Friday, October 28, 2011

"தந்த மூலப்பினி தீத்திடும் குப்பைமேனி"



"தந்த மூலப்பினி தீத்திடும் குப்பைமேனி"  மேனி எனக்குறிப்பிட்ட குப்பைமேனியின் மருத்துவப் பண்புகள்  
    மேனி என்னும் குப்பைமேனி இத் தாவரம் பற்றி தேரையர் தனது பதாத்தகுண சிந்தாமணியில்
“தந்த மூலப்பிணி தீ தந்திடுமபுண் சர்வவி~
முந்து குன்மம் வாத முதிர மூலந்தினவு
சூலம் சுவாசம் தொடர் பிளிசங் கபம் போம்
ஞாலஸ் கொள் மேனி யதனால்” என்றார்.
 தாவரவியல் பெயர்: “அக்காலிகாஇன்டிகா” (ACALYPHA INDICA.)

குடும்பப் பெயர்:  (EUPHORBIACEAE.)
இச்செடியில் உள்ளசிறப்பு என்வென்றால் சூரிய வெளிச்சம் எல்லா இலைகளிலும் படும் அமைப்புக் கொண்டது அச் செடி இலைகளின் அமைப்பு கோபுரம் போலும் கிழ்; இலைகள் இரண்;டுக் கிடையில் மேல் இலை அமையும். அத்துடன் மரம் வளச்சியடையும் போது கீழ் இலைகள் நீண்டு கொள்ளும் தன்மையுடையது. ஒரு இலையின் நிழல் மற்ற இலையில் படாது. இதனால் சூரிய சக்தியை எல்லா இலைகளும் பெறுகின்றன. உடலின் பிரதான மூன்று மண்டலங்களுக்கு சிறந்த நிவாரணியாக அமைகின்றது. அவையாவன  சுவாச மண்டலம், சர்ம மண்டலம், ஐPரண மண்டலம் என்பனவாகும். உடல் குப்பையாகப் போனால் அதை சரி செய்து மேனியாக்கும் தன்மை இந்த மூகிலிகைக்கு உண்டு. இம் முகிலி உலகம் மெல்லாம் பலவிக் கிடக்கிறது.
         
 குணமாகும் நோயிகள்:  
 1“தந்த மூலப்பிணி;”: தந்த வேரில் ஏற்படும் நோய்கள் அதாவது தந்த வேர் பலவீணமாவதால் பற்கள் பலவீனமடைகின்றது எனவே பல்லின் வேரைப்பற்றி வருகின்ற நோய்களைக் குணமாகும்;,
 2.“தீ தந்திடும்புண்”  கொதித்த நீர் உடலில தவறுதலாக் கொட்டுவானால் ஏற்படும் புண், நெருப்பினால் உடலில் உண்டான வெந்த புண் கொப்பளம் அதனால் ஏற்படும் எரிவு இதனால் ஏற்பட்ட புண் ஆறிய பின் புதிய தோலில் வெண்தழும்பு ஏற்படும்  இது நிறமிகள் பாதிகப்படுவதால் உண்டாகும். இப்பாதிப்பை போக்க புதிய நிறமிகளை உருவாக வேண்டும். இதை உருவாக்கும் ஆற்றல் குப்பைமேனிக்கு உண்டு. 
3.“சர்வவி~” :  சர்வ வி~ம் என்பது நஞ்சு  ஒவ்வாமையினால் ஏற்படும் நஞசுத்தன்மை இதை டொஸ்சின் அல்லது அலஐPக் என்பர். உடல் ஏற்றுக் கொள்ளாத  பொருட்களினால் ஏற்படும் பிணிகளை போக்குகின்ற தன்மை இம் முகிலிக்கு உண்டு. 
4.“முந்து குன்மம்”:  உணவு சமிபாடு செய்யும் முறையில் உண்டான உந்து குன்மம் இரைப்பையில் உணவை சொரிபாகமாக்கின்ற சக்தியில் உண்டான குறைபாடு  அதாவது ஐpரணமாக்குகின்ற தன்மையை இழந்து அஐpரணமாகும் தன்மை இம் முகிலிகை குணமாகும். 
5.“வாத முதிர மூலந்தினவு”:   நரம்பு தளர்வினால் உண்டான வாதம், மலத்துடன் இரத்தம் போதம் அல்லது ஆசன வாயில் ஏற்படும் உதிர மூலம். மலம் கழிக்கின்ற போது மலத்தின் மேல் உதிரம் பூசப்பட்டால் போல தோன்றுதல், மலம் கழிக்க முன் உதிரம் வரல், அல்லது கழித்த பின் செட்டுச் செட்டாக உதிரம் விழுதல், இவற்றுடன் வலி எரிச்சலுடன் மலங்களிப்பது போன்ற இரத்த மூலம் குணமாகும். 
6.“தினவு”:  உடல் முழுவதும் ஏற்படும் அரிப்பு அல்லது ஒவ்வாமை என்னும் தினவு ஒவ்வாமையை ஏற்படுத்திய பொருளை உடலிலிருந்து அகற்றும் சக்தி இம் முகிலிகைக்கு உண்டு.   
7.“சூலம சுவாசம் தொடர் பிளிசங”:   வயிற்றில் புண் ஏற்பட்டு சூலத்தால் குத்துவது போன்ற வலி ஏற்படும் நோய் குணமாகும். ஆஸ்துமா என்னும் இரைப்பு நோய் அல்லது மூச்சு வாங்குதல் மூச்சு விடுவதற்கு சிரமமாக இருத்தல் போன்ற சுவாசநோய்  குணமாகும்.  பீனிசம் கபத்தில் நீர்க் கொருத்துக் கொண்;டு தும்மல் தலைவலி தலைபரம் போல் தோன்றும் தலிவலியால் ஏற்படும் பினிசம் எனப்படும்  இன் நோயியும் குணமாகும். 
8.“கபம் போம்”:  தொன்டையில் நீண்ட நாட்கள் சளிகட்டியிருப்பதனபல் நுரையிரலில் உண்டாகும்  கபம் என்னும் நோய்யும் குணமாகும். இந்த ஒரு முகிலிகையால் பதினொரு வகையான நோய்கள் குணமாகும் என தேரயர் குறிப்பிடுகின்றார். இதை அறிவியலும் பல ஆய்வுகளைச் செய்து ஒப்பு கொண்டுள்ளது. 

பயன் படுத்தும் முறைகள்:
 குப்பைமேனியை சுத்தமான இடத்தில் பெற்று மூன்று முறை சுத்தமான நீரில் மீண்டும் மீண்டும் கழுவி சுத்தம் செய்து இனலில் உலர்த்தி உலத்திய சமூலத்தை திரித்து  அதை சல்லடையிலோ அல்லது வஸ்திரத்தில் சலித்து வஸ்திரகாயமாக வைத்து காலை மாலை திருகடிப் பிரமாணமாக தேனில் குலைத்து அருந்தி வரலாம். உணவாகவும் பயன்படுத்தலாம். 

No comments:

Post a Comment