Saturday, January 22, 2011

பஞ்சகௌவ்வியம் இயற்கை எமக்களித்த                   வரப்பிரசாதம்
           பஞ்சகவ்யம் இந்துசமய கிரிகைகளில் பயன்படுத்தப்படுகின்றது. இப் பஞ்சகவ்யம் அண்ட, பிண்ட சுத்திகரிப்புக்கே பயன்படுத்தப்பட்டது. ஆனால் இன்று விஞ்ஞான ரீரியிலான முறைகளுடாக களைகள் கட்டுப்படுத்தப்பட்டன. இதன் விளைவு அண்டமும் பிண்டமும் அழிவதற்குக் காரணமாக அமைந்தவையே இன்று விஞ்ஞானிகள் இயற்கையான களைக் கட்டுப்பாடுகளை மேற்கொள்ள விளைந்ததன் காரணமாக வேப்ப மரத்தின் பயன்களையும், புகையிலையின் பயன்களையும் பயன்படுத்தும் அதே சமயம் இந்தியாவில்  தமிழ் நாட்டில் பஞ்சகவ்வியத்தைப் பயன்படுத்தி களைகளைக் கட்டுப்படுத்தியதுடன் விளைவையும் பெருக்கியுள்ளனர்;. அதுமட்டுமல்ல விஞ்ஞான ரீதியிலா பொருட்களைப் பயன்படுத்திப் பெறப்பட்ட சுவையை விட இது நிறைந்த சுவையுள்ளதாகக் காணப்படுவதுடன் அங்குள்ள மக்கள் சுகாதார ஆரோக்கியமான வாழ்க்கையை வாழக்கூடியதாகவும் உள்ளது. இவ்வாறான இயற்கை மூலிகை பயன்படுத்துவதன் மூலம் இயற்கை எம்மை அழிப்பதிலிருந்து எம்மைக் காப்பாற்ற முடியும். இயற்கையோடு இசைந்து வாழ்ந்தால் நோயற்று நீடூழி வாழமுடியும். 
             பஞ்சகௌவ்வியம் என்பது கோமாதாவிலிருந்து பெறப்படும் பால், தயிர், நெய், கோமேயம், கோயலம் ஆகும். கோமேயம் பொதுவாக மண்வீடுகளை மெழுகுவதற்கும் விபூதி தயாரிப்பதற்கும் தாவரங்களுக்குப் பசளையாகவும், பயிர்களுக்குக் கிருமி நாசினியாகவும் பயன்படுத்துகின்றனர். 


          பஞ்சகௌவ்வியம் தொடர்பாக அபிதான சிந்தாமணி பின்வருமாறு கூறுகின்றது. கோமூத்திரத்திற்கு வருணனும் கோமேயதிற்கு அக்கினியும் பாலிற்குச் சந்திரனும் தயிருக்கு வாயுவும் நெய்க்கு விஷ்ணுவும் தேவதைகளென ஸ்மிருதிகள் கூறுகின்றன. பின்னும் செந்நிற பசுவினிடம் கோமூத்திரத்தையும்  வெள்ளைப்பசுவினிடம் கோமேயத்தையும் பொன்னிறத்த பசுவிடத்துப் பாலையும் கருநிறத்த பசுவினிடம் நெய்யினையும் கொள்ளின் நலமெனப்படும்.
         கோமேயம் கோமூத்திரத்திரம் இரண்டும் ஆறுமாத்திரை எடையும் நெய்யும் பாலும் மூன்று மாத்திரை எடையும் பால் பத்துமாத்திரை எடையும்இருத்தல் வேண்டும். இதை மந்திர பூர்வமாகக் கலந்து பிராமண சந்நிதியில் உண்டவர் சகல பாவத்திலும் நின்று நீங்கி சுகமடைகின்றான்.
  இவ்வாறு சிறப்பு மிக்க இரகசியங்களை அன்றைய சிதர்கள் அறிந்து இந்துமத கைங்கரியங்களில் முக்கியப்படுத்தினர். அதை இன்று பயன்படுத்தி பெறு பெற்றிருப்பதுடன்  இயக்கையின் சீற்றத்தை அடக்க உபாயமக்கிக் கொன்டனர் எம்மவர்.

Thursday, January 13, 2011

9.இயற்கையை நேசித்து அதன் வழி சென்று உலகைக் காப்போம் இயற்கை கோரம் கொண்;டால் மனிதன் தாங்கமாட்டான்.

இயற்கையை நேசித்து அதன் வழி சென்று உலகைக் காப்போம் இயற்கை கோரம் கொண்டால் மனிதன் தாங்கமாட்டான்.  

இந்துக்கள் தமது பூர்வாங்க கருமங்கள் எல்லாவற்றையும் ஆரம்பிக்கும் போது வலபக்கமாகவே அரம்பிப்பது வழமை. முதல் முதலில் ஒரு வீட்கு விஜயம் மேற்கொள்ளுகின்ற போது வலது காலை முன்வைத்து வீட்டினுள் செல்வது வழமை. இது போன்று ஆலயத்துக்குள் சென்று வலம்வருகின்ற போது வலம் இடமாக சுற்றுவது வழமை. சுபகாரியங்கள் செய்கின்றபோதும் அங்கு நடைபெறுகின் கிரிகைகள் அனைத்தும் வலப்பத்தை அடிப்படையாகக்கொன்டுதான் நடைபெறுகின்றது. உலகம் வலப்புறமாகத்தான் சுற்றுகின்றது.அதுபோல் ஞாயிற்றுத் தொகுயில் உள்ள கிரகங்கள் அனைத்தும் வலமிடமாகத்தான் சுற்றுகின்றது. நேரத்தை பொறுத்தவரையிலும் அதுவும் வலமிடமாகத்தான் சுற்றுகின்றது.
நாமும் எக்காரியத்தையும் செய்வதும் வலது கையால்தான். இது பற்றி அறிவியல் என்ன சொல்லப்போகின்றது என்பதை அடுத்துப்பார்ப்போம். இடது கைப் பயன்பாட்டுக்கு  LRRTM-1இடது மூளையானது பேச்சு மொழி என்பனவற்றையும். வலது மூளையானது உணவு கலை போன்றவையையும் கட்டுப்படுத்துகின்றது. அத்துடன் LRRTM-1 இன்று அறிவியளாளர்கள் கூறும் 

கருத்துக்கள் அன்று காடுகளிலும் மலைகளிலும் தவம் செய்து கொன்டிருந்த மகரிசிகள் தவவலிமையில் கண்டு அனுபவித்து அறிந்து வெளிப்படுத்தியுள்ளனர். இயற்கை எவ்வாறு               .         செயல்படுகின்றதோ அதை சார்ந்து செயல்படுவது சிறந்தது. இயற்கைச் சூழலுக்கு எப்போதும் நாம் கட்டுப்பட்டுத்தானாக வேண்டும். அதைப் பாதுகாப்பது எமது கடமை. அதை அனுசரிக்கும் போது தான் அது எமக்கு அனுசரணையாக இருக்கும். அதை அறிந்தே அன்று மஹரிஷிகள்  இயற்கையை நேசித்தனர். இன்று இயற்கை எம்மை வெறுத்து அழிக்கத் தொடங்கி விட்டது. அபிவிருத்தி என்று பெயரில் இயற்கையை  அழித்ததன் விளைவு இன்று நடை பெற்றுக் கொன்டு இருக்கும் இயற்கைக்கும் எமக்கும் நடக்கும் போர். இயக்கை கோரம் கொண்;டால் படைத்த ஆண்டவனாலேயே ஒன்றும் செய்ய முடியாது. நாம் செய்த வினையை நாம் அனுபவிப்ப து போல. 
                         ஏனெனில் நாம் தான் அபிவிருத்தி நாகரீகம் என்று  தேவையை அடிப்படையாகக் கொண்டு  அதை நிறைவேற்றி மனிதனின் சந்தோசப்படுத்துவது அது பெரிதாக பாதிப்பதில்லை. மனிதனின் தேவைகளை ஆசையாக்கி இன்று பேராசையாகி இலாபம் சம்பாதிக்கும் பிரிவினர் ஒர் புறம். அதனால் ஏற்படும் பாதிப்பை தடுக்க நுகர்;வோர் பாதுகாப்பு  ஏற்படும் விளைவைத் தடுக்க சூழல்; பாதுகாப்பு  ஓசோன் படையைப் பாதுகாக்க பச்சை வீட்டுத்திட்டம் என்று ஆயிரம் திட்டங்கள் இவை அனைத்துக்கும் என்ன நடந்தது. இயற்கை சீற்றம் அடங்கி விட்டதா இல்லை. விஞ்ஞானம் வென்றதா?.
ஏனெனில் உலநாடுகள் நான் பெரிதா நீ பெரிதா என்ற போட்டியில் ஈடுபடுகின்றது. உண்மையில் மானிட நலன் அல்ல. ஆணவப் போட்டி. மானிட நலனுக்காக கண்டுபிடித்த அணு இன்று உலக வல்லரசுப் போட்டியில் மனித அழிவுக்கு பயன்படுத்துகின்றது. இது போன்று இயற்கை வளங்கள் மனிதனின் பேராசைக்கு பயன் பயபடுத்தப்படுகின்றது மட்டுமல்ல செயற்கை உற்பத்திகள் இவற்றை அழிக்க முடியாது. இவை பிரபஞ்சத்தில் இயற்கையின் இயல்பான போக்கை மாற்றியமைக்கும். இதை இயற்கை அனுமதிக்காது. தமக்கு தேவையான இயற்கையின் இயல்யான செயல்பாட்டுக்கு தேவையான வளங்களை சேகரித்து வைத்திருந்தது. அதில் ஒரு பகுதி மானிட நலனுக்காக பயன்படுத்த அனுமதித்திருந்தது. இயற்கையான பொருட்களின் கழிவு மீண்டும் வளமாக மாறும் தன்மை கெண்;டது. ஆனால் பேராசை கெண்ட மனிதன் ஆசை கொண்டு முழுவதையும் பயன்படுத்த விளைந்ததுடன் செயற்கை வளங்களையும் உருவாக்கி இயற்கைக்கு சவாலாக்க விழைந்தான். இயற்கைக்கு சவால் இட முடியுமா?
இது போன்று மதங்கள் தமது மதம் தான் சரி மற்றவை பிழை என்ற போட்டியில் பல யுத்தங்கள் போட்டிகள். மதங்கள் அரசியாகிக் கொன்டு இருப்பதைக் காண்கின்றோம். கடவுள் ஒருவனே. “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” அப்படி இருக்க எப்படி பல தெய்வன் உருவாக முடியும். நாம் மூதாதையர் பின்பற்றிய மதத்தில் நாம் உறுதியாக இருக்வேண்டும். ஆனால் மற்றைய மதங்களை மதிக்க தெரிந்திருக்க  வேண்டும். இறைவன் ஒருனாக இருப்பதானால் அவரிடமிருந்து வரும் செய்தியும் ஒன்றாகத்தான் இருக்கும். அது எப்படி வேறுபடும். எம்மதத்தையும் எடுத்கொண்டாலும் அதன் அடிப்படை ஒன்றாகத்தான் இருக்கும். அதைப் போதிப்பவர்கள் தாம் பரப்பும் மதத்திலிருந்து வெளியேராத வகையிலும் வேற்று மதங்களில் உள்ள புராணக்கதைகளை காரணம் காட்டியும் மதங்கள் பரப்பப்படுகின்றன. புராணக்கதைகளில் உட்பொருள் விளங்காதவர்கள் விளங்காத மக்களுக்கு அவர்களுக்கு விளங்கிய தமக்கு சதகமான விடையங்களை அடிப்படையாக வைத்து மதமாற்றத்துக்கு சதகமாக்கிக் கொள்கின்றனர். இதுவும் இறைய நிலைக்கு ஒரு காரணமாகும். பைபிளில் ஒரு இடத்தில் உலக அழிவின் அறிகுறியின் அடயாளங்களில் ஒன்று கடவுளைக் காட்டுகின்றேன் என்று பலர் கூறிக் கொன்டு மக்களை பிழையான வளிகளில் திசை திருப்புவர் அது இப்போது அரம்பித்து விட்டது. இதனால் பல கத்தோலிக்க மக்கள் எது சரி எது பிழை என அடையாளம் காணாது அலைந்து திரிவதை தற்போது காணக்கூடியதாகவுள்ளது.
                   ஒரு மலையின் உச்சியை அடை வேண்டுமானால் ஒருவளி மட்டும் இருந்தால் அந்த வழியில் எல்லொரும் செல்வதானால் உச்சியை எல்லொருமடைவது நடக்கக்கூடிய காரியம்மில்லை. அதனாலேயே பிரதான பாதைகள் வகுக்கப்பட்டு அதன் வளி செல்ல இறைவன் பணித்தான். அவை ஓன்றிலொன்று குறை வில்லை. அடிப்படையில் எல்லாமே ஒன்று தான். ஆனால் மனிதன் அதில் கூட வேற்றுமையை ஏற்படுத்தி மக்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்தி சுகம் கானும் பிரிவினர் ஒருபுறம் இதை இயற்கை ஏற்குமா? எல்லா மதத்தையும் மதிக்கின்ற “சனாதனதரும்” உருவாக வேண்டும். அங்கு மானிடப் பண்;பு மட்டுமே அங்கு இருக்க வேண்டும். மதம்சார்த பண்பு தவிக்கப்பட வேண்டும். உலக அழிவு தெடர்பாக பைபிள் கூறுகின்றது அல்க்குறான் கூறுகின்றது. பௌத்தம் கூறுகின்றது பவ006யு அப்போது மனித மனம் பண்பட்டு அக்வேச குரேத எண்ணம் வலுவிழந்து பிரபஞ்சம் காப்பாற்றப்பட வேண்டும். எண்ணங்கள் வலுவானால் சதனைகள் புரிந்து உலகத்தை ஆள முடியும். அவை இரண்டு வகைப்படும். ஓன்று நல்ல எண்ணங்கள் மற்றையது தீய எண்ணங்கள். நல்ல எண்ணங்கள்  இயற்கையின் நியதிகளை வலுவாக்குபவை. தீய எண்ணங்கள் இயற்கையின் நியதிகளை வலுவக்கச் செய்பவை. அவ் வெண்ணங்கள் மன அழிவுக்கு காரணமாகின்றது. மன அழிவு மனிதன் அழிந்ததற்கு சமமாகும்.
தற்காலத்தில் கையடக்கத் தொலைபேசிகளின் அதிகரிப்புக்கூட மனித எண்ணச் செயல்பாட்டுக்கு தடையாக அமைகின்றது.  மனித எண்ணம் செயல்பட உதவுவது மின் காந்த அலைகள் அவை எம்மைச்சுற்றி இருப்பவை அவை  செபம் தியானம் என்பவை மூலம் அவற்றின் சக்தி அதிகரிப்பதுடன் அதன் அளவும் விரிவடையும். எண்ணங்களின் வீச்சினை அல்பா பீற்றா காமா ரிற்றா என கணிப்பிட்டுள்ளனர்.  அதில் அல்பா சமனான மனநிலையையும் எண்ண ஒருமைப்பாட்டையும் உலகத்தையாழும் சக்தியையும் தரும். இது பொதுவாக செபம் தியானம் செய்பவாகளுக்கு அதிகமாக காணப்படும் அல்பா செயல்படுபவர்கள் அமைதியின் சிகரமாகவும் தெயஸ் உள்ள ஒளிமயமான முகப் பொலிவுடையவராகவும் வய்மை காப்பவராகவும் காந்த சக்கியுடையவராகவும் இருப்பவர்கள். அதாவது பற்றறி ஒன்றை எப்போதும் மின்னேற்றம் செய்வதை ஒத்தது. எனவே அதை குறைய விடக்கூடாது எப்போதும் செபம் தியானம் செய்து கொண்;டு இருக்க வேண்டும். பயம் பதட்டம் ஏற்பட காரணமாக அமைவது வீற்றா கதிர் அதாவது மனவழுத்தத்துக்கு காரணம் அவ்வாறான நிகள்வுக்கு காரணம் புற நடத்தைகள். மற்றவை இரண்டும் கொமா நிலையின் செயல்படுபவை. மனநோயிக்குள்ளாகும் ஒருவரில் எந்த கதியியக்க செயல்பாடு செயல்படுகின்றது என்பதை அறிந்து மருத்துவம் செய்கின்றனர். இதற்காக EEGஎன்னும் பரிசேதனை ஒன்றினை மூளையை அடிப்படையாக கொண்டு செய்கின்றனர்.
                            இப் பரிசேதனையிள் பெறுபேறு வரைவாகப் பெறப்படுகின்றது. தெலைத்தொடர்பு போல மனித எண்ணத் தொட்புகளும் உண்டு. சிலவேளைகளில் நமக்குள் அவ்வாறான செயல்பாடு நடந்திருக்கும் உதாரணமாக ஒருவரை நாம் நினைக்கும் போது நாம் நினைத்தவர் நம்முன் தோன்றுவார். அல்லது எமக்கு தெலைபேசியில் தொடர்பு கொள்வார். பாடல் ஒன்றை கேட்கவிரும்பும் போது அது ஒலிவாங்கியில் ஒலிக்கும் இவ்வாறான அனேக சந்தப்பங்கள் எனது வாழ்கையில் நடந்திருக்கின்றது. இதை tele pathy
 என்பர். இதுவும் alpha வின் செயல் பாடுதான். இதற்கும் அபாயம் வந்து விட்டது கையடக்க தொலை பேசி நிறுவனங்களின் போட்டாபோட்டியால் பல நிறுவங்கள் உருவாகி மின் காந்த அலைப்பிரதேங்சங்கனை கைப்பற்ற போட்டி போடுகின்றனர். தொலைதொடர்பு வலைப்பின்னல் தேன் கூட்டை ஒத்த அறுகோண வடிவானது. இதனால் இடவெளி இன்றி பரம்பக்கூடியது. இதனல் மனித எண்ணம்  அறிவாக மாறி திறனாகச்செயல்படும் போது தான் அதன் விளைவை மனிதன் அனுபவிக்கின்றான். இந்த செயல்பாட்டுக்கு அது தடையாக அமைப்போகின்றது. இதனை இயற்கை அனுமதிக்காது. இதனால் சூரியனது கதிர்வீச்சு அதிகரித்து இலத்திரணியல் இயங்காமல் போகக்கூடிய சாத்தியகூறு இருப்பதை விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அவ்வாறு நிகழும் என்பதை சித்தார்கள் காலஞானம் மூலம் தெரிவித்துள்ளனர். இதற்கு இன்னுமோர் காரணம் கரியமில வாயுவின் அதிகரித்த செறிவு இதுவும் ஒசோன் படையை பலம் மிளக்கச் செய்து ஊதா கதிர்களின் வீச்சை அதிகரித்து பிரபஞ்சத்தை சேதப்படுத்தியுள்ளது. இதுவும் மனித செயல்பாட்டின் உச்சம் அதையும் இயற்கை அனுமதிக்காது.
எனவே இயற்கையை எதிர்க்காது அதை அனுசரித்து பேராசை கொண்டு வளமனைத்தையும் பயன்படுத்தாது இயற்கை தனது செற்பாட்டுக்காக வைத்திருப்பதை விட்டுவிட்டு மனிதனின் உண்மையான தேவைக்கு முக்கியத்துவம் கொடுத்து வளங்ளைப் பயன்படுத்தி எனைய வளங்களை பாதுகாப்பதன் மூலம் இயற்கைக்கு தேவையான வளங்களை பாதுகாத்து சூழலுக்கு பாதகமானவற்றை தவிர்த்து சூழலைப்பாதுகாத்து இயற்கையை நேசிப்போம். தற்போது உலகெங்கும் ஜலப்பிரளையம் நடந்து கொண்டிருக்கின்றது. அடுத்து அமில மழை, சூரியனின் வெப்பம் அதிகரித்து  இலத்திரனியல் பிரளையமும் நடந்தால் அதிசயிப்பதற்கில்லை.

Tuesday, January 4, 2011

8.மாசிமாதமும் மகா சிவராத்திரியும்


               மாசி மாதம் என்றாலே சிவராத்திரி
                   ஞாபத்துக்கு வரும் . சிவனுடைய பஞ்சகிருத்தியத்தில் இக் காலம் அளித்தல் தொழிலை செயல்படுத்தும் காலம். இதனை வருடபிரழையம் என்பர். அன்றைய தினம் கிஷ்ணபட்சஷ சதுர்த்;தசி திதீ ஆகும். இது போன்று மதாமதம் வருவது பிதோசம் அதுவும் மாத சிவராத்திரி அதுவும் விசேஷ காலம் தான் அம்பிகைக்கு ஒன்பது இராத்திரிகள் அதனை நவராத்திரி என்பர். சிவனுக்கு ஒரு இராத்திரி ஆகும். அதனால் இவ் இராத்திரி. அத் தினத்தில் விரதம் இருந்தால் இகபர இன்பம் பெறுவர் என்பர் சான்றோர்.
                 விரதம் என்னும்  தனித்திரு பசித்திரு விழித்திரு எனக் கூறுகின்றனர். இதற்கு பலர் தனிமையில் இருந்து உணவருந்தாது நித்திரை செய்யாது வழித்திருத்தல் என பொருள் கொள்பவர்கள் அனேகர். ஆனால் என்னைப் பொறுத்த  வரை தனித்திருத்தல் என்பது உலக விபகாரங்களிலிருந்து  தனித்திருத்தல் பசித்திருத்தல் என்பது ஆன்மீகபசியில் இருத்தல். விழித்திருத்திருத்தல் என்பது மலங்களின் பிடியில் படாது விழிபாக இருத்தல். இவ்வாறிருந்தால் தான் பிறவிப்பயனை அடையமுடியும்.என்பது எனது கருத்து. எனவே சி;வராத்திரி தினத்தில் எம்முள்ள இறைவனை தனித்திருந்து அத்ம தியானம் செய்து மலங்களின்பிடியில் படாது விழித்திருந்து சிவபூசை நான்குயாமம் செய்து ஆன்மீகபசியில்லிருக்க அப்பனின் காட்சி கிடைப்பது நிட்சயம். விதங்களில் முதன்மையானது. இவ்விரதம். இவ்விரதம் தொடர்பாக பல புராணக் கதைகள் உண்டு. ஆலயம் என்பற்கு மூர்த்தி தலம் தீர்தம் என்கின்ற மூன்றும் எப்படி முக்கியமோ அது போல விரதங்;களில் தனித்திரு பசித்திரு விழித்திரு இவை மூன்றும் முக்கிமாகும். இவை மூன்;றும் ஒருங்கே அமையப்பெற்ற விரதம் சிவராத்திரி விரதமாகும். இதனால் இவ்விரதம்; முக்கியம் பெறுகின்றது. எமது முழுமுதல்லான மூலவன் அவனை. ஆவனையன்றி ஒரு அணுவும் அசையாது.
      “ஆண்டத்தில் தில்லைஅம்பலத்தில் ஆடுகின்றான்
        அத்தன் உலத்தையியக்க ஆடுகின்றான். 
      பிண்டத்தில் சிற்றம்பலத்தில் ஆடுகின்றான்
        அத்தன் உடலையியக்க ஆடுகின்றான். 
      ஆட்டம் நின்றால் 
         அண்டமும்மில்லை பிண்டமும்மில்லை”.
                           பிண்டமும் பிரமான்டமும் சமம். பிண்டமான சரிரம் இடப்பக்கம நாடி இடகலை எனவும் வலப்பக்கநாடி பின்கலைநாடி யாகவும் நடுநாடி சுழுமுனை நாடி என பிண்டத்தில் உள்ளது போல பாரதகண்டத்தி;ல் இமயத்துக்கும் இலங்கைக்கும் இடையில் நடுவில் உள்ளது தில்லையும் சிவப்பரம்பொருளான என்னப்பன் ஆனந்ததிருநடனமாடும் திருத்தலம்  சரிரத்தில் உள்ளே இருக்கும் இருதயதானமான புண்ரீக வீடு. இருதயத்திள்ளே இருக்கும் பிரமாண்டம்   பிரமபுரம் பிண்டத்தினுள்ளியிருக்கும் தில்லைவனத்தில் நிறுத்தம் செய்யுஞ்சிவன்ஆகாசம் இது பூத ஆகாசம் போன்று சடஆகாசமன்று. அது சித்தாகாசம். ஆதலாற் சிதம்பரம் எனப்பட்டது இது எக்காலமும் நீக்கமின்றி விளங்குந்தானமாதலால் இத் தில்லையும் சிதம்பரம்மென பெயர் யொற்றது. அப்படிப்பட்ட அத்தனானந்ததை நாம் மெய் உருகி உள்ளத்தில் நிறுத்தி அத்ம தியானத்தில் மூழ்கின்ற போது அவன் இராத்திரில் அவன் காட்சி கிடைப்பது உறுதி.
                  சிவராத்திரி கால நிர்ணயம் தொடர்பாக சஸ்திரரிதியாகப் பக்கும் போது மாசி மீ கிருஸ்ணபசஷம் சதுர்த்தசி இரவு பதினான்கு நாளிகை லிங்கோற்பவ காலம் இதுவே மகாசிவராத்திரி புண்ணியகாலம்மாகும். கிருஸ்ணபசஷம் சதுர்த்தசிகாலமும் திரியோதசி பதினான்கு நாளிகைக்கு சதுர்த்தசி வியாபிப்பது உத்தமம். திரியோதசி இல்லாமல் சதுர்த்தரி வியாபிப்பது அதர்மம். ஒரு காலம் அன்றையிராத்திரிக்கு அமாவாசை பிரவேசிப்பது பரியான சிவராத்திரி இது மகாசிவராத்திரி தினத்தில் நேரிடும். அப்போது திரியோதசி பரமசிவத்துக்கு தேகமாகவும்  சதுர்த்தசி தேகியாகவும் அன்றிச் சக்தியாகவும் சிவமாகவும் கூறப்படுகின்றது.
                    சிவராத்திரி நான்கு வகையாகக் கூறப்படுகின்றது. மாதம் தோறும் வரும் அமரபட்ச சதுர்த்தசியில் வருவது மாத சிவராத்திரி. அமாவாசையும் சோமவாரமும் கூடிய தினத்தில் வருவது யோக சிவராத்திரி எனவும். மாசி மாத பூர்வபக்க வளர்பிறைப் பிரதமை தொடங்கி  அமரபக்க தேய்பிறை திரியோதசி வரை அனுட்டித்தல் மூன்றாவதாகவும். மகாசிவராத்திரி நான்காவதாகவும் கூறப்படுகின்றது. 
                              கால நிர்ணயம் செய்கின்ற போது நட்சேத்திரம் கருத்தில் கொள்ளப்படுவது அவசியம். ஏன்னெனில் புவி ஈர்ப்பு இருக்கின்றது. புவி தன்னைதானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றுகின்றது.இதனை புவிச் சுழற்;சி புவிச்சுற்றுகை என்பர். அப்போது கிரகங்கள் நட்சேத்திரங்கள் ஈக்கப்படுகின்றன. இதனால் புவியில் சக்தி மாற்றங்கள் நிகளுகின்றன. அண்டத்தில் நிகளும் மாற்றம் பிண்டமாகிய உடலிலும் மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த நிலைகளை பொதுவாக பூரணை அமாவாசை காலங்களில் கடல் கொந்தழிப்பாக இருப்பதுடன் கடல் சந்திரனால் கவரப்பட்டு பின்னிசெல்வதை அதாவது உள்செல்வதை அவதானிக்கக் கூடியதாக இருக்கும். இது போன்று பிண்டத்திலும் மாற்றம் நிகழ்வதையும் அவதானிக்க முடியும்;. பூரனை அமவாசை தினங்களில் எமது உடலில் பல மற்றங்கள் நிகழ்வதை நாமே அவதானிக்கக்கூடியதாக இருக்கும். அத்தினங்களில் உடலில் அமுதம் சுரக்கும் காலம் அத்துடன் உயிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால் இரு தினங்கனையும் இறைவழிபாட்டுகான சிறந்த நாட்களாக கருதி சித்தர்கள் வழிபாட்டு முறைகளை வகுத்துள்ளனர். அன்றைய தினங்களில் தாம்பத்தியம் தவிக்க வேண்டும். இதனால் உயிர்ப்பு அதிகரிக்கும்.உடலில் உள்ள ஆறு ஆதாரங்களிலும் உள்ளசுரப்பிகள் உத்வேகம் பெற்று முலதாரசக்கரத்தில் உறைந்துள்ள  குண்டலிணி சக்தி (குண்டலினி தொடர்பாக விரிவாக முன்னர் உள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளேன் அதை பார்க்கவும்)தானாகவே மேல்ளேழுந்து சகஸ்ராதரம் சென்று அமுதம் சொரியும் நாட்கள்; பூரணை அமாவாசை தினங்கள் இதையறிந்த சித்தர்கள் அன்றைய தினத்தினத்தில் ஸ்ரீசக்கர மேரு பூசைகள் செய்து அட்மாசித்துக்களைப் பெற்றனர். அதை நாம்மறியாது அன்றைய தினத்தில் களியட்டநிழ்;வுகளில் கலந்து விட்டு நமக்குள் இருக்கும் அபூர்வ சக்தியின் தன்மை அறியாது இன்னெருவரை நாடுகிறோம். தானாகவே கிடைப்பதை  அறியாது அலைகின்றவர்கள் பலர் அறிந்தவர் சிலர்.அவரெ வெற்றி கண்டவர்.
                     பூரணை சந்திரமன்டலம் தொடர்பானது. அது அம்பிகைக்கு அதாவது பிரபஞ்ச சத்திக்கு முதன்மை நாள். அமவாசை சூரியமன்டலத்துடன் தொடர்பானது அது சிவப்பரப் பிரம்மம். 
                        எமது உடலை மூன்று பாகமாக பிரிக்கப்படுகின்றது. அவை ஆதாரங்களை அடிப்படையாகக் கொன்டு அமைகின்றன. மூலாதரத்தலிருந்து ஸ்வாதிஷ்டானம் வரையான பகுதி அக்கி கண்டம். மணிப்பூரகத்திலிருந்து அநாஹதம் வரையான பகுதி சூரிய கண்டம். விசுத்திலிருந்து ஆஞ்ஞை வரையான பகுதி ஸோமகண்டம். ஆமாவசை தினத்தில் அநாஹதசக்கரத்தில்  ஆதித்திய கண்டத்தில்(சூரிய கண்டம்)  இருதயமான சிற்றம்பலத்தில் சிவனை கானமுடியும். மகாசிவராத்தியான அன்று. அது போன்று பூரணையில் ஸோமகண்டத்தில் ஆஞ்ஞையில் குடலினியாக எம்யை வழிப்படுத்தும் அம்பிகை தென்பட்டு சகஸ்டாகரத்தில் ஆயிரம் இதழ் தாமரையில் அமிதம் செரிவாள்.
                           ஸ்வாதிஷ்டானத்திற்கும் மணிப்பூரகத்திறகும் இடையில் பிரம்மக்ரந்தி என்னும் முடிச்சு உண்டு. இது போன்று அநாஹதத்துக்கும் விசுத்திக்கும் இடையில் விஷ்ணுகிரந்தி முடிச்சு உண்டு. ஆஞ்ஞைக்கும் சகஸ்டாகரத்துககும்; இடையில் ருத்திரணுகிரந்தி முடிச்சு உண்டு. இவைகள் இடகலை பின்கலை நாடிகள் பினைந்து விரிகின்ற இடமாகும்.இவ்விடங்கள் உடலில் சத்திமிக்க இடங்களாகும். “கிரந்தி” என்பது நாடி முடிச்சையும் நாடியினுள் பாயும் எண்ணங்களில் பூர்வவாஸனியால் ஏற்படும் சிக்கல்களையும் குறிக்கும் இவற்றை அறிந்து அவ்விடங்களை எண்ணி தியானம் செய்வதன் மூலம் பூர்வவாஸனியால் ஏற்படும் சிக்கல்களை தவிக்க வளி பிறக்கும் இதற்கு சிறந்த காலம் சிவராத்தி காலமாகும்.
                           இவ்வாறு ஒவ்வொரு விரதகாலத்திலும் உள்ள கிரக நட்சேத்திர நிலைகளில் எற்படும் மாற்றங்களை கணித்து விரதங்களை ஏற்படுத்தியுள்ளனர் மகரிசிகளும் சித்தர்களும். இதை கடைப்பிடிப்பது மனுக்குலத்துக்கு நன்மையே.
                           சிவராத்திரி விரதம் கைக்கொள்ளும் முறை.  சிவராத்திரி  தினத்தன்று அதிகாலையில் துயிலேலுந்து சந்தியாவந்தனம் செய்து  விநாயகர் பூசை செய்து சங்கல்பம் பூண்டு விரதத்தை ஆரம்பிக்க வேண்டும். அன்றைய தினம் உணவை தவித்தேனும் அல்லது குறைத்தேனும் சிவசிந்தையில் இருந்து மலையில் முதலாம் யாமத்தில் லிருந்து சிவபெருமானின் அருஉருவ திருமேணியான இலிங்கத்திருமேனிக்கு முறைப்படி பூசை செய்து. இலிங்கோற்பவகலமான மூன்றாம் யாமத்துக்கு விசேட பூசை செய்து வழிபடுவதுடன் திருமுறைகள் ஓதி வழிபடுதல் வேண்டும். ஆதிகாலை உணவு தயார்செய்து பறனை செய்து விரதத்தை முடித்துக்கொள்ள வேண்டும். விட்டிலிருந்து செய்ய முடியாதவர்கள் ஆலயத்திலிருந்து விரதத்தை மேற்கொள்ள முடியும்.


                  நான்கு யாமங்களிலும் கடைப்பிடிக்கவேண்டிய ஒழுங்கு முறைகள் தொடர்பான அட்டவனை பின்வருமாறு தரப்படுகின்றது.




யாமங்கள் 1ம் யாமம் 06-09  மணிவரை
.                      2ம் யாமம்  09-12 மணிவரை
3 ம் யாமம் 12-03  மணிவரை

.                       4 ம் யாமம் 03-06  மணிவரை



1. அபிக சேஷகலச எண்ணிக்கை: 1. 108 2. 49             3.  25 4. 9
2. அபிசேஷதிரவியம் : 1. பஞ்சகவ்வியம் 2. பஞ்சாமிர்தம் 3. தேன்              .                                                        4.    பலோதகம் கருப்பஞ்சாறு அல்லது சந்தனம்
3. வாசனைத்திரவியம் : 1. சந்தனக் குழம்பு 2. பச்சைக்கற்பூரச் சுண்ணம் 3. புனுகு                                                        .                                                    சந்தனம் 4. குங்குமம் பன்னீர்
4. வஸ்திரம்: 1.  சிவப்பு பட்டு 2. மஞ்சள் பட்டு 3. வெண் பட்டு 4. நீலப்பட்டு
5. அசதை : 1. பச்ரிசி 2. வாற்கோதுமை 3. கோதுமை 4. ஆரிசி உழுந்து பயறு தினை முதலிய 7 வகை தானியம்
6. பக்திர புஸ்பம்: 1. தாமரை அலரி வில்வம் துளசி 2. தாமரை வில்வம் துளசி    .    .                 குருந்து 3. சண்பகம் வில்வம் ஆதிதி அறுகு மல்லிகை முட்கிழுவை . . 4. நீலோத்பலம் கருநொச்சி நந்தியாவநர்த்தம் நறுமண மலர்கள்
7. நைவேத்தியம் : 1. பயற்றன்னம் 2. சுத்தஅன்னம் கறிவகைகள் வில்வம்பழம் . 3. பயாசம் லட்டு முதலியபட்சணம்கள் பலாப்பழம் ஏள்ளுச்சாதம் நெய்ப் .        .              4. பலகாரம் மாதுளம்பழம் சுத்தஅன்னம் அல்லது கோதுமை பலகாரம் .     .                   எல்லாப் பழவகைகளும்


(1,2,3,4. என்பது யாமங்களைக்குறிக்கின்றது)


            மேலே உள் முறைப்படி அல்லது அவர்அவர் வசதிக்கும் சத்திக்கும் எற்றமாதிரி பின்பற்றலாம்.ஒன்றும் முடியாதவர் அன்றையத் தினம் சிவசிந்தையில் இருந்தாலே போதுமானது. முடிந்தவர்கள் மணலால் லிங்கம் செய்து அதற்கு வில்வதளம் எடுத்து இரவு முழுவதும் சிவநாமங்களை அல்லது பஞ்சாச்சரத்தில் அச்சித்து அல்லது பஞ்சாச்சர ஜபம் செய்து விடியக்காலையில் விம்பத்தை கங்கையிலோ அல்லது சமுத்திரத்திலோ கலக்கச் செய்து ஸ்நானம் செய்து விரதத்தை முடித்துக்கொள்ளலாம்.