
“முத்திக்கு வித்தகன்
புத்தியில் உறைபவன்.
சித்தியில் விளைந்து
முத்திக்கு வழிகாட்டுபவர்.
முத்திக்கு தடையான
வினை அறுப்பவர்”
விக்கினம் என்பது தடைகளும் பின்னடைவும் என்பது பொருள். இறைவன் எத்தடைகளை தீர்ப்பவன் என்று பொதுவாக கேட்டால் நாம் சொல்வதெல்லாம் எமது முன்னேற்றப் பாதையில் ஏற்படும் தடைகளைப் போக்குபவன் என்று கூறுகின்றோம். நம் க~;டங்களுக்கு காரணம் என்ன என்று கேட்கும் போது அதற்கு கர்மா என்கின்றோம். அல்லது நாம் செய்தவினை என்று கூறுகின்றோம். பிறப்புக்கு காரணம் வினை என்று கூறுகின்றோம். பிறப்பெடுத்ததின் நோக்கம் பிறவாமையை அடைய என்பதும் தெரியும். இப்படி இருக்க விக்கினம் என்பது எது என்று பார்க்கும் போது இறவாமையை அடைய தடையாக அமையும் தடைகளை தகத்தெறியவே என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மனிதனின் வாழ்கை அமைவது அவர் அவர் செய்த வினையே தவிர இறைவன் காரணமல்ல. நாம் செல்வச் செழிப்புடனும் அல்லது வறுமையில் வாழக்காரணம் நாம் தான். அவை முன்வினைப் பயன் செல்வந்தனானால் அச் செல்வம் எமக்குரியதல்ல அவை கொடைக்கு வழங்கப்பட்டதே தவிர குடும்பத்துக்கு மட்டும் உரியதல்ல. அப்படி அமையுமானால் அது கர்மச் சொத்து அதனால் சந்ததி அழிந்து போகும். அதை கொடையாக கொடுத்து இகபர வாழ்கையில் சந்தோசத்தை இழந்து நரகத்தை அடையும் நிலையிலிருந்து தப்பிக் கொள்ள வேண்டும். விக்கினத்தை தீப்பது என்பது வினை அறுக்க ஏற்படும் தடையை நீக்கி அதை அனுபவித்து பிறவாமையை அடையவே என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.


சுயநலன் கருதாது பொது நலன் கருதி மற்றவருக்காக வாழ்வது அதாவது பயன்கருதாது செல் செய்து பயன் அனைத்தையும் இறைவனுக்கு அர்ப்பணித்தல் இறைநிலைக்கு இட்டுச் செல்லும் அன்நிலையை அடையச் செய்வதே விநாயகரை வழிபடுவதன் நோக்கமாகும்.
No comments:
Post a Comment