கனிகளில் சக்கரவத்தி
தேவிடாத தேன்கனி தேடி உண்ணும்
மாங்கனி வி நாயகன் பெற்ற ஞானக் கனி அது
சித்தர்கள் கூறும் மங்காப்பாலது ” இவ்வாறு சிறப்பு மிக்கது மாங்கனி இக் கனியின் மருத்துவப்பாகம் தெடர்பாக தேரையார் தமது பதார்த்த குணசிந்தாமணியில்
“தின்றால் தினவெடுக்கும் தீபனம் போம்
நெஞ்சு எரிவாம் அன்றேல் வழித் தோடல்
அகலும் காண் தூன்றி மிக வாதக்கரப்பானும்
வண் கிரந்தியும் பெருகும் சுதக்கணியில் சுகம்” எனக் கூறுகின்றார்.
தாவரவியல் பெயர்:Magnaliopsida.
2. “தீபனம் போம்” இங்கு தீபனம் என்பது பசி இருக்காது நன்றாகச் சாப்பிட்ட மாதிரி வயிறு நிறைந்திருக்கும்.
3. “வழித் தோடல் அகலும் காண்” இங்கு வழித் தோடல் என்பது விழித் தோடல் அதாவது கண்நோய் என்று பொருள்படும் மாங்கனியை உண்டவுடன் கண்நோய் மாறும் எனக் குறிப்பிடுகின்றார்.
4. “தூன்றி மிக வாதக்கரப்பானும் வண் கிரந்தியும் பெருகும்” உடலில் ஏற்hடுகின்ற அரிப்பு கிரந்தி எனப்படும். தொண்டையில் ஏற்படும் அரிப்பு கரப்பான் எனப்படும். இவை ஏற்படும்.
5.“சுதக்கணியில் சுகம்” சுதக்கனி என்பது மாங்கனி . இக்கனி அநேகமான சத்துப் பொருள் உள்ள அற்புதக் கனி இது உடலுக்குச் சுகத்தைத் தரும் என்று குறிப்பிடு கின்றார்.
நவீன அறிவியல் கூறும் கருத்து:
“வழித் தோடல் அகலும் காண்” இக்கருத்தை ஆமோதித்து மாங்கனியில் “வீக்கா கரோட்டென்” ( B- Carotene)என்ற ஓர் சத்துப் பொருள் ஆறாயிரத்து நாநூற்று இருபத்தைந்து ( 6425IU ) இருக்கின்றது. இந்த சத்துப் பொருள் கரட் எனும் உணவுப் பொருளில் இருபத்தையாயிரம் (25000 IU) இருக்கின்றது. இது கண்பார்வைக்கு தேவையான மிக முக்கியமான வைற்றமீன் “A” யை உற்பத்தி செய்ய பயன்படும் சத்துப்பொருள்ளாகும். வைற்றமீன் “A” எந்தத்தாவரத்திலும் இருந்து பெறப்படுவதில்லை. அதை உற்பத்தி செய்யும் மூலப் பொருள் “வீக்கா கரோட்டென்” ( B- Carotene) என்பதாகும். இம் மூலப்பொருள் வைற்றமீன் “A” யை உடலின் உதவியுடன் ஒரு“வீக்கா கரோட்டென்” னைக் கொண்டு இரண்டு வைற்றமீன் “A” யை உற்பத்தி செய்கின்றது. நூறு கிராம் மாங்கணியின் சதைப்பற்றில் தன்னீர் -81மூமும் காபோகைதரேட்டு -27% மும் புரதம் கொழுப்புச் சத்து என்பன மிகவும் குறைவு அது இல்லை என்கின்ற அளவுக்கு அர்பமானது. அதிகளவில் “குழுக்கோஸ் , பிரட்டோஸ்” இருக்கின்றது. நார்சத்து -3% இருப்பதனால் மலச்சிக்கலை அகற்றி ஆரோக்கியத்தைத் தரவல்லது. கல்லீரலை பாதுகாப்பதுடன் குடலின் மலப்பாதையில் எழிதில் மலங்களிகச் செய்யும் ஆற்றலுடன் கண்பார்வையை மேன்படுத்தும் வல்லமையும் மாங்கனிக்கு உண்டு.
மாங்கனியில் அனேகமான வைற்றமீன்கள்( A,B,C,D)தாது உப்புக்கள் (மெகனிசியம், பொட்டாசியம், சிங். அயன், கல்சியம்) போன்றன உண்டு.
No comments:
Post a Comment