Wednesday, March 8, 2017

தூதுளையின் மருத்துவக்குணம் பற்றி சித்தர்கள் மிகவும் அழுத்தமாக கூறி இருக்கின்றனர்.

தூதுளையின் மருத்துவக்குணம் பற்றி சித்தர்கள் மிகவும் அழுத்தமாக கூறி இருக்கின்றனர்.


உடலுக்கு வலுவூட்ட உணவே மருந்தாகக் கண்டவர்கள் அவர்கள். மனிதனை படைத்த இறைவன் அவனுக்கு ஏற்படும் நோய்களையும் அதற்கான மருந்தையும் இயற்கையாக படைத்துள்ளான். அவற்றின் தன்மையை அறிந்து உலகுக்கு கொடுக்க சித்தர்களாகவும் மகரிஷpகளாகவும் வந்தான் இறைவன். அதை அறியாத மனிதர்கள் தம்முள் இருக்கும் இறைவன் அறிய எங்கெங்கோ அலைகின்றனர். போலிகளில் ஏமாறுகின்றனர். அவன் அருள் இருந்தாலேயே உண்மையான சித்தர்கள் மகரிஷpகளையும் அறிய முடியும். இது கலியுகம் அல்வா? அதன் தன்மை இதுதான் என்ன செய்யலாம். அதுவும் நடைபெறாவிட்டால் கலியுகம் என்பதே தெரியாது அல்வா?
தூதுளை யிலையின் குணம்
'காதுமந்தங் காதெழுச்சி காசந் தினவுமதம்
ஓதுமந்த முத்தோஷம் உட்சூலை – தாதுநட்ட
மீதுளைப் பத்திரியை தேவச்செய் வாராய்ந்தோர்
தூதுளைப் பத்திரியைத் துய்த்து'
பொழிப்பு:
1. 'காதுமந்தங் காதெழுச்சி காசந் தினவுமதம்: காது மந்தமாதல், கண்தெளிதல், காசம், தினவு, மந்தம்
2. ஓதுமந்த முத்தோஷம் உட்சூலை – தாதுநட்ட: மந்தம், முத்தோசம், உட்சூலை, தாதுநஷ;டம்
3. மீதுளைப் பத்திரியை தேவச்செய் வாராய்ந்தோர்: மேலுளைப்பும் போம்.
4. தூதுளைப் பத்திரியைத் துய்த்து':  தூதுளை இலையால் என்று இயம்பு கின்றார் சித்தர்கள்.
தூதுளம் பூவின் குணம்
'புஷ;டியுண்டாந் தாதுவுமாம் பொங்கழகோ டாற்றன்மிகும்
முட்டத ரைத்து முதிர்ந்தவளைக் - கட்டழகு
மாதுளத்தி னீங்கா துவைத்திடவும் எண்ணம்உற்றால்
தூதுத்தின் பூவுண்ணக் சொல்'
பொழிப்பு:
1. 'புஷ;டியுண்டாந் தாதுவுமாம் பொங்கழகோ டாற்றன்மிகும்: தோகபுஷ;டியும் தாதுபுஷ;டியும் உண்டாகுவதுடன் தேகம் அழகு பெறும்.
2. முட்டத ரைத்து முதிர்ந்தவளைக் - கட்டழகு: கட்டழகு உண்டாகும்.
3. மாதுளத்தி னீங்கா துவைத்திடவும் எண்ணம்உற்றால்: உள்ளத்தில் நீங்காது வைத்திடவும் எண்ணம் உண்டானால்.
4. தூதுத்தின் பூவுண்ணக் சொல்: தூதுவளையின் பூவை உண்ணச் சொல். என்றனர் சித்தர்கள்.
தூதுளங் காயின் குணம்
'ஐயம்உடல் பித்தம் அகலும் அரோசம்போந்
தையலே வாதந் தணியுங்காண் - வையமிசை
ஓதுங் குடல்வாதம் ஓடும் மலம்ஒழியுந்
தூதுளங் காய் உண்ணச் சொல்'
பொழிப்பு:
1. 'ஐயம்உடல் பித்தம் அகலும் அரோசம்போந்: ஐயம், பித்தம் அகலும் அத்துடன் அரோசி இல்லாமல் போகும்.
2. தையலே வாதந் தணியுங்காண் - வையமிசை: தையலே வாதத்தை இல்லாதொழிக்கும்
3. ஓதுங் குடல்வாதம் ஓடும் மலம்ஒழியுந்: குடல்வாதம் இல்லாதொழிந்து மலம் போகும்.
4. தூதுளங் காய் உண்ணச் சொல்': தூதுளங் காயை உண்ணச்சொல்
தூதுளம் பழத்தின் குணம்
'கபக்கட்டு கோழை கதித்ததிரி தோஷங்
குபுக்கென் றெழும்புநீர்க் கோவை – கபுக்கென்
றழுத்துவிஷ மும்போம் அடர்தூது ளத்திற்
பழுத்துவிழுங் காயையுண்டு பார்'
பொழிப்பு:
1. 'கபக்கட்டு கோழை கதித்ததிரி தோஷங்: கபக்கட்டு, கோளை, திரிதோசம்
2. குபுக்கென் றெழும்புநீர்க் கோவை – கபுக்கென்: நீக்கோவை
3. றழுத்துவிஷ மும்போம் அடர்தூது ளத்திற்: விஷம் என்பவைகளை போக்க வல்ல தன்மையுள்ளது
4. பழுத்துவிழுங் காயையுண்டு பார்: பழுத்து விழுந்த காய்யை உண்பதால்
தூதுளையின் சமூலகுணம்
'தூதுபத்திரி யூண்சுவை யாக்கும்பூ
தாது வைத்தழைப் பித்திடுங் - காயது
வாத பித்தக பத்தக பத்தை மாற்றும்வேர்
ஓதும் வல்லிபன் னேயுமொழிக்குமே'
பொழிப்பு:
1. 'தூதுபத்திரி யூண்சுவை யாக்கும்பூ: தூதுவளை பத்திரி உணவுக்கு சுவை உண்டாக்கும்
2. தாது வைத்தழைப் பித்திடுங் - காயது: பூ தாதுபுஷ;டி உண்டாக்கும்
3. வாத பித்தக பத்தக பத்தை மாற்றும்வோ: காய் வாதபித்தம் கபமும் போம்
4. ஓதும் வல்லிபன் னேயுமொழிக்குமே: வேர் பல்நோய் போகுகும்.



No comments:

Post a Comment