"வாத சிலேற்பனம் பித்தம் போக்கிடும் வில்வம் துளசி வேம்பு"
வாதம் வாயுவுடன் தொடர்பானது வாயு பஞ்சபூதங்களில் ஒன்று அது காற்றுக்கூறு. காற்றுக்கு பஞ்சப்பிரம்மம்களில் சிவபெருமான் அதிபதி. காற்றை கட்டுப்படுத்தி செயல்படுத்துபவர். அவருக்குரியது வில்வம். உடலில் காற்றுக்கூறினால் ஏற்படும் வாயுவினால் உண்டான பிணிகளுக்கு வில்வம் அருமருந்து. வயிற்றில் அமிலச்சுரப்பு அதிகரித்து அதிலிருந்து வாயு உண்டாகி உடலுக்குத் தேவையான அளவைவிட அதிகரித்து உடல் சமநிலையை தளம்பவைத்து பல்வேறு உடலில் பல்வேறு ஊறுகளை ஏற்படுத்துகின்றது. பொதுவாக புளிப்பு சுவையானவை வாயுவை ஏற்படுத்த வல்லவை.
சிலேற்பனம் அல்லது கபம் இது நீருடன் தொடர்பானவை நீர் பஞ்சபூதங்களில் ஒன்று அது நீக்கூறு. நீருக்கு அதிபதி விஸ்ணு அவரை நாராயணண் என்றும் அழைப்பர். நாராயணண் என்பதை நார் அயன் எனப் பிரித்தால் நார் என்பது நீர் அயன் என்பது சயணம் எனவே நாராயணண் என்பது நீரில்சயணம் செய்பவர் என்று பொருள் படும். இவருக்கு துளசி பத்திரம். துளசி நீரினால் ஏற்படும் சளிநோய்க்கு அதாவது கபநோய்ளுக்கு அருமருந்து.
பித்தம் உஸ்ணத்துடன் தொடர்பானது உஸ்தம் பஞ்சபூதங்களில் ஒன்று அது அக்கினி கூராகும். அக்கினிக்கு அதிபதி பராசக்தி. அக்கினியை கட்டுப்படுத்தி செயல்படுத்துபவள். அவளுக்குரியது வேம்பு. உடலில் உஸ்ணம் அதிகரிப்பால் பித்தம் சுரந்து உடலுக்குத் தேவையான அளவைவிட அதிகரித்து உடல் சமநிலையை தளம்பவைத்து பல்வேறு உடலில் பல்வேறு ஊறுகளை ஏற்படுத்து கின்றது. கசப்புத் தன்மையானது. இங்கு மூலாதாரத்திற்கும் மணிப்பூரகத்துக்கும் இடையில் உள்ளது சுவதிட்டாணம் அதாவது மூலாதாரத்திற்கு இரண்டு விரல் கட மேலே இருப்பது. இதில் உள்ளது குண்டலினி சக்தி இச்சக்தி உடலில் உள்ள சக்தி இது மூலாதாரத்தில்லிருந்து மூன்டெலுகின்ற வெப்பம்; வாயுவால் சுழுமுனையினுடாக ஆறுஆதாராத்தையும் கடந்து சகஸ்ரதாரத்தில் அமுதமாய்ச் சொரியும் இது பாம்பின் வடிவை ஒத்தது. அது மூன்று மண்டலங்களை கடந்து செல்லுகின்றது அக்கினி மண்டலத்தில் உருவெடுத்து ஆதிதமண்டலத்தை உடுருவி சோம மண்டலத்தில் அமுதசோரூபீயாக அமுதம் சொரிகின்றாள்
மூன்று மண்டலதிலும் ஏற்படும் நோய்களை இனம் கண்டு அவற்றுக்குரிய மூலிகை அறிந்து. அதை மானிடர்பயன்படுத்த வழிசமைத்து வழிப்படுத்தியவர்கள் சித்தர்கள். இறைவனும் சமர்ப்பிப்பதனுடாக மூலிகையின் மீதுள்ள பயம் போக்கி உடலியல் அறிந்து பாகம் பிரித்து பாகத்தின் தன்மையறிந்து அதாவது வாயுக்கூறாக்கி , சலக்கூறு, தீக்கூறு, அவைகளை அவற்றுக்கு முறையே சிவன் , விஸ்ணு , சக்தி என்னும் தெய்வங்களை பொறுப்பாக்கி அவர்களுக்கு முறையே வில்வம் , துளசி , வேம்பு என்னும் மூலிகைகளை அர்ச்சனைப் பொருளாக்கி அவற்றை மருத்துவப் பொருளாகி மருத்துவம் கண்டவர்கள் சித்தர்கள்.
உடலைப் பருவுடல், சுட்சும உடல் என்று கண்டவர்கள் சித்தர்கள். இது மட்மல்ல உடலை பஞ்சகோசங்களாக்கி அன்னமயகோசம், பிராணமயகோசம், மனமயகோசம் , விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம் எனக் கண்டு அவற்றின் செயல்பாடுகளை ஆராய்ந்து அதற்கேற்ற மருத்துவம் கண்டவர்கள் சித்தர்கள். நுண்ணறிவுள்ள நுட்பமாக வியக்கத்தக்க விடையங்களை வெளியிட்டு மனுக்குல விருத்திக்கு வித்திட்டவர்கள் சித்தர்கள்.
அவர் காலத்தின் ஞானஅறிவியலை இன்னும் இவ்வுலக் அடையவில்லை. தன்நிறைவை விட்டு வல்லரசு என்னும் மற்றவரை அடக்கி அடிமைப்படுத்தி ஆட்டிப்படைப்பதையே நோக்காகக் கொண்டு ஆத்மீகம், பரோபகாரம் , சகோதரத்துவம் ,சமத்துவம், மனிதத்துவம், நீதி, நியாயம் உண்மை , ஜனநாயகம் அணைத்துமே அழித்து சித்தர்களின் சாபத்துக்குள்ளாகி இருக்கின்றது நாடுகள். சித்தர்கள் சூட்சும சபை ஒன்றுண்டு. அவர்கள் சூட்சும உடலில் மனுகுலத்தின் நன்மை கருதி இன்றும் அன்றும் என்றும் நடமாடுபவர்கள் சித்தர்கள் வருடத்தில் ஒரு முறை வைகாசி விசாகத்தில் இமயமலையில் திபேத்துக்கு பக்கத்தில் உள்ள முக்கோணப்பகுதியில் மகாநாடு நடாத்தி ஒரு வருடத்துக்கான உலகச் சமநிலையை ஏற்படுதத் தீர்மானம் எடுப்பதாக ஐதீகம் இதனால் வைகாசி விசாகம் குருபூர்ணிமாவாக கொண்டாடப்படுகின்றது சிதர்களால் வழிப்படுத்தப்படுபவர்களால் அத் தினம் ஆழந்த நிஸ்டையில் இருந்து அவர்களை ஈர்த்து நடக்ப்போவதை அறிந்து உலகுக்கு உணர்துவர்.
வில்வம் , துளசி, வேம்பு இவற்றை தனித்தனியே சுத்தம் செய்து இரண்டு மூன்று முறை சுத்தமான தண்ணீரில் திரும்ப திரும்ப புதிய நீரைப்பயன்படுத்தி கழுவி துணியால் துடைத்து இனலில் உலத்தி வைத்து தனித்தனியே பொடிசெய்து சல்லடையில் சலித்து பாதுகாத்து வைத்துக் கொண்டு. அவர்களின் தேகத்தின் தன்மைக்கு ஏற்ப வாத பித்த கபத் தன்மைக்கு ஏற்ப மூன்று மூகிலிகைகளையும் கலக்கும் விகிதத்தில் கலந்து பயன்படுத்துபதன் மூலம் பயனைப் பெறலாம்.
1.கபம் கூடியவர்களுக்கு: மூன்று மடங்கு துளசியும் இரண்டு மடங்கு வில்வமும் ஒரு மடங்கு வேம்பும் கலந்து காலை மாலை உணவருந்த அரைமணித்தியாலங்களுக்கு முன் ஒரு தேக்கரண்டி வீதம் உட் கொள்ள வேண்டும். (3:2:1 என்ற வீதத்தில் துளசி, வில்வம், வேம்பு, உம்)
2.வாதம் கூடியவர்களக்கு: மூன்று மடங்கு வில்வமும் இரண்டு மடங்கு வேம்பும் ஒரு மடங்கு துளசியும் பயன் படுத்த வேண்டும்.( 3:2:1 என்ற வீதத்தில் வில்வம்,வேம்பு, துளசி உம்)
3.பித்தம் கூடியவர்களுக்கு: மூன்று மடங்கு வேம்பும் இரண்டு மடங்கு வில்வமும் ஒரு மடங்கு துளசியும் பயன் படுத்த வேண்டும். ;.( 3:2:1 என்ற வீதத்தில் வேம்பு, வில்வம், துளசி உம்)
4. இவைகள் இன்றி பொதுவா அன்றாடம் பாவிப்பதற்கு: மூன்று மடங்கு வில்வமும் இரண்டு மடங்கு வேம்பும் ஒரு மடங்கு துளசியும் பயன் படுத்த வேண்டும்.( 3:2:1 என்ற வீதத்தில் வில்வம்,வேம்பு, துளசி உம்) இவ்வாறு பயன்படுத்துவதன் மூலம் வாத பித்த கபத்தை சீர் செய்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கிப் பாதுகாத்து நோய் இன்றி வாழமுடியும். “நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வம்” என்பது முதுமொழி செல்வங்களில்லெல்லாம் முதன்மைச் செல்வம் .
No comments:
Post a Comment