Sunday, July 14, 2019

தர்மம்
எவரிடம் சத்தியமும் தாமம்மும் இருக்கின்றதோ அங்கு தாம் செய்யும் செயலில் வேற்றி உண்டு. செயலும் தர்மம் சாந்தாகவே அமையும். தாமம் எனபது பணமோ பொருளுடன் தொடர்புடையது அன்று அது செயலுடன் தொடர்புடையவை. அவை பணமோ பொருளுடன் தொடர்பு படும் போது நன்மை தீமையுடன் தொடர்புடையவை அவை முத்திக்கு வழிவகுக்காது அவை பிறப்புக்கே வழிவகுக்கும். அவை கர்மா அதுவே செய்வினை
தானம் பணம் ,பொருடன் தொடர்படையவை அவை நல்வினை தீவினையுடன் தொடர்புடையவை. அவற்றை தேடும் வழியில் தர்மம் சம்பந்தப்படும். அவை அறவழியில் சம்பாதித்தால் தான் நற்பலணை கொடுக்கும். பயன் கருதாத கொடையே தர்மமாகும்.அதாவது இறைவன் கொடுப்பது மற்றவர்களுக்கு கொடுக்கின்ற வாய்பை பரிசோதிக்கவே தனக்கென வைத்தால் அது கர்மம்

Saturday, July 6, 2019

கதிர்காம கந்தனின திருவிளையடல்
ஒருமுறை பாடசாலை மாணபர்களுடன் கதிர்காமம் சென்றிருந்த போது..............
மாலை 6.30 மணி அளவில் கருகிய இருள் நேரம் இருக்கும் சகஆசிரிர்களுடன் பெரிய கோயிலுக்கு சென்றுகொன்டு இருக்கையில் இடது கை மூலையில் ஒருவர் ஆணிகள் நிறைந்த மிருகலிகட்டையுடன் தலைபாவை அணிந்து தார்பாச்சி கட்டி கைத்தடியும் தாடியுடன் வருவதை கண்டேன். அவர் ஆசீர் பதிப்பதையும் கண்டு சக ஆசிரியர்களிடம் கேட்டேன் அடியேன் கண்டவரை தெரிகின்றதா ? அவர்கள் யாரையும் காணவில்லை என பதிலளிதனர். அப்போது அது எனக்கு புதிராத புதிராக இருந்தது.பின்னர் மூன்று மாதம் கழித்து ஒருநாள் அதிகாலையில் சொற்பனத்தில் அழகிய பெண் தோன்றி பல சமாதிகள் இருக்கும் இடம் ஒன்றை காட்டி அங்கு வருமாறு பணிக்கப்பட்டேன். அப்போது எனக்கும் காயத்திரி சித்தர் முருகேச சுவாமிக்கும் இடையில் தொடர்பு இருந்தது கண்ட சொற்பணத்தை சுவாமியிடம் கூற அவர் காலம்வரும் போது தெரியும் என்றார். பலகாலம் கழிந்து ஒருநாள் கதிர்காமம் செல்லும் வாய்ப்பு கிட்டியது அப்போது பெரியகோயிலுக்கு சென்றுவழிபாடு செய்த பின் தெய்வாணை அம்மன் கோயிலுக்கு சென்று வழிபட்டபின்; கோயிலுக்கு எதிப்பக்கம் திரும்புமாறு மனம் சொல்கின்றது திரும்பிய போது குருபீடம் என்று எழுதப்பட்டுள்ளது. அதன் உள் செல்லுமாறு உள் மனம் செல்கின்றது. அங்கு சென்றபோது சொற்பணத்தில் கண்ட காட்சி நனவாகிற்று. பாலசுந்தரி அம்மாவே சொற்பணத்தில் வந்த அன்னை என்பதையும் காட்சி தந்தவர் ஸ்ரீலஸ்ரீ கேசவபுரி பால்குடி வாவா என்பதையும் அறிந்து பரவசம் அடைந்தேன்.அடியேன் பார்த்த போது அவர் அணிந்து இருந்த ஆணிநிறைந்த மிருவடியும் தண்டமும் சமாதியில் காணப்பட்டது. இதன் பின் அடியேன் செல்வது சமாதிக்கே கந்தன் பேசுவதெல்லாம் அடியார்கள் உள்ளத்திலே 'மருவும் மருவுமடியார்கள் மனதில் விளையாடும் மரகத மயூர பெருமாளே' தியானத்தில் அன்றி அவன் பேசமட்டான் .
அடியார்களே சமாதிக்கு சென்று தியானத்தில் ஆளுங்கள் உங்களுடன் பேசுவான் கந்தன்