திரிகடுகின் குணம்
திரிகடுகு என்பது சுக்கு, மிளகு, திப்பிலி இவை மூன்றும் திரிகடுகு ஆகும்.
சித்தர் பாடல்
'முக்கடுகால் ஆசியநோய் மூலங் கொடிறுபிணி
திக்கடுபாண் டோடு சிரத்துறுநோய் - அக்கடுக்குந்
தாவரநஞ் சென்றுலகிற் சாற்றுமிந் நோய்முழுதுந்
தீவரநஞ் கண்டிற்குந் தேர்'
பொழிப்பு:
1. 'முக்கடுகால் ஆசியநோய் மூலங் கொடிறுபிணி: ஆசியநோய், மூலம், கன்னநோய்
2. திக்கடுபாண் டோடு சிரத்துறுநோய் - அக்கடுக்குந்: பாண்டு, தலை நோய்,
3. தாவரநஞ் சென்றுலகிற் சாற்றுமிந் நோய்முழுதுந்: எலும்பைப்பற்றிய தாவர விசநோய்கள்
4. தீவரநஞ் கண்டிற்குந் தேர்': என்பற்றை தீர்க்கும்.
இன்னுமோர் பாடலில்
'திரிகடுகால் சீதபித்தஞ் சிக்குலைநோய் கீட
எரிகடுதேள் ஈளை யிருமல் - முடுகுசந்நி
யாசம் அருசி யபஸ்மாரம் அற்புதப்புண்
வீசுசர்க்க ராற்புதம்போம் வீள்'
பொழிப்பு:
1. 'திரிகடுகால் சீதபித்தஞ் சிக்குலைநோய் கீட: சீசம், பித்தம், நாக்கு நொய்,
2. எரிகடுதேள் ஈளை யிருமல் - முடுகுசந்நி: புழு, தேள்விஷம், ஈளை, இருமல், சந்நியாசம்
3. யாசம் அருசி யபஸ்மாரம் அற்புதப்புண்: அருசி, அபஸ்மாரரோகம், அற்புதப்புண்
4. வீசுசர்க்க ராற்புதம்போம் வீள்': ஒருவித விரணமும் போம்.
திரிபலத்தின் குணம்
திரிபலம் என்பது கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய ஆகிய மூன்றின் சேர்க்கை இவை சமபலம் எடுத்து அதை பெடிசெய்து. பசும்பானையில் பாலை வார்த்து அதில் வண்டு கட்டி ஆவியில் தயார்செய்து வைத்த பொடியை ஆவியில் அவித்து தயார்படுத்திக்கொண்டு ஒரு தேக்கரண்டி வீதம் காலை மதியம் மாலை உணவருந்த முன் அரைமணித்தியாலங்கு முன் அருந்திப pன் உணவருந்த வேண்டும்.
திரிபலத்தின் மருத்துவ குணம் பற்றி சித்தர்பாடல் குறிப்பிடுகையில்
'வித்திரதி நாசிநோய் வெண்குஷ;டம் ஆசனப்புண்
குத்திருமல் பாண்டுகுஷ;டம் குன்மம் இரைப் - பெற்றுமத
மூர்ச்சைபீலி கம்பிரமி யொடுருபுண் சர்வவிட
மூர்ச்சையறுமுப்பலந்தான் முன்'
பொழிப்பு:
1. 'வித்திரதி நாசிநோய் வெண்குஷ;டம் ஆசனப்புண்: நரம்பிலுண்டாகுங் கட்டி, நாசிநொய், வெண் குஷ;டம், ஆசனவாய்ப்புண்
2. குத்திருமல் பாண்டுகுஷ;டம் குன்மம் இரைப் - பெற்றுமத: குத்திருமல், பாண்டு, குஷ;டம், அரைப்பு மத
3. மூர்ச்சைபீலி கம்பிரமி யொடுருபுண் சர்வவிட: மூச்சைபீலீகம், பிரமியம், வயிற்றுவலி, புண், சர்வவிசம்,
4. மூர்ச்சையறுமுப்பலந்தான் முன்': மூச்சையும் அறுக்கும் முப்பந்தான்.
திரிகடுகு, திரிபலத்தின் குணத்துக்கும் தனிதனி மூலிகையின் குணத்துக்கும் மருத்துவக்குணம் வேறு அவற்றைத் தனித்தனியாக நோக்கும் போது அவை புரியும்.
No comments:
Post a Comment