
இளநீர் என்றவுடன் அது தாகம் தீக்கும் தாகசாந்தியே எம்நினைவில் வரும். இளநீரின் குளிர்மையும் உள்ளத்தின் மகிழ்ச்சியும் ஞபகத்துக்கு வரும் அப்படிப்பட்ட இளநீரின் மருத்துப் பாகம் பற்றி தேரையார் தமது பதார்த்த குணசிந்தாமணியில் பாடியுள்ள பாவில்
“இளநீரால் வாத பித்தம் ஏகும்
மனது தெளிவாய் துலங்கும்
இது திருஷிக்கு ஒளியும் குளிர்ச்சியும்
உண்டாக்கும் கொடுமை அனல் நீங்கும்
தளிதானம் நெய்தாகும் சாற்று”
எனக் குறிப்பிடுகின்றார். இளநீர் சகல சத்துக்களும் நிறைந்த அமுதசுரபி அது முழுமையான உணவு.

அது போன்று பித்தம் என்பது வெப்பத்தினால் உண்டாகுவதுஅது . பஞ்ச பூதங்களில் தீக் கூறு. இதன் சமநிலை இன்மையால் உண்டாவது பித்தரோகங்கள். இவை இரண்டையும் இல்லாதொழிக்கும் தன்மை அதாவது இரண்டையும் இல்லா தொழித்து சமநிலையில் பேணும் இயல்பு இளநீருக்கு உண்டு.

3. “இது திருஷிடிக்கு ஒளியும் குளிர்ச்சியும் உண்டாக்கும்” : திருஸ்டி என்பது கண் பார்வையால் உண்டாவது . பார்வையில் ஒளி உண்டு அவ் ஒளி பார்வையின் தன்மையைப் பொறுத்து அதன் செயல்பாடு அமையும். ஊறு விளையும் பார்வை உடலில் தாக்கம் செலுத்தும். அதனை கண் திருஸ்டி என்பர் இதற்கு மருந்து இல்லை. ஆனால் இது உடலில் பெரும் துயர் தரும். பூசாரிமாரிடம் கேட்டால் அதற்கு இளநீர் ஓத்திக் குடிக்க வேண்டும் என்பர். இதற்கு காரணமே அதன் தன்மை அப்படிப்பட்டது. இங்கு தான் சொல்வார்கள் “மந்திரம் கால் மதி முக்கால்” என்பர். அந்த ஒளினால் ஏற்பாட்ட வெப்பத்தால் மப்பும் மந்தாரம் ஏற்பட்டு உடல் சுறு சுறுப்பை இழந்து ஆரோக்கிய மற்ற நிலையை ஏற்படுத்தும். இன் நிலையைத் தவிக்க தலையில் இலிருந்து வெப்பத்தை தனித்து குளிச்சியை உண்டாக்கி உச்சாகப்படுத்து கின்றது. இது அனுபவரீதியில் உண்மை ஆகும். இத் தன்மை இளநீருக்கு உண்டு.

மேலே கூறப்பட்ட தன்மைகளைக் கொடுக் வல்லது இளநீர்.
இளநீர்ப் பருவத்தை தேர்ந்தெடுக்கும் முறை :
இளநீர் என்பது தேங்காயின் எல்லா நிலைகளிலும் உண்டு. இங்கு மருந்தாக அல்லது ஒரு நல்ல உணவாக பயன்படுத்தும் பருவம் ஒன்று உண்டு. இழநீர் என்னும் போது அது இளம் நீர் குரும்பைப் பருவம் தாண்டி இளநீர் வழுக்கையாக மாறும் பருவம் குரும்பையில் சிறட்டை முத்தாத இழமையான அதை சாபிட கூடிய பாதியும் வழுக்கை இளமையாக சாதுவாக பாதியில் பிடித்துக் கொண்டிருக்கும் பருவம் இதுவே இளநீர்ப் பருவமாகும்.

இளநீரில் பொட்டாசியசத்து அதிகம் உண்டு. நரம்பு மண்டலத்துக்கு சோடியமும் பொட்டாசியமும் அவசியம் நாம் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் கடலில் பெற்றுக் கொண்ட உப்பில் குலோரைட் இருக்கின்றது. பொட்டாசியம் குறைவு பொட்டாசியம் இளநீரில் தேவையான அளவு இருக்கின்றது. இது இருதயச் செயல்பாட்டுக்கு அவசியமானது. இதன்மூலம் மனம் தெளிவாகும்.
வேப்ப தற்பத்தை சீர் செய்யும் இயல்புடையது. சீதள உடம்பு உள்ளவர்கள் ஒரு டம்பிளரில் இளநீரை எடுத்து இன்னு மோர் அகன்ற பாத்திரத்தில் நீர் எடுத்து அதைச் சூடாக்கி இறக்கி வைத்துக் கொண்டு அதனுள் இளநீர் உள்ள டம்பிளரை வைத்து வெது வெதுப்பான சூட்டில் அருந்துவதனால் சீதள சேதம் வராது எம்மை காத்துக் கொள்ள முடியும்.
மிக்க நன்றி
ReplyDelete