

“பேசுமோ சீதப் பெருக்கும் மூலக்கடுப்பும்
கோரிக் கடுப்பும் வீசுமோ மூலமுறுவின்
சொதிப்பு மாசுவுடைய பூங் கொட்டையை
காணில்வாது”
1. “பேசுமோ சீதப் பெருக்கும்” : இது பெண்களுக்கு ஏற்படும் மாதாந்த உதிரப் போக்கு அதிகரித்து அதிதரித்து வெளியேறு வதால் உடல் பலமினந்து போவதை தடுக்க வல்லது மாங் கொட்டை.

3. “மாசுவுடைய பூங் கொட்டையை காணில்வாது” : மா பூக்கின்ற போது அதன் தேனை அருந்த வரும் பூச்சிகள் பூவினுள் சில தங்கி விடும் இவை பின்னர் பெருத்து புழுவாக மாறி பூக்கொட்டையை அரிது வெளிவரும். அப்போது கொட்டை அரிக்கப்பட்டு பழுதடைந்து விடும். அவ் வகையான கொட்டைகளை நீக்கிப் பயன்படுத்து வேண்டும். எனக் குறிப்பிட்டுள்ளர் வெண்பாவில்
பயன்பாடுத்தும் முறைகள்:
1. புளிக் கொழம்பு : நன்றாக சுத்தம் செய்யப்பட்ட மாங்கொட்டையை பிளந்து கடினமான தோலை நீக்கி அதினுள் உள்ள பருப்பை எடுத்து சிறிது சிறிதாக நறுக்கி அதை புளிக் கொழப்பு செய்து சாப்பிடலாம்.
இன்னுமோர் முறையில் அதனுடன் தோல் நீக்கி ஏழுமுறை நன்றாகச் சுத்தம் செய்த சோற்றுக் கற்றாலை என்னும் குமரியின் சோற்றையும் சிறிது சிறிதாக நறுக்கிய மாங் கொட்டை பருப்புடன் சேர்த்து புளிக் கொழம்பு செய்து சாப்பிடலாம்.
2. சூரணம் : மாங்கொட்டையை பிளந்தெடுத்த பருப்பை வெயிலில் உலர்த்தி பொடி செய்து அதை சூரணமாக வைத்துக் கொண்டு காலை மாலை உணவருந்த அரைமணித்தியாலத்துக்கு முன் அரைத்தேக்கரண்டி அளவு தேனில் குளைத்து அல்லது சூரணத்தை மட்டும் தன்னீரில் அருந்தலாம். இவ்வாறு உட்கொள்ள கற்பப்பைணில் உருவாகும் உத்ரப்போக்கான “மெனோஐPறியா” குணமாகும். அத்துடன் ஆசனவாயில் உதிரப்போக்கும் குணமாகும்.
No comments:
Post a Comment