தியானத்தின் போது கடைப்பிடிக்க வேண்டிய விடையங்களின் தொடர்ச்சி...................
ஒம் சற்குரு ஸ்ரீ அகத்தீசாய நம:
ஜெபத்தின் போது கணிக்கும் மிடத்து மேல் நோக்கி கணித்தால் மேட்சத்தை நோக்கியதாகவும் கீழ்நோக்கி கணித்தால் உலக வாழ்கையை மையமாதாகவும் கொள்ளப்படும். ஜெபமும் தியானமும் ஒன்றல்ல தியானத்தின் அடிப்படையே அன்றி தியானம் அல்ல மந்திர ஜெபம்கள் மனதை திடப்படுத்தவே மந்திரம் என்பது ம என்பது மனம் ஸ்திரம் என்பதே பொருள். தியானத்துக்கு மனதை ஸ்திரப்பதுத்துவது அவசியம். மனம் அலையாயும் தன்மை உடையது. அதனாலேயே மனதை குரங்குக்கு ஒப்பாக 'மனம் ஒரு குரங்கு ' என்று கூறுகின்றனர். தியானம் என்பது ஆத்மாவுடன் தொடர்வு கொள்வது. சித்தம் தெளித்தால் சிவலிங்ககமான ஆத்மா தெரியும். அதற்கு மனத்துள் மறைந்துள்ள புத்தி வெளிப்பட வேண்டும். 'மரத்துள் மறைந்தது மாமதயாளை' கல்லினுள் மறைந்தள்ளது உருவம் சிப்பி தேவை அற்றதை நீக்கினால் உருவம் வெளிப்படுவது போன்று ஆத்மா வெளிப்படும்.
எது தேவையானது எது தேவை அற்றது என்பதுஅவர் அவர் கர்மா. பிள்ளையார் பிடிக்க குரங்கான கதையை ஓத்தது இரத்தின கல்லின் மேல் சாணம் விழுந்தால் ஒளி மங்கி கல் வெளிப்படாது. அவற்றைப்போக்கவே ஜெபம். ஆத்மாவைக்காண தியானம்
தொடரும்......
No comments:
Post a Comment