Monday, February 26, 2018

திருவண்ணாமலையில் எனது அனுபவம்"

திருவண்ணாமலையில் எனது அனுபவம்"
                 'அண்ணாமலை தொழுவார் விணை வழுவா வண்ணம் அறுமே' அண்ணாமலையை நினைத்தாலே முத்தி. காசியில் இறந்தால் முத்தி என்போன் சான்றோர் அப்படிப்பட்டது திருவண்ணாமலை பஞ்சபூத கோயில்களில் அக்னி உரியது. இறைவன் அருவமாக இருந்து அருஉருவாகி தொன்றி அடியாக்கு அருள் புரிந்த இடம் அண்ணாமலை. அணவத்தை அடக்கி இறைவனை அறியும் அறிவு தந்த இடம். அது மட்டு மல்ல அருணகிரியை எமக்கு தந்த இடம் அண்ணாமலை. அருணாசலம் என்ற பேரை கேட்ட உடனேயே ஞான தாகத்தை ஸ்ரீ ரமணமகரிஷிக்கு ஏற்படுத்திய மலை அது அப்படிப்பட்ட மலையின் குறிப்பிடகக்கவர் ஸ்ரீ ரமணமகரிஷி அவர்கள்
                             ரமணமகரிஷி மிருகங்களிம் அன்பு செலுத்துவதுடன் அன்னியொன்யமாக பழகி அவற்றின் தேவைகளை அறிந்து செயல்படுவதுண்டு ஒருமுறை அவரிடம் ஒருவரால் மிகவும் பாதிப்புக்குள்ளான குரங்கை அவர்களின் இனத்தவர்கள் மகரிஷியிடம் அழைத்து வந்து விவாரணம் கேட்ட போது. முயற்சிகள் செய்தும் முயற்சிகள் வெற்றி அடையவில்லை. இதனால் இந்த குரங்கு இறக்க நேந்தது. அதன் பின் இந்த காரணகாரியத்துக்கு காரணமானவர் இந்த குரங்கின் நிலையே எய்திய போது. அவர்களும் மகரிஷியையே நாடினர் அவருக்கும் குரங்கின் நிரலையே ஏற்பட்டது. முற்பகல் செய்யின் பிற்பகல் பிழையும் என்பதை இச்சம்பவம் நினைவு கூறுவதுடன் தான் செய்ததை தானே அனுபவித்தால் தான் விடுலை என்பதையும் மகரிஷி புரியாமல் புரியவைத்தார். மகரிஷி பார்வையால் ஞானத்தை கொடுத்தவர். அவரின் செயல்பாடுகள் வேத உபநிடதங்களாக இருந்தது. வாயால் பேசாது அகக்கண்னை திறந்தவர் அவர்.
                          எனது சொந்த அனுபவத்தை இங்கு பகிர்வது பொருத்தமாக இருக்கும் 2002 ஆண்டு எனது தென் இந்திய தலயாத்திரையின் போது அண்ணாமலை தரிசனம் பிரதானமாக இருந்தது அப்போது அடியேன் மகரிஷியின் சமாதியை தரிசிக்க ஆவல் கொண்டு அங்கு சென்றேன். எங்கும் கானாத அமைதி குண்சி போட்டாலும் சத்தம் கேட்கும் அளவு. என்னை மறந்தேன் ஆத்மா பேசுகின்றது. இந்த உணர்வு வெறு எங்கும் காணவிலை. மதியம் 12 மணிக்கு மணி அடித்தது பறவைகள் விலங்குகள் உணவுக்காக அங்குவருகின்றது. அவைகளும் உணவுக்கா அமைதியாக இருப்பதை பார்த்தேன். அப்போது எனது மகள் குரங்கு ஒன்றுக்கு விஸ்கிட் பக்கேற் ஒன்றைக் கொடுத்தபோது அதை பெற்றுக்கொள்ளாது பொறுமையாக இருக்கின்றது.பக்கேற்றை உடைத்து ஒவொன்றாக கொடுத்த போது இதை பெற்று உண்டதை நாம் பார்த்தோம். பழனியில் குரங்கு பித்தலாட்ட ஆடியது எங்களை அதுமட்டு அல்ல சென்ற எல்லா இடங்களிலும். ஆனால் இங்கு எப்படி அமைதி அங்கு இருக்கும் தெய்வீக அலைதான். மிருகங்களே அப்படி என்றால் மனிதன் எப்படி மாறுவான்? அப்படி மகிமையுள்ள இடம்தான் ரமணாச்சிரமம். அங்கு சிவன் நடனமாடும் பூமி அது திருமூலர் சிவனுக்கு இரண்டு தினங்கள் முக்கியமானது. ஒன்று செம்மீன் அடுத்தது நுண்மீன் என்று அதில் செம்மீன் என்பது திருக்காத்திகை தினத்தில் அருஉருவத்திருமேனியான ஒளிபிழம்பாக தோன்றி படைத்லுக்கும் காத்தலுக்கும் அகம்காரத்தை ஏற்படுத்தி அடக்கிய நாள். அப்பிழம்பே திருஅண்ணாமலை அடுத்தது திருவாதிரை நாள் அன்று உருவத்திருமேனி எடுத்த திருநாள். மார்கழிதிருநாள் அது மார்+ கழி= மார்கழி என்பது இருள் கழி என்பது கழிந்த அல்லது அகன்ற நாள். ஆணவம் அடங்கி ஆண்டவனை அறிந்த நாள். இது சிதம்பரம் இறைவன் உருவத்திருமேனி கொண்ட நாள்.
                                        2009 ஆண்டில் தலயாத்திரை சென்றபோதுஇராமேஸ்வரத்திலிருந்து திருவெண்ணாமலைக்கு வந்த போது அதிகாலை 3.30 மணி இருக்கும் நாங்கள் பாதையில் வந்து கொண்டு இருக்கின்றோம். எங்களுடன் வந்த அனைவரும் துயின் கொண்டு விட்டனர் அப்போது வாகன ஓட்டிக்கு துணையாக நான் மட்டும் நித்திரை செய்யவில்லை. கிரிவல பாதையை அடைந்தபோது. காவிவஸ்திரம் தரித்த ஒருகையில் கமண்டலமும் மறுகையில் நீண்ட தடியுடன் ஆதிசங்கரரின் தோற்றத்தில் ஒருவரை கண்டேன் எனக்கு திடீரென அதிச்சியாக இருந்தது.அந்த நேரத்தில் சிவன் நடமாடுவதாக மகரிஷி கூறிஇருந்தாதக கேள்விப்பட்டுள்ளேன். ஓட்டி இடம் கேட்டேன் முன் செல்பவரை தெரிகின்றதா என .அவர் எனக்கு ஒன்றும் தெரியவில்லை என்றார். ஆனால் எனக்கு அவரின் காட்சி தெரிகின்றது. நிறுத்து வண்டியை என்றவுடன் வண்டியை நிறுத்த மறைந்துவிட்டார். அப்போது எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அப்டிப்பட்ட இடம் தான் திருவெண்ணாமலை
                           ஸ்ரீ ரமணமகரிஷி வேதத்தின் வடிவம் வேதசாரம் சாட்சாத் தச்சணமூத்தியே கல்ஆலமத்தின் கீழ் சின்முத்திரை மூலம் நால்வேதங்களும் எவ்வாறு உருவாகியதோ அதைபோல நயண பார்வையே அவரை அணுகியவருக்கு வேதத்தை உணத்தியது. விருபாட்ச குகையில் இருந்தபோது மகா ஆலஇலையை கண்டு பின் தொடர்ந்தபோது குழவித்தாக்குதலுக்கு உள்ளாகி தொடமுடியாது போன போது அருணை மலையே தட்சணமூத்தியாக கண்டவர் மகரிஷி. ஜோதியாய் ஜோதியின் உள் உள்ள சுடரை ஞாணமாய் கண்டவர் மகரிஷி பத்தனின் வேண்டுகோளை ஏற்று அண்ணாமலையில் இருக்கையில் திருவெற்றியூரில் காட்சி கொடுத்தவர் மகரிஷி அவருடைய சமாதியை இருமுறை தரிசிக்க கிடைத்தது அடியேன் செய்த தவப்பலனே அது 'விட்டகுறை தெட்டகுறையே' ஆண்மீகத்தாகம் கொண்டு அலைவர்களுக்கு அரணாய் இருந்து பார்வையில் உள்ளத்தில் அருவியாகி பிரவாகம் எதுத்து தணித்க வைத்தவர் மகரிஷி. 'நான் யார்? என்பதன் மூலம் ஆன்மாவே உன் குரு என்பதை உலகுக்கு எடுத்துக்கூறிவர் மகரிஷி. பரமஹம்சர் என்பதற்கு இலக்கணமாக அமைந்தவர் மகரிஷி

No comments:

Post a Comment