Sunday, March 26, 2017

மனிதனின் குணங்களை மூன்றாகப்பிரிக்கின்றனர் அவை சாத்வீகம், தாமதம், இராஜதம்

மனிதனின் குணங்களை மூன்றாகப்பிரிக்கின்றனர் அவை சாத்வீகம், தாமதம், இராஜதம்

மனிதனின் குணங்களை மூன்றாகப்பிரிக்கின்றனர் சித்தர்கள் அவை சாத்வீகம், தாமதம், இராஜதம் என கூறுகின்றன். சாத்வீகம் என்பது சாதுவான குணமான நேரான எண்ணங்களால் உருவானவையாகவும் தாமதம் எதிரான எண்ணங்களால் உருவானதாகவும் இராஜதம் நான் என்ற அகங்கார மமதையால் உண்டானதாகவும். கொள்ளப்படுகின்றது. இவற்றுக்கு காரணம் விதி என்பதும் உண்டு. ஏன்னெனில் ஆக்கம் நடைபெற வேண்டடில் அதற்கு முயற்சி வேண்டும் முயற்சி இருவகையில் அமையும் ஒன்று மனுக்குலத்தின் நன்மை மையமாகக் கொண்டது இது தன்னலமற்ற பொதுநலமே மற்றையது நான் சாதிக்க வந்தவன் என்னால் எல்லாம் முடியும் என்பது இங்கு சிந்திக்க வேண்டியது தான்மட்டும் வாழ்வதற்கே எல்லாம் மற்றவார்களுக்குக்கு இல்லை என்பது தான் இங்கு பிரச்சனை. இதில் முதலாவதை நல்ல ஆணவம் என்றும் மற்றையதை மமதை என்றும் தத்துவவியளாளர்கள் குறிப்பிடுகின்றனர். இதில் இரண்டாவது வகை தன்னைவிட மேலான எண்ணம் என்றும் மற்றையது தன்னை விட கீழான எண்ணம் எனவும் குறிப்பிடுகின்றனர் இவை இரண்டு மனித மனதில் தாக்கம் செலுத்த வல்லவை இவை இரண்டு சமநிலையை மாற்றி பிரச்சனையை தோற்று விக்கக்கூடியவையே. நேர்மையான உழைப்பாக இருந்து தனக்கும் தன்னைச்சாந்தவர்களுக்கும் உண்மையில் உதவி தேவையானவர்;களுக்கும் என உழைப்பதே சிறந்தது. ஊழைப்பில் தன்னலம் இருக்கத்தான் செய்யும் ஆனால் எல்லாம் தனக்கு மட்டும் என்பது இல்லை. அதிலும் சிலர் இறைவன் தந்தது என்னை அனுபவிக்கத்தான் என்ற அறியாமையில் முழ்குபவர்களும் உண்டு. அதுவல்ல உண்மை மற்றவர்களுக்கு நலிவடைந்த மக்களுக்காவே அவை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். ஆதனை தனதாக்கினால் அது கர்மா நமது அடுத்த பரம்பரைக்கு இட்டுச்செல்லும் எச்சம் அது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
எமது உணவுப்பழக்க வழக்கமும் எமது குணங்களை மாற்றி அமைக்க வல்லவை. சாத்வீக உணவு வகைகள் சாத்வீக போக்கை எற்படுத்த வல்லவை. ஆசைவ உணவுகள் தாமதகுணத்தை எற்பதுத்த வல்லவை. இவை மிருககொழுப்பாக இருப்பதால் முதலில் உப்பாக மாறி அவை கரைக்க முடியாத கொழுப்பாக மாறி உடலில் மிருகத்தன்மையினை ஏற்படுத்தி வஞ்சகம், சூது, பொறாமை என்பவற்றை மூலம் மனிதனை மனிதத்துவம் அற்ற மிருமாக்கி விடுகின்றது. நாம் கடவுள்ளாக தேவையில்லை ஆகக் குறைந்தது மனிதனாக வாழ்ந்தால் போது.
ஓம் சிவசிவ சம்போ ஹரஹர சம்போ மஹாதேவ சம்போ சம்போ மஹாதேவ ஓம்

No comments:

Post a Comment