தாவரவியல் பொயர் : “கிலேஸ்லோலாடஸ்”
இம் முகிலிகை பொதுவாக வயல் புறங்களில் அறுவடையின் பின் வயல் வரவைகளில் அடர்தியாகப் படர்ந்து காணப்படும். இம் முகிலி செருப்புப் போல மெதுவாகப் காணப்படுவதனால் செருப்படை என அழைக்கப்படுகின்றது. கிராமப்புறங்களில் ஒர் பழமொழி கூறுவார்கள் “நாய் கடிச்சா செருப்பால் அடிச்சாப் போச்சி” என்பார்கள். இதன் மூலம் நாய்க் கடிக்கு செருப்படை ஒரு முக்கிய முகிலிகை என்பது தெரிகின்றது. இம் முகிலிகை அரைத்து நாய்கடித்து பற்கள் பட்ட இடத்தில் வைத்து கட்டிவிட்டு அதன் சாற்றை மூன்று நாட்களுக்கு முறை உட் கொடுப்பதன் மூலம் வி~த்தைக் கட்டுப்படுத் முடியும். மருந்து உட் கொள்ளும் போது உப்பில்லாப் பத்தியம் மேற் கொள்ள வேண்டும். இங்கு செருப்பால் அடித்தல் என்பது செருப்படையைக் கொடுத்தல் எனப் பொருன்படும்.
தேரையர் |
“செருப்டைக்கு வாதபித்தம் சேர்மான மேகம்
இருப்படி கொள் பொல்லா இசிவு விருப்படிக்கும்
சூலை ஒடு வாத குண்மம் தோன்றாது
ஒருகாலும் வேலை யொற்ற கண்ணாய் விளம்பு” எனக் குறிப்பிடுகின்றார்.
இங்கு 1.“செருப்டைக்கு வாதபித்தம் சேர்மான மேகம்”: என்பது பால் உறவினால் ஏற்படுகின்ற மேகம் இதனை போக்க வல்லது செருப்படை எனவே இந்த முகிலிகை பால்வினை நோய்களுக்கு நல்ல மருந்தாக அமைகின்றது.
2.“இருப்படி கொள் பொல்லா இசிவு”: இங்கு இசிவு என்பது இழைப்பு நோய், இரைப்பு நோய் அல்லது சுவாசகாசம் இது நுரையீரல் தமது பலத்தை இழப்பதனால் உண்டாகும் நோய் இந்த முகிலிகை நுரையீரலை பலப்படுத்தும் தன்மையுடையது. இதனால் நோய் தோன்றாது வராது. நோய் வரமுன் காப்பது வந்த பின் குணப்படுத்துவதை விட முக்கியமானது. இது தமிழ் வைத்தியத்தின் சிறப்பாகும்.
3.“சூலை ஒடு வாத குண்மம் தோன்றாது" : இங்கு “சூலை” என்பது வயிற்றில் ஏற்படும் புண். உணவு சொரித்தலின் குறைபாட்டால் ஏற்படும் அஐPரணம். வாத குன்மம் என்பது வாவுடன் கூடிய அஐPரணத் தன்மையால் வயிற்றில் அதிக அமிலம் சுரப்பதால் வாதபித்தம் சேர்மான மேகம் என்னும் பால்வினை நோய்களுக்கு இம் முகிலிகை அருமருந்தாக அமையும். இம் முகிலிகையை ஒற்றை முகிலிகையாக அல்சர் நோய் உள்ளவர்களும் கரும நோய் உள்ளவர் களும் பயன்படுத்தலாம்.
பயன் படுத்தும் முறைகள்:
இந்த முகிலிகை நீர்பகுதிகளில் காணப்படுவதால் மூன்று அல்லது நான்கு முறை சுத்தமான நீரில் கழுவி சுத்தம் செய்து சூரிய ஒளி நேரடியாகப்படாது இனலில் உலத்தி அரைத்து துணியில் கலித்து வஸ்திர காயமாகக் சூரணமாக்கி வெறு வயிற்றில் திருகடி பிரமாணமாக காலை மாலை பயன் படுத்தலாம். இது உடலில் நோய் எதிர்பு சக்தியை உடலில் வாதபித்தம், வாதகுண்மம், சூழை நோய் இவைகள் வராது தடுக்கும் ஆற்றல் செருப்படைக்கு உண்டு.
No comments:
Post a Comment