வெண்தாமரையின் மருத்துவக் குணப்பற்றி தேரையர் பதாத்த குண சிந்தாமணியில் குறிப்பிடுகையில்
“ஈரலைப் பற்றிமிக வேறுகின்ற வெப்பம்போம்
கோரர் மருத்தின் கொடுமையறும் பாருவதியில்
தண்டாமரையை யொத்த தாழ்குளலே காந்தர் விடும் வெண்டாமரைப் பூவால் விள்” என்றார் தேரையர். இதன் தாவரவியல் பெயா: “நின்பெயல்;லோட்டஸ்”
வெண்பாவின் பொழிப்பு
தேரையர் |
“கோரர் மருத்தின் கொடுமையறும்”: அத்துடன் கோர மருந்துகளின் தாக்கத்தால் உண்டாகும் தாக்கத்தால் ஏற்படும் ஒவ்வாமையை சரி செய்யும் பணியும் ஈரலுடையது தான்.(மருந்துகளை எடுத்துக் கொள்வதால் உண்டாகும் பக்கவிளைவான நச்சுத்தன்மையால் ஏற்படும் விளைவுகளை அகற்றும் பணி ஈரலுக்குண்டு அதனால் விளையும் தாக்கத்தரல் ஈரல் பாதிக்கப்படுவதை வெண்தாமரை தடுக்கும்) இவை அனைத்தையும் சரி செய்து திடப்படுத்தும் தன்மை வெண்தாமரைக்கு உண்டு.
முகிலிகையை பயன்படுத்தும் முறைகள்:
இதனை பயன்படுத்தும் முறையை நோக்குவோமால் தாமரை இதழ்களை அல்லி தவித்து. பல முறை சுத்தமான நீரில் அலம்பி இணலில் உலர்த்தி (அதாவது நெரடி சூரிய வெயிலில் உலத்தாது) அவ்விதழ்களை சூரணம் செய்து பருத்தி துணியால் சலித்து காலை மாலை வெறுவயிற்றில் தேனுடன் கலந்து திருகடி பிரமாணத்தில் அருந்தலாம். அல்லது ஒரு கி;லோ இதழ்கனை உலத்தினால் நூறு கிராம் உலத்திய பூ இதழ் கிடைக்கும் இதனை மூன்று லிற்றர் நீர்விட்டு சுண்டக்காச்சி அரைலிற்றர்ராக்கி இதை அரைத்து வடிகட்டி பணம்கற்கண்டுடன் சேர்த்து காச்சி சர்பத்பதமாக பதப்படுத்திவைத்துக் கொண்டு காலை, மாலை வெறும் வயிற்றில் அருந்திவர ஈரல் பலமடைந்து உலலை காயகற்பமாக்கும்.
“மலர்கள் தத்திரங்களின் தன்மைகள்”:
பூக்கள் காலையில் மலர்வதும் மாலையில் உதிர்வதும் இயற்கை. இதுபோன்று இரவில் மலரும் பூக்களும் உண்டு. பெரும்பாலும் காலையில் மலர்வது சூரியனின் கவர்சியில் கவருவன இவைகளை சூரியகாந்தப்பூக்கள் என்பர் இவைகள் சிவ பூஜை பயன்படுத்துபவை இவை பொதுவாக வெப்பநோய்களுக்கு பொருந்தும் இவை பொன்று பத்திரங்களும் உண்டு இவை சூரியன் மறையும் போது தன்னை சுருக்கிக் கொள்ளும் உதிக்கும் போது விரித்துக் கொள்ளும் அவை நெல்லி, வன்னி, ஆத்தி, அத்தி, திருவாத்தி போன்றவை அவையும் மருத்துவக்குணம் நிறைந்தவை. இவை போன்று சூரியன் மறைந்து சந்திரன் வருகின்ற போது சந்திரனின்கதிர் கவர்சியினால் மலரும் பூக்களும் உண்டு அவை மனமுள்ள பூக்கள் மல்லிகைஈ செம்பகம்,சம்பந்தி, மனோரஞ்சிதம் போன்றவை இவை பொதுவாக அம்பிகைக்கு சமர்ப்பிப்பதாக இருக்கின்றது. சூhயனால் கவரப்படுவதை சூரிகாந்தப்பூகள் என்றும் சந்திரனால் கவரப்பட்டவை சந்திரகாந்தப்பூகள் என்றும் கூறுகின்றனர். முற்காலத்தில் பூக்கள் மலர்நுது வரும் வாசனையைக் கொண்டு நேரங்களைக் நேரத்தை கணிக்கப்பீடு செய்ததாகக் கூறப்படுகின்றது. நேரத்தைப் பொறுத்து அதன் மருத்துவகுணங்களும் மாறுகின்றதாக கூறுகின்றனர். பூகள் விரியும் சத்தம் காதுகளின் கேட்கும் அளவை விட அதிகமாம். என்றும் கூறுகின்றனர். மனத்தை ஈத்திழுத்தெடுக்கும் பன்பு மலர்களின் இயல்பான தன்மையாகும்.
கீதையில் கிரு~;ண பரமாத்மா பூகளில் நான் தாமரை என்றும் சுவாமி விபுலானந்தர் உள்ளத்தை தாமரைக்கு ஒப்பிட்டு “உள்ளக்கமலமடி உத்தமனார் வேண்டுவது” என்றும். “பூவிணுக்கருங்கலம் பொங்குதாரை” என்றும் சுவாமி குமரகுருபரர் சகலகலாவல்லி மாலையில் “வெண்தாமரைக்கன்றி நின்பதம் தாங்க என் வெள்ளை உள்ள தாடாமரைக்கு” என்றும் உள்ளத்துக் கொப்பாக குறிப்பிட்டதன் பயன் நல்ல உள்ளத்தை அது கொடுக்கும் என்பதால் தான். வெள்ளை உள்ளம் இருந்தாலே போதும் ஆன்மாவை உணர. “மனமது செம்மையானால் மந்திரம் தேவை இல்லை” மனத்தை ஸ்திரப்படுத்தவே மந்திரம். எனவே வெண்தாமரையின் சிறப்பை இதன் மூலம் உணரமுடியும்.
பயனுள்ள தகவல். ஈரலில் கொழுப்பு படிவடைவதை குறைக்க எளிய வழிமுறை
ReplyDelete