்பொறிகளால் வரும் இச்சைகள் இவை தோன்;ற நிலைக்கழம் உடம்புபாகும். இவைகளால் ஏற்படும் மன அழுக்குகள், குற்றங்கள், மலங்கள் கழிந்து போக இறையருளைப்பெற தடையாக இருக்கின்ற கண்பார்வையை மறைக்கும் படலம் போன்ற ஆணவத்தையும் பாசத்தையும் விட்டொழித்து உள்ளத்துறுதி குறையாதிருப்பதே சித்தாந்த நெறியாகும் என திருமூலர் கூறுகின்றார்.
               புதியின் இருப்பு முறையினை சித்தாந்திகள் “காண்டல் கருதல்”; முறையில் துனிகின்றனர். இப்பிரமானத்தை அடிப்படையாகக் கொண்டு உலகைப் படைக்க ஒருவர் உள்ளார். காணல் என்பது கண்ணால் காண்பதும் காதால் கேட்பதும் ஆகும். இதில் பல பிரிவுகள் உண்டு. கருதல் என்பது இருப்பதைக் கொண்டு இல்லாததை ஊகிப்பது. இங்கு உதாரணமாக “பானையையும் குயவனையும்” கருகின்றனர். புhனை தன்னைத்தானே ஆக்கிக்கொள்ளாது அது முன் உருவாக்கப்பட்ட பொருளுமல்ல அது போல உலகமும் தன்னைத்தானே ஆக்கிக்கொள்ளாது அது முன்னர் படைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட பொருளுமல்ல பானையை வனைய குயவன் ஒருவன் இருந்தே ஆகவேண்டும். அதேபோல உலகத்தை படைக்க இறைவன் இருந்தே ஆகவேண்டும். எனவே இறைவன் உலகைப் படைக்க காரணன் என்பது தெளிவு. அதே போல பசுவாகிய ஆன்மாவுக்கும் தாம் செய்த வினையையும் அதற்கேற்ற பலனை தாமே  அனுபவிக்கும் வல்லமையும் ஆன்மாவுக்குகில்லை. ஆன்மாவின் வினைக்கேற்ப தனு, கரண, புவன, போகத்தை வழங்க ஒருவன் தேவை அவனே இறைவன். ஆவன் “உளன் உனர” என்பது ஆத்தவாக்கியம் வேதாகமப் பிரமாணம். இது இறைவன் இருப்பதை உணர ஆதாரமானவை. 
“அவன் அவள் அது எனும் அவை
முவினைமையின் தோன்றிய திரிபே
ஒடுங்கி மலத்துளதாம் அந்தம் ஆதி என்மனார் புலவர்” “சிவஞானபோதம்” முதல் சூத்திரத்தில் இறைவனிருப்பை நிரூப்பிக்கின்றார். இது போன்று “சிவஞான சித்தியார்”  “ஒருவனோடு ஒருத்தியென்றத்தி யொன்றை யென்றுரைத்திரு மூலகமெல்லாம் வருமுறை வந்து நின்று போவது மாதலாலே தருவனொருவன் வேண்டும்”;என்று குறிப்பிடுகின்றார்.
கடவுளின் குணங்களை குறிப்பிடுகையில் வேதங்கள் இரு குணங்களை குறிப்பிடுகின்றது. ஓன்று பொது நிலைக்குணம் அதாவது எண்குணத்தான் என்பது. மற்றையது சிறப்பு நிலைக்குணம் அதாவது இறைவன் நிர்க்குணன். எனக் குறிப்பிடுகின்றது. சைவசித்தாந்தம் நிற்குண குணம் குறியற்ற சொரூபநிலை இறைவனைப் பற்றியே கூறுகின்றது. சொரூபநிலை என்பது அருவம், உருவம், அருவுருவத்துக்கு அப்பால்பட்ட ஒரு அடையாளமும் இல்லாத மனம், வாக்குக்கு அப்பால்பட்ட குணம் குறிக்கு அப்பால்பட்டவராய் ஆனந்தகுறியால் மலரகிதராய் ஓராதாரமும் மில்லாதவராய் பசுபாசஞானத்தால் அறிதற்கரியராய் ஒருகாலமும் சலிப்பற்றவராம் உவமை இல்லாதவராய் ஞானமாய் ஆதிசுக்குவமாய் விருப்பு வெறுப்பில்லாதவராய் பரம்சோதியாய்  மூவகை ஆன்மாக்களுக்கும் முத்திதாரகராய் இருப்பவர். ஏனக் குறிப்பிடுகின்றனர். இதனை கந்தப்புராணத்தில் “ஊரிலான் குணங்குறியிலான் செயலிலான் னுரைக்கும் பேரிலானொரு முன்னிலான் பின்னிலான் பிறிதோர் சாரிலான் வரல் போக்கிலான் மேலிலான் நேரிலான் னுயிர்க் கடவுளாறனக்கு யென்னுளே நிற்கின்றான்”
பிறவாமை என்பது அத்மா அனாதியில் எப்படியானதோ அந்த நிலையை அடைவதே ஆகும். அது பிறப்பெனும் நிலையை அடைந்து ஆன்மாவின் உண்மை நிலையை மறந்து உலகியலில் உளன்று அசத்தில்லிருந்து சத்தாகி சத் ,சித், ஆனந்தத்தில் நிலைத்தலே பிறவாமை அதற்கு மீண்டும்  பிறப்பில்லை. “இரத்தினக்கல்லின் மேல் சாணம் விழுந்தால் இரத்தினக்கலின் ஒளி வெளியில் தெரிவதில்லை” அதானால் என்ன இரத்தினக்கல்லின் ஒளி மங்கிவிட்டதா? இல்லை. அதன் தன்னையை இரத்தினக்கல் இழந்துவிட்டதா? அதுவும் இல்லை. எப்போது சாணம் அதில் மேல்லிருந்து நீக்கப்படுகின்றதோ அப்போது அதன் தன்மை மாறாத ஒளிமிக்க அக் கல் “அப்பழுக்கு மாறாது மீண்டும் பெறப்படுகின்றது”. இதுவே பிறவாமை.
                              பிறந்ததும் அன்னை உலகியலை பாலூட்டும் போதே சேர்த்தே ஊட்டுகின்றாள். அன்னையை மகாமாயை என்று குறிப்பிடுகின்றனர். தனு, கரண, புவன, போகத்தை அவர்அவர் வினைக்கேற்ப கொடுத்து அனுபவிக்க வைத்து அதன் விழைவை உணர்தி விடுதலை கொடுப்பவள்.
              குருதேவர்; ஸ்ரீ இராமகி~;ண பரமஹம்சர் காசியாத்திரை சென்ற போது கங்கைக்கரையில் அமந்து தியானத்தில் திளைத்த போது கங்கைகரையில் இறந்தவர்களை தகனம் செய்யும் மயானத்தில் முத்திக்கு வழிகாட்ட அப்பன் காதில் மூலமந்திரத்தை ஓத அம்மை மோட்சத்துக்கு வழிகாட்டுவதை தாம் கண்டதாக குறிப்பிட்டுள்ளார். எனவே அன்னையே முத்திக்கு வழிகாட்டுபவள்.  சப்தரி~pகள், மக~pசிகள், சித்தர்கள்,  ஆதி சத்தியின் மூலமே பெறுபெற்றனர்.

No comments:

Post a Comment