குமரி கண்டத்தின் தென்திகையிலேயே வேதங்களும் ஆகமங்களுத் தோன்றின அதுவே சிவபூமி அதனாலேயே தென்நாடுடைய சிவனே போற்றி என்றனர்.
அண்டத்தின் நடுவில் பொன்மலையாகிய மேருமலை விளங்குகின்றது. அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உண்டு. அதுவே நடுநாடி இதனை சுழுமுனை என்பர். மேருவினை நிலத்தில் நடுக்கோடு என்பர். நடுக்போட்டின் வடபாலும் தென்பாலும் உள்ள கோடுகள் வழிக்கோடுகளாகும். இதுவே உடலில் கானப்படும் இடகலை பிங்களை நாடிகளாகும். இதனை திருமூலர் திருமந்திரத்தில்
'மேரு நடுநாடி மிக்கிடை பிங்கலை
கூடுமிவ் வானின் இலங்கைக் குறியுறுஞ்
சாருந் திலைவனத் தண்மா மலயத்தூ
டேறுஞ் சுழுனை இவைசிவ பூமியே'
கூடுமிவ் வானின் இலங்கைக் குறியுறுஞ்
சாருந் திலைவனத் தண்மா மலயத்தூ
டேறுஞ் சுழுனை இவைசிவ பூமியே'
இங்கு வான் வெளியில் நடுக்கோட்டின்நிலையினை இலங்கை என்கின்றார். இவ் இலங்கைக் கோட்டுடன் தில்லைசிற்றம்பலக்கோடு பொருந்திநிற்கின்றது. இதனால் தில்லைக்கும் பொதிகை மலைக்கும் ஊடாகச்செல்லும் கோடு நடுநாடியாகும். இதனையே தென்நாடு சிவபூமி என அழைக்க காரணமானது. இதனை சிறப்பு முறை என்பர். பொது முறையாக நோக்கும் போது இலங்கைக்கும் பொன்மலைக்கும் நடுவில் உள்ளது தில்லையம்பம். இவை இரண்டுக்கும் இடைப்பட்டது சிவபூமி. மேரு நடுநாடி அண்டத்தில் அது நடுரேகை பிண்டத்தில் அது சுழுமுனை. அண்டத்தினுள் இதன் வட அயன் வரைகளும் பிண்டத்தினுள் இடகலை பின்கலை நாடியாகும். இலங்கைக் குறியும் என்னும் போது இலங்யையில் மேருவின் குறியைப்பார்க்கலாம். எனவே திருமூலர் காலத்தில் மேருமலை அழிவெய்தி விட்டது என்பதே பொருள். மேரு என்பது மேரு சுரமேரு குமேரு என மூன்றாகும். மேரு பூமத்திய ரேகையும் பூமியின் ஆச்சு ரேகையும் கூடுமிடமாகும். அதுதான் இலங்கை. எனைய மேருக்கள் துருவங்கள் அவை சுரமேரு வடதுருவம் என்றும் குமேரு தென்துருவம் எனவும் கூறப்படுகின்றது. தில்லை வனம் நடுநாடியில் இருக்கின்றுது.
அகத்துவத்தில் இடகலை பிங்களை உள்ளது. அதாவது எமது முள்ளந்தண்டின் வலப்புறமும் இடப்புறமும் நாடிகள் செல்லுகின்றது அவை சூரியநாடி சந்திர நாடிகளாகும். இவையே இடகலை பிங்கலை ஆகும். அவற்றின் நடுவே சுழுமுனை நாடி செல்லுகின்றது. இது எமது அல்பா கதிரின் அதிகரிப்பால் உருவாகுவது. இவை அனைத்தும் எமது உடல் உள் இருப்பவை அதாவது பிண்டத்தில் அதுபோன்று அண்டத்தில் உள்ளவை தொடர்பாக
அகத்துவத்தில் இடகலை பிங்களை உள்ளது. அதாவது எமது முள்ளந்தண்டின் வலப்புறமும் இடப்புறமும் நாடிகள் செல்லுகின்றது அவை சூரியநாடி சந்திர நாடிகளாகும். இவையே இடகலை பிங்கலை ஆகும். அவற்றின் நடுவே சுழுமுனை நாடி செல்லுகின்றது. இது எமது அல்பா கதிரின் அதிகரிப்பால் உருவாகுவது. இவை அனைத்தும் எமது உடல் உள் இருப்பவை அதாவது பிண்டத்தில் அதுபோன்று அண்டத்தில் உள்ளவை தொடர்பாக
திருமந்திரத்தில் திருமூலர் குறிப்பிடுகையில்
'
இடபிங் கலையிம வானோ டிலங்கை
நடுநின்ற மேரு நடுவாஞ் சுழுனை
கடவுந் திலைவனங் கைகண்ட மூலம்
படர்வொன்றி யென்னும் பரமாம் பரமாம் பரம்றே'
#
நடுநின்ற மேரு நடுவாஞ் சுழுனை
கடவுந் திலைவனங் கைகண்ட மூலம்
படர்வொன்றி யென்னும் பரமாம் பரமாம் பரம்றே'
#
இங்கு இடபிங்கலையாக பொன்மலையம் இலங்கையும் கொள்ளப்படுகின்றது. நடுநாடியான சுழுனை தில்லைவனம். தில்லைவனம் எல்லாவற்றையும் இயக்குகின்றது. இதனாலேயே 'கடவும் தில்லைவனங் கைகண்ட மூலம்' என்று குறிப்பிடுகின்றார். எனவே வடக்கு எல்லை பொன்மலை தெற்கு எல்லை இலங்கை எனவே தென்நாடும் இலங்கையே இதனாலேயே 'தென்நாடுடைய சிவனே போற்றி' என்றாகிவிட்டது. இலங்கை வேதன் இராவணன் சிவபக்தன் கைலயங்கரியையே பேயர்தெடுத்து இலங்கைக்கு கொண்டு வந்தவன். மன்டோதரியும் சிவபத்தை அவளுக்கு அடிக்கடி சிவதரிசனம் கிடைத்ததாக வரலாறு சான்று பகர்கின்றது. சிவன் தென்நாட்டவன் என்ற காரணத்தால் அவன் கறுப்பு நிறமானவன். வடநாட்டு இராமர் வெள்ளை நிறத்தவர். சிவனை வழிபட்டு வரம் பெற்றவர்கள் அசுரர்கள். உதாரணமாக. இராவணன், சூரர்கள்( கஜமுகா சுரன்,நரகாசுரன்,பத்மாசுரன், தரகாசுரன்) அதுபோன்று விஸ்ணுவிடம் வரம்பெற்றவனும் அசுரர்களே நிம்பன் நிசும்பன் போன்றோர். சிவபத்தைனை இழிவு படுத்தி விஸ்ணு பத்தனை மேலோங்க காவியம் படைத்தவர்களே ஆரியர். திராவிட கடவுள் சிவன் ஆரியர்களின் கடவுள் விஸ்ணு ஒருரை ஒருவர் எதிர்த்தகாலமொன்று உண்டு. அக்காலத்தில் சிவபெருமானின் திருவிழவை கண்டவர்கள் இமக்கிரிகையில் கலந்து கொண்டவர் போல தலைமுழுக்குச் செய்வர் அதுபோல சிவபத்தர்களும் விஸ்ணு திருவிழாக்களையும் அப்படியே கருதினர். ஆதிசங்கரதே இவற்றை களைந்து ஒற்றுமைப்படுத்தினர். அக்காலத்தில் தோன்றிய காலியமே இராமாயணம். இறுதியில் பிரமகஸ்தி தோசம் தீர்;க்க இமேஸ்வரத்தில் சிவபூசைசெய்ததன் மூலம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. ஆனால் திருமூலர் பரம்பொருளான சிவப்பரம் பொருளை மட்டுமே திருமந்திரத்தில் இயம்பியுள்ளார்.
குமரிகண்டத்தில் தென்திசையிலேயே வேதமும் ஆகமங்களும் தோன்றின என
குமரிகண்டத்தில் தென்திசையிலேயே வேதமும் ஆகமங்களும் தோன்றின என
திருமந்திரம் திருமூலர் குறறப்பிடுகையில்.
'ஈறான கன்னி குமரியே காவிரி
வேறா நவதீர்த்த மிக்குள்ள வெற்பேழுள்
பேறான வேதா கமமே பிறத்தலான்
மாறாத தென்திசை வையகஞ் சுத்தமே'
வேறா நவதீர்த்த மிக்குள்ள வெற்பேழுள்
பேறான வேதா கமமே பிறத்தலான்
மாறாத தென்திசை வையகஞ் சுத்தமே'
திருமூலர் வாழ்த காலம் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும் ஆண்டுகொன்றாக மூவாயிரம் பாடல்களை பாடியதாக வரலாறு. எனவே இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட குமரிக் கண்டதையே அவர் இப்பாடலில் பாடியுள்ளார். இக்கண்டம் கடல்கோள்களால் அழி;து கடல்கொண்டு எஞ்சியது தென்பகுதியில் இலங்கை மட்டும்தான். இலங்கையின் கீழ்பகுதியில் தான் குமரியாறு ஒடி இருக்கின்றது என்பது இன்றைய ஆய்வுகள் கூறுகின்றது. இங்கு குமரி மலை, மகேந்திரமலை இலங்கைக்கு ஈழம் என்றும் அழைக்கப்பட்டது. தென்பகுதியில்; இறுதியில் ஒளிநாடு என நாற்பத்தி ஒன்பது தமிழ் நாடுகள் இருந்தாதக பண்டைய நூல்கள் கூறுகின்றன். அக்கண்டத்திலேயே சிறந்த தீர்தங்கள் ஒன்பதும் ஏழு மலைகளும் குறிப்பிட்டு அதன் தென்பகுதி குமரிக் கண்டம். அதில் குமரிஆறு காவேரி போன்ற நதிகளும் குமரிமலை, மகேந்திரமலை தொதிகைமலை போன்ற ஏழுமலைகளும் உள்ள நாடாகிய தென்நாட்டிலே வேதஆகமங்கள் தோன்றின். இதில் இலங்கையே எஞ்கியுள்ளது.எனையவை கடல் தன்னகத்தே ஆக்கிக்கொண்டது. இதனை திருத்தொண்டர் புராணத்தில் வரும் வெண்பா குறிப்பிடுகின்றது.
'
'
காவேரியே பெண்ணையம ராவதி பென்முகலி
மேவு பொருநை மிளிர்வையை – தாவில்கப்பை
கொள்ளிடம்பா லிக்கெடிலம் கூறுமண்ணி முத்தாறு
வெள்ளாறு கங்கை நிவா மேவு' என்று குறிப்பிடுகின்றார்.
மேவு பொருநை மிளிர்வையை – தாவில்கப்பை
கொள்ளிடம்பா லிக்கெடிலம் கூறுமண்ணி முத்தாறு
வெள்ளாறு கங்கை நிவா மேவு' என்று குறிப்பிடுகின்றார்.
குமரியாறு என்பது இலங்கைக்கு கீழாக இருந்திருக்கின்றது. ஒளிநாடு தென் எல்லையா இருந்திருக்கின்றது. மகேந்திர மலையில்தான் சுரசம்காரம் நடைபெற்றதாக வரலாறு கூறுகின்றது. இலங்கையே சிவபூமி அன்று குமரிகண்டத்தின் தென் பகுதி ஒளிநாடு ஆனால் அழிவின் பின் இன்றுள்ளபகுதி இலங்கை இதுவே தென்நாடு.
இராமன் கருப்பு................. இராவணன் சிங்களவன் அது தெரியுமா....................
ReplyDelete