Monday, March 20, 2017

கொடிஸ்தம்பம் முள்ளம்தண்டா? ஆண்குறியா?

“கொடிஸ்தம்பம் முள்ளம்தண்டா? ஆண்குறியா?”



ஆலயங்களில் காணப்படும் கொடிஸ்தம்பாம் எமது முள்ளந்தண்டு. அது முப்பத்திரண்டு பகுதிகளைக் கொண்டது. அவை எமது முள்ளந்தண்டில் உள்ள கணுக்களின் அளவை ஒத்தது. இது மூன்று பகுதிகளைக் கொண்டது. அவை படைத்தலுக்குரிய பிம்மபாகம் காத்தலுக்குரிய விஸ்ணு பாகம் அடுத்து உத்திரனுக்குரிய அழித்தல் பாகம். இவை முறையே சதுரம், எட்டுப்பட்டம், வட்டமாக அமைந்திருக்கும். இதன் அடியில் குண்டலினி சக்தியாக இருக்கும் முலாதார மூர்த்தியான தம்பவிநாயகர் விற்றிருப்பார் இதில் மேல்நோக்கி ஆறு ஆதாரங்களும் அமைந்திருக்கும். அத்துடன் மூன்று மண்டலங்களான அக்னி, ஆதித்திய, சோம மண்டலங்கள் அமைந்திருக்கும். மகோற்சவத்தின் போது இதில் கொடி ஏற்றப்படும். அப்போது இதில் தர்ப்பைகயிறு, நூல்கையிறு கொடிச்சேலை என்பன காணப்படும்.இதில் தர்ப்பை கயிறு சூரிய நாடி, நூல் கயிறு சந்திர நாடி, கொடிச்சேலை சுழுநாவான குண்டலினி அது மேலே விரிந்து பாம்பு படம் ஏடுத்தது DSC00919போல வைத்து இதை அரவம் சுற்றி இருப்பது போல சுற்றிக்கட்டுவர். இதை சிலர் ஆண்குறி என்றும் பலிபீடத்தை பெண்குறி கருதின்றனர் இது எந்தளவுக்கு சரி என்பது அடியேன் அறியேன். நாந்தி சீவாத்மா கற்பக்கிருகம் பரமாத்துமா எப்போதும் சீவாத்துமா பரமாத்துமாவை நாடியே இருக்கும் இவை இரண்டுக்கும் நடுவில் நாம் தடையாக இருக்கக்கூடாது. (குறுக்கறுக்கக் கூடாது. )என்பது ஐதீகம். பலிபூடம் எம்மிடம் இயல்பாகவே செம்பில் களிம்புபோல பற்றி இருக்கும் ஆணவம் நம்மை உண்மையில்லாததை உண்மை எனக்காட்டும் மாயை நாம் செய்த வினை இவை அனைத்தையும் இறைவன் முன் காணிக்கையாக பலியிடும் இடம். மகாஉற்சவம் என்பது நித்திய நைமித்திய பூஜைகளில் ஏற்பட்ட குறைகளை நிவர்த்தி செய்யவே நடைபெறுகின்றது. அதனால் கிடையாக அமைக்கப்பட்ட உடல் அமைப்பைக்கொண்ட ஆலயம். கொடி ஏற்றத்தில் நிமிந்து நிற்கின்றது. அக்காலத்தில் மகாஉற்ச்சவ குரு உட்பட் அடியர்கள் அனைவரும் தாம்பத்தியம் காக்க வேண்டும் அதனால் ஆலய குரு, மகாஉற்ச்சவ குரு , அறங்காவலர்கள் அனைவரும் ஆலயத்தில் காப்புக்கட்டி ஆலயத்தில் தங்கி இருக்க வேண்டும் என்பது ஐதீகம். கொடி ஏற்றி இருக்க தாம்பத்தியம் ஏற்படுத்தி இந்திரியத்தை இறக்கக்கூடாது. என்பது விதி. இந்திரியத்தை சுழுனா நாடியின் மூலம் சகஸ்திராதாரத்தில் அமுதம் சொரியவைப்பதே யோகிகள் யோகப் பயிற்சி மூலம் செய்வதே குண்டலினி யோகம். இதனால் அமித நிலை அடைகின்றனர் யோகிகளும் சித்தர்களும். அதுவே பிறவாமைக்மைக்கும் பற்றின்மைக்கும் வழிவகுக்கும் என்பதே சித்தர்கள் கருத்து

No comments:

Post a Comment