உள்ளடக்கம்
1. ஆலய வரலாறு
2. அடியேன் நாடியதும் அனுபவமும்
3. கண்ணனின் திருவிளையாடல்கள்
4.இவ்வாலய பூசை முறைகளும் திருநவிழாவும்
விஸ்வபிரம்ம ஸ்ரீ பாக்கியமூர்த்தி குமரகுருபரன் ஆச்சாரி
1.ஆலய வரலாறு:
திமிலதீவு ஸ்ரீமகாவிஸ்ணு கோயில் இலங்காபுரியின் கிழக்கு மாகாணத்தில்,மட்டக்களப்பு மாவட்டத்தில், மண்முனை வடக்கு
பிரதேச செயலாளர் பிரிவில், திமிலதீவு கிராம சேவையாளர் பிரிவில், அமைந்துள்ளது. அது சித்தர் கோயில். இவ்வாலயம் முந்நூறு வருடங்கள் பழைமை வாய்ந்தது. இவ்விடத்தில் பழைமையான சிவன் கோயில் இருந்ததாகவும் அழிந்து நிலத்தினுள் இருப்பதாகவும் கூறப்படுகின்றது. அதன் பின்னர் ஆயகுலத்தினர் வாழ்ந்ததாகவும் அம் மக்கள் ஆயகுல கடவுளான கிருஸ்ணருக்கு கோயில் அமைத்து வழிபட்டதாகவும். அங்கு வாழ்ந்த திமிலர்களுக்கும் முக்குகர்களுக்கும் அடிக்கடி போர் நிகழ்ந்ததாகவும் போரினால் அவ்ஊர் அழிந்ததாகவும் கூறப்படுகின்றது. அத்தடன் இவ்வாலயம் போர்த்துக்கேயர் காலத்தில் அழிக்கப்பட்டு கட்டுமானப் பொருட்களை கொண்டு வீச்சுக்கல்முனை என்னும் அயல் கிராமத்தில் “அன்னம்மாள் தேவாலயம்” அமைக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. இவ்வாலயம் ராஜகோபுரமும் சுற்றுமதிலுடன் கூடிய பெரும் ஆலயமாக இருந்திருக்கின்றது. இதன் பின்னர் ஒல்லாந்தராலும் இவ்வாலயம் இடித்தொழிக்கப்பட்டுள்ளது.
அங்கு ஒர் பழமையான அரசமரம் இருந்தாகவும். அம் மரத்தின் கீழ்; தவயோகி ஒருவர் விநாயகர் ஆலயம் அமைத்து வழிபாடு செய்து வந்தார் என்றும்;. அவருக்கு உதவியாக அந்த கிராமத்தைச் சேர்ந்த மூத்ததம்பி என்பவர் இருந்தார் என்றும். அவர் ஒரு நாள் திடீரென இறந்து போனாரம்;. அவர் இறந்த செய்தியை சொல்ல அரசமரத்தை அடைந்த போது மரத்தின்கீழ்; பூஜை செய்து வந்த தவயோகியைக் காணவில்லையாம். தேடிய போதும் அவர் கிடைக்க வில்லை என்கிறார்கள் இறந்தவரை அடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்த வேளையில் இறந்தவரின் கால் பெருவிரல் துடித்து உயிர்த்தெழுந்து விட்டாராம். எழுந்தவர் உடனடியாக அரசமரத்தின் கீழ் மகாவிஸ்ணுவுக்கு ஆலயம் அமைக்க பணிக்கப்பட்டுள்ளதாகவும் பூசை முறைகளை தவயோகி கூறியிருப்பதாகவும் கூறியதுடன் உடனடியாக இப் பணியினை நிறைவேற்ற வேண்டும் எனவும் கூறினாராம் அவர் ஆலயடிச்சோலையில் பெருமரங்களில் கம்பு தடிகள் வெட்டி வரும்படி கூறினாராம். அவ்வேளை அவரது தாயார் (உயிர்த்தவருக்கு) உணவு அருந்த பால்,பழம் கொண்டு வந்த போது ஆலயத்ததை அமைத்த பின்னரே நீர் அருந்துவேன் எனக் கூறினாராம். அப்போது கம்பு தடிகளைக் கொண்டு ஆலயத்தை அமைத்தனராம். அதன் பின் அவ்வாலயத்தில் மகாவிஸ்ஷ்ணுவுக்கு வழிபாடு நடை பெற்றதாகக் கூறப்படுகின்றது. அந்த ஆலயமே இன்றுள்ள திமிலதீவு மகாவிஸ்னு ஆலயமாகும். அப்போது அவர் மணியும்இ கலசமுமஇ; தீபமும் பெற்று வந்ததாக கூறுகின்றனர். அது தற்போது ஆலயத்தில் இல்லை. அப்பரம்பரையில் இருப்பவர்களிடம் இருக்கலாம். கீதையில் கண்ணன் தான் “மாதங்களில் மார்கழி மலர்களில் தாமரை மரங்களில் அரசு காற்றில் தென்றல்” எனக்குறிப்பிடுகின்றார்.
அதன்படி அங்கு அரசமரம் தலவிருட்ஷமாக உள்ளது திருமூலர் கூடுவிட்டு கூடு பாய் வது அவருக்கு ஓர் விளையாட்டு ஒரு முறை வானளாவி வருகையில் வீரசேனன் மன்னன் இறந்தால் மக்கள் பட்ட துயரை அறிந்த மூலர் அவர்களுக்கு உதவ எண்ணி அவரில் உடலில் கூடுபாந்து. வீரசேனின் உடலில் இருந்த போது அரச வாழ்கை சலிக்கையில் ஜம்புகேஸ்வர் உடலில் செல்ல வீரசேனனின் உடலை மரப் பொத்தில் வைத்து மந்திர சக்தியைக் கொண்டு மூடினார் அம் மரமே அரசன் உடல் உள்ளிருந்ததால் அரசனின் இறப்பு தவிக்கப்பட்டு அரச மரமானான் இது திருமூலர் குணவதிக்கு கொடுத் வாக்கு காப்பாற்றப்பட்டது என்றும் ஒரு கதை இருக்கின்றது.
ஆலயத்தில் அன்று காணப்பட்ட மரமே இன்றும் உள்ளது. அதுவும் இவ்வாலயத்தில் காணப்படும் சிறப்புக்களில் ஒன்றாகும். அத்துடன் அங்கு விஷ்ணு சாளக்கிராமம் இருந்ததாகவும் அதை பூஜையின் பின் கிண்ணத்தில் வைத்து துளசிப்பத்திரம் வைப்பதென்றும் அது இரவில் ஒலி எழுப்புவதாகவும் பின்னர் ஆலயத்தை திறக்கும் போது உணப்பட்ட நிலையில் சாளக்கிராமம் உயிருடன் இருந்தாக ஐயா என்னிடம் கூறியுள்ளார். சாளக்கிராமங்கள் பொதுவாக வட இந்தியாவின் “முத்திநாத்” அல்லது “சாளக்கிராமம்” என்னும் சேத்திரதிலுள்ள கண்டகி நதியில் பெறப்படுகின்றது. ஒரு முறை கண்டகி நதியில் துளசியின் சாபத்தால் மலையுருக் கொண்ட விஷ்ணுவாகிய கற்களைக் கொரப்பற்களுள்ள கீடங்கள் தொளைப்பதனால் உண்டாகும் விஷ்ணுவின் உருவங்கள் சாளக்கிராமங்களாகும். இவை குக்குண்டரம் போல் அமைந்திருக்கும். இதன் அமைப்பைப் பொறுத்து லக்ஷ்மி நாராயணமஇ; ரகுநாதம், ஸ்ரீதரம், தாமோதரம், ராஜராஜேஸ்வரம், ரணராகம், ஆதிசேஷன், ரகுநாதன், ததிவாமனம், அனந்தம், மதுசூதன், சுதர்சனம், கதாதரம், ஹயக்ரீவம், நரஸிம்மம், லக்ஷ்மிநரஸிம்மம், வாசுதேவம், பிரத்யும்நம், சங்கர்ஷணம், அநிருத்தம், என பல வகையுண்டு. எவ்விடத்தில் சாளக்கிராம் சிலையிருக்குமோ அங்கு ஹரிசாநிந்த்யமாய் வசிப்பார். அவ்விடத்தில் சகல தேவதைகளும் வசிப்பர் எல்லாச் சம்பத்துக்களும் உண்டாகும். இவைகளில் குற்றங்கள்ளுள்வற்றை நீக்கி குணமுள்ளவற்றை வழிபடுதல் வேண்டும். குற்றமுள்ளவை தீமைய பலன்களையே ஏற்படுத்தும். இது போன்று சிவலிங்க வடிவங்களும் அங்கு கிடைக்கின்றது. சாளக்கிராம வழிபாடு விஷ்ணு வழிபாட்டில் உன்னதமானது. அதிலும் கல்லினுள் வண்டு உயிருடன் இருந்தது (கீடங்கள்) என்பது சாத்தியமற்றது. இருந்தும் அவ்வாறான சாளக்கிராமம் இங்கு இருந்திருக்கிறது என்பது விஷ்ணுவின் திருவிளையாடலே அடியேன்னால் அவனருளால் தற்போது சாளக்கிராமமும், வலம்புரிசங்கும், திருமுடியும், அங்குள்ளது. பிற்காலத்தில் அவருடைய பரம்பரையைச் சேர்ந்த அமரர் வேலாப்போடி சின்னையா விதானையார் குடும்பத்தைச் சேர்ந்த அமரர் சின்னையா வடிவேல் ஐயா அவர்களின் மகன் திரு. வடிவேல் மகேந்திரன் தற்போது பூசகராகவுள்ளார். மறைந்தவர் தவயோகி சுவாமி சங்குபாலயோகீஸ்வரர் என அறியக்கிடக்கின்றது.
திமிலதீவுக்கு ஒரு வரலாறு உண்டு. இப் பகுதியில் துமிலர் என்னும் ஓர் இனத்தவர்கள் இங்கு வாழ்ந்;து வந்தனர். இவர்கள் உடல் பலம் மிக்கவர்கள். இவர்களின் தொழில் வீடுகளில் கண்ணம் வைத்தல். இதற்கு சாதகமாக அமைந்தது தீவு. இவர்கள் கண்ணம் வைக்க பயன்படுத்தியது புளியந்தீவுப் பகுதியாகும். இதனால் வேதனையில் ஆழ்ந்தவர்கள் புளியந்தீவில் வாழ்து வந்த முற்குக மக்கள். புளியந்தீவுப் பகுதியில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் பட்டானிகள் எனப்படும் அபியர்கள். ஒரு முறை துமிலர்கள் தமது விளையாட்டை பட்டானிகளிடம் காட்ட அவர்களும் பலமிக்கவர்கள் என்பதால் இவர்களை துரத்திச் சென்று தோற்கடித்து கொன்றனர். சத்துருவைக் கொன்றதால் அவ்விடம் சத்துருக் கொண்டான் எனப்பட்டது. அவர்கள் துரத்திக்கொண்டு ஏறிய ஊர் ஏறாவூர். அவர்கள் பின் வந்து இளைப்பாறிய மூலை வந்தாறுமுலை எனப்பட்டது. பின்னர் பட்டானிகளின் பாதுகாப்பு தொடர்ந்து தேவைப்பட்தனால் புளியந்தீவு மக்களால் அவர்களுக்கு பெண்களும் நிலமும் கொடுத்தனர். தம்மை காத்த குடியினர் எனவும் அழைக்கப்பட்டனர். இவர்கள் தான் காத்தான்குடியில் வாழும் சகோதரமக்களான இஸ்லாத்தை பின்பற்றிய தமிழர்கள். என வரலாறு ஒன்று கூறுகின்றது. இவர்களில் இன்னோர் பகுதியினர் ஏறாவூரிலும் வசிக்கின்றனர். இவர்களிடம் தழிழர்களுக்கிடையில் இருக்கும் குடிவழமை இன்றும் இருக்கின்றது. அத்துடன் அயல்கிராமங்கள் தமிழகள் வாழும் கிராமங்களாக கானப்படுகின்றது. இதன் பின் திமிலதீவு முற்குகர் கையில் வந்தது. அப்போது கண்டிய மன்னன் அட்சியில் நிலமை என்னும் பதவி பொற்றிருந்தவர் வேலாப்போடி இவர் முற்குகரின் தலைவராக இருந்திருக்கின்றார். இவர் சித்தவைத்தியத்திலும் மந்திரதந்திரத்திலும் சிறந்தவராக இருந்திருக்கின்றார். இவருடைய மகன்; தான் வேலாப்போடி மூத்ததம்பி இவர் தான் இறந்து உயிர் பெற்றுத் திரும்பியவர் எனக்கூறுகின்றனர்.
2.அடியேன் நாடியதும் அனுபவமும்:
அத் திமிலதீவு ஸ்ரீ மகாவிஷ்ணு என்னையும் அழைத்தார். நான் 2002ம் ஆண்டு இந்திய தலயாத்திரை மேற்கொண்ட போது. ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீரங்கநாதரை தரிசனம் செய்ய சென்ற போது தரிசனத்தில் பூரணத்துவத்துக்கு அங்குள்ள ஐயங்காரர்கள் தடையாக அமையவே மனம் வருந்தியவனாக வேண்டுதல் செய்துவிட்டு வந்தேன். தலயத்திரையை முடித்து விட்டு 2002இல் இலங்கை திரும்பியதும். ஒரு நாள் அதிகாலையில் கனவில் தோன்றிய மாயன் ஆலயம் ஒன்றினைக்காட்டி அங்கு வருமாறு அழைப்பு விட்டார். விளித்தெழுந்ததும் யோசித்துப்பார்த்தேன். எனக்கு அவ்விடம் புரியாத புதிராக இருந்தது பின்னர் காட்டப்பட்ட அடையாளங்களை அடிப்படையாகக் கொண்டு இடத்தை அறிந்து அங்கு சென்றேன். அங்கு பூசகரை கண்டு கதைத்து விட்டு பூசையில் கலந்து கொண்டேன். அப்போது அங்கு இருந்தவர் திரு. சின்னையா வடிவேல் ஐயா அவர்கள். அவர் எனக்கு எப்போதும் உறுதுணையாக இருந்தார். நான் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் சென்று தியானத்தில் இருப்பது வழமை. பூஜை முடிந்து சில நிமிட நேரத்தின் பின் தான் தியானத்தை விட்டு எழுவேன்;. அது வரை ஐயா காத்திருப்பார். பின்னர் ஞான அனுபவங்களை பகிர்வது வழiயாகிற்று ஒரு நாள் தியானத்தை விட்டு எழுந்த போது ஐயா கேட்டார் இவ்வாலயத்தில் நான் இருக்கும் போது மூன்று விடயங்கள் நிறைவேறவேண்டும். அப்போது நான் திகைத்துப் போனேன். ஐயா நீங்கள் கண்ணனுடன் உரையாடுபவராச்சே என்றேன். அதற்கு அவர் ஒன்றும் பேசாது மீண்டும் என்னிடம் அதே கேள்வியை கேட்டார். அப்போது நான் என்ன வென்று கேட்ட போது என்னுடைய காலத்தில் முதலில் இவ் ஆலயத்தில் பழமையாக இருக்கின்ற கருடமண்;டபம் புதுப் பொலிவு பெறுமா? அடுத்து முன்னூறு வருடங்களாக எனது மூதாதையர் தேடியும் கண்டுபிடிக்கப்படாத அபிஷேகத்துக்கு தேவையான சுத்த நீர்க்கிணறு கண்டுபிடிக்கப்படுமா? அடுத்தது புனருத்தாரன மகா கும்பாவிஷேகம் ஒன்று நடைபெறுமா? என்று கேட்டார். அதற்கு என்னுள்ளிருந்து உள்ளுணர்வு உணர்தியது அது நடக்குமென கூறினேன். ஐயா சந்தோசமடைந்தார்.
2002 இல் இந்திய தலயாத்தரையின் பின் முதலில் சுத்தமான நீர் கிடைத்தது. இதற்கொரு காரணமாயி ருக்கின்றது. எனது மனையாளுக்கு தீராதவியாதி ஒன்று எற்பட்டு இருந்தது. இவ்வியாதியை போக்க வைத்திய நிபுணர்களின் உதவியை நாட பயனளிக்கவில்லை. முதலில் மகாவிஸ்ணுவை நாடி திமிலதீவை அடைந்து அங்கு வழிபட்ட பின் என் குலதெய்வம் மகமாரியை வேண்டி நான் வழிபடும் மதுரைமீனாட்சியை வேண்டினேன். அப்போது அம்பிகை எமது சகோதர இனத்தைச் சேர்ந்த மதுரவீரன் வாலாயமுள்ள கேகாலை என்னுமிடத்தைச் சேர்ந்த திரு.மு.வு. சேலிவரத்தின என்பவரை அனுப்பி வைத்திருந்தாள். அப்போது அவருடைய சக்தியை பயன்படுத்தி நோய் சுகப்படுத்தப்பட்டது. இது முற்பிறப்பு விணை இப்பிறப்பு நன்மையே மகாவிஸ்னுவும் அம்பிகையும் நோயிலிருந்துகாத்தனர். திரு.மு.வு. சேலிவரத்தின என்பவரை எனக்கு தெரியாது. அம்பிகையை சரணடைந்தால் எமக்கேன் கவலை. அதன் பின் அவர் உங்களின் பணிகனை நிறைவேற்ற எனக்கு பணிக்கப்பட்டுள்ளது. வேறு என்ன செய்யவேண்டும் என்றார். பின் மகாவிஸ்ணு ஆலயததுக்கு அழைத்துச் சென்றேன். அங்கு என்னை ஆலயத்தை சுற்றிவருமாறு கண்ணண் சொல்கின்றார் என்றார். அப்போது அடியேன் சுற்றி வருகையில் ஓர் இடத்தில் நின்றேன். அங்கு கிடங்கலுமாறு கூறினார். பின்னர் நிலத்தை நீர் பெற அகன்ற போது நீரைக்காணவில்லை அப்போது ஐயா என்னிடம் கேட்டார் ஒன்றையும் காணவில்லை என்று அப்போது என் உள்ளுணர்வு சென்னது சென்னதை செய். இதையே ஐயாவிடம் கூறினேன். அதன் பின் நீர்கசிவு ஏற்பட்டது. அதை உடன் அபிஷேகம் செய்யுமாறு கூறினேன். அதன் பின் நீர் வந்துவிட்டது. ஐயா என்னிடம் கூறினார் ஆலய சரித்திரத்தில் நீயும் ஒருவனானாய் என்றார். அதுவல்ல உண்மை அது பிராத்தம் என்பதே உண்மை. வந்தவர் அவரின் சக்தி பயன்படுத்தி ஆலயவரலாற்றை கூறியதுடன் இவ்வாலயத்துக்கும் எனக்கும் உள்ள தொடர்யையையும் கூறினார். ஐயா அதிசயித்தார். அடுத்து கருடமண்டபம் திரு. கணேசானந்தம் குடும்பத்தினரால் நிறைவேறியது. அடுத்து மகாவிஸ்ணு அடியார்களால் குடமுழுக்கு நிறைவேறியது.
திமிலதீவுக்கு ஒரு வரலாறு உண்டு. இப் பகுதியில் துமிலர் என்னும் ஓர் இனத்தவர்கள் இங்கு வாழ்ந்;து வந்தனர். இவர்கள் உடல் பலம் மிக்கவர்கள். இவர்களின் தொழில் வீடுகளில் கண்ணம் வைத்தல். இதற்கு சாதகமாக அமைந்தது தீவு. இவர்கள் கண்ணம் வைக்க பயன்படுத்தியது புளியந்தீவுப் பகுதியாகும். இதனால் வேதனையில் ஆழ்ந்தவர்கள் புளியந்தீவில் வாழ்து வந்த முற்குக மக்கள். புளியந்தீவுப் பகுதியில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் பட்டானிகள் எனப்படும் அபியர்கள். ஒரு முறை துமிலர்கள் தமது விளையாட்டை பட்டானிகளிடம் காட்ட அவர்களும் பலமிக்கவர்கள் என்பதால் இவர்களை துரத்திச் சென்று தோற்கடித்து கொன்றனர். சத்துருவைக் கொன்றதால் அவ்விடம் சத்துருக் கொண்டான் எனப்பட்டது. அவர்கள் துரத்திக்கொண்டு ஏறிய ஊர் ஏறாவூர். அவர்கள் பின் வந்து இளைப்பாறிய மூலை வந்தாறுமுலை எனப்பட்டது. பின்னர் பட்டானிகளின் பாதுகாப்பு தொடர்ந்து தேவைப்பட்தனால் புளியந்தீவு மக்களால் அவர்களுக்கு பெண்களும் நிலமும் கொடுத்தனர். தம்மை காத்த குடியினர் எனவும் அழைக்கப்பட்டனர். இவர்கள் தான் காத்தான்குடியில் வாழும் சகோதரமக்களான இஸ்லாத்தை பின்பற்றிய தமிழர்கள். என வரலாறு ஒன்று கூறுகின்றது. இவர்களில் இன்னோர் பகுதியினர் ஏறாவூரிலும் வசிக்கின்றனர். இவர்களிடம் தழிழர்களுக்கிடையில் இருக்கும் குடிவழமை இன்றும் இருக்கின்றது. அத்துடன் அயல்கிராமங்கள் தமிழகள் வாழும் கிராமங்களாக கானப்படுகின்றது. இதன் பின் திமிலதீவு முற்குகர் கையில் வந்தது. அப்போது கண்டிய மன்னன் அட்சியில் நிலமை என்னும் பதவி பொற்றிருந்தவர் வேலாப்போடி இவர் முற்குகரின் தலைவராக இருந்திருக்கின்றார். இவர் சித்தவைத்தியத்திலும் மந்திரதந்திரத்திலும் சிறந்தவராக இருந்திருக்கின்றார். இவருடைய மகன்; தான் வேலாப்போடி மூத்ததம்பி இவர் தான் இறந்து உயிர் பெற்றுத் திரும்பியவர் எனக்கூறுகின்றனர்.
2.அடியேன் நாடியதும் அனுபவமும்:
அத் திமிலதீவு ஸ்ரீ மகாவிஷ்ணு என்னையும் அழைத்தார். நான் 2002ம் ஆண்டு இந்திய தலயாத்திரை மேற்கொண்ட போது. ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீரங்கநாதரை தரிசனம் செய்ய சென்ற போது தரிசனத்தில் பூரணத்துவத்துக்கு அங்குள்ள ஐயங்காரர்கள் தடையாக அமையவே மனம் வருந்தியவனாக வேண்டுதல் செய்துவிட்டு வந்தேன். தலயத்திரையை முடித்து விட்டு 2002இல் இலங்கை திரும்பியதும். ஒரு நாள் அதிகாலையில் கனவில் தோன்றிய மாயன் ஆலயம் ஒன்றினைக்காட்டி அங்கு வருமாறு அழைப்பு விட்டார். விளித்தெழுந்ததும் யோசித்துப்பார்த்தேன். எனக்கு அவ்விடம் புரியாத புதிராக இருந்தது பின்னர் காட்டப்பட்ட அடையாளங்களை அடிப்படையாகக் கொண்டு இடத்தை அறிந்து அங்கு சென்றேன். அங்கு பூசகரை கண்டு கதைத்து விட்டு பூசையில் கலந்து கொண்டேன். அப்போது அங்கு இருந்தவர் திரு. சின்னையா வடிவேல் ஐயா அவர்கள். அவர் எனக்கு எப்போதும் உறுதுணையாக இருந்தார். நான் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் சென்று தியானத்தில் இருப்பது வழமை. பூஜை முடிந்து சில நிமிட நேரத்தின் பின் தான் தியானத்தை விட்டு எழுவேன்;. அது வரை ஐயா காத்திருப்பார். பின்னர் ஞான அனுபவங்களை பகிர்வது வழiயாகிற்று ஒரு நாள் தியானத்தை விட்டு எழுந்த போது ஐயா கேட்டார் இவ்வாலயத்தில் நான் இருக்கும் போது மூன்று விடயங்கள் நிறைவேறவேண்டும். அப்போது நான் திகைத்துப் போனேன். ஐயா நீங்கள் கண்ணனுடன் உரையாடுபவராச்சே என்றேன். அதற்கு அவர் ஒன்றும் பேசாது மீண்டும் என்னிடம் அதே கேள்வியை கேட்டார். அப்போது நான் என்ன வென்று கேட்ட போது என்னுடைய காலத்தில் முதலில் இவ் ஆலயத்தில் பழமையாக இருக்கின்ற கருடமண்;டபம் புதுப் பொலிவு பெறுமா? அடுத்து முன்னூறு வருடங்களாக எனது மூதாதையர் தேடியும் கண்டுபிடிக்கப்படாத அபிஷேகத்துக்கு தேவையான சுத்த நீர்க்கிணறு கண்டுபிடிக்கப்படுமா? அடுத்தது புனருத்தாரன மகா கும்பாவிஷேகம் ஒன்று நடைபெறுமா? என்று கேட்டார். அதற்கு என்னுள்ளிருந்து உள்ளுணர்வு உணர்தியது அது நடக்குமென கூறினேன். ஐயா சந்தோசமடைந்தார்.
ஆலயத்தின் தோற்றம் |
அமரர் சி.வடிவேல் ஐயா அவர்கள் |
தீர்தக் கிணறு |
அவ் ஆலயத்துக்கு செல்லத் தொடங்கிய பின் மூன்று வாரத்தின் பின் சுவாமி ஸ்ரீ சத்திய சாய் பாபா வின் அபூர்வமான காட்சி கிடைத்தது. அதன் பின்னர் பின் மூன்று வாரத்தின் பின் குருதேவர் ஸ்ரீஇராமகிஷ்ணரின் அபூர்வமான காட்சி கிடைத்தது. இது போன்று பல சித்தர்களின் காட்சிகள் கிடைத்தது. இக் காட்சிக்கும் எனக்கும் என்ன தொடர்பு என்று சிந்தித்தேன். அப்போது தான் எனக்குப் புரிந்தது இருவரும் மகா விஷ்ணுவின் அவதாரம் என்பது. என்னை ஆன்மீக நாட்டத்தில் ஈடுபடகாரணமாக அமைந்தது குருதேவர் ஸ்ரீ இராமகிஷ்ணரின் வாழ்கை வரலாறு அடங்கிய அமுதமொழி இது அண்ணாவால் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. எனக்கொரு காலத்தில் மனக்குழப்பமும் அமைதியின்மையும் காணப்பட்டது. (1990இல்) இதை உணர்ந்த எனது தந்தை அமைதிக்கு ஒரே வழி குருதேவரின் அமுதமொழி தான் என்று என்னிடம் கையளித்தார். எனது தந்தை குருதேவரின் வழி நிற்பவர். உண்மையில் அது தான் மன அமைதியையும் உண்மையான ஆன்மீகப்பாதைக்கு அடிகோலியது எனலாம். அதனால் தானோ குருதேவரின் திவ்யதரிசனம் கிட்டியதோ என்று எண்ணினேன். இது போன்று பல சித்தர்கள் மகரிஷிகள் தரிசனங்கள் கிடைத்தது. இது சித்தர் கோயில் அல்லவா?
3.கண்ணனின் திருவிளையாடல்கள்:
இவ்வாலயத்தின் நடைபெற்ற அதிசயங்களை ஐயா என்னுடன் பகிர்ந்து கொள்வார். அவற்றில் சிலவற்றைக் குறிப்பிடலாம் என நினைக்கின்றேன்;;. கொக்கட்டிச்சோலை தான்தோன்றிஸ்வரர் ஆலயத்துக்கு பூசைக்காக திமிலதீவிலிருந்து தனது மூதாதையினர் முதலையை மந்திரசக்தியை கொண்டு அழைத்து அதில் ஏறி சென்று திரும்பி விடுவதாக கூறினார். அதிலிருந்து தெரிகின்றது கண்ணனுக்கு பூசை செய்த பரம்பரையினர் மந்திரசத்தி உள்ளவர்களாக இருந்திருக்கின்றனர். இவ்வாலயம் அக்காலத்திலிருந்து அரவம் தீண்டியவர்களை காப்பதிலும், சித்தசுவாதீனமுற்றோரை சுயநிலைக்கு கொண்டு வருவதற்கும், பில்லிசூன்யத்தினால் ஏற்படும் தீயவிளைவுகளிலிருந்து காப்பது போன்ற விடயங்களுக்கு இவ்வாலயம் தனிச்சிறப்பு வாய்ந்ததாக காணப்பட்டது.
1978இல் இலங்கையின் கிழக்குப்பகுதி சூறாவளியினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதில் திமிலதீவும் ஒன்று. அப்போது சூறாவளி வீசி சிறிய இடைவெளியின் பின் மறுமுறை வீசியது இரண்டம் முறை வீசிய போது ஐயா வீட்டில் இருக்க முடியாமையினால் கோயிலின் உட்செல்ல விளைந்த போது அவரால் முடியாமல் தவித்த போது ஒருவர் வந்து புயலால் சரிந்து கிடந்த அரசமரக் கிளையை ஒருகையால் தூக்கிவிட்டு ஐயாவை உட்புகுமாறு பணிக்க ஐயா உட்புகுந்தபின் திரும்பிப்பார்த்த போது அவரைக் காணவில்லை. வெளியில் பார்த்த போதும் அரசமரத்தில் உச்சிப்பகுதியில் ஓர் பிரகாசமிருப்பதை அவதானித்தனர். அப்பிரகாசம் அதிகாலை வரை நீடித்தது காலையில் மறைந்து விட்டதாக கூறினார். இன்றும் அவ்வொளி இருந்த பகுதி அரசு பங்குனி மாதத்தில் புதிய தளிர் வருகின்ற போது அவதானிக்க முடியும். ஒளி இருந்த உச்சிப்பகுதி வெண்ணிறமான தளிரும் ஏனைய பகுதியில் சென்நிற தளிரும் காணப்படும். அது தொப்ப ஒன்று போட்டால் போல காணப்படும். நான் அவ் ஆலயத்துக்கு சென்ற ஆரம்பத்தில் அவதானித்து கேட்ட போது ஐயா இந்த விடையத்தை எனக்கு கூறினார்.
இது மட்டும் அல்ல இவ் ஆலயத்துக்குள் அதிகாலையிலும் விசேடகாலங்களிலும் பிரபஞ்சத்தின் ஒளி வந்து இறங்குவது வழமை இதை பலரும் அவதானித்துள்ளனர்.
எமது பகுதியில் போர்சூழல் காணப்பட்ட காலத்தில் இவ் ஆலயம் பாதுபாப்பு படை வசம் இருந்தது. அக் காலத்தில் பூசைக்காக ஐயா மட்டும் அனுமதிக்கப்படுவாராம். ஒரு நாள் மட்டக்களப்பிலுள் டச்சுக் கோட்டையில் அதி காலையில் பாதுகாப்பில் ஈடுபட்ட படையினர் திமிலதீவில் ஒளிப்பொருள் ஒன்று உட்புகுவதை அவதானித்தனர். அப்போது அவர்கள் படைமுகாம் தாக்கப்படுவதாக எண்ணி அபாய ஒலி விளிப்பூட்டி தொடர்பு கொண்ட போது எதுவும் நடைபெறவில்லை பின்னர் உண்மையை அறிந்து ஆலயப்பகுதியை வழிபாட்டுக்கு அனுமதித்து படையினர் ஒதுங்கிக்கொண்டனராம். இவ்வாறான நிகழ்வுகள் இப்போதும் நிகளுகின்றது. 2006 ஆம் ஆண்டு திரு.கணேசாநந்தத்தின் திருவிழாவின் போது இரவு பதினொரு மணியிருக்கும் போது பச்சை நிற ஒளியாக கருடபகவானில் மகாவிஸ்ணு வந்து ஆலய மூலத்தூபிளுள் சென்றதை எல்லோரும் கண்டு “நமோ நாரயண” என்று பரவசமடைந்ததை நானும் கண்டேன். அச்சமயம் நான் ஆலயத்துள் தியானத்தில் ஆழ்திருந்தேன்.
திமிலதீவு மகாவிஸ்னு கோவிலின் குருக்கள் பெருமதிப்புக்குரி;ய திரு.சின்னையா வடிவேல் ஜயா என்னிடம் கதிர்காமக்கந்தனின் திருவிளையாடலை எனக்கு கூறியிருந்தார். அவர் கதிர்காமகந்தனிடம் பேரன்பு கொன்டவர். அவர் தனக்கு நேர்ந்த வாழ்க்கைக் கஷ்டங்களை போக்க கந்தனிடம் வேண்டி கதிர்காமம் சென்ற போது மாணிக்க கங்கைக் கரையில் இரவு வேளையில் இருந்போது கங்கைக்குள் ஒளிமிக்ககல் ஒன்றைக்கண்டார். அக்கல்லை எடுத்து தனது மடிக்குள் ஒழித்துவைக்கையில் அதன் பிரகாசத்தை மறைக்முடியவில்லை. இது இப்படி இருக்க மழையும் வந்துவிட்டது. மழைக்கு ஒதுங்கும் போது வயதான சன்னியாசியும் பக்கத்தில் ஒதுங்க இவருக்கு பயம்பிடித்து விட்டது. கல்லை பறிக்க தான் இவர் வந்துள்ளார். என அவருடன் வாதிட சண்டை உரக்க சிறிதுநேரத்தில் கல்லையும் கணவில்லை சண்டையிட்டவரையும் காணவில்லை. என்று கூறி மாயையில் மயங்கி மாயனை இழந்தேன் என்றார். பின்னர் கவலையடைந்த நிலையில் (திமிலதீவுக்கு) வீடு திரும்பினார். வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது மயில் ஒன்று வந்து தனது வேட்டியை இழுத்து எழுப்ப அங்கு சந்தைப்படுத்தல் திணைக்களத்தின் காரியாலய உதவியாளர் நிற்பதைக்கண்டார். அவர் தன்னை உடனடியாக திணைக்களத்தலைவர் வரும்படி கூறினாராம். அங்கு சென்ற போது வேலையை பொறுப்பேற்க்கும்படி கேட்டாராம். இதன்மூலம் கிடைத்த வேலையால் தான் தற்போது ஓய்வூதியம் பெறுகின்றேன் என்றார். எனவே கதிர்காமம் முருகனாக சித்தர்கள் நடமாடும்பூமி. எனவே திமிலதீவு மகாவிஸ்னு ஆலயமும் சித்தர்கோயில் தான் இதனால் தான் ஐயாவுக்கும் இவ்வாறான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
ஆலயமும் அரசமரமும் |
ஐயாவின் இறுதிக்காலத்தில் ஓரு நாள் வழமை போன்று தியானத்தில்லிருந்து எழும்போது கேட்டார் எனது காலத்தின் பின் என்ன நிங்களும் என்று கேட்டார் அதந்கு என் உள்ளுணர்வு கூறியது ஐயாவின் மகன் திரு.வடிவேல் மகேந்திரன் சக்தி பெறும் வரையில் கண்ணன் அடியவர்களின் வேண்டு தல்களை அவரே நிறைவேற்றுவார் தொடர்பாளர் தேவையில்லை இதுதான் நடக்கும் மென்றேன் அதற்கு அவர் அதுதான் நடக்கப் போகின்றது என்றார். ஐயா அதைக் குறிப்பிட்டு ஒரு சில வாரங்களின் பின் சிவபதமடைந்தார்.
4.இவ்வாலய பூஜை முறைகளும் திருவிழாவும்:
இவ்வாலயத்தில் தினப்பூசை மூன்று காலங்களிலும் பூசைநடை பெறுவதில்லை வாரத்தில் வெள்ளி சனி ஆகிய தினங்களில் உச்சிகால வேளைப்பூசையே நடைபெறுகின்றது. அதுவும் வெள்ளிக்கிழமையில் பூசை அரம்பிக்க பிற்பகல் மூன்றுமணிக்கு மேலாகின்றது. எப்படி ஆயத்தம் செய்தாலும் அந்தநேரமே நடை பெறுகின்றது இதுவும் வேறு ஆலயங்களில் இல்லாத சிறப்பு. அதில் வெள்ளிக்கிழமை மகாவிஷ்ணுவுக்கு விசேட பூசை நடைபெறுகின்றது. அன்று மட்டும் தான் பக்தர்களின் வேண்டு கோள்களை பூசகர் கேட்டு அதற்கு கண்ணனிடம் பதில் கேட்டு சொல்வது வழமை அதன் படி அடியார்கள் செயல்பட்டால் தமது வேண்டுதல்; நிறைவேறுவதாக நம்புகின்றனர். அதன்படி நிறைவேறுவது வழக்கமாகும். பின் நூல்கட்டுதல், திருநீறுபோடுதல், கூடுபோடுதல், போன்றன இடம் பெறுகின்றது. பூசையின் பின் முன் உள்ள ஆற்றங்கரைப்பகுதியில் பில்லி, சூனியம், கெடுதிகளின் களிப்பு இடம் பெறுகின்றது. இதன் மூலம் பயனடைந்தவர்கள் ஏராளம். சனிக் கிழமை சனிஸ்வரருக்கு விN~ட பூசை நடைபெறுகின்றது. அன்று கண்ணனுக்கு பூசை செய்து விட்டு. சனிஸ்வரனுக்கு பூசைநடைபெறும். அன்று சனீஸ்வரனது வேண்டுதல்கள் இராகுகேது தோசம் போன்றவற்றுக்கான பரிகாரங்கள் இங்கு இடம் பெறுகின்றது. இங்கு சனிஸ்வரருக்கு தனியான சன்நிதியுள்ளது. மட்டக்களப்பில் இங்கு மட்டும் தான் தனியான சன்நிதியுள்ளது. இது தனிச்சிறப்பாகும்.
இவ்வாலயத்தில் கருவறையில் ஸ்ரீ மகா விஷ்ணு வின் விக்கிரகம் மட்டும் தான் இருக்கின்றது. அதைக் கேட்ட போது வருடாந்த உற்சவத்தின் போது இறுதி நாள் வைகாசி அமரபக்க இருத்தையில் திருக்கல்யாணம் நிகள்வுகள்; ஆரம்பித்து அதிகாலையில் அமாவாசைதிதியில் திருக்கல்யணம் நிகளுகின்றது. இதற்காக கல்யாணக் கால் வெட்டும் நிகழ்வுவென்று உண்டு. அன்று ஊர் மக்களில் பெண்கள் அனைவரும் கற்பூரச் சட்டி எடுப்பதும். ஆண்கள் காவடி எடுப்பதும் சிறப்பம்சமாகும். கலியாணக் கால் வெட்டச் செல்லும் போது நிலபாவாடை விரித்து இருபுறமும் கற்பூரச்சட்டி ஏந்தியும் செல்வார்கள். வரும் போதும் அவ்வாறே அமையும். கலியாணக்காலுக்கான வேப்பை மரம் வெட்டுவதற்கு சில தினங்களுக்கு முன்னதாக கண்ணன் கலியாண காலுக்கான மரம் இருக்கும் இடத்தை கூறுவதாக கூறுகின்றனர். அந்த மரத்துக்கு அன்றையத்தினம் அபிஷேகம் செய்து மடைவைத்து பூசகரால் உருவேறிய பின் வெட்டுகின்றார். இங்கு மந்திரம் ஏதுவும் சொல்வதில்லை தானாகவே நடக்கின்றது. இதுவும் அங்குள்ள சிறப்பாகும். கல்யாணக்கால் வெட்டி வந்து ஆலயத்தை அடைந்ததும் அடியார்கள் இடை இடையே வளி மறித்து வேண்டுதல் செய்கின்றனர். இவ்வேண்டுதல்கள் நிறைவேறியவர்கள் அடுத்து வரும் வருட திருவிழாவி ல் நெர்த்திக்கடனை நிறைவு செய்கின்றனர். வெட்டப்பட்ட கல்யாணக் காலை இராதையாக உருவகிக்கபட்டு பூசகர் கண்ணனனாக பாவனை செயப்பட்டு இத் திருகல்யாணம் அதிகாலையில் நடை பெறுகின்றது. திருமணம் நிறைவு பெற்றதும் அடியார்கள் வேண்டுதல் செய்து பூசகருடன் கலி யாணக்காலை வளைக்கின்றனர். அப்போது கலியாணக்காலில் பணம் செலுத்துகின்ற வழமையும் இங்கு இருக்கின்றது. கலி யாணக்காலுக்கான பந்தல் அமைத்தல் ஆற்றுகப்பாலுள்ள கன்னங்குடாமக்களின் உபயமாக இருக்கின்றது. இதனால் அவர்கள் அங்கு வந்து அழகுறபந்தல் அமைக்கின்றனர். பந்தலில் பலவகையான பழங்கள் தொங்கவிடுகின்றதுடன் மாவிலை தென்னங்குருத்து மண்டு ஓலை என்பவற்றால் அழகுற அலங்கரிக்கின்றனர். திருமணகூறதாலிப் பெட்டி அமரர் சின்னையா வடிவேல் ஐயாவின் சகோதரியான திரு.திருமதி. கனகநாயகம் பாக்கியலட்சுமி குடும்பத்தினரே கொண்டு வருகின்றனர். அவர்களே பொண் வீட்டார். அன்று வினாயகர் பனையும் எழுந்தருளச்செய்கின்றனர். அன்று உச்சிக்காலை பூசையின் பின் திருமணச்சாப்பாடு கொடுக்கப்படுகின்றது. இதனால் தான் லட்சுமி சதேராக ஸ்ரீ மகா வி~;ணு இங்கு இல்லை. அந்நிகழ்வு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். முன்னர் உள்ள ஒன்பது நாட்களும் கண்ணபிரானின் லிலைகள் திருவிழாவில் சுவாமி வலம் வருகின்ற போது நடித்துக்காட்டப்படும். திருவிழாவில் இரண்டு சுவாமிகள் வலம் வருகின்றது. அதில் ஒன்று ராதை யதோசை சமேத கண்ணன் மற்றையது நாற்புறமும் மறைக்கப்பாட்ட தேர். ஸ்ரீ மகா வி~;ணு இருக்க திருவிழாவின் நிகழ்வுகள் அனைத்தும் கண்ணபிரானுக்கே நிகழ்வது இங்குள்ள சிறப்பம்சமாகும். அத்துடன் கண்ணன் கோவில் என்று தான் பத்தர்களும் அழைக்கின்றனர். அடுத்து வரும் வெள்ளிக்கிழமை சனிஸ்வரர் அமுது கொடுக்கப்படுகின்றது. அவ் அமுதில் முருங்கை இலைச்சுண்டல் விசேசமாக அமைகின்றது
எனவே இவ் வகை சிறப்பு மிக்க ஸ்ரீ மகா வி~;ணு என்னையும் ஆட்கொண்டார். அது முன்வினைப் பயனே என்றால் அது மிகையாகாது. அவன் வழி நின்று பயன் பெறுவோம்.
வாழ்கைப் பயணம் என்பது கரடுமுறடான கல்முள் உள்ள செப்பனிடாத பாதையே அதற்கு காரணம் நாம் செய்த வினைப் பயனே அப் பாதை சிலருக்கு ஓர் அளவு செப்பனிடப்பட்டதாகவும் அமைகின்றது. அதுவும் செய்த வினைப் பயனே ஆனால் கண்ணனின் பாதையில் வெற்றி கொள்வது “முயல் கொம்பை” ஒத்தது. எனது அனுபவம் மட்டுமல்ல அங்கு வரும் பலரின் அனுபவம். சோதனை என்று ஒன்று இருந்தால் வெற்றியும் தோல்வியும் உண்டு. பெரும்பாலும் அலுத்து போபவர்கள் தான் அதிகம். அதில் வெற்றி பெற்றவர்கள் விடாப்பிடியும் வைராக்கியம் உடைய ஒரு சிலர் தான். கண்ணன் மாயன். மாயையில் மூழ்க செய்து மறைந்து விடுவான். அதனால் வந்த வினையின் விளைவால் வருந்தி அழைக்க காட்சி கொடுத்து விடுவிப்பான். இதுவே அவன் திருவிளையாடல்.
இங்கு குறிப்பிட்டவை அனைத்தும் நேர்காணலும் அடியேனின் அனுபவமும் தான். ஆலயத்துக்கு செல்லும் போதெல்லாம் ஐயா என்னுடன் அனுபவபகிர்பு செய்வது தான் வழக்க மாகிவிட்டது. இது தான் இக்கட்டுரைக்கு அடிப்படையாக அமைந்தது என்பதில் ஐயமில்லை.
No comments:
Post a Comment