Monday, February 26, 2018

விளாம்பழம் எங்கும் கிடைக்கக் கூடியது. இது பஞ்சவில்வங்களில் ஒன்று சிவபெருமானுக்கு பஞ்சவில்வத்தினால் அர்ச்சிப்பது சிறப்பு.

விளாம்பழம் எங்கும் கிடைக்கக் கூடியது. இது பஞ்சவில்வங்களில் ஒன்று சிவபெருமானுக்கு பஞ்சவில்வத்தினால் அர்ச்சிப்பது சிறப்பு. இது பித்தத்தை போக்க வல்லது. பஞ்ச வில்வங்கள் வில்வதளம், விளாத்தி, கருநெச்சி, முட்கிளுவை, மாவிங்கு என்பன. இவை அனைத்துமே மருத்துதன்மை வாய்ந்தவை நேர்எண்ணங்களை ஏற்படுத்த வல்லவை. இந்தவகையில் விளாம்பழத்தின் மருத்துவ தன்மை தொடர்பாக பாதார்தகுண சிந்தாமணி குறிப்பிடுகையில்.
"எப்போதும் மெய்க்கிதமாம் ஈளையிரு மல்கபமும்
வெப்பாருந் தாகமும்போம் மெய்ப்பசியாம் - இப்புவியில்
என்றாகிலுங்கனிமேல் இச்சைவைத்துத்தின்னவெண்ணித்
தின்றால் விளாங்கனியைத் தின'; என்றனர் சித்தர்கள்
பொழிப்பு:
1. எப்போதும் மெய்க்கிதமாம் ஈளையிரு மல்கபமும்: ஈளை, இருமல், கபம் என்வற்றைப் போக்க வல்லது
2. வெப்பாருந் தாகமும்போம் மெய்ப்பசியாம் - இப்புவியில்: வெப்பு, தாகமும் போக்க வல்லது. என்பவற்றுடன் பசியும் உண்டாக்க வல்லது. இப்புவியில்
3. என்றாகிலுங்கனிமேல் இச்சைவைத்துத்தின்னவெண்ணித்: எப்போதும் அதில் இச்சைவைத்து உண்ணவேண்டும். என்று குறிப்பிடுகின்றனர். விளாம்கனியை
விளாம்பிசினின் மருத்துவகுணங்களை குறிப்பிடுகையில்
'நல்ல விளாம்பிசினை நற்பாகஞ் செய்தருந்தத்
தொல்லையதி சாரந் தொல்லைவதொன்றோ மெல்லியரால்
வந்தவெள்ளை தன்னுடனே மாதர் பெரும்பாடும்
உந்துநீர்ப் போக்கும்போய் உன்' என்றனர் சித்தர்கள்
பொழிப்பு:
download (5)1. நல்ல விளாம்பிசினை நற்பாகஞ் செய்தருந்தத்: நல்ல விளாம்பிசினை நல்ல பதமாக்கி
2. தொல்லையதி சாரந் தொல்லைவதொன்றோ மெல்லியரால்: அதிசாரம் போகும் மெல்லிய பெண்களுக்கு
3. வந்தவெள்ளை தன்னுடனே மாதர் பெரும்பாடும்: வெள்ளையொழுகல், மாதர்பெரும்பாடு என்பவைகளைப் போக்க வல்லது.
4. உந்துநீர்ப் போக்கும்போய் உன்: நீரிழிவும் என்னும் நோய்களையும் போக்க வல்லது.
விளாமரத்தின் மருத்துவ குணம்பற்றி குறிப்பிடுகையில்
'காச சுவாசங் கதித்த வருசிமுதற்
பேசரிய தாகமிவை பேருங்காண் - வீசு
தபித்தலைச்செய் பித்தந் தரிக்குமோ பூவிற்
கபித்த மரமிருக்குங் கால்' என்றனர் சித்தர்கள்.
பொழிப்பு:
1. காச சுவாசங் கதித்த வருசிமுதற்: காசசுவாசம் பொக்க வல்லது
2. பேசரிய தாகமிவை பேருங்காண் - வீசு: அருசி, தாகம் இவைகளைப் போக்க வல்லது.
3. தபித்தலைச்செய் பித்தந் தரிக்குமோ பூவிற்: பித்தத்தை போக்க வல்லது.
4. கபித்த மரமிருக்குங் கால: விளாமரத்தினால் என்றனர் சித்தர்கள்

No comments:

Post a Comment