Monday, March 20, 2017

முத்திக்கு வித்தாகும் சக்தி வழிபாடு

முத்திக்கு வித்தாகும் சக்தி வழிபாடு
முத்திக்கு ஞானம் அவசியமானது. அதை சக்தியின்றி பெறமுடியாது. இதுவே வேதம் கூறும் உண்மை. அதனாலேயே சித்தர்களும் மகரிஷிகளும் ஆதிசக்தியை வேண்டி தவம் இருந்து அடைதற்கரிதான தவசக்தியும் வலிமையையும் பெற்றனர். சக்கியே முத்திகு மூலகாரணம். சுத்தசிவம் பரம்பொருள். அது இயக்கமற்றது அதை இயக்குவதே ஆதிசக்தி அதை சிவோஹம் என்று அழைப்பர் அதிலிருந்து பராசக்தி இதனை ஜகந்தியாமக சக்தி + ஜகத் என்று அழைப்பர். இதிலிருந்து இச்சா, ஞான, கிரியா, சக்திகள் தோன்றின இவை முறையே பிம்மா, விஸ்ணு, ருத்திரன்னும், முறையே விராட், ஸ்வாட், ஸம்ராட் தோன்றியது. இதன் முறையே ஸ்ருஷ;டி என்னும் படைத்தலும் ஸ்திதி என்னும் கார்த்தலும் ஸம்ஹாரம் என்னும் அழித்தலும் மும்மூத்திகளுக்கு தொழிலாக அமைந்தது. இதனை
'பராசக்தி: பராநிஷ்டா, ப்ரஜ்ஞான – கனரூபிணி
இச்சாசக்தி - ஜ்ஞானசக்தி – க்ரியாசக்தி - ஸ்வரூபிணி
சிச்சக்தி: சேதனாரூபா, ஜடசக்தி: ஜடாத்மிகா என்று
'அம்ருதானந்தயோகி' என்று குறிப்பிடுகின்றது.
சுத்தசிவத்தினிடம் முதலில் உருவாகுவது 'அஹம்' என்னும் உணர்வே அதுவே அன்னையின் வடிவம் அதற்கு ஆதிசக்தி என்று பெயர். வேதம் 'தத்துவம் அஸீ அஹம் பிப்மாஸ்மீ' என்று இயம்புகின்றது. ஆதிசக்தியின் ஆவிர்ப்பாவத்தினால் பணிமலை போலான சுத்தசிவத்துக்குத் தன் ஸ்வரூப ஆனந்தம் உண்டாகின்றது. அதனால் சிவமே தன்னை அறிய வியாகியான ரூபியியானாள். இதனாவேயே அன்னைக்கு 'விமர்சரூபிணி' என்றொரு பெயர்ருண்டு. அவள் சித்சக்தியை ஆச்ரயித்து அத்யஸ்த மாயா சக்தியை உருவாக்கினாள் இதனையே பராசக்தி என்று அழைக்கின்றனர். இதுவே உலகுக்கு வித்துப்போல் காரணமானாள். அவளை கரசரணாதி அவயவங்களுடைய திவ்ய மங்கள விக்ரஹ தாரணியாய்க் கருதுவோமானால் அத்தகைய அவளுடைய மூர்த்தியின் திருபாதத்துளிகளே இச்சா,ஞானா, கிரியா சக்திகளான ப்ரம்மா, விஷ்ணு, உருத்திரன் என்ற திவிலைகள் கோடி கோடியாக எண்ணிலடங்காத அளவுக்கு தோன்றி மறைந்த வண்ணம் இருக்கின்றனர். அதைப் போன்றே விராட், ஸ்வராட், ஸம்ராட் என்ற பிரம்ம விஷ்ணு உத்திரர்களைக் கொண்ட பிரஹ்மாண்டங்களும் அத்தகையதே. அதனால்
'ஆதிசக்தி: அமேயாத்மா, பரமா, பாவனாக்ருதி: அநேக கோடி ப்ரஹ்மாண்ட ஜனனீ' "
என்று சக்தி துதிக்கப்படுகின்றாள்.
அவளே பஞ்சப்ரம்ம ரூபிணி அதனாலேயே அவளை 'பஞ்சப்ரேதாஸநாஸீநா பஞ்சப்ரஹ்மஸ்வரூபிணி' என்று
துதிக்கப்படுகின்றாள். நிஷ்கலமான பரம்பொருள் ஸகல- நிஷ்கல வடிவில் மூன்றாகவும் பின் ஐந்து எழு என விரிந்து செல்கின்றாள். அதனை 'யத்ர யத்ர மனோ யாதி தத்ர தத்ர ஸமாதய:' என்கின்றது.
'பஞச- யஜ்ஞ- ப்ரியா, பஞச –ப்ரேத- மஞ்சாதிசாயினீ, பஞ்சமீ,பஞ்ச- பூதேசீ, பஞ்சஸய்க்யோபசாரிணீ, பஞ்சக்ருத்ய –பராயணா'
என பரதேவதையை ஐந்து ஐந்தாகவே அவளை வழிபாடு செய்கின்றோம். தைத்திரீய உபநிஸத் கூறுகின்றது ' பாங்க்தம் வா இதம் ஸர்வம் பாங்க்தேனைவ பாங்க்தம் ஸ்ப்ருணோதீதி' பஞ்சகிருத்தியம், பஞ்சபூதங்கள், பஞ்சதன்மாத்திரைகள், பஞ்கப்பிராணர்கள் பஞ்சக மேந்திரங்கள், பஞ்ச ஞானேந்திரியங்கள், பஞ்சகோசங்கள், பஞ்சமூர்திகள் என பிரபஞ்சம் ஐந்தின் வடிவமாக இருக்கினறது. ஆனால் வேதங்கள் மட்டும் நான்கு. ஐந்தாவது வேதம் ப்ரம்மவேதமாகும். ஐந்தின் வடிவமான பரதேவதை பஞ்சோபசாரங்களான கந்தம், புஷ்பம், தூபம், தீபம், நைவேத்தியம் என பூஜிக்கப்படுகின்றாள்.
பரதேவதை 'பஞ்சப்ரஹ்மஸ்வரூபிணி' அவள் ப்ரம்மா, விஷ்ணு, ருத்திரன், ஈசானன், ஸதாசிவன் ஐந்து வடிவில் நின்று ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம், திரோதானம், அனுக்கிரஹம் என்னும் பஞ்சகிருதியங்களையும் அவளே செய்கிறாள். அவன் இன்றி எதுவும் இயங்காது. அதனாலேயே 'சக்தி இன்றி சிவம் இல்லை. சிவம் இன்றி சக்தி இல்லை' என்போர். பராசக்தியின் இயக்கம் இல்லாதபோது ப்ரம்மா முதலிய ஐவரும் பிரேதங்களே இதுவே தத்துவ இரகசியம்
'ப்ரஹ்மா விஷ்ணுச்ச ருத்ரச்ச ஈச்வரச்ச ஸதாசிவ: பஞ்சப்பிரேதா வராரோஹே நிச்சலா ஏவ தே ஸதா' என்று வேதம் கூறுகின்றது.
பஞ்சப்பரம்மங்கள் அனைத்துமே சக்தி வடிவம் சக்தியின் அனுக்கிரகம் இல்லாமல் முத்தி இல்லை. முத்திக்கு ஞானம் அவசியம். இதனால் அம்பிகையை
' சேஷத்ரஸ்வருபா சேஷத்ரேசீ சேஷத்ரஜ்ஞ – பாலினீ
சஷயவ்ருத்தி – விநிர்முக்தா சேஷத்ரபால - ஸமர்ச்சிதா' என்று குறிப்பிடுகின்றது ஸ்ரீலலிதா ஸஹஸ்ர நாமம்.
அம்பிகையே சேஷத்திரமாகவும் சேஷத்திரஞானமாகவும் இருப்பவள் அவளே. சேஷத்திரமாக கருதப்படுபவை ஐம்பூதமான பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாசம் என்பவையும் அகங்காரம், புத்தி, மூலப்பிரகிருதி என்னும் இவை மூன்றும் ஞானேந்திரியங்கள், கர்மேந்திரியங்கள், மனத்துடன் கரணங்கள் பதினொன்றும் சப்தம், ஸ்பர்சம், ரூபம், ரஸம், கந்தம் என்ற இந்திரிய விஷயங்கள் ஐந்தும் சேர்ந்து இருபத்து நான்கு தத்துவங்களும் கூடிவரிதல் சேஷத்ரம் எனப்படும். ஞானமில்லாமல் சோசஷ தருமத்தைப் பற்றி பலவாறு கேட்டாலும் பல கருமனுட்டானங்களைச் செய்தாலும் மோசஷம் அடையமுடியாது. அம்பிகையின் அனுக்கிரகம் இருந்தாலே அதை அடைமுடியும். ஜீவனுடைய தளைகளைளாகிய ஆறியாமையை போக்கி பரமானந்த அனுபவத்தை அருளுகின்றாள். இதனால் அம்பிகையை 'பசுபாசவிமோசினி' என்று வழிபடப்படுகின்றால். இதனை
'பக்திமத் - கல்பலதிகா பசுபாச- விமோசினீ
ஸம்ஹ்ருதாசேஷ- பாஷண்டா ஸதாசார- ப்ரவர்த்திகா' என்று துதிக்கப்படுகின்றது ஸ்ரீலலிதா ஸஹஸ்ர நாமத்தில்.
ஒருமுறை குருதேவர் ஸ்ரீ ராமகிஷ்ணபரமஹம்சர் காசிவாரநாசிக்கு யாத்திரை சென்ற போது அரிச்சந்திர காட்டில் தவத்தில் திளைத்த போது அங்கு இறந்த ஆத்மா ஒன்றுக்கு அம்பிகை மோட்ச வாசலை திறக்க சிவபெருமான் அனுப்பும் திவ்விய காட்சியை ஞான கட்சியாக கண்டார். இதனாலேயே சித்தர்களும் மகரிஷிகளும் ஆதிசக்தியின் அருள் சக்தியை பெற்றே அவர்கள் அடைதற்கரிய சக்திகளை பெற்றுனர். அதனாலேயே நாம் அவர்களை வழிபடும் போது அவர்களிடம் நீங்கள் பெற்ற அருட்சக்தியை எங்களுக்கு வழங்குமாறு வேண்டுதல் செய்கின்றோம். அவள் நிர்க்குணமாகவும் ஸகுணமாகவும் உபாசனை செய்யப்படுகின்றாள். அதனாலேயே அவளை
' நீராகா ராகமதனீ நிர்மதா மதநாசினீ
நிச்சிந்தா நிரஹங்காரா நிர்மோஹா மோஹநாசினீ
நிர்மமா மமதாஹந்த்ரீ நிஷ்பாபா பாபநாசினீ
நிஷ்க்ரோதா க்ரோதசமனீ நிர்லோபா லோபநாசினீ
நி:ஸம்சபா ஸம்சயக்னீ நிர்ப்பவா பவநாசினீ ................ என்று
சுலோகங்கள் நீண்டுகொன்டே செல்லுகின்றது. பரதேவதையான அம்பிகையை ' நிராதாரா, நிரஞ்சனா, நிர்லேபா, நிர்மலா, நித்யா, நிராகாரா, நிராகுலா, நிர்க்குலா, நிர்க்குணா, நிஷ்களா, சாந்தா' என்று பாடி பரவி வழிபட்டால் நம்மிடம் உள்ள ' காமக் குரோத லோப மோஹ மத மாச்சரியம்' என்ற கறைகள் நீங்கி உள்ளம் அம்பிகையின் நித்திய வாஸ திருக்கோயிலாக விளங்கும். அவள் வாஸம் செய்யும் வீடு எமது உடல். குருதேவர் ஸ்ரீ ராமகிஸ்ணர் குறிப்பிடுகின்றார் 'மணியும் அதன் ஒளியும் போல நிர்க்குணமான பரம்பொருளே சகுணமாயும் உள்ளது. பிம்மமாயிருக்கும் பொருளே சக்தியுமாய் உள்ளது. கிரியையற்றதாகக் கருதும் போது அது பிரம்மம் எனப்படும். படைத்து காத்து அழிக்கும் போது அது சக்தி எனப்படுகின்றது. எனவே எல்லாமே சக்தியின் வடிவவே அவள் இன்றி மோட்சம் இல்லை. முத்திக்கு வித்தே ஆதிசக்தியே

No comments:

Post a Comment