"ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி "
ஊன் என்பது உடல் . உடல் விரும்புவது போகம். எனவே உடல் விரும்புவதை கொடுக்காது அதை உருக்கினாலேயே உள்ளொளி பெருகும். சிலர் சொல்வார்கள் ஆத்மாவிற்கு துரோகம் செய்யக்கூடாது. விரும்புவதை கொடுக்க வேண்டும் என்று ஆனால் ஆத்மா விரும்புவது பிறவாமை . அப்படி இருக்க உடலே போகத்தை விரும்புகிறது என்பது தின்னம்.
போகத்துக்கு உரியவர்கள் தேவலோகத்தில் தேவேந்திரனும் தேவர்களும் இவர்களுக்கும் பிறப்பிறப்புஉண்டு. நம்மை விட ஒருபடி மேல் அதனால் திருவாசத்தில் நமசிவய பதிகத்தில் " மனிதரும் தேவரும்" என்று மாணிக்கவாசக பெருமான் எடுத்து இயம்பியதுடன் மால் அயன் அறியா பரம்பொருள் என்றும் இயம்பியுள்ளார்.
ஊனை உருக்கி இறைவன்பால் அகமுகமாக ஐம்புலகளை அவன் பால் செலுத்தி உள் ஒளி பெருக்கி உலப்பில்லா ஆனந்தம் அடைதல் வேண்டும். அதாவது மலமாயையை பலிபீடத்தில் பலியிட வேண்டும். அதுவே மந்திரங்களின் இறுதியில் "நமஹ" என்னும் சொல்லின் அர்த்தம். இறைவனின் நாமத்தை உச்சரித்து பிறப்புக்கு காரணமான மலமாயையை அறுக்குபடியாக இறைவனிடம் வேண்டுதல் செய்தல். இது அர்ச்சனை செய்வதாகும். அர்சனை செய்வதன் நோக்கம் மலமாயையை அறுப்பதே . அதனை அர்சககளின் வருமான மூலமாக்கிக் கொண்டனர். உலக விவகாரங்களை கேட்கும் உபாயமாக்கி விட்டனர் .இது "பிள்ளையார் பிடிக்க குரங்காகிய கதையாகி விட்ட" கதையாகி விட்டது.
இறைவன் அரகர மகாதேவ எனப்பட்டான். பாவங்களை அரைத்து கரந்து எடுப்பவர்.
"ஓம் நமோ பாவதிபதையே
அரகர மகாதேவா "
என இறைவனுக்கு வாழ்த்துகள் கூறுவது. "சங்கரன்" மலமயையை சங்கரம் செய்பவன் என்பது பொருள்.
அதனால் சிவனை வணங்க அவன் அருள் வேண்டும்.
'சிவன் சொத்து குலநாசம்' என்பதன் அர்தம் சிவனை வணங்கி அவன் ஆட்கொள்ளப்பட்டால் அவன் சிவன் சொத்து. சிவன்சொத்தானால் அவன் சந்ததி நிறைவு பெறுகின்றது. அதுவே குலநாசம். பிரம்மசாரிய சன்னியாசிகள் பிரஜ விருத்தியில் ஈடுபடுவதில்லை. வருணாச்சிரம தார்ம்மத்தில் இருப்போர் வானபிரதிஸ்தில் அந்த நிலையை அடைகின்றனர்.
ஓம் சற்குருவே துணை
ஓம் ஸ்ரீ அகத் ஈசாய நமஹ
No comments:
Post a Comment