Friday, November 25, 2011

“சித்தர்கள் தந்த வாழ்வில் முறை நோய் இல்லா அறிவியல் முறை-1”


“சித்தர்கள் தந்த வாழ்வில் முறை நோய் இல்லா அறிவியல் முறை-1” 
சித்தர்கள் வாழ்வியல் பற்றிச் சொல்கையில்
“உண்பதிரு பொழுது ஒழிய மூன்று பொழுதுண்ணோம்
உறங்குவது ராயொழிய பகலுறக்கம் செய்யோம்
மண்பரவு கிழங்குகளில் கருணையன்றி புசியோம்
வாழையிளம் பிஞ்சொழியக் கனியிருந்த மாட்டோம்
பெண் கடமை திங்களுக் கோர் காலன்றி மறுவோம்
பெருந்தாகம் எடுத்திடினும் பெயர்த்து நீர் அருந்தோம்
நன்பெற உண்ட பின் குறுநடையும் கொள்வோம்” இப்பாடலில்
முதல் வரியில் உணவு உண்பது தொடர்பாக குறிப்பிட்டுள்ளார். 
தேரையார்
1.“உண்பதிரு பொழுது ஒழிய மூன்று பொழுதுண்ணோம்” :இது தொடர்பாக இன்னுமேர் பாடலில் “ரோகிக்கு மூன்று வேளை போகிக்கு இரண்டு வேளை யோகிக்கு ஒரு வேனை” என்று கூறப்பட்டுள்ளது இவை இரண்டு பாடல்களும் பொருந்தும். மூன்று வேளை உணவு உட்கொள்வதால் உடலின் சமிபாட்டுத் தொகுதிக்கு தொடச்சியான வேலை நாம் எப்போதும் நாவின் ருசியை அடிப்படையாகக் கொண்டு உணவினைத் தெரிவு செய்கின்றோம். அவை அதிக கொழுப்புச் சத்து நிறைந்தவையாக இருக்கும் அவை சமிபாடடைய அதிக நேரம் எடுப்பதுடன் அதிகநேரம் வயிற்றில் இருப்பதால் அதிக அமிலச் சுரப்பு ஏற்பட்டு அவை வாயுவாக மாறி உடலில் உபாதையைத் தருவதுடன் மேலதிக அமிலங்கள் இரத்தத்தில் கலக்கக்கூடிய சூழ்நிலை எற்படும் அதாவது உடல் உள்ளுறுப்புக்கள் தனது வேலைப்பழுவினால் செயல் இழக்கும் தன்மை ஏற்படடுகின்றது. உணவு அருந்தும் போது அரைப்பங்கு உணவும் கால்பங்கு நீரும் கால்பங்கு வெறுமையாகவும் இருக்கவேண்டும். அத்துடன்  உணவைத் தெரிவு செய்யும் போது வயிற்றை கருத்தில் கொண்டு இலகுவில் சமிபாடடையக்கூடிய உணவைத் தெரிவு செய்வதுடன் உணவை வாயில் இட்டு நன்றாக அரைத்து நன்றாக உமில்நீர் கலந்து கரைந்து நீர்போல் உணவை அருந்துவதனால் உணவிலுள்ள கொழுப்புச்சத்து சக்கரைக்சத்து என்பன நன்றாக செரிமாணம் அடையும் இத்துடன் உணவு அருந்திய பின் தான் நீர் அருந்த வேண்டும். உணவு அருந்தும் போது இடை இடையே நீர் அருந்துவதை தவித்துக் கொள்ள வேண்டும். ஒரு வேளை அதிமாகவும் ஏனைய இருவேளையும் மிதமான குறைந்தளவான உணவை உட்கொள்வது உத்தமம் இருவேளை அதிகமான உணவை எடுத்து ஒருவேளை மிதமாக எடுத்தல் மத்திமம் மூன்று வேளையும் அதிக உணவை எடுப்பது அதர்மம் என்பதே சித்தர்கள் கருத்து. பொதுவாக காலை மாலை இருவேளையும் மிதமான குறைந்தளவான உணவையும் மதியம் நிறைவான உணவை எடுத்தல் சிறந்தது. 


2.“உறங்குவது ராயொழிய பகலுறக்கம் செய்யோம்”: பகலில் உறங்குங்குவதானால் உண்ட உணவு செர்மாணமானமடையும் சக்தியை உடல் இழந்து அவை உடலில் கொழுப்புத் சத்தும் சக்கரைத் கத்தும் அதிகரிக்கக்கூடிய வாய்ப்பு அதிகமாக உள்ளதுடன் இதை இன்றை நவீன மருத்துவமும் ஏற்றுக் கொள்கின்றது. ஆனாலும் தவத்திரு இராமலிங்க அடிகளார் உண்டபின் சிறுநித்திரை அதாவது பத்து நிமிடத்துக்கு அதிகரிக்காத சிறு தூக்கத்தை குறிப்பிடுகின்றார். அச்சிறு தூக்கத்தின் முலம் சமிபாட்டுக்கு அது துனை செய்யும் என்று கருகின்றார். குருதேவர் ஸ்ரீ இராமகிரு~;னர் தமது பிரமச்சாரி சீடர்களுக்கு உபதேசம் செய்யும் போது பகலில் நித்திரை செய் இரவு முழுவதும் விளித்திருந்து தியானத்தில் மூழ்குமாறு கூறியிருந்தார். இரவு என்பது இருள்சூழ்ந்த மனத்திடத்தை இழக்கச்செய்யும் இராத்திரி தேவியின் மாயாவிளையாட்டுக்கு பொருத்தமான காலமது அத்தருனம் அதில் விளித்திருந்தால் அவசியமாகும் அதனால் தான் குருதேவர் அவ்வாறு உபதேசம் செய்திருப்பார் எனத்தோன்றுகின்றது. 
   
3. “மண்பரவு கிழங்குகளில் கருணையன்றி புசியோம்”: மன்னுக்குள் விளை யும் கிழங்குகளில் கருனை என்று சித்தர்களால் வழங்கப்பட்ட எல்லோருக்கும் கருனையாக தன்மைகளை உடலுக்கு வழங்கக்கூடிய கிழங்கு இது மட்டும் தான் எனவும் இக் கிழங்கு மட்டும் தான் நிலத்தினுள் விளையும் கிழங்குகளின் உண்ணச் சிறந்த கிழங்கென கருதுகின்றனர். பொதுவாக கிழங்கு வகைகள் காபோகைதரேட்டும் இலிப்பீட்டும் உண்;டு. இது சக்கரைத்சத்து நிறைந்தது இதனால் சக்கரை நோய்யாளர்களுக்கு சிறந்ததல்ல,
4.“வாழையிளம் பிஞ்சொழியக் கனியிருந்த மாட்டோம்”: வாழை மரத்தில் வாழைக்காயின் பிஞ்சே சிறந்தது அது ஊட்டச்சத்து விறைந்தது பொதுவாக பிஞ்சை குழந்தை யீன்ற தாய்க்கு மிளகுதன்னி தயாரித்துக் கொடுப்பது வழக்கம் பொது வாக மருத்துவக்குணம் நிறைந்த பாகம் பிஞ்சி தான்.
5 “பெண் கடமை திங்களுக் கோர் காலன்றி மறுவோம்”: பெண்களுடன் கலவியல் ஈடுகடுவது மாதம் ஒருமுறை ஆகும். இங்கு திங்கள் என்று குறிப்பிடுவது மாதத்தை ஆகும். இங்கு இன்னுமோர் சித்தர் பாடலையும் பார்ப்பது சிறந்தது. “நாள் இரண்டு வாரம் இரண்டு மாதம் இரண்டு வருடம் இரண்டு” என கூறி இருக்கின்றனர். இதன் பொருள் நாள் இரண்டு என்பது ஒரு நாலைக்கு இருமுறை மலம் கழிக்க வேண்டும். அதாவது காலை மாலை என்பது பொருள். வாரம் இரண்டு; என்பது வாரம் இருமுறை தலைக்கு நல்லெண்ணை தேய்த்து குளிப்பது. இது ஆண்களுக்கு புதன் சனிக் கிழகைகளில் பெண்களுக்கு திங்களும் வெள்ளியும் பொருத்தமானதாகும். “சனிநீராடேல்”; என்பது சனீஸ்சரனுக்கு தானியம் எள்ளு அதன் எண்ணையை வைத்து குளிதல் உடலுக்கு நல்லது என்பதையே குறிக்கின்றது. மாதம் இருமுறை என்பது மனையாளுடக் கலவியில் ஈடு படுதலைக் குறிக்கின்றது. பாலியல் நுகர்ச்சி என்பது ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இன்பமாக இருந்தாலும் அது உடலுக்கு உயிர்ப்பு என திருமூலர் குறிப்பிட்டுள்ளார் இதை விளக்கமாக “திருமூலர் காட்டிய வாழ்க்கை நெறி” என்னும் கட்டுரையின் தொடரில்  விரிவாக விளக்கவுள்ளேன். அதை அதிக அளவில் தேவையில்லாது இழத்தல் சக்தியை இழப்பதற்கு சமம். 
          “விந்து விட்டான் நொந்து கெட்டான்” என்ற முதுமொழிக்கமையவும் “அளவுக்கு மிஞ்சினால் அமுதெனினும் நஞ்சி” என்பதற்கு அமையவும் அதை பிஜாவிருத்திக்கு மட்டும் பயன்படுத்த் நரைதிரை அற்று நீண்டநாட்கள் சீவிக்க வசதியாக அமையும் என்பதில் ஐயம்மில்லை. அடுத்து வருடம் இரு முறை என்பது வயிற்றை சுத்தம் செய்வதை கருகின்றார் வயிற்றில் உணவு சொரிமானச் செயல்பாட்டால் சிலவேளைகளில் அழுக்குகள் தங்கி ஐPரணமண்டலத்தில் பிரச்சனைகள் வருவது இயல்பு அதைச் சீர் செய்ய வருடத்தில் இருமுறை பேதியாக போதி மருந்து எடுப்பது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது.


5.“பெருந்தாகம் எடுத்திடினும் பேயர்த்து நீர் அருந்தோம்”:  அதிக தாகம் எடுத்தாலும் தன்னீரை ஒரு முறையில் விரைவாக அருந்தக்கூடாது. சிறிது சிறிதாக கொஞ்சம் கொஞ்சமாக நேரமெடுத்து அருந்த வேண்டும். தன்னீரை அண்ணாந்து அருந்தக்கூடாது. அருந்தும்பாத்திரத்தை உதட்டில் கௌவி அருந்த வேண்டும். உண்ணும் போது நல்வர உண்ணவேண்டும் அதாவது நன்றாக மென்று உமிழ்நீர் கலந்து நீர் போலாக்கி உறிஞ்சிக் குடிக்க வேண்டும். உண்ணும் போது வாயில் இட்டதை நன்கு மென்று உண்டபின் அடுத்த வாய் உணவை எடுக்க வேண்டும். உண்ணும் போது நீர் அருந்தக்கூடாது. உணவருந்திய பின்னர் தாகமடக்க நீர் அருந்த வேண்டும். 
          நீர் பற்றிக் குறிப்பிடுகையில் “நீர் சுருக்கி மோர் பெருக்கி நெய் உருக்கி” எனக் குறிப்பிடுகின்றனர். நீர் சுருக்கி; என்பது நீரை நன்றாக கொதிக்க வைத்து அதாவது நீரை நாலில் மூன்று பங்காக கொதிக்க வைத்தலை கருதும். அப்போது நீரின் அளவு குறைந்திருக்கும இதனால் கனியுப்புக்கள் நன்றாகக் கரைந்து நீருடன் கலந்து இருப்பதுடன் கிருமிகளும் அழிந்து நீர் உணவாக மாறும் இதனையே நீர் சுருக்கி எனக்கருதுகின்றனர். மோர் பெருக்கி என்னும் போது நீரை அதிக அளவில் சேர்க்கும் போது அதில் உள்ள வெண்ணை அதிகளவில் பிரித்தெடுக்கப்பட்டு நீர்மோரகும் அதனால் சமிபாட்டுக்கு இலகுவாக இருப்பதுடன் கொழுப்புச் சத்தும் குறைவாக இருக்கும் இது உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும். அடுத்து நெய் உருக்கி என்பது நெய்யில் கொழுப்புச்சத்து அதிகம் உருக்குவதன் மூலம் அதன் செறிவைக் குறைத்து உண்பதனால் உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும். 
6.“நன்பெற உண்ட பின் குறுநடையும் கொள்வோம்”:  உண்ட பின் சிறு நடை கொள்வது உணவு செரிமானத்துக்கும் ஐPரண மண்டலத்துக்கும் நல்லது “உண்ட பின் நூரடி உலாவு” என்பது முது மொழி இதுவும் பொருந்தும்.
  மேல் பாடலில் சொன்ன முறைப்படி வாழ்க்கையில் கடைப்பிடித்தால் நோயற்ற நலமுடனும் வளமுடனும் வாழ முடியும் என்பதில் ஐயம் இல்லை. 
 “சித்தன் வாக்கு சிவன் வாக்கு 
     சீவன் சிவலிங்கம் 
      காயம் கோயில் 
  காயகற்பம் சித்தவைத்தியம்
  சித்த வாழ்வியல் அறவியல்
  மனித வாழ்வுக்கான அறிவியல் ”
               -மட்டூர் புன்னைம்பதியான்-

2 comments:

  1. நீர் சுருக்கு என்பதன் அர்த்தம் நீரை குறைவாக அருந்த வேண்டும் என்பதே ஏனெனில் நீர் அதிகமாக அருந்தும்போது வயிற்றில் உள்ள செரிமான திரவம் அதன் எரிசக்தியை குறைக்கும் என்பதனாலேயே நீர் சுருக்கு என்று கூறப்பட்டுள்ளது.

    ReplyDelete
    Replies
    1. அது உண்ணும் முன் பின் 1/2 மணி நேரம் இடைவெளி, ஆனால் நீரை சுருக்குதல் என்பது 3அல்லது 4கில் 1பங்கக கொதிக்க வைத்து குறைப்பது.

      Delete