பாண்டு பெரும்பாடு பகர் மூத்திரக்கிரீச்சரம் போக்கிடும் கற்கரக்கி என்னும் தேங்காய்ப்பூக்கீரை
"பாண்டு பெரும்பாடு பகர் மூத்திரக்கிரீச்சரம் போக்கிடும் கற்கரக்கி என்னும் தேங்காய்ப்பூக்கீரை"
கோடைகாலம் ஆரம்பித்தவுடன் உடலில் ஏற்படுவது நீர் இழப்பு இதற்கு காரணம் அதிக வெயிலால் தோல் எனது உடலின் வெப்பதற்பத்தை சீர் செய்யும் போது தோல் அதிக வியர்வை வெளியேற்றி சீர் செய்யும். இன் நிலையில் சிறுநீரகத்தில் நீர் விழுக்காடு ஏற்பட்டு இதனால் நீர்ச்செறிவு ஏற்பட்டு நீர் அடத்தி ஏற்படும் அதனால் சிறுநீரக்கற்கள் உண்டாவதுடன் சிறுநீரகம் கிருமித்தொத்துக்கு உண்டாகி பாதிக்கப்படலாம். அதை தடுக்க கோடைக்காலத்தில் அதிகளவு நீர் அருந்தும் தேவை உண்டு.
சிறுநீரகக் கற்கள் பொதுவாக சிறுநீரகத்துக்குள்ளும் அல்லது சிறுநீரகத்தில்“வெல்விஸ்” பகுதியிலும், சிறுநீர் வருகின்றபாதையிலும், சிறுநீர்குழாயிலும், தங்கியும் தோன்றலாம்.
சிறுநீரகக் கற்கள் பொதுவாக ஐந்து வகையாக வகைப்படுத்தியுள்ளனர்
1. “கல்சியம் ஒட்சியேற்” வகையான கற்கள்.
2. “கல்சியம் பஸ்ரேட்” வகையான கற்கள்.
3. “சுவைட்” வகையான கற்கள். சிறுநீரக தொற்று கிருமிகளின் தாக்குதலால் ஏற்படுகின்ற “மெக்நீசியமும் அமோனியாவும்”; சேர்ந்து ஒருவகையான கற்களை உருவாக்குகின்றன இவ்வகையான கற்கள் “சுவைட்”வகையான கற்கள் ஆகும்.
4. “யூறிக் அமிலக் கற்கள்” இது மிகக் குறைவான அளவிலே வருகின்ற யூறிக்கமிலம் அடர்த்திகூடுவதனால் உருவாகும் கற்கள்.
5. “செங்டோன் கற்கள்” “சிஸ்டின் “என்ற அமிலோ அமிலத்தால் உண்டாகும் கற்கள்.
இவ்வாறு சிறுநீரகக் கற்கள் உருவாகுகின்றன. இக் கற்களை அகற்ற நவீன மருத்துவம் பலமுறைகளைக் கையாழுகின்றன. அவைகள்.
1. “லித்தோடிஸ்சி” என்ற ஒருமுறை கதிர்களைப் பயன்படுத்தி கற்களை உடைத்து சிதைத்து சிறுநீர்ப்பாதை வழியாக வெளியேற்றுதல். இது கிரேக்க நாட்டு முறை “லித்தே” என்பது கல். “திப்சி” என்பது உடைத்தல் எனப் பொருள்படும்.
2. “டனல் சேசறீ” முதுகுப் பகுதியில் துளையிட்டு அதன் வழியாக கற்களை அகற்றுதல்.
3. “யூரட்டோ கொப்பி” சிறுநீரகச் சிறுநீர் வரும்பாதையின் வழியாக “பிரோவல்” என்ற குழாயைச் செலுத்தி அதன் மூலம் சிறுநீரகக் கற்களை அகற்றுதல்.
இவ்வாறான முறைகளை நவீன மருத்துவம் பயன்படுத்த தமிழ் மருத்துவம் கற்களை கரைத்து அது மீண்டும் உருவாகுவதைத் தடுப்பதுடன் கற்கள் உண்டாகாதவர்களுக்கு உண்டாகாமல் தடுக்கும் வல்லமை உள்ள மூலிகைகளை கண்டனர் சித்தர்கள். அம் மூலிகையை கற்பேதி அதாவது கல்லை கரைத்து அதை பேதியாக்கி விடும் சக்தி வாய்ந்தது அந்த மூலிகை அதற்கு சிறுகண்பேளை, சிறுபேளை, சின்னப்புளைச் செடி, தேங்காப்பூக் கீரை என்றெல்லாம் அழைப்பர். இக்கீரையை சிறுநீர்ப் பெருக்கியாகப் பயன்படுத்துகின்றனர்.
தாவரவியல் பெயர் : “எர்வால் லெனட்டா”
தேரையார் தனது பதார்த்த குண சிந்தாமணியில்
“ பாண்டு பெரும்பாடு பகர் மூத்திரக்கிரீச்சம்
பூண்ட திரிதோடி மிவை போக்குல் காண் - தாண்டி
புதிய வேலைத் துரத்தும் பார்ரவக்
சிறிய கிளைக்குச்ச கண்ணாய் சிதைந்து” என்று ஒரு பாடலிலும் இன்னுமோர் பாடலில்
“ நீடடைப்புக் கல்லடைப்பு நீங்கா குடல் சூலை
பேதீ டறிர் ரத்த கணம் போக்கும் கான்- வாரிருக்கும்
பூண்முலையாய் கேளாய் கிறு பினையாகிது
கற்பேதி பென்றறி” என்றார்.
இவ்வாறு இருபாடல்களில் “கற்பேதி” மூலிகையின் மருத்துவக் குணத்தை பாவில் இயம்பியுள்ளார். இங்கு முதல் பாடலில்
1. “ பாண்டு”: பாண்டு என்பது உடலில் நீர்க்கொர்த்திருக்கும் நோய் முழங்கால் கனுக்காலின் பின்புறம் வயிற்றின் கீழ்ப்புறம் போன்ற இடங்களில் நீர் கோருத்து வலுனில் நீரை விட்டால் இருப்பது போல தெரிவது. இன் நோயை போக்க வல்லது இந்த மூலிகை
2. “பெரும்பாடு”: பெண்களுக்கு வருகின்ற மாதவிடாயி நீடித்து அதிநாட்கள் நீர் இறைப்புப் போல் உதிரம் போகின்ற நிலையாகும். மாதவிடாய் சாதாரணமாக மூன்று நாட்கள் நீடிக்கும் ஆனால் இந்த நிலையில் பத்து பதினைந்து நாட்கள் கூடநீடிக்கலாம். இன் நோயை போக்க வல்லது இந்த மூலிகை
3. “பகர் மூத்திரக்கிரீச்சம்” : சிறுநீர் கழிக்க சென்றால் கழிக்முடியாது சொட்டுச் சொட்டாக எரிச்சலுடன் வேதனையும் தரும். சிறுநீரகத்தில் கிருமி த்தாக்குதலால் ஏற்படுவது இதனை “யூறினல் இன்பஸ்கன்” என்பர். இன் நோயை போக்க வல்லது இந்த மூலிகை
4. “பூண்ட திரிதோடி” : வாத பித்த கபத்தை உடலில் சீர் செய்து அதனால் ஏற்படக்கூடிய நோய்களைக் கடுப்படுத்தும் வல்லமை இம் மூலிகைக்கு உண்டு. எனக் கூறுகின்றார்.
என பாம்பைப் போல கூர்மையான கண்ணுடைய பெண்ணே எனக் கூறுகின்றார். அடுத்த பாடலிலே
“ நீடடைப்புக் கல்லடைப்பு நீங்கா குடல் சூலை
பேதீ டறிர் ரத்த கணம் போக்கும் கான்- வாரிருக்கும்
பூண்முலையாய் கேளாய் கிறு பினையாகிது
கற்பேதி பென்றறி”
1. “ நீடடைப்புக்” : என்பது முதல் பாடலில் செல்லப்பட்ட பாண்டு என்னும் நோய் ஆகும்.
2. “கல்லடைப்பு” : என்பது சிறுநீரகக்கற்கள் இக்கற்களை கரைத்து பேதியாகி சிறுநீருடன் அற்றும் ஆற்றல் மிக்கது இம் மூலிகை.
3. “நீங்கா குடi; சூலை”: வேதனையுடன் கூடிய குடலில் ஏற்படும் வலி இது சூரத்தால் முத்துவது போல ஏற்படும் வலியை போக்க வல்லது இந்த மூலிகை.
4. “பேதீ டறிர் ரத்த கணம்” : பெரிய இடரைத்தரும் இரத்த கணம் என்பது இரத்தழுத்தத்தை இங்கு கருதுகின்றர். இதையே இரத்தபித்தம் என்றும் சித்தமருத்துவத்தில் பயன்படுத்துவர். அழுத்தத்ததை குறைத்து அதற்கா தடையை நீக்கி நரம்பை பலப்படுத்தி வலுவுட்டும் தன்மை இந்த மூலிகைக்குண்டு.
பாவில் கூறப்பட்ட நோய்களுக்கெல்லாம் அருமருந்து தேங்காய்பூ கீரை என்று குறியுள்ளார். அதன் பூக்கள் தேங்காப்பூ போல இருப்பதால தேங்காப்பூக் கீரை என்றும் அழைக்கின்றனர்.
சிறுநீரக கற்களையும் சிறுநீரகக் கிருமித்தாக்கத்தால் உண்டாகும் நோய்களுக்கும் அருமருந்தாக அமைவதுடன்“புரஸ்ரகோளம்” என்னும் ஆண்குறின் இயக்கத்துக்குரிய கிளான் ஒன்று உண்டு இது வீங்கும் போது சிறுநீர்கழிப்பது தடைப்படுவதுடன் வேதனையும் எரிச்சலும் ஏற்படும் அதை குணப்படுத்தி அக் கிளான்டை புதுப்பித்து இயக்க வல்ல மூலிகை ஒன்று உண்டு அதுதான் நெருஞ்சியின் வித்து.
நெருஞ்சில் அல்லது சிறுநீர் பெருக்கி என்பதின் மருத்துவ பாகம் பற்றி தேரையர் பதார்த்த குணசிந்தாமணியில் குறிப்பிடுகையில்
“ சொல்ல வொன்னா நீர்கட்டு துன்பமாமிசருக்கி
கல்லடைப் பெனும் பிணிகள் கண்டக்கால்
கருஞ்சின கண்மாதே நல்ல
நெருஞ்சினறு கித்தே நினை” இங்கு மேல் சொன்ன கல்லடைப்பு, நீர்க்ட்டு; என்பனவற்றுடன் விசேடமாக “துன்பமாமிசருக்கி” இது “புரஸ்ரகோளம்” என்னும் கிளான் தனது நிலை மருவி வீங்கியிருக்கும் இதனால் சிறுநீர் களிப்பதும் கடினமாக இருப்பதுடன் சிறுநீர் வெளியேறும் குழாயை அழுத்தி சிறுநீர் கழிப்பதை தடை செய்து வேதனைக்குள்ளாக்கும் இந்த நிலையிலிருந்து வீக்கத்தை வத்தவைத்து சீர்செய்து இயல்பான நிலைக்கு கொண்டு வந்து இயல்பு நிலைய தொடர்ந்து பாதுகாக்கும் வல்லமை நெருஞ்சியின் நன்கு விளைந்த நல்வித்துக்கு உண்டு.
“சித்தன் சிந்தையில் உதித்தது
சித்த வைத்தியம்
மனுக் குலம் பெற்ற பெறு அது
அவன் வாக்கு சிவ வாக்கு
சீவன் சிவன் என்று உணர்தால்
அதுவே வாழ்கையின் தத்துவம்
தத்துவம் அறியார் முத் தீ அடையார்
அடைய உடல் திரி தோச நிவர்தியினால்
சம நிலை தேவை கற்பமாக
அதற்கே சித்த வைத்தியம் தந்தான் சித்தன்
சித்த வாழ் வியல் அறிந்து
ஒழுகினால் வெற்றி நிச்சயம்”
மட்டூர் புன்னையம்பதியான்
No comments:
Post a Comment