Tuesday, November 15, 2011

“ முக்கனியில் முதற்கனிக்கடுத்து நாடி மூன்றையும் நிலை தடுமற்றும் பலாக்கனி தித்க்கும் தேன் கனி ”

“  முக்கனியில் முதற்கனிக்கடுத்து நாடி மூன்றையும்  நிலை தடுமற்றும் பலாக்கனி


 தித்க்கும் தேன் கனி ” 
பலாக்கனி தன்னீரையும் மாச்சத்தும் நிறைந்த கனி இக் கனியைப் பற்றி தேரையார் தனது பதார்த்த குணசிந்தாமனியில் பாடிய பாவில்
“தித்திக்கும் வாத சிலேற்பன
 பித்தம் உண்டாக்கும் மெத்த
கரப்பான் விளைவிளைவிக்கும்
சத்தியமாய் சேராப்பினியை
எல்லாம் செர்ப்பிக்கும் ஒர் நொடியில்” என மிக அழகாக இயம்பியுள்ளார் சித்தர்.
1.“தித்திக்கும்”: இக்கனி சுவைமிக்கது. உண்ணும்போது ருசியாகவும் தெடர்ந் உண்ணும் போது திகைப்புத் தன்மையையும் தரும்.
2. “வாத சிலேற்பன பித்தம் உண்டாக்கும்” : இக் கனியை உண்ணும் போது உடலில் வாதம் , பித்தம் , சிலேற்பனம் என்னும் கபத்தையும் உருவாக்க வல்லது.
3. “மெத்த கரப்பான் விளைவிளைவிக்கும்” : மொத்தத்தில் தொண்டையில் ஏற்படும் அரிப்பு என்னும் தொண்டைக் கரப்பான் நோய்யை ஏற்படுத்தும்.
4. “சத்தியமாய் சேராப்பினியை எல்லாம் செர்ப்பிக்கும் ஒர் நொடியில்” : சத்தியம் செய்கின்றார். இதுவரையில் இல்லாத நோய்கள் எல்லாவற்றையும் வலிந்து இழுது வந்து ஒரு நொடியில் சேர்ப்பிக்கும் தன்மையுள்ளது. என பாவில் கூறுகின்றார். 
  மொத்தத்தில் பலாக்கனி ஒரு சிறந்த கனியாக சித்தலோகம் ஏற்கவில்லை. என்பது இதிலிருந்து தெரிகின்றது. ஆனால் இதில் சக்கரைச் சத்து இருப்பதால் பலாக்கனியை உண்ட உடன் வேலை செய்வதற்கான உத்வேகத்தை மட்டும் வழங்கக்கூடிய தன்னை உண்டு. இதில் மருத்துவப் பண்புகள் எதுவும் இல்லை என்றே கூறமுடியும்.



No comments:

Post a Comment