Thursday, January 12, 2012

என் வாழ்வில் குருதேவர்

என் வாழ்வில் குருதேவர்
               அடியேன் சிறு வயதிலிருந்து இறை நம்பிக்கை நிறைந்தவன் வீதியொரக்க்கல்லை தெய்வமாக கண்டவன் எனது மூதாதையினர் இராமகிருஸ்ணமிஷனுடன் தெடர்பானவர்கள் அதிலிருந்து சிறு வயதிலிருந்து மிஷனுக்கு செல்லும் வழக்கமுடையவன் ஸ்ரீமத் சுவாமி விபுலானந்தர், ஸ்ரீமத் சுவாமி நடராஜானந்தாஜீ மகராஜ், ஸ்ரீமத் சுவாமி ஜீவநானந்தஜீ மகராஜ், ஸ்ரீமத் சுவாமி அஜராத்மானந்தஜீ மகராஜ், ஸ்ரீமத் சுவாமி இராஜெஸ்வரானந்தஜீ மகராஜ், போன்றோர் எமது குடும்பத்துடன் தொடர்பானவர்கள். அவர்களை காணும்போதெல்லாம் குருதேவரைக் காணும் உணர்வு ஏற்படும். ஏனெனில் குருதேவரை எமக்கு காட்டியவர்கள் அவர்கள். 
                       எனது சிறிய தந்தையார் ஸ்ரீமத் சுவாமி நடராஜானந்தாஜீ மகராஜ் அவர்களின் காலத்தில் ஆங்கில மொழி மூலத்தில் சிவானந்ந வித்தியாலயத்தில் கல்வி கற்றவர் அப்போது விடுதியில் இருந்துதான் கற்றவர் அப்போது சுவாமிஜீயுடன் நன்கு பழகியவர் சுவாமிஜீ சிவபுரியிலில் இருப்பாராம் அங்கு வெறும் நிலத்தில் படுத்து உறங்குவாராம் உணவுக்காக ஒருமுட்டியில் அரிசையும்காய்கறிகளையும் ஒன்றாக போட்டு உப்பின்றி அவித்து உண்பாராம். மாணவர்களின் கல்வியிலும் ஒழுக்கத்திலும் அதிக கவனம் எடுப்பாராம். அத்துடன் மாணவர்கள் உணவருந்திய பின்தான் தான் உணவருந்துவாராம் அப்படி தன்னை அர்ப்பணித்த துறவிகள் குருதேவரின் வழியில் நின்றவர்கள்.
                    எனக்கு ஸ்ரீமத் சுவாமி ஜீவநானந்தஜீ மகராஜ் அவர்களின் காலமே தெரியும் அவரும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர். ஏல்லோரோடும்  அன்பாகவும் பண்பாகவும் இனிமையாகவும்  பழகுபவர். அவருக்கு எல்லோரையும் தெரியும் நான் அங்கு செல்லும் போது கூறுவார். நீ எமது மிஷனுடன் தெடர்பான மூன்றாவது பரம்பரை என்பார். எனது தந்தையின் தந்தையார் மிஷனது கட்டட வளர்ச்சியில் சுவாமியுடன் வீடுவீடாக சென்று நிதி சேகரித்தவர் அதை என்னிடம் சுவாமிஜீ குறிப்பிட்டு உள்ளார் சுவாமிஜீயிடம் இருந்து ஒர் இலிங்கம் பெறவேண்டும் என்ற விருப்பம் நீண்டநாட்களாக எமக்கு இருந்தது. சுவாமிஜீ தலயாத்திரை மேற்கொள்ளச் சென்ற செய்தி சென்று சிறிது நாட்களுக்குப் பின் தான் கிடைத்தது. அவரின் விலாசம் பெற்று எமக்கு ரிசிகேஷத்தில்லிருந்து ஸ்படிக இலிங்கம் வாங்கி வருமாறு கடிதம் அனுப்பினேன்.  அனுப்பிய கடிதம் கிடைக்கும் போது சுவாமிஜீ சென்னைக்கு வந்து விட்டார். அன்றையத் தினம் சுவாமிஜீயும் ஸ்ரீமத் சுவாமிஜீ கமலானந்த மகராஜ் அவர்களும் அவர் சென்று தரிசித்து வந்த கைலாயாத்திரை ஒளிப் பதிவு நாடாவினை பார்வையிட சென்றிருந்தனராம். பார்வையிட்டு திரும்புகையில் சுவாமிஜீயின் கடவுக்சீட்டும் , பணம் மூவாயிரமும் தவறிவிட்டதாம். அப்போ தான் சுவாமிஜீ அத்தடைக்குக் காரணம் ரிசிகேச இலிங்கம் தான். அந்த இலிங்கத்தைப் பெற வேண்டும். இதற்குகாக சென்னையில் வாங்க முடியாது ரிசிகேஷத்தில் தான் வாங்க வேண்டும். என்ன செய்யலாம். என் சுவாமிஜீ கமலானந்த மகராஜ்யிடம் கேட்க அவர் நமது பிரம்மச்சாரிகள் அங்குள்ளனர் அவர்களிடம் கூறி ஷிசிகளின் ஆசிபொற்று கூரியர் வேவை மூலம் பெற்றுக் கொள்ளலாம் என்றாரம் சுவாமிஜீ கமலானந்த மகராஜ் அப்போது அவரிடம்; சுவாமிஜீ அதற்கான ஏற்பாட்டைச் செய்யுமாறு கேட்டு இலிங்கங்கள் கிடைத்ததும் கடவுச்சீட்டும், பணமும் கிடைத்தாகக் கூறி இது கிடைத்தற்கரியது நானும் ஓர் இலிங்கம் இதனுடன் பெற்றுவிட்டதாகக் கூறினர் சுவாமிகள் இவ் தலயாத்திரையே சுவாமிகளின் இறுதி தலயாத்திரையாக அமைந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. அந்த ஆத்மலிங்கம் எனக்கு குருதேவரே தந்த உணர்வுதான் எனக்கு இப்போதும் இருக்கின்றது. அதற்கு அபிசேகம் செய்வதற்கான காசி வாரநாசி கங்காஜலம் அன்றிலிருந்து இன்று வரை இராமகிருஷ;ணமிஷன் மட்டக்களப்பு கிளையிலிருந்தே பெற்று வருகின்றேன். முதலில் ஸ்ரீமத் சுவாமி ஜீவநானந்தஜீ மகராஜ் இடம் பெற்றேன். அதன்பின் ஸ்ரீமத் சுவாமி அஜராத்மானந்தஜீ மகராஜ், ஸ்ரீமத் சுவாமி தேஜொமயானந்தஜீ மகராஜ் இடம் பெற்றுள்ளேன்.  
ஆயிரத்திதொள்ளாயிரத்துதொண்ணூறுகளில்(1990இல்) இலங்கையில் உள்ளுரில் குழப்பமான சூழ்நிலை காணப்பட்டது. அக்காலகட்டத்தில் சில விஷமிகளின் செயற்பாட்டினால் மனம்குழம்பியநிலையில் இருந்த போது மனநிம்மதியடைய எனது தந்தையார் குருதேவரின் வாழ்கை வரலாறு நிரம்பிய 'அமுதமொழிகள்' என்னும் நூல் தொடரை வழங்கி இது உனக்கு நிம்மதிதரும் என்றார். எனக்கு புத்தகம் வாசிப்பதென்றாலே பெரும்பாடு அப்போதைய நிலையில் வேறுவழியில்லை வாசிக்கத்தான் வேண்டும். உண்மையிலேயே அது அமிதம்தான் எனது ஆன்மீகப்பாதைக்கு வித்திட உரமாகவிருந்தது பூவில் வண்டு தேன் எடுப்பது போன்று அதிலிருந்து நீங்க முடியவில்லை தனியாத தாகமாகவே இருந்தது நான் வாசித்த முதல் நூலும் அதுதான் இன்றைய எழுத்ஆர்வத்தை தூண்டியதும் அதுதான். புத்கங்கள் எல்லாவற்றையும் வாசித்து தேர்ந்த பின் ஒருநாள் இந்திய சிற்பாய்கள் எனது வீட்டை புடைசூழ்ந்து என்னைக்கைது செய்து இராணுவ முகாமுக்கு அழைத்து சென்றனர். அப்போது என்னுடன் எனது தந்தையாரும் வந்துவிட்டார் .அங்கு படைத்தளபதியாக இருந்தவர் பஞ்சாப்பை சேர்தவர் அவர் என்னிடம் நான் படித்த பாடசாலையை வினாவினார் அப்போது நான் இராமகிஷ;ணமிஷன் சிவானந்தவித்தியாலையம் என கூறி நான் சிவானந்தியன் என்றேன் அப்போது அவர் தானும் பஞ்சாப்பில் இராமகிருஷ;ணமிஷன் பாடசாலையில் தான் தானும் கற்றதாக கூறி எனது தந்தையாருடன் இராமகிருஷ;ணரின் இலக்கியம் பற்றி உரையாடி என்னில் இருந்த சந்தேகத்தை தீர்த்து பொறாமையால் குற்றம்காணச் செய்த முறையற்ற முறப்பாடக இனம் கண்டு என்னை விடுலை செய்தனர். ஆக்காலத்தில் கைது செய்தால் விடுதலை செய்வது என்பது முயல்கொம்புக்கு ஒப்பானது ஆனால் உண்மைக்கு குருதேவர் துணைநிற்பார் என்பது இங்கு உறுதியானது. அதன் பின் எனது நாட்டம் எல்லாமே ஆன்மீகமாக இருந்தது. ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரித்து ஆராய்ந்து ஆய்வுசெய்து அதன்வழி நிற்கும் அவாவும் அதிகரித்ததே வேதத்தை கற்கவேண்டும் அதனுடன் தொட்பானவர்களுடன் உரையாட வேண்டும் அது தொடர்பான புத்தகங்ளை வாசிக்க வேண்டும் என்று எனது வாழ்கையின் போக்கே மறியது
ரிஷிகேச இலிங்கம்
 இரண்டாயிரத்து இரண்டிலும்(2002ஆண்டும்) பின் இரண்டாயிரத்து எட்டிலும் (2008ஆண்டும்)இருமுறை தென் இந்தியாவுக்கு தலயத்திரை மேற்கொண்டு சித்துப்பெற்றவர்கள் சமாதிகளை தரிசனம் செய்து வந்தேன் மைலாப்பூர் இராமகிருஸ்ண மிஷன், போகர் சமாதி, பாம்பாட்டி சித்தார் சமாதி, கருவூர் சமாதி, பட்டனத்தடிகள் சமாதி,  ஸ்ரீ ரமணமகரிஷி சமாதி, ஸ்ரீ அரவிந்தர் சமாதி, பாதளலிங்கேஸ்வரர், பஞ்சலிங்கம்கள்(பஞ்சபூதத் தலங்கள்); மதுரைமீனாட்சி, காஞ்சி காமாட்சி, திருவாலங்காடு, பஞ்சசபைகள், ஆறுபடைவீடுகள், சீர்காழி, கும்பேஸ்வரர் கும்பகோணம், சுசிந்திரம், இரமேஸ்வரம், சமயபுரம், கண்ணியாகுமரி, கபாலிச்வரர், திருவெற்றியூர் தியாகராஜ சன்னிதி, திருநீர் மலை, வேக்காடட்டு கருமாரி, மாங்மாட்டு காமாட்சி, சேக்கிளார் கோயில், திருதிருவல்லிக்கேணி பார்த்தசாரதிகோயில், ஸ்ரீரங்கம், பிரம்மரிஷி மலை, கல்லளனகர், மேல்மருவத்தூர் ஆதிபராசக்திகோயில், தாயுமானவர், உச்சிப்பிள்ளையார், திருநெல்லாறு, வைத்தீஸ்வரா, திருக்கடவூர் அபிராமி அமுதகடேஸ்வரர் அஞ்சநேயர், குன்றத்தூர் முருகன் எனபல இடங்களுக்கும் தலயாத்திரை மேற்கொண்டேன். 
  முதல் முறை மேற்கொண்டு இலங்கை திரும்பி மூன்று வாரத்தில் குருதேவரின் திவ்விதரிசனம் கிடைத்தது அதில் ஸ்ரீமத் சுவாமி ஜீவநானநர்தஜீ மகராஜ்யும் ஸ்ரீமத் சுவாமி அஜராத்மானந்தஜீ மகராஜ்யும் குருதேவரை கைத்தாங்களில் என்னிடம் அழைத்து வந்து குருதேவரின் வலதுகை பெருவிரலை புருவமத்தியில் வைத்து தீட்சை தருவதாக அதிகாலை நான்கு முப்பது மணியளவில் சொற்பனதில் கண்டேன். அந்த சொற்பனம் எனக்கு நிஜத்தில் நிகழ்ந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. அதையடுத்து பல மகரிஷிகளின் தரிசனமும் கிடைத்தது. 2003 புரட்டாதி மாதம் 26ஆம் திகதி அன்று மாளய பட்ச்ஷஅமாவாசை முடிந்து பிதமை ஆரம்பிக்கும் ஆதிகாலை 5.45 மணியளவில் (இலங்கை நேரப்படி) தென் முலையில் வானமும் பூமியும் தெட்டுமளவு சிவன் நின்று ஒளிப்பிளம்பாக மாறி ஆக்ஞா சக்கர வளியாக எனனுள் புகுந்தார் சிறிது நேரம் எனது உயிரற்ற நிலையில் மயங்கி மீண்டும் புத்துணர்வு பெற்றதை நான் உணர்ந்தேன். அவ்வேளை அவரைத்தவிர எதுகுமே என் கண்களுக்குத் தெரியவில்லை.
    எனவே எனது சொந்த அனுபவத்தையே பகிர்ந்துள்ளேன். குரு என்பவர் அஞ்ஞானத்தை போக்கி மெய்ஞானத்தை அருளும் அமுதசுரபி என்னைப் பொறுத்தவகையில் குருதேவர் எனது ஆன்மீகவாழ்க்கைக்கு ஒளியூட்டிய கற்பகதருவென்றே என்னுள் உணர்வு உணர்த்துகின்றது.