சிந்தித்தால் சிரிப்பு வரும்
சிந்தனையில் விளிப்பிந்தால் -
அத்தனையும் வந்து விடும்.
மனத்தில் மறைந்தது புத்தி
புத்தியில் உறைந்தது சித்தி
சிந்தித்தால் புத்தி உறங்காது
ஏன்? என்றால் - படைப்பின் இரகசியமது
அஞ்ஞானம் உலகைப்படைக்கும்
மெய்ஞானம் படைப்பை வெறுக்கும் - அது
விடுதலைக்குத் தடை
ஏன் இந்த விடுதலை? அது - பிறப்பில் இருந்து விடுதலை
படைபின் இரகசியம் தெரிந்தவர் விடுதலை இலகு
தெரியாதார் - மாயையின் பிடியில் பட்டு
நான் எனும் அகந்தையில் வளர்ந்து கன்மத்தில் வீழ்ந்து
உண்மையை அறிந்தால் பிறப்பின் இரகசியம் புரியும்
வாழ்க்கையில் இடர் - உற்ற நன்பன்
மகிழ்ச்சி ஆரவாரம் எமக்கு எதிரி அது –
உண்மையை உணர்த்தாத சல்பீனீயாக் குழம்
ஆழம் அறியவிடா சதிக் கும்பல்;
புரிந்ததா வாழ்கையின் இரகசியம் -
சிந்தித்தால் சிரிப்பு வரும்
உண்ணுள்ளே இருக்கு தடா எல்லாம்
அண்டத்தில் உள்ளது பிண்டத்தினுள்
வானமும் நீயே பூமியும் நீயே
உன்னுள் உள்ளது பூதங்கள் ஐந்தும் -
மண்டலங்கள் மூன்றும் உலகங்கள் ஏழும்
உன்னுள்னே இமையமும் வாரநாசியும்
கங்கையும் ஜமுனையும் சரஸ்வதியும் -
பாய்தோடுது உன்னுள்ளே
எதற்காக சிந்தித்துப் பார்த்தாயா ?
அத்தனையும் விடுதலை
தேவரும் அசுரரும் உன்னுள்ளே
போர்க்களம் அமைத்துள்ளதை
உணந்தாயா? விளைவுகள் அறிய தடுத்தது மாயை
கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டியர்
நீ யார் என்பதில் எல்லாம் விளித்திடும்
நம்முள்ளே தேடினால் கிடைப்பது 'தேமாங்கனி'
எம்முள்ளே மூலாதாரத்தில் உற்றெடுத்து –
சகஸ்ராதரத்தில் பாயும் கங்காநதி அது -
நித்திய இன்பத்தில் விளைந்த –
பிறவித்துயர் அழித்திடும் அரு மருந்து
உலகதில் தேடிட்டால் கிடைத்திடும் மாங்கனி
உன்னுள்ளே தேடிட்டால் கிடைத்திடும் தேமாங்கனி
அத்தனையும் அவன் அவன் கன்மத்தின் விளைவு
சிந்தித்தால் சிரிப்பு வரும்
சிந்தனையில் விளிப்பிருந்தால் -
அத்தனையும் வந்து விடும்
மட்டூர் புன்னையம்பதியான்
No comments:
Post a Comment