சாளக்கிராம வரவாறு:
சாளக்கிராமங்கள் பொதுவாக வட இந்தியாவின் “முத்திநாத்” அல்லது “சாளகிராமம்”; என்னும் சேஷ்த்திரதிலுள்ள “கண்டகி” நதியில் பெறப்படுகின்றது. ஒரு முறை கண்டகி நதியில் துளசியின் சாபத்தால் மலையுருக் கொண்ட விஷ்ணுவாகிய கற்களைக் கொரப்பற்களுள்ள கீடங்கள் தொளைப்பதாலுண்டாம் விஷ்ணுவின் உருவங்கள் இவை குக்குண்டரம் போல் அமைந்திருக்கும்.

சாளக்கிராமத்தின் அமைவிடம்:
கண்டகாவதி என்ற “கண்டக்” என்ற நேர்பாள செல்லிலிருந்து வந்தது. “ஹரண்;ணியவதி” என்னுமொரு பெயரும் உண்டு. இதனை “ஸ்வர்ணமயம்” என்பர். கண்டாக் நதியில் ஸ்வர்ண ரேகைகள் உள்ள சாளக்கிராமம் கிடைக்கின்றன இது விஷெசமானது. நேர்பாளத்தில் “மாஸ்டாங்” என்னும் மாவட்டத்தில் ஐயாயிரம் (5000 அடி) அடி உயரத்துக்கு மேல் உள்ளது “தாமோதர பீடம்” இவை தாட்சாயினியின் கன்னத்துண்;டுகளி லிருந்து இது தோன்றிய பள்ளங்களால் உண்டான சிகரங்களாகும். இவ்வகையான பனிச்சிகரங்கள் புவியில் அறுபதுக்கு (60) மேற்பட்டவை உண்டு. சிகரத்திலுள்ள பனி உருகி ஏரியாகமாறி புவியையடைகின்றன. இதில் ஒன்று “தாமேதர குண்டம்” இது திபேத்தின் எல்வையில் இருக்கின்றது. இக் குண்டத்திலிருந்து வரும் நதியே “கண்டகி நதி” ஆகும். நேர்பாளத்திலிருந்து கட்மாண்டு என்ற நகரத்துக்கு வடமேற்குத்திசையில் இருநூற்ஐம்பது கிலோமீற்றர் (250); தொலைவில் உள்ளது கண்டகிநதி. அன்நதியின் கரையில் அமைந்துள்ளது சாளக்கிராமம்; என்னும் இடம். இங்குதான் சாளக்கிராமங்கள் பெறப்படுகின்றது.
சாளக்கிராமத்தின் வகைகள்:
இதன் அமைப்பைப் பொறுத்து லஷ்மி நாராயணம், ரகுநாதம், ஸ்ரீதரம், தாமோதரம், ராஜராஜேஸ்வரம், ரணராகம், ஆதிசேஷ்ன்;, ரகுநாதன், ததிவாமனம், அனந்தம், மதுசூதன், சுதர்சனம், கதாதரம், ஹயக்ரீவம், நரஸிம்மம், இலசஷ்மிநரஸிம்மம்,வாசுதேவம், பிரத்யும்நம், சங்கர்ஷணம், அநிருத்தம், என பல வகையுண்டு. ஒரு துவாரத்தில் நான்கு சக்கரமும் வனமாலையும் ரதாகரமும் நீர் கொண்ட மேகநிறமாக உள்ளது லஷ்மி நாராயணம், வனமாலை இன்றி மற்றவற்றைப் பெற்றது லஷ்மிஜநார்தனம் இரண்டு துவாரங்களுள் நான்கு சக்கரங்களும் ராதாகiமாகவும் உள்ளது ரகுநாதம் இரண்டு சக்கரமுள்ளது வாமனம் வநமாலையுடன் இரண்டு சக்கரமுள்ளது ஸ்ரீதரம் விருத்தாகாரமாகவும் இரண்டு சக்கரமுள்ளது தாமேதரம் மிகப்பெரியதும் மிகச்சிறியதுமாகாமல் ஏழுசக்கரமும் சரத்பூசணத்துடன் கூடியது ராஜராஜேஸ்வரம்; விருத்தாகாரமாய் இரண்டு சக்கரத்தோடும் அம்பறாத்தூணியும் பாணஅடியுமுள்ளது ரணராகம் பதின்நான்கு சக்கரங்களுடன் கூடியது ஆதிசேஷ்ன் சக்ராகாரமாய் இரண்டு சக்கரங்களுடன் கூடியது மதுசூதனம் ஒருசக்கரமுள்ளது சுதர்சனம் மறைக்கப்பட்ட சக்கரமாய்த் தோன்றுவது கதாதரம் இரண்டு சக்கரத்துடன் ஹயக்ரீவவுருவாயக் காணப்படுவது ஹயக்ரீவம் இரண்டு சக்கரத்துடன் திறந்தவாயும் பயங்கரவுருவும் கொண்டது நரசிங்கம் இரண்டு சக்கரத்துடன் பெரியவாயும் வனமாலையுமுள்ளது லசஷ்ம் நரசிங்கம் இரண்டு சக்கரமும் சமாகாரமாயுள்ளது வாசுதேவம் சூசஷ்மமான சக்கரமும் ஒரு ரந்திரத்துள் பல ரந்திரங்களுள்ளது பிரத்யும்னம் துவாரமத்தியில் இரண்டு சக்கரங்களும் புருஷடபாகம் பருத்துமுள்ளது சங்கர்ஷணம் விருத்தாகரமாயும் செம்பட்டு நிறமுள்ளது அநிருத்தம் என்பனவாகும்.
எவ்விடத்தில் சாளக்கிராம் சிலையிருக்குமோ அங்கு ஹரிசாநிந்த்யமாய் வசிப்பார். அவ்விடத்தில் சகல தேவதைகளும் வசிப்பர்;. எல்லாச் சம்பத்துக்களும் உண்டாகும். இவைகளில் குற்றங்கள்ளுள்வற்றை நீக்கி குணமுள்ளவற்றை வழிபடுதல் வேண்டும். குற்றமுள்ளவை தீமையை ஏற்படுத்தும். இது போன்று சிவலிங்க வடிவங்களும் அங்கு கிடைக்கின்றது. சாளக்கிராம வழிபாடு விஸ்ணு வழிபாட்டில் உண்ணதமானது. சாளக்கிராமங்கள் விஸ்ணுவின் சுயம்பு இலிங்கங்களாகும். இவை ஒருகாலத்தில் மன்னர்களிடமே பெறக்கூடியதாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இவை இப்போதும் பக்குவம் உள்ளவர்களுக்கே கிடைக்கின்றது.
No comments:
Post a Comment