Sunday, March 26, 2017

மனிதனின் குணங்களை மூன்றாகப்பிரிக்கின்றனர் அவை சாத்வீகம், தாமதம், இராஜதம்

மனிதனின் குணங்களை மூன்றாகப்பிரிக்கின்றனர் அவை சாத்வீகம், தாமதம், இராஜதம்

மனிதனின் குணங்களை மூன்றாகப்பிரிக்கின்றனர் சித்தர்கள் அவை சாத்வீகம், தாமதம், இராஜதம் என கூறுகின்றன். சாத்வீகம் என்பது சாதுவான குணமான நேரான எண்ணங்களால் உருவானவையாகவும் தாமதம் எதிரான எண்ணங்களால் உருவானதாகவும் இராஜதம் நான் என்ற அகங்கார மமதையால் உண்டானதாகவும். கொள்ளப்படுகின்றது. இவற்றுக்கு காரணம் விதி என்பதும் உண்டு. ஏன்னெனில் ஆக்கம் நடைபெற வேண்டடில் அதற்கு முயற்சி வேண்டும் முயற்சி இருவகையில் அமையும் ஒன்று மனுக்குலத்தின் நன்மை மையமாகக் கொண்டது இது தன்னலமற்ற பொதுநலமே மற்றையது நான் சாதிக்க வந்தவன் என்னால் எல்லாம் முடியும் என்பது இங்கு சிந்திக்க வேண்டியது தான்மட்டும் வாழ்வதற்கே எல்லாம் மற்றவார்களுக்குக்கு இல்லை என்பது தான் இங்கு பிரச்சனை. இதில் முதலாவதை நல்ல ஆணவம் என்றும் மற்றையதை மமதை என்றும் தத்துவவியளாளர்கள் குறிப்பிடுகின்றனர். இதில் இரண்டாவது வகை தன்னைவிட மேலான எண்ணம் என்றும் மற்றையது தன்னை விட கீழான எண்ணம் எனவும் குறிப்பிடுகின்றனர் இவை இரண்டு மனித மனதில் தாக்கம் செலுத்த வல்லவை இவை இரண்டு சமநிலையை மாற்றி பிரச்சனையை தோற்று விக்கக்கூடியவையே. நேர்மையான உழைப்பாக இருந்து தனக்கும் தன்னைச்சாந்தவர்களுக்கும் உண்மையில் உதவி தேவையானவர்;களுக்கும் என உழைப்பதே சிறந்தது. ஊழைப்பில் தன்னலம் இருக்கத்தான் செய்யும் ஆனால் எல்லாம் தனக்கு மட்டும் என்பது இல்லை. அதிலும் சிலர் இறைவன் தந்தது என்னை அனுபவிக்கத்தான் என்ற அறியாமையில் முழ்குபவர்களும் உண்டு. அதுவல்ல உண்மை மற்றவர்களுக்கு நலிவடைந்த மக்களுக்காவே அவை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். ஆதனை தனதாக்கினால் அது கர்மா நமது அடுத்த பரம்பரைக்கு இட்டுச்செல்லும் எச்சம் அது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
எமது உணவுப்பழக்க வழக்கமும் எமது குணங்களை மாற்றி அமைக்க வல்லவை. சாத்வீக உணவு வகைகள் சாத்வீக போக்கை எற்படுத்த வல்லவை. ஆசைவ உணவுகள் தாமதகுணத்தை எற்பதுத்த வல்லவை. இவை மிருககொழுப்பாக இருப்பதால் முதலில் உப்பாக மாறி அவை கரைக்க முடியாத கொழுப்பாக மாறி உடலில் மிருகத்தன்மையினை ஏற்படுத்தி வஞ்சகம், சூது, பொறாமை என்பவற்றை மூலம் மனிதனை மனிதத்துவம் அற்ற மிருமாக்கி விடுகின்றது. நாம் கடவுள்ளாக தேவையில்லை ஆகக் குறைந்தது மனிதனாக வாழ்ந்தால் போது.
ஓம் சிவசிவ சம்போ ஹரஹர சம்போ மஹாதேவ சம்போ சம்போ மஹாதேவ ஓம்

புராணங்களில் காணப்பட்ட திரிமூர்த்தகள் ஏற்ற இறக்கங்கள் பேதங்கதொடர்பாக பஞ்சாங்கம் குண்டையன் கேட்ட கேள்விகளுக்கு சித்தூர் ஜில்லா அதாலத்துகோட்டு தீர்ப்பின் போது நடைபெற்ற விவாதத்தில் மார்க்கசகாய ஆச்சாரியாரல் கொடுத்த பதில்கள்.

புராணங்களில் காணப்பட்ட திரிமூர்த்தகள் ஏற்ற இறக்கங்கள் பேதங்கதொடர்பாக பஞ்சாங்கம் குண்டையன் கேட்ட கேள்விகளுக்கு சித்தூர் ஜில்லா அதாலத்துகோட்டு தீர்ப்பின் போது நடைபெற்ற விவாதத்தில் மார்க்கசகாய ஆச்சாரியாரல் கொடுத்த பதில்கள்.
மார்க்கசகாய ஆச்சாரி எமது வியாசபகவான் திரிமூர்திகளையும் எந்தப்புராணத்தில் இகழ்திருக்கின்றார்? என கேட்கப்பட்ட கேள்விக்கு.
சிவபுராணத்தில் 'ஆதிசக்தி மயம் பீஜசக்தி மயம்சிவ சிவசக்தி மயம்விஷ்ணு சர்வம்விஷ்ணு மயம்ஜகத்' இதன் கருத்து ஆதிசக்தியினிடத்திலிருந்து ஓருபீஜம் பிறந்தது. அதனுடைய வல்லமையினாலே சிவன் பிறந்தார். சிவனிடத்தில் விஷ்ணு பிறந்தார். இவ்விஷ்ணுமயம் சர்வலோகம் முழுவதும என்பதினால் சிவன் விஷ்ணுவுக்கு தந்தை அல்லவோ?
'மயோனிர்ஹர்ஹத்ப்ரம்ஹஸ்பின்கற்பேகதாம்ஹம்' இதன் கருத்து: என் யோனியில் மஹாப்ரம்மம். அதிலிருந்து நான் உருவாகி விடுகின்றேன் என்பதாம்.
'குணேப்யசேஷாப்ய மாணேப்யத்iயேப்தேவா பிஜக்ஞீறே ஏகமூர்திதரயோபாகா ப்ரம்மாவிஷ்ணுமஹேஸ்வர' என்பதின் கருத்து: ராஜச தாமத சாத்வீக குணங்களினால் ஆதிமூர்த்தியும், அந்த ஏகமூர்த்தியினால் திரிமூர்த்திகளும் தோன்றியது என்பது. இங்கு இவ்விரண்டு சாஸ்திரங்களில் ஒன்றில் ஏகமூர்தியானவர் ஆதியிலே யாதொரு குணமும் இல்லாமல் ஏகமாயிருந்தார் என்றும், மற்றுமோர் சாஸ்திரத்தில் முற்குணங்கள் உள்ளவரானார் என்றும் சொல்லி இருப்பத்னாலே அநேக ஆசேஷபனைகளுக்குpடமாயிருக்கின்றதல்லவா? அது எப்படி என்பீரோ? அந்த மூர்த்தி குணமில்லாதவர் என்றால் அவருடைய பரத்துவ மகத்துவத்துற்குக் குறைவும், அவரது பூரணத்தன்மைக்குப் பின்னமும் ஆகின்றதல்லவோ! ஏனென்றால் ஓரு சாஸ்திரம் நிர்க்குணமென்றும், மற்றொரு காஸ்திரம் முக்குணம்ரென்றும் சொன்னால் அது மகாபேதமல்லவோ? அதை யோசித்தால் தெரிகின்றதல்லவோ?
மச்சபுராணம் இந்த ஆதிமூலத்துக்குரிய திரிகுணாத்துமாவின் உற்பத்தி காரணங்களைக் குறித்துச் குறித்து இருக்கின்ற சுலோகங்களை உமக்கு விரிக்க வேண்டுமாகில், அவை அனேகமாக இருப்பதால் மற்றைய புராணங்களில் இருக்கின்ற வழுக்களில் சிலவற்றை மாத்திரம் இங்கே சுருக்கமாக காட்டுவேன். அவைகளில் ஒரு புராணத்திலே ஆதிசக்தியில் நின்று இந்ததிரிமூர்த்திகள் தோன்றினார்கள் என்றும். அந்த ஆதிசக்தி இவர்களை மோகித்துத் தனக்கே இவர்களைப் புருசர்களாக்கிப் பாவித்துக்கொண்டார்கள் என்றும். பகவதத்திலும் இன்னும் சிலபுராணங்களிலும் விஷ்ணுவுடைய நாபியிலே ஒருதாமரை தோன்றி அதிலிருந்து ப்ரம்மா உற்பவித்தார் என்றும். சொல்லப்பட்டிருக்கின்றது. அது அப்படி என்றால் ஆதியிலே ப்ரம்மா முந்தி தண்ணீரை சிருட்டித்துத் தன்னுடைய இந்திரியத்தை அந்ந தண்ணீரில்விட்டார். அது முட்டையாகி மிதந்து, அந்த முட்டையை முற்கண்ணனாகிய சுpவபொருமான் தோன்றி உடைத்தார். அந்த ஷிணமே குற்றமில்லாத பஞ்சபூதங்களும் உண்டாகினவாம்.
மற்றொரு புராணத்திலோ ஆதிசக்தியிலிருந்து ஒரு விந்து தோன்றி அதிலிருந்து சிவன் தோன்றினார் என்றும், மச்ச புராணத்திலே ப்ரம்மாவிலிருந்து சிவன் தொன்றினார்ரென்றும். இன்னம் இப்படிப் பலவிதஞ் சொல்லி இருப்பதால் எது மெய் எது பொய் என்பதை யார் கிரகிக்கக்கூடும்? இதனால் சகலமும் பொய் என்றே தெளிவாய் விளங்குகின்றது.
'ததோசிருஜத்வாமதேவம் திரிபுண்ரவாதாரிணம்'
இதன் கருத்து: ப்ரம்மம் திரிபுண்டதாரியென்கிற வாமதேவனை உண்டாக்கிகினானென்பதே.
நரதபுராணத்தில் நாராயணனுடைய வலது பக்கத்திலிருந்து ப்ரம்மா தோன்றினாரென்றும் இடது பக்கத்திலிருந்து விஷ்ணு தொன்றினார் என்றும், மத்தியில் சிவன் தோன்றினார் என்றும் சொல்லிருக்கின்றது.
இலிங்கபுராணத்தில் இவ்வுலக அண்டத்திலிருந்த சிவனானவர் ரூபீகரித்துப் பிறகு தனது இடது பக்கத்திலிருந்து விஷ்ணு இலக்குமி என்பவர்களையும் தனது வலது பக்கத்திலிருந்து ப்ரம்மா சரஸ்வதி என்பவர்களையும் உண்டாக்கினர் என்றும் சொல்லிருக்கின்றது. இப் புராணத்திலேயே மற்மோர் பக்கத்தில் ப்ரம்மா சவிருஷ்டிக்கிரியை முடிக்கச் சக்தியில்லாமல் கண்ணீர் விட்டெழுந்தானென்றும், அந்த கண்ணீர்களில் ருத்திரன் தோன்றி அந்த திருஷ்டிக்கிரியைத் தானும் முடிக்கக்கூடாமல் வருந்துவதை அவன் தகப்பனாகிய ப்ரம்மா கண்டு அவனுக்குத் துணை செய்ததாகவுஞ் சொல்லியிருக்கின்றது.
மார்க்கண்டபுராணத்தில் லட்சுமியிலிருந்து விஸ்ணுவும், காளியிலிருந்து சிவனும், சரஸ்வதியிலிருந்து ப்ராமாவும் தோன்றினார்களென்றுஞ் சொல்லிருக்கின்றது.
வராகபுராணத்தில் திரிமூர்த்திகளிலிருந்து சக்தி தோன்றி அந்த சக்தியிலிருந்து லட்சுமி, காளி, சரஸ்வதி மூன்றாயினார்கள் என்றும் இப்படிபலவிதமாகச் செல்லிய பலபுராணங்களில் எதை மெய் என்று சொல்லக்கூடும்? இவ்வித மாறுபாடுகள் அனேகம் வியாசர் முதலிய ரிஷிகள் தங்கள் புராணங்களிற் கற்பனை செய்திருக்கின்றபடியால் இதை மெய்யென்று நம்புகிறவர்களைப் பேதைகளெனறே சொல்லப்படும்.
'சர்வவ்யாபீ'பகவான் தஸ்மாத்ஸர்வ கதஸ்சிவ'
இதன் கருத்து: அந்த பகவானென்னப்பட்ட சிவன் சர்வவியாபியபகி எவ்விடத்திலும் நிறைந்திருக்கின்றான் என்பது பகவதத்தில் இதற்கு முழு விரோதமாயிருக்கின்ற சுலோகத்தைக்கேளும்
'பவவ்ரததாயேசா ஏசதாசசமநோவரத:
பாஷாண்டின: தேபவந்த சஸ்சாஸதி;ந்பரிபந்தன:
முழுசஷீவோகோரரூபந த்வாபூதபதிர்நதா:
நாராயண பளாசாந்தா பஜந்திஹ நசூயவ:
இதன் கருத்து: சிவனைப் பூசித்துத் தியானித்தவர்களைப் பாஷாண்ட் பதிதர்களென்றும், மோசஷம் அடையார்களென்றும் நாராயணனைத் தியானிப்பவர்கள் மோசஷத்தை அடைவார்கள் என்றும் சிவனை இகழ்ந்தும் ஹரியைப் புகழ்ந்து பேசியிருக்கின்றது பதுமபுராணத்தில் சிவனை இகழ்ந்திருக்கின்றது.
'விஷ்ணுதர்ஸனமாத்னே சிவத்ரோஹப்ரஜாயதே
சிவத்ரோஹசநீதேஹோ நரகம்யாந்த்தி தாருணம்
தஸ்மாத்தப்விஷ்ணுநாமாபி நவக்தவ்யகதாச' இதன் கருத்து: சிவத்துரோகஞ் செய்து விஷ்ணுவைத் தரிசித்தால் சிவன் உக்கிரங்கொண்டு நரகத்துக்காhக்கு வான். ஆதலால் விஷ்ணுவினுடைய பெயரை உச்சரிக்கலாகா என்பதாம். இதிலே சிவனைப் புகழ்ந்தும் விஷ்ணுவை இகழ்ந்தும் இருக்கின்றதல்லவா? மேற்படி புராணத்தில் நிந்தையாகிய தந்திரவிந்தை சுலோகத்தைக்கேளும்.
இதிலே சிவனைப் புகழ்ந்தும் விஷ்ணுவை இகழ்ந்தும் இருக்கின்றார்கள் அல்லவா? மேற்படி புராணத்தில் நிந்தையாகிய தந்திரவிந்தை சுலோகத்தைக்கேளும்.
'யஸ்து நாராயணம்தேவம் ப்ரம்ஹருத்ராதி தேவதா:
சமமந்வைர்நிரொசேஷதா ஸபாஷாண்டிபவேத்பதா:
திரிமந்த்ரபகுமோக்தேநா ப்ரம்ஹணய்யேப்யவைஷ்ணவ:
நஸ்பஷ்டவ்யாநவக்தவ்யா நத்ருஷ்டவயா கதாசந:'
இதன் கருத்து: எவனொருவன் ப்ரம்மா உருத்திரனுக்கு நாராயணனைச் சமமென்று சொல்லுகிறானோ. அவன் என்றென்றைக்கும் பதிதபாஷாண்டனாவானென்றும் லட்சுமி மந்திரஞ் செபிக்கின்ற விஷ்ணு பக்தாளாகிய வேதியர்களைத் தூஷிக்காமல் ப்ரம்மக்கியானமுள்ளவரென்று போற்றிவாழ்த்திப் பணியவேண்டியது. கேட்டீரோ பஞசாங்கம் குண்டையரே சிவனை நீக்கி விஷ்ணுவைப் போற்றிப் புகழவேண்டுமமென்றும். விஷ்ணுவை நீக்கிச் சிவனைத் துதிக்கவேண்டும்மென்றும், விஷ்ணு பக்தாளைக் கண்ணாலே பார்க்கவும், தொடவும்படா தென்றும், பேசக்கூடாதென்றும், அவர்அவர்களுக்கேற்றபடி புராணங்களைக் தற்பித்த உங்கள் முன்னோர்களின் புத்தீயினத்தை என்னென்று புகழ்வேன்.
'அந்யதேவம்பரத்வேநா வாந்த்யக்ஞான மோஹிதா:
நாராயணஜகந்நாதா தேவபாஷாண்டி நஸ்மிருதா:'
இதன் கருத்து: ஜகநாதனாயிருக்கின்ற நாராயணனைப் பாக்கிலும்ட முக்கியமாயிருக்கின்ற அந்நியதெய்வமும் உண்டெண்றும் சொல்லுவார்கள் அறிவீனரும், வஞ்சகரும், பதிதபாஷாண்டரும், பாவிகளுமாவார்கள்.
'ரமதேவோமஹாதேவோ விஜ்ஞேயஸ்துமஹேஸ்வர:
நதஸ்மதித்பரங்கஸ்சித்பதம்சமதிகம்யதே'
இதன் கருத்து: மஹேஸ்வரனுக்கு மேலானவஸ்து ஓன்றுமில்லை யென்பதாம். இதில் சிவனைப் புகழ்ந்திருக்கின்றது.
'வாசுதேவம்பரித்யஜ்ஞ யேன்யதே வமுபாசதே
த்ருஷிதோஜாந்நதிதீரே கூபம்நகதிதுர்மதி:'
இதன் கருத்து: வாகுதேவனென்னப்பட்ட விஸ்ணுவை விட்டு விட்டு அந்நிய தேவனை வணங்குகின்றவன் தாகமடைந்த மதியீனனாவான். அவன் கங்கை நதியின் கரையில் உட்கார்ந்து கிணற்றை வெட்டுகின்றவனுக்கு சமமாக எண்ணப்படுவானென்பதாம். இதிலே விஷ்ணுவைப் புகழ்திருக்கின்றது.
இவ்விதமாகவே உங்கள் புராணங்கள் எல்லாம் சிவனை இகழ்ந்தும் விஷ்ணுவை புகழ்ந்துமிருப்பதால் ஒன்றுகொன்று ஒவ்வாமல் மாறுபாடாயிருப்பதென்பதற்கு மெற்சொல்லிய சில திருஷ்டாந்தமே போதுமென்றேண்ணுகின்றேன்.
இப்படி மார்க்கசகாய ஆச்சாரி வாதிட்டார். இவ்வாறன குலறுபடிகளால் மக்களிடத்தில் ஏற்பபட்ட விரோதச்செயல்பாட்டை சீர்செய்யவே கர்நாடகா மாநிலத்தில் மைசூர் மாவட்டம் சிருங்கேரி கிராமத்தில் விஸ்வப்ராமண குலத்தில் அபுபணஸரிஷி கோத்திரத்தில் ஸ்ரீ ஞானபோக விஸ்வரூபாச்சாரி தம்பதியருக்கு கி.பி.1725-ம் ஆண்டு மகனாகப் பிறந்தர் 'ஆதிசங்கரர்';. அவரே'|ண்மதஸ்தாபகர்'; என்று போற்றப்பட்வர்.
புராணங்கள் இதிகாசங்கள் வேதத்தில் சொல்ப்பட்ட விடையங்களை இலகுவாக மக்களுக்கு விளங்கக்கூடியதாக அமையும். சிறிய உண்மைகளை விரித்துக்காட்டுக் பூதக்கண்ணாடியே புராணஇதிகாசங்கள் ஆகும். அதுவே குழப்பத்துக்கு காரணமாக அமைந்தால் எப்படி வேத உண்மைகளை மக்களுக்கு கொடுப்பது. வேதங்களை விளங்கும் ஆற்றல் மகரிஷிகளுக்கும் சித்தம் தெளிந்த சித்தர்களுக்குமே முடியும். அதை ஆகமங்களாகவும் வகுத்து இன்னும் இலகுபடுத்த உபநிடதங்களாக வகுத்து இன்னும் எழிமையாக்கியதே புராணஇதிகாசங்கள். இவற்றை இப்படி குழப்பினால் எப்படி பாமரமக்கள் இதைப்புரிந்து கொள்வது. ஒரு ப்ரமம்த்தில் இருந்து வந்தால் எப்படி வேறுபடுவது. பரப்ரம்மம் எங்கள் எல்லோரிடத்தும் ஆத்மாவாக இருக்கின்றது அதற்கு எல்லாமே தெரியும். 'பம்பின் கால் பாம்பறியும்' என்போர் சான்றோர்.

சித்தூர் ஜில்லா அதாலத்துகோட்டு தீர்ப்பு

ஓம் விராட் விஸ்வப்ரம்மனே நம:
சித்தூர் ஜில்லா அதாலத்துகோட்டு தீர்ப்பு
சித்தூர் ஜில்லா அதாலத்துகோட்டு தீர்ப்பு என்பது 1818ஆம் ஆண்டில் சென்னைப்பட்டணத்தைத் சேர்ந்த தித்தூர் ஜில்லா சதுர்ப்பேரில் பண்டிதர் மார்க்கசகாய ஆசாரிக்கும் பஞ்சாங்கம் குண்டையனுக்கும் பஞ்சாயத்தார் முன்னிலையில் பிராமணீகத்தைக் குறித்து நடந்த சம்பாஷணை. இச் சம்பாஷணைக்கு காரணம் சித்தூர் ஜில்லாவைச் சேர்ந்த கதுர்ப்பேரில் விஸ்வப்ரம்ஹவம்சத்தில் பண்டிதர் மார்க்கசகாய ஆச்சாரியார் முதலியவர்கள் நடாத்துகின்ற விவாகஸ்தம்பம் பிரதிஷ்டை வைபவத்தில் பஞ்சாங்கம் குண்டையன் முதலியன பிப்ராள் கும்பல் கூடி வந்து ஆசேஷபனை செய்தமையினால் ஏற்பட்ட விபரீதம். சம்பாஷணையை ஓவ்வொன்றாகத் தருகின்றேன். அவை கேள்வி விடையாக தொடர்கின்றது. இந்த சம்பாஷணையில் பஞ்சாங்க குண்டையன் கேட்ட கேள்விக்கு வேதசுருதி பிரமாணமாக பண்டிதர் மார்க்கசகாய ஆசாரி விராட் விஸ்வப்ரம்மம் தொடர்பாக அளித்து விடைகள் வருமாறு.
1. பஞ்சாங்க குண்டையன்:- ஓ மார்க்கசகாய ஆச்சாரி! இந்த அண்டபுவன சராசரங்கள் யாவற்றையும் படைத்தவர் யார்?
பண்டிதர் மார்க்கசகாய ஆச்சாரி:- ஓமெனும் பிரணவ ஓங்காரமாய் ஒலிக்கா நின்ற விராட் விஸ்வப்ரம்ஹமே அண்டபுவன சராசரங்கள் யாவற்றையும் படைத்தவர்
2. பஞ்சாங்க குண்டையன்:- அந்த விராட்புருஷ விஸ்வப்ரம்ஹம் எப்பேர்க் கொத்தது ?
பண்டிதர் மார்க்கசகாய ஆச்சாரி:- யஸூர்வேதம் மூன்றாவது உபநிஷதத்தின் சூத்திரார்த்த வாக்கியத்தில்
வேதசுருதிப் பிரமாணம்: 'தஸ்யமத்யேவந்ஹிசிகா அணீயோர்த்வாவ்யவஸ்தித:
ஓம் அத்தியோகாஷரம் ப்ரம்ஹவியாஹரந்'
 என்று சொல்லியபடி அந்த விராட் விஸ்வப்பிரம்மமாகிய பரப்ரம்மம் ஆதியந்தமும் அருவ உருவங்களும் குணங்குறிகளும் இல்லாதவராய் நிர்மல நிராமய நிஸ்கள வஸ்துவாய் இருக்கின்றார்.
3. பஞ்சாங்க குண்டையன்:- அந்த பரப்ரம்மம் அருவ உருவங்களற்றவரென்றீரே! அப்படி இருக்க விராட் விஸ்வப்ரம்மமென்று சொல்லும் விதி என்ன?
பண்டிதர் மார்க்கசகாய ஆச்சாரி:- அந்தவிஸ்வப்ரம்மத்தை அந்தாமுகமாய் நோக்குகையில் அருவ உருவங்கள் அற்றவர் என்றும், பகிர்முகமாய் நோக்குகையில் ரூபமுடையவர் என்றுஞ் சொல்ல நியாயமிருக்கின்றது. அது எப்படியென்றால், உலகத்தில் காணும் சிருட்டிகள்யாவும் அவரல்லாமல் இல்லையாகையால் அவைகள் அவரல்லாமல் இல்லையாகையால் அவைகள் அவரேயென்றும் அந்த சிருஷ்டி கர்த்தாவை ரூபில் காண திட்டமில்லையாகையால் அரூபமென்றுஞ் சொல்லாயிற்று.
4. பஞ்சாங்க குண்டையன்:- ப்ரம்மத்திற்குப் பகிர்முகத்தில் ரூபமுண்டென்றீரே அதை விபரமாய்த் தெரிவிக்கக் கோருகின்றேன்?
பண்டிதர் மார்க்கசகாய ஆச்சாரி:- விராட் விஸ்வப்ரமத்திற்கு அண்டரண்ட பிரமண்டங்களே சரீரம். அது எப்படி என்றால் பிரம்மமென்று சொல்லும் பிருதிவி அந்த விராட் விஸ்வப்ரமத்திற்கு பாதமென்றும், விஸ்ணு வென்னும், அப்பு தொப்புளென்றும் உருத்திரனனுந்தேயு மார்பென்றும், மஹேஸ்வரனென்னும் வாயுமார்பு முதல் புருவமத்தியமெறும், சதாசிவமெனச் சொல்லும் ஆகாயம் சிரமென்றும் சொல்லப்படும்
அந்த ப்ரம்மத்திற்கச் சந்திரன் - மனது, திக்குகளே - காது, வி;ஸ்ணுவே - தோள்கள், அக்னியே - வாக்கு, மிருத்யுவெ - குதம், வாயுவே - தொக்கு, சூரியனே - கண்கள், வருணனே - நாவு, பூமாதேவியே - மூக்கு அந்தர்யாமியே - புருசன். அவைகளே அப்பிரமத்திற்குத் தேகம். அந்த விஸ்வப்ரம்மமானது சிற்றுருவாகி ஜீவன்களில் ஸ்தூலம் சூசஷ்மம், காரணம், கூடஸ்தம், ப்ரம்மமெனப் பஞ்ச அங்கங்களைப் பெற்றிருப்பதால் பஞ்சேந்திரியத்தால் மனதை செல்லவொட்டாமல் நிறுத்திப் பிரணவவேதத்தில் கற்பித்திருக்கும் விதிப்படி யனுஷ்டித்தால் அந்த ப்ரம்மத்தைத் தெரிசிக்கலாம்.
5. பஞ்சாங்க குண்டையன்:- பிரமாண்ட பிண்டமாகிய அப்பிரம்மம் வேறு ஜீவன்களாகிய நாம் வேறு ஆகியிருக்க நம்மில் அவர் சிற்றுருவாய் நிறைந்திருக்கிறாரென்றீரே அது எப்படி?
பண்டிதர் மார்க்கசகாய ஆச்சாரி:-
வேதசுருதிப் பிரமாணம்:
'இருஷிகேசவிபு: நாநோபாதி நடாதத்பேதாத்
ஆகசா: யதாததாயின்னவத்தந்நநாஸேஸதிகேவலாபவதி'
என்கின்ற இதிலே, மனாதி இந்திரியங்கள் அனைத்துக்கும் அதிபதியாய்ச் சர்வ வியாபகனாகிய விஸ்வப்ரம்மமானது நானா விதமான ஸ்தூல சூட்சம காரண கூட ஸ்ததேகமாகிய உபாதிகளிலேப்ரம்மமாக பிரதிபலித்தவனாகிய அந்த உபாதிபேதத்தினாலே கடாதிகளால் வேறுபட்ட ஆகாயமானது எப்படி இருக்கின்றதோ அப்படியே வேறுபட்டவனைப் போல அந்த விஸ்வப்ரம்மம் ஜீவர்களில் பிரகாசிக்கின்றது. இவர் னாதிவஸ்து வென்பதற்கு மூலஸ்தம்பம் பிரமாணம்.
'நபூமிநஜலஞ்சைவர நதேஜோ நசவாய்வ:
நசாகாஸநசித்தஞ்சா நபத்தீயாக்றாணகோசர:
நசப்ரம்மநிவஸ்ணுச்ச நசருத்ரஸ்சதாரகா
சர்வசூன்யநிராலம்ப ஸ்வயம் பூவிஸ்வகர்மண'
என்னும் இதிலே பூமீயும் - ஜலமும் - அக்கினியும் - வாயுவும் - பிரகாசமும் - ஆகாசமும் - புத்தியும் - நசஷத்திரமும் - ப்ரம்மாவும் - விஸ்ணுவும் - ருத்திரனும் இவை முதலியவை ஒன்று மில்லாத சாவசூனிணமாயிருந்த காலத்தில் ஸ்சுயம்பு விராட் விஸ்வப்ரம்மாவானவர் ஸ்வரூபமாயிருந்தார். அந்த ஸ்வரூபத்திலிருந்து பஞ்சமுகசம்ராட்டாகிய விஸ்வப்ரம்மா உண்டாகினார். அவருடைய ஸ்வயரூபதியான மோவென்றால் சத்தியோசாகம், வாமதேவம், அகோரம், தற்புருஷம், ஈசாநியமென்றும் பஞ்சமுகதியானத்தால் சாநக - சநாதந –அபுவநச – பிரத்தநச –சுபர்நச என்னும் நாமதேயமுடைய மநு – மய – துவஷ்டா – சில்பி – விஸ்வக்ஞ ஜீய என்னும பஞ்சப்ரம்மாக்கள் உற்பவமானார்கள். இந்த ப்ரபஞ்சம்மாக்களாலும், பஞ்சசத்திகளாலும் சிருஷ்டி, திதிசங்காரம் திரோபவம் - அநுக்கிரகமெனும் பஞ்சகிருத்தியங்கள் நடந்தேறி வருகின்றன.
6. பஞ்சாங்க குண்டையன்:- பஞ்சகிருத்தியத்தில் சிரு|;டி எவ்வாறு?
பண்டிதர் மார்க்கசகாய ஆச்சாரி:- பூமிசாரபூதவியற்கையால் தேவர்- மக்கள்- விலங்கு- புல்- ஊர்வன- நீர்வாழ்வன- தாவரமென்னும் எழுவகைத் தோற்றமாகி அவைகளில் ஆண் பெண் ஜாதியாய் ஜீவாத்மாக்கள் பிரதிபல்த்து வாழையடி வாழையாய் உற்பவித்து வருவதே சிருஷ்டி பிருதிவியின் செய்கையாகிய இதுதான் ப்ரம்மாவென்று சொல்லப்படும்.
7; பஞ்சாங்க குண்டையன்:- திதி கிருத்யஞ் செய்பவர் யார்?
பண்டிதர் மார்க்கசகாய ஆச்சாரி:- அப்புவின் அம்சம் பிருதிவியின் செய்கையை அதிகரிக்கவொட்டாமல் எங்குந் தானே வியாபித்து பிருதிவியினால் உற்பவித்த ஜீவாத்மாக்களுக்குக் காமத்தை விளைவித்துக் காப்பற்றுவது தான் திதித் தொழில் இதுதான் அப்பு இந்த அப்புதான் விஸ்ணுவென்று சொல்லப்படுகின்றது.
8. பஞ்சாங்க குண்டையன்:- சங்காரகிருத்யஞ் செய்பவரார்?
பண்டிதர் மார்க்கசகாய ஆச்சாரி:- தேயுவின் அம்சம் பிருதிவியின் செய்கையை அதிகரிக்கவொட்டாமல் அடங்கிய பிருதிவியின் செய்கையால் உற்பவித்த ஜீவாத்மாக்களில் கலந்து விஸ்ரம்பிக்கும் போதுவாதபித்தமென்னும் பிணிகள் ஒவ்வாமல் அழிவதுவே சங்காரம் இதுதான் தேயுவாகையால் ருத்திரனென்று சொல்லப்படும்.
9. பஞ்சாங்க குண்டையன்:- திரோபவமாவதென்ன?
பண்டிதர் மார்க்கசகாய ஆச்சாரி:- திரோபவமாவது வாயுவின அம்சம் எங்கும் தானாயுலாவித் தேயுவின் அம்சத்தை அதிகரிக்கவொட்டாமல் உலகத்தை பாதுகாப்பது ஜீவாத்மாக்களின் பரிசவேதியிற் கலந்து விஸ்ரம்பிக்கும் போது சத்துவகுணம் பிரதானமாகி அந்தக்கரணங்கள் அடங்கியிருப்பது திரோபவமாகையால் இதுதான் மஹேஸ்வரனென்று சொல்லப்படும்.
10. பஞ்சாங்க குண்டையன்:- அநுக்கிரகமாவதென்ன?
பண்டிதர் மார்க்கசகாய ஆச்சாரி:- அநுக்கிரகமாவது ஆகாயத்தின் செய்கை விராட் விஸ்வப்ரம்மம் ஜோதி சொருபமாகிய பரவெளியில் உதயமாகி வாயுவின் செய்கையை அதிகரிக்கவொட்டாமல் தனக்குட்படுத்திக் கொண்டு அவ்வாயுவின் அம்ஸம்விஸ்ரம்பிக்கும் போது அதிதீவரபக்குவமுள்ள சுத்த ஆத்மாவுக்கு ஒளியாக வெளிப்பட்டு விஸ்வப்ரம்மத்தின் கிருபாநோக்கத்தால் பாலொடு நெய் கலந்தால் போல பரவி முத்தியைத் தருவது ஆகாயத்தின் செய்கையாகிய அநுக்கிரகம் என்றறிக. இந்த அநுக்கிரகந்தான் சதாசிவமென்று சொல்லப்படும்.
11. பஞ்சாங்க குண்டையன்:- ப்ரம்மவம்சத்தின் விதியாவது என்ன?
பண்டிதர் மார்க்கசகாய ஆச்சாரி:- ப்ரம்மவம்சத்தில் மநுவாச்சாரி என்பவர் அயசிருஷ்டியும், ருக்குவேத பாராயணமும், அவுபாசநமும், ஓமகுண்டங்களில் சிருஷ்டித்தருளயிய சம்ஹாரகர்தாவென்கிற உருத்திரசிருஷ்டி என்று சொல்லப்பகின்றது. அதன் செய்கை வேதம் ' அயாமதுருக்ஜாதம்' என்னும் வேத வாக்குப்படி ருத்திர ரூபமாகிய சுத்தியினால் சமஸ்தவர்ணாசிரமங்களும் சிருஷ்டி பரிபாலனமாகுமட்படிக் கெற்பத்திலுற்பவித்து சிசுவின் உந்திக்கொடியைத் தாய் வேறு பிள்ளை வேறாக கண்டித்த பின் தர்மாத்த காமமோஷமென்கின்ற சதுர்வித புருஷாத்த சித்திகளும் விளங்கும்படி கார்முணை, கத்திமுணை, கதிர்முணை, தராசுமுணை, எழுத்தானிமுணை இவ்வைந்தினால் உலக கரசஷனை செய்து வருவது ருத்திரன் தொழிலென்று யசுர்வேதத்தில் சொல்லப்பட்டிருக்கின்றது. இது தான் மநுவாச்வாரியார்.
12. பஞ்சாங்கம் - குண்டையன்:- மயாச்சாரி நிர்ணயமாவதென்ன?
பண்டிதர் மார்க்கசகாய ஆச்சாரி:- மயாச்சாரி நிhணயமாவது 'மயாதாரு யஜீஸ்தா' என்னும் வேதவாக்கின் படி யசுர்வேத பாராயணமும் ,சகல ஜீவாத்துமாக்களும் உயி;ர்வாழும்படி தாருசிஷ்டியும், தேவனுகூலமான சாமான்களும் விஸ்ணு தொழிலென்று சொல்லப்படுகின்றது. அவ்விரசஷப்பையுடையவர் தான் மயாச்சாரியார்.
13. பஞ்சாங்கம் - குண்டையன்:- துவஷ்டாச்சாரி நிர்ணயமாவதென்ன?
பண்டிதர் மார்க்கசகாய ஆச்சாரி:- துவஷ்டாச்சாரி நிர்ணயமாவது 'தாம்ரத்வஷ்டாஜாஸாமம்' என்ற வேதவாக்கியப்படி தாம்பிர சிருஷ்டியும், சாமவேத பாராயணமும், கருக்கட்டியுருக் காட்டிய ஷண்மத ஸ்தாபன விக்கிரகங்களும் யாகசாலையில் கலசாவாவம் - தூபதீப முதலிய கருவிகளும் ப்ரம்மாவினுடைய தொழிலென்று யசுர் வேதத்திற் சொல்லுகின்றமையினால் அந்த ப்ரம்மா தான் துவஷ்டாச்சாரியார்.
14. பஞ்சாங்கம் - குண்டையன்:- சிற்பியாச்சாரி நிர்ணயமாவதென்ன?
பண்டிதர் மார்க்கசகாய ஆச்சாரி:- சிற்பியாச்சாரி நிர்ணயமாவது வேதம் 'சிலாசில்பி: அதர்வணர்:' என்னும் வேதவாக்கின் படி அதர்வண வேதபாராயணமும் முப்பத்திரண்டு சில்பமும், சண்மதஸ்தாபனமும், கோபுரஸ்தூபி முதலிய சதகோடி தேவதா நிர்மிதோத்தாரணமும், வேதமந்திரபீஜ ஆவாஹனமும் அஷ்ட திசைக்கிரியையும் நிர்மானித்து மோஷார்த்தமாகிய ப்ரம்மக்கியானங்களுக்கு நியம நிஷ்டா –கிஷ்டா – அஷ்டாங்கயோக சமாதிகிரியா ஸம்ப்ரத அத்வைத ப்ரம்ம சொரூபமென்கிற விராட் விஸ்வப்பிரம்மத்தை வணங்குவதற்கேதுவாகியும், தேவர்களுக்கு ஸ்தபதியாச்சாரியர் இருந்து சமஸ்தமந்திர அம்சையினால் சர்வாதார தேவதைகளும் அஷ்டாதசவர்ணமும் மோசஷமடைவதென்று சிற்பாச்சாரியினுடையசிருஷ்டியே தேவேந்திரனுடைய சிருஷ்டியென்றும். யசுர் வேதத்திற் சொல்லியிருக்கின்றது. அந்த இந்திரன்தான் சிற்பாசாசிரியார்.
15. பஞ்சாங்கம் - குண்டையன்:- விஸ்வக்ஞ ஆச்சாரி நிர்ணயமாவதென்ன?
பண்டிதர் மார்க்கசகாய ஆச்சாரி:- விஸ்வக்ஞ ஆச்சாரி நிர்ணயமாவது வேதம் 'ரௌப்யஸ்வர்ணாற்கப்ரணவம். பஞ்சப்ரஹ்ம விதீயதே' என்னும் வாக்கியப்படி புராணவேத பாராயணமும், திரய்த்திரிம் சதகோடி தேவதைகளும், சமஸ்த வர்ணாசிரமத்தார்களும், பிரகாசம் பொருந்தின சுவர்ணங்களினால் ரத்னாபரணாதிகள் சிருஷ்டித்தலும் அஷ்டாதசவர்னங்களும், அஷ்டவிவாகத்திற்குட்பட்ட வர்ணாசிரமங்களில் துன்மார்க்க மாதர்களால் உற்பத்தியான அனுவோமன்- பிரதிலோமன்- அந்தராளன்- கன்னன்- குண்டன்- கோளகன் முதலான வாக்கபீஜ நிஷிதமில்லாமல் மாங்கல்யமென்கிற முத்திரியைச் சிருஷ்டித்து மேற்சொல்லிய வர்க்கங்களை குலபுத்திரர்களாக்கி சதுர்வித புருஷார்த் தங்களை அடையும்படி அனுக்கிரகம் செய்வது சூரியசிருஷ்டியென்று யசுர் வேதத்திற் சொல்லப்படுகின்றது. அந்த சூரியன்தான் விஸ்வக்ஞ் ஆச்சாரியார். இந்த ஐந்துவித ப்ரம்ம கருமங்களை அனுஷ்டித்து வருவதினால் உலக சம்ரஷணையென இருக்கு – யசுரர் - சாமம் - அதர்வணம் - பிரணவம் மூலஸ்தம்பம் - ஷட் - சாஸ்த்திரம் - அஷ்டாதசபுராணங்கள் - ஆகமசித்தாந்த இதிகாசங்கள் வச்சிரசூசி – நாகாகாண்டம் - சிற்பநூல் முப்பத்திரண்டில் விச்சுவகருமம் - விசிசுவேகம் - விச்சுவகாசிபம் - மகத்திரம்விசாலம் - சித்திரம் - காபிகாலயூபம் - நாமசங்கிதை – சரத்திகம் - விச்சுவபோதம் - ஆதிசாரம் - வெகுச்சுருதம் - மானபேதம் - ஆதிசாரம் - வெகுச்சுருதம் மானபேதம் முதலிய பல நூல்களிலுஞ் சொல்லியிருக்கின்றது. மேலும் ஐந்து சிருஷ்டிக்கும்மிஞசி உலகம் இல்லையென்றும் அதுவே பஞ்சகர்த்தாக்கள் அவதாரரூபம்மென்று யசுர் வேதத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றது. அதாவது
'மநுப்பிரம்மணே உமாமஹேஸ்வராப்யாம் நம:
மயப்பிரம்மணே லசஷிமிநாராயணப்யாம் நம:
துவஷ்ட்றுபிரம்மணே வாணி ஹிரண்ணிய காப்;பாப்யாம் நம:
சில்பிபிரம்மணே சசீபுரந்தார்ப்யாம் நம:
விஸ்வக்ஞப்ரம்மணே ஸ்விதபாஸ்கராப்யாம் நம:' என்னும் வேதவாக்கியத்தின் பொருள் மநுப்ரம்மாவினுடைய சிருஷ்டியே உமாமகேஸ்வரியாகிய ருத்திரன் தொழில் என்றும். மயப்ரம்மாவினுடைய சிருஷ்டியே லட்சும்நாராயணஸ்வரூபமாகிய விஸ்ணு தொழில் என்றும், துவஷ்டப்ரம்மாவினுடைய சிரூஷ்டியே வாணி ஹிரண்யகர்ப்பராகிய ப்ரம்மாவினுடைய தொழில் என்றும், சில்பிப்ரம்மாவினுடைய சிரூஷ்டியே சசிபுரந்தனாகிய தேவே;திரன் தொழில் என்றும், விஷ்வக்ய ப்ராம்மாவினுடைய சிருஷ்டியே சவிதா பஸ்கரனாகிய சூரியனுடைய தொழில் என்றும்
' விராட்விஸ்வ கர்மணே நம:
ஸம்ராட்விஸ்வ கர்மணே நம:
ஸம்ராட்விஸ்வ கர்மணே நம:
என்னுடைய விராட் ப்ரம்மமே விஸ்வப்ரம்மா ஸ்வரூபமென்றும் விராட் ப்ரம்மமே விஸ்வப்ரம்மா ஸ்வரூபம் என்றும் ஸம்ராட் ப்ரம்மமே விஸ்வப்ரம்மரூபம் என்றும் , ப்ரம்மகர்மமென்பதும் வேத முதலியவற்றால் விளக்கியிருக்கின்றன்.
16. பஞ்சாங்கம் - குண்டையன்:- சஷத்திரியருடைய விதியாவதென்ன?
பண்டிதர் மார்க்கசகாய ஆச்சாரி:- சஷத்திரியர்களில் சூரியவம்சம் சந்திரவம்சம் அக்னிவம்சம் முதலியன அனந்தம் சஷத்திரியர் ஐம்பத்தாறு முதலான தீவுகளில் அரசாளுகின்றவர்கள் முடிகொடை முதலிய தசாங்கத்துடன் வேதமோதுதலும், யாகஞ் செய்தலும், இரப்பவர்க்கீதலும், ஆயுதவித்தையிற் பழகுதலும், ஆகிய ஷட்கர்மமுடையராய் வீரமுள்ளசேனைகளும், மதிநுட்பமும், அன்புள்ள நட்பும், பகைவரால் அழிக்கப்படாத கோட்டைகளும், பதினெண் வழக்குகளை மநுநீதியின் படி விதிக்கின்றவர்களே சஷததிரியர்கள்.
17. பஞ்சாங்கம் - குண்டையன்:- வைசியர்களின் மார்க்கமென்ன?
பண்டிதர் மார்க்கசகாய ஆச்சாரி:- வைசியர்களின் மார்க்கமாவது தராசு நிறை நிறையும் தர்மமான நிதானமும் ஐPவகாருண்யமும், தேவதா பக்தியும், காரிய சித்தியும், சத்தியநாவும், நித்தியசீலமும், புத்தியுக்தியும், வேதவித்தையும் பெற்றவர்களே வைசிரியர்களென்னப்படுவார்கள்.
18. பஞ்சாங்கம் - குண்டையன்:- சூத்திரர்களுடைய விதியாவதென்ன?
பண்டிதர் மார்க்கசகாய ஆச்சாரி:- சூத்திரர்களுடைய விதியாவது ஆதியில் விஸ்வர்ரம்ம வம்சத்தார் இ;ந்த பூச்சக்கரத்தைக் குறிஞ்சி, பாலை,முல்லை, நெய்தல், மதுரமென்னும் பஞ்கநிலமாகப் பகுத்தளித்து இன்ன காலத்தில் இன்ன பொருள் விளையும் எனறும் கற்பித்தபடியே உயிர்களை காப்பாதற்றுவது சுத்திரர்கள் பெருமையாகையால் அச்சூத்திரர் தேவர்கள் முதலிலாகிய பிதுர்க்கள் யாவருக்கும் நித்திய நைமித்திய உணவுகளைத் தருபவன் வேதாகமங்களுணர்ந்த விதிவழுவாதவனே சூத்திரர் என்று சொல்லப்படுவார்.
19. பஞ்சாங்கம் - குண்டையன்:- பிரமச்சாரி விதியாவதுதென்ன?
பண்டிதர் மார்க்கசகாய ஆச்சாரி:- குருபத்தியில் தொண்டு பூண்டிருப்பதும், வேதம் ஓதுதலும், நிலத்தில்படுத்தலும், நித்தியஸ்நான விதரமும், உத்தமர் நேசமும், தேவாலய தரிசனப் பணிவிடைகளும் , சத்தியவாக்கும் பெற்றிருப்பவர்
20. பஞ்சாங்கம் - குண்டையன்:- இந்த பிரமச்சாரிக்கு பதவி என்ன?
பண்டிதர் மார்க்கசகாய ஆச்சாரி:- சாலோகப்பதவி
21. பஞ்சாங்கம் - குண்டையன்:- சலோகப்பதவியாவது யாது?
பண்டிதர் மார்க்கசகாய ஆச்சாரி:- விராட் விஸ்வப்ரம்ம உலகத்தில் வாழிவதே சாலோகப்பதவியாகும்.
22. பஞ்சாங்கம் - குண்டையன்:- கிரகஸ்தன் விதியாவது யாது?
பண்டிதர் மார்க்கசகாய ஆச்சாரி:- தர்மமாக தேடியபொருட்களைப் பிரம்மச்சாரி முதலிய பதின்மருக்கும் பகிந்து கொடுத்துத் தேவாலய பணிவிடை திருவிழா செய்வது வேதவிதி வழுவாது விரதநோன்பியற்றி அசத்தியம் மாற்றி ஆச்சாரியரை வாழ்த்திச் சொல்தவறாதவளுடன் கூடி வாழ்வது இல்வறதருமமாதம்.
23.பஞ்சாங்கம் - குண்டையன்:- இந்த கிரகஸ்டனுக்கு பதவி என்ன?
பண்டிதர் மார்க்கசகாய ஆச்சாரி:- சாமீபம் எனப்பட்ட பதவி
24. பஞ்சாங்கம் - குண்டையன் :- சாமீபம் என்றால் என்ன?
பண்டிதர் மார்க்கசகாய ஆச்சாரி: - விராட் விஸ்வரம்மத்தின் அருகில் இருப்பது.
25. பஞ்சாங்கம் - குண்டையன்: வானப்பிரஸ்தன் விதியாவதென்ன?
பண்டிதர் மார்க்கசகாய ஆச்சாரி:- கற்புடைய மனைவியுடனாவது தனியாவது ஐம்புலன் அவாவில் உழலாமல் தன்வசத்தனாகி விரத முதலிய தவம் புரி;து ஏகபுத்திரனாக இருப்பதுதான் வானப்பிரஸ்தன் விதி.
26. பஞ்சாங்கம் - குண்டையன்: இவர்களுக்கு பதவியென்ன?
பண்டிதர் மார்க்கசகாய ஆச்சாரி:- சாரூபம்
27. பஞ்சாங்கம் - குண்டையன்:- சாரூபப்பதவியாவதென்ன?
பண்டிதர் மார்க்கசகாய ஆச்சாரி:- விராட் விஸ்வப்ரம்மம் போல் ரூபித்திருப்பது.
28 பஞ்சாங்கம் - குண்டையன்:- சந்நியாசி விதியாவதென்ன?
பண்டிதர் மார்க்கசகாய ஆச்சாரி:-. பிரணவவேத விதிவழுவாமல் தத்துவபேதாபேதங்களறி;து இருவினை மும்மலமகற்றிப் பாசபந்தத் தொடக்கறுத்துத் தேகாபிமானம் வெறுத்துப் பற்றறச்சுத்தசை தந்யபதமானதே சந்நியாச விதியாம்.
29. பஞ்சாங்கம் - குண்டையன்:- இவர்க்குப் பதவியென்ன?
பண்டிதர் மார்க்கசகாய ஆச்சாரி:-. சாயுச்சிய பதவியாகும்
30. பஞ்சாங்கம் - குண்டையன்:- சாயுச்சிய பதவியாவதென்ன?
பண்டிதர் மார்க்கசகாய ஆச்சாரி:-. ஆ குண்டையனே நானுமில்லை நீயும்மில்லை நாமரூபந்தானுமில்லை தானுந்தானாயிருக்கும் சாயுச்சியம். அந்த சாயுச்சியமாவது விராட் விஸ்வப்ரம்மத்தில் ஐக்கியமாம்.
இப்படியான பஞ்சாங்கம் - குண்டையனுடைய பல கேள்விக்கு வேதசுருதியின் படி பண்டிதர் மார்க்கசகாய ஆச்சாரி விடையளித்தார். இதை முழுமையாக அறிய 'சித்துர் அதாலத்துக் கோர்ட்டு தீர்ப்பு' என்ற வு. முக்கண்னா ஆச்சாரியார் அறக்கட்டளை வெளியீடு, தமிழ்நாடு விஸ்வகர்மா மகாஜன இளைஞர் சங்கம், மாநில அமைப்புச் செயலாளர், ஆ.ளு. முனிசாமி ஆச்சாரியார், இல 28, பராசக்தி காலனி, சிவகாசி- 626 123. இதில் வேதவியாசரின் உற்பத்தி, புராணங்களுக்கிடையிலான மும்மூர்திகளின் பேதம் அதாவது ஒன்றில் உயர்த்தி இன்னொன்றில் இழிவுபடுத்தி பேதங்களை ஏற்படுத்திய விதம். விஸ்வபிரம்ம வம்சத்தாரை சூட்சி செய்து நாடுகடத்திய விதம், அவர்களின் பரம்பரை தொடர்பான விடையங்கள், வேள்வி தொடர்பாக விடையங்கள், குருத்துரோகம், போன்ற பல்வேறு விடையங்கள் வேதசுருதிகளின் ஆதாரபூர்வமாக ஆராயப்பட்டுள்ளது.
இறுதியாக சென்னைப்பட்டணத்தைச் சார்ந்த சித்தூர் ஜில்லா அதாலத்து கோட்டு மஹகனம் பொருந்திய கவர்ண்மெண்டு ஜட்ஜி டேகர் துரையவர்கள் சமுகத்துக்கு
மேல்படி ஜில்லாவைச் சேர்ந்த சதுர்ப்பேரியிலிருக்கும் விஸ்வப்ரம்ம வம்சத்தாரில் பண்டிதர் மார்க்கசகாய ஆச்சாரி முதலானவாதிகள் 11 பேர் எழுதிக்கொண்ட விண்ணப்பமான தென்னெனில்
மேற்படி சதுர்பேரியிலிருக்கும் பஞ்சாங்கம் - குண்டையன் முதலிய பிரதிவாதிகள் பத்துப்பேர் ஏகமாய்கும்பல் கூடிக்கொண்டு வந்து விவாகஸ்தம்பப் பிரதிஷ்டாபனஞ் செய்வதை ஆட்சேஷபனை செய்தார்கள்.
மேற்சொல்லிய பிரதிவாதிகழைத்து வந்த பஞ்சாயத்தார் இந்த பஞ்சாங்கங் முண்டையனை நீக்கி உங்கள் வம்சத்தில் வாத்திமாரை வைத்து விவாகஞ் செய்ய எத்தனித்தபடியால் எங்களைப் பஞ்சாயத்தாராகக் கோரிக்கொண்ட இந்த பஞ்சாங்கங் குண்டையன் கேட்குங் கேள்விகளுக்கெல்லாம் நீங்கள் வேதச் சுருதிப் பிரமாணமாய் உத்திரவு கொடுத்ததால் உங்கள் விஸ்வப்ரம்ம வம்சத்தில் வாத்திமாரை வைத்து வேத விதிப்படி விவாகஞ் செய்து கொள்ளளாமென்றார்கள்.
மேற்சொல்லிய பஞ்சாயத்தார் முன்னிலையில் பஞ்சாங்கங் குண்டையன் கேட்டகேள்விக்கெல்லாம் வேதசுருதிப் பிரமாணமாய் உத்தரவு கொடுத்தோம்.
பஞ்சாயத்தார் முதலானவளும் விஸ்வப்ரம்மவம்சத்தார் வேதவிதிப்படி விவாகஞ் செய்வதற்கு பஞ்சாங்கங் குண்டையன் முதலான விப்பிராள் தடங்கல் செய்யக் கூடாதுதென்று தீர்ப்புக்கொடுத்தார்கள்.
அத்தீர்ப்புப் பிரகாரம்இந்த பஞ்சாங்கங்குண்டையன் முதலானவாள் ஒத்துக்கொள்ளாமல் கம்மாள ஜாதி தவிர மற்ற ஜாதிகளெல்லாம் எந்த தேசத்திலும் எந்த நாட்டிலும் தங்களுக்கு உபபலமாயிருக்க கவர்ன்மெண்டு துரைத்தனத்தில் எந்தக்கோட்டிலும் தங்களுடைய வமிசத்தாராகிய விப்பிராள் தானே சகலருக்கும் அதிகாரிகளாயிருக்கிறார். லேசாய் செயிக்கலாமென மேற்படி குண்டையன் முதலான விப்பிராள் கும்பல் கூடிக்கொண்டு எங்களைப்பிடித்து அடித்துச் சண்டை செய்ததை மேற்சொல்லிய பஞ்சாயத்தார் முதல் பதினைந்த சாசஷிகளைத் துரையவர்கள் சிசாரணை செய்தால் தங்கள் சித்தத்துக்கே நன்றாய்த் தெரியலாம்.
மேற்சொல்லிய பதினைந்து சாசஷிகளையும் பொலிஸ்துரையவர்கள் விசாரணை செய்து அந்த பஞசாங்கங் குண்டையன் முதலான விப்பிராளுக்கு அபராதம் போட்டு விவாகநஷ்டத்தைக் குறித்து கோட்டாரில் பிரியாது செய்யும்படி டையரி கொடுத்தார். இத்துடன் தாக்கல் செய்திருக்கும் அந்த டையரியும் தாங்கள் தயவு செய்து பார்வையிட வேண்டியது.
இந்த பாரதகண்ட முழுமையும் தங்கள் கைக்குள்ளாக ஆளுகை செய்து வருகின்ற மகானம் பொருந்திய இங்கிலீஷ் துரைத்தனத்தாரை இத்தீவுக்கு வரும்படியாகச் செய்த காரணம் தெய்வயத்தனமெனயோசிக்க வேண்டியிருக்கிறதெதினாலே யென்றால்.
உலகத்துக்கெல்லாம் ஒளியையுங் காந்தியையுந் தருகின்ற சூரியனை மேகமானது மறைப்பதுபோல் வியாசர் முதலான ரிஷிகள் கூடி உண்டுபண்ணின அக்கியமான புராணங்களானது நீதியின் வெளிச்சத்தைப் பிரகாசிக்கவொட்டாமல் மறைந்திருந்தது. ஆனால் கார்மேகத்தைக் காற்றானது கலைத்து விலக்குவதுபோல இங்கிலீஷீக்காரருடைய சத்தியமும் தரும நீதியுமாக்கப்பட்ட சண்டை மாருதங்கொஞ்சஞ்மாக முன்னிரு;த சுத்தியான விருளை விலக்கிவருகின்றது.
இப்பவும் விராட் விஸ்வப்ரம்மாவானவர் இஙகி;லீஷீக்காரர்கள் கையிற் சத்தியத்தின் வாளையுஞ் சமாதாபனத்தில் கிரீடத்தையும் நீதியின் தராசையுங் கொடுத்திருக்கின்ற படியால் கொஞ்சக்கால்தில் இவ்விடத்தில் விப்பிரசங்களுக்குள்ளேயுண்டயிருக்கின்ற சாதிபேதத்தினாலே வரும் சகல துர்க்குணங்களுக்குமற்று நற்குணத்துக்காளாகவும்.
எங்கள் கலியாண சாமக்கிரியை நஷ்டம் ரூபா 550ம் வாதிகளுக்குப் பிரதிவாதிகள் கொடுக்கும்படியாகவும், வாதிகள் தங்களுக்குண்டானயிருக்கின்ற பாத்தியப்படிக்கு வேதபாராயண முதலியதுஞ் செய்துகொண்டு சகல கிரியைகளையும் எந்தேசத்திலும் எந்த நாட்டிலும் விஸ்வப்ரம்ம வம்சத்தார் தாராளமாய் நடாத்திக்கொண்டு வரும்படியாகவும், அதில் பிரதிவாதிகளாகிய விப்பிராள் பிரவேசிக்கக்கூடாதென்றும் தீப்பு கொடுக்கும் படி கோருகின்றோம்.
அதற்கு விஸ்வப்ரம்ம வம்சத்தார் சுபாசுபங்களைக் குறித்து வேதவிதிப்படிச் செய்வதை விப்பிராள் தடங்கல் செய்யக்கூடாதென்று சித்தூர் ஜில்லா அலாத்து கோட்டு தீர்ப்பு வளங்கியது.
இவை எல்லாம் ஆச்சாரமுள்ளக்கே அன்றி பிறப்பால் அல்ல. ப்ரம்மத்தின் முகத்தில் தோன்றியவனே ப்ராமணன் என வேதம் சொல்லுகின்றது. அவன் தனது கடமையை மறந்தால் சூத்திரனே. ப்ரம்மணனின் கடமை ஓதல் ஓதிவித்தல், வேட்டல் வேட்பித்தல், ஈதல் ஈவித்தல் என்பனவே. செய்யும் தொழிலுக்கு தானம் வாங்குவது மட்டும் அல்ல. ஆனால் விஸ்வப்ராமணர் பஞ்சகம்மியர்கள் அவர்கள் அதன் மூலம் பொருள் ஈட்டி சீவணோபாயம் பண்ணுபவர்கள். அவர்களுக்கு தானம் வாங்கி வாழவேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் தானம் கொடுப்பவர்கள். ஆச்சாரம் உள்ளவனே ஆச்சாரி எனவே அவர் முறையாக குருவிடம் திட்சைபெற்று பவித்திரமான முற்புரிநூல் அணி;து விராட் விஸ்வப்ரம்மத்தை வணங்கி நாகலிங்கபூஜை செய்து பஞ்சகிரித்திங்கள் செய்வதற்கே விஸ்வகர்மாவினாலும் விஸ்வகர்மிணி ஆன காயத்திரியாலும் படைக்கப்பட்டவர்கள அவகளே பஞ்சகம்மாளர்கள்.
1814 த்திய அசலுக்குச் சரியான நகல் அசல் நம்பர் 205 1818 வருடத்தில் தீர்ப்பு
வாதிகள்
சதுர்ப்போரியிலிருக்கும்
1 .வெள்ளை ஆச்சாரியார்
2. மார்க்கசகாய ஆச்சாரியார்
3. ருத்திர ஆச்சாரியார்
4.வெங்கடாசல ஆச்சாரியார்
5. நல்லா ஆச்சாரியார்
6. குழந்தை ஆச்சாரியார்
7. சின்னகண்ணு ஆச்சாரியார்
8. அருனாசல ஆச்சாரியார்
9. மஹாதேவஸ்தபதியார்
10. தசஷணாமூர்த்திஸ்தபதியார்
11. வரத ஆச்சாரியார்
வக்கீல் அப்துல்காயபு
பிரதிவாதிகள்
சதுர்ப்போரியிருந்து
1. பஞ்சாங்கங் குண்டையன்
2. அருனாசல அய்யன்
3. வெங்கடசுப்பு சாஸ்திரி
4. விஸ்வபதி சாஸ்திரி
5. தொட்டாச்சாரி
6. எக்கியதீசஷதர்
7. வியாசபட்டர்
8. சூரியநாராயண சாஸ்திரி
9. ஜோதி சாஸ்திரி
10. வந்தவாசி சிரஸ்தாரையர்
வக்கீல் அருணாசல முதலி

வாழ்வியலை வழிபாடாக்கி ஆரோக்கியம் கண்டவர்கள் சித்தர்கள்

'வாழ்வியலை வழிபாடாக்கி ஆரோக்கியம் கண்டவர்கள் சித்தர்கள்.
உணவை மருத்தாகும் தத்துவம் அறிந்தவர்கள் சித்தர்கள்.'
இந்து சமயத்தின் வாழிபாட்டின் போது கர்ப்பூரம் பயன்படுத்துவது ஆகமமுறைப்படி வழக்கமாகும். சித்தர்கள் இதை முறைப்படி வகுத்து வைத்திருக்கின்றனர். சோடசார உபசாரங்களில் கர்ப்பூரங்களில்னாலான தீப சரிசனங்கள் காட்டப்படுகின்றது. ஒற்றை கர்ப்பூர தீபம், பஞ்சாராத்தி அவை எழுதீபம், ஒன்பது தீபம் என பலவகையில் தரிசனம் செய்கின்றனர். அவை பஞ்சேந்திரிய ஒடுக்கத்தையும் பஞ்சபூத ஒடுக்கத்தையும் அடையாளமாக காட்டப்படுகின்றது. ஏழு என்பது அதாவது ஆறாதாரத்திலும் ஏழாவது ஆதாரமாகிய சகஸ்ராதாரத்திலும் அகவொழி தோன்ற வேண்டும் என்று ஏழு தீபங்கள் உள்ள கர்ப்பூர ஆராத்தி காட்டுகின்றனர். எமது உடலில் ஓன்பது வாசல்கள் உண்டு அவை ஒன்பதும் ஒளிபெறுவதால் உண்மை நோக்கி ஒளிபெறுவதை அடயாளப்படுத்துகின்றது. அதாவது ஞாமான தீயினால் ஒடுக்கப்படுவதை குறித்துக்காட்டுவதாக அது அமையும். இறைவனின் பஞ்சகிருத்தி செல்பாட்டில் அழித்தல் என்பது ஞானமாகிய தீயினால் நாம் செய்த கருமத்;தை எரித்து பிறப்புக்கு காரணமான கருமத்தை நிறுத்துதல் அதாவது பலன்கருதா செயல் புரிதல் பற்றற்ற செயல் இதனையே கர்ப்பூர தீபம் காட்டுதல் எமக்குணத்துவது. பூஜையின் போது பச்சைக் கர்ப்பூரமே பன்படுத்தவேண்டும் என்பது ஆகமம் குறித்துக் காட்டுகின்றது. இந்துமதத்தின் எந்த கிரியையாக இருந்தாலும் அதற்கு ஓர் அர்த்தம் இருக்கும். அவை சித்தி பெற்ற சித்தர்கள் வகுத்தது. கர்ப்பூரம் மருத்துவத்தன்மை வாய்தவை இதனாலேயே மக்கள் கூடும் இடங்கள் நோய் அற்ற சுகாதாரமுள்ள இடமாக இருக்க இதனை பயன்படுத்தினர். மக்களுக்கு செய்தியை கொடுக்கும் அதே சமயம் அதன் மருத்துவதன்மையையும் உணத்தியவர்கள் சித்தர்கள்.
கர்ப்பூரத்தின் மருத்துவக்குணத்தை நோக்கும் போது
'கிருமிசல தோஷங் கிளைவலிப்பு சந்தி
பொருமுமந்தம் அங்கிபட்ட புண்ணோ – டெரிசுரங்கள்
வாந்திபித்தஞ் சீதமுறு வாதஞ் செவிமுகநோய்
சாந்திகருப்பூரந் தால்' என்றனர் சித்தர்கள்
பொளிப்பு:
1. 'கிருமிசல தோஷங் கிளைவலிப்பு சந்தி' : கிருமி என்பது உடலில் காணப்படும் நுண்கிருமி அதை அழிக்கவல்லது அத்துடன் சலதோசம், வலிப்பு நோய், சந்நி என்னும் நீரினால் வரும் நோய்களை காக்க வல்லது.
2. 'பொருமுமந்தம் அங்கிபட்ட புண்ணோ – டெரிசுரங்கள்' : பெருமுமந்தம் என்னும் நோய் இது வயிற்றில் ஏற்படுவது. தீ சுட்டபுண், பித்ததிதினால் ஏற்பட்ட சுரம் என்பவற்றை போக்க வல்லது.
3. 'வாந்திபித்தஞ் சீதமுறு வாதஞ் செவிமுகநோய்' : வாந்தி, பித்தம், சீதள வாதம், செவியில் ஏற்படும் நோய்கள், முகத்தில் ஏற்படும் நோய்கள் என்பன போக்க வல்லது.
4. 'சாந்திகருப்பூரந் தால்' : இவை இனைத்தையும் போக்கவல்லது கர்ப்பூரம் என்பதை சித்தர்கள் குறிப்பிடுகின்றனர்.
பொதுவான கர்ப்பூரத்தின் குணத்தை குறிப்பிட்டுள்ளார்கள் சிறப்பாக நோக்கும் போது பச்சைகர்ப்பூரத்தின் குணத்தை நோக்கும் போது.
'அஷ;டகுன்மஞ் சூலை யணுகாது வாதமோடு
துஷ;டமே கப்பிணியுந் - தோற்றாதே –மட்டலருங்
கூந்தன்முடி மாதே கொடிசி கபம்போகுஞ்
சார்ந்தப்சைக் கர்ப்பூரத் தால்' என்றனர் சித்தர்கள்.
பொழிப்பு:
1. 'அஷ;டகுன்மஞ் சூலை யணுகாது வாதமோடு' : எட்டுவித குண்மம் தீரும் சூலை என்னும் வயிறில் ஏற்படும் வலி தீரும், வாதம் என்னும் நோயும் தீரும்.
2. 'துஷ;டமே கப்பிணியுந் - தோற்றாதே –மட்டலருங்' : மேக நோயை போக்க வல்லது.;
3. 'கூந்தன்முடி மாதே கொடிசி கபம்போகுஞ்' : கூந்தல் முடி உள்ள பெண்னே கபம் என்னும் நோயை போக்க வல்லது.
4. 'சார்ந்தப்சைக் கர்ப்பூரத் தால்' : பச்சைகர்ப்பூரத்தால் என்றார்கள் சித்தர்கள்.
பச்சைகர்ப்பூரத்தில் பலவகை உண்டு அவற்றின் பேதம் பற்றிக் குறிப்பிடுகையில்.
'பச்சைக்கர்ப்பூரம் பருவதில் பேதம்உண்டிங்
கிச்சையொடப் பேதம் இசைக்குங்கால் - இச்சகத்துள்
ஈச னொடுவீமன் ஏற்றபூ தாச்சிறையன்
காசறுமுன் றாகுமென்பர் காண்' என்றனர் சித்தர்கள்.
பொழிப்பு :
பச்சைக்கர்ப்புரத்தில் பலவகை இருந்தாலும் அதில் சிறந்தது ஈசன், வீமன், பூதாச்சிறையன் என்பவையாகும்.
இனி ஒவ்வொன்றாக நோக்குவோம்
ஈசன் என்னும் பச்சைக்கர்ப்பூரத்தின் மருத்துவக்குணம்
'ஈசன்என்னுகும் பூரம்வெண்மை என்பர்அது காரமுமாம்
பேரிய சீதம்உஷ;ணம் பித்தம்மயல் - வீசுகின்ற
பீனிசம்உள் தாகம்இவை போர்த்துவிடும் காந்தியுண்
டான ததுவசியம் ஆம்' என்றனர் சித்தர்கள்.
பொழிப்பு :
1. 'ஈசன்என்னுகும் பூரம்வெண்மை என்பர்அது காரமுமாம்' : ஈசன் என்னும் கர்ப்பூரம் வெண்மை நிறமுள்ளது அது காரமானது.
2. 'பேரிய சீதம்உஷ;ணம் பித்தம்மயல் - வீசுகின்ற' : சீதள உஷ;ணம் பித்தம், மயக்கம் என்பனவற்றைப் போக்க வல்லது.
3. 'பீனிசம்உள் தாகம்இவை போர்த்துவிடும் காந்தியுண்' : பீநசம் உள்தாகம் என்பன நீங்கி காந்தியுண்டாகும்.
4. 'டான ததுவசியம் ஆம்' : வசியமும் உண்டாகும். என சித்தர்கள் இயம்பியுள்ளனர்.
வீமன் என்னும் பச்சைகர்ப்பூரத்தின் குணம்
'வீமன்என்னும் கர்ப்பூரம் மேகஅழுக்குவெண்மை
சேமம் உறுங்குளிர்சி தின்றக்கால் - நாமருவு
நோயகலுந் தாகம்அறும் நுண்பே திரியும்ஆகுந்
தூய மதிமுகத்தாய் சொல்' என்றார்கள் சித்தர்கள்
பொழிப்பு:
1. 'வீமன்என்னும் கர்ப்பூரம் மேகஅழுக்குவெண்மை' : வீமன் என்னும் பச்சைகர்ப்பூரத்தின் நிறம் மேகநிறமாகும்
2. 'சேமம் உறுங்குளிர்சி தின்றக்கால் - நாமருவு' : உடல்குளிர்சி பெற்றும்
3. 'நோயகலுந் தாகம்அறும் நுண்பே திரியும்ஆகுந்' : தாகம் நீங்கி பேதியும் உண்டாகும்.
4. 'தூய மதிமுகத்தாய் சொல்' : தூமையான சந்திரனைப்போன்ற முகத்தை உடையவளே சொல் என்று சித்தர் கூறுகின்றார்.
பூதாச்சிறையன் என்னும் பச்சைக்கர்ப்பூரத்தின் குணம்
'பூதாச்சிறையன்என்னும் பூரமஞ்சள் கைப்பாகுங்
கோதையர்க்காங் காசங் கொடுமேகம் - வாதாதி
என்னும்ந் தனித்தோஷம் ஏறுமுத்தோ ஷஞ்சொறியுங்
குன்ன விரணமும்போக் கும்' என்றார் சித்தர்.
பொழிப்பு:
1. 'பூதாச்சிறையன்என்னும் பூரமஞ்சள் கைப்பாகுங்' : பூதாச்சிறையன் என்னும் கர்ப்பூரம் மஞ்சளும் கறுப்பும் கலந்த நிறமுள்ளது.
2. 'கோதையர்க்காங் காசங் கொடுமேகம் - வாதாதி' : ஸ்திரிகளுக்காகும் காசம் மேகம் வாத என்னும்
3. 'என்னும்ந் தனித்தோஷம் ஏறுமுத்தோ ஷஞ்சொறியுங்' : மூன்று தோசங்களையும் போக்க வல்லது.
4. 'குன்ன விரணமும்போக் கும்' : சொறி இரணமும் போகும் என்று சித்தர்கள் இயம்பியுள்ளனர்.
பச்சைகர்ப்பூரம் ஆலயங்களில் பயன்படுத்தப்படுவது எவ்வளவு சிறந்தது. ஆலயங்களில் அடியார்கள் கூட்டம் நிறைந்திருப்பது வழமையானது அதனால் வெப்பம் அதிகரித்து சலதோசம் ஏற்படுவது இயல்பு இதனை தடுக்க மருத்துவம் கண்டவர்கள் சித்தர்கள். இறைவனுக்கு தரிசனம் செய்த கர்ப்பூர தீபம் தொட்டு வணங்க அடியார்கள் மத்தியில் வருகின்றது. இதை ஒத்தி அதை கண்களில் ஒத்துவது வழமை இது எப்படிப்பட்ட மருத்துவம் என்பதை சித்தர்கள் அறியாமல் அறியவைக்கின்றனர். அடியார் அதிகரிக்கும் போது பவனசூழல் மாசடையும் அதை சீர் செய்ய கர்ப்பூரதீபத்தில் ஏற்படும் சுவாலையின் புகை உதவுவதை நாம் அறிவோம். சித்தர்கள் மருத்துவம் வியர்க்கத்தக்கது. ஆனால் இன்று பயன்படுத்தும் கர்ப்பூரம் இயக்கையான தல்ல அவை சேர்க்கையானவை இவை உடலுக்கு கேடு விளைவிக்கும். அதை அறிந்து ஆலயங்களில் புரோகிதர்கள் சரியானதை சரியாக அறிந்து உரியதை பயன்படுத்துவது காலத்தின் தேவையுடன் அவசியமே. எதை செய்வதாக இருந்தாலும் அதை சரியாக செய்வதே சரியான பலனை பெற உதவும். போலியானது எதிர்மறையான தாக்கத்தையே தரும் இன்று உலகம் இப்பாடுபட காரணம் அதுவே. இன்று பணத்துக்காக வேதங்கள் விற்கப்படுவதையே காணக்கூடியதாக இருக்கின்றது. உழைப்பதே தவிர வேறோன்றும் இல்லை. மூன்நூறு வருடங்களுக்கு முன்னர் ஸ்ரீ வீரபிரம்மம் அவர்கள் 'வேதம் காசுக்கு விற்கப்படும் பிராமணர்களால் என்றும் பிராமணர்கள் சூத்திரருக்கு அடிமையாகுவர்' என்றும் குறித்துரைத்தது இங்கு குறிப்பிட்த்தக்கது.

"விஸ்வப்ரம்மண குலத்தில் உதித்த உத்தமர்கள் வரிசையில்" "ஆதிசங்கரர்’

"விஸ்வப்ரம்மண குலத்தில் உதித்த உத்தமர்கள் வரிசையில்"
"ஆதிசங்கரர்’
ஓம் விராட் விஸ்வப்ரம்மனே நம:
விஸ்வப்ரம்மண குலத்தில் உதித்த உத்தமர்கள் வரிசையில் ‘ ஆதிசங்கரர்’
கர்நாடகா மாநிலத்தில் மைசூர் மாவட்டம் சிருங்கேரி கிராமத்தில் விஸ்வப்ராமண குலத்தில் அபுபணஸரிஷி கோத்திரத்தில் ஸ்ரீ ஞானபோக விஸ்வரூபாச்சாரி தம்பதியருக்கு கி.பி.1725-ம் ஆண்டு மகனாகப் பிறந்தர். படிப்பை முடித்து குலத்தொழிலான பாத்திரம், மற்றும் பொற்பணியும் கற்று வேத தத்துவங்களை உணர்ந்து இந்தியாவின இந்து மதத்தின் எழுபத்தி நான்கு உட்பிரிவுகளாக இருந்தை ஒன்று சேர்க்க எண்ணி இந்தியாவின் எல்லா மாhநிலங்களிலும் உள்ள கோவில்களுக்குச் சென்று பாடியும் பல மடங்களை சீர் செய்தும் சில மடங்களை அமைத்தும் மரகத லிங்கங்களை செய்து சில கோவில்களில் பிரதிஷ்டை செய்தும். ஸ்ரீ சக்ரம் செய்து பல கோவில்களில் பிரதிஷ்டை செய்தும் போலிப் பிரிவினை வாத மதவாதிகளை வாதிட்டு தன்னுடன் சேர்த்து கொன்டும் ஆறுமதங்களாக மட்மே சுருக்கி அமைக்க முடிந்தது. அதனால் அவரை ‘|ண்மதஸ்தாபகர்’; என்று போற்றப்படுகின்றார். அவர் பாடிய பாடல்கள் தொகுப்புக்கு ‘ஸெளந்தரியா லஹரி’ என போற்றப்படுகின்றது. அவர் சில அற்புத சித்துக்களும் செய்துள்ளார். சிவமதத்தின் அறுபத்தி நான்கு நாயன்மார்களிலும் சேர்க்கபடாமலும் ஆழ்வார்களிலும் சேர்க்கப்படாமலும் பதினென் சித்தர்களிலும் சேர்க்கப்படாமலும் நடுநாயகமாக உள்ள பிரம்ம மதத்தின் கருத்துக்களை உணர்ந்தவர்களால் போற்றப்படுகின்றார். ஆதிசங்கரரின் முழு விபரமும் ‘சங்கரர் விஜயம்’ என்னும் பழைய நூலிலும். ‘விஸ்வகர்மப் பிராமண வம்சப் பிரகாசிகை’ என்னும் நூலிலும் விரிவாகக் காணலாம். இவரே காஞ்சி ஸ்ரீ சங்கராச்சாரிய பீடத்தின் ஸ்தாபகருமாவார்.

குலதெய்வத்துக்கு திருவழா நடைபெறும் போது நாம் கைக்கொள்ள வேண்டிய நடைமுறைகள் பற்றி எமது சாஸ்திரங்கள் கூறும் நடை முறைகள் பற்றி சிந்திக்க வேண்டியது இந்துக்களின் கடமையாகும்.

குலதெய்வத்துக்கு திருவழா நடைபெறும் போது நாம் கைக்கொள்ள வேண்டிய நடைமுறைகள் பற்றி எமது சாஸ்திரங்கள் கூறும் நடை முறைகள் பற்றி சிந்திக்க வேண்டியது இந்துக்களின் கடமையாகும்.


குலதெய்வத்துக்கு திருவிழா நடை பெறுகின்றது என்பது பற்றி தத்துவத்தமாக சிந்திக்கும் போது முதலில் திருவிழா என்பதின் தத்துவத்தை முதலில் நாம் அறிய வேண்டும். திருவிழாக்களில் மகோட்சவம் மிகவும் முக்கியமானது. ஆலயத்தில் நித்திய நைமித்திய கருமங்களில் நடைபெறும் குறைபாடுகளை நிவத்தி செய்வதற்காகவே மகோட்சவம் என்னும் பிரமோட்சவம் நடைபெறுகின்றது. நித்திய நைமித்திய என்பது தினமும் ஆலயத்தில் நடை பெறுகின்ற பூஜைகளும், விசேடமாக நடைபெறும்; பூஜைகளையும் குறிக்கும். அப் பூயையின் போது கிரியைகளில் காணப்பட்ட குறைபாடுகள், பக்தி சிரத்தையில் காணப்பட் குறைபாடுகள், ஆலய அறங்காவலர்கள் செய்த தவறுகள், வரும் அடியார்கள் செய்த நிந்தைகள் , தெரிந்தும் நம்மை அறியாது செய்த தவறுகள் போன்றவற்றை நிவர்த்தி செய்யவே இம் மகோட்சவம் நடை பெறுகின்றது.
திருவிழாவின் போது இறைவனின் சக்தி தம்பம், விம்பம், கும்பம் ஆகியவற்றில் இறைவனின் சக்தி நிறைந்து இருக்கும். பொதுவாக வழமையான திருவிழாக்களில் எழுந்தருளும் விம்பமாகிய எழுந்தருளும் விக்கிரகத்தில் அச் சக்தி இருக்கும். ஆனால் திருவிழாவில் தம்பமான கொடிமரத்தில் சானித்தியம் நிறைந்த இறைசக்தி எழுந்தருப்பட்டு மந்திரரூபமான இறைவன் அங்கு ஆவாகணம் செய்பட்டு தினமும் அபிசேகம் செய்யப்படு மந்திர உச்சாடணம் செய்யப்படும். அதுபோல் இறைவனை கும்பத்தில் ஆவாகணம் செய்யப்பட்டு சிவாக்கிணியில் உட்சாடணம் செய்யப்படும். இறைவன் மந்திர ஜந்திர தந்திர ரூபமானவன். இம்மூன்று நிலைகளிலும் திருவிழாவின் போது உட்சாடணம் செய்வித்து. ஒரு வருடத்தில் நடைபெற்ற குறைகளை நிவத்தி செய்வதே மகோட்சவம்.
அடுத்து பிரவேசப்பலி கொடுக்கப்பட்டு அட்டதிக்குப்பாலகர்கள் ஆலயத்தின்; சுற்று வீதியில் எட்டு இடங்களில் நிறுத்தப்பட்டு இருப்பதனால் அவர்களை வேறு தேவைக்கு அந்த மக்களால் அழைக்கப்படக்கூடாது. ஆதனால் வீடுகளில் மங்களகாரியங்கள் செய்யக்கூhது அடுத்து அமங்கலம் இடம்பெறகூடாது. குலதேய்வத்துக்கே சிறப்பு அல்லாது வேறோன்றும் இல்லை.
குலதெய்வத்துக்கு கொடி எற்றப்பட்டுள்ளது. ஏன்பது. முள்ளந்தண்டின் வழியான் ஆறாதாரத்தின் ஊடாக முற்பத்திரண்டு துண்டங்களினுடே குண்டலிணி சக்தி சகஸ்ராகாரத்தில் விரிந்து இருக்கும் போது திருமணம் செய்து அதை இறக்கி விடக்கூடாது. அதனாலேயே திருமணம் அக்காலத்தில் செய்யக்கூடாது என்பது விதி. அண்மையில் திருமணமானவர்கள் கோடியேற்றம் பார்க்கக்கூடாது என்பதும் அதுவே. ஊர்மக்கள் பிரமசாரியம் காப்பது தாம்பத்திய வாழ்கையில் ஈடுபடாது இருப்பது அவசியம். இதனாலேயே குருக்கள், ஆலய அறங்காவலர்கள், ஆலயத்திலேயே காப்புக்கட்டி ஆலயத்திலேயே இருக்கவேண்டும் என்பது விதி.
எனவே மகோட்சவத்தின் போது எல்லாச் சிறப்பும் குலதேவத்துக்கே அன்றி வேறு ஒன்றும் இல்லை

Monday, March 20, 2017

முத்திக்கு வித்தாகும் சக்தி வழிபாடு

முத்திக்கு வித்தாகும் சக்தி வழிபாடு
முத்திக்கு ஞானம் அவசியமானது. அதை சக்தியின்றி பெறமுடியாது. இதுவே வேதம் கூறும் உண்மை. அதனாலேயே சித்தர்களும் மகரிஷிகளும் ஆதிசக்தியை வேண்டி தவம் இருந்து அடைதற்கரிதான தவசக்தியும் வலிமையையும் பெற்றனர். சக்கியே முத்திகு மூலகாரணம். சுத்தசிவம் பரம்பொருள். அது இயக்கமற்றது அதை இயக்குவதே ஆதிசக்தி அதை சிவோஹம் என்று அழைப்பர் அதிலிருந்து பராசக்தி இதனை ஜகந்தியாமக சக்தி + ஜகத் என்று அழைப்பர். இதிலிருந்து இச்சா, ஞான, கிரியா, சக்திகள் தோன்றின இவை முறையே பிம்மா, விஸ்ணு, ருத்திரன்னும், முறையே விராட், ஸ்வாட், ஸம்ராட் தோன்றியது. இதன் முறையே ஸ்ருஷ;டி என்னும் படைத்தலும் ஸ்திதி என்னும் கார்த்தலும் ஸம்ஹாரம் என்னும் அழித்தலும் மும்மூத்திகளுக்கு தொழிலாக அமைந்தது. இதனை
'பராசக்தி: பராநிஷ்டா, ப்ரஜ்ஞான – கனரூபிணி
இச்சாசக்தி - ஜ்ஞானசக்தி – க்ரியாசக்தி - ஸ்வரூபிணி
சிச்சக்தி: சேதனாரூபா, ஜடசக்தி: ஜடாத்மிகா என்று
'அம்ருதானந்தயோகி' என்று குறிப்பிடுகின்றது.
சுத்தசிவத்தினிடம் முதலில் உருவாகுவது 'அஹம்' என்னும் உணர்வே அதுவே அன்னையின் வடிவம் அதற்கு ஆதிசக்தி என்று பெயர். வேதம் 'தத்துவம் அஸீ அஹம் பிப்மாஸ்மீ' என்று இயம்புகின்றது. ஆதிசக்தியின் ஆவிர்ப்பாவத்தினால் பணிமலை போலான சுத்தசிவத்துக்குத் தன் ஸ்வரூப ஆனந்தம் உண்டாகின்றது. அதனால் சிவமே தன்னை அறிய வியாகியான ரூபியியானாள். இதனாவேயே அன்னைக்கு 'விமர்சரூபிணி' என்றொரு பெயர்ருண்டு. அவள் சித்சக்தியை ஆச்ரயித்து அத்யஸ்த மாயா சக்தியை உருவாக்கினாள் இதனையே பராசக்தி என்று அழைக்கின்றனர். இதுவே உலகுக்கு வித்துப்போல் காரணமானாள். அவளை கரசரணாதி அவயவங்களுடைய திவ்ய மங்கள விக்ரஹ தாரணியாய்க் கருதுவோமானால் அத்தகைய அவளுடைய மூர்த்தியின் திருபாதத்துளிகளே இச்சா,ஞானா, கிரியா சக்திகளான ப்ரம்மா, விஷ்ணு, உருத்திரன் என்ற திவிலைகள் கோடி கோடியாக எண்ணிலடங்காத அளவுக்கு தோன்றி மறைந்த வண்ணம் இருக்கின்றனர். அதைப் போன்றே விராட், ஸ்வராட், ஸம்ராட் என்ற பிரம்ம விஷ்ணு உத்திரர்களைக் கொண்ட பிரஹ்மாண்டங்களும் அத்தகையதே. அதனால்
'ஆதிசக்தி: அமேயாத்மா, பரமா, பாவனாக்ருதி: அநேக கோடி ப்ரஹ்மாண்ட ஜனனீ' "
என்று சக்தி துதிக்கப்படுகின்றாள்.
அவளே பஞ்சப்ரம்ம ரூபிணி அதனாலேயே அவளை 'பஞ்சப்ரேதாஸநாஸீநா பஞ்சப்ரஹ்மஸ்வரூபிணி' என்று
துதிக்கப்படுகின்றாள். நிஷ்கலமான பரம்பொருள் ஸகல- நிஷ்கல வடிவில் மூன்றாகவும் பின் ஐந்து எழு என விரிந்து செல்கின்றாள். அதனை 'யத்ர யத்ர மனோ யாதி தத்ர தத்ர ஸமாதய:' என்கின்றது.
'பஞச- யஜ்ஞ- ப்ரியா, பஞச –ப்ரேத- மஞ்சாதிசாயினீ, பஞ்சமீ,பஞ்ச- பூதேசீ, பஞ்சஸய்க்யோபசாரிணீ, பஞ்சக்ருத்ய –பராயணா'
என பரதேவதையை ஐந்து ஐந்தாகவே அவளை வழிபாடு செய்கின்றோம். தைத்திரீய உபநிஸத் கூறுகின்றது ' பாங்க்தம் வா இதம் ஸர்வம் பாங்க்தேனைவ பாங்க்தம் ஸ்ப்ருணோதீதி' பஞ்சகிருத்தியம், பஞ்சபூதங்கள், பஞ்சதன்மாத்திரைகள், பஞ்கப்பிராணர்கள் பஞ்சக மேந்திரங்கள், பஞ்ச ஞானேந்திரியங்கள், பஞ்சகோசங்கள், பஞ்சமூர்திகள் என பிரபஞ்சம் ஐந்தின் வடிவமாக இருக்கினறது. ஆனால் வேதங்கள் மட்டும் நான்கு. ஐந்தாவது வேதம் ப்ரம்மவேதமாகும். ஐந்தின் வடிவமான பரதேவதை பஞ்சோபசாரங்களான கந்தம், புஷ்பம், தூபம், தீபம், நைவேத்தியம் என பூஜிக்கப்படுகின்றாள்.
பரதேவதை 'பஞ்சப்ரஹ்மஸ்வரூபிணி' அவள் ப்ரம்மா, விஷ்ணு, ருத்திரன், ஈசானன், ஸதாசிவன் ஐந்து வடிவில் நின்று ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம், திரோதானம், அனுக்கிரஹம் என்னும் பஞ்சகிருதியங்களையும் அவளே செய்கிறாள். அவன் இன்றி எதுவும் இயங்காது. அதனாலேயே 'சக்தி இன்றி சிவம் இல்லை. சிவம் இன்றி சக்தி இல்லை' என்போர். பராசக்தியின் இயக்கம் இல்லாதபோது ப்ரம்மா முதலிய ஐவரும் பிரேதங்களே இதுவே தத்துவ இரகசியம்
'ப்ரஹ்மா விஷ்ணுச்ச ருத்ரச்ச ஈச்வரச்ச ஸதாசிவ: பஞ்சப்பிரேதா வராரோஹே நிச்சலா ஏவ தே ஸதா' என்று வேதம் கூறுகின்றது.
பஞ்சப்பரம்மங்கள் அனைத்துமே சக்தி வடிவம் சக்தியின் அனுக்கிரகம் இல்லாமல் முத்தி இல்லை. முத்திக்கு ஞானம் அவசியம். இதனால் அம்பிகையை
' சேஷத்ரஸ்வருபா சேஷத்ரேசீ சேஷத்ரஜ்ஞ – பாலினீ
சஷயவ்ருத்தி – விநிர்முக்தா சேஷத்ரபால - ஸமர்ச்சிதா' என்று குறிப்பிடுகின்றது ஸ்ரீலலிதா ஸஹஸ்ர நாமம்.
அம்பிகையே சேஷத்திரமாகவும் சேஷத்திரஞானமாகவும் இருப்பவள் அவளே. சேஷத்திரமாக கருதப்படுபவை ஐம்பூதமான பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாசம் என்பவையும் அகங்காரம், புத்தி, மூலப்பிரகிருதி என்னும் இவை மூன்றும் ஞானேந்திரியங்கள், கர்மேந்திரியங்கள், மனத்துடன் கரணங்கள் பதினொன்றும் சப்தம், ஸ்பர்சம், ரூபம், ரஸம், கந்தம் என்ற இந்திரிய விஷயங்கள் ஐந்தும் சேர்ந்து இருபத்து நான்கு தத்துவங்களும் கூடிவரிதல் சேஷத்ரம் எனப்படும். ஞானமில்லாமல் சோசஷ தருமத்தைப் பற்றி பலவாறு கேட்டாலும் பல கருமனுட்டானங்களைச் செய்தாலும் மோசஷம் அடையமுடியாது. அம்பிகையின் அனுக்கிரகம் இருந்தாலே அதை அடைமுடியும். ஜீவனுடைய தளைகளைளாகிய ஆறியாமையை போக்கி பரமானந்த அனுபவத்தை அருளுகின்றாள். இதனால் அம்பிகையை 'பசுபாசவிமோசினி' என்று வழிபடப்படுகின்றால். இதனை
'பக்திமத் - கல்பலதிகா பசுபாச- விமோசினீ
ஸம்ஹ்ருதாசேஷ- பாஷண்டா ஸதாசார- ப்ரவர்த்திகா' என்று துதிக்கப்படுகின்றது ஸ்ரீலலிதா ஸஹஸ்ர நாமத்தில்.
ஒருமுறை குருதேவர் ஸ்ரீ ராமகிஷ்ணபரமஹம்சர் காசிவாரநாசிக்கு யாத்திரை சென்ற போது அரிச்சந்திர காட்டில் தவத்தில் திளைத்த போது அங்கு இறந்த ஆத்மா ஒன்றுக்கு அம்பிகை மோட்ச வாசலை திறக்க சிவபெருமான் அனுப்பும் திவ்விய காட்சியை ஞான கட்சியாக கண்டார். இதனாலேயே சித்தர்களும் மகரிஷிகளும் ஆதிசக்தியின் அருள் சக்தியை பெற்றே அவர்கள் அடைதற்கரிய சக்திகளை பெற்றுனர். அதனாலேயே நாம் அவர்களை வழிபடும் போது அவர்களிடம் நீங்கள் பெற்ற அருட்சக்தியை எங்களுக்கு வழங்குமாறு வேண்டுதல் செய்கின்றோம். அவள் நிர்க்குணமாகவும் ஸகுணமாகவும் உபாசனை செய்யப்படுகின்றாள். அதனாலேயே அவளை
' நீராகா ராகமதனீ நிர்மதா மதநாசினீ
நிச்சிந்தா நிரஹங்காரா நிர்மோஹா மோஹநாசினீ
நிர்மமா மமதாஹந்த்ரீ நிஷ்பாபா பாபநாசினீ
நிஷ்க்ரோதா க்ரோதசமனீ நிர்லோபா லோபநாசினீ
நி:ஸம்சபா ஸம்சயக்னீ நிர்ப்பவா பவநாசினீ ................ என்று
சுலோகங்கள் நீண்டுகொன்டே செல்லுகின்றது. பரதேவதையான அம்பிகையை ' நிராதாரா, நிரஞ்சனா, நிர்லேபா, நிர்மலா, நித்யா, நிராகாரா, நிராகுலா, நிர்க்குலா, நிர்க்குணா, நிஷ்களா, சாந்தா' என்று பாடி பரவி வழிபட்டால் நம்மிடம் உள்ள ' காமக் குரோத லோப மோஹ மத மாச்சரியம்' என்ற கறைகள் நீங்கி உள்ளம் அம்பிகையின் நித்திய வாஸ திருக்கோயிலாக விளங்கும். அவள் வாஸம் செய்யும் வீடு எமது உடல். குருதேவர் ஸ்ரீ ராமகிஸ்ணர் குறிப்பிடுகின்றார் 'மணியும் அதன் ஒளியும் போல நிர்க்குணமான பரம்பொருளே சகுணமாயும் உள்ளது. பிம்மமாயிருக்கும் பொருளே சக்தியுமாய் உள்ளது. கிரியையற்றதாகக் கருதும் போது அது பிரம்மம் எனப்படும். படைத்து காத்து அழிக்கும் போது அது சக்தி எனப்படுகின்றது. எனவே எல்லாமே சக்தியின் வடிவவே அவள் இன்றி மோட்சம் இல்லை. முத்திக்கு வித்தே ஆதிசக்தியே

ஆதிமனிதன் இயற்கையைக் கடவுளாக கண்டான். உயிர் வாழ இயற்கையின் அரவணைப்பு அவனுக்கு தேவைப்பட்டது. அதன் அடிப்படையில் தோன்றயதே இலிங்க வழிபாடு.

ஆதிமனிதன் இயற்கையைக் கடவுளாக கண்டான். உயிர் வாழ இயற்கையின் அரவணைப்பு அவனுக்கு தேவைப்பட்டது. அதன் அடிப்படையில் தோன்றயதே இலிங்க வழிபாடு.

ஆதிமனிதன் இயற்கையைக் கடவுளாக கண்டான். உயிர் வாழ இயற்கையின் அரவணைப்பு அவனுக்கு தேவைப்பட்டது. அதன் அடிப்படையில் தோன்றயதே இலிங்க வழிபாடு.

இலிங்க வழிபாடு தொரப்பாக பலரும் பலகருத்துக்களை கூறினாலும் அவற்றுக்கெல்லாம் அடிப்படை ஒன்றுண்டு இயற்கையையே இறைவனாக கண்டவர்கள் இந்துக்கள். பிரபஞ்ச ஆக்கத்துக்கும் அழிவுக்கும் காரணமானது இயற்கை அதன் சமநிலையை பாதுகாப்பது மரம்செடி கொடிகளும் இயற்கையும் இதனாலேயே ஆதி மனிதன் சூரியனையும் காற்று மழை போன்றவற்றை வழிபட்டான். மரவழிபாடே இலிங்கவழிபாட்டுக்கு வளிவகுத்தது. அதனை கந்தழிவாழிபாடாக ஆதிமனிதன் கருதினான். மரங்கள் சூரியனில் இருந்து கதிர்களைப் பெற்று பச்சயமணிகனை வேதியல் மூலக்கூறாக மாற்றி மரத்துக்கு சக்தியை வழங்குகின்றது. மரங்கள் உணவு தயாரிப்பதற்காக மனிதனிடமிருந்தும் இயந்திரங்களின் இயக்கத்தின் முலமாக வெளிவரும் கரியமலவாயுவை பயன்படுத்துகின்றது. இதன் விளைவால் வெளியேறும் பிராணவாயு மனிதனின் உயிர்பாக பயன்படுகின்து. அம்மரங்கள் தன்நலமற்ற சேவையை உலகுக்கு வளங்குகின்றது. அவை தனக்காக மட்டும் எப்போதும் வாழ்வதில்லை மனிதர்களில் பெரும்பாலானவார்கள் தனக்காக மட்டும் வாழ்கின்றனர். மரங்கள் அதன் பயன்கள் அனைத்தையும் மனிதனுக்கும் மிருகங்கள் பறவைகள் ஊர்வன போன்ற அனைத்து உயிரினங்களுக்கு வழங்கிவிட்டு. அவற்றின் கழிவுகளை தமக்கு உணவாக்கி பிரபஞ்சத்தை சுத்தம் செய்கின்றது. மரங்கள் மனிதனுக்கு உணவாகவும் அவனுக்கு ஏற்படும் நோய்களுக்கு வேதியல் மூலக்கூறாகவும். உயிர்வாழ்வாற்கான பிராணவாயுவாகவும் உணவு சமைக்க எரிபொருட்களாகவும் ஆவியுர்பினால் மழைமுகில்களை ஏற்படுத்தி மழையாகவும். மனிதன் இளைப்பாறும் இடமாகவும். வளி அசைவுகளை ஏற்படுத்தி காற்றாகவும் மரங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுவதனால் நெருப்பாகவும் பஞ்சபூதங்களின் சக்தியாகவும் அமைகின்றது. அதனாலேயே ஆதிமனிதன் மரத்தை கடவுளாகக் கண்டான்.
மரங்களின் வழிபாடே இலிங்க வழிபாட்டுக்கு வழிவகுத்தது. மரங்களை ஆதிமனிதன் வழிபட்டு வருகையில் மரங்களின் கிளைகள் அழிந்து படிப்படியாக மரத்தின் அடியை வணங்கி அதுவும் அழிவடையும் போது அது இருந்த குழியில் நீளமான கற்தூன்களை நிறுத்தி அதை கடவுளாக வழிபட்டான் காலப்போக்கில் அது இறைவனுக்குரிய அடையாளமாக மாறி இலிங்க வழிபாட்டுக்கு வழிவகுத்தது. இதனை கந்தழி வழிபாட்டில் இருந்து தோன்றியதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நடுகல் வழிபாடும் இருந்தது அது அந்த நாட்டை ஆண்ட அரசன், நாட்டைக்காத்த போர் வீரன் ஆகியோரை அடக்கம் செய்த இடத்தில் கல்லை நட்டு அதனை வழிபட்டனர் அதுவே காவல் தெய்வ வழிபாட்டுக்கு வழிவகுத்தது. இவ்வழிபாடே எல்லைத்தெய்வமாக சிறுதெய்வ வழிபாட்டுக்கு வழிவகுத்தது. இலிங்க வழிபாடு கந்தழிவழிபாட்டில் இருந்தே வந்தது. இயற்கையின் படைப்புக்களான மரங்களும் மலைகளும் மேல்நோக்கி வளர்ந்து குடைபோல் காட்சியளிப்பதை எல்லோரும் அறிவர். ஒலிஒளி அலை வாங்கிகள் அனைத்தும் குளிவாக இருக்க இலிங்கம் மட்டும் அதற்கு மாறாக குவிவாக தொப்பி போன்று அமைந்துள்ளது. அதாவது இலிங்கம் சதாசிவ முகுர்த்தம். நாதம், விந்து, சிவன், சத்தி, சதாசிவம், மகேசுவரர், உருத்திரர், விஸ்ணு, பிரம்மா. இறைவனுடைய திருமேனியாக கொள்ளப்படுகின்றது. அவற்றில் முன்னுள்ள நான்கும் அருவமானவை சதாசிவம் அருஉருவமானது எனைய நான்கும் உருவமானது. அதாவது அருவமான இறைவன் அருஉருவமான சதாசிவமாகி மனிதனுக்கு அருளள் உருவமானான். இறைவன் அருவமானவன். எம் உயிர் எப்படிப்பட்டதோ அதை ஒத்ததே இறைவன். அதுபோன்று எம்மை இயக்கும் சக்தி, புத்தி, அறிவு இவை அனைத்துமே அருவமானவை. எம்முள் உள்ள உறுப்புக்கைளும் அதன் செயல்பாட்டையும் எம்மால் பார்க்கும் முடியாது அதை கட்டுப்படுத்தவும் முடியாது. அவை அதைத்தையும் மூளையும் இருதயமும் இயக்குகின்றது. இவை அனைத்தையும் அறிய ஞானியால் முடியும். அவர்கள் சித்தி பெற்றறவர்கள் முற்றும் உணர்ந்தவர்கள். இந்து சமயம் இயற்கை வழிபாடாகும். லிங்க வழிபாடு தொடர்பாக குறிப்பிடுகையில் இலிங்கம் என்பது குறி, சின்னம், அடையாளம் என பொருள்படும் அதனை குறி என்ற சொல்லை வைத்து ஜனன உறுப்பாக கருதுகின்றனர் சிலர் இது பொருத்தமற்றது. இலிங்கபுராணமே இதன் அடிப்படை அங்கு படைப்பதிபதியான பிம்மாவுக்கும் காத்தல் அதிபதியான விஸ்ணுவுக்கும் ஏற்பட்ட யார் பெரியவர் என்ற ஆணவச் செதுக்கை அடகுக்க இறைவன் செய்த திருவிளையாடலின் விளைவே சோதிப்பிழப்பாகி இறுதியில் அருவுருவமான இலிங்கமானது. அருவமான இறைவனை அகத்தில் தியானிக்க ஒரு சின்னமாக உருவெடுத்தது. ஞானியருக்கு. இலிங்கம் என்பது யூபம் என்னும் சொல்லில்லிருந்து தொன்றியது என்றகருத்தும் இங்கு குறிப்பிடத்தக்கது யூபம் என்பது தூண் போன்ற அமைப்புடையது இது நேராக அமைந்து விளங்குவதால் ஸ்தாணு என்ற பெயரையும் பெறும் இதனால் கந்தழி வழிபாட்டில் இருந்து தொன்றியதே லிங்க வழிபாடு என்று என்னத்தோன்றுகின்றது. சுவேதாஸ்வதா உபநிடத்தில் யோனி, லிங்கம் என்ற சொற்கள் காணப்படுகின்றன . இங்கு ‘லிங்கம்’என்பது ‘அடயாளம்'; அல்லது ‘அம்சம்’ என்பதையே கருதுகின்றது ‘மிகவும் நுண்ணிய உடம்பு’ என்ற பொருளிலேயே பயன்படுத்தி இருக்கின்றனர். சிவபுராணம் இலிங்க வழிபாடு தொர்பாக குறிப்பிடுகையில் பிரணத்தோடு தொர்பு படுத்துகின்றது. எல்லாத் தெய்வங்களும் இலிங்கமாக விளங்குவதால் இலிங்கத்தையே வழிபடும்படி விஸ்ணு தேவர்களுக்கு அறிவுறுத்தியதை காணலாம். அதுமட்டுமல் விஸ்ணு பிரம்மபகஸ்தி தோஷம் போக்க இராமேஸ்வரத்தில் மண்ணால் இலிங்கம் செய்து வழிபட்டதை யாவரும் அறிவர். இலிங்கத்தின் அமைப்பு மிகவும் நுட்பமானது. இலிங்கம் பற்றி மேலும் குறிப்பிடுகையில் காசியப சில்வ சாஸ்திரம் நாதமே இலிங்கம் பிந்துவே அதன் பீடம் என்றும் கூறுகின்றது. இலிங்கமானது சிவரூபமானது பீடமானது சக்திரூபமானது இவை இரண்டும் ஓன்றாக இருப்பது நெருப்பும் வெப்பமும் போன்று சிவசக்திரூபம் என்று கூறுகின்றது.
இலிங்கம் அமைக்கும் முறைகள் பற்றி ஆகமங்களும் சிற்பநூல்களும் மிகவும் விரிவாக எடுத்து இயம்பியுள்ளன. சிவன் எனைய வடிவங்களுக்கு அடிப்படையாக அமைவதுடன் கருவறையில் பிரதான மூலவராக அமைவதாலும் அதன் அமைப்புப் பற்றி விரிவாகவும் தெளிவாகவும் எடுத்து இயம்பியுள்ளது. சிற்ப்பாசாரி இலிங்கத்தை உருவாக்கும் போது மேற்கொள்ளவேண்டிய விதிமுறைகளை தெளிவாக செப்பியதுடன் சிற்பாசாரி செதுகுவதற்கான கற்களை தேந்தெடுக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய விதி முறைகளும் தெளிவாக இயம்பியுள்ளது. பூர்வ காரணாகமம், ‘லிங்க லசஷண விதிப்படம்’ என்ற தலைப்பிலும் இது பற்றி தெளிவாக கூறுகின்றது. மானசாரம் ‘லிங்க விதாநம்’ என்ற தலைப்பிலும் காசியப சில்ப சாஸ்திரம் ‘ சிவலிங்க லசஷணம்’ என்ற தலைப்பிலும் சில்பரத்தினம் ‘ லிங்க லசணம்’ என்னும் தலைப்பிலும் ஸ்ரீ ஸாரஸ்வதீய சித்ர கர்ம சாஸ்திரமும் காளாதிகாரமும் பிரதிமைகளின் அளவு முறைகளையும் குறிப்பிடுகின்றன.
இயற்கையை நேசித்து அதன்வழியில் சென்றவர்களே சித்தர்களும் மகரிஷpகளும். இயற்கை கோரங்கொண்டால் மனிதன் தாங்க மாட்டான். அதை நேசித்து அதன் வழியில் சென்றால் உலகை காக்க முடியும். அப்படி நாம் அதை காக்காவிட்டல் நம்மையும் நம்மால் உருவாக்கப்பட்ட பொருட்களையும் அழித்து இயற்கை தம்மை காத்துக்கொள்ளும் அதனையே அனத்தம் என்கின்றோம்.
இயற்கையின் அச்சுறுத்தலை அவன் அனுபவித்தும் அதற்கு அஞ்சி அதன் அனுசரனையை பெறவிரும்பி வழிபாடு செய்தான். முதலில் சூரியனையும் அதன் பின் அக்னி, வாயு, இந்திரன் வருனன் போன்றோரை வழிபடலானான். இடி முழக்கம் மின்னல் போன்ற இயற்கை தாக்களை கண்டு அஞ்சி நடுங்கினான். இடிமின்னல் பூமியை தாக்குவதன் மூலம் பூமிக்கடியில் கனியங்கள் உருவாகுகின்றன. இதை தாங்கவே ஆலயங்கள் உயரமாக அமைத்து கோபுரத்தில் இடியைத்தாங்க கலசத்தில் கேள்வரகு அரிசியை நிரப்பி வைத்தனர். அதனாலேயே ‘கோயில்லா ஊரிலே குடியிருக்கலாகாது’ என்ற முதுமொழி உள்ளது. ‘கோயிலை விட மேலாக இல்லம் இருக்கக் கூடாது’ போன்ற முதுமொழிக்கே காரணம். இயற்கையான இடிதாங்கியே. இது மட்டு மல்ல கோபுரங்களின் வடிவமும் இலிங்க வடிவத்தை ஓத்ததே அது பிரபஞ்ச சக்தியை ஈத்து இழுத்து மூலவிக்கிரகத்தில் செலுத்தக் கூடியது.
விக்கிரகங்கள் கருங்கல்லினால் அமைவதனால் அக்கல்லுக்கு பிரபஞ்சசக்தியையும் மந்திர ஒலிகளையும் ஈக்கும் சக்தி உண்டு. சிற்பாசாரி கற்களை தெரிவு செய்யும் போது கல்லின் தன்மைகளை அறிந்து கொள்வது அவசியமாகும் அவற்றில் காணப்படும் கோடுகளைக் கொண்டு கல்லின் தரம் நிர்ணயிக்கப்படுகின்றது. கற்களில் காணப்படும் குறைபாடுகளைக் கொண்ட கற்களை நீக்கி கற்களை தேந்தெடுக்கும் விதிமுறைகளையும் ஆகமங்களும் சிற்பநூல்களும் எடுத்து இயம்புகின்றன. கற்களில் எழும் ஓசையைக்கொண்டு அவற்றின் பேதங்களை நிர்ணயிக்கின்றனர். கற்கள் பாலை, யுவதி, விருத்தை என்று புருஷ சிலை, ஸ்திரிசிலை, நபும்ஸகசிலை என்று பாகுபடுத்து கின்றனர். அகன்று எடுக்கும் வேளை சப்தமுடையதும் குட்டையான உருவம் உள்ள சிலைகள் பாலசிலை ஆகும். மணியோசையைப்போன்று ஒலியுடையதும் நீள் வட்டவடிவுடையதுமான கல் ‘ஸ்திரிசிலை’ எனவும், ஸ்திரி சிலை பானையைப் போன்ற ஓசையைக் கொண்டு விளங்கும். மணியோசையைப் போன்ற அதிக சத்தமும் நீள் வடிவமுடையதுமானதும் ‘புருஷசிலை’ க்குரிய இலட்சணமாகும். பளபளப்பின்றியும கரடுமுறடானதும் உறுதியில்லாமலும் ஒலியில்லாமல் இருக்கும் சிலை ‘நபும்ஸக சிலை’ எனப்படும். இவ்வாறு கல்லின் எழும் ஓசையைக் கொண்டு இவற்றின் வேறுபட்ட அம்சங்கள் நிர்ணயிப்கப்படுவது போன்று அவற்றின் ‘ஆகிருதி’ எனப்படும் உருவத்தின் அடிப்படையில் பேதங்கள் கூறப்படுகின்றன. ‘ஸ்திரீ சிலை’ சற்சதுரமாகவும் எண்கோணமாவும் அமையும். நீள் சதுரமாகவும், வட்டமாவும், பத்துக்கோணமாவும், பன்னிரண்டு கோணமாகவும் இருப்பது ‘புருஷ சிலை’ என்று கூறப்படுகின்றது. நான்கு வட்டமாக இருப்பது ‘நபும்ஸக சிலை’யாகும். இலிங்கத்தையும் ஏனைய சிலைகளையும் அமைக்கும் போது கவனத்தில கொள்ள வேண்டிய விதிமுறைகள் தொடர்பாக ஆகங்களும் சிற்ப நூல்களும் குறிப்பிடுகையில் இலிங்கம் புருச சிலையினாலும் ஆவுடையாரயன பீடம் ஸ்திரி சிலையினாலும் இலிக அடித்தளமான பீடம் நபும்ஸக சிலையினாலும் செய்யப்பட வேண்டும். என விதிக்கப்பட்டுள்ளது. இங்கு எல்லா வகையான கற்களும் பயன்படுத்தப்படுவதை காணக்கூடியதாகவுள்ளது. அதுமட்டும் அல்ல கற்களை தெரிவு செய்யும் இடங்கள் இயற்கை எளில் உள்ள நறுமலர்கள் நிறைந்த நதி வளம் உள்ள குற்றமற்ற இடங்களாக இருக்க வேண்டும். அவைகள் பண்டைய சாஸ்திரங்களுடன் கூடியதான கல்லில் சிலைவடிக்கும் போது ‘சிலா பரீசஷணத்தையும் மரத்தில் வடிவமைக்கும் போது தாருபரீசஷணம் போன்ற வற்றையும் கருத்தில் கொண்டே சிலைகள் அமைக்கின்றனர். இதனை பூர்வகாரணாகமம் குறிப்பிடுகின்றது.
இயற்கை வழிபாடான அருவ வழிபாடு அருவுருவம் பெற்று இன்றைய உருவ வழிபாட்டுக்கு வழிவகுத்தது. இலிங்கம் பரம்பொருளின் அருஉருவமான சதாசிவம் ஆகி அடியவர்க்கு அருளினார்.

கொடிஸ்தம்பம் முள்ளம்தண்டா? ஆண்குறியா?

“கொடிஸ்தம்பம் முள்ளம்தண்டா? ஆண்குறியா?”



ஆலயங்களில் காணப்படும் கொடிஸ்தம்பாம் எமது முள்ளந்தண்டு. அது முப்பத்திரண்டு பகுதிகளைக் கொண்டது. அவை எமது முள்ளந்தண்டில் உள்ள கணுக்களின் அளவை ஒத்தது. இது மூன்று பகுதிகளைக் கொண்டது. அவை படைத்தலுக்குரிய பிம்மபாகம் காத்தலுக்குரிய விஸ்ணு பாகம் அடுத்து உத்திரனுக்குரிய அழித்தல் பாகம். இவை முறையே சதுரம், எட்டுப்பட்டம், வட்டமாக அமைந்திருக்கும். இதன் அடியில் குண்டலினி சக்தியாக இருக்கும் முலாதார மூர்த்தியான தம்பவிநாயகர் விற்றிருப்பார் இதில் மேல்நோக்கி ஆறு ஆதாரங்களும் அமைந்திருக்கும். அத்துடன் மூன்று மண்டலங்களான அக்னி, ஆதித்திய, சோம மண்டலங்கள் அமைந்திருக்கும். மகோற்சவத்தின் போது இதில் கொடி ஏற்றப்படும். அப்போது இதில் தர்ப்பைகயிறு, நூல்கையிறு கொடிச்சேலை என்பன காணப்படும்.இதில் தர்ப்பை கயிறு சூரிய நாடி, நூல் கயிறு சந்திர நாடி, கொடிச்சேலை சுழுநாவான குண்டலினி அது மேலே விரிந்து பாம்பு படம் ஏடுத்தது DSC00919போல வைத்து இதை அரவம் சுற்றி இருப்பது போல சுற்றிக்கட்டுவர். இதை சிலர் ஆண்குறி என்றும் பலிபீடத்தை பெண்குறி கருதின்றனர் இது எந்தளவுக்கு சரி என்பது அடியேன் அறியேன். நாந்தி சீவாத்மா கற்பக்கிருகம் பரமாத்துமா எப்போதும் சீவாத்துமா பரமாத்துமாவை நாடியே இருக்கும் இவை இரண்டுக்கும் நடுவில் நாம் தடையாக இருக்கக்கூடாது. (குறுக்கறுக்கக் கூடாது. )என்பது ஐதீகம். பலிபூடம் எம்மிடம் இயல்பாகவே செம்பில் களிம்புபோல பற்றி இருக்கும் ஆணவம் நம்மை உண்மையில்லாததை உண்மை எனக்காட்டும் மாயை நாம் செய்த வினை இவை அனைத்தையும் இறைவன் முன் காணிக்கையாக பலியிடும் இடம். மகாஉற்சவம் என்பது நித்திய நைமித்திய பூஜைகளில் ஏற்பட்ட குறைகளை நிவர்த்தி செய்யவே நடைபெறுகின்றது. அதனால் கிடையாக அமைக்கப்பட்ட உடல் அமைப்பைக்கொண்ட ஆலயம். கொடி ஏற்றத்தில் நிமிந்து நிற்கின்றது. அக்காலத்தில் மகாஉற்ச்சவ குரு உட்பட் அடியர்கள் அனைவரும் தாம்பத்தியம் காக்க வேண்டும் அதனால் ஆலய குரு, மகாஉற்ச்சவ குரு , அறங்காவலர்கள் அனைவரும் ஆலயத்தில் காப்புக்கட்டி ஆலயத்தில் தங்கி இருக்க வேண்டும் என்பது ஐதீகம். கொடி ஏற்றி இருக்க தாம்பத்தியம் ஏற்படுத்தி இந்திரியத்தை இறக்கக்கூடாது. என்பது விதி. இந்திரியத்தை சுழுனா நாடியின் மூலம் சகஸ்திராதாரத்தில் அமுதம் சொரியவைப்பதே யோகிகள் யோகப் பயிற்சி மூலம் செய்வதே குண்டலினி யோகம். இதனால் அமித நிலை அடைகின்றனர் யோகிகளும் சித்தர்களும். அதுவே பிறவாமைக்மைக்கும் பற்றின்மைக்கும் வழிவகுக்கும் என்பதே சித்தர்கள் கருத்து

Wednesday, March 8, 2017

திரிகடுகின் குணம்

திரிகடுகின் குணம்
திரிகடுகு என்பது சுக்கு, மிளகு, திப்பிலி இவை மூன்றும் திரிகடுகு ஆகும்.
சித்தர் பாடல்
'முக்கடுகால் ஆசியநோய் மூலங் கொடிறுபிணி
திக்கடுபாண் டோடு சிரத்துறுநோய் - அக்கடுக்குந்
தாவரநஞ் சென்றுலகிற் சாற்றுமிந் நோய்முழுதுந்
தீவரநஞ் கண்டிற்குந் தேர்'
பொழிப்பு:
1. 'முக்கடுகால் ஆசியநோய் மூலங் கொடிறுபிணி: ஆசியநோய், மூலம், கன்னநோய்
2. திக்கடுபாண் டோடு சிரத்துறுநோய் - அக்கடுக்குந்: பாண்டு, தலை நோய்,
3. தாவரநஞ் சென்றுலகிற் சாற்றுமிந் நோய்முழுதுந்: எலும்பைப்பற்றிய தாவர விசநோய்கள்
4. தீவரநஞ் கண்டிற்குந் தேர்':  என்பற்றை தீர்க்கும்.
இன்னுமோர் பாடலில்
'திரிகடுகால் சீதபித்தஞ் சிக்குலைநோய் கீட
எரிகடுதேள் ஈளை யிருமல் - முடுகுசந்நி
யாசம் அருசி யபஸ்மாரம் அற்புதப்புண்
வீசுசர்க்க ராற்புதம்போம் வீள்'
பொழிப்பு:
1. 'திரிகடுகால் சீதபித்தஞ் சிக்குலைநோய் கீட: சீசம், பித்தம், நாக்கு நொய்,
2. எரிகடுதேள் ஈளை யிருமல் - முடுகுசந்நி: புழு, தேள்விஷம், ஈளை, இருமல், சந்நியாசம்
3. யாசம் அருசி யபஸ்மாரம் அற்புதப்புண்: அருசி, அபஸ்மாரரோகம், அற்புதப்புண்
4. வீசுசர்க்க ராற்புதம்போம் வீள்': ஒருவித விரணமும் போம்.

திரிபலத்தின் குணம்
திரிபலம் என்பது கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய ஆகிய மூன்றின் சேர்க்கை இவை சமபலம் எடுத்து அதை பெடிசெய்து.  பசும்பானையில் பாலை வார்த்து அதில் வண்டு கட்டி ஆவியில் தயார்செய்து வைத்த பொடியை ஆவியில் அவித்து தயார்படுத்திக்கொண்டு ஒரு தேக்கரண்டி வீதம் காலை மதியம் மாலை உணவருந்த முன் அரைமணித்தியாலங்கு முன் அருந்திப pன் உணவருந்த வேண்டும்.
திரிபலத்தின் மருத்துவ குணம் பற்றி சித்தர்பாடல் குறிப்பிடுகையில்
'வித்திரதி நாசிநோய் வெண்குஷ;டம் ஆசனப்புண்
குத்திருமல் பாண்டுகுஷ;டம் குன்மம் இரைப் - பெற்றுமத
மூர்ச்சைபீலி கம்பிரமி யொடுருபுண் சர்வவிட
மூர்ச்சையறுமுப்பலந்தான் முன்'
பொழிப்பு:
1. 'வித்திரதி நாசிநோய் வெண்குஷ;டம் ஆசனப்புண்: நரம்பிலுண்டாகுங் கட்டி, நாசிநொய், வெண் குஷ;டம், ஆசனவாய்ப்புண்
2. குத்திருமல் பாண்டுகுஷ;டம் குன்மம் இரைப் - பெற்றுமத: குத்திருமல், பாண்டு, குஷ;டம், அரைப்பு மத
3. மூர்ச்சைபீலி கம்பிரமி யொடுருபுண் சர்வவிட: மூச்சைபீலீகம், பிரமியம், வயிற்றுவலி, புண், சர்வவிசம்,
4. மூர்ச்சையறுமுப்பலந்தான் முன்': மூச்சையும் அறுக்கும் முப்பந்தான்.
திரிகடுகு, திரிபலத்தின் குணத்துக்கும் தனிதனி மூலிகையின் குணத்துக்கும் மருத்துவக்குணம் வேறு அவற்றைத் தனித்தனியாக நோக்கும் போது அவை புரியும்.

தூதுளையின் மருத்துவக்குணம் பற்றி சித்தர்கள் மிகவும் அழுத்தமாக கூறி இருக்கின்றனர்.

தூதுளையின் மருத்துவக்குணம் பற்றி சித்தர்கள் மிகவும் அழுத்தமாக கூறி இருக்கின்றனர்.


உடலுக்கு வலுவூட்ட உணவே மருந்தாகக் கண்டவர்கள் அவர்கள். மனிதனை படைத்த இறைவன் அவனுக்கு ஏற்படும் நோய்களையும் அதற்கான மருந்தையும் இயற்கையாக படைத்துள்ளான். அவற்றின் தன்மையை அறிந்து உலகுக்கு கொடுக்க சித்தர்களாகவும் மகரிஷpகளாகவும் வந்தான் இறைவன். அதை அறியாத மனிதர்கள் தம்முள் இருக்கும் இறைவன் அறிய எங்கெங்கோ அலைகின்றனர். போலிகளில் ஏமாறுகின்றனர். அவன் அருள் இருந்தாலேயே உண்மையான சித்தர்கள் மகரிஷpகளையும் அறிய முடியும். இது கலியுகம் அல்வா? அதன் தன்மை இதுதான் என்ன செய்யலாம். அதுவும் நடைபெறாவிட்டால் கலியுகம் என்பதே தெரியாது அல்வா?
தூதுளை யிலையின் குணம்
'காதுமந்தங் காதெழுச்சி காசந் தினவுமதம்
ஓதுமந்த முத்தோஷம் உட்சூலை – தாதுநட்ட
மீதுளைப் பத்திரியை தேவச்செய் வாராய்ந்தோர்
தூதுளைப் பத்திரியைத் துய்த்து'
பொழிப்பு:
1. 'காதுமந்தங் காதெழுச்சி காசந் தினவுமதம்: காது மந்தமாதல், கண்தெளிதல், காசம், தினவு, மந்தம்
2. ஓதுமந்த முத்தோஷம் உட்சூலை – தாதுநட்ட: மந்தம், முத்தோசம், உட்சூலை, தாதுநஷ;டம்
3. மீதுளைப் பத்திரியை தேவச்செய் வாராய்ந்தோர்: மேலுளைப்பும் போம்.
4. தூதுளைப் பத்திரியைத் துய்த்து':  தூதுளை இலையால் என்று இயம்பு கின்றார் சித்தர்கள்.
தூதுளம் பூவின் குணம்
'புஷ;டியுண்டாந் தாதுவுமாம் பொங்கழகோ டாற்றன்மிகும்
முட்டத ரைத்து முதிர்ந்தவளைக் - கட்டழகு
மாதுளத்தி னீங்கா துவைத்திடவும் எண்ணம்உற்றால்
தூதுத்தின் பூவுண்ணக் சொல்'
பொழிப்பு:
1. 'புஷ;டியுண்டாந் தாதுவுமாம் பொங்கழகோ டாற்றன்மிகும்: தோகபுஷ;டியும் தாதுபுஷ;டியும் உண்டாகுவதுடன் தேகம் அழகு பெறும்.
2. முட்டத ரைத்து முதிர்ந்தவளைக் - கட்டழகு: கட்டழகு உண்டாகும்.
3. மாதுளத்தி னீங்கா துவைத்திடவும் எண்ணம்உற்றால்: உள்ளத்தில் நீங்காது வைத்திடவும் எண்ணம் உண்டானால்.
4. தூதுத்தின் பூவுண்ணக் சொல்: தூதுவளையின் பூவை உண்ணச் சொல். என்றனர் சித்தர்கள்.
தூதுளங் காயின் குணம்
'ஐயம்உடல் பித்தம் அகலும் அரோசம்போந்
தையலே வாதந் தணியுங்காண் - வையமிசை
ஓதுங் குடல்வாதம் ஓடும் மலம்ஒழியுந்
தூதுளங் காய் உண்ணச் சொல்'
பொழிப்பு:
1. 'ஐயம்உடல் பித்தம் அகலும் அரோசம்போந்: ஐயம், பித்தம் அகலும் அத்துடன் அரோசி இல்லாமல் போகும்.
2. தையலே வாதந் தணியுங்காண் - வையமிசை: தையலே வாதத்தை இல்லாதொழிக்கும்
3. ஓதுங் குடல்வாதம் ஓடும் மலம்ஒழியுந்: குடல்வாதம் இல்லாதொழிந்து மலம் போகும்.
4. தூதுளங் காய் உண்ணச் சொல்': தூதுளங் காயை உண்ணச்சொல்
தூதுளம் பழத்தின் குணம்
'கபக்கட்டு கோழை கதித்ததிரி தோஷங்
குபுக்கென் றெழும்புநீர்க் கோவை – கபுக்கென்
றழுத்துவிஷ மும்போம் அடர்தூது ளத்திற்
பழுத்துவிழுங் காயையுண்டு பார்'
பொழிப்பு:
1. 'கபக்கட்டு கோழை கதித்ததிரி தோஷங்: கபக்கட்டு, கோளை, திரிதோசம்
2. குபுக்கென் றெழும்புநீர்க் கோவை – கபுக்கென்: நீக்கோவை
3. றழுத்துவிஷ மும்போம் அடர்தூது ளத்திற்: விஷம் என்பவைகளை போக்க வல்ல தன்மையுள்ளது
4. பழுத்துவிழுங் காயையுண்டு பார்: பழுத்து விழுந்த காய்யை உண்பதால்
தூதுளையின் சமூலகுணம்
'தூதுபத்திரி யூண்சுவை யாக்கும்பூ
தாது வைத்தழைப் பித்திடுங் - காயது
வாத பித்தக பத்தக பத்தை மாற்றும்வேர்
ஓதும் வல்லிபன் னேயுமொழிக்குமே'
பொழிப்பு:
1. 'தூதுபத்திரி யூண்சுவை யாக்கும்பூ: தூதுவளை பத்திரி உணவுக்கு சுவை உண்டாக்கும்
2. தாது வைத்தழைப் பித்திடுங் - காயது: பூ தாதுபுஷ;டி உண்டாக்கும்
3. வாத பித்தக பத்தக பத்தை மாற்றும்வோ: காய் வாதபித்தம் கபமும் போம்
4. ஓதும் வல்லிபன் னேயுமொழிக்குமே: வேர் பல்நோய் போகுகும்.



குமரி கண்டத்தின் தென்திகையிலேயே வேதங்களும் ஆகமங்களுத் தோன்றின அதுவே சிவபூமி அதனாலேயே தென்நாடுடைய சிவனே போற்றி என்றனர்.

குமரி கண்டத்தின் தென்திகையிலேயே வேதங்களும் ஆகமங்களுத் தோன்றின அதுவே சிவபூமி  அதனாலேயே தென்நாடுடைய சிவனே போற்றி என்றனர்.


அண்டத்தின் நடுவில் பொன்மலையாகிய மேருமலை விளங்குகின்றது. அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உண்டு. அதுவே நடுநாடி  இதனை சுழுமுனை என்பர். மேருவினை நிலத்தில் நடுக்கோடு என்பர். நடுக்போட்டின் வடபாலும் தென்பாலும் உள்ள கோடுகள் வழிக்கோடுகளாகும். இதுவே உடலில் கானப்படும் இடகலை பிங்களை நாடிகளாகும். இதனை திருமூலர் திருமந்திரத்தில்

'மேரு நடுநாடி மிக்கிடை பிங்கலை
கூடுமிவ் வானின் இலங்கைக் குறியுறுஞ்
சாருந் திலைவனத் தண்மா மலயத்தூ
டேறுஞ் சுழுனை இவைசிவ பூமியே'  

இங்கு வான் வெளியில் நடுக்கோட்டின்நிலையினை இலங்கை என்கின்றார். இவ் இலங்கைக் கோட்டுடன் தில்லைசிற்றம்பலக்கோடு பொருந்திநிற்கின்றது. இதனால் தில்லைக்கும் பொதிகை மலைக்கும் ஊடாகச்செல்லும் கோடு நடுநாடியாகும். இதனையே தென்நாடு சிவபூமி என அழைக்க காரணமானது. இதனை சிறப்பு முறை என்பர். பொது முறையாக நோக்கும் போது இலங்கைக்கும் பொன்மலைக்கும் நடுவில் உள்ளது தில்லையம்பம். இவை இரண்டுக்கும் இடைப்பட்டது சிவபூமி. மேரு நடுநாடி அண்டத்தில் அது நடுரேகை பிண்டத்தில் அது சுழுமுனை. அண்டத்தினுள் இதன் வட அயன் வரைகளும் பிண்டத்தினுள் இடகலை பின்கலை நாடியாகும். இலங்கைக் குறியும் என்னும் போது இலங்யையில் மேருவின் குறியைப்பார்க்கலாம். எனவே திருமூலர் காலத்தில் மேருமலை அழிவெய்தி விட்டது என்பதே பொருள். மேரு என்பது மேரு சுரமேரு குமேரு என மூன்றாகும். மேரு பூமத்திய ரேகையும் பூமியின் ஆச்சு ரேகையும் கூடுமிடமாகும். அதுதான் இலங்கை. எனைய மேருக்கள் துருவங்கள் அவை சுரமேரு வடதுருவம் என்றும் குமேரு தென்துருவம் எனவும் கூறப்படுகின்றது. தில்லை வனம் நடுநாடியில் இருக்கின்றுது.
அகத்துவத்தில் இடகலை பிங்களை உள்ளது. அதாவது எமது முள்ளந்தண்டின் வலப்புறமும் இடப்புறமும் நாடிகள் செல்லுகின்றது அவை சூரியநாடி சந்திர நாடிகளாகும். இவையே இடகலை பிங்கலை ஆகும். அவற்றின் நடுவே சுழுமுனை நாடி செல்லுகின்றது. இது எமது அல்பா கதிரின் அதிகரிப்பால் உருவாகுவது. இவை அனைத்தும் எமது உடல் உள் இருப்பவை அதாவது பிண்டத்தில் அதுபோன்று அண்டத்தில் உள்ளவை தொடர்பாக 

திருமந்திரத்தில் திருமூலர் குறிப்பிடுகையில்
'
இடபிங் கலையிம வானோ டிலங்கை
நடுநின்ற மேரு நடுவாஞ் சுழுனை
கடவுந் திலைவனங் கைகண்ட மூலம்
படர்வொன்றி யென்னும் பரமாம் பரமாம் பரம்றே'
#
இங்கு இடபிங்கலையாக பொன்மலையம் இலங்கையும் கொள்ளப்படுகின்றது. நடுநாடியான சுழுனை தில்லைவனம். தில்லைவனம் எல்லாவற்றையும் இயக்குகின்றது. இதனாலேயே 'கடவும் தில்லைவனங் கைகண்ட மூலம்' என்று குறிப்பிடுகின்றார். எனவே வடக்கு எல்லை பொன்மலை தெற்கு எல்லை இலங்கை எனவே தென்நாடும் இலங்கையே இதனாலேயே 'தென்நாடுடைய சிவனே போற்றி' என்றாகிவிட்டது. இலங்கை வேதன் இராவணன் சிவபக்தன் கைலயங்கரியையே பேயர்தெடுத்து இலங்கைக்கு கொண்டு வந்தவன். மன்டோதரியும் சிவபத்தை அவளுக்கு அடிக்கடி சிவதரிசனம் கிடைத்ததாக வரலாறு சான்று பகர்கின்றது. சிவன் தென்நாட்டவன் என்ற காரணத்தால் அவன் கறுப்பு நிறமானவன். வடநாட்டு இராமர் வெள்ளை நிறத்தவர். சிவனை வழிபட்டு வரம் பெற்றவர்கள் அசுரர்கள். உதாரணமாக. இராவணன், சூரர்கள்( கஜமுகா சுரன்,நரகாசுரன்,பத்மாசுரன், தரகாசுரன்) அதுபோன்று விஸ்ணுவிடம் வரம்பெற்றவனும் அசுரர்களே நிம்பன் நிசும்பன் போன்றோர். சிவபத்தைனை இழிவு படுத்தி விஸ்ணு பத்தனை மேலோங்க காவியம் படைத்தவர்களே ஆரியர். திராவிட கடவுள் சிவன் ஆரியர்களின் கடவுள் விஸ்ணு ஒருரை ஒருவர் எதிர்த்தகாலமொன்று உண்டு. அக்காலத்தில் சிவபெருமானின் திருவிழவை கண்டவர்கள் இமக்கிரிகையில் கலந்து கொண்டவர் போல தலைமுழுக்குச் செய்வர் அதுபோல சிவபத்தர்களும் விஸ்ணு திருவிழாக்களையும் அப்படியே கருதினர். ஆதிசங்கரதே இவற்றை களைந்து ஒற்றுமைப்படுத்தினர். அக்காலத்தில் தோன்றிய காலியமே இராமாயணம். இறுதியில் பிரமகஸ்தி தோசம் தீர்;க்க இமேஸ்வரத்தில் சிவபூசைசெய்ததன் மூலம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. ஆனால் திருமூலர் பரம்பொருளான சிவப்பரம் பொருளை மட்டுமே திருமந்திரத்தில் இயம்பியுள்ளார்.
குமரிகண்டத்தில் தென்திசையிலேயே வேதமும் ஆகமங்களும் தோன்றின என 

திருமந்திரம் திருமூலர் குறறப்பிடுகையில்.

'ஈறான கன்னி குமரியே காவிரி
வேறா நவதீர்த்த மிக்குள்ள வெற்பேழுள்
பேறான வேதா கமமே பிறத்தலான்
மாறாத தென்திசை வையகஞ் சுத்தமே' 

திருமூலர் வாழ்த காலம் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும் ஆண்டுகொன்றாக மூவாயிரம் பாடல்களை பாடியதாக வரலாறு. எனவே இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட குமரிக் கண்டதையே அவர் இப்பாடலில் பாடியுள்ளார். இக்கண்டம் கடல்கோள்களால் அழி;து கடல்கொண்டு எஞ்சியது தென்பகுதியில் இலங்கை மட்டும்தான். இலங்கையின் கீழ்பகுதியில் தான் குமரியாறு ஒடி இருக்கின்றது என்பது இன்றைய ஆய்வுகள் கூறுகின்றது. இங்கு குமரி மலை, மகேந்திரமலை இலங்கைக்கு ஈழம் என்றும் அழைக்கப்பட்டது. தென்பகுதியில்; இறுதியில் ஒளிநாடு என நாற்பத்தி ஒன்பது தமிழ் நாடுகள் இருந்தாதக பண்டைய நூல்கள் கூறுகின்றன். அக்கண்டத்திலேயே சிறந்த தீர்தங்கள் ஒன்பதும் ஏழு மலைகளும் குறிப்பிட்டு அதன் தென்பகுதி குமரிக் கண்டம். அதில் குமரிஆறு காவேரி போன்ற நதிகளும் குமரிமலை, மகேந்திரமலை தொதிகைமலை போன்ற ஏழுமலைகளும் உள்ள நாடாகிய தென்நாட்டிலே வேதஆகமங்கள் தோன்றின். இதில் இலங்கையே எஞ்கியுள்ளது.எனையவை கடல் தன்னகத்தே ஆக்கிக்கொண்டது. இதனை திருத்தொண்டர் புராணத்தில் வரும் வெண்பா குறிப்பிடுகின்றது.
'
காவேரியே பெண்ணையம ராவதி பென்முகலி
மேவு பொருநை மிளிர்வையை – தாவில்கப்பை
கொள்ளிடம்பா லிக்கெடிலம் கூறுமண்ணி முத்தாறு
வெள்ளாறு கங்கை நிவா மேவு' என்று குறிப்பிடுகின்றார்.


குமரியாறு என்பது இலங்கைக்கு கீழாக இருந்திருக்கின்றது. ஒளிநாடு தென் எல்லையா இருந்திருக்கின்றது. மகேந்திர மலையில்தான் சுரசம்காரம் நடைபெற்றதாக வரலாறு கூறுகின்றது. இலங்கையே சிவபூமி  அன்று குமரிகண்டத்தின் தென் பகுதி ஒளிநாடு ஆனால் அழிவின் பின் இன்றுள்ளபகுதி இலங்கை இதுவே தென்நாடு.

வாழ்வியலை வழிபாடாக்கி ஆரோக்கியம் கண்டவர்கள் சித்தர்கள். உணவை மருத்தாகும் தத்துவம் அறிந்தவர்கள் சித்தர்கள்.'

         'வாழ்வியலை வழிபாடாக்கி  ஆரோக்கியம் கண்டவர்கள் சித்தர்கள்.
உணவை மருத்தாகும் தத்துவம் அறிந்தவர்கள் சித்தர்கள்.'
             இந்து சமயத்தின் வாழிபாட்டின் போது கர்ப்பூரம் பயன்படுத்துவது ஆகமமுறைப்படி வழக்கமாகும். சித்தர்கள் இதை முறைப்படி வகுத்து வைத்திருக்கின்றனர். சோடசார உபசாரங்களில் கர்ப்பூரங்களில்னாலான தீப சரிசனங்கள் காட்டப்படுகின்றது. ஒற்றை கர்ப்பூர தீபம், பஞ்சாராத்தி அவை எழுதீபம், ஒன்பது தீபம் என பலவகையில் தரிசனம் செய்கின்றனர். அவை பஞ்சேந்திரிய ஒடுக்கத்தையும் பஞ்சபூத ஒடுக்கத்தையும் அடையாளமாக காட்டப்படுகின்றது.  ஏழு என்பது  அதாவது ஆறாதாரத்திலும் ஏழாவது ஆதாரமாகிய சகஸ்ராதாரத்திலும் அகவொழி தோன்ற வேண்டும் என்று ஏழு தீபங்கள் உள்ள கர்ப்பூர ஆராத்தி காட்டுகின்றனர். எமது உடலில் ஓன்பது வாசல்கள் உண்டு அவை ஒன்பதும் ஒளிபெறுவதால் உண்மை நோக்கி ஒளிபெறுவதை அடயாளப்படுத்துகின்றது. அதாவது ஞாமான தீயினால் ஒடுக்கப்படுவதை குறித்துக்காட்டுவதாக அது அமையும். இறைவனின் பஞ்சகிருத்தி செல்பாட்டில் அழித்தல் என்பது ஞானமாகிய தீயினால் நாம் செய்த கருமத்;தை எரித்து பிறப்புக்கு காரணமான கருமத்தை நிறுத்துதல் அதாவது பலன்கருதா செயல் புரிதல் பற்றற்ற செயல் இதனையே கர்ப்பூர தீபம் காட்டுதல் எமக்குணத்துவது. பூஜையின் போது பச்சைக் கர்ப்பூரமே பன்படுத்தவேண்டும் என்பது ஆகமம் குறித்துக் காட்டுகின்றது. இந்துமதத்தின் எந்த கிரியையாக இருந்தாலும் அதற்கு ஓர் அர்த்தம் இருக்கும். அவை சித்தி பெற்ற சித்தர்கள் வகுத்தது. கர்ப்பூரம் மருத்துவத்தன்மை வாய்தவை இதனாலேயே மக்கள் கூடும் இடங்கள் நோய் அற்ற சுகாதாரமுள்ள இடமாக இருக்க இதனை பயன்படுத்தினர். மக்களுக்கு செய்தியை கொடுக்கும் அதே சமயம் அதன் மருத்துவதன்மையையும் உணத்தியவர்கள் சித்தர்கள்.
கர்ப்பூரத்தின் மருத்துவக்குணத்தை நோக்கும் போது
'கிருமிசல தோஷங் கிளைவலிப்பு சந்தி
பொருமுமந்தம் அங்கிபட்ட புண்ணோ – டெரிசுரங்கள்
வாந்திபித்தஞ் சீதமுறு வாதஞ் செவிமுகநோய்
சாந்திகருப்பூரந் தால்' என்றனர் சித்தர்கள்
பொளிப்பு:
1. 'கிருமிசல தோஷங் கிளைவலிப்பு சந்தி' : கிருமி என்பது உடலில் காணப்படும் நுண்கிருமி அதை அழிக்கவல்லது அத்துடன் சலதோசம், வலிப்பு நோய், சந்நி என்னும் நீரினால் வரும் நோய்களை காக்க வல்லது.
2. 'பொருமுமந்தம் அங்கிபட்ட புண்ணோ – டெரிசுரங்கள்' : பெருமுமந்தம் என்னும் நோய் இது வயிற்றில் ஏற்படுவது. தீ சுட்டபுண், பித்ததிதினால் ஏற்பட்ட சுரம் என்பவற்றை போக்க வல்லது.
3. 'வாந்திபித்தஞ் சீதமுறு வாதஞ் செவிமுகநோய்' : வாந்தி, பித்தம், சீதள வாதம், செவியில் ஏற்படும் நோய்கள், முகத்தில் ஏற்படும் நோய்கள் என்பன போக்க வல்லது.
4. 'சாந்திகருப்பூரந் தால்' : இவை இனைத்தையும் போக்கவல்லது கர்ப்பூரம் என்பதை சித்தர்கள் குறிப்பிடுகின்றனர்.

பொதுவான கர்ப்பூரத்தின் குணத்தை குறிப்பிட்டுள்ளார்கள் சிறப்பாக நோக்கும் போது பச்சைகர்ப்பூரத்தின் குணத்தை நோக்கும் போது.
'அஷ;டகுன்மஞ் சூலை யணுகாது வாதமோடு
துஷ;டமே கப்பிணியுந் - தோற்றாதே –மட்டலருங்
கூந்தன்முடி மாதே கொடிசி கபம்போகுஞ்
சார்ந்தப்சைக் கர்ப்பூரத் தால்' என்றனர் சித்தர்கள்.
பொழிப்பு:
1. 'அஷ;டகுன்மஞ் சூலை யணுகாது வாதமோடு' : எட்டுவித குண்மம் தீரும் சூலை என்னும் வயிறில் ஏற்படும் வலி தீரும், வாதம் என்னும் நோயும் தீரும்.
2. 'துஷ;டமே கப்பிணியுந் - தோற்றாதே –மட்டலருங்' : மேக நோயை போக்க வல்லது.;
3. 'கூந்தன்முடி மாதே கொடிசி கபம்போகுஞ்' : கூந்தல் முடி உள்ள பெண்னே கபம் என்னும் நோயை போக்க வல்லது.
4. 'சார்ந்தப்சைக் கர்ப்பூரத் தால்' : பச்சைகர்ப்பூரத்தால் என்றார்கள் சித்தர்கள்.

பச்சைகர்ப்பூரத்தில் பலவகை உண்டு அவற்றின் பேதம் பற்றிக் குறிப்பிடுகையில்.
'பச்சைக்கர்ப்பூரம் பருவதில் பேதம்உண்டிங்
கிச்சையொடப் பேதம் இசைக்குங்கால் - இச்சகத்துள்
ஈச னொடுவீமன் ஏற்றபூ தாச்சிறையன்
காசறுமுன் றாகுமென்பர் காண்' என்றனர் சித்தர்கள்.
 பொழிப்பு :
பச்சைக்கர்ப்புரத்தில் பலவகை இருந்தாலும் அதில் சிறந்தது ஈசன், வீமன், பூதாச்சிறையன் என்பவையாகும்.
இனி ஒவ்வொன்றாக நோக்குவோம்
ஈசன் என்னும் பச்சைக்கர்ப்பூரத்தின் மருத்துவக்குணம்
'ஈசன்என்னுகும் பூரம்வெண்மை என்பர்அது காரமுமாம்
பேரிய சீதம்உஷ;ணம் பித்தம்மயல் - வீசுகின்ற
பீனிசம்உள் தாகம்இவை போர்த்துவிடும் காந்தியுண்
டான ததுவசியம் ஆம்' என்றனர் சித்தர்கள்.
பொழிப்பு :
1. 'ஈசன்என்னுகும் பூரம்வெண்மை என்பர்அது காரமுமாம்' : ஈசன் என்னும் கர்ப்பூரம் வெண்மை நிறமுள்ளது அது காரமானது.
2. 'பேரிய சீதம்உஷ;ணம் பித்தம்மயல் - வீசுகின்ற' : சீதள உஷ;ணம் பித்தம், மயக்கம் என்பனவற்றைப் போக்க வல்லது.
3. 'பீனிசம்உள் தாகம்இவை போர்த்துவிடும் காந்தியுண்' : பீநசம் உள்தாகம் என்பன நீங்கி காந்தியுண்டாகும்.
4. 'டான ததுவசியம் ஆம்' : வசியமும் உண்டாகும். என சித்தர்கள் இயம்பியுள்ளனர்.

வீமன் என்னும் பச்சைகர்ப்பூரத்தின் குணம்
'வீமன்என்னும் கர்ப்பூரம் மேகஅழுக்குவெண்மை
சேமம் உறுங்குளிர்சி தின்றக்கால் - நாமருவு
நோயகலுந் தாகம்அறும் நுண்பே திரியும்ஆகுந்
தூய மதிமுகத்தாய் சொல்' என்றார்கள் சித்தர்கள்
பொழிப்பு:
1. 'வீமன்என்னும் கர்ப்பூரம் மேகஅழுக்குவெண்மை' : வீமன் என்னும் பச்சைகர்ப்பூரத்தின் நிறம் மேகநிறமாகும்
2. 'சேமம் உறுங்குளிர்சி தின்றக்கால் - நாமருவு' :  உடல்குளிர்சி பெற்றும்
3. 'நோயகலுந் தாகம்அறும் நுண்பே திரியும்ஆகுந்' : தாகம் நீங்கி பேதியும் உண்டாகும்.
4. 'தூய மதிமுகத்தாய் சொல்' : தூமையான சந்திரனைப்போன்ற முகத்தை உடையவளே சொல் என்று சித்தர் கூறுகின்றார்.

பூதாச்சிறையன் என்னும் பச்சைக்கர்ப்பூரத்தின் குணம்
'பூதாச்சிறையன்என்னும் பூரமஞ்சள் கைப்பாகுங்
கோதையர்க்காங் காசங் கொடுமேகம் - வாதாதி
என்னும்ந் தனித்தோஷம் ஏறுமுத்தோ ஷஞ்சொறியுங்
குன்ன விரணமும்போக் கும்' என்றார் சித்தர்.
பொழிப்பு:
1. 'பூதாச்சிறையன்என்னும் பூரமஞ்சள் கைப்பாகுங்' : பூதாச்சிறையன் என்னும் கர்ப்பூரம் மஞ்சளும் கறுப்பும் கலந்த நிறமுள்ளது.
2. 'கோதையர்க்காங் காசங் கொடுமேகம் - வாதாதி' : ஸ்திரிகளுக்காகும் காசம் மேகம் வாத என்னும்
3. 'என்னும்ந் தனித்தோஷம் ஏறுமுத்தோ ஷஞ்சொறியுங்' : மூன்று தோசங்களையும் போக்க வல்லது.
4. 'குன்ன விரணமும்போக் கும்' : சொறி இரணமும் போகும் என்று சித்தர்கள் இயம்பியுள்ளனர்.

பச்சைகர்ப்பூரம் ஆலயங்களில் பயன்படுத்தப்படுவது எவ்வளவு சிறந்தது. ஆலயங்களில் அடியார்கள் கூட்டம் நிறைந்திருப்பது வழமையானது அதனால் வெப்பம் அதிகரித்து சலதோசம் ஏற்படுவது இயல்பு இதனை தடுக்க மருத்துவம் கண்டவர்கள் சித்தர்கள். இறைவனுக்கு தரிசனம் செய்த கர்ப்பூர தீபம் தொட்டு வணங்க அடியார்கள் மத்தியில் வருகின்றது. இதை ஒத்தி அதை கண்களில் ஒத்துவது வழமை இது எப்படிப்பட்ட மருத்துவம் என்பதை சித்தர்கள் அறியாமல் அறியவைக்கின்றனர். அடியார் அதிகரிக்கும் போது பவனசூழல் மாசடையும் அதை சீர் செய்ய கர்ப்பூரதீபத்தில் ஏற்படும் சுவாலையின் புகை உதவுவதை நாம் அறிவோம். சித்தர்கள் மருத்துவம் வியர்க்கத்தக்கது. ஆனால் இன்று பயன்படுத்தும் கர்ப்பூரம் இயக்கையான தல்ல அவை சேர்க்கையானவை இவை உடலுக்கு கேடு விளைவிக்கும். அதை அறிந்து ஆலயங்களில் புரோகிதர்கள் சரியானதை சரியாக அறிந்து உரியதை பயன்படுத்துவது காலத்தின் தேவையுடன் அவசியமே. எதை செய்வதாக இருந்தாலும் அதை சரியாக செய்வதே சரியான பலனை பெற உதவும். போலியானது எதிர்மறையான தாக்கத்தையே தரும் இன்று உலகம் இப்பாடுபட காரணம் அதுவே. இன்று பணத்துக்காக வேதங்கள் விற்கப்படுவதையே காணக்கூடியதாக இருக்கின்றது. உழைப்பதே தவிர வேறோன்றும் இல்லை. மூன்நூறு வருடங்களுக்கு முன்னர் ஸ்ரீ வீரபிரம்மம் அவர்கள் 'வேதம் காசுக்கு விற்கப்படும் பிராமணர்களால் என்றும் பிராமணர்கள் சூத்திரருக்கு அடிமையாகுவர்' என்றும் குறித்துரைத்தது இங்கு குறிப்பிட்த்தக்கது.