Monday, February 26, 2018

வாத பித்த ஐயம் போக்கும் தேன்

"வாத பித்த ஐயம் போக்கும் தேன்"
தேன் பலவகையுண்டு அது போல் தேன் எடுக்கும் காலத்துக்கு ஏற்ப அதன் தன்மையும் மாற்ற மடையக் கூடியது. பொதுவாகக தேனீக்கள் தேன் எடுக்க மலர்களையே நாடுகின்றன. மலர்களில் தினமும் மலரும் மலர்களும் உண்டு. பருவகாலத்தில் ஒருமுறை அல்லது இருமறை மலரும் மலர்களும் உண்டு. பொதுவாக மல்லிகை, செம்பரத்தை, நித்தியகல்யானி, லிங்கப்பூ, ரொசா போன்றவை செடிகளின் மலர்கள் தினமும் மலருகின்றன். வேம்பு, நாவல், முருங்கை, பாலை, வீரை, மா, இலுப்பை போன்ற மரங்கள் காலத்துக்கு பல ஒருமுறை சில அதாவது மா இருமுறையும் மலர்கள் மலருகின்றன். இதற்கேற்ப வேம்பின் பூ மலரும் காலத்தில் அதை அன்மித்த இடத்தில் அதனை எடுக்கும் போது அது வேம்பின் மருத்துவக்குணம் நிறைந்ததாக அத்தேன் அமைந்திருக்கும். அதுபோல தற்போது வளப்புத் தேனும் உண்டு. அது போல தேன் எடுக்கப்படும் இடத்தைப் பொறுத்தும் தேனை சித்தர்கள் வகைப்படுத்து கின்றனர். அதாவது மலைத்தேன், கொம்புத்தேன், புற்றுத்தேன், மனைத்தேன் என வகைப்படுத்து கின்றனர். இனி,
தேனின் மருத்துவக் குணம் பற்றி சித்தர்கள் கூறும் கருத்களை பார்ப்போம்.
மலைத்தேனின் மருத்துவக்குணம் பற்றி பார்க்கும் போது
'ஐயிரும லீளைவிக்க லக்கிப்புண் வெப்புடல்நோய்
பைய வொழியும் பசியுமுறும் - வையகத்தில்
எண்ணுமிசை யாமருந்திற் கேற்ற வனுபானம்
நண்ணுமலைத் தேனொன்றி னால்' என்றனர் சித்தர்கள்.
1. 'ஐயிரும லீளைவிக்க லக்கிப்புண் வெப்புடல்நோய்' : ஐயம் என்னும் நோயும், இருமல், ஈளை என்னும் இலைப்பு நோய், விக்கல், அக்கினிப்புண் அதாவது தீயினால் ஏற்பட்ட காயம், வெப்பம், உடல் நோயையும் போக்க வல்லது.
2. 'பைய வொழியும் பசியுமுறும் - வையகத்தில்' : பசியைப் போக்க வல்லதுடன்
3. 'எண்ணுமிசை யாமருந்திற் கேற்ற வனுபானம்' : இசையாகிய சங்கீதம் பாடக்கூடிய சாரீரமும் உண்டாகும். அத்துடன் மருந்தனுபானத்திற்கும் அதாவது இருந்துண்ணும் போது தேனில் கலந்துண்ண உதவும். தூள்போன்ற மருந்தை உண்ண.
4. 'நண்ணுமலைத் தேனொன்றி னால்' : மேற் கூறிய அனைத்து தன்மையும் மலைத்தேனுக்கு உண்டு என்றார்கள். மலைகளில் மரங்களில் எடுக்கப்படும் தேனையே இங்கு குறிப்பிடுகின்றனர். தீக்காயம் ஏற்படும் போது அதில் தேனை பூசிவிடும் வழக்கம் இன்றும் கிராமப்புறங்களில் கானப்படுகின்றது. இசைக் கலைஞர்கள் காலையில் தேனை உண்டு சாரீரம் செய்வதை யாவரும் அறிவர்.
கோம்புத்தேனின் மருத்துவக் குணம் பற்றி சித்தர்கள் செப்பியதை பார்ப்போம்.
'வாதபித்த ஐயத்தை மாற்றமுள மாந்தைதனைக்
காதமென ஓட்க் கடியுங்காண் - பூதரமாம்
வம்புமுலைமாதே வருமருசி நீங்கிவிடுங்
கொம்புத்தே னன்றாகுங் கூறு' என்றனர் சித்தர்கள்.
1. 'வாதபித்த ஐயத்தை மாற்றமுள மாந்தைதனைக்' : வாதம், பித்தம், ஐயத்தை போக்குவதுடன் உளமாந்தையையும் போக்க வல்லது.
2. 'காதமென ஓட்க் கடியுங்காண் - பூதரமாம்' : இவை அனைத்தையும் பேகாக்க வல்லதுடன்
3. 'வம்புமுலைமாதே வருமருசி நீங்கிவிடுங்' : வம்பு முலையை உடைய மாதே அருசி என்னும் உருசி இன்மையை போக்க வல்லது என்று
4. 'கொம்புத்தே னன்றாகுங் கூறு' : கொப்புத் தேனை கூறு என்றார். கோப்புத் தேன் என்பது காடுகளில் கானப்படும் மரங்களின் கிளைகளில் கட்டியிருக்கும் தேன் கூட்டிலிருந்து பெறப்படும் தேனாகும்.
புற்றுத் தேனின் மருத்துவக் குணம் பற்றி குறிப்பிடுகையில்
'கொப்பணியு மாதே குவலயத்து ளெல்லார்க்கும்
ஓப்பநின்ற ஐய மொளிக்குங்காண் - பூதரமாம்
காசசுரவா சம்வாந்தி கண்ணிலெழு நோய்களறும்
வீசுபுற்றுத் தேனுக்கு மெய்' என்றனர் சித்தர்கள்
1. 'கொப்பணியு மாதே குவலயத்து ளெல்லார்க்கும்' : கொப்பணியும் மாதே குவலயம் எங்கும் என்று குறிப்பிடுகின்றார் சித்தர்கள்.
2. 'ஓப்பநின்ற ஐய மொளிக்குங்காண் - பூதரமாம்' : நிலவுகின்ற ஐயம் என்னும் நோயை குணப்படுத்தும்.
3. 'காசசுரவா சம்வாந்தி கண்ணிலெழு நோய்களறும:' : காசம், சுவாசம், வாந்தி, கண்களில் உண்டாகும் நோய்களை போக்க வல்லது.
4. 'வீசுபுற்றுத் தேனுக்கு மெய்' : வீசும் புற்று தேன் என்பது உண்மை என்கின்றனர் சித்தர்கள். புற்றுத் தேன் என்பது மண்புற்றுக்குள் இருப்பது. ஆனால் அவை மரங்களின் பொந்துகளிலும் இருக்கும். புத்தை வெட்டி எடுப்பது போல் மரப்பொந்தையும் வெட்டி எடுப்பர்.
மனைத் தேனின் மருத்துவக்குணம்
'புண்ணும் புரையும்போம் போகாக் கரப்பனறும்
ஏண்ணிரிய தீபனமா மேந்திழையே – கண்ணுகளிற்
பூச்சிபுழு வெட்டுகபம் பொல்லா விருமலறும்
பேச்சின்மனைத் தேனுக்குப் பேசு' என்றனர் சித்தாகள்'
1. 'புண்ணும் புரையும்போம் போகாக் கரப்பனறும்' : புண்புரையும் விட்டுப்போகா கரப்பானையும் போக்க வல்லது.
2. 'ஏண்ணிரிய தீபனமா மேந்திழையே – கண்ணுகளிற்' : பசி உண்டாகும் கண்களில் உள்டள பூச்சி இல்லாதெழியும்,
3. 'பூச்சிபுழு வெட்டுகபம் பொல்லா விருமலறும்' : புழு வெட்டு, கபம், தொடச்சியான இருமல் என்பன போகும்.
4. 'பேச்சின்மனைத் தேனுக்குப் பேசு' : இவை எல்லாம் மனைத்தேனுக்கு என்றார்கள் சித்தர்கள். மனைத்தேன் என்பது வீடுகளில் கட்டும் தேன் கூடுகளில் பெறப்பகடும் தேன்.
தேன் பொதுவாக வாத, பித்த, சிலேற்பணத்துக்கு சிறந்ததுடன் புண்புரைகளை மாற்ற வல்லது. அத்துடன் குரல் வளம் பெறவும் சிறந்தது. காசம் சுவாசம், கண்களில் உண்டாகும் நோய்களுக்கும் சிறந்ததாக அமைவதுடக் தூளான மூலிகை மருந்தை சேர்த்து அருந்த உதவுகின்றது.
இந்து மதத்தில் ஆலய வழிபாட்டில் நடைபெறும் கிரியை முறையில் அபிஷேகம் செய்யும் போது கல்வி வேண்டி தேன் அபிஷேகம் செய்கின்றனர். அத்துடன் சுவாமிக்கு தேன் நிவேதனம் செய்கின்றனர். தேன் எப்போதும் நாவில் வழியாக வரும் சத்தத்துக்கு காரணமான குரலை இனிமையாக்க மருந்தாக பயன் படுத்துவதுடன் நாமகளான சரஸ்வதி குடியிருப்பாக கருதும் இடம் நாவாகும். இதனால் கல்வியை வழங்க ஞாபக சக்தியும் கிரகிக்கும் ஆற்றலும் தரவல்லது தேன். இதனை சித்தர்கள் அறிந்திருதமையினால் வழிபாட்டிலும் மருத்துவத்திலும் பயன்படுத்தியுள்ளனர். மனம் அமைதியாக இருந்தால் தான் கல்வி மனதில் நிலை பெறும் அதற்கு தேன் வாத, பித்த, சிலேற்பணத்தை சமப்படுத்த வல்லது. சித்தர்கள் மருத்துவம் மகத்தானது. மனுக்குல விடுலைக்கு அருமருந்து.

No comments:

Post a Comment