வேம்பின் மருத்துவக்குணம் பற்றி தேரையர் குறிப்பிடுகையில்
“கிருமி குட்டம் மந்தம் கெடும்
விடம் சுரங்கள் பெருமிய வைசூபிகையின்
புண்கள் ஒருமிக்க நிம்பத்திலை
இருக்க நீடுலகில் நீற்காது இலை காய்” என்றும் இன்னுமோர் பாடலில்
“மந்தப் பொருமலுடன் மல்லாடும்
பேதி வகை வந்த கணுச்சூலை
வண்கிரந்தி தொந்த மெல்லாம்
கூப்பிக் கரம் கொண்டாடும் இத் தரையில்
வேம்பின் நற்குணத்தை வீழ்” என இருபாடல்களில் தேலையர் வேம்பின் மருத்துவக் குணங்களைக் கூறியுளார்.
1. “கிருமி குட்டம் மந்தம் கெடும்”: “கிருமி” என்பது வைரஸ் என்பதை இங்கு பொருள் கொள்ள வேண்டும். பொதுவாக புழு என்பது எம்முடலில் காணப்படும் நடாப்புழு, உருளைப்புழு, கீரிப்புழு என்பவற்றைக் குறிப்பிடுகின்றோம். புச்சி என்பது சிறிய உயிரினங்களுக்கு பயன்படுத்தும் பெயராகும். ஆனால் இங்கு கிருமி என்று பயன்படுதியதிலிருந்து நுண் கிருமியான பற்றியாக்கள் பங்கஸ்சுக்கள்; வைரஸ்கள் என்பவற்றினால் நோய் பரப்பப்படுகின்றது என்பதை மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சித்தர்கள் அறிந்திருந்ததை அறியமுடிகின்றது. நுண்கிருகிகளால் பரப்பப்படும் நோய்களை தடுக்க நோய்க்கிருமிகளைத் தடுத்துக் கொல்லும் ஆற்றல் வேம்புக்கு உண்டு. அதனாலேயே அம்மை நோக்கு வேம்பு அருமருந்தாக கண்டு அம்மை நோய் கண்டவர்க்கு வேம்பின் இலையுடன் மஞ்சல் சேர்தரைத்து உடல் முழுவதும் பூசுவதுடன் மருந்தாக வேம்பில் அரும்பின துளிரை உட் கொடுப்பதுடன் படுக்கையில் வெள்ளை விரிப்பொன்றை விரித்து அதன் மேல் முற்றிய வேம்பின் இலைகளைப் பரப்பி நோய்யுற்றரை துயில வைப்பர். அம்மை நோக்குக் காரணம் வைரஸ் இதைதடுக்கும் ஆற்றல் வேம்புக்குண்டு என்பதை அன்று அறிந்திருந்தனர் சித்தர்கள். அறிவியல் இதை ஆராய விளைந்தது. ஆயிரத்து எண்ணுற்றி எழுபதில்களில் பிராஸ் தேசத்தைச் சேர்ந்த டக்டர். லுயிபாஸ்டர் என்பவர் ஒரு உயிரியல் விஞ்ஞானி இவர் பிற்காலத்தில் நுண்ணுயிரியல் விஞ்ஞானியாகி நுண்கிருமிகள் மனித உடலில் நோய்களை உருவாக்கின்றது என்ற விடயத்தை நவீன மருத்துவ உலகுக்கு முதலில் அறிமுகம் செய்தார். இதை சித்தர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இதை அறிந்து அனுபவித்து மக்களுக்கு தெரித்வித்திருக்கின்றனர். என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. கண்ணுத்தெரியாத உயினங்கள் நோயை உருவாக்கு கின்றன என்பதை தமிழ் மருத்துவம் உணர்தே இங்கு “கிருமி” என்ற சொற்பதத்தை அன்று பயன்படுத்தி இதனை அளிக்கும் ஆற்றல் வேம்புக்கு உண்டு என்பதை அறிந்து ஆய்து அனுபவித்து தமிழ் மருத்துவத்துக்கு தந்தனர்.
2. “குட்டம்”: தொழுநோய்யாகிய விரல்கள் அழுகி விழுவதுடன் அங்கங்கள் சுருங்கி ஒலிந்து அபலட்சணத்தை உருவாக்கின்ற கிருமிகளை அகற்றி ஒழிக்கும் ஆற்றல் வேம்புக்குண்டு.
3. “மந்தம் கெடும்”: ஐPரணக்குறைபாடு இயற்கையாக உணவு சொரிக்கும் ஆற்றலில் தாமதம் இதனால் அஐPரணம் ஏற்படுத்தி உடல் உபாதைக்கு உட்படுகின்ற நிலையை தடுக்கின்ற தன்மை வேம்புக்குண்டு.
4. “விடம் சுரங்கள் பெருமிய வைசூபிகையின் புண்கள்” : நீங்காத காச்சல் வைசூரியினால் உண்டாகும் புண்கள் இவற்றைப் போக்கும் இயல்பு வேம்புக்குண்டு.
அடுத்த பாடலிலே “மந்தப் பொருமலுடன் மல்லாடும்
5. பேதி வகை”:மாந்தத்தினால் வயிறு பொருமலடைந்து ஏற்படும் வயிற்றுப்போக்கை தடுக்கும் தன்மை வேம்புக்குண்டு.
6. “வந்த கணுச்சூலை”: கணுச்சுலை என்பது மூட்டுகளில் நாற்பது வயதின் பின்னர் ஏற்படும் வழுவின்மையினால் ஏலும்புகள் உரைவதால் ஏற்படும் நோவும் வலியும் போக்கும் தன்மை வேம்புக்குண்டு.
7. “வண்கிரந்தி தொந்த மெல்லாம்”;: வண்மையான கிரந்தி அதாவது ஒவ்வாமையினால் தோலில் ஏற்படும் பருக்கள் அவைஎல்லாம் வேம்பைக் கண்டவுடன் கைகுப்பி எங்களை ஒன்றும் செய்ய வேண்டாம் விட்டுவிடுங்கள் பயந்து ஓடிவிடுமாம் என்று வேம்பின் வல்லமையை தேரயர் குறிப்பிடுகின்றார்.
பயன் படுத்தும் முறைகள்:
வேம்பின் துளிர் |
2. மயிர் கறுத்து இளமை பெற “அகன்னன் நுதனாய் ஓர் அதிசயம் கேளாய் களவு காயம் கலந்த இன் நீரில் மிளகும் நெல்லியும் மஞ்சலும் வேம்பிடில் இலகு மேனி இறுகும் காயமே” தும்பை போல இருந்த தலை முடி கறுப்பாக போவதுடன் உடல் இழமையும் மடையுமாம் வெண்மிளகு,நெல்லி வற்றல், கஸ்தூரி மஞ்கல், வெம்பின் விதை, அமியை இவை ஐந்தையும் அரைத்து நீரிலிட்டு தலை உடலெங்கும் பிரையோகித்தால் உடல் கட்டிளமை பெறுவதுடன் தலை முடியும் கறுப்பாகும்.
வேப்பம் வித்தும் |
நடுத்தர வேம்பின் இலை |
நன்கு முற்றிய இலையில் |
6. வேம்பிலையின் நெட்டியில் உள்ள பச்சிலைப்பகுதியை நீக்கி ஈக்கை இடித்து நீர்விட்டு வறற்க்காச்சி அருந்த அதிசாரமெனும் வயிற்றுப் போக்கு நின்றுவிடும். இம் மருந்து அஐPரணக் கொளாற்றையும் நீக்க வல்லது.
7. வேம்பின் நடுத்தரமாக விளைந்திருக்கும் இலையை எடுத்து இதனுடன் இஞ்சி, மஞ்சல் இவை இரண்டும் சேர்த்து மூன்றையும் சமமிடையாக சேர்த்து விழுது போல் அரைத்து ஓட்டியிட்டு சாதுவாக சூடாக்கி மூட்டி மூட்டுக்களில் பற்றுப்போட்டால் போல பூசி காயவிட்டு காலையில் கழுவிடலாம். பின் வீட்டில் இருப்பதானால் மீண்டும் காலையிலும் இடலாம் இதன் மூலம் மூட்டுவலி வீக்கம் என்பன சுகமாகி மூட்டுகளின் உராவை தடுக்க வழுவும் உண்டாகும்.
No comments:
Post a Comment