Friday, October 28, 2011

"குரல் கம்மல் காமாலை போக்கும்கரிசலை "

"குரல் கம்மல் காமாலை போக்கும்கரிசலை கை என ஒளவை குறிப்பிட்ட கையான் அல்லது கரிசலை மருத்துவக்குணம் கை என ஒளவை குறிப்பிட்ட கையான் அல்லது கரிசலை 
தாவரவியல் பொயர் : “இக்கிலிட்டாஆல்வா”  (ECLIPTA PROSTRATA ROXB.)
குடும்பப் பெயர்:;;  ASTERACEAE.  
இத் தாவரம் பற்றி தேரையர் தனது பதாத்தகுண சிந்தாமணியில்
        “குரல் கம்மல் காமாளை குட்டமுடன்
            சோவை உரல் பாண்டு பன்நோய் யொழியும் 
            நிரச் சொன்னர் மெய்யாம் தகரையை ஒத்த
            ஆழி அன்னர் புலத்து கையான் தகரை
             ஒத்துக்கால்” என்று குறிப்பிடுகின்றார்.
1.“குரல் கம்மல்”என்னது தொண்டைக்கட்டு அதிநேரம் உரத்த குரலில் உரையாடுபவர்களுக்கு இவ்வாற நோய் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம் இதனால் குரல் நானில் முடிக்குகள் ஏற்பட்டு குரல்கம்மல் ஏற்படும்.
2.“காமாளை” எனக்குறிப்பிட்டது ஈரலி ஏற்படும் கல்லு,வீக்கம் போன்றவற்றால் உண்டாகும் மஞ்சல்காமாலை நோயைக்குறிக்கும். பொதுவாக ஈரலை பற்றிய எல்லா நோய்களையும் காமாலை இங்குகுறிப்பிட்டுள்ளார்.
3.“குட்டமுடன்சோபை” இது இரத்தக்குறைவால் அல்லது இரும்புக் சத்துக் குறைவால்  ஏற்படும்  வெளுப்பு நோய் அல்லது இரத்தச் சோகை நோயைக் குறிக்கும்.
4.“உரல் பாண்டு” என்பது நீர்சுரப்பு நோய்யைக்குறிக்கும்.
5.“மெய்யாம்” என்பது உண்மையைக்குறிக்கும் அதேசமயம் உடலையும் குறிக்கும் இங்கு அது உடலையே குறிக்கின்றது.
6.“தகரையை யெத்த யானியன்ன நற்பலத்து கையான் தகரை யொத்hதக் கால்” உடம்பானது தகரையை ஒத்தததாக வரும் என்று கூறுகின்றார். இங்கு தகரை என்பது தகரை என்னும் தாதவரம் ஒன்று உண்டு அதையல்ல செம்மறியாட்டுக்கும் இப்பெயர் உண்டு. இவை யெல்லாம் விடுத்து ஆனியானையை ஒத்த பலம் கிடைக்கும் என்றும் குற்ப்பிடுகின்றார். யாளி என்ற விலங்கு  அன்னம் என்ற பறவையும் முற்காலத்தில் வாழ்தது .இவ்விலங்கு தற்போது இல்லை. யாளி என்ற விலங்கு சிங்கமும் யானையும் சேர்ந்த உருவம் கொண்டதான விலங்காகக் காணப்படும். இது தற்போது ஆலயங்களில் தூண்களில் சுதை சிற்பங்களாகவும் தேர்கால்களில் செதுக்கப்பட்டும். இருக்கக்கானலாம். அன்னப்பறவை பாலையும் தன்னீரையும் கொடுத்தால் பாலை மத்திரம் அருந்தும் தன்மையுடையதாகவும் நீண்ட ஆயூள் கொண்டதான பறவையாகும். இதை யொத்த பலத்தைத்  கையான்தகரை தரும் எனக் கூறுகின்றார்.
   இது இரும்புச் சத்து நிறைந்தது  எமது உடலில் ஐந்து தொடக்கம் ஐந்தரை லீற்றர்  இரத்தம் இருக்க வேண்டும். அதில் இரும்புச் சத்து உண்டு. இதற்கு “கிமோக்குளோபீன்” என்று பெயர். இதில் “கீம்” என்பது புறத்தட்டிக் பாகத்துடன் “குளோபீன்” என்பது புரதம்.  இவை இரண்டும் சேர்ந்தே கிமோக்குளோபின் நிறமி இரத்தத்தில் இருக்கின்றது. நல்ல இடத்தில் விளைந்த கரிசலாங்கன்னியில் இயற்கை இரும்புச்சத்து அதிகம் உண்டு. நிறமிகள் நாம் உயிர் வாழ்வதற்கு அவசியமானதாகும். இரும்புச்சத்து இல்லாவிட்டால் இரத்தச்சோகை நோய் வந்துவிடும். உடலுக்குத் தேவையான பிராணவாய்வை பெற்று திசுக்களுக்கு அனுப்பும் ஆற்றல் கிமோக்குளோபீன்னுக்கு உண்டு. இதை உருவாக்கும் சக்தி இரும்புச்சத்துக்குண்டு. 
        இரத்தத்தை உற்பத்தி செய்வது எழும்பு மச்சைகளே. இரத்தத்தில் மூன்று பொருட்கள் உண்டு. அவையாவன வெண்குழியம் (வெண்குருதிச் சிறுதுணிக்கைகள்) இது ஒரு கனமில்லி மீற்றர் குருதியில்;(1mm3) 4000-11000  வரையில் இருக்க வேண்டும்.  குருதிச் சிறுதட்டு ஒரு கனமில்லி மீற்றர் குருதியில்;(1mm3) 250,000, செங்குழியம்(செங்ருதிச் சிறுதுணிக்கைகள்) ஒரு கனமில்லி மீற்றர் குருதியில்(1mm3

 5மில்லியன்; இருக்க வேண்டும். இம் மூன்றும் குறித்தளவில் இருந்தால் நோய்கள் அற்று சுகதேகியாக வாழ முடியும் இதை இயற்கையாக பெறுவதே சிறந்தது இதற்கு கருசலை மிகவும் சிறந்தது. 
      சித்தர்கள் கருத்து “இருப்பவன் இரும்பைத்தின்னு போறவன் பொன்னைத்தின்னு” என்றனர். பொன்னை ஆபரணமாக கண்டனர் மாந்தர்கள் மருந்தாகக் கண்டனர் சித்தர்கள். தங்கத்தை பென்;னை பற்கமாக்கி மருந்தாகக் கொடுத்து நீடித்த பிணிகளையை தீத்தாக சித்தவைத்திய ஏடுகள் ஆதாரம் காட்டு கின்றன. இன்றும் நீடித்த பிணிகளைத்தீர்க்க பயன்படுத்துகின்றனர்.இதற்கு பக்க விளைவு இல்லை. தங்கத்தை ஒப்பிலாம் குடி என்னும் முகிலின் சாற்றில் அரைத்து உப்பாக மாற்றி பயன்படுத்துவர்.  தனக்கு ஒப்பில்லாது இல்லை என்பதே இதன் பொருள். இப் பற்பம் உடனடியான ஓர் பூரிப்பைத் ஏற்படுத்தி வேகத்தையும் உட்ச்சாகத்தையும்  ஊட்டுகின்றதே தவிர நீண்டகாலத்துக்கு பயன் தரு மருந்தாக இதை சித்தர்கள் கருத வில்லை. இரும்பைத்தான் கருதினர். அதற்கு அயச்சத்து என்று சித்தர்கள் குறிப்பிட்டனர். 
பயன் படுத்தும் முறைகள்:
        இரும்பை உப்பாக மாற்றி அயச்செந்தூரம், அயக்காந்தசெந்தூரம், அன்னபேதிச்செந்தூரம், வெடி அன்னபேதிச்செந்தூரம், போன்றன சித்தர்களாள் கூறப்பட்ட முறைப்படி தயாரிக்க வேண்டும். இவற்றில் உள்ள சக்தியே கரிசலாங்கன்னியிலும் உண்டு. இதை அன்றாடம் உணவாகவும், லேகியமாகவும், சூரணமாகவும் சல்லடையில் சலித்து பாவிக்கலாம். அல்லது துணியில் சலித்து வஸ்திரகாயமாகவும் காலை மாலை ஆகிய இரு வேளை வெறுவயிற்றில் தேனுடன் திரிகடிப் பிரமாணமாக பயன்படுத்தலாம். கரிசலை நீர்பகுதிகளில் காணப்படுவதால் மூன்று அல்லது நான்கு முறை சுத்தமான நீரில் கழுவி சுத்தம் செய்து சூரிய ஒளி நேரடியாகப்படாது இனலில் உலத்தி  அரைத்து துனியில் கலித்து வஸ்திர காயமாகப் பயன் படுத்தலாம்.
 உடல் வலிமை தரும் கரிசலை தைலம்
  தைலம் தயாரிக்க தேவையான பொருட்கள்.
1.ஒரு கிலோ நிறையுள்ள பசுமையான கரிசலை இலை மூலம் பெற்ற ஒரு லிட்டர்(1.ட) கரிசலை சாறு
2. ஒருலிட்டர் சுத்தமான எள்ளெண்ணை (நல்லெண்ணை) ஒரு லிற்றர்(1.ட)
3;.தோல் நீக்கப்பட்ட ஏழுமுறை சுத்தநீரினால் திரும்ப திரும்ப நன்றாக சுத்தம்      செய்தெடுத்த குமரியின் சோறு (சோற்றுக் கற்றாலை சோறு) இருநூற்றி ஐம்பது கிராம் (250 ப)
4.பச்சை நெல்லிக்காய்ச் சதை இருநூற்றி ஐம்பது கிராம் (250 ப)



No comments:

Post a Comment