Monday, May 9, 2011

20 .“சித்தன் போக்கு சிவன் போக்கு  சித்தம் தெளிந்தால் அவன் போக்கு சிவன் போக்கு . அவனே சிவசித்தன்” இந்த வகையில் சித்தர்களின் வாழ்க்கை வரவாறு அறிமுகம்

1கருவூரார் : 
போகமாமகரிஷி
                                  கருவூரார் இவர் போகமாமகரிஷியின் சீடர்களில் ஒருவர். இவர் பத்தாம் நூற்றண்டைச் சேர்ந்தவர் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவர் கருவூரைச் சேர்ந்த பிராமண வம்சத்தை சேர்தவர் என வரலாறு பகருகின்றது. இவருடைய பூஜை முறைகளை பிராமணர்கள் ஏற்காமல் அவரை ஏளனம் செய்தோரே அதிகம். இறைவன் பால் அவர் கொண்ட அன்பை உலகறிய திருவுளம் கொண்டான் இறைவன்;.  தஞ்சை பெரும் கோயிலை இராஜராஜசோளன் கட்டிவித்து குடமுழுக்குக்கு ஆயத்தமானது  அப்போது மகா இலிங்கம் பிரதிட்டை செய்யும் போது ஆவுடையாரில் இலிங்கத்தை பிரதிட்டை செய்யமுனைந்த போது  பலமுறை முயன்றும்  பிரதிட்டை செய்ய முடியவில்லை. அப்போது அரசன் போகமாமகரிஷியை நாடிட அவர் அவருடைய சீடர்களில் ஒருவரான கருவூராருக்கு தகவல் அனுப்பி அங்கு செல்லுமாறு பணித்தர். குருவின் கட்டளையை சிரம்மேல் ஏற்று தஞ்சை நகர் விரைந்தார் கருவூரர். அங்கு சென்று பார்த்தபோது ஆவுடையாரினுள் பூதம் ஒன்று இருந்து  பிரதிட்டையை தடைசெய்வதை உணர்தார். அதைஅகற்ற தாம்பூலம் தரித்து அதை ஆவுடையாரினுள் உமிழ்தார். அதன் பின் இலிங்கம் பிரதிட்டை செய்யப்பட்டடு திருமுழுக்கு நடை பெற்றது. அங்கு எல்லோரும் வியப்படைந்தனர்.
             “தஞ்சையில் பொரும்கோயில் கட்டினான்; இராஜராஜ சோளன். குடமுழுக்கு செய்திடவே இலிங்க பிதிட்டை. ஆவுடையார் எற்கவில்லை.  காரணமறிய முடியாமல் திகைத்தனர் ஆச்சாரி மார்கள.;  புரியாத புதிரது  இராஜராஜ சோளனுக்கு. விரைந்தனர் போகமாசி~pயிடம். தகவல் அனுப்பிட்டார் கருவுரானுக்கு. தகவல் அறிந்து புறப்பட்டான் தஞ்சைக்கு குருசேவைக்கு. ஞானமயமாய் அறிந்தான் ஆவூடையில் பிசாசியின் அட்டகாசம். அடக்கவே தாம்பூலம் தரித்து ஆவுடைகுழியில் உமிழ்தான் சித்தன.; பறந்தது பிசாசு தாபி;த்தான் இலிங்கம.; அடைந்தனர் சந்தோசம.; பரவியது அவன்புகள். அப்பனின் திருவிளையாடல் இதுவெண்று அறிந்தீரோ”
கருவூரில் கருவூரரை அவர் இனத்தவர்கள் மதிக்காமல் எளனம் செய்ய ஏனைய இடங்களில் அவரின்புகழ் பெருக  தமது ஊரில் அவமானப்படுத்துகின்றனர். அப்பன் திருவிளையாடல் செய்ய எண்ணினன் 
            “மேகம் கறுத்து முகில் கூடி மோதி மின்னலுல்மின்னி இடியும் இடித்து. கார்முகில் குளிர்ந்து மழையும் பொழிந்தது. ஆற்றில் வெள்ளம் பெருகி ஓடிட ஆலயக்கதவுகள் தானாகத் திறந்தன. அப்போதும் ஊரார் சித்தனின் சித்தென்றனர் அப்பவும் ஊரார் அப்பனை உணரார். அப்பனின் திருவிளையாடல் இதுவெண்று அறிந்தீரோ”
          “கருவூரான் திருக்குருகூர் செல்கைவதை பாகவதர் சொற்பனத்தில் நார் அயன் கூறிட பகவதர் திரண்டுபணிந்தனர் அவரை. நார் அயன் கட்சி கிடைத்திட நீவீர் காரணமல்லவோ என்றனர் பகவதர். அப்பனின் திருவிளையாடல் இதுவெண்று அறிந்தீரோ” 
இன்னுமோர் முறை திருக்குருகூர் சென்றபோது அங்கு வாழும் பகவதர்கள் அனைவரும் அவரைக்கண்டு வணங்கினர் . அப்போது அவர்கள் ஸ்ரீமன்நாராயணன் சொற்பணத்தில் தோன்றி உங்களுக்கு மரியாதை செய்யுமாறு கூறியதாக விளம்பினர். அதனால் ஸ்ரீமன்நாராயணனனை காணும் பாக்கியம் பெற்றோம் என்றனர். 
அதன் பின் திருநெல்வேலியை அடைந்து திருக்கோயிலினுன் புகுந்து நெல்லையப்பா என அழைக்க அப்பன் குரல் கொடுக்காமையினால் வருந்தி “தெய்வமில்லாத இடம் எருக்கு காடகட்டும்” என சபித்து அவ்விடம் நீங்கி மானூரை அடைய  சித்தன் வாக்கு பலித்து எருக்கு காடனது நெல்லையப்பன் ஆலயம். மானூரில் அப்பன் “உணவருந்தும் வேளையறியாமல் விளம்பிநீரே கருவூரா மீண்டும் வாறிரே” என்றார். அப்பனின் வாக்கை மறுக்காத கருவூரர் மீண்டும் செல்லுகையில்
           “ திரு நெல்வேலியில் அடிவைத்த கருவூரன் அப்பனை அழைக்கையில் விடை அற்ற நிலையில் சபித்தான் காடுற. அப்பன் வாயுறை நேரமதுயறியான் சித்தன்வன். உணவருந்தும் வேளையறியாமல் விளம்பிநீரே கருவூரா மீண்டும் வாறிரே என அழைத்தான் அப்பனவன். அடிவைத்த இடமெல்லாம் பொன்னடித் தடம் பதித்து மாயமய் மறைந்தது காடுற்ற எருக்கு உவகையில் மூழ்கினான் சித்தனாம்  கருவூரன் இது அவன் திருவிளையாடல் அறியாத மாந்தருக்கு அறிவுட்டு செயல் அல்லவோ இது. அப்பனின் திருவிளையாடல் இதுவெண்று அறிந்தீரோ”
 இவ்வாறு ஆத்தனின் திருவிளையாடல் கருவூரரியில் நிகழ்த்திக்காட்டினான்.
ஊரிலிருந்து புறப்பட்ட கருவூரார் கங்கை கொண்ட சோளபுரம் எனும் திருத்தலமடைந்தார். அங்கு
           “சிவன் கரம்பட்டு தீட்சையும் பெற்றார். பெற்ற பின் காகம் குருவின் கட்டளையுடன காலினில் கட்டுடன் நின்றது;. கட்டது அகற்றி கட்டளை பார்தான். “கருவூரரே உடனே வாரீர்” உடன் விரைந்தான் குருவிடம். சீடனின் மனநிலை புரிந்தவர் குரு அவர். பூவுடலுடன் புகழ் அது கடினம். வாய்த்ததை நழுவவிடாதே ஆத்திரம் அடக்கு கிளம்பிடு யாத்தரை. அப்பனின் திருவிளையாடல் இதுவெண்று அறிந்தீரோ”
 என உவதேசம் கூற கிளம்பிளம்பினார் யாத்திரை. 
வரும் போது 
       “ஸ்ரீரங்கம் அடைந்து  பள்ளி கொண்ட ரங்கநாதரை வணங்கி வெளியேற. தாசியவள் அபரஞ்சி சாதனை புரிய அற்புதச்சித்தன் காலது தழுவி மனையது வேண்டினாள். சித்தனோ தாசி என விட்டகலவில்லை நோக்மது தெரிந்திட்டவன் அத்தனவன் அல்லவோ. சிவயோக சாதனை செய்யுமவள்ளல்வோ அதை அறிந்தவன் அவனல்லவோ. இருநாள் தரிக்க வைத்து பூசனை செய்து யோகசாதனை கற்றுறவளை. சித்தனிடம் அவள் சாதனை மெச்சி ரங்கநாதன் கொடுத்த நவமணிமாலை தனை கொடுத்து விடைபெறுகையில் நினைக்கையில் வருவேன் என விடை கொடுத்தான் கருவூரன். மறுநாள் காலை விரைந்தவள் நன்றி கூற நாதன் சன்னிதி. நிறைந்தது கூட்டம் காரணம் அறிய விளையவே நவமணிமாலை கண்ணம் வைத்ததை அறிந்தாள். தன் களுத்தில் இருப்பதை கண்டனர் கூட்டம். அதை கவர வருகையில் தயக்கமின்றி நாதன் தந்ததை விளம்பினாள். ஏற்காத கூட்டம் வசையது கூற. இன்றிரவு நிரூபனமாகு மென்றாள். அன்றிரவு சித்தனை நினைக்க தரிசனமானார். தரிசனமாக விரைந்தனர் காவலர். நடந்ததை விளம்பி அழைத்தனர் அறங்காவலரிpடம். தயக்கமின்றி சென்றனர் இருவரும்  அங்கே. தர்க்கித்து அவமானபடுத்தனர் கூட்டம். தயங்காமல்  இருவரும் வேண்டுதல் செய்ய ரங்கனின் கட்டளை பிறந்தது அங்கே. “அரங்கனுக்கலங்காரம் பக்தர்கள் செய்ய பக்தனுக்கலங்காரம் நான் செய்து பார்தேன். நானே கருவூரனிடம் கொடுத்தனுப்பினேன்” என்றது அசரீதி.   அஞ்சிநடுங்கி வணங்கினர் அறங்காவலர்களும் மக்களும்  கருவூரனையும் அபரஞ்சியியையும். நவமணிமாலையை கொடுக்கவே அதை அளித்தாள் அரங்கனுக்கே இதை கண்ணுற்றவே வியந்தனர் மக்களும் அறங்காவலர்களும.; அப்பனின் திருவிளையாடல் இதுவெண்று அறிந்தீரோ


          “பின்னர் கருவூர் அடைந்தான் சித்தன். பளிகூற காதிதிருத சிலர் கோனிடம் அனாச்சாரமுடைமையை முறையிட கோமகனும் உள்ளது அறியாது நாடினான் ஆச்சிரமம். ஆச்சாரமுள்ளதை அறியவே அவ்விடமிருந்து நீங்கவே. பழிதிர்க்க ஒருசிலர் மாய்க்வே என்னினர். காலங்கணிய காத்திருக்கவே. அமராவதிதனில் நீடாட செல்கையில் சன்டாளர்கள் சங்கறுக்க முனைகையில் பயந்தவன் போலோடி சராணகதியானன் கரூரில் ஆனிலை அப்பனில் சென்றவன் மறைந்தான் அப்பனின் கலந்தான். சென்வர் திகைத்தனர் கருவூரரின் சக்தியில். பிராயசித்தமாய் அமைத்தனர் கருவூரனுக்குகோர் சந்நிதி. நித்தியமாய் பத்தியாய் பூசனை செய்தனர். அப்பனின் திருவிளையாடல் இதுவெண்று அறிந்தீரோ”
கருவூரரின் வாழ்கையில் இறைவன் திருவிளையாடல் அதிகமாக நடை பெற்றுள்ளது. அத்துடன் அவர் ஞானநூல்களை நன்கு ஆராய்தறிந்தவர். யோக சித்தியும் பெற்றவர். பொதிகைமலைப்  பகுதியியுள்ள குற்றாளத்தில்  பல காலம் தங்கினார். அங்கு திருவிசைப்பாபாடி கருவூர்தேவரானார். இவர் தஞ்சை, கருவூர் ,சதுரகிரி, போன்ற இடங்களில் வாழ்திருக்கின்றார். இவர் ஓர் பிரம்மஞானியாவார். இவர் எழுதிய நூல்கள் வாத காவியம், வைத்தியம், யோகஞானம், பல திரட்டு வைத்தியம், குருநூல்சூத்திரம், பூரணஞானம் என்பவை குறிப்பிடத்தக்கவை.   

No comments:

Post a Comment